Sunday, August 31, 2014

வெற்றியைத் தரும்


என்னை நம்புகிறவர்களே! உங்களுக்கு சொல்வது இதுதான்.. முதலில் எனக்கு உங்கள் உள்ளத்தில் இடம் கொடுத்து, எனக்கே முக்கியத்துவம் தாருங்கள். நான் அங்கே ஆசனம் போட்டு அமர்ந்து கொண்டபின், உங்கள் உலக விஷயங்களுக்காக நான் லெளகீகத்திற்கு உரியவனாக என்னை மாற்றிக்கொண்டு உங்கள் சார்பில் வாதாடுவேன். எனது வாதம் வெற்றியைத் தரும். நீங்கள் எப்போதும் ஜெயிப்பீர்கள். ஸ்ரீ சாயி தரிசனம்          

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 30, 2014

தேவையை நிறைவேற்றுகிறார்


பாபாவின் பக்தர்களுக்கு "உடல்தான் நான் (பாபா)" என்னும் உணர்விருக்கும்வரைதான் பக்தர்களுக்கு மனித வடிவில் தேவைப்படுகிறார். "நான்(பாபா) கேவலம் இவ்வுடல் அல்லேன்" என்னும் விழிப்பை பெற்றவருக்கு நிராகாரமான (உருவமில்லாத) பாபாவே தேவையை நிறைவேற்றுகிறார். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, August 29, 2014

நான்கு கரங்களை நீட்டி காக்கிறேன்


என் பக்தர்களுக்கு தீங்கு நேரிட விடமாட்டேன். என் பக்தர்களை நானே கவனித்துக் கொள்ளவேண்டும். ஒரு பக்தன் விழும் நிலையிலிருந்தால், நான் நான்கு, நான்கு கரங்களை அத்தருணத்தில் நீட்டி காக்கிறேன். அவனை விழவிடவே மாட்டேன். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா      

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 28, 2014

வெறும் படிப்பினால் பயன் இல்லை


வரிவிதிப்புத் துறையில் குமாஸ்தாவாக இருந்த வி.எச். தாகூர் என்பவர் தமது வேலை நிமித்தமாக வட்கான் என்ற இடத்துக்குச் சென்றபோது, புகழ்பெற்ற கன்னட மகானான அப்பா என்பவரை தரிசித்தார். தாகூர் அவரை வணங்கியபோது, அவர் ஆசீர்வதித்துவிட்டு, "நீ வடக்கே உன் அலுவலக விஷயமாக சுற்றுப்பயணம் போகும்போது ஒரு பெரிய மகானை சந்திப்பாய். அவர் உனக்கு அமைதியடையும் வழியை காட்டுவார்" என்றார்.

தாகூருக்கு ஜூன்னார் என்ற இடத்துக்கு மாற்றல் கிடைத்தது. அங்கு மிக செங்குத்தான நானேகாட் என்ற மலையை எருமை மேல் ஏறி கடக்கவேண்டியிருந்தது. சவாரி அவரது உடலை மிகவும் வலிக்குள்ளாகியது.பின்னர் அங்கிருந்து கல்யான் என்ற இடத்திற்கு மாற்றல் பெற்று வேலை செய்தபோது நானா சாகேப் சந்தோர்க்கர் அறிமுகம் கிடைத்தது. அவருடன் ஷீரடிக்கு சென்று பாபாவை தரிசித்தபோது, அவரைப் பார்த்து

பாபா - "இங்கே காட்டப்படும் வழியானது கன்னட மகானான அப்பாவின் போதனைகளைப் போலவோ, நானேகாட் மலைப்பாதையில் செய்யும் எருமைச் சவாரியைப் போலவோ அவ்வளவு எளிதானதல்ல. இந்த ஆத்மீக வழியில் உன்னால் முடிந்த அளவு முழுமுயற்சி செய்ய வேண்டும். அப்பா கூறிய யாவும் சரியே. இவை எல்லாவற்றையும் பயிற்சியில் கொண்டுவந்து வாழவேண்டும். வெறும் படிப்பு மட்டும் உதவாது. பயிற்சி இல்லாமலும், குருவின் அருள் இல்லாமலும் இருக்கும் வெறும் படிப்பினால் பயன் இல்லை". ஷிர்டி சாய்பாபா   
             

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 27, 2014

பொம்மலாட்டத்தைப் போன்று நான் நின்று நடத்துகிறேன்

ஜாதகம் ,கைரேகைக்காரர்களின் ஜோசியம் ஆகியோரின் முன்னோடி உரைகளைத் தூக்கியெறிந்துவிட்டு என்னை மட்டுமே நம்புங்கள்.என்னை நம்பி  என்பால் லயமாகும் மனிதனின் எல்லாக் காரியங்களையும் பொம்மலாட்டத்தைப் போன்று நான் நின்று நடத்துகிறேன்-ஷீரடி சாய்பாபா [ஸ்ரீ சாய் சத் சரித்திரம்] 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 25, 2014

ஷிரிடி எந்த விதத்தில் உதவி செய்ய முடியும்?


