Friday, January 31, 2014

இலவசமாகப் பெறக்கூடாது

யாருடைய உழைப்பையும் எப்பொழுதும் இலவசமாகப் பெறக்கூடாது என்னும் விதியை கடைப்பிடி. மற்றவர்களிடம் வேலை வாங்கிகொள்.ஆனால் அவர்களுடைய உழைப்பை எவ்வளவு என்பதை அறிந்துகொள் .-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 30, 2014

பரிபூரண நம்பிக்கை

என்னைப் பற்றியே கேட்டும் ஆலோசித்தும் என்னிடமே விருப்பம் கொண்டுள்ளவர்களுக்கு அசாத்தியம் என்பது இருக்காது.பரிபூரண நம்பிக்கை இல்லாவிடில் பலன் இருக்காது.சிந்தனைகளில் மூழ்கி இருப்பவர்களுக்கு சாந்தி இருக்காது.-ஸ்ரீ சாயி திருவாய்மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 29, 2014

அருகதை

அருகதை உள்ளவர்களை திரஸ்கரிக்க மாட்டேன்.அருகதை இல்லாதவற்றை கொடுக்கமாட்டேன்.இந்த புணித மசூதியில் உட்கார்ந்து நான் அசத்தியம் பேசமாட்டேன்-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 28, 2014

லீலைகள்

"மனம், செல்வம், உடல்,பேச்சு ஆகியவற்றால் பாபாவின் பாதங்களில் சரணடையுங்கள். நிரந்தரமாக அவருடைய நாமத்தை ஸ்மரணம் செய்தால் லீலைகள் அனுபவமாகும்."-ஸ்ரீ சாயி இராமாயணம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 27, 2014

நடப்பதெல்லாம் அவன் செயல்

காற்றை மூட்டையாகக் கட்டிவிடலாம். கொட்டும் மழையின் தாரைகளையும் எண்ணிவிடலாம். ஆனால், ஸாயீயினுடைய அற்புதங்களைக் கணக்கெடுக்கக்கூடிய வன்மை உள்ளவர் யார்?’

பக்தன் தான் சாயியோடு ஒன்றியவன் என்ற பாவனையிலேயே குருவை வழிபட வேண்டும்.  சாயியும் பக்தனைத் தன்னில் ஒன்றியவன் என்றே வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார்.  இவ்வாறான பரஸ்பர சமரசபாவனை இல்லாவிட்டால் எல்லாச் செயல்களும் கேவலம் வெளிவேஷங்களே.

அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.  நாம் ஒன்றும் அறியாத குழந்தைகள்.  கோணல் சிந்தனைகளும், உடும்புப்பிடியாக பலவற்றைப் பிடித்துக் கொள்ளுகிற தன்மையும் உள்ள மனதை அவரது பாதங்களில் சமர்ப்பித்து அவர் எப்படி செயல்பட நம்மை அனுமதிக்கிராரோ அப்படியே நடக்க விட்டுவிடுங்கள்.

நடப்பதெல்லாம் அவன் செயல் என்ற எண்ணம் உங்கள் மனதில் உதிக்கட்டும்.  எதையும் நான்தான் செய்கிறேன் என எண்ணாதீர்கள்.  இந்த நிலைக்கு நீங்கள் மாறும்போது அவர் உங்கள் கைகளை வலியப் பிடித்துக்கொண்டு செயலாற்றுவதை உணர்வீர்கள்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, January 26, 2014

நான் உயிருடன் இருக்கிறேன்

இன்றும் நான் உயிருடன் இருக்கிறேன் என்பதை எப்போதும் உணர்.பக்தனாகிய நீ அழைத்தால் நான் ஓடோடி வருவேன்.இது சத்தியம்.-ஷீரடி சாய்பாபா[மாண்புமிகு மகான்கள்]
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, January 25, 2014

நலம் உண்டாகச் செய்கிறேன்


நானா(பாபாவின் பக்தர்);பாபா,தாங்கள் எல்லாவற்றையும் அறிவீர்கள்.தங்களுடைய பாதுகாப்பிலிருந்தும் கூடவா எங்களுக்கு இந்த துக்கங்கள் நேரவேண்டும்?[உறவினர்களின் பிரிவு,இழப்பு போன்றவை]

பாபா: உமக்கு நெருக்கமானவர்களின் நலனை எண்ணிக் கொண்டு அதன் பொருட்டு நீர் இங்கு வருகிறீரென்றால்,அது தவறு.இவற்றிற்காக நீர் எம்மிடம் வரவேண்டியத்தில்லை.இவை என் சக்திக்கு உட்பட்டவை அல்ல.
இவை(குழந்தை பிறப்பது,உறவினர் இறப்பது போன்றவை)ஊழ்வினையைப் பொருத்தது.தேவாதி தேவனானவரும்,உலகையே படைத்தவருமான,
பரமேச்வரனால் கூட இவற்றை மாற்றிவிட முடியாது.அவரால் சூரியனையோ சந்திரனையோ நோக்கி,'வழக்கமாக உதிக்கும் இடத்திலிருந்து இரண்டு கஜம் தள்ளி உதிப்பாய்' எனக் கூற இயலுமா?இயலாது,ஏனெனில் அவரால் முடியாதது மட்டுமின்றி,அவர் அப்படி செய்யவும் மாட்டார்.அது  ஒழுங்கின்மை,குழப்பம் விளைவிக்கும்.

நானா:அப்படி என்றால்,ஒருவரிடம் "உனக்கு குழந்தை பிறக்கும்"என தாங்கள் கூறுகிறீர்கள்,அவருக்கு குழந்தை பிறக்கிறது.மற்றொருவரிடம்"உனக்கு வேலை கிடைக்கும்"என் சொல்லுகிறீர்கள்,அவருக்கு வேலை 
கிடைக்கிறது.இவை எல்லாம் தங்களுடைய அற்புதங்கள் அல்லவா?

பாபா:இல்லை,நானா.நான் எந்த சமத்காரமும் செய்வதில்லை.கிராமத்து ஜோதிடர்கள் சில தினங்கள் முன்னதாகவே பின்னர் நடக்கப் போவதைக் கூறுகிறார்கள்.அவற்றுள் சில பலிக்கின்றன.நான் அவர்களை விட எதிர்காலத்தை தீர்க்கமாகப் பார்க்கிறேன்.நான் கூறுவதும் நடக்கிறது.என் வழியும் ஒருவகை ஜோதிடத்தைப் போன்றதே.உங்களுக்கெல்லாம் இது புரிவதில்லை.உங்களுக்கு.என் சொற்கள் அற்புதங்களாகத் தோன்றுகின்றன;
ஏனெனில் நீங்கள் எதிர்காலத்தை அறியமாட்டீர்கள்.ஆகையால் நிகழ்ச்சிகளை  நீங்கள் எமது அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தியாக முடிவு செய்து,எம்மிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுகிறீர்கள்.பதிலுக்கு நான் உங்கள் பக்தியை இறைவனிடம் திருப்பி உங்களுக்கு நலம் உண்டாகச் செய்கிறேன். 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 24, 2014

சாயிநாதருக்கு முன்கூட்டியே தெரியும்

குன்றுகளும் மலைகளும் நடுவே தடையாக இருந்தபோதிலும் சாயிநாதரின் பார்வையிலிருந்து எதையும் மறைக்க முடியாது.பரம ரஹஸியமாக நாம் கருதும் விஷயமும் அவர் முன்னே திறந்து கிடக்கிறது.தம் பக்தர்களுக்கு என்னென்ன ஆபத்துகள் வரபோகின்றன என்பது சாயிநாதருக்கு முன்கூட்டியே தெரியும்.கேலியும் பரிஹாஸமும் சிரிப்புமாக விளையாடிக்கொண்டே சாயிநாதர் அவ்வாபத்துகள் வாராது தடுத்துவிடுவார்.-ஸ்ரீ சாயி இராமாயணம் .
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 23, 2014

என் மார்கம்

என்  உண்மையான பக்தர்களுக்கு இரண்டு வழிகள் தென்படாது. அவர்களுக்குத் தென்படுவதெல்லாம் என் மார்கம்  மாத்திரமே.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 22, 2014

பக்தனின் கடமை
பக்தனின் கடமை:

பாபாவின் அருளுக்கு தன்னை தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். எளிமை, தூய்மை, நல்ல பண்பு ஆகியவற்றை வளர்க்க வேண்டும்.
உண்மையோடும், நம்பிக்கையோடும் தனது குறிக்கோளை அடைய பாபாவை பற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம்  "ஒரே ஒரு அடி" பாபாவை நோக்கி முன்னேற வேண்டும். மற்றவற்றை பாபா பார்த்துக்கொள்வார். வேண்டாத கஷ்டத்தையெல்லாம் அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை.   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 21, 2014

என் விருப்பம்


என் விருப்பம் நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகப்படவேண்டும் என்பது. அதற்கு உன்னை தயார்படுத்தும் வேலையில் இப்போது ஈடுபட்டிருக்கிறேன். என்னை நோக்கி முதலில் ஓரடியை நீ எடுத்து வை. அடுத்து மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். ஸ்ரீ சாயி-யின் குரல்      


http://www.shirdisaibabasayings.com

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 20, 2014

பக்தர் நலனே முக்கியம்
1910-ம் ஆண்டு காபர்த்தே அவர்களிடம் பாபா பின்வருமாறு கூறினார்:

நான் இரண்டு வருடங்களாக ரொட்டி, நீர் மட்டுமே எடுத்துக்கொண்டு உயிர்வாழும் அளவுக்கு நான் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தேன். எனக்கு சங்கிலிப்புழு உபத்திரவம். எனக்கு ஓய்வே கிடைக்காமல் மக்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். நான் தோன்றிய இடத்திற்கு திரும்பிச் செல்லும்வரை இந்த நிலை தொடரும். நான் அதை பொருட்படுத்தவில்லை. ஏனெனில், என் உயிரை விட என் பக்தர்களின் நலனைப் பேணுவதையே நான் அதிகம் மதிக்கிறேன்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, January 19, 2014

பாபாவுடன் ஐக்கியம்
பாபாவுடன் ஐக்கியமாவது.

அவருக்குள் நீங்களும், உங்களுக்குள் அவரும் இருப்பதே ஐக்கியமவதாகும். சதா நேரமும் அவரை தியானித்தல் (நினைத்தால்), பாபா கூறிய நல்வழிப்படி வாழ்க்கை நடத்த முயற்சித்தல், பிறருக்கு கேடு செய்யாமல் இருத்தல், எல்லா உயிர்களையும் தம்முயிர்போல பாவித்தல் ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம் பாபாவுடன் ஐக்கியமாக முடியும். உனக்கும், எனக்கும் வேறுபாடு இல்லை. அப்படி வேறுபாட்டை உண்டாக்குகிற தேலி என்கிற தடுப்பு சுவரை உடைத்துவிட்டால், நாம் இரண்டற கலந்து ஐக்கியமாக இருப்போம் என்றார். தன் இடத்தில் உங்களை வைத்துப்பார்க்கிறார் பாபா. நீங்கள் அதற்கு தகுதியானவராக மாறுவதே அவருடன் ஐக்கியமாவது.
 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, January 18, 2014

நீ என் குழந்தை


நீ என்னுடைய குழந்தை,நான் உன்னுடைய தந்தை.நான் உனக்கு நடக்க கற்றுக்கொடுக்கிறேன்.என் சொற்படி நீ நட.அப்போது இன்பமானாலும்,துன்பமானாலும் ஒன்று போலவே இருக்கும்.-ஷீரடிசாய்பாபா  [சத்குருவாணி]http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 17, 2014

குரு கீதை


குரு கீதைக்குச்சமமான ஸ்தோத்திரமும், குருவிற்கு மேலான தத்துவமும் இல்லை. இது சத்தியம், சத்தியம், மேலும் சத்தியம். குருவே தெய்வம், குருவே தர்மம், குருவிடம் நிலைத்தல் சிறந்த தவம். குருவிற்கு மேல் எதுவும் இல்லை. எங்கு குரு பக்தியுள்ளதோ அவனுடைய தாய் பாக்கியசாலி, தந்தை பாக்கியசாலி. ஸ்ரீ சாயி தரிசனம்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 16, 2014

என் விழிகள் பேசும்


என் சத்தம் உன் மனதில் ஒலித்தால் இப்போதே என்னை நோக்கிப் பார். என் விழிகள் உன்னோடு பேசும். உன் உணர்வுகள் சில்லிட்டு ஆனந்தக் கண்ணீர் பெருகும். இதே உணர்வுடன் இரு. இனி காலமெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 15, 2014

சாயி தரிசனம்

பாபாவை நேருக்குநேராக தரிசனம் செய்தவர் சிலர், காட்சியாக தரிசனம் செய்தவர் பலர்.வேறு உருவத்திலும் மாறுவேஷத்திலும் அற்புத தரிசனம் பெற்றவர் அநேகர். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அவர் தெரிவதில்லை. நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர்கள் எங்கிருந்தாலும் தரிசனம் தருவார்.மக்களுடைய மனச்சாய்வு எப்படியோ அப்படியே நேரிடை அனுபவம் ஏற்படுகிறது.-ஸ்ரீ சாயி இராமாயணம் .
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 14, 2014

சாய்பாபாவின் பொன்மொழிகள்

யார் என்னை நினைக்கிறாரோ அவரை நான் நிரந்தரமாக ஞாபகத்தில் வைக்கிறேன்.எனக்கு வண்டியோ குதிரையோ ஆகாயவிமானமோ ரயில்வண்டியோ தேவையில்லை. என்னை யார் அன்புடன் கூவி அழைக்கிறாரோ அவருக்கு நான் தாமதமின்றி உடனே தோன்றுகிறேன்-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 13, 2014

மனைவி மக்கள்


தேகம், வீடு, மனைவி, மக்கள் -இவையனைத்தும் என்னுடையவை' என்று நினைப்பது விவேகமற்ற செயல்.இவையனைத்தும் பிற்பகல் நிழலைப்போல் வேகமாய் இடம் மாறும் தன்மையுடையவை; கணநேரத்தில் மறையக்கூடிய மாயை.இந்த மாயையின் சுழலில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று விரும்புபவர் வேறெதிலும் நாட்டமில்லாது சாயியிடம் சரணடைந்துவிட வேண்டும்.-ஸ்ரீ சாயி இராமாயணம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, January 12, 2014

நினைத்ததும் தரிசனம் தருவேன்


காட்கில் என்ற பக்தருக்கு வேலை மாற்றலாகி அவருடைய புது ஊரில் வேலையில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ரயில்வே பெட்டியில் ஏறி அமர்ந்த அவர், புது இடத்தில் வேலை ஒப்புக்கொள்வதற்கு முன் பாபாவை தரிசிக்க முடியவில்லையே என வருந்தினார். தீடிரென அவர் மடியில் ஒரு உதி (விபுதி) பொட்டலம் விழுந்தது.

அவர் ஷீரடிக்கு வந்தபோது, பாபா அவரிடம், உன்னால் வரமுடியவில்லை. ஆகையால் நான் உனக்கு உதி (விபுதி) அனுப்பினேன். நீ அதைப் பெறவில்லையா? எனக் கேட்டார்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, January 11, 2014

துவாரகாமாயி

                                   துவாரகாமாயி

இந்த மசூதியை அடைக்கலமாக அடைந்து எத்தனையோபேர் தங்களுடைய இக்கட்டுகளில் இருந்து தப்பித்துள்ளனர். இங்குள்ள பக்கீர் மிகவும் தயை நிறைந்தவர். தஞ்சம் அடைந்தவரை வெறும் கைகளுடன் திரும்பிச் செல்லும்படிச் செய்ய மாட்டார்.இந்த மசூதி மாயியின் தயையை இதயத்தில் இருத்திக் கொண்டவர்கள் உண்டு.மறந்து போனவர்களும் உண்டு.தன்னைத் தஞ்சமடைந்தவர்களைக் காப்பாற்றுவதே இந்த மசூதிமாயியின் நோக்கம்.இங்குள்ள பக்கீர் மிகுந்த தயாகுணம் கொண்டவர்.யாருக்கு எப்படிப்பட்ட துன்பம் வந்தாலும் தனக்கு வந்ததாகக் கருதி துடித்துப் போவார்.அவர்கள் மகிழ்ச்சியோடு இருந்தால் மட்டுமே தானும் மகிழ்வார்.நம்பிக்கை வைத்தவர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவார்.கலியின் பயம் இல்லாமல் செய்வார்.இது மசூதி அல்ல.நம்முடைய துவாரகாமாயி.நம்மைப் பெற்றெடுத்த தாய்.விஸ்வாசமே  இங்கு பிரதானம்.-ஸ்ரீ சாயி திருவாய்மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 10, 2014

