Saturday, May 31, 2014

துன்பம் நேராது

"நீங்கள் எங்கிருந்தாலும்,எதைச் செய்தாலும் அவை எல்லாவற்றையும் நான் அறிவேன்.உங்களை ஆட்டுவிப்பவன் நானே...எல்லாவற்றையும் படைத்துக் காப்பவனும் நானே...உலகத்தின் ஆதாரம் நானே..என்னை மனதார நினைக்கிறானோ அவனுக்கு எப்போதும் துன்பம் நேராது"-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா [மாண்புமிகு மகான்கள்]
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, May 30, 2014

என் மீது உங்கள் நம்பிக்கை

என் மீது உங்கள் நம்பிக்கையில் திடமான பற்றுதல் இல்லாதபோது என் வார்த்தைகள் நல்ல பலன்களை தராது. குரு சரணங்கள் மீது தலை வைத்து, அவர்கள் வார்த்தைகள் மேல் நம்பிக்கை வைத்தால் நிறைவேறாத காரியம் ஒன்றும் இருக்க முடியாது. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, May 29, 2014

யோகம்

என் அனுகிரகத்தால் இந்தப் பிறவியில் என்னை ஆராதிக்கிறாய்.என்னை ஸ்மரிக்கிறாய்.அப்படி என்னை ஸ்மரிக்கும் அவகாசம் உனக்கு கிடைத்ததே ஒருயோகம்.-ஸ்ரீ ஷீரடிசாய் பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, May 28, 2014

ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்

                                ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்

பக்தன் பாட்டிசைக்கும் இடத்திலேயே இறைவன் இருப்பார்.வெல்லம் இருக்கும் இடத்தில் எறும்புகள் இருப்பதைப் போன்று, நாமஸ்மரணை செய்பவரின் வீட்டிலேயே இறைவன் இருப்பார்.ஆன்மீக விஷயத்தில் நாளை என்பதை மறந்து இந்த வினாடியிலிருந்தே நாமஸ்மரணை செய்யத் தொடங்குங்கள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, May 27, 2014

காப்பாற்றிக்கொண்டு வருகிறேன்

என் பக்தர்களை ஒவ்வொரு நிமிடமும் கவனித்துக் காப்பாற்றிக்கொண்டு வருகிறேன். அவர்கள் எந்த வேலையாக சென்றாலும், அவர்களை விட முன்பாகவே நான் அங்கு சென்று இருப்பது அவர்களுக்கு ஆச்சர்யத்தை உண்டாக்கும். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, May 26, 2014

விரும்பியதை அடைவான்

நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அதை உடனே உங்களுக்கு காட்டிக்கொடுக்கிறேன். ஆனால் என்னுடைய சொல்லுக்கு கட்டுப்பட்டவனே தான் விரும்பியதை அடைவான்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, May 25, 2014

என்னுடைய பெருமை

யார் என்னைப் பெரிதும் நேசிக்கிறாரோ அவருடைய பார்வையில் நான் அகண்டமாக (இடைவிடாது) இருக்கிறேன். நான் இல்லாது அவருக்கு இவ்வுலகம் அனைத்தும் சூனியமாகத் தெரியும். அவருடைய வாயிலிருந்து என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும் - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, May 24, 2014

லீலை

என்னுடைய லீலைகளின் ஆழத்தில் ஒருவன் முழுகுவானானால் அவன் ஞானமென்னும் விலை மதிப்பில்லாத முத்துக்களை எடுப்பான்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, May 23, 2014

சர்வ சக்தி வாய்ந்தவர்

பக்தன் தான் சாயியோடு ஒன்றியவன் என்ற பாவனையிலேயே குருவை வழிபட வேண்டும்.  சாயியும் பக்தனைத் தன்னில் ஒன்றியவன் என்றே வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார்.  இவ்வாறான பரஸ்பர சமரசபாவனை இல்லாவிட்டால் எல்லாச் செயல்களும் கேவலம் வெளிவேஷங்களே.அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.  நாம் ஒன்றும் அறியாத குழந்தைகள்.  கோணல் சிந்தனைகளும், உடும்புப்பிடியாக பலவற்றைப் பிடித்துக் கொள்ளுகிற தன்மையும் உள்ள மனதை அவரது பாதங்களில் சமர்ப்பித்து அவர் எப்படி செயல்பட நம்மை அனுமதிக்கிராரோ அப்படியே நடக்க விட்டுவிடுங்கள்.நடப்பதெல்லாம் அவன் செயல் என்ற எண்ணம் உங்கள் மனதில் உதிக்கட்டும்.  எதையும் நான்தான் செய்கிறேன் என எண்ணாதீர்கள்.  இந்த நிலைக்கு நீங்கள் மாறும்போது அவர் உங்கள் கைகளை வலியப் பிடித்துக்கொண்டு செயலாற்றுவதை உணர்வீர்கள்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, May 22, 2014

