உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது.உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடமாக வேரூன்றிய பிறகு, உருவமுள்ள இறைவனை அறிந்துகொள்வது தானாகவே பின்தொடர்கிறது.நிர்குனமான, நிராகரமான, இறைவனை பக்தர்களுக்குப் புரியவைப்பதற்கு பாபா கையாண்ட உபாயங்கள் எத்தனை எத்தனையோ ! அவரவர்களுடைய ஆன்மீகத் தகுதிக்கும் திறமைக்குமேற்ப பக்தர்களைத் தனித்தனியாக நிர்வகித்தார்.பல சந்தர்ப்பங்களில் தரிசனம் தரவும் மறுத்தார். ஒருவரை சிர்டியிலிருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பிவிடுவார். மற்றவரை தனிமையில் வாழச் செய்வார். பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாசங்களில் ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி,உட்கார்ந்து கொண்டிருக்கும்போதும், உறங்கும்போதும் உணவருந்தும்போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள்! இச்செயல்களின் நோக்கம் இதுவே.-ஸ்ரீ சாயி சத் சரித்திரம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil