Monday, June 30, 2014

எல்லாமே நீதான் அய்யாசாயி பாபா கோவில்களில் மட்டும் வசிப்பவர் அல்லர். தம்மை உண்மையாக நம்பி தன்னிடம் அடைக்கலம் புகும் பக்தரின் உள்ளத்திலும் வாழ்பவர். தான் ஒருவரின் உள்ளத்தில் இருக்கும்போது, அந்த பக்தரின் வாழ்வை மாற்றும் விதத்தில் ஆலோசனைகள் வழங்குவது, அனைத்திலும் நல்லதையே பெற்றுத்தருவது போன்றவற்றை செய்கிறார் பாபா.

சில சமயம் பல்வேறு சூழல்களால் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் பக்தர்களை யார் மூலமாவது தன்னிடம் வருமாறு செய்து அவருக்குத் தீர்வு தருகிறார். இதனால் பல பக்தர்கள் சாயி பாபா உடனே அற்புதம் செய்துவிடுவார் என நினைக்கிறார்கள். ஸ்ரீ சாயி-யின் குரல்.

மேலும் ஒரு பாடல் பதிவேற்றம் "எல்லாமே நீதான் அய்யா எங்களோட சாயி பாபா.."  http://youtu.be/lcUu3Su_4C4

http://www.shirdisaibabasayings.com


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 29, 2014

தனம், தானம்


தனத்தையும், தானியத்தையும், வஸ்திரங்களையும் அளிப்பது மட்டும் தக்ஷிணை ஆகிவிடாது. குருவின் ஆணையை (பொறுமை, நம்பிக்கை)  நிறைவேற்றி அவரை சந்தோஷப்படுத்துவதும் தக்ஷிணையே. ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 28, 2014

ஏழு விஷயங்கள்
நான் வெறுக்கிற விஷயங்கள் ஏழு. தாழ்மையில்லாமல் கர்வத்தோடு பார்க்கிற கண்கள். பொய்யை மெய்போல் பேசுகின்ற புரட்டு வாயுள்ள நாக்கு.குற்றம் இல்லாதவர்களை ஏமாற்றிப் பிழைக்கிற கைகள், கெட்டவற்றை சிந்திக்கின்ற இதயம், என்னை மதிக்காமல் தன் வழியே போகின்ற கால்கள், அபத்தமாக பிறரைப் பற்றி பொய் பேசுதல், ஒருவரை பற்றி இன்னொருவரிடம் புறம் பேசுதல் ஆகியவை.

இவை உங்களிடம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

நான் விரும்புகிற விஷயமோ ஒன்றே ஒன்று. என் மீது பூரணமான பக்தி. இந்த பக்தியிருந்தால் என் மீது நம்பிக்கை வரும், பொறுமை வரும். அனைத்தையும் சகிக்கலாம் என்ற எண்ணம் வரும். எல்லாம் பாபா அனுமதிப்பது என்ற அறிவு வரும். பிறகு அனைத்தும் நன்மையாக முடியும். - ஶ்ரீ சாயி தரிசனம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 27, 2014

கோவிலுக்குப் போகமுடியவில்லை
நான் சாய் பாபா கோவிலுக்குப் போகமுடியவில்லை. நேரமே கிடைக்கவில்லை, பாபா மன்னித்துவிடுங்கள். என்று வேண்டுகிற ரகமா நீங்கள்?
எந்த வேலையிருந்தாலும் கோயிலுக்குப் போவதை நிறுத்த மாட்டேன் என்கிறவரா, நீங்கள்?
பாபா, பாபா என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன தவிர, அவரை பூஜிப்பதிலோ, அவரது கோவிலுக்குச் செல்வதிலோ எனக்கு ஆர்வம் வருவதில்லை என்கிறவரா, நீங்கள்?

நீங்கள் எப்படிப் பட்டவராக இருந்தாலும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்..

உங்களுக்கு எது சுலபமாக இருக்கிறதோ அந்த வழியில் பாபாவை வணங்கினால் போதும். கோவிலுக்குப் போனால் நல்லது. போகவில்லை, வீட்டில் அவரது பாடலைக் கேட்டபடி வேலை செய்து கொண்டிருந்தேன், சத்சரித்திரத்தை சி.டி போட்டு கேட்டுக் கொண்டிருந்தேன்.  டி.வி யில் நேரடியாக ஆரத்தி பார்த்துக் கொண்டிருந்தேன் என எப்படி அவரை நினைத்தாலும் அவரை வழிபட்டதுதான். ஶ்ரீ சாயி-யின் குரல்.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 26, 2014

அபயக்கரங்களை நீட்டுகிறேன்
என்னையே துணையாகக் கொண்டு, என் மீது நம்பிக்கையாக இருப்பவர்களுக்கு நியாயத்தைச் செய்வேன், அவர்கள் இழந்துபோன அனைத்தையும் பெறுவதற்கு உறுதியாகத் துணையாக நிற்பேன்.

