Monday, March 31, 2014

உன்னுடன் இருப்பேன்

கல்லறைக்குள் இருந்தாலும் உயிரோடும் சக்தியோடும் இருப்பேன். நீ எங்கு இருந்தாலும் என்னை நினைத்தால் நான் உன்னுடன் இருப்பேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, March 30, 2014

அசைக்க முடியாத நம்பிக்கை

பாபாவின் அருகில் இருக்கும் பாக்கியம் நமக்கு கிடைக்க வேண்டும்;அதன்பிறகு,தாண்டமுடியாதது எதுவுமே இல்லை.கொஞ்சங் கொஞ்சமாக அனைத்து விஷயங்களும் ஓர் ஒழுங்கிற்கு வந்து நிற்கும்.ஓய்வெடுப்பதோ,பேசுவதோ,நடப்பதோ,எந்த வேலையை செய்தாலும் சரி,ஒவ்வொரு கணமும் அசைக்க முடியாத நம்பிக்கையை பாபாவிடம் கடைப்பிடித்தால்,பக்தன் தான் விரும்பிய மனோரதங்கள் அனைத்திலும் நிறைவு பெறுவான்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 29, 2014

மனத்தை ஸ்திரப்படுத்துங்கள்

உடல்,செல்வம்,வீடு முதலிய வேறு எதை பற்றியும் மனது அலைந்து திரியாமல் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருப்பதிலேயே
மனத்தை ஸ்திரப்படுத்துங்கள்.அப்போது அது  அமைதியாகவும் அடக்கமாகவும், கவலையற்றும் இருக்கும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 28, 2014

வியாதியையும் வலியையும்

இவ்விடத்திலிருக்கும் பக்கீர் மஹா தயாளன்; உம்முடைய வியாதியையும் வலியையும் நிர்மூலமாக்கிவிடுவான்.அனைவரின் மீதும் கருணை கொண்ட இந்தப் பக்கீர் அன்புடன் உம்மை பாதுகாப்பான்.யார் இந்த மசூதிமாயியின் படிகளில் ஏறுகிறாரோ,அவர் சுகத்தின்மீது சவாரி செய்வார் என்று அறிந்துகொள்ளும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 27, 2014

சத்தியம்

இன்றும் நான் உயிரோடு இருக்கிறேன் என்று உறுதியாக நம்பு.யார் கைவிட்டபோதிலும் என்  பக்தனாகிய உன்னை நான் என்றும் கைவிடமாட்டேன்.இது சத்தியம்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 26, 2014

மாயை உன் வடிவிலேயே இருக்கிறது


இந்த மாயா உலகத்தில் என் இருப்பை அறிந்து கொள்ள முடியாமல் இருக்கிறீர்கள். மாயை எந்த வடிவத்தில் இருக்கும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். மாயை உண்மையில் உன் வடிவிலேயே இருக்கிறது. ஆகையால் இந்த உடம்பை நம்பாதே, இந்திரியங்களை நம்பாதே, இந்திரியங்களால் உண்டாகும் சுகத்தை விரும்பாதே. அப்படிப்பட்ட நன்மையளிக்காத கர்மங்களை மேற் கொள்ளும் முன்பு என்னை நினைத்திடு. நான் உங்களுக்கு கவசம் போல் இருந்து காப்பேன். ஸ்ரீ சத்குரு வாணி.           

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 25, 2014

நம்பிக்கை


உனக்கு ஒவ்வொரு வினாடியும் என்மேல்  நம்பிக்கையுண்டாவதற்கு, நான் நீங்கள் செய்யும் எல்லா வேலைகளிலும் உதவி செய்கிறேன். - ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, March 24, 2014

சாயியின் அமிழ்தம்


சாயியின் அமிழ்தம் போன்ற போதனைகள்:

1. என்னை நேசிப்பவரின் பார்வையில் நான் மட்டுமே தெரிவேன்.
2. அவருடைய வாயில் என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும்.
3. அவர் என்னையே அகண்டமாகத் தியானம் செய்வார்.
4. நாக்கு என் நாமத்தையே ஜெபம் செய்யும்.
5. என் சரித்திரத்தையே பாடிக் கொண்டிருப்பர்.
6. என்னிடம் சேர்ந்தவரின் கடனை தலையில் ஏற்று அவரை கைதூக்கி விடுவதன் மூலம் அக்கடனை திருப்பிச் செலுத்துகிறேன்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, March 23, 2014

கர்மாக்களைக் குறைப்பவர்கள்


ஆலமரத்தின் மீது அமர்ந்து அதன் பழத்தை சாப்பிடும் பறவைகள், அந்த மரத்தின் மீதுதான் எச்சமிடும். என் மீது எச்சமாகிவிட்டதே என்று மரம் பறவைகளை விரட்டுவது கிடையாது. அப்படியே, துரோகிகள் நம்மிடம் இருந்துகொண்டே துரோகம் செய்யும்போதும் பொறுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் தங்கள் பணி முடிந்ததும் சென்றுவிடுவார்கள். ஒன்று நீங்கள் அனைத்தையும் இழக்கவேண்டும். அல்லது அவர்கள் திருப்திஅடையவேண்டும். உங்களுக்கு கேடு நினைப்பவர்கள் உங்கள் கர்மாக்களைக் குறைப்பவர்கள். அவர்களுக்காக பிராத்தனை செய்யுங்கள். - ஸ்ரீ சாயி தரிசனம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 22, 2014

பாபாவின் மருந்து


வெல்லம் இனிப்புதான்; சந்தேகமேயில்லை. ஆனால், அது நோயாளியின் உடல்நலத்துக்குக் கெடுதல் விளைவிக்கும். உண்மை இவ்வாறிருப்பினும், நோயாளி வெல்லம் பெறாமல் கஷாயத்தைக் (மருந்து) குடிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார். கையில் முதலில் வெல்லக்கட்டி வைக்கப்பட வேண்டும். வெல்லத்தின் கெடுதலை முறியடிக்கும் வகையில், கஷாயத்தில் வெல்லத்தின் முறிவுமருந்தையும் சேர்த்துக் கஷாயத்தின் குணப்படுத்தும் சக்தி குறையாதவாறு வைத்தியர் செய்துவிடுகிறார். பாபாவின் வழிமுறையும் இவ்வாறே!     

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 20, 2014

ஆசைகளை பூர்த்தி செய்வேன்

என்னுடைய கதைகள், உபதேசங்கள் இவைகளைக் கேட்போருக்கு நான் பணிவிடை செய்வேன். செய்வது மட்டுமல்ல, அவர்கள் ஆசைகளையும் பூர்த்தி செய்வேன். என்னுடைய கதைகள் வெறுமனே கேட்கப்பட்டால் கூட அவர்களது அனைத்து வியாதிகளும் குணப்படுத்தப்படும். என்னுடைய பக்தர்களை எக்கணமும் அச்சுறுத்துகின்ற ஆபத்துக்களின் கோரப்பற்களிலிருந்து நான் வெளியே இழுத்துவிடுவேன்.-சாயியின் குரல் 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 19, 2014

ஸ்ரீ சாயி சத்சரித்திரம்

ஸ்ரீ சாயி சத்சரித்திரம் படிக்கப்படும் வீடுகளில் திருமகள் நித்தியவாசம் செய்வாள். சப்தாஹமாகப் ( ஏழு நாள்களுக்குள் ஒரு சுற்று படித்து முடித்தல்) படிப்பவரின் தரித்திரம் பறந்தோடும். சகலமான நற்குணங்களின் சுரங்கமும் பக்தர்களுக்குக் கைவல்ய பதவியை( முக்தியை) அளிப்பவருமான சாயியின் கதையை பக்தர்கள் தினமும் கேட்கவேண்டும்.அவருடைய கதைகள் கலியுகத்தின் பாவங்களை அளிக்கும்.-ஸ்ரீ சாயி சத்சரித்திரம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 18, 2014

பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள்

உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது.உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடமாக வேரூன்றிய பிறகு, உருவமுள்ள இறைவனை அறிந்துகொள்வது தானாகவே பின்தொடர்கிறது.நிர்குனமான, நிராகரமான, இறைவனை பக்தர்களுக்குப் புரியவைப்பதற்கு பாபா கையாண்ட உபாயங்கள் எத்தனை எத்தனையோ ! அவரவர்களுடைய ஆன்மீகத் தகுதிக்கும் திறமைக்குமேற்ப பக்தர்களைத் தனித்தனியாக நிர்வகித்தார்.பல  சந்தர்ப்பங்களில் தரிசனம் தரவும் மறுத்தார். ஒருவரை சிர்டியிலிருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பிவிடுவார். மற்றவரை தனிமையில் வாழச் செய்வார். பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாசங்களில் ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி,உட்கார்ந்து கொண்டிருக்கும்போதும், உறங்கும்போதும் உணவருந்தும்போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள்! இச்செயல்களின் நோக்கம் இதுவே.-ஸ்ரீ சாயி சத் சரித்திரம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, March 17, 2014

பக்தி ஒன்றே ஒரே வழி

மனிதன் தானே செய்விப்பவனும்,அனுபவிப்பவனும் என்று நினைத்துக்கொண்டு முடிவற்ற இடர்பாடினால் தன்னை தானே சிக்கவைத்துக் கொள்கிறான். விடுவித்துக்கொள்ளும் வழியும் அவனுக்கு புலப்படவில்லை.பாபாவின் பாதத்தில் செலுத்தும் அன்பான  பக்தி ஒன்றே ஒரே வழி.சாய்பாபா என்னும் மகத்தான விளையாட்டுக்காரர் தமது அடியவர்களை வழிநடத்துகிறார், அவர்களை தாமாகவே,தமது பண்புருவாகவே மாற்றம் செய்து கொள்கிறார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, March 16, 2014

என்னை நம்புவாயாக

                             
நீ எங்கு இருக்கின்றாயோ அங்கேயே இருந்துகொண்டு என்னை கேள்வி கேள்!தேவையில்லாது எதற்காகக் காட்டிலும், வனத்திலும் திரிந்து விடைகளைத் தேடுகிறாய்? நான் உன்னுடைய ஞான நாட்டத்தை திருப்தி செய்கிறேன். அந்த அளவிற்கு என்னை நம்புவாயாக.- நான் அனைவருள்ளும் வியாபித்திருக்கிறேன். நான் இல்லாத இடமே இல்லை. பக்தர்களுக்காக நான் எங்கும் , எப்படியாவது தோன்றுவேன்-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 15, 2014

படைப்பவனும் காப்பவனும் அழிப்பவனுமாம்

நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என்ன செய்தாலும் சரி, இதை நன்கு ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு நிரந்தரமாக,விவரமாகத் தெரியும்.நான் இவ்வுலகத்திற்கும் அதனுள் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாய்; முக்குணங்கள் சந்திக்கும் இடமும் நானே;இந்திரியங்களைத் தூண்டிவிடுபவனும் நானே;நானே இப் பிரபஞ்சத்தைப் (உலகத்தை) படைப்பவனும், காப்பவனும், அழிப்பவனுமாம்.எவன் தன் கவனத்தை என்மீது திருப்புகிறானோ, அவன் எந்த  சங்கடமும் படமாட்டான். ஆனால், என்னை மறந்துவிடுபவன் மாயையிடம் இரக்கமின்றி சவுக்கடிபடுவான்".- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 14, 2014

நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்

என் திறமையை நீ தெரிந்து கொள்ளாமலிருக்கிறாய்.புற உலகை நம்பி என்னை உதாசீனபடுத்துகிறாய்.அப்படியிருக்கையில் என் உதவி உனக்கு எப்படி கிடைக்கும்? நான் இருக்கிறேன் என்ற விஷயத்தை நீ மறந்துவிடாதே,நீ இருப்பதையும் நான் மறக்க மாட்டேன்.நம்முடைய இருவரின் அனுபந்தத்திலேயே நான் இருக்கிறேன்.அதை தெரிந்துகொள் போதும்.நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்-ஷீரடி சாய்பாபா. 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 13, 2014

பாபா பக்தர்களை கையாண்ட விதமே மிகவும் அற்புதமானது


பாபா அருள் செய்த பாணியே அலாதியானது. பலனடையும் பக்தருக்கு தீட்சை (மந்திர உபதேசம்) பெறுகிறோம் என்று தெரியாமற்கூடப்    போகலாம். சிலருக்கு கேலிக்கும், சிரிப்பிற்கும் இடையே தீட்சை அளிக்கப்பட்டது. பாபா பக்தர்களை கையாண்ட விதமே மிகவும் அற்புதமானது.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 12, 2014

மன சாந்தியை அளிப்பேன்


மன சாந்தி இல்லாத என்ற ஒரு அங்குல இடம் கூட இவ்வுலகில் எங்கும் கிடையாது. உன் பாரத்தை என் மேல் வை. என் மீது உன் பார்வையை திருப்பு. என்னையே தியானி, நிச்சயமாய் நான் உனக்கு சாந்தியை அளிப்பேன்.- ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 11, 2014

குருவே தந்தை

குருவே அன்னை;குருவே தந்தை.குரு,தேவர்களின் கோபத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தியுடையவராவார்.குருவினுடைய கோபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற எவராலும் முடியாது என்பதை நன்கு அறிக.உலகவாழ்க்கையின் வழிகாட்டி குரு.புத்தியின் கண்ணைத் திறந்துவிட்டு,மனிதனை அவனுடைய நிஜரூபத்தைக் காணும்படி செய்கிறார்.மஹா காருண்யமூர்த்தியான குரு,சிஷ்யனின் பக்தியால் விளைந்த ஆவல்களையும் ஏக்கங்களையும் நிறைவுறச் செய்கிறார்.ஆகவே,
எப்பொழுதும் பாபாவின் உறவை நாடுங்கள்.எல்லா பாவங்களும் ஒழிய அவருடைய பாதங்களை வழிபடுங்கள்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, March 10, 2014

<span style="font-family: Times; font-size: medium; font-style: italic; text-align: start; -webkit-text-size-adjust: auto;">பந்தம்</span>


 நம்மிருவரிடையே  பரஸ்பரம் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டிய கடன்கள்,ரீணானுபந்தம் உள்ளது.பல ஆண்டுகளாக இருந்து வரும்,ஆயிரம் ஆண்டுகளாகவும் இருக்கலாம்.கடன்களால் நமது பந்தம் பிணைக்கப்பட்டுள்ளது.ஆகையால் நம்மிருவரிடையே வித்தியாசம் எதுவுமில்லை,பிரிவும் என்றுமில்லை.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

Sunday, March 9, 2014

இறைவனின் ஆணை


என்ன நடக்கிறதோ, அது இறைவனின் ஆணைப்படியே நடக்கிறது. அவரே தூக்கிவிடுகிறார்; அவரே தள்ளியும்விடுகிறார், அவரே சண்டைபோடுகிறார், அல்லது மற்றவர்களை சண்டையிடவைக்கிறார். அவரே காரியங்களை செய்பவரும், செய்யவைப்பவரும் ஆவார். -ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 8, 2014

அவனை நினைத்துத் தொழுது அழுவதுஎன் கடன் அவனை நினைத்துத் தொழுது அழுவது என்று மட்டும் இருக்கவேண்டும். அதற்குப் பெயர்தான் சரணாகதி. அந்த நிலை வந்தால்தான் வேண்டியதை எல்லாம் பாபா விரைவில் கொடுப்பார். ஸ்ரீ சாயி தரிசனம்   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 7, 2014

நம்பிக்கை அசைகின்றன
பாபாவின் பெயரால் பாபா பக்தர்களை, அவர்களது நம்பிக்கை அசைகின்றன. இந்த நிலையில் பாபா நம்மை கைவிட்டுவிட்டார் என நினைக்கத் தோன்றும்.

மென்மையான[இளகிய] மனம் படைத்தவர்கள் மட்டுமே சாயி பக்தர்கள் ஆக முடியும். இவர்கள் தான் எளிதில் கஷ்டப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். கடவுளால் காக்கப்படுகிற இவர்கள், கடவுள் பெயரால் ஏமாற்றப் படுகிறவர்களாகவும் ஆகிறார்கள்.

எப்போதும் பாபா, பாபா எனக் கூறுங்கள். அதே சமயம், பாபாவின் பெயரால் தொழில் ஆரம்பிக்கலாம், கச்சேரி நடத்தலாம் என முன் பின் தெரியாதவர்கள், அல்லது புதிதாக அறிமுகமான நபர்கள் கூறினால் எச்சரிக்கையாக இருங்கள்.

நம்முடைய ஆசையினால் நாம் ஏமாறுகிறோம், நப்பாசையினால், நிறைய கிடைக்கும் என நினைத்து இருப்பதை முதலீடு செய்வதாக நினைத்து தந்துவிடுகிறோம். பிறகு, பாபா பெயரில் பழியைப் போட நினைக்கிறோம்.

எது கிடைக்கிறதோ அதுவே போதும் என நினைத்துக் கொண்டிருங்கள். விரைந்து கிடைக்க வேண்டும் என ஒருபோதும் குறுக்கு வழியை நாடாதீர்கள். உங்களை படைத்த சாயி தேவன், உங்களை எல்லா நேரங்களிலும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார் என்பதை அறியுங்கள்.

எறும்பின் காலில் கட்டப்பட்ட மணியின் ஓசையைக் கூட துல்லியமாகக் கேட்கிற காதுள்ள அவர், உங்கள் கூப்பிடுதலைக் கேட்கமாட்டாரா என்ன? பொறுமையாக இருங்கள், விவேகமாக செயல்படுங்கள்.

சீட்டுக் குலுக்கிப் போட்டு ஏமாறுவதை விட, சற்று கால அவகாசம் கொடுத்துக் காத்திருந்து பார்த்தால், நமக்கு வரவேண்டியது வரும், வராமல் தட்டிப்போவது சுவடு தெரியாமல் ஓடிப் போகும்.
இனியாவது எச்சரிக்கையாக இருங்கள்.
மற்றவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு நிமிடம் பாபாவிடம் பிராத்தனை செய்யுங்கள். அவர்கள் இழந்த பொருள் அவர்களுக்கு வந்து கிகைக்கட்டும். - ஸ்ரீ சாயியின் குரல்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 6, 2014

நான் உங்களின் தந்தைபக்தர்கள்: பாபா, புராணங்கள் உண்மையா?
பாபா: ஆம், உண்மையானவைதான்.
பக்தர்கள்: ஸ்ரீ ராமன், ஸ்ரீ கிருஷ்ணன் பற்றி சொல்லவும்.
பாபா: அவர்கள் அவதாரப் புருஷர்கள்.
பக்தர்கள்: இந்த நார்கே [பாபா பக்தர்] அதை ஒத்துக்கொள்வதில்லை. நீங்கள் கடவுள் இல்லை என்கிறார்.
பாபா: நார்கே சொல்வதும் சரிதான். ஆனால், நான் உங்களின் தந்தை. ஆகவே, நீங்கள் என்னிடமிருந்து எல்லாவித நன்மைகளையும் பெறலாம்.

பாபா கடவுள்தான். அவரது எல்லா பக்தர்களுக்கும் கடவுள்தான். ஆனால் அதை வைத்துக்கொண்டு பெரும் செல்வம் சேர்த்தாரா? தானே எல்லாவற்றிற்கும் மேலானவன் என பறைசாற்றினாரா? அதிலும் ஒரு எல்லைக்கு உட்பட்டே செயல்பட்டார். சமுதாய மேம்பாட்டுக்கு புறம்பாகச் சென்றதில்லை. அதற்கு அடிபணிந்தார். இந்த நாட்டின் சட்டதிட்டத்துக்கு மீறி நடக்கவில்லை.

