Wednesday, April 30, 2014

நம்பிக்கை வேண்டும்

விரும்பிய வேஷத்தை அணிந்து கொண்டு எங்கு நினைக்கிறாரோ அங்கெல்லாம் தோன்றுகிறார். பக்தர்களுக்கு நல்லது செய்வதற்காக எங்கெல்லாமோ அலைகிறார். பக்தருக்குத்தான் (அடையாளம் கண்டுகொள்ள) நம்பிக்கை வேண்டும். - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா )
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 29, 2014

பேரானந்தப் பெருநிலை

செல்வமும் சுபிட்சமும் நிலையற்றவை. இவ்வுடல் அழிவிற்கும், மரணத்திற்கும் உட்பட்டது. இதை உணர்ந்து இம்மை மறுமைப் பொருட்களின் மீதுள்ள பற்று அனைத்தையும் விட்டுவிட்டு உனது கடமையைச் செய். இவ்வாறாகச்செய்து எவன் ஹரியின் பாதங்களில் சரணாகதி அடைகிறானோ அவன் தொல்லைகள் யாவற்றினின்றும் விடுபட்டு பேரானந்தப் பெருநிலை எய்துகிறான். அன்புடனும் பாசத்துடனும் எவன் அவரை நினைத்துத் தியானிக்கிறானோ பரமாத்மா அவனுக்கு ஓடிச் சென்று உதவி புரிகிறார். உனது முந்தைய நல்வினைகளின் சேகரிப்பு அதிகம். எனவே நீ இங்கு வந்துள்ளாய்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 28, 2014

கவலைப்படாதீர்கள்

"நான் இல்லாமல் போய்விடுவேன் என்று ஒரு காலும் கவலைப்படாதீர்கள். நீங்கள் அக்கறை கொண்ட விஷயங்களைப் பற்றி என் எலும்புகள் பேசுவதைக் கேட்பீர்கள். விசுவாசம் நிறைந்த இதயத்துடன் என்னை நினைத்தால் போதும். சுயநலம் கருதாது என்னை வழிபடுங்கள். எல்லா மங்களங்களும் விளையும்."-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, April 27, 2014

மனத்தை ஸ்திரப்படுத்துங்கள்

உணவுக்காகவும், உடைக்காகவும் கடின முயற்சி எடுக்காதீர்கள்.உங்களுக்கு ஏதாவது வேண்டுமானால் கடவுளிடம் இரந்து கேளுங்கள். இவ்வுலக கவுரவத்தை விட்டுவிடுங்கள். கடவுளின் அருளையும் ஆசியையும் பெற முயலுங்கள். உலக கவுரவங்களால் வழி தவறி விடாதீர்கள். இறைவனின் ரூபம் மனதில் ஸ்திரமாகப் பதிக்கப்பட வேண்டும்.புலன் அனைத்தும், மனமும் எப்போதும் இறைவனது வழிபாட்டிற்கே உரித்தாக்கப் படட்டும். வேறு எவ்விதப் பொருட்களிலும் எவ்விதக் கவர்ச்சியும் வேண்டாம்.உடல், செல்வம், வீடு முதலிய வேறு எதைப் பற்றியும் மனது அலைந்து திரியாமல் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருப்பதிலேயே மனத்தை ஸ்திரப்படுத்துங்கள்.
அப்போது அது அமைதியாகவும், அடக்கமாகவும், கவலையற்றும் இருக்கும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, April 26, 2014

மகிழ்ச்சி

எல்லாத் துன்பங்களையும் பொறுமையுடன் தாங்கிக்கொண்டு என்னை சரணடைகிறவன் என்னை மிக மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, April 25, 2014

என் சங்கல்பம்

மிக்க மனக்கலக்கத்துடன் எதிர்பார்க்ககூடிய விஷயம் நமக்கு நன்மை செய்வதாக இருக்க வேண்டும்.யாருக்கு எது பிராப்தமோ அதற்கு தக்கவாறே நான் அளிப்பேன்.அளிக்கப்பட்டது எதுவாக இருந்தாலும் அது என் சங்கல்பமே என்பதை நீங்கள் அறிந்தால் என்னை அறிந்து கொண்டவரேயாவர்.-ஷீரடிசாய்பாபா[சத்குருவாணி]
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 24, 2014

