Monday, February 17, 2014

உன்னை பழக்குவிக்கிறேன்.



நான் குரு என்பதை நீ உணர்ந்து இருக்கிறாயா? குருவின் வேலை மாணாக்கனுக்கு உணவூட்டி, உறங்க வைப்பதா? இல்லையே ! அவனுக்கு பல வழிகளில் பயிற்சி தருவதுதானே! 

எனது சோதனைகள் உன்னை அழிப்பதற்காக அல்ல, நடைமுறை வாழ்க்கையை நீ நன்றாக உணர்வதற்காக. இந்த உணர்ந்துகொள்ளுதல் எப்போதும் உள்ளத்தில் இருந்தால், பிற்காலத்தில் இத்தகைய நிலையை நீ சந்திக்க நேர்ந்தால் எச்சரிக்கையாக இருப்பாய். அதற்காக தேர்வுகளை முன்னதாகவே நான் வழங்குகிறேன். 


குழந்தை நன்றாக நடக்கப் பயிற்சி தரப்படுவதைப் போலத்தான் ஒவ்வொரு நபருக்கும் பயிற்சி தரப்படுகிறது. நீயும் இப்போது அந்தப் பயிற்சிக் கட்டத்தில் இருக்கிறாய். நான் உன்னை பழக்குவிக்கிறேன். - ஸ்ரீ சாயியின் குரல்



http://www.shirdisaibabasayings.com

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ரொட்டியும் வெள்ளைப்பூண்டு சட்னியும்

1908ம்  ஆண்டு மழைக்காலம் மாதங்களான 'சாதுர் மாஸ்யத்'தின் போது   திருமதி சந்திரா பாய்  போர்க்கர் என்பவர் கோபர்கானில்  இருந்தார்....