அவரின் நடை, உடை, நடத்தை எல்லாமே போற்றத்தக்கவாறு இருந்தது. பெண்களை பெரிதும் மதித்தார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 5, 2014

கஞ்சனின் மனநிலை


யாருக்கு எதன் மீது பற்று அதிகமோ அதன் மீது முழு கவனமும் இருக்கும். லோபி [கஞ்சன்] ஏதோ ஓரிடத்தில் தான் மறைத்து வைத்திருக்கும் பொருளைப் பற்றியே இரவும், பகலும் மனதில் அசை போட்டுக்கொண்டிருப்பான். காதலன் காதலியைப் பற்றியும், காதலி காதலனையும் சதா நினைத்துக்கொண்டே இருப்பார்கள். இதே போலத்தான் சாயியை எப்போதும் மனதில் அதே ஏக்கத்தோடும், தவிப்போடும் தேடும் மன நிலை நமக்கு வரவேண்டும்.இமைப் பொழுதும் மறந்தறியேன் என்று சொல்லும் அளவுக்கு அவனை நினைவில் நிறுத்தும் வகையில் மாற்றிக்கொள்ள வேண்டும். ஸ்ரீ சாயி தரிசனம்   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 4, 2014

விஸ்வாசமாகவே இருப்பேன்
யார் எப்படி என்னை ஆராதிக்கிறார்களோ அவர்களுக்கு அதே விதத்தில் நான் கிடைக்கிறேன். விஸ்வாசம் இருக்கும் இடத்தில நான் விஸ்வாசமாகவே இருப்பேன். என்னுடைய மூலசொருபமே விஸ்வாசமாகும்.- ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, March 3, 2014

சமமான மனநிலை


உயர்ந்த நிலையில் உள்ளவன் முதற்கொண்டு புழுக்கள் போன்ற கடை நிலை உயிர்களிடத்தில் கூட உயர்வு தாழ்வு பார்க்காமல் இருப்பவனே உண்மையான ஞானி. அவர் எப்போதும் இன்பம், துன்பம், நண்பன், பகைவன், போகம், ரோகம் இவைகளை சமமான மனநிலையில் பார்த்தருள்வார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, March 2, 2014

பாவங்கள் தொலைந்து விட்டனஎன்றைக்கு என் பெயரைச் சொல்ல ஆரம்பித்தீர்களோ அன்றைக்கே உங்கள் பாவங்கள் தொலைந்து விட்டன. கெட்ட காலம் முடிந்துவிட்டன என்பதை கேள்விப்பட்டும் நம்பாமல் இருக்கிறவர்கள் என்னை நம்புகிறேன் என உதடுகளால் சொல்லி உள்ளத்தால் தள்ளி நிற்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஸ்ரீ சாயி தரிசனம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 1, 2014

தெய்வ அருள் நிச்சயம் உண்டுபாபாவின் சத்சரித்திரம் அழகாக சொல்லித் தருகிறது: உன் வாழ்வில் தரித்திரம் [துன்பம்] முக்கியப் பங்கு வகிக்கிறதா? கவலைப்படாதே. ஞானியரின் சரிதத்தை ஒரு வாரத்திற்குள் படி. முழுதும் படிக்க முடியவில்லையா? குரு ராயர் தொடர்பான அத்தியாயங்களையாவது படி. அப்படி செய்தால் உன் வீட்டில் திருமகள் வாசம் செய்ய ஆரம்பித்துவிடுவாள்.
நான் ஒரு வாரம் சப்தாகம் செய்தேன்.. எதுவும் நல்லது நடக்கவில்லையே! என்கிறீரா?
நீங்கள் ஒருவாரம் படித்தபோது, திருமகள் வந்து விட்டாள். அவளைத் தக்கவைத்துக் கொள்ள நீங்கள் முன்வரவில்லை. அதனால் வந்தவள், உங்களை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டாள். அடுத்தடுத்து சுற்று என சரிதத்தை தொடர்ந்து பாராயணம் செய்பவர்களுக்கு தெய்வ அருள் நிச்சயம் உண்டு.
ராமாயணம் படிக்கிற இடத்திலெல்லாம் அனுமன் வந்திருப்பது எப்படி உண்மையோ! அப்படியே, சத்சரித்திரம் படிக்கப்படும் இடங்களில் பாபா வாசம் செய்ய வருவதும் உண்மை.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...