Friday, February 28, 2014

காலம் தாழ்த்துவார்


நமது முதலாளி தன்னைப் பிடித்து நெருப்பில் போட்டுவிடு! என்று கூறினால் நாம் செய்வோமா? உளைச்சேற்றில் இறக்கிவிடு என்று கூறினால் அதைச் செய்வோமா? அப்படித்தான், பாபாவும் நாம் கேட்டுக்கொண்டாலும் கூட நமக்கு எது நல்லதோ, எது நன்மை உயர்த்துமோ அதைச் செய்வார். தவறாக நாம் கேட்பதைத் தராமல் தட்டிக்கழிப்பதைப் போல காலம் தாழ்த்துவார். அந்த இடைக்காலம் வரை அனுபவங்களையும், உணர்வு மாற்றங்களையும் கொடுத்து நம்மை பக்குவப்படுத்துவார். ஸ்ரீ சாயி தரிசனம்.   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, February 27, 2014

விதியை மாற்றலாம்
விதிப்படி செயல்பட்டு, இப்போது சிக்கலில் சிக்கினோம். நமது நிலை, செங்குத்தான மலை மீது ஏறுபவன் எச்சரிக்கையாக கைகளை ஊன்றி நடப்பது போலுள்ளது. கீழே, அதல பாதாளமான பள்ளம். விழுந்தால் ஒரு எலும்புகூட மிஞ்சாது. அன்னாந்து பார்த்தால் மேலே கொடிய புலி. பக்கத்தில் திரும்பினால் படமெடுத்து நிற்கும் பாம்பு. இத்தகைய சூழலில் இப்போது அப்படித்தான் இருக்கிறோம். இதிலிருந்து தப்பிக்க முடியாதா?

பகீரதப் பிரயத்தனம் (கடுமையான முயற்சி) செய்தாலும் தப்பிக்கவே முடியாது என்கிற சாஸ்திரங்கள், தப்பிக்கவும் வழி கூறுகின்றன. அது என்னவெனில், குருமார்களின் திருவடிகளை சரணடைவது. ஞானிகள் நம்மை கஷ்டங்களிலிருந்து விடுவிக்க அவதரித்தவர்கள். பல ஜென்மங்களாக நம்மைத் தொடர்ந்து வரும் அவர்கள் சாட்சாத் இறைவன் ரூபிகள். குருமார்கள் நம் பூர்வ ஜென்மங்கள் தொடர்பான அனைத்து விஷயங்களும் தெரியும். இதனால் நம் மீது கருணையுடன் இருப்பார்கள். இவர்களை சரணடைந்தால், அவர்கள் நம்மைக் காக்க முன்வருவார்கள். நாம் தப்பிக்கொள்ளலாம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, February 26, 2014

எல்லாவற்றையும் பிரசாதமாக நினை
குசபாவ் என்ற பக்தர் ஏகாதசி விரதத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார். அவருக்கு பாபா எப்படி அருள்பாலித்தார் என்பதை கூறும் கதை:

ஒரு ஏகாதசி தினம், குசபாவ் பாபாவின் அருகில் வந்து அமர்ந்தார். பாபா அவரிடம், இன்று என்ன சாப்பிடுவாய்? எனக் கேட்டார்.