இறைவனின் ஆணை

என்ன நடக்கிறதோ, அது இறைவனின் ஆணைப்படியே நடக்கிறது. அவரே தூக்கிவிடுகிறார்; அவரே தள்ளியும்விடுகிறார், அவரே சண்டைபோடுகிறார், அல்லது மற்றவர்களை சண்டையிடவைக்கிறார். அவரே காரியங்களை செய்பவரும், செய்யவைப்பவரும் ஆவார். -ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, May 21, 2014

நானே சுமக்கிறேன்

கர்மங்களை குறைத்துக்கொள்ள வழி, அதை தைரியமாக அனுபவிப்பதே. நீங்கள் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருந்தால் என்பால் நம்பிக்கைக் கொண்டிருந்தால். அதை அனுபவிக்கும் சக்தியை நான் கொடுக்கிறேன். அது துன்பம் என்ற எண்ணம் உங்களில் ஏற்படாமல் நான் செய்கிறேன். உன்னில் இருக்கும் நானே அதை சுமக்கிறேன்.-ஸ்ரீ
ஷிர்டி சாய்பாபா      
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, May 20, 2014

திடமாக நம்பு

யாராவது எங்காவது பக்தி பாவத்துடன் என் எதிரில் கைகளை நீட்டினால் போதும் உடனே அவர்கள் முன்  நான் நிற்பேன்.நீங்கள் எங்காவது செல்லுங்கள்.உங்களுடனேயே நான் இருப்பேன்.நீங்கள் செய்வதெல்லாவற்றையும் நான் அறிவேன்.நான் சர்வாந்தர்யாமி. உன் அந்தர்யாமியாய் உள்ளவன்.என் மீது நம்பிக்கை வைத்து நீ செய்யும் எல்லா காரியங்களையும்  நானே முன் நின்று நடத்துகிறேன்.இதை திடமாக நம்பு-ஸ்ரீ சாய் திருவாய் மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, May 15, 2014

தடங்கல்கள், வேண்டாத எண்ணங்கள், வெறுப்புணர்வு


முதல் கவளத்திலேயே ஈ விழுந்தது போல, சாதனையைத் துவங்கிய உடனே ஏதேதோ தடங்கல்கள், வேண்டாத எண்ணங்கள், வெறுப்புணர்வு போன்றவை ஆரம்பமாகின்றன. அவைகள் கர்மாக்களின் வடிவங்களே. அதற்காக உங்கள் பாதையை மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அவற்றின் வழியில் அவைகளை வரவிடு. உங்கள் சித்தத்தை என் பாதங்களின் மேல் ஸ்திரமாக வைத்துவிடு. சபல சித்தனாக இராதே. உங்களுக்கு சந்தேகமற்ற விசுவாசம் என் மேல் இருந்தால் உங்கள் சாதனைகளில் உங்களை வெற்றி பெறச்செய்கிறேன். உங்களுக்கு அந்த சக்தியை கொடுக்கிறேன்.உங்கள் குறிக்கோளை அடையச் செய்யும் பொறுப்பு என்னுடையதாக இருக்கும். எப்படிப்பட்ட உதவி வேண்டுமானாலும் நான் உங்களுக்குச் செய்கிறேன். உங்கள் லட்சியம் நானாக இருக்கட்டும். - ஸ்ரீ சத்குரு வாணி.                       

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, May 11, 2014

உயிருள்ள ஜந்து


உயிருள்ள ஜந்துக்கள் அனைத்திலும் என்னைப் பார்ப்பவரையே நான் விரும்புகிறேன் என்று அறிந்து கொள்ளுங்கள். ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, May 10, 2014

அனைவரும் ஒன்றேகுலம் ஏதானாலும் அனைவரிலும் இருக்கும் சீழ், ரத்தம் ஒன்றே. உண்ணும் உணவும் ஒன்றே. குலப்பிராப்பால் ஒருவர் உயர்ந்தவர் என்ற எண்ணம், பரிபூரண  அஞ்ஞானத்தால் உண்டாகிறது என்பது பொருந்தும். ஷிர்டி சாய்பாபா  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, May 8, 2014


உங்களை இங்கு இழுப்பதற்காக கடும் முயற்சி செய்தவர் பாபா. அவர் உங்களை வெறுங்கையுடன் திருப்பி அனுப்பமாட்டார். உங்களுக்கு நன்மை செய்வதற்காகவே அவர் மெனக்கெட்டு உங்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி அழைத்து வந்திருக்கிறார்.    

