Thursday, July 31, 2014

சாயியின் நிழற்படம்"சாயியின் நிழற்படத்தை தரிசனம் செய்வது சாயி-யை நேரடியாக தரிசனம் செய்வதற்கு சமம். ஆனால் எண்ணம் என்னவோ பூரணமாக இருக்கவேண்டும். " ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

பாபா ஒரு படம் மூலமாகவோ, விக்ரஹ வடிவிலோ நம்மிடம் வருகிறார் என்றால், தான் வருகிற இடத்தை வளப்படுத்தப்போகிறார், அந்த இடங்களில் இருக்கிற அனைத்து இடையூறுகளையும், பிரச்சனைகளையும் களையப்போகிறார் என்பது பொருள்.  

 

Wednesday, July 30, 2014

துன்பம் என்ற எண்ணம்...


கர்மங்களை குறைத்துக்கொள்ள வழி, அதை தைரியமாக அனுபவிப்பதே, நீங்கள் எப்போதும் என்னை நினைதுக் கொண்டிருந்தால் என்மேல் நம்பிக்கை கொண்டிருந்தால், அதை அனுபவிக்கும் சக்தியை நான் கொடுக்கிறேன். அது துன்பம் என்ற எண்ணம் உங்களில் ஏற்படாமல் நான் செய்கிறேன். - ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 29, 2014

பாபாவின் பரிட்சை
நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கடவுள் அற்புதத்தைச் செய்வதே இல்லை. நம்பிக்கையில்லாதவர்களுக்கு கடவுளிடமிருந்து அற்புதத்தைப் பெற இயலுவதுமில்லை என்றும் கூறலாம். எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் கடவுள் மீது நம்பிக்கை வைக்கும்போது, அவர் நமக்கு தன்னம்பிக்கையைத் தருகிறார்.

பொறு, உன்னுடைய கவலைகளை தூர எறி, உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. ஒருவன் எவ்வளவுதான் நசுக்கப்பட்டவனாக இருந்தாலும், இம்மசுதியில் கால் வைத்தவுடனே மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான். இங்கேயுள்ள பக்கிரி மிகவும் அன்பானவர். இவர் இவ்வியாதியைக் குணப்படுத்துவார். அன்புடனும், ஆசையுடனும் எல்லோரையும் பாதுகாப்பார், என்று, பக்தனுக்கு பாபா நம்பிக்கை தருவார்.  

பல வேளைகளில் நமது நம்பிக்கை ஆட்டம் காணும் அளவுக்குப் பிரச்சனைகள் அதிகமாகும். நம்பிக்கையே போய்விடும். வேறு எங்காவது போய் பார்க்கலாமா? என எண்ணத்தோன்றும். இப்படி அடிக்கடி மனம் மாறுகிறாயா? தன்னம்பிக்கை இழக்கிறாயா? அல்லது வருவது வரட்டும், பாபா தான் என்னோடு இருக்கிறாரே! என தைரியமாக இருக்கிறாயா? என்பதை அவர் கவனிப்பார். என்ன செய்யப்போகிறாய் என வேடிக்கைப் பார்பார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 28, 2014

என் அனுகிரகத்தை பெறுவார்கள்

லோபம், டாம்பீகம், மன அழுக்கு, கபடம், அசத்தியம் (பொய்)  முதலியன யாரிடம் இருக்கிறதோ அப்படிப்பட்டவர்கள் என் தரிசனம் பெற்றாலும், அவர்களுக்கு கிடைக்கும் பலன் தாமரை இலையின் மீது தண்ணீர் போன்றதே. அவைகளை வெளியேற்றிய மறு நிமிடமே அவர்கள் என் அனுகிரகத்தை  பெறுவார்கள். ஷிர்டி சாய்பாபா       


http://www.shirdisaibabasayings.com

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 27, 2014

பாபாவின் உடனடியான பிரதிச் செயலும் இருக்கிறது.ஓர் பக்தன் எவ்வளவு தூரம் நெஞ்சுரங் கொண்டவனாகவும் தீர்மானமுள்ளவனாகவும் இருக்கிறானோ,அங்ஙனமே பாபாவின் உடனடியான பிரதிச் செயலும் இருக்கிறது.அவரது முறை திரையிடப்பட்டதோ இரகசியமானதோ அல்ல.ஆனால் முற்றிலும் வெளிப்படையானவை.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம். 


http://www.shirdisaibabasayings.com

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 26, 2014

பலவீனர்கள்என்னை எப்போதும் தங்கள் இதயத்தில் நிலை நிறுத்திக்கொள்வோர் பலவீனர்கள் ஆகமாட்டார்கள்- ஷிர்டி சாய்பாபா


http://www.shirdisaibabasayings.com

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 25, 2014

வெகுளி


அறியாமை(வெகுளி) உள்ளவர்களை நான் அதிகம் நேசிக்கிறேன். மேதையைத் தள்ளி பேதையிடம் என் ஞானத்தை வெளிப்படுத்துகிறேன். குழந்தைகளின் வார்த்தைகளால் உலகத்தோடு பேசுகிறேன்.