குசபாவ்: ஒன்றுமில்லை. இன்று ஏகாதசி.
பாபா: ஏகாதசி என்றால் என்ன?
குசபாவ்: உபவாசம் இருக்க வேண்டிய தினம்.
பாபா: உபவாசம் என்றால் என்ன?
குசபாவ்: ரோஜஸ் (விரதம்) போன்றது.
பாபா: ரோஜஸ் (விரதம்) என்பது என்ன?
குசபாவ்: பட்டினி இருப்போம். அதாவது சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற கந்த (மண்ணிலிருந்து விளையக்கூடிய) மூலம் தவிர வேறு எதையும் உண்ணோம்.
பாபா: ஓ! காந்தா சாப்பிடுவாயா? இதோ இங்கே காந்தா (வெங்காயம்) இருக்கிறது. சாப்பிடு.
குசாபவ்: ஆச்சாரமில்லாத உணவை பாபா தன் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டு, பாபா தாங்கள் அதை சாப்பிட்டால், நானும் சாப்பிடுகிறேன்.
பாபா: பாபா சிறிதளவு சாப்பிட்டார். குசபாவும் சிறிது சாப்பிட்டார். பாபா சற்று வேடிக்கை செய்து பார்க்க விரும்பினார்.
பாபா: (மற்றவர்களிடம்) இந்த பாம்நியாவை (பிராம்மணன் என்ற சொல்லை ஏளனமாகவும், திரித்தும் கூறுவது) பாருங்கள். ஏகாதசி தினத்தில் வெங்காயம் சாப்பிடுகிறார். 
குசபாவ்: பாபா சாப்பிட்டார். நானும் சாப்பிட்டேன்.
பாபா: நான் உண்டது கந்தா. அதாவது சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பாருங்கள். இப்படி சொல்லிக்கொண்டே பாபா வாந்தி எடுத்தார். வெங்காயம் சர்க்கரை வள்ளிக்கிழங்காக மாறி வெளியே வந்து விழுந்தது.
குசபாவ்: இந்த அற்புதத்தைக் கண்டு, பேராவலுடன் அந்தக் கிழங்கைப் பிரசாதமாக மதித்து எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, February 25, 2014

முன்ஜென்ம வினைமுன்ஜென்ம வினைகளால் சுகத்தையும், துக்கத்தையும் அனுபவித்தே தீர வேண்டும். கர்மத்தை அனுசரித்தே புத்தியும் வேலை செய்யும். ஆயினும் விதியால் நிர்ணயிக்கப்பட்டதை, பாபாவின் மேல் நம்பிக்கையும், பொறுமையுமுள்ள பக்தன் சுலபமாகத்தவிர்த்து விடலாம்.
 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, February 24, 2014

பாபாவின் நிழற்படம் தரிசனம்பாபாவின் நிழற்படத்தை தரிசனம் செய்வது அவரை நேரடியாக தரிசனம் செய்வதற்கு சமம். ஆனால், எண்ணம் மட்டும் பூரணமாக இருக்கவேண்டும். 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, February 23, 2014

சவுக்கடி


எவன் தன் கவனத்தை என் மீது திருப்புகிறானோ, அவன் எந்த சங்கடமும் படமாட்டான். ஆனால் என்னை மறந்துவிடுபவன் மாயையிடம் இரக்கமின்றிச் சவுக்கடி படுவான். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, February 22, 2014

குரு சரித்திர மகத்துவம்


குரு கீதையின் (குரு சரித்ரம்) ஜபத்தால் ஒருவன் அளவற்ற பயனை எய்துவான். இது எல்லா பாவங்களையும் போக்குவது, எல்லா ஏழ்மையையும் நாசம் செய்வது. அகால மரணத்தை தடுப்பது, எல்லா சங்கடங்களையும் நாசம் செய்வது. யக்ஷர், ராட்சதர், பூதங்கள்,திருடர்கள்,புலி முதலிய பயங்களை போக்குவது.  

கொடிய குஷ்டம் முதலிய உபத்ரவங்களையும் தோஷங்களையும் நிவாரணம் செய்வது. குருவின் சந்நிதியில் என்ன பலனோ அது படிப்பதாலேயே கிட்டும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, February 21, 2014

நிறைவாக இருக்கவேண்டும்


எனக்கு படையல் போடுவதைவிட, பசித்தவனுக்கு உணவு கொடுப்பதையும், ஆதரவில்லாதவனுக்கு உதவி செய்வதையுமே நான் விரும்புகிறேன். ஏனென்றால், நீ சுகமாக இருப்பதால் உலகத்திற்கு நன்மை விளையும் என்பதால் நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து நிறைவாக இருக்கவேண்டும்.    

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, February 20, 2014

அற்புதம்

சாயி பாபா கோவில்களில் மட்டும் வசிப்பவர் அல்லர். தம்மை உண்மையாக நம்பி தன்னிடம் அடைக்கலம் புகும் பக்தரின் உள்ளத்திலும் வாழ்பவர். தான் ஒருவரின் உள்ளத்தில் இருக்கும்போது, அந்த பக்தரின் வாழ்வை மாற்றும் விதத்தில் ஆலோசனைகள் வழங்குவது, அனைத்திலும் நல்லதையே பெற்றுத்தருவது போன்றவற்றை செய்கிறார் பாபா.


