Tuesday, December 31, 2013

10 கட்டளைகள்


கடவுளைக்(பாபாவை) காண பாபா அருளியிருக்கும் 10 கட்டளைகள்.
எல்லோரும் தமது வாழ்நாளிலேயே கடவுளைப் (பாபாவை) பார்க்கவும் தெளிவாக உணரவும் முடியும். அதற்குச் சில தகுதிகள் தேவைப்படுகின்றன. மனிதர்கள் அவற்றைப் பெற்றால், நிச்சயம் பாபாவை காண முடியும், அவருடன் பேசவும் முடியும். அந்த தகுதிகள் என்னென்ன?1. முமுக்ஷை : அதாவது சுதந்திர உணர்வுடன் கூடிய இறைவனைக் காண வேண்டும் என்ற விருப்பம். மனைவி, சமூகம், உறவு, வேலை என்று ஏகப்பட்ட விலங்குகளால், தான் பூட்டப்பட்டிருப்பதாக எண்ணுகிறான் மனிதன். முதலில் இந்த தடைகளிலிருந்து விடுபட வேண்டும். தான் தடைகளாக நினைத்துக் கொண்டிருப்பவை எல்லாம் தடைகளே அல்ல என்பதை புரிந்து, பாபாவை கண்டே ஆக வேண்டும் என்ற லட்சியத்தை மேற்கொள்ளவேண்டும்.
2. விரக்தி : இந்த உலகப் பொருட்கள், புகழ், கெளரவம், ஆதாயம் ஆகியவற்றின் மீது இருக்கும் பற்றை விலக்க வேண்டும். இவை கூடவே கூடாது என்று பொருள் அல்ல. பணம், புகழ், கெளரவம், ஆதாயம் ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு அவற்றுக்காகவே உழைக்கக் கூடாது.
3. அந்தர்முகதா : உள்முகச் சிந்தனை. மனிதன் வெளியில் நடப்பவற்றையே எப்போதும் பார்க்கிறான். அதை விடுத்து உட்புறமாகப் பார்க்க வேண்டும். அதாவது பாபாவை சிறிது நேரமாவது தியானம் செய்ய வேண்டும் அல்லது மனதை ஒருமுகமாக நிலை கொள்ள வேண்டும்.
4. தீவினைகள் கசடறக் கழிபடுதல் : கொலை, கொள்ளை, மற்றவர்களை அழிப்பது, தீங்கு விளைவிப்பது போன்ற கொடுஞ் செயல்களை செய்யக்கூடாது.
5. உண்மை : உண்மை பேசுவது, நேர்மையைக் கடைப்பிடிப்பது, மனிதர்கள் தமக்கு தாமே நேர்மை கடைபிடிக்க வேண்டும்.


[தொடரும் அடுத்து 5 கட்டளைகள்] - ஷிர்டி சாயி சந்நிதானம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, December 30, 2013

ஹிருதயவாசி

பக்தர்களுக்கு அனுக்கிரஹமும் உபதேசமும் அளிப்பதில் பாபாவினுடைய சாமர்த்தியம் ஆலங்காணமுடியாதது.அதை அவர் பல வழிமுறைகளில் செய்தார். அவர்கள் அருகிலிருந்தாலும் சரி,வெகுதூரத்திலிருந்தாலும் சரி,பாபா ஹிருதயவாசியாக (இதயத்தில் வசிப்பவராக) பக்தர்களுடனேயே இருந்தார்.-ஸ்ரீ சாயி இராமாயணம் .
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 29, 2013

துன்பத்திற்கு முடிவேற்பட்டுவிட்டது

"கவலையை விட்டொழியும்; உறுதியுடன் இரும்; என் பக்தர்கள் துக்கப்படுவதில்லை.ஷிர்டியில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய துன்பத்திற்கு முடிவேற்பட்டுவிட்டது.நீர் தடங்கல்களெனும் கடலில் கழுத்துவரை மூழ்கியிருக்கலாம்; துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் ஆழமாக அமிழ்ந்துபோயிருக்கலாம்; ஆனால், யார் இந்த மசூதிமாயியின் படிகளில் ஏறுகிறாரோ,அவர் சுகத்தின்மீது சவாரி செய்வார் என்று அறிந்துகொள்ளும்."-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 28, 2013