இதையெல்லாம் புரிந்துகொண்டு, எழுந்து தைரியமாகப் போ! எதையும் தாங்கிப் பார் வாழ்ந்துவிடலாம். இந்த சாயி உன் பின்னாலும், உனக்கு முன்னாலும், உன்னை பக்கவாட்டுகளிலும் சூழ்ந்துகொண்டு உடன் வருகிறான் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு என் பெயரை உச்சரித்து வா! - ஸ்ரீ சாயி-யின் குரல்.     http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 24, 2014

தீர்வு கிடைக்கும்பாபாவிடம்  ஜாதி, உடம்பு, நிறம்,பணக்காரன், ஏழை, ஆண், பெண், திருநங்கை என்ற எந்தஒரு பேதமும் இருந்ததில்லை. சுத்தமான பக்தி, தூய்மையான மனம், நான் இந்த உடலல்ல, புனிதமான ஆன்மா என்ற ஒரு உணர்வு ஆகியவையே முக்கியம். இந்த உணர்வுகளோடு செல்பவருக்கு தீர்வு நிச்சயம் கிடைக்கும். ஸ்ரீ சாயி தரிசனம்.              

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 23, 2014

சத்சரித்திரம் 13-வது
சத்சரித்திரம் 13-வது அத்தியாயத்தில் பாபா, "நன்றியுள்ள நினைப்பு, மாறாத நம்பிக்கை, பக்தி இவற்றைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை!" என்று எழுதப்பட்டிருக்கிறது.

அப்படியானால் பாபா நன்றியுள்ள நினைப்பை, மாறாத நம்பிக்கையை, பக்தியை நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார் என்று அர்த்தம் அல்லவா?

இந்த முன்று விஷயங்களில்தான் ஒருவரது வாழ்க்கையே அடங்கியிருக்கிறது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 22, 2014

சாமர்த்தியங்கள் பாபாவின் முன் செல்லுபடியாகாதுபூர்வ புண்ணியம் இல்லாது எவரும் ஷீரடியில் தங்கமுடியாது. தங்குவதற்கு எவ்வளவு நிச்சயம் செய்துகொண்டு வந்தாலும் சரி, எல்லா சாமர்த்தியங்களும் பாபாவின் முன் செல்லுபடியாகாது.

ஒருவர் தாராளமாக நினைக்கலாம். 'நான் ஷீர்டிக்குப் போய் என் விருப்பம்போல் தங்கப் போகிறேன்' என்று. ஆனால், அது அவருடைய கைகளில் இல்லை, ஏனெனில் அவர் முழுக்கவும் வேறொருவர் (பாபா) சக்திக்கே உட்பட்டுள்ளார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 21, 2014

பாரதத்தை என் மீது வைநீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன். -ஷிர்டி சாய்பாபா  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 20, 2014

நான் உமக்கு பிரம்மத்தை ..


நான் உமக்கு பிரம்மத்தை மட்டும்மின்றி, பிரம்மச்சுருளையே காட்டுகிறேன். நகத்திலிருந்து, சிகைவரை உம்மை மூடிக்கொண்டிருக்கும் அச்சுருளை விரித்துப் பிரித்துக்காட்டுகிறேன். -ஷிர்டி சாய்பாபா.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 19, 2014

ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா 23

காகா சாஹேபின் (பிராம்மணர்)  முறை வந்தது. அவர் நல்ல "தங்கம்" தான் என்பதில் ஐய்யமில்லை இருந்தாலும் பரீட்சிக்கப்படவேண்டும். கத்தி ஒன்றை அவரிடம் கொடுத்து ஆட்டைக் கொல்லும்படி பாபா அவரைக் கேட்டார்.

காகாவின் கைகள் வெட்டுவதற்குத் தயாராக கீழே இறக்கப்படவிருந்த அதே தருணம் பாபா "நிறுத்து, எவ்வளவு கொடுமையானவனாய் இருக்கிறாய்! பிராமணனாய் இருந்துகொண்டு ஆட்டைக் கொல்கிறாய்" என்றார்.