சில சமயம் பல்வேறு சூழல்களால் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் பக்தர்களை யார் மூலமாவது தன்னிடம் வருமாறு செய்து அவருக்குத் தீர்வு தருகிறார். இதனால் பல பக்தர்கள் சாயி பாபா உடனே அற்புதம் செய்துவிடுவார் என நினைக்கிறார்கள். ஸ்ரீ சாயி-யின் குரல். 


http://www.shirdisaibabasayings.com 

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil


Wednesday, February 19, 2014

சாயி ராமாயணம்


எந்த உருவம் தெய்வீக உயிரோட்டத்துடன் இயங்கியதோ, அந்த உருவம் பக்தர்களுடைய இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. பக்தர்களுக்காக கைதூக்கி வாழ்த்து கூறியவர் தம்முடைய பூதவுடலை ஷீரடியில் நீத்துவிட்டபோதிலும், நகரும், நகராப்பொருள் அனைத்திலும் நிறைந்திருக்கிறார். லீலைக்காக அவதாரம் எடுக்கக்கூடிய சாமர்த்தியம் உடையவர் பாபாவே. ஸ்ரீ மத் சாயி ராமாயணம்.      


http://www.shirdisaibabasayings.com 

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, February 18, 2014

சத்குருவின் பாதங்களைசத்குருவின் பாதங்களை உறுதியாக பிடித்துக் கொள்பவர், மற்றவர்கள் பலவிதமாக சிரமப்பட்டும் அடையமுடியாததை சொற்பமான முயற்சியாலேயே அடைந்துவிடுவர். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.


http://www.shirdisaibabasayings.com

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, February 17, 2014

உன்னை பழக்குவிக்கிறேன்.நான் குரு என்பதை நீ உணர்ந்து இருக்கிறாயா? குருவின் வேலை மாணாக்கனுக்கு உணவூட்டி, உறங்க வைப்பதா? இல்லையே ! அவனுக்கு பல வழிகளில் பயிற்சி தருவதுதானே! 

எனது சோதனைகள் உன்னை அழிப்பதற்காக அல்ல, நடைமுறை வாழ்க்கையை நீ நன்றாக உணர்வதற்காக. இந்த உணர்ந்துகொள்ளுதல் எப்போதும் உள்ளத்தில் இருந்தால், பிற்காலத்தில் இத்தகைய நிலையை நீ சந்திக்க நேர்ந்தால் எச்சரிக்கையாக இருப்பாய். அதற்காக தேர்வுகளை முன்னதாகவே நான் வழங்குகிறேன். 


குழந்தை நன்றாக நடக்கப் பயிற்சி தரப்படுவதைப் போலத்தான் ஒவ்வொரு நபருக்கும் பயிற்சி தரப்படுகிறது. நீயும் இப்போது அந்தப் பயிற்சிக் கட்டத்தில் இருக்கிறாய். நான் உன்னை பழக்குவிக்கிறேன். - ஸ்ரீ சாயியின் குரல்http://www.shirdisaibabasayings.com

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, February 16, 2014

சமபாவம் உள்ளவராக இருக்க வேண்டும்

பாபா ராமதாசியிடம், " ஒரு ராமதாசிக்கு 'என்னுடையது' என்ற எண்ணமே உதவாது. எதையும், எல்லாரையும் சமமாகப் பார்க்கவேண்டும்." என்றார். அதாவது, ஒரு சாயி பக்தனுக்கு சுயநலம் இருக்கக்கூடாது என்கிறார். 

இறைவனின் பார்வையில் எல்லாருமே எஸ்.சி, எஸ்.டி தான். அதாவது அவனது பட்டியலில் இடம் பெற்றவர்கள்தாம் நாம். பல ஜென்மங்களாக வந்து வந்து போகிற பழங்குடிகள் நாம். ஒருவரை உயர்த்தி, இன்னொருவரைத் தாழ்த்திப் பார்ப்பது பாவம். பாபா இதை அழகாகச் சொன்னார்: புலையனும் நானே, நோயாளியும் நானே, கருப்பு நாயும் நானே! நகரும் நகராப் பொருட்கள் அனைத்திலும் வியாபித்து இருப்பவனும் நானே!  