பாபாவிடம் வேண்டுதலை தவிர்ப்போம்

எதைப் பற்றியும் கவலைப்படாமல் உடனே என் கோரிக்கையை நிறைவேற்று என பாபாவிடம் வேண்டுதலை தவிர்ப்போம். அப்படி வேண்டும் தருவாயில் நீண்ட காலம் பாபாவின் மீது பக்தியாக இருக்கும் வாய்பை இழக்க நேரிடலாம். வேர் பிடிக்காத மரத்தைப் போலவும், நீர் சுமக்காத வறண்ட மேகத்தைப் போலவும் நமது பக்தி முடிந்துவிடும்.
பாபாவிடம் உங்கள் விருப்பப்படி எங்களுக்கு தேவையானதை செய்யுங்கள். அதுவரை நாங்கள் அனுபவிக்க வேண்டியிருப்பதை அனுபவிக்க சக்தியை கொடுங்கள், பொறுமையை கொடுத்து, உங்கள் மீதுள்ள நம்பிக்கை பட்டுப்போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என வேண்டுதல் விடுப்போம்.
உங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் பாபா உடனடியாக நிறைவேற்றித் தருவார்.    
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 23, 2014

சந்தேகம் உனக்குத் தேவையில்லை

"என் பூஜைகளும் முறையீடுகளும் பாபாவை அடைகின்றனவா இல்லையா ?"
என்ற சந்தேகம் உனக்குத் தேவையில்லை.உன் போக்கை நான் எப்போதும் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.எனக்குத் தெரியாமல் எதுவும் இருக்கமுடியாது.எனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கவும் முடியாது.-ஷீரடி சாய்பாபா [சத்குருவாணி]]
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 22, 2014

என்னை மட்டுமே நம்புங்கள்

ஜாதகம் ,கைரேகைக்காரர்களின் ஜோசியம் ஆகியோரின் முன்னோடி உரைகளைத் தூக்கியெறிந்துவிட்டு என்னை மட்டுமே நம்புங்கள்.என்னை நம்பி  என்பால் லயமாகும் மனிதனின் எல்லாக் காரியங்களையும் பொம்மளாட்டத்தைப் போன்று நான் நின்று நடத்துகிறேன்-ஷீரடி சாய்பாபா [ஸ்ரீ சாய் சத் சரித்திரம்]
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 21, 2014

கவலை ஏன்

உங்கள் உச்சிமுதல் உள்ளங்கால் வரை கவசமாய் நான் இருக்கிறேன்.உங்கள் தொழில் எதுவானாலும் உங்கள் வேலையை என்னுடையதாக மாற்றி விடுகிறேன்.பார்வையும் பார்க்கப்படும் பொருளும் நானாக இருக்கிறேன்.இவ்வளவாக நான் உழைத்துக் கொண்டிருப்பதால் பயம் ஏன்?பயமற்று இருங்கள்!ஏக்கம் ஏன்?எனக்காக ஏங்குங்கள்.பரபரப்பு ஏன்?என் மீதே மிக்க ஆவல் கொள்ளுங்கள்.கவலை ஏன்?எனக்காகவே  கவலைப்படுங்கள்.
பரஸ்பர அனுராகத்திலேயே நான் இருக்கிறேன்.ஆத்மார்த்த அன்பு எங்குண்டோ அங்கு நான் இருக்கிறேன்.விசாலமான சிருஷ்டியில் நம்பிக்கையை உதவியாகக் கொண்டு என்னுள் பிரவேசியுங்கள்.-ஸ்ரீ சாயி திருவாய் மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, April 20, 2014

பாரபட்சமற்றவர்

பாபா பாரபட்சமற்றவர்.அவரது அருள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட மனிதருக்கோ அல்லது இடத்திற்கோ மட்டும் கிட்டுவது அல்ல.ஆகவே அவ்வப்போது இன்றும் பாபாவின் திருவுருவத்தை காண்பவர்கள் உளர்.தேவையான அளவு நம்பிக்கை உள்ள சிலருக்கு பல இடங்களில் பாபாவின் அத்புத சக்திகள் வெளிபடுத்தபடுகின்றன.இன்றும் பல இடங்களில் பாபாவின் சமத்காரங்கள் நிகழ்ந்து வருகின்றன.ஆகவே தான் பல இடங்களில் சாயி ஆலயங்கள் எழுப்பப்படுகின்றன.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, April 19, 2014

பரிபூரணமாக நம்பு

உன் பிரச்சனை எதுவானாலும் அதற்குப் பரிகாரம் என்னிடமுண்டு.பரிகாரம் என்னிடமிருக்கையில்,நீ எங்கோ ஓடி கொண்டிருந்தால்,நான் என்ன செய்ய இயலும்?என்னைப் பரிபூரணமாக நம்பு,உன் உடல்,மனம்,செல்வத்தை என் பாதத்தில் வை.உன்னை விட்டு நான் எங்கே செல்வேன்?என் இருப்பிடம் உன் இதயமே.உன் இருதயமே என் கோவில்.-சாய் சத்குருவாணி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, April 18, 2014

நம்பிக்கை பொறுமை

சாயி பாபாவின் லீலைகளை அனுபவித்தவர்கள் மட்டுமே அவரது பக்தர்களாக நீடிக்கிறார்கள். மாறாத நம்பிக்கை, நீடித்த பொறுமை, உண்மையான அன்பு, பணிவான வேண்டுதல் இவையே பாபாவிடமிருந்து அற்புதங்களை பெறும் வழியாகும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 17, 2014

நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்

என்னை நினைவில் வைத்துக் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, ரயிலோ அல்லது விமானமோ தேவையில்லை. என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம் ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துகொள்கிறேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 16, 2014

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்

எந்த பக்தர் தமக்கு நன்மைகள் ஏற்படவேண்டுமென்ற ஆர்வத்தால் உந்தப்பட்டு பக்திபா(BHA)வத்துடனும் ஒருமுனைப்பட்ட மனத்துடனும் ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கிறாரோ,அவருடைய வழிபாடு என்றுமே வியர்த்தம் ஆகாது.சாயி அவருடைய வேண்டுகோள்களை நிறைவேற்றுகிறார்.உலகியல் தேவைகளையும் ஆன்மீகத் தேவைகளையும் பூர்த்திசெய்கிறார் .அவர் செய்யும் வழிபாடு என்றுமே வீண்போவதில்லை.கடைசியில் அவர் எல்லாப் பேறுகளையும் பெற்றவர் ஆகிறார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 15, 2014

பாபா அனைத்திலும் நிரம்பியிருக்கிறார்

"பாபாவின் சஞ்சாரம் புரிந்துகொள்ளமுடியாதது.நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் அவர் நிரம்பியிருக்கிறார். இவ்வாறிருக்க,அவர் வருவதென்ன,போவதென்ன!நினைத்தபோது தேவையான இடத்தில் தோன்றுகிறார்."
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 14, 2014

திடமாக நம்பு

சதா என்னை நினை.நான் நடத்துகிறேன் என திடமாக நம்பு.எனக்கு நானாகவே செய்கிறேன் என்ற பாவத்தை வரவிடாதே.நான் துணையாக இருப்பேன்.நீ நடக்கும் பாதையில் முட்கள் இருந்தால் நான் முன்பாகவே களைந்து விடுகிறேன்.நான் உன்னுடனேயே வந்து கொண்டிருப்பதை நீ மறந்தால் நான் என்ன செய்ய முடியும்?
உன் முன்னாலும் பின்னாலும் நான் நிழலைப் போல் இருக்கிறேன்.-ஷீரடி சாய்பாபா.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, April 13, 2014

பாபாவின் நல்வாக்கு


வீரபத்ரனின் கேள்வி: "பாபா, செல்வம் என்னை அலட்சியப்படுத்துகிறது. மனைவியோ, இதை கொண்டுவா, அதைக் கொண்டுவா என்று முடிவேயில்லாமல் உரிமையுடன் கேட்கிறாள். போதும், போதும் இந்த அவமானம். எனக்கு இந்த இல்லறத்தின் கெளரவமே வேண்டாம்"
பாபா பதில்: "உன்னுடைய பாக்கியகாலம் நெருங்குகிறது; வீணாக துவண்டுவிடாதே. கையைக் கழுவுவது எவ்வளவு சுலபமோ அவ்வளவு சுலபமாக உனக்கு செல்வம் வந்து சேரும். பெரும் செல்வத்திற்கு அதிபதி ஆவாய்". (பாபாவின் நல்வாக்கு)
பின்னர் நடந்தது: வீரபத்ரனின் தரிசு நிலத்தின் மதிப்பு திடிரென்று உயர்ந்தது. 1 லட்சம் ருபாய் (100 வருடங்களுக்கு முன்பு) கொடுக்கத்தயார் என்று சொல்லிக்கொண்டு வாங்குபவர் ஒருவர் வந்தார்.        

Saturday, April 12, 2014

.நான் செய்பவனுமல்லேன் செய்ய வைப்பவனுமல்லேன்

இதோ பார்,உனக்கு நடப்பவையெல்லாம் மறைந்து வேலைசெய்யும் கர்மவினைகளின் வானளாவிய ஓட்டமே.நான் செய்பவனுமல்லேன்,செய்ய வைப்பவனுமல்லேன் என்பதை உறுதியாக அறிந்துகொள். ஆனாலும்,செய்யக்கூடிய சக்தி என் வாயிற்படியில் படுத்துக்கிடக்கிறது!
எவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் என்மீது தன் பாரத்தைப் போடுகிறானோ,அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, April 11, 2014

சிறந்த ஐசுவர்யங்களை அளிக்கும்

பூரணமான சிரத்தையும்,தைரியம் சேர்ந்த பொறுமையுமே உமையுடன்  இணைந்த மகேசுவரன்.அவர்களுடைய அருட்கரம் தலையில் படும்வரை உலகத்தையே ஆடையாக அணிந்தவனும் நம் ஹிருதயவாசியுமான ஆண்டவன் கண்ணுக்குப் புலப்படமாட்டான்.பொறுமையும் நிட்டையுள்ள விசுவாசமும் சிறந்த ஐசுவர்யங்களை  அளிக்கும். மேற்கொண்டது,அமோகமான வீரியம் கொண்ட வார்த்தைகளை உடையவரும் குருமார்களில் தலைசிறந்தவருமாகிய சாயிநாதரின் திருவாய்மொழியாகும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 10, 2014

ஸ்திரமான நம்பிக்கை

சாயிநாதருக்கு, இரண்டு கைகளையும் ( வணக்கம் செய்பவை)  தலையையும் (தாழ்த்தி வணங்கும் அங்கம்)ஸ்திரமான நம்பிக்கையையும் வேறெதிலும் நாட்டம் கொள்ளாத சிரத்தையையும் தவிர வேறென்ன வேண்டும்!பக்தனின் நேர்மையான நன்றியுணர்வே அவருக்குப் போதுமானது.- ஸ்ரீ சாயி இராமாயணம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 9, 2014

பலமான குரு

ஒருவருக்கு இணையில்லாத புத்திசாதுர்யம் இருக்கலாம்.ஆடாத அசையாத சிரத்தையும் இருக்கலாம்.ஆயினும் சாயியைப்போன்ற பலமான குரு அமைவதற்கு தெய்வபலம் அவசியம் வேண்டும்.-ஸ்ரீ சாயி இராமாயணம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 8, 2014

குருவே பிரசன்னமாவார்

தேகத்தையும், மனதையும், புத்தியையும் ஒரு குருவுக்கு மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.அவரையே தியானிக்க வேண்டும்.தியானம் தியானிக்கப்படும் பொருளாகவும் அவரே இருக்க வேண்டும்.அப்போது எங்கு பார்த்தாலும் அந்த குருவே பிரசன்னமாவார்.அந்த குரு உடலை விட்டு நீங்கி இருந்தாலும் ஆத்மார்த்த நட்புணர்ச்சி,ஆத்மா வடிவத்தில் சிஷ்யனைச் சுற்றியே திரிந்து கொண்டிருக்கும்.இவ்விதமாக குரு சிஷ்யர்கள் பௌதீகமாயும், உடலற்றபோதும்  (நிர்குண சாகாரத்தில்)
ஒன்றாக சேர்ந்தே இருப்பார்கள்.குரு ஆத்ம சொரூபனே என்ற பாவம் நிச்சயமாய் இருக்க வேண்டும்.அந்த பாவனை இல்லாத குரு பூஜை வீணாகிப்போகும்.குருவின் பாதங்களே சரணம்.-ஸ்ரீ சாயி திருவாய் மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 7, 2014