காகா சாஹேப் கீழ்படிந்து கத்தியைக் கீழே வைத்துவிட்டு பாபாவிடம் கூறினார், "தங்கள் சொல்லே எங்களுக்கு சட்டமாகும். எங்களுக்கு வேறு எவ்விதச் சட்டமும் தெரியாது. எப்போதும் தங்களையே நினைவு கூர்கிறோம். தங்கள் ரூபத்தைத் தியானிக்கிறோம்.இரவும்,பகலும் தங்களுக்கே கீழ்ப்படிகிறோம்.கொல்வது சரியா, தப்பா என்பது எங்களுக்கு தெரியாது அல்லது அதை நாங்கள் கருதவில்லை.பொருட்களுக்கான காரணத்தை ஆராயவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்பவில்லை. ஆனால் (பாபாவின்) தங்கள் கட்டளைகளுக்கு நம்பிக்கையுடனும், மாறாத உறுதியுடனும், ஒழுங்கான பணிவுடன் நடத்தலே எங்களது கடமையும், தர்மமும் ஆகும்"
பின்னர் காகா விடம் இருந்து கத்தி திரும்பப் பெறப்பட்டது. ஆடு தாமாகவே இறந்து விட்டது.
- ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா 23                      

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 18, 2014

மாண்புமிகு மகான்கள்

கோபம்,பேராசை,காமம்,தவறான எண்ணம்,அகங்காரம்,பொறாமை என்கிற இந்த ஆறு எதிரிகளிடமும் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.பேரானந்தத்தை நீங்கள் அடைய இந்த ஆறு எதிரிகளிடமும் போராடுங்கள்.நிச்சயமாக நான் அதற்க்கு உங்களுக்கு உதவுகிறேன்.என்னை நம்புங்கள்.-ஷீரடி சாய்பாபா[மாண்புமிகு மகான்கள்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 17, 2014

மந்திரமோ, உபதேசமோ பெற முயலவேண்டாம்
எவரிடமிருந்தும் மந்திரமோ, உபதேசமோ பெற முயலவேண்டாம். குறி சொல்பவர்களையும், ஜோதிடம் கணிப்பவர்களையும் நாடாதீர்கள். கோவில் பூசாரிகளையும், கோவிலுக்குள் துணிகரமாக என் திரு முன்னர் உங்களை தங்கள் காலடியில் விழ வைக்கும் துன்மார்கரிடமும் ஓடாதீர்கள்.

என்னையே உங்களது எண்ணங்கள், செயல்கள் இவற்றின் ஒரே குறிக்கோளாக அமைத்துக் கொள்ளுங்கள். சந்தேகம் ஏதுமின்றி உங்கள் குறிக்கோளை அடைவீர்கள். ஸ்ரீ சாயியின் குரல்        

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 16, 2014

அபாயங்கள் துடைக்கப்படுகின்றன


பாபாவின் மீது எந்த பக்தனுக்கு முழு பக்தி ஏற்படுகிறதோ அவனது கேடுகளும், அபாயங்களும் துடைக்கப்படுகின்றன.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 15, 2014

மனம் இறைவனிடம் கெஞ்சிக் கேட்காதுஇறைவன் எப்போதும் நம்மையே நினைத்துக் கொண்டிருப்பவன். ஆனால், நாமோ அவனைத்தவிர பிறவற்றில் மனதை செலுத்திக் கொண்டு இருப்பவர்கள். இதனால் அவன் மீது நமக்கு அன்பும் வருவதில்லை. ஐக்கியமும் ஏற்படுவதில்லை.

நானும் அவனும் மின்சாரமும் மின்கம்பியும் போல, இரும்பும் காந்தமும் போல - மலரும் வாசமும் போல, செடியும் வேரும்போல, உடம்பும் உயிரும் போல ஒன்றில் ஒன்று கலந்திருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படும் வகையில் பக்தி செலுத்த வேண்டும்.

நான் அப்படித்தான் பக்தி செலுத்துகிறேன், ஆனால் கஷ்டம் தொடருகிறதே என்று நீங்கள் கேட்பீர்களானால், உங்கள் பக்தி பொய்யானது என்று பொருள்.

ஐக்கிய உணர்வு வந்துவிட்டால் துன்பமும் இன்பமும் தனித்தனியாக தெரியாது, அனைத்தும் சமமாகத் தெரியும். மனம் இறைவனிடம் கெஞ்சிக் கேட்காது. அதைப் பற்றி நினைக்காமல் நடைபோட ஆரம்பிக்கும்.     