http://www.shirdisaibabasayings.com

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, February 15, 2014

புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லைநான் எல்லோரையும் சமமாகப் பார்க்கும் நிலையை வாழ்வின் துவக்கம் முதல் கடைப்பிடித்து வருகிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. யாரையும் புண்படுத்துவதும் கிடையாது. ஷிர்டி சாய்பாபா   

Friday, February 14, 2014

சத்குருவின் பாதங்களை


சத்குருவின் பாதங்களை உறுதியாக பிடித்துக் கொள்பவர், மற்றவர்கள் பலவிதமாக சிரமப்பட்டும் அடையமுடியாததை சொற்பமான முயற்சியாலேயே அடைந்துவிடுவர். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, February 13, 2014

சாயி பாபாவின் வரலாறு


அகன்று ஆழ்ந்த எல்லையற்ற ஒரு பெருங்கடல் போன்று சாயி பாபாவின் வரலாறு உள்ளது. அனைவரும் அதனுள் ஆழ்ந்து மூழ்கி விலை மதிப்பற்ற ஞானம், பக்தி என்ற முத்துக்களை எடுக்கலாம். நல்லுணர்வில் ஊறிக்கிடக்கும் மக்களுக்கு அவற்றைக் கொடுக்கலாம். சாயி பாபாவின் அறிவுரைகள் மிகவும் அற்புதமானவை. இவ்வுலக வாழ்வின் துன்பப் பெருஞ்சுமைகளைச் சுமந்து கொண்டிருப்பவர்கள், கவலையால் பீடிக்கப்பட்டோர்கள் ஆகியவர்களுக்கு மன அமைதியையும், மகிழ்ச்சியையும் அவை அளிக்கின்றன. வேத அறிவையொத்த விறுவிறுப்புள்ளதும், அறிவூட்டுவதுமான சாயி பாபாவின் இந்த அறிவுரைகள் எல்லாம் கேட்கப்பட்டு நற்சிந்தனை செய்யப்பட்டால் அடியவர்கள் கோரும் பிரம்மத்துடன் ஐக்கியமாதல் அஷ்டாங்க யோகம், தியானப் பேரின்பம் முதலியவற்றை பெறுவார்.

         

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, February 12, 2014

தட்சிணை


எனக்கு யார் ஒரு ரூபாய் தட்சிணையாகக் கொடுக்கிறாரோ, அவருக்கு நான் 10 மடங்கு திருப்பிக் கொடுக்கவேண்டும். ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, February 11, 2014

பாபாவின் பக்த ஸ்மரணம்
பூர்வத்திலிருந்து தொடரும் பிரச்சினைகளை அறிந்திருக்கிற ஞானியான பாபா, குருவாக, பகவானாக இருந்தும், பக்தராகிய நம்மை இரவு பகலாக தியானித்து பக்த ஸ்மரணம் செய்கிறார். நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

உனக்குத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிற ஒரே விஷயம். கஷ்டம் என்பது உனக்காக கண்டு பிடித்து உன்னை சிக்க வைத்திருக்கிற நிலையல்ல. உலகில் பிறந்த எல்லாரும் பல சூழல்களில் அனுபவித்த ஒன்று அது. இப்போது உனக்கு வந்திருக்கிறது.

தப்பிக்கத் தெரிந்தவர்கள், விதியை இறைவன் அருளால் மாற்றி வாழ்க்கையில் உயர்ந்தார்கள். பயந்து, தளர்ந்து, தன்னம்பிக்கை இழந்தவர்கள் தோற்றுப் போனார்கள். விதி என்கிற பாம்பு அவர்களை முற்றிலும் சாப்பிட்டு விட்டது.

நீ வாழ்க்கையில் உயரப் போகிறாயா? சிக்கிக் கொள்ளப் போகிறாயா? இதைத் தீர்மானிக்கவே இப்போது நீ அனுபவிக்கிற நிலை.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, February 10, 2014

நம்பிக்கையும், பொறுமையுமே மருந்து


கசாப்புக் கடைக்கார குடும்பத்தில் பிறந்த அமீர்சக்கர் பாந்த்ராவில் (மும்பை) மிகப்பெரிய தரகராக இருந்தார். தம்மை பீடித்திருந்த முடக்குவாத நோய்க்கு பரிகாரம் கேட்டார். பாபா பதில் சொன்னார், "போங்கள், போய்ச் சாவடியில் நிம்மதியாக உட்காருங்கள்". 