சாயியே ஒரே அடைக்கலம்

"ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தை எவர் பயபக்தியுடன் படிக்கிறாரோ,அல்லது பலமுறைகள் திரும்பத் திரும்பப் பாராயணம் செய்கிறாரோ,அவருடைய சங்கடங்கள் அனைத்தும் குருராயரால் நிவாரணம் செய்யப்படும்.வேறெதையும் நாடாமல் ஸ்ரீ சாயியின் பாதங்களில் எவர் சிரம் தாழ்த்துகிறாரோ அவர்,தம்மைக் காக்கும் தெய்வமும் அபயமளிப்பவரும் நன்மையைச் செய்பவரும் தீமையை அளிப்பவரும் ஒரே அடைக்கலமும் சாயியே என்று உணர்ந்துகொள்வார்."
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 27, 2013

பொறுமை சகிப்புத்தன்மை

பொறுமையும் சகிப்புத்தன்மையுமே தைரியம். அதைத் தொலைத்துவிடாதீர்கள்.எப்பொழுது பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் அது உங்களை கரைசேர்க்கும்.சகிப்புத்தன்மை இல்லாத மனிதனின் நிலைமை பரிதாபகரமானது.பண்டிதராக இருந்தாலும் சரி,நற்குணம் படைத்தவராக இருந்தாலும் சரி,சகிப்புத்தன்மை இல்லாவிடில்  வாழ்க்கை வீணாகிவிடும்.குரு மஹாபலம் படைத்தவராக இருக்கலாம். ஆயினும்,ஆழமாகப் பாயும் நுண்ணறிவையும் தம்மிடம் அசையாத நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையின் துணிவான பலத்தையும் தம் சிஷ்யனிடமிருந்து எதிர்பார்க்கிறார்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, December 26, 2013

கற்பனைசெய்து பார்க்கமுடியாததையும் அளிப்பவர் பாபா.

           கற்பனைசெய்து பார்க்கமுடியாததையும் அளிப்பவர் பாபா.

காமதேனு (தேவலோகத்துப் பசு) நாம் விரும்பிய பொருளை உடனே அளிக்கும்.காமதேனுவைவிடச் சிறந்தவர் குருதேனு.நம்மால் சிந்தனைசெய்து பார்க்கமுடியாத பதவியையும் (வீடுபேறு நிலையையும்) அளிப்பார் ! வேறு யாருக்கு 'கற்பனைசெய்து பார்க்கமுடியாததையும் அளிப்பவர்' என்னும் பட்டம் பொருந்தும்?
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 25, 2013

அடிமைகளுக்கு அடிமை

"அடிமைகளுக்கு அடிமையாகிய நான் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்; உங்களுடைய தரிசனத்தை நாடுகிறேன். உங்களுடைய மஹா கருணையினால்தான் நான் உங்களை சந்திக்க நேர்ந்தது. உங்களுடைய மலத்தில் இருக்கும் புழு நான். இந்த அந்தஸ்தினால் நான் சிருஷ்டியிலேயே மிக்க பாக்கியசாலி." 
                                                                   -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, December 24, 2013

தரிசனம்

"நான் அழைக்காமல் எவரும் இங்கு (ஷிர்டி) வருவதில்லை. என்னுடைய விருப்பம் இல்லாது யார் அவருடைய வாயிற்படியைத் தாண்டமுடியும்?  தம்மிச்சையாகவே யார் ஷிர்டிக்கு தரிசனம் செய்ய முடியும்?"
                                                                                              -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

நம்முடைய எண்ண ஓட்டங்கள் அனைத்தும் கிருபாமூர்த்தியான சமர்த்த சாயியின் ஆதீனத்தில் இருக்கின்றன.அவருடைய சித்தத்தில் கிருபை உதித்தால்தான் எவரும் தரிசனத்திற்கு வரமுடியும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, December 23, 2013