திக்கற்றவர்களையும், தீனர்களையும், கடனில் சிக்கி மன உளைச்சலால் திணறுகிறவர்களையும், விதவைகளையும் காப்பதற்கென்றே, இதோ நான் என் அபயக்கரங்களை நீட்டுகிறேன்.

உங்கள் கர்மாக்களை தட்சணையாகப் பெற்று, புண்ணியத்தை உண்டாக்குவதற்காக நான் பக்கீராக உலவிக் கொண்டிருக்கிறேன். பிச்சைக்காரர்களாக- நாய்களாக- ஈ, எறும்புகளாக- ஏன்? உன்னை ஏமாற்றிப் பிழைப்பவர்களாகவும் உலவுகிறேன். உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, ஶ்ரீ சாயி-யின் குரல்.   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 25, 2014

அற்புதங்கள் பேசப்படும்
என்னை அன்போடும், உண்மையோடும் நோக்கிக் கூப்பிடுகிற எல்லோருக்கும் நான் பக்கத்தில் இருக்கிறேன். எனக்குப் பயந்து நடப்பவர்களின் விருப்பத்தைக் கேட்டு அதன்படி செய்து, அவர்கள் கூப்பிடும்போதல்லாம் ஓடி வந்து காப்பாற்றுகிறேன்.

என் பெருமைகள் அல்ல, நான் செய்த அற்புதங்கள் என் பக்தர்களால் பேசப்படும். துன்பத்திலும், சோகத்திலும், பிரச்சினையிலும் விழுந்துபோகிற அனைவரையும் தூக்கிவிடுவதற்காகவே இப்போது வந்திருக்கிறேன். - உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, ஶ்ரீ சாயி-யின் குரல்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 23, 2014

மசூதியில் புகலிடம்


யாருக்கு பொறுப்பாளரோ, பாதுகாப்பாரோ இல்லையோ, அவரையே சாயி மாதா ஆதரித்தார். இடுக்கண்ணில் மாட்டிக்கொண்டவர்களும், துன்பப்படுபவர்களும், வேண்டாமென்று ஒதுக்கப்பட்டவர்களும் மசூதியில் புகலிடம் கண்டனர்.     

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 22, 2014

மனப்பூர்வமாக உதவி செய்உன்னைச் சுற்றியிருகிறவர்கள் திடிரென தாழும் போதும், விழும்போதும், அழும்போதும் அது அவர்கள் கர்மாவினால் வந்தது என்பதை உணர்ந்து அமைதியாக இரு. அதைப் பார்த்து நீ பயந்துவிடாதே, நான் எதுவரை உனது அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கிறேனோ, அதுவரை உனக்கு எந்தத் திங்கும் வராது.

உன்னை நம்பி வருகிறவர்கள் யாராக இருந்தாலும் மனப்பூர்வமாக உதவி செய். திரும்ப வரும் என பலனை எதிர்பார்க்காதே. அது உனக்கு நல்லதாக இருக்கும். உன்னை அண்டியிருப்பவர்களுக்கு வஞ்சனை செய்ய நினைக்காதே. உன் மேல் பொறாமை உள்ளவர்களைப் பார்த்தும், உனக்கு விரோதமாகப் புறம் பேசித் திரிபவர்களைப் பார்த்தும் நீ பயப்படாதே. ஸ்ரீ சாயி-யின் குரல். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 20, 2014

சுபீட்சம் உண்டாகும்
உனது வருமானத்தில் முதல் பைசாவை எனக்கு அர்ப்பணம் செய். அதனால் நீ நிறைய சம்பாதிப்பாய். சம்பாதித்தவை உன்னைவிட்டு நீங்காமல் இருக்கும்.