ஆனால் இந்தச் சாவடியோ புராதானமானது. மேற்கூரையும், கிழ்த்தளமும் சிதிலமடைந்திருந்தன. பல்லியும், பாம்பும், தேளும், ஒணானும் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருந்தன. மேலும், குஷ்டரோகிகள் சிலர் அங்கு வாழ்ந்து கொண்டிருந்தனர். எச்சிலிலையோடு எறியப்பட்ட உணவைத் தின்று வாழ்ந்த சில நாய்களும் அங்கு இருந்தன. அமீர் சோகமடைந்தார்; ஆயினும், பாபாவின் பேச்சுக்கு எதிர்பேச்சு ஏது? கூரையிலிருந்து மழை நீர் ஒழுக்கு; தரை மேடும், பள்ளமும், குழிகளுமாக இருந்தது. இது போதாதென்று குளிரும், வாடைக்காற்றும் உடலை வாட்டின. அமீர்சக்கர் மனமுடைந்து போனார். 

மழை காற்றும், குளிரையும் தாங்க முடியாமல், அவருடைய மூட்டுகளெல்லாம் விறைத்துப் போயின. கடைசியில் மருந்து என்னவென்று பார்த்தால், பாபாவினுடைய சொல்லைத்தவிர வேறெதும் இல்லை.  ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.    

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, February 9, 2014

சூனியமாகத் தெரியும்
யார் என்னை பெரிதும் நேசிக்கிறாரோ அவருடைய பார்வையில் அகண்டமாக (இடைவிடாது) இருக்கிறேன். நான் இல்லாது அவருக்கு சிருஷ்டியனைதும் (இவ்வுலகம்) சூனியமாகத் தெரியும். அவருடைய வாயிலிருந்து என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும். -ஷிர்டி சாய்பாபாhttp://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, February 8, 2014

கடவுள் அருள் புரிவார்

ஜனங்கள் பாபாவை அணுகும்போது,பாபா அல்லா பலே கரேகே (கடவுள் அருள் புரிவார் ) என சொல்லிக் கொண்டே ஊதியை அளிப்பார்; அவர் கூறியது யாவும் அப்படியே நடக்கும்.ஒரு முறை " நான் இங்கே பேசிக் கொண்டிருக்கிறேன், அவை அங்கே நிகழ்கின்றன",என பாபா கூறினார். பாபாவின் சொற்கள் பிரமாணம் நிறைந்தவை. வறண்ட பாறையில் தண்ணீர் உள்ளது என அவர் கூறும்போது, அங்கே தண்ணீர் கிட்டியது. பஞ்ச பூதங்களும் அவரது ஆணைக்கு கட்டுப்பட்டன. நெருப்பு ,நீர் ,காற்று ஆகியவை அவருடைய ஆணைக்கு கீழ்ப்படிந்ததை பல பக்தர்கள் கண்டிருக்கின்றனர். கொழுந்துவிட்டு உயரமாக எரியும் தீ அவரது ஆணைக்கு கட்டுப்பட்டு அடங்கிற்று. பலத்த காற்றும் மழையும் அவருடைய ஆணையை மதித்து நின்றன.கொளுத்தும் வெய்யில் காலத்தில் எரியும் நெருப்பின் அருகே குளுமையான காற்று வீச வேண்டுமென பாபா சங்கல்பம் செய்ய,அவ்வாறே குளிர் காற்று வீசியது. மாண்டவர் மீண்டும் உயிர்பெற்றனர். தம் முன் இருப்பினும் இல்லாவிடினும் ஒருவனது இதயத்தில் உள்ளதை அறியும் சக்தியும், அதை சீர்படுத்தும் சக்தியும் அவரிடம் இருந்தது.அவர் சர்வாந்தர்யாமி என் உணரப்பட்டார்.-பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.   
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, February 7, 2014