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 14, 2014

இறைவனின் ஆணைப்படியே நடக்கிறது


என்ன நடக்கிறதோ, அது இறைவனின் ஆணைப்படியே நடக்கிறது. அவரே தூக்கிவிடுகிறார்; அவரே தள்ளியும்விடுகிறார், அவரே சண்டைபோடுகிறார், அல்லது மற்றவர்களை சண்டையிடவைக்கிறார். அவரே காரியங்களை செய்பவரும், செய்யவைப்பவரும் ஆவார். -ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 13, 2014

என் மீது உங்கள் மனதை லயமாக்குங்கள்
நமது மனம் இறைவன் மீது முழுமையாகப் படிந்து விட்டால், தேகத்தை பற்றிய கவலை நமக்கிருக்காது. மன உளைச்சல், அலைச்சல், துக்கம், கோபம் போன்றவை நம்மை அணுகாது. புகழ்ச்சிகளும், அவமானங்களும் நம்மை பாதிக்காது. தேகத்தால் விளையும் துன்பங்கள், சம்சார வேதனைகள் முதலியன நமக்குத் துன்பமாக தெரியாது. நான், எனது என்ற அகங்கார எண்ணம் நம்மை நெருங்காது. மாயை நம்மை விட்டு விலகிவிடும்.

இதனாலேயே சாயிநாதர் 'என் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வையுங்கள். என் மீதே உங்கள் கவனம் திரும்பட்டும் என் மீது உங்கள் மனதை லயமாக்குங்கள். எந்த ஒரு பெருமுயற்சியும் இல்லாமலேயே உங்களைப் பிறவிப் பெருங் கடலை தாண்ட வைப்பேன். என் கதைகளை மேம்போக்காகக் கேட்டாலும் பாவங்கள் உடனே நீங்கிவிடும். ஜனன மரண சுழற்சியிலிருந்து வெளியே வந்துவிடுவீர்கள். உடனே சாதனையை தொடருங்கள், என் உதவி உங்களுக்கு உண்டு'

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 12, 2014

தூதுவன்இறைவன் பக்தனுக்கு தாசன். பக்தன் கானம் செய்து கொண்டிருப்பதால் இறைவனின் இருப்பு உலகிற்கு தெரிய வருகிறது. பக்தன் இறைவனின் தூதுவன். ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 11, 2014

மனதை என்னிடம் திறந்துகோடு
உனது உழைப்பை பிறர் வாய் தின்னும்போதும், உன் உழைப்பின் பலனை பிறர் அனுபவிக்கும்போதும் வருத்தப்படாதே. அவர்கள் உன் கர்மாக்களை, உனது பாவங்களை உண்டும், அனுபவித்தும் உன்னை விடுதலை செய்கிறார்கள்.

நீ இழந்து போனதையும், தொலைத்துவிட்டத்தையும் நான் அறிந்திருக்கிறேன். என் கண்கள் காணாமல் எதுவும் நடக்க முடியுமா? இருந்தும் நான் மவுனமாக இருப்பதற்குக் காரணம், அவை உனக்கு நன்மை விளைவிக்கும். பிற்காலத்தில் பெரும் பலனோடும், வட்டியோடும், ஆசீர்வாதத்தோடும் மீண்டும் உன்னிடமே வந்துசேரும் என்பதை தீர்க்கமாக அறிந்திருப்பதால்தான்!

என் குழந்தாய்! உன் வேண்டுதல் கேட்கப்பட்டது. நீ எனக்காகப் பொறுமையாக காத்திரு. என் அருள் உன்னை அணுகுவதற்கு மனதை என்னிடம் திறந்துகொடு. - ஶ்ரீ சாயியின் குரல்.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 10, 2014

சாயி அழைக்காமலேயே வருவார்


சாயியை நம்பியவர்களுக்கு  -  அழைக்காமலேயே வருவார், வேறு உருவத்தில் தோன்றுவார், தம் பக்தர்களுக்கு கடமைபட்டவராக இருப்பார், ஒவ்வொரு படியிலும் பக்தர்களுக்கு உணர்வுட்டி காப்பார். - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.      