உனக்குத் தேவையானவற்றையும்,உனக்கு அறுகதை உள்ளவற்றையும் நான் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்.அதை போதாதென்று இன்னும் ஏதோ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஷிரிடி எந்த விதத்தில் உதவி செய்ய முடியும்?.-ஷீரடிசாய்பாபா [சத்குருவாணி]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 24, 2014

சரணாகதி


யார் அதிர்ஷ்டசாலியோ எவருடைய பாவங்கள் ஒழிந்தனவோ அவர்கள் சாய்பாபாவின்  வழிபாட்டை எய்துகிறார்கள்.தம்முன் வீழ்ந்து பணிந்து சரணாகதியடைந்த எந்த மனிதரையும் சாய்பாபா ஆசிர்வதிக்கிறார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 23, 2014

எதிரெதிர் துருவங்கள்


பேராசையும் கடவுளும் எதிரெதிர் துருவங்கள். எங்கே பேராசை நிலவுகிறதோ, அங்கே கடவுள் இருப்பதில்லை. ஷிர்டி சாய்பாபா  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, August 22, 2014

குருவின் ஆணை


தனத்தையும், தானியத்தையும், வஸ்திரங்களையும் அளிப்பது மட்டும் தக்ஷிணை ஆகிவிடாது. குருவின் ஆணையை (பொறுமை, நம்பிக்கை)  நிறைவேற்றி அவரை சந்தோஷப்படுத்துவதும் தக்ஷிணையே. ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 20, 2014

ராவ் பகதூர் அனுபவம்நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனித்து வருகிறேன். இரவு பூராவும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன் என என்  தனிப்பட்ட வாழ்க்கையில் அக்கறை கொண்ட பாபா, தொழில் ரீதியாகவும் நிறைய அற்புதங்கள் செய்தார்.

1910 அல்லது 1916-ம் ஆண்டு. ஷீரடியில் ஒரு கிரிமினல் வழக்கு. எல்லா கிராமத்திலும் இருப்பது போல ஷிர்டியிலும் மக்கள் இரு பிரிவுகளாக பிளவு பட்டிருந்தனர். பாபாவுக்கு  சேவை செய்யும் ரகு மற்றும் அவருடன் சேர்ந்து ஐந்து பேரை மார்வாடி பெண்ணை இழிவாகப் பேசியதாக கைது செய்து, நீதி மன்ற தீர்ப்பின்படி ஆறு மாதம் சிறையில் அடைத்தனர். நேரடியாகப் பார்த்தவர்கள் வலுவான சாட்சி அளித்ததால் வழக்கு வலுவடைந்தது. பாபா பக்தர் தாத்யா கோதே பாடீல், குற்றவாளிக்காக இரக்கப்பட்டார்.

தீர்ப்பின் நகலை எடுத்துக் கொண்டு ஷீரடியில் இருந்த புகழ்பெற்ற வக்கீல் திரு. கபர்டே, காகா சாகேப் தீட்சித், ஓய்வு பெற்ற நீதிபதி ராவ் பகதூர் சாதே- இவர்களிடம் காட்டி மேல் முறையீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டினார். அவர்கள் தீர்ப்பின் நகலை படித்துவிட்டு, வழக்கு மிக வலுவாக உள்ளதால் மேல்முறையீட்டுக்கு மறுத்துவிட்டனர்.