பாபாவை அணுக விசேஷமான வழி முறைகள்

                 பாபாவை அணுக விசேஷமான வழி முறைகள் 
பக்தன் பாபாவை அணுகவேண்டும் என மனப் பூர்வமாக விரும்பட்டும். உடனேயே அணுகுமுறை துவங்கிவிட்டது. அக்கணத்திலிருந்தே அவர்கள் நிலையில் முன்னேற்றம் ஆரம்பமாகிவிட்டது.அவர்கள் மேலும் மேலும் உற்சாகமடைகின்றனர், மேன்மேலும் பலனடைகின்றனர். பக்தர்கள்பாபாவை அணுக விசேஷமான வழி முறைகள் ஏதுமில்லை.பக்தர்கள் தங்களிடம் உள்ள பாபாவின் படத்தை பார்த்து தினமும் பாபாவின் திருவுருவை  மனதில் கொண்டு வரட்டும். கவிஞனின் கற்பனைகள் எல்லாவற்றையும் விட திறன்படைத்த பாபாவின் அத்புத லீலைகளை படிக்கட்டும்.பாபாவின் குணாதிசயங்களை நினைவுற பாபாவின் அஷ்டோத்திர சத நாமாவளி (108 நாமாக்கள்) மிக்க சக்தி வாய்ந்த சாதனம்.ஆர்வமுள்ள பக்தர்கள் ஒன்று கூடி செய்யும் பூஜைகள்,பஜனைகள் ஆகியவற்றில் பங்கு கொள்ளட்டும்.தான் காணும் ஒவ்வொரு மனிதன், ஜந்து ஆகியவற்றின் உள்ளே பாபா உறைகிறார் என்ற நோக்குடன், பாபாவை மகிழ்விக்கும் பொருட்டு ஒவ்வொருவரும் மனித சகத்திற்கும் ஜீவராசிகளுக்கும் அன்புடன் சேவை செய்யட்டும்.ஆர்வமுள்ள சாதகனுக்கு பாபாவே மேற்கொண்டு உள்ள வழிகளைக் காட்டுவார்.ஒவ்வொரு உண்மையான பக்தனுக்கும் பலவித வழிகளில் பாபாவுடன் மேற்கொண்டு தொடர்பு எப்படி வைத்துக் கொள்வது,அதை எப்படி வளர்த்துகொள்வது என்பது பற்றி பாபாவே உணர்த்துவார்.-பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி. 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, February 6, 2014

சத்தியமான வார்த்தைகள்

யாரும் இறப்பதில்லை, நிச்சயமாக சாயி பாபா போன்ற,தன்னைக் கண்டறிந்த ஒரு மகாத்மா இறப்பதில்லை.பௌதீக உடலை விட்டு விடும்போது ஆத்மா ஞானிகள் அல்லது ஜீவன் முக்தர்கள்,விதேக முக்தர்கள் அல்லது நிராகரபரப்பிரம்மம்  என் அழைக்கப்படுவார்கள். இவர்கள் தங்கள் சரீரங்களை விட்டபின் பரப்பிரம்மத்துடன் ஐக்கியமாகாமல் சூட்சும சரீரத்துடன் திகழ்ந்து,மனித சகத்திற்கு நன்மை பயத்தல் என்ற தெய்வீக சங்கல்பத்துடன் ஒத்துழைக்கின்றனர். இந்த சூட்சும சரீரத்தில் சஞ்சரிக்கும் போது  நினைத்த மாத்திரத்தில் அவர்கள் சரீரத்துடன் தோன்றி மறைய முடியும்.இவர்கள் அபாந்தராத்மாக்கள் ஆவர்.சாயி பாபா இப்போது ஒரு அபாந்தராத்மா.தமது பௌதீக உடலை விடுவதற்கு முன்,தாம் தமது சதை எலும்புகளாலான போர்வையை விடப்போவதைக் கண்டு பக்தர்கள் பயப்படவோ,வருந்தவோ வேண்டாமென்றும்,எந்த ஒரு பக்தன் எந்த இடத்திலும்,எந்த ஒரு தருணத்திலும் தம்மை நினைத்தால்,தாம் அங்கே தோன்றி அவனை கவனித்துக் கொள்வதாகவும் பாபா கூறினார்.பாபா கூறியது எவ்வளவு சத்தியமானது என்பதை எண்ணற்ற பக்தர்கள் கண்டிருக்கின்றனர். தீவிர பக்தர்கள் இன்றும் பாபாவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து தங்களுடைய சொந்த அனுபவங்கள் வாயிலாகவே பாபா கூறியது எவ்வளவு சத்தியமானது  என்பதைக் காணலாம்.-பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, February 5, 2014