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, May 6, 2014

கவலையில்லை

"இப்பாதங்கள் தொன்மையானவை,புனிதமானவை.இப்போது உனக்குக் கவலையில்லை.என் மீது முழு நம்பிக்கையயும் வை.நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை எய்துவாய்"-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, May 5, 2014

ஆசீர்வாதம்

பாபாவை தரிசனம் செய்யுங்கள்; அவருடைய பாதங்களில் வந்தனம் செய்யுங்கள்; உம்முடைய உள்ளத்து ஆசையை அவரிடம் விளக்கமாகச் சொல்லுங்கள். அவர் உங்களை ஆசீர்வாதம் செய்வார். - தாஸ்கணு, ஸ்ரீ சாயி சத்சரித்ரா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, May 4, 2014

நன்மைக்கே

நான் கொடுப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து நான் கொடுப்பதை பக்தி சிரத்தையோடும் அடக்கத்தோடும் நீங்கள் வாங்கிக் கொள்ளவேண்டும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, May 3, 2014

எது வேண்டுமோ கேள்

பாபா: என் கஜானாவின் சாவி இப்போது உன் கைகளில்.எது வேண்டுமோ கேள்.மாதந்தோறும் ரூபாய் ஐந்து முதல் நூறு வரையோ அல்லது எது வேண்டுமோ,எதுவாயினும் நான் உனக்கு அளிக்கிறேன்.

பக்தர் (ரேகே) கேட்க மறுக்கிறார்.

பாபா:ஏதாவது கேள்.உனக்கு ஏதாவது கொடுக்க நான் ஆவலுடன் உள்ளேன்.

பக்தர் (ரேகே):நான் எது கேட்பினும் தாங்கள் கொடுப்பீர்கள் என் ஒத்துக் கொள்ளப்பட்டது தானே?

பாபா: ஆம்.

பக்தர் (ரேகே): பாபா,அப்படியானால் நான் விரும்புவது இதுதான்.இப்பிறவியிலோ,இனி எனக்கு நேரக் கூடிய பிறவிகளிலோ,தாங்கள் என்னைவிட்டு பிரியக்கூடாது.எப்போதும் தாங்கள் என் கூடவே இருக்கவேண்டும்.

பாபா; அப்படியே ஆகட்டும்.நான் உன்னுடன் இருப்பேன்.உன் உள்ளே இருப்பேன்,புறத்தே இருப்பேன்.நீ எப்படியிருந்தாலும்,என்ன செய்தாலும் அவ்வாறு இருப்பேன்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, May 2, 2014

என்னையே சார்ந்து எப்போதும் இருப்பாயாக

என்னையே சார்ந்து எப்போதும் இருப்பாயாக!வீணான எண்ணங்களில் மனதை அலைபாய விடவேண்டாம்.வேதனையை நேரிடையாக அனுபவிக்காமல்,  ஊழ்வினையை கடக்க இயலாது.வாஸ்தவமே.சுக துக்கங்களின் காரணம் கர்மாதான்.ஆகையால் உமக்கு நேருவதை தைர்யமாக தாங்கிக் கொள்ளும்.அந்த சக்தியையும் நானே உனக்கு அளிப்பேன்.என்னை பூரணமாக சரணடைந்து,உமது எண்ணம் எப்போதும் என்னிப்பற்றியே இருக்கட்டும்.பிறகு நான் என்ன செய்வேன் என்பதை நீர் பார்ப்பீர்.-ஸ்ரீ சாயியின் குரல்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, May 1, 2014

தன்னை மட்டுமே நினைக்கும்படி செய்துவிடுகிறார்

பாபா யாரை எப்போது எப்படி இழுக்க வேண்டும் என திட்டமிடுகிறாரோ, அதை முடிப்பதற்காக தானே முன்கூட்டி அங்கு சென்று கவனிக்கப்படாத காட்சியாளனாக அமர்ந்து விடுகிறார். அவர் அங்கே ஆண்டுக் கணக்கில் இருந்தாலும் நாம் அவரை அடையாளம் கண்டு கொள்வதில்லை. நமக்கு விதிக்கப்பட்ட நேரம் எப்போது வருகிறதோ, அப்போது அவர் நமக்குத் தென்படுகிறார், அது மட்டுமல்ல, நம்மை பக்தனாக்கி, பித்தேற்றி எல்லாவற்றையும் துறந்து தன்னை மட்டுமே நினைக்கும்படி செய்துவிடுகிறார். -ஸ்ரீ சாயி தரிசனம்.        
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...