விஸ்வாசத்தை உறுதிபெறச் செய்யுங்கள்

உங்கள் விஸ்வாசத்தை உறுதிபெறச் செய்யுங்கள்.ஸ்திரமாக்குங்கள்.மனம் திரியட்டும்.அது எனக்காகவே ஆகட்டும்.சிந்தனை செய்யுங்கள்,அது என்னைப்பற்றியதாகவே இருக்கட்டும்.என்னிடம் உங்கள் ஆர்வம் எவ்வளவு இருக்குமோ,என்அனுக்கிரகமும் அவ்வளவு இருக்கும்.பகீரதப்பிரியத்தனம் செய்யத் தேவையில்லை.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, April 6, 2014

பயப்படத் தேவையில்லை

இரவும், பகலும் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ எவன் ஒருவன் என்னைப் பற்றி நினைத்து வருகிறானோ, அவன் இனிப்பும் சர்க்கரையும்போல, அலையும் கடலும் போல, கண்ணும் ஒளியும்போல என்னுடம் முழுமையாக இணைகிறான். அப்படிப்பட்டவன் எதற்கும் பயப்படத் தேவையில்லை. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.{மாண்பு மிகு மகான்கள்.}     
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, April 5, 2014

பாக்கியம்

பாபாவின் அருகில் இருக்கும் பாக்கியம் கிடைக்கவேண்டும்; அதன் பிறகு,தாண்டமுடியாதது எதுவுமே இல்லை.கொஞ்சங் கொஞ்சமாக அனைத்து விஷயங்களும் ஓர் ஒழுங்கிற்கு வந்து நிற்கும்.ஓய்வெடுப்பதோ, பேசுவதோ,நடப்பதோ,எந்த காரியமாக இருந்தாலும் சரி,ஒவ்வொரு கணமும் அசைக்க முடியாத சிரத்தையைக் கடைப்பிடித்தால்,பக்தன் தான் விரும்பிய மனோரதங்கள் அனைத்திலும் நிறைவு பெறுவான்.ஆனாலும், ஆரம்பநிலையில் தினப்படி விவகாரங்களில் ஏதாவதொரு அற்புதம் காட்டி ஆன்மீகப் பாதையில் ஈடுபாடு ஏற்படச் செய்து பக்தர்களை வழிநடத்துகிறார் பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, April 4, 2014

நிச்சயமாக நடக்கும்

பாபா தேகத்துடன் இல்லை.ஆயினும், அவரை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு, தேகத்துடன் இருந்தபோது செய்தது போலவே நன்மைகள் செய்து பாதுகாத்து வருகிறார்.அவர் தேகத்தை விடுத்துவிட்டதால்,அவரின் வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகள் என்று நினைக்க வேண்டாம்.ஏனெனில் பாபாவின் திருவாய்மொழி பிரம்மதேவரின் எழுத்துக்கு (தலையெழுத்துக்கு) ஒப்பாகும். நம்பிக்கையுடன் அனுபவத்திற்காக காத்திருங்கள்.உடனே நடக்காவிட்டாலும் காலப்போக்கில்
நிச்சயமாக நடக்கும்.-ஸ்ரீ சாயி இராமாயணம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 3, 2014

உங்கள் குறிக்கோளை அடைவீர்கள்

எவரிடமிருந்தும் மந்திரமோ, உபதேசமோ பெற முயலவேண்டாம். குறி சொல்பவர்களையும், ஜோதிடம் கணிப்பவர்களையும் நாடாதீர்கள். கோவில் பூசாரிகளையும், கோவிலுக்குள் துணிகரமாக என் திரு முன்னர் உங்களை தங்கள் காலடியில் விழ வைக்கும் துன்மார்கரிடமும் ஓடாதீர்கள்.
என்னையே உங்களது எண்ணங்கள், செயல்கள் இவற்றின் ஒரே குறிக்கோளாக அமைத்துக் கொள்ளுங்கள். சந்தேகம் ஏதுமின்றி உங்கள் குறிக்கோளை அடைவீர்கள். ஸ்ரீ சாயியின் குரல்        
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 2, 2014

சத்தியமான உண்மை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும்.-ஸ்ரீ சாயி தரிசனம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 1, 2014

மகிழ்ச்சி

எல்லாத் துன்பங்களையும் பொறுமையுடன் தாங்கிக்கொண்டு என்னை சரணடைகிறவன் என்னை மிக மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...