பாபா என்னைக் காத்தருளவேண்டும்

புண்ணிய கர்மாக்களில்  சிரத்தை கொண்டவர்கள் அந்த கர்மாக்களின் பலனாக பாபாவிடம் வசீகரிக்கப்பட்டு அவரிடம் ஓடி வருகின்றனர். அத்தகையோர் பாபாவின் குலம், சாதி பற்றி கவலைபடுவதில்லை. ஆனால் சிலர் பாபாவினுடைய குலத்தை விவாதிப்பதிலேயே நாட்கள் கழித்து இம்மையிலும் மறுமைக்கும் பலனடையும் வாய்ப்பை இழந்துவிடுகின்றனர். ஸ்ரீ சாயியால் ஆகர்ஷிக்கப்படுவது ஒருவனது ரிணானுபந்தம் அல்லது முன்வினைப்பயனாலேயே. ஆனால்,ஒருவன் பொறுக்கவொணா வலி அல்லது பெரும் துன்பம் இவற்றால் அவதிப்படும்போது,பாபா எங்கே பிறந்தார்,எப்படி வளர்ந்தார்  என்பவற்றைப் பற்றி சற்றும் கருதாமல் 'பாபா என்னைக் காத்தருளவேண்டும்' என துள்ளும் இதயத்துடன் பாபாவை அணுகுகிறான்.அவனுக்கு அத்புதமான பல பலன்கள் கிட்டிவிட்டவுடன், தனக்கு பாபாவே கடவுள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட்டு,பின்னர் பாபா சட்டபூர்வமாக எந்த குலத்தைச் சார்ந்தவர் என்பது பற்றிய விவாதங்களில் ஈடுபடுவதில்லை,தன்னை பற்றி பிறர் என்ன எண்ணுகிறார்கள் என்பது பற்றியும் லட்சியம் செய்வதில்லை.தம்மை முஸ்லீமாக கருதிய சில இந்துக்களுக்கு பாபாவே சில சமயங்களில்,"நான் ஒரு முஸ்லீம்,என்னிடம் வராதீர்கள்" என சொல்வதுண்டு.தம்மை சத்குருவாகவும், குருதேவனாகவும்  மதித்து வந்தவர்களிடம் பாபா,"நான் ஒரு பிராம்மணன்,எனக்கு தட்சிணை கொடுங்கள்.நான் அமர்ந்திருக்கும் இந்த இடம் ஒரு மசூதி அல்ல,இது துவாரகாமாயி" எனக் கூறுவார்.அவர் எல்லோருக்கும் எல்லாமாகவும் இருந்தார்."யே யதா மாம் ப்ரபத்யந்தே, தாம்ஸ்  ததைவ பஜாம் யஹம்" என்பது கீதையின் வாக்கு. -பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, February 4, 2014

ஏன் சாயிநாதனிடம் செல்ல வேண்டும்

சிவனையோ, ராமனையோ பூஜிப்பதை விட்டுவிட்டு ஏன் சாயிநாதனிடம் செல்ல வேண்டுமென பக்தர்களுக்கு கேள்வி எழுமானால்,அதற்கு அவசியமில்லை என்பதே பதில். ராமனிடமிருந்தோ, தனது வேறு இஷ்ட தெய்வத்திடமிருந்தோ சாயி வேறுபட்டவர் என்றோ,பக்தர்கள் நலன்களை கவனிக்க அந்த தெய்வங்களே போதும் என்றோ ஒருவர் கருதி, அதில் திருப்தியும் நம்பிக்கையும் ஏற்படுமானால்,சாயி அத்தகைய ஒருவரை தனது கருத்தை மாற்றிக் கொள்ளும்படி ஒருபோதும் கூறியதில்லை, கூறுவதுமில்லை. பாபா சம்பிரதாயங்களை மிகவும் மதிப்பவர்; ஒவ்வொருவரும் தனது சமயம்,குலம், குரு, இஷ்டதெய்வம், விக்ரகம், மந்திரங்கள்,சம்பிரதாயங்கள் ஆகியவற்றை விடாமல் பிடித்துக் கொள்ளவேண்டும் என்பதே பாபாவின் அறிவுரை.தனது இஷ்டதெய்வம், குரு, மந்திரங்கள் முதலியவற்றுடன் உள்ள வழக்கமான தொடர்பு வேண்டிய அளவு பலன்களை அளிக்கவில்லை எனக்கருதி ஒருவர் பாபாவை அணுகி அவருடைய சக்திகள் வேண்டும் பலன்களை அளிக்கும் என நம்பிக்கை வைப்பாரேயாகில்,பாபா அவரை தம்மிடம் வரும்படி கூறவோ அல்லது வருவதற்கு அனுமதிக்கவோ செய்வார். பாபா அவரது விசுவாசங்களில்  குறுக்கிடுவதில்லை; பழைய விசுவாசங்களுடன் பாபாவிடம் விசுவாசம் என்பது சேருகிறது.அத்தகைய விசுவாசம் ஆச்சரியகரமான பலன்களை அளித்து மேலும் உறுதியாகிறது. லௌகீக பலன்களை நாடி ஒருவர் வருகிறார், அவரது ஆசைகள் நிறைவேறுகின்றன,அத்துடன் அவரது சிந்தனையும்  மாறுகிறது.பாபாவைப் பற்றி மேலும் மேலும்,மிக்க உயர்வாக எண்ணுகிறார்.கடைசியில் கடவுள் சூடிக்கொண்ட எண்ணற்ற பெயர்கள்,உருவங்கள் ஆகியவற்றில் பாபா என்பதும் ஒன்று என
உணர்ந்து முழுமையாக பாபாவிடம் அர்ப்பணித்துக் கொள்கிறார்.-பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, February 3, 2014

பலன்கள் விரைவில் கிட்டிவிடும்

பக்தர்களில் பெரும்பான்மையோர் முதலில் லௌகீகமானதும் பின்னர் ஆன்மீகமானதுமான பலன்களையே விரும்புகின்றனர். மனிதன் எடுத்த சரீரம்,அதைச் சார்ந்தவை,அதாவது குடும்பம் போன்றவை.தேக ஆரோக்யத்திற்க்கும், ஒரு அளவு வசதியான வாழ்க்கைத் தேவைக்கும் போதுமான பொருட்களுடன் பராமரிக்கப்பட வேண்டியிருக்கிறது.அதன் பின்னரே ஆன்மீக வாழ்வுக்குத் தேவையானவை.இந்த அவசர உதவி வேண்டும் என கருதுபவர்கள் எல்லோரும் சாயி பாபாவை அணுகலாம்.எந்த அளவுக்கு அவர்கள் வேண்டுகோள் உளமுருக இருக்கிறதோ,பாபாவிடம் எந்த அளவுக்கு அவர்கள் நம்பிக்கை இருக்கிறதோ,அந்த அளவுக்கு பலன்கள்  விரைவில் கிட்டிவிடும்.-பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, February 2, 2014

விருப்பங்கள் விரைவில் நிறைவேறுகின்றன

சாயிபாபா எப்போதுமே கருணை நிறைந்தவராக இருக்கிறார்.  அவர்பால் முழுமனதான பக்தியே நம்மைப் பொறுத்தவரை தேவைப்படுவதாகும்.  உறுதியான நம்பிக்கையும், பக்தியும் ஒரு பக்தன் பெறும்போது அவனது விருப்பங்கள் விரைவில் நிறைவேறுகின்றன.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, February 1, 2014

பாபாவின் அனுக்கிரகம்

பாபா  யாரையும் நிராசைக்கு உள்ளாக்கமாட்டார்.உற்சாகமிழக்கும் படியும்  செய்யமாட்டார்.ஆனால் பாபாவின் அனுக்கிரகம் கிடைப்பதற்குள் நாம் தவறான அபிப்ராயங்களுக்கு இடமளிக்காமல் இருக்கவேண்டும். பாபாவின் கருணை என்றால் என்ன? தன்  உருவத்தைக் காட்டி தன்னை வெளிப்படுத்திக் கொள்வது மட்டுமேயல்ல.பாபாவுக்கு சேவை செய்யும் பாக்கியமும் கூட அவரது அனுக்கிரகமாகவே கருதப்பட வேண்டும்.பாபாவின் அருளால்தான் அவரைப் பற்றிய அற்புத லீலைகளைக் கேட்டலும்,அவரது மகிமைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதும்,அவரைப் பூஜித்தலும் நடைபெறுகிறது.அவரது அருள் இல்லையென்றால் அவரை ஸ்மரித்தலே நிகழாது.இதைவிடப் பெரிய அருள் ஏதிருக்கும் ? 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...