Thursday, January 9, 2014

சக்தி


ஜீவன் சக்தி நிரம்பியவனே  என்பது சந்தேகமற்றதே. ஆனால் அதிக சக்தி கொண்டவனல்ல.சிருஷ்டியின் செயல்களையும், கர்மாவின் செயல்களையும் தடை செய்யும் சக்தி அந்த ஜீவனுக்கு இருக்காது. அப்படிப்பட்ட விஷயங்களில் மானுட சக்தி போதாது.அவர்களுக்கு அப்பாற்பட்ட சக்தி தேவை.அப்படிப்பட்ட சக்தி ஜீவனுக்கு  கிடைத்தால் ஜீவனும் கூட சக்தி மிக்கவனேயாவான்.இது எப்படி சாத்தியமாகும்.ஜீவனின் சக்தியை இன்னும் அதிகரிக்கச் செய்யும் சக்தி ஒன்று வேண்டும்.அப்படிப்பட்ட சக்தி இறைவனுடையதாகவே இருக்கும். ஆகையால் அந்த இறைவனை நிரந்தரம் ஆராதித்து, ஜபித்து,பிரேமை செய்து தேவையான சக்தியைப் பெற வேண்டும்.அப்படிப்பட்ட சக்தி,பக்தியால் மட்டுமே கிடைக்கும்.ஆகையால்,தன்  பக்தர்கள் துன்பத்தில் இருந்தால்,அந்த இறைவனே உணர்ந்து,தனக்குத் தானாகவே உதவி செய்பவனாக வந்து ,தன் பக்தர்களைத் துன்பத்திலிருந்து வெளியே கொண்டு வருவார்.-ஸ்ரீ சாயி திருவாய்மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

அசையாத நம்பிக்கை, திடமான விசுவாசம், உறுதியான பக்தி

பரமபாக்கியம் பெற்றவனே மனிதப்பிறவி பெறுகிறான் ; ஆனால் இறைவனின் அருள் ஒன்றே அவனை ஸாயீயின் பாதங்களுக்கு கொண்டுவருகிறது !  ஸாயீயினுட...