ரிஷிமூலம், நதிமூலம்

பிறவியின் நோக்கத்தை மறந்து, தறிகெட்டுப் போவோரை முறைப்படுத்தி, நெறிப்படுத்தவே அவ்வப்போது ஞானிகள் அவதரிக்கிறார்கள். நதிமூலமும், ரிஷிமூலமும் நாம் அறிந்துகொள்ள முற்படுதல் நல்லதல்ல என்று சொல்லப்படுகிறது.
அந்த அடிப்படையில், நெஞ்சுக்கு நிம்மதியையும், நினைவுக்கு நிறைவும், ஆத்மாவுக்கு ஆனந்தமும் அளிக்கவல்லதுதான் உயர்ந்த ஞானி ஷிர்டி சாய்பாபாவின் உன்னத வரலாறு.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 22, 2013

தெய்வபலம்

ஒருவருக்கு இணையில்லாத புத்திசாதுர்யம் இருக்கலாம்.ஆடாத அசையாத சிரத்தையும் இருக்கலாம்.ஆயினும் சாயியைப்போன்ற பலமான குரு அமைவதற்கு தெய்வபலம் அவசியம் வேண்டும்.-ஸ்ரீ சாயி இராமாயணம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 21, 2013

அகண்ட பார்வையார் என்னை பெரிதும் நேசிக்கிறாரோ அவருடைய பார்வையில் அகண்டமாக (இடைவிடாது) இருக்கிறேன். நான் இல்லாது அவருக்கு சிருஷ்டியனைதும் (இவ்வுலகம்) சூனியமாகத் தெரியும். அவருடைய வாயிலிருந்து என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும். -ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 20, 2013

உறுதி

"வருவது வரட்டும்,விட்டு விடாதே.என்னையே  உறுதியாகப்  பற்றிக்கொண்டு எப்போதும்  நிதானத்துடனும்,சதாகாலமும் என்னுடன்  ஒன்றியும்  இருப்பாய்"-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய்      சத்சரித்திரம்] 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, December 19, 2013

அனைத்தும் பாபாவின் ஆசிர்வாதம்நீங்கள் அனுபவிப்பது, உங்களிடமிருப்பது, நான் உங்களுக்கு ஆசிர்வதித்து கொடுத்ததாகும் என்பதை நீங்கள் அறிந்தால் உங்களுக்கு சுபம் ஏற்படும்- ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 18, 2013

மசூதி


என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, December 17, 2013

நானே பொறுப்பாகிறேன்


தம்முடைய  பாரத்தை என்மேல் போட்டுவிட்டு என்னுடன் ஒருவர் ஒன்றிவிட்டால், அவருடைய  உலக சம்பந்தமான அனைத்து விஷயங்களுக்கும், விவகாரங்களுக்கும் நானே பொறுப்பாகிறேன். ஷிர்டி சாய்பாபா.   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, December 16, 2013

குருவே சரணம்குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வர
குரு சாக்ஷாத் பர பிரம்மா 
தஸ்மை ஸ்ரீ குரவே நம:  

உன் வேலையாகவே வந்த எனக்கு, வேறு வேலை என்ன இருக்க முடியும்? கண நேரம் அமைதியாய் அமர்ந்து ஆலோசனை செய். -ஷிர்டி சாய்பாபா 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 15, 2013

இவ்வுடம்பைப் பராமரிக்கவேண்டும்


உடம்பைப் புறக்கணிக்கவோ, விரும்பிச் செல்லமாகப் பராமரிக்கவோ கூடாது. ஆனால் முறையாகப் பராமரிக்க வேண்டும். குதிரையில் சவாரி செய்யும் ஒரு வழிப்பயணி, தான் போகுமிடத்தை அடைந்து வீடு திரும்பும் வரையில் தனது குதிரையை எவ்வாறு பராமரிக்கிறானோ, அதைப் போல் இவ்வுடம்பைப் பராமரிக்கவேண்டும். ஸ்ரீ சாய் சத்ச்சரித்ரா 6        

