பாபா ராமதாசியிடம், " ஒரு ராமதாசிக்கு 'என்னுடையது' என்ற எண்ணமே உதவாது. எதையும், எல்லாரையும் சமமாகப் பார்க்கவேண்டும்." என்றார். அதாவது, ஒரு சாயி பக்தனுக்கு சுயநலம் இருக்கக்கூடாது என்கிறார்.
இறைவனின் பார்வையில் எல்லாருமே எஸ்.சி, எஸ்.டி தான். அதாவது அவனது பட்டியலில் இடம் பெற்றவர்கள்தாம் நாம். பல ஜென்மங்களாக வந்து வந்து போகிற பழங்குடிகள் நாம். ஒருவரை உயர்த்தி, இன்னொருவரைத் தாழ்த்திப் பார்ப்பது பாவம். பாபா இதை அழகாகச் சொன்னார்: புலையனும் நானே, நோயாளியும் நானே, கருப்பு நாயும் நானே! நகரும் நகராப் பொருட்கள் அனைத்திலும் வியாபித்து இருப்பவனும் நானே!