உணவின் முதல் கவளத்தை என்னை நினைத்து சாப்பிடு. உனக்கு பிடித்தமானதை முதலில் எனக்கு அர்ப்பணம் செய். உன் முதல் குழந்தையை எனக்கு தத்தம் செய். நான் அந்தக் குழந்தையை வைத்து நிறைய வேலைகளை வாங்க வேண்டியிருக்கிறது. அப்போது உனது குடும்பம் சுபீட்சமாக மாறும், மக்கள் உன்னை புகழவார்கள். ஸ்ரீ சாயி-யின் குரல்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 19, 2014

முழுமையான அர்ப்பணிப்பு


தன் அகங்காரம் முழுவதையும் துறந்து,குருவிடம் தன்னை முழுமையாக  அர்ப்பணிப்பவனே உண்மையான பக்தனாகவும்,சீடனாகவும் விளங்குகின்றான்-பாபாவின் குரல்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 17, 2014

எதிர்ப்பதற்கு அல்ல, பொறுப்பதற்கே தைரியம்உங்கள் குருவாகிய என்னிடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை, ஆழமான அன்பு கொள்ளுங்கள். இதைத் தவிர வேறுவழிபாடு வேண்டாம். குருவே கடவுள் என்பதில் உறுதியாக நில்லுங்கள். மனித நிலையைக் கடந்த சத்குருவான நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்கிறார்.

எதிர்ப்பதற்கு அல்ல, பொறுப்பதற்கே தைரியம் வேண்டும். உறுதியான நம்பிக்கை வேண்டும். இன்று கிடைக்காவிட்டால் நாளை கிடைக்கும் என்று எதிர்பார்திரு. நாளையும் கிடைக்காவிட்டால் மறுநாள் கிடைக்கும் என எதிர்பார். உனது எதிர்பார்ப்பைத் தாண்டினாலும் கிடைக்காத போது ஒருநாள் கிடைக்கும் என்றிரு. நிச்சயம் கிடைக்கும். -ஸ்ரீ சாயி-யின் குரல்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 16, 2014

உபதேசங்களை கடைப்பிடிப்பதில்லைநான் சமாதியடைந்துவிட்ட போதிலும் என்னை நம்புங்கள் என்று பாபா சொன்னார். ஆனால், சாயி பக்தர் என சொல்லிக் கொள்ளும் நம்மில் பலருடைய நிலையைப் பாருங்கள்.

இன்ப நேரத்தில் பாபா இருக்கிறார் என்றும், துன்ப நேரத்தில் பாபா என்னை கைவிட்டார். அவர் இல்லை என்றும் நினைத்துக்கொள்கிறார்கள்.

பாபா இருப்பது உண்மை என்பதில் உறுதியாக இருந்தால், எந்த நிலையிலும் அவர்கள் நம்பிக்கை இழக்கமாட்டார்கள். நம்பிக்கை இழந்தவர்களுக்கு பாபா உயிரோடு இல்லை எனபது உண்மைதான். ஏனெனில், அவர்கள் பாபாவை தங்கள் மனதிலிருந்து கொன்று விடுகிறார்கள்.

நம்பிக்கை உள்ளவர்களோ, தங்கள் துயரத்திலும் திடமாக இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள அவரையே சரணடைகிறார்கள்.

நம்பிக்கை இழக்கிற நிலை எதற்காக வருகிறது? என்பதை ஆராய்ந்து பார்த்தால், பாபாவின் உபதேசங்களை கடைப்பிடிப்பதில்லை. அவற்றை அசட்டை செய்கிறோம். மந்தமாக, உற்சாகமின்றி சோம்பியிருக்கிறோம்.   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 15, 2014

புதுக் கணக்கைத் தொடங்கு
என்னை நம்பினால், இன்று முதல் புதிய முயற்சி செய். புது வாழ்க்கை ஆரம்பிக்கும். இதுவரை தோற்றத்தையும், நம்பிக்கை இழந்ததையும், மரண விளிம்புக்குச் சென்றதையும் மறந்துவிடு. வாழ்வதற்கு வா. உன்னை வசந்தத்திற்கு அழைத்துச் செல்ல நான் காத்திருக்கிறேன்.

என் குழந்தாய்!

உன்னை வாழத் தகுதியில்லாத நபர் என நீயே முடிவு செய்துகொள்ளும் நிலைக்கு வந்திருப்பது தவறானது. அதை தள்ளிவிடு. இன்னும் சிறிது காலத்திற்குள் நல்ல சுழலை ஏற்படுத்துவேன்.

உன் போல இன்னொரு குழந்தை இருக்கிறாள். புரிந்துகொள்ளும் முன்பே விட்டுப் பிரிந்துவிட்டு விவாகரத்துக் கேட்கும் கணவனை நினைத்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.