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 7, 2014

உறுதி மொழியை நிறைவேற்றுவார்பக்தர்களின் எண்ண ஓட்டங்களையும் உணர்வுகளையும் சமர்த்த சாயி மனக்கண்ணால் அறிவார். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து தமது உறுதி மொழியை நிறைவேற்றுவார். ஶ்ரீ சாயி தரிசனம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 6, 2014

ஆசிர்வாதம்


நீங்கள் அனுபவிப்பது, உங்களிடமிருப்பது, நான் உங்களுக்கு ஆசிர்வதித்து கொடுத்ததாகும் என்பதை நீங்கள் அறிந்தால் உங்களுக்கு சுபம் ஏற்படும்- ஷிர்டி சாய்பாபா.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 5, 2014

பெருங்கடலுக்கு அப்பால்நாமஸ்மரணம், வழிபாடு அல்லது பக்தி போன்ற சாதனைகள் உங்களிடம் இல்லை என்றாலும், ஞானிகளிடம் உங்கள் முழு இதயத்தோடு சரணாகதி அடைவீர்களானால், இவ்வுலக வாழ்வு என்னும் பெருங்கடலுக்கு அப்பால், அவர்கள் நம்மை பத்திரமாக இட்டுச் செல்வார்கள். சாயி சத்சரித்திரம் - 10.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 4, 2014

இன்னல்கள் ஒழிந்துபோகும்.


பாபா-வின் திருவாய் முலம் உதிர்ந்த கதைகளை கேட்கவேண்டும். ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட அவருடைய லீலைகளை அனுபவிக்கவேண்டும். எத்தனை லீலைகளைச் சேகரிக்கமுடியுமோ அத்தனையையும் சேகரித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். சாயியின் அற்புதமான சரித்திரத்தை பக்தியுடன் கேட்கப்பட்டால், எடுத்துச் சொல்பவர், கேட்பவர்கள், இவர்களுடைய இன்னல்களும், துயரங்களும் ஒழிந்துபோகும்.       

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 3, 2014

குரு சேவை

குரு சேவை செய்கிறேன் என்ற எண்ணத்தை என்றும் உங்களிடம் வளர்துக் கொள்ளாதிர்கள். அப்படி சேவை செய்யும் பாக்கியத்தை நானே தருகிறேன். சேவை செய்யும் பாக்கியமும் கூட யோகம் இருந்தாலன்றி  கிடைக்காது.- ஷிர்டி சாய்பாபா 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 2, 2014

இயற்கையாகவே வலுவிழந்துவிடும்


மனமும், புத்தியும், புலன் உறுப்புகளும் உலக இன்பங்களை துய்க்க ஈர்க்கப்படும்போது முதலில் என்னை நினை. பிறகு அவற்றை அம்சம் அம்சமாக எனக்கு சமர்ப்பணம் செய்வாயாக. இவ்வுலகம் அழியும் வரை புலன்கள் அவற்றுக்கு உரிய நாட்டங்களால் ஈர்க்கப்பட்டே தீரும். இதைத் தடுக்க இயலாது. ஆனால், அந்நாட்டங்களை குருவின் பாதங்களில் சமர்ப்பித்துவிட்டால் அவை இயற்கையாகவே வலுவிழந்துவிடும். ஶ்ரீ சாயி தரிசனம்.   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 1, 2014

நம்பிக்கை எப்படியோ, அப்படியே அனுபவம்பாபாவின் செயற்கரிய செயல்கள் கற்பனைக்கு எட்டாதவை. அவை மனதில் அழியாத சுவடுகளை பதிக்கும். இந்த அற்புதங்களை நாம் சொந்தமாக்கிட, பாபா ஒரு சாதனத்தை நமக்காகக் கொடுத்திருக்கிறார். அதுதான் அவரது யோக சக்தியால் உருவான துனியிலிருந்து வந்து கொண்டிருக்கிற உதி. இந்த உதி அனைத்து விஷயங்களையும் நமக்கு சாதகமாக்கிக் கொடுக்கும்.

மந்திரமாவது நீறு என்பார் சம்பந்தப் பெருமான். வல்வினை போக்குவதும், மந்திரமாவதும், நமது வேலைகளை முன் வந்து செயல்படுத்துவதும், அனைத்தையும் நமக்கு சாதகமாக மாற்றுவதும் இந்த உதியே என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஶ்ரீ சாயி தரிசனம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவின் கருணாகடாக்ஷம் ஒன்றே போதும் !

பாபாவினுடைய கருணாகடாக்ஷமும் ஆசீர்வாதமும் பிரசாதமும் எல்லாத் துன்பங்களையும் ஒழிக்கின்றன; வேறெதுவும் தேவையில்லை ! - ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம் htt...