தாத்யா, பாபாவிடம் ஆலோசனை கேட்டார். எல்லா பேப்பர்களையும் எடுத்துக்கொண்டு 'பாவ்' இடம் (துமாலிடம்) போ என்றார். தாத்யா என்னிடம் நாசிக் வந்தார். நான் எல்லாவற்றையும் படித்துவிட்டு மும்பை அல்லது அகமது நகரிலுள்ள தலைசிறந்த வக்கீலிடம் செல்லச் சொன்னேன். வழக்கு வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

உடனே தாத்யா, பாபாதான் என்னிடம் அனுப்பியதாகக் கூறினார். எனக்கு வேறு வழி தெரியவில்லை. உடனே, மேல் முறையீட்டு மனுவை தயாரித்து அகமது நகரின் மாவட்ட நீதிபதியின் வீட்டுக்குச் சென்றேன். அவருக்கு  தீர்ப்பின் நகல் வரவில்லை, படிக்கவில்லை. எனது மேல் முறையீட்டு மனுவையும் அவர் படிக்கவில்லை.என்ன வழக்கு எனக் கேட்டார். 'ஷீரடியில் ஒரு மார்வாடி பெண்ணை இழிவாக பேசியதாக, நேரடி சாட்சியங்களை வைத்து ஆறு பேருக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றேன்'.

"துமால், வழக்கு வலுவாக உள்ளது. உனது கருத்து என்ன?" எனக் கேட்டார் நீதிபதி. "இந்த வழக்கும், சாட்சியங்களும் இரு பிரிவினருக்கு இடையேயுள்ள பகையால் ஏற்பட்டது" என்றேன். "அப்படியா நினைக்கிறாய்?" என்றார் நீதிபதி.

"அப்படி நினைப்பது மட்டுமல்ல நீதிபதி அவர்களே, இதுவே என் உறுதி மொழியும் கூட!" என்றேன்.

நான் சொன்னதை நம்பிய நீதிபதி, உடனே மேல் முறையீட்டு மனுவை வாங்கி அந்த ஆறு பேரையும் நிரபராதி என தீர்ப்பு வழங்கி எழுதி விட்டார். பின் என்னிடம் நீதிபதி, "உன் ஷிர்டி சாயி பாபா எப்படி இருக்கிறார்? அவர் இந்துவா? முஸ்லிமா? உனக்கு என்ன உபதேசிக்கிறார் எனக் கேட்டார்.

'அவர் இந்துவும் அல்ல, முஸ்லிமும் அல்ல. அதற்கும் மேலானவர். அவரின் உபதேசத்தை என்னால் விளக்கமுடியாது.  - ராவ்  பகதூர் எஸ்.பி துமால். சாயி யுகம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 19, 2014

காகா மகாஜனி ஷிர்டி பயணம்
ஷிர்டிக்குப் போய் பாபாவை தரிசனம் செய்து அவருடைய அருட்கரத்தால் தீண்டப்பட்ட பாக்கியம் செய்தவர்கள்கூட, அவர்கள் விரும்பிய நாள் வரை ஷீரடியில் தங்கமுடிந்ததா என்ன? அதற்கு பாபா அல்லரோ அனுமதி கொடுக்கவேண்டும்!

சுய முயற்சிகளால் மட்டும் எவரும் ஷிர்டிக்குப் போகமுடியவில்லை. எவ்வளவு ஆழமான ஆவல் இருந்தாலும் விருப்பப்பட்ட நாள் வரை அங்கே தங்க முடியவில்லை. பாபா விரும்பியவரை அங்கே தங்கிவிட்டு, 'போய் வா' என்று அவர் ஆணையிட்டவுடன் வீடு திரும்ப நேரிட்டது.

காகா மகாஜனி ஒருமுறை ஷீரடியில் ஒரு வாரம் தங்க வேண்டும் என்ற விருப்பத்துடன் பம்பாயிலிருந்து ஷீரடிக்கு வந்தார்.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஏற்பாடுகள் முன் கூட்டியே ஆரம்பிக்கப்படும், சாவடி மிக அழகாக அலங்கரிக்கப்படும். பாபாவினுடைய இருக்கைக்கு எதிரில் ஒரு தொட்டில் கட்டப்படும். பக்தர்கள் ஆனந்தக் கூத்தாடுவர்.

மகிழ்ச்சி தரும் கோகுலாஷ்ட்டமி பண்டிகையின் கோலாகலங்களில் நேரில் கலந்துகொள்ளும் ஆவலுடன் காகா சில நாட்களுக்கு முன்னமே வந்துவிட்டார்.

ஆனால், முதல் தரிசனத்திற்குப் போன போதே பாபா கேட்டார். 'ஆக, எப்போது வீடு திரும்பப் போகிறீர்?' இதைக் கேட்ட மகாஜனி திடுக்கிட்டார்.   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 18, 2014

அல்லாமாலிக் நம்மை காப்பவர்


நடப்பதை தாராளமாக பொறுத்துக்கொள்வோம் அது சந்