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 14, 2013

விசுவாசம்


ஒருவருடைய குரு எவராக இருந்தாலும் அவர்மீது திடமான விசுவாசம் வைக்கவேண்டும்.வேறெங்கிலும் அவ்விசுவாசத்தை வைக்கலாகாது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 13, 2013

முழுப்பாதுகாப்பு

செயல்களின் பலனை துறந்துவிட்டவர்,ஸங்கல்பத்தையும் தியாகம் செய்துவிட்டவர் பாபாவினுடைய முழுப்பாதுகாப்பை அனுபவிக்கிறார்.
(ஸங்கல்பம் என்பது நான் இந்த காரியத்தை செய்யப்போகிறேன் என்று செய்யும் தீர்மானம்.எல்லாம் பாபாவின் செயல் என்ற மனோபாவம் வளர,வளர,ஸங்கல்பம் படிப்படியாக விலகிவிடும்.)-ஸ்ரீ சாயி இராமாயணம் .
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, December 12, 2013

பாபாவின் உதீ

மஹானுபாவரான சாயி மஹராஜைத் தவிர வேறெந்த நிவாரணமும் உமக்கு இல்லை.முழுமையான விசுவாசத்துடனும் பக்தியுடனும் நீர் பாபாவின் உதீயை ஏற்றுக்கொண்டால்,அது தன்னுடைய சக்தியைத் தானே வெளிப்படுத்தும்.பக்திபா(BHA)வத்துடன் உதீயை அணுகவும் பிறகு அது விளைவிக்கும் அற்புதத்தைப் பார்க்கலாம்.அது உடனே உம்மை இன்னல்களிலிருந்து விடுவிக்கும்.உதீயினுடைய இயல்பான குணம் இதுவே.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 11, 2013

புறச்சடங்குகள்

பக்தியுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு பூவையோ ஓர் இலையையோ பாபா அன்புடன் ஏற்றுக்கொள்கிறார்.அதுவே கர்வத்துடன் அளிக்கப்பட்டால் தலையைத் திருப்பிக்கொண்டு போய்விடுவார்.சச்சிதானந்தக் கடலாகிய அவருக்குப் புறச்சடங்குகள் முக்கியமா என்ன?ஆயினும் பக்தியுடனும் விசுவாசத்துடனும் எது அளிக்கப்பட்டாலும் அதை சந்தோஷமாக பாபா ஏற்றுக்கொள்கிறார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, December 10, 2013

எங்கும் நிறைந்திருக்கிறார்

தேஹமும் இந்திரியங்களும் பொருந்திய ஓர் அமைப்பு-மூன்றரைமுழ நீளமுள்ள பாரவண்டி-இது மட்டும்தானா நமது சாயீ ? இந்த பிரமையை வேருடன் களைந்தெறியுங்கள்.ஸ்ரீ சாயி உருவத்திற்கு அப்பாற்ப்பட்டவர்.நம் ஊனக்கண்களுக்கத் தெரியாதபோதிலும்,அவர் எங்கும்  நிறைந்திருக்கிறார்.தம்மளவில் சூட்சமமாக இருந்தபோதிலும், நம்மை அவர்பால் வசீகரித்து இழுக்கிறார்.அவருடைய மரணம் ஒரு பாசாங்கு மட்டுமே; நம்மை ஏமாற்றும் ஓர் உத்தியே.பூரணத்துவம் பெற்ற அவர் பல வேஷங்களில் நடிக்கிறார்.அவருடைய இதயத்தில் கனிந்த அன்பை கெட்டியாக பற்றிக்கொல்வோமாக! அவருடைய மார்க்கத்தை நன்கு புரிந்துகொண்டு காரியசாதனை பெறுவோமாக!
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, December 9, 2013

அன்னதானம்

"பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக!"-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 8, 2013

துவாரகாமாயி

"பொறு, உன்னுடைய கவலைகளைத் தூர எறி, உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. ஒருவன் எவ்வளவு தான் நசுக்கப்பட்டு வேதனைப்பட்டவனாக இருப்பினும், இச் மசூதியில்( துவாரகாமாயி ) கால் வைத்தவுடனே அவன் மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான்."
                                                                                           -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 7, 2013

மாயை

"கனவில் கண்ட ராஜ்ஜிய வைபவங்கள் விழித்துக்கொண்டவுடனே மறைந்துவிடுவது போலவே,இவ்வுலக வாழ்க்கை ஒரு மாயத்தோற்றம்.இவ்வுலகவாழ்வின் சுகமும் துக்கமும் மாயை."
                                                                               -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 6, 2013

சத்குருவின் கிருபை

சத்குருவின் பாதங்களைப் பற்றிக்கொள்ளும்போது ,பிரம்மா,விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பாதங்களையே நாம் வணங்குகிறோம் ; கண்கூடாகப் பரபிரம்மத்தையே வந்தனம் செய்கிறோம்; பரமானந்தம் அடைகிறோம்.சத்குருவின் கிருபையால் ஏற்படும் எழுச்சியும் விழிப்பும் கண்களுக்குப் புலப்படாது. ஏனெனில்,அது எல்லா இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டது. மூவுலகங்களிலும் தேடினாலும் சத்குருவைத் தவிர இதை அளிக்கக்கூடியவர் வேறெவரையும் காணமுடியாது.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, December 5, 2013

முடிவில்லாத செல்வம்

"பிறர் கொடுப்பது நமக்கு எப்படிப் போதும்? எவ்வளவு கொடுக்கப்பட்டாலும் அது குறைவாகத்தான் இருக்கும். ஆனால்,இறைவன் நமக்கு அளிப்பதோ முடிவில்லாத செல்வம். யுகம் முடிந்தாலும் முடியாத செல்வம். என் சர்க்கார் (இறைவன்) கொடுப்பதே கொடுப்பது.மற்றவர்கள் கொடுப்பதை இதனுடன் எப்படி ஒப்பிட முடியும்?" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, December 3, 2013

ஆன்மீக வளர்ச்சி

வாழ்க்கைக்கு வேண்டிய உணவும் உடையும் எவ்வாறு கிடைக்கும் என்று ஒருகணமும் சிந்திக்க வேண்டாம்.ஏனெனில்,அவை முற்பிறவியில் செய்த கர்மங்களுக்கேற்றவாறு பிரயத்தனம் செய்யமலேயே கிடைக்கும்.இவற்றை சம்பாதிப்பதற்குப் பெருமுயற்சி எடுத்தீர்களானால் அத்தனையும் வீண்.அதற்குப் பதிலாக ஆன்மீக வளர்ச்சியில் இரவுபகலாகக் கவனம் செலுத்துங்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

வருவதென்ன போவதென்ன

"பாபாவின் சஞ்சாரம் புரிந்துகொள்ளமுடியாதது.நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் அவர் நிரம்பியிருக்கிறார். இவ்வாறிருக்க,அவர் வருவதென்ன,போவதென்ன!நினைத்தபோது தேவையான இடத்தில் தோன்றுகிறார்."
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, December 2, 2013

அஹங்காரம்.

ஆன்மீக விஷயத்தில் சாதனையின் முதற்கட்டம் அஹங்காரத்தை அழிப்பதிலேயே ஆரம்பமாக வேண்டும்.அஹங்காரம் அழிக்கப்படாத வரை சாதனைகள் அனைத்தும் உபயோகமற்றவையே. அஹங்காரத்தை தனக்குத்தானாகவே தொலைத்துக் கொள்ள வேண்டும்.மற்றொருவரின் உதவி இருக்காது.-ஸ்ரீ சாயி திருவாய்மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 1, 2013

நீங்களும் நானும் ஒன்றேஉங்கள் ஆர்வத்தை என் மீது மட்டுமே வைத்திருங்கள்.என்னையே தியானியுங்கள்.என் மீதே தீவிர அன்பைக் கொண்டிருங்கள்.அப்போது நீங்களும் நானும் ஒன்றே என்ற உண்மையை நிச்சயமாக உணர்வீர்கள்.ஆத்மார்த்த உறவு இருந்தால் தானாகவே அனுசந்தானம் (இணைதல்) ஏற்படும்- ஸ்ரீ சாயி திருவாய்மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...