நான் என்ன பாவம் செய்தேன் என என்னிடம் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறாள். பூர்வ கணக்கு தப்பாது. அது முடிந்துவிட்டது. புதுக் கணக்கைத் தொடங்கு. வாழ்வதற்கு முடிவு செய். நல்ல வசந்த காலம் உனக்காகத் காத்திருக்கிறது. - ஸ்ரீ சாயியின் குரல்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 14, 2014

பந்தம்

உனக்கும், எனக்கும் இடையே உள்ள பந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. நான் ஒரு பக்கிரி, வீடு வாசல் இல்லாதவன். மனைவி, மக்களும் இல்லை. என்னை நான் மறந்து தியான நிலையில் இருக்கும் தருவாயிலும் கூட உங்களை மறக்கமுடியாமல் இருக்கிறேன். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விரதம்

பக்தர்கள் திட்டம் போடுகிறார்களே தவிர,எது நன்மை தரும் என்பது அவர்களுக்குத் தெரியாது.பாபாவுக்குத்தான் நடந்ததும் நடப்பதும் நடக்கப்போவதும் பக்தனுக்கு எது நன்மை தரும் என்பதும் தெரியும்.தம்முடைய ஆசைகளை ஒருவர் தம் மனத்தின் அடி ஆழத்தில் இருக்கும் விருப்பத்தை சாயிபாதங்களில் பிரேமையுடன் நிவேதனம் செய்துவிட்டு பூரண விசுவாசத்துடன் பலனை எதிர்ப்பார்க்கும்பொழுது, சாயி அவரை நல்ல வழியிலேயே நடத்துகிறார்.அனன்னியமாக சரணாகதியடைந்த பக்தனை எந்தவிதமான ஆபத்தும் வாராமல் காப்பாற்றுவது அவருடைய விரதம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 13, 2014

சாயி சாயி

பாபா தமது அடியவர்களுக்காக, சுவாச நியமத்தையோ, அல்லது எத்தகைய வழிபாட்டு முறைகளையோ,அவர் வகுத்துரைக்கவில்லை.அல்லது எவ்வித மந்திரத்தையும், எவர் காதிலும் அவர் ஓதவில்லை. எல்லா புத்திசாலித் தனத்தையும் விட்டொழித்துவிட்டு எப்போதும் "சாயி சாயி "
என்று ஞாபகமூட்டிக் கொள்ளும்படியும் அவர்களிடம் கூறினார்.-ஸ்ரீ சாயி சத்சரித்திரம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 12, 2014

சக்தி

வெளிமுகமாக நீங்கள் நீங்களாக இருந்தாலும் உள்ளேயுள்ள சக்தி நானே.உங்கள் செயல்கள் அனைத்திலும் நான் இருக்கிறேன். என்னால் உங்கள் செயல்கள் தடையின்றி நிறைவேறும்.-ஸ்ரீ சாயி திருவாய்மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 11, 2014

எந்த துன்பமும் நெருங்காது

நீங்கள் செய்வது அனைத்தும் எனக்குத்தெரியும். நானே அந்தரங்க ஆட்சியாளன். இதயத்தில் அமர்ந்து இருக்கிறேன். எல்லா ஜீவராசிகளையும் அரவணைக்கிறேன்.பிரபஞ்சத்தை நானே கட்டுப்படுத்துவன், ஆட்டுவிப்பவன், முக் குணங்களின் கூட்டுறவும் நானே.நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன், படைப்பவன், காப்பவன், அழிப்பவன். என் பால் கவனத்தை திருப்புபவனை எந்த துன்பமும் நெருங்காது,மாயை என்னை மறந்தவனை ஆட்டி உலுக்கும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
இத்தகைய அழகான, விலை மதிப்பற்ற அமுத மொழிகளையும், அறிவுரைகளையும் நோக்கும் போதும், கேட்கும்போதும் நாம் சதா காலமும் சாயி சாயி என்று சொல்லி வந்தாலே எல்லா துன்பங்களும் பறந்தோடி மனம் அமைதியுறும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 10, 2014

அறைவேக்காடாகவே இருக்கிறாய்எந்தப் பிரச்சனையாக இருந்தால் என்ன? உன் கையை விட்டு எது போனால் என்ன? இந்த வேலை கிடைக்காவிட்டால் என்ன? நான் உனக்கு நன்மை செய்யமாட்டேனா? உன்னிடம் நானில்லையா? உன் பிராத்தனையை கேட்கமாட்டேனா?

உனக்காக எல்லாவற்றையும் செய்வேன் என ஒரு முறை சொல்லிவிட்டு நான் மனம் மாற மாட்டேன். இதையும் பலமுறை கூறிவிட்டேன்.

நீயோ, திருப்பிப் போடப்படாத ரொட்டியைப் போல அறைவேக்காடாகவே இருக்கிறாய். என் மீது முழு நம்பிக்கை வை. எந்தப் பிரச்சனையையும் உன் சொந்த புத்தியை நம்பி அணுகாதே. என் மீது பாரத்தை வைத்து சாயி சாயி என்று சொல்லியபடி இரு. மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 8, 2014

பிரேமையே எனக்கு உணவு

நான் என் பக்தனின் அருகிலேயே தாசனாக நின்றிருப்பேன். அவர்களின் பிரேமையே எனக்கு உணவு.அதற்காக நான் பசியுடன் தவித்துக் கொண்டிருக்கிறேன் -ஸ்ரீ ஷீரடிசாய்பாபா[சாயி தரிசனம்]
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 7, 2014

நல்லதிர்ஷ்டம்

வைரத்தைப்  போன்ற பாபாவைக்  குருவாக  அடைந்த  நல்லதிர்ஷ்டம்  உள்ள ஒருவர் தாழ்வுணர்ச்சியுடன் அழுவதும் ,கவலைகொள்வதும்  பரிதாபமானது.
பாபாவிடம்  உங்களுக்கு அசைவற்ற  நம்பிக்கை  இருக்குமானால்  ஏன் உங்கள்  மனம்  சலனமடைய வேண்டும்???-ஸ்ரீ  சாய்  சத்சரித்திரம் 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 6, 2014

பாரத்தை சுமக்கிறேன்

உங்கள் தேவைகள், வேலைகள் எதுவானாலும் எனக்கு அர்ப்பணமாக செய்யுங்கள். நான் உங்கள் நலன் பேணுபவன். காப்பாற்றுபவன். நீங்களே என் குறிக்கோள். நானே உங்கள் பாரத்தை சுமக்கிறேன். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா  
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 5, 2014

கோரிக்கை

ஒரு உண்மையான பக்தரின் கோரிக்கைகள் பாபாவினால் எப்போதும், எந்த சூழ்நிலையிலும் நிராகரிக்கப்பட்டதில்லை அசையாத தளராத நம்பிக்கையும், பொறுமையும் கொண்டு பாபாவின் பதிலுக்காக காத்திருத்தல் வேண்டும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 4, 2014

ஆண்டியையும் அரசனாக்க வல்லவர்

ஊரும் பெயரும் இல்லாத சாயி அளவுகடந்த மஹிமை வாய்ந்தவர்.கடைக்கண் பார்வையால் ஆண்டியையும் அரசனாக்க வல்லவர்!தனது பக்தனின் எல்லா காரியங்களையும் முன் நின்று நடத்துபவர் அவரே.அதேசமயம் எந்த விஷயத்திலும் சம்பந்தபடாதவர் போல் தோன்றுகிறார்.அவர் எவர்களுக்கெல்லாம் கிருபை செய்ய விரும்புகிறாரோ அவர்களிடமெல்லாம் பலவிதமான மாறுவேஷங்களில் தோன்றுகிறார்.கணக்கற்ற அற்புதங்களை திட்டமிட்டு நிறைவேற்றுகிறார்.அவரை தியானத்தாலும் பிரேமை பொங்கும் பஜனையாலும் அணுக முயல்பவர்களுடைய தேவைகள் அனைத்தையும்  நிறைவேற்றி அவர்களைப் பாதுகாக்கிறார்
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 3, 2014

எனது விருப்பபடியே நடக்கிறது

எனது உண்மையான பக்தன் எனது அன்பை தவிர வேறெதையும் என்னிடம் எதிர்ப்பார்ப்பது இல்லை.எனது விருப்பமே அவனது விருப்பமாக இருக்கும்.அவனது வாழ்க்கையில் நடக்கின்ற எல்லா நிகழ்வுகளும் எனது விருப்பபடியே நடக்கிறது என திடமாக நம்புவான்.அப்படிப்பட்ட என் பக்தனை காக்க ஏழு கடல்களையும் தாண்டி செல்வேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 1, 2014

நம்பிக்கை வையுங்கள்

 என் வார்த்தைகள் மீது நம்பிக்கை வையுங்கள். இல்லாவிட்டால் நான் செய்யும் அற்புதங்களின் காரணமாகவாவது என் மீது நம்பிக்கை வைத்து என் நாமத்தை துதி செய்யுங்கள். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி உங்கள் பிரார்த்தனை  அனைத்திற்கும் பதில் கொடுப்பதற்காகவே நான் அவதரித்து வந்தவன் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...