என்னுடைய பெருமை

யார் என்னை பெரிதும் நேசிக்கிறாரோ அவருடைய பார்வையில் அகண்டமாக (இடைவிடாது) இருக்கிறேன். நான் இல்லாது அவருக்கு சிருஷ்டியனைதும் (இவ்வுலகம்) சூனியமாகத் தெரியும். அவருடைய வாயிலிருந்து என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 9, 2014

சக்தி


ஜீவன் சக்தி நிரம்பியவனே  என்பது சந்தேகமற்றதே. ஆனால் அதிக சக்தி கொண்டவனல்ல.சிருஷ்டியின் செயல்களையும், கர்மாவின் செயல்களையும் தடை செய்யும் சக்தி அந்த ஜீவனுக்கு இருக்காது. அப்படிப்பட்ட விஷயங்களில் மானுட சக்தி போதாது.அவர்களுக்கு அப்பாற்பட்ட சக்தி தேவை.அப்படிப்பட்ட சக்தி ஜீவனுக்கு  கிடைத்தால் ஜீவனும் கூட சக்தி மிக்கவனேயாவான்.இது எப்படி சாத்தியமாகும்.ஜீவனின் சக்தியை இன்னும் அதிகரிக்கச் செய்யும் சக்தி ஒன்று வேண்டும்.அப்படிப்பட்ட சக்தி இறைவனுடையதாகவே இருக்கும். ஆகையால் அந்த இறைவனை நிரந்தரம் ஆராதித்து, ஜபித்து,பிரேமை செய்து தேவையான சக்தியைப் பெற வேண்டும்.அப்படிப்பட்ட சக்தி,பக்தியால் மட்டுமே கிடைக்கும்.ஆகையால்,தன்  பக்தர்கள் துன்பத்தில் இருந்தால்,அந்த இறைவனே உணர்ந்து,தனக்குத் தானாகவே உதவி செய்பவனாக வந்து ,தன் பக்தர்களைத் துன்பத்திலிருந்து வெளியே கொண்டு வருவார்.-ஸ்ரீ சாயி திருவாய்மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 8, 2014

சர்வமும் வியாபித்திருக்கிறேன்

"நான் சர்வமும் வியாபித்திருக்கிறேன்.ஜல, ஸ்தல, வாயு, அக்னியில் நானாக இருக்கிறேன். உங்களுக்கு அருகிலேயே இருக்கிறேன். நீங்கள் காண்பதெல்லாம் என் வடிவமே.நானற்றது, நானில்லாதது இல்லவே இல்லை.ஆனால் நீங்கள் என்னையே தரிசிக்க வேண்டுமென்று கருதுகிறீர்கள். உண்மையில் உங்கள் கோரிக்கைகளை நான் தீர்த்தேன்,நீங்கள் கிரகிக்கவில்லை."
                                                                                        -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 7, 2014

அல்லா காத்தருளுவார்


"சர்வ ஜீவர்களிலும் அப்பரமனே உள்ளான் என்று யார் அறிந்து நடந்து கொள்கிறார்களோ அப்படிப்பட்டவர்களை அந்த அல்லா தவறாமல் காத்தருளுவார்.இந்தச் சிருஷ்டிக்கு மூலம் அந்த பரமாத்மனே.சர்வ ஜீவர்களுக்கும் தாயும் தந்தையும் அவரே."
                                                                                         -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 6, 2014

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்

                                   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்

பக்தன் பாட்டிசைக்கும் இடத்திலேயே இறைவன் இருப்பார்.வெல்லம் இருக்கும் இடத்தில் எறும்புகள் இருப்பதைப் போன்று, நாமஸ்மரணை செய்பவரின் வீட்டிலேயே இறைவன் இருப்பார்.ஆன்மீக விஷயத்தில் நாளை என்பதை மறந்து இந்த வினாடியிலிருந்தே நாமஸ்மரணை செய்யத் தொடங்குங்கள்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, January 4, 2014

உதி

பஞ்ச பூதங்களால்  அமைக்கப்பட்ட  நம் உடம்பானது அவைகளின் எல்லா இன்பங்களையும் துய்த்து  முடித்த பின்னர் ஓய்ந்து சாம்பலாக்கப்படும்.அவர்களின்  உடல்  சாம்பலாக்கப்படும்  என்ற  உண்மையை  பக்தர்களுக்கு நினைவூட்டவே  பாபா உதியை  வழங்கினார்."பிரம்மம்" ஒன்றே  மெய்பொருள் என்பதையும் ,பிரபஞ்சம்  நிலையற்றது என்றும் தந்தை,தாய்,மகன் இவர்கள் யாவரும்  நம்முடையது  அல்ல என்றும்  இதனால்  உபதேசித்தார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 3, 2014

எனது செயல்களின் உட்பொருள்

"என்  கதைகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு ஞானத்தையும் அளிக்கும்.யார் சாதனை செய்து நிரந்தரம் முயற்சி செய்து,என்னோடு ஆத்மார்த்த நட்பு பாவத்தை அதிகப் படுத்திக் கொள்வார்களோ, அவர்களுக்கு எனது செயல்களின் உட்பொருள் தெரியவரும்.எனது செயல்களை வெறும் வெளிமுகமாகப் பார்த்து,அது எப்படி நடக்கிறது என்ற சந்தேகம் கொள்பவருக்கு அந்த சந்தேகம் என்றும் தீராது."
                                                                                 - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 2, 2014

சேவை

"நான் உங்களுடைய தாசானுதாசன்.உங்களுக்கு சேவை செய்வதற்கென்றே வந்துள்ளேன்.நான் உங்களுக்குக் கடன் பட்டிருக்கிறேன்.உங்களுக்குச் சேவை செய்து அந்தக் கடனைத் தீர்த்துக் கொள்வேன்.நீங்கள் என்னை தரிசிக்கும் போது அனுபவிக்கும் ஆனந்தத்தை, நானும் உங்கள் தரிசனத்தால் அதே ஆனந்தத்தை அனுபவிப்பேன்.இங்கு மசூதியில் உட்கார்ந்து நான் அசத்தியம் பேச மாட்டேன்.என் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வையுங்கள்"
                                                                                     -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 1, 2014

என் உதவி உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்

                 சாய் பக்தர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
எனது அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.எனது லீலைகளை ஆனந்தமாக பார்த்துக் கொண்டு  உட்கருத்தை கிரகிக்கும் விதத்தில் மனதைத் என்னிடம் திருப்புங்கள்.என் உதவி உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்.நான் செய்யும் உதவி அற்புதங்களாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.எனது லீலைகள் தென்பட்டுக் கொண்டிருந்தாலும் சிறிதும் விளங்காது.சிருஷ்டி தெளிவாகத் தென்பட்டுக் கொண்டிருந்தாலும்,எப்படி உண்டாக்கினார் என்பது மாத்திரம் விளங்காது.என் பக்தர்களின் ஷேமத்தை நான் காப்பாற்றி கொண்டே இருப்பேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

10 கட்டளைகள்

நேற்றைய தொடர்ச்சி..


6. புலனடக்கம் : புலன் இன்பம் தருபவை ப்ரியாக்கள். ஆன்மிக வளர்ச்சி தருபவை ச்ரியாக்கள். பேராசை, அதிகப் பற்று போன்றவை புலன் இன்பத்துக்கே வழி வகுக்கும். அவற்றை விலக்கி பாபாவிடம் நாட்டம் செலுத்த வேண்டும்.
7. வைராக்யம் : மனதையும், உணர்வையும் அடக்கி ஆளுதல்.
8. தூய்மை : மனத் தூய்மை வேண்டும். மனதளவிலும் எவ்வித ஜீவ ராசிகளுக்கும் தீமை எண்ணாமை.
9. குருவின் இன்றியமையாமை : நல்ல குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் கடவுளைக் காண இயலாது. எனவே, கடவுளைக் காணவேண்டுமெனில் நல்ல குருவை நாட வேண்டும்.
10. பாபாவின் அனுக்கிரகம் : முதல் 9 கட்டளைகளையும் நிறைவேற்றினால், பாபாவின் அருள் தானாகக் கிட்டும். ஒன்பது கட்டளைகளையும் நிறைவேற்றுபவரிடம் பாபா மகிழ்ச்சியுற்று தன்னை அடைய வழிகாட்டுவார். - ஷிர்டி சாயி சந்நிதானம்.

இவ்வனைத்து கட்டளைகளையும் பெற ஒரே வழி பாபாவின் பால் சரணாகதி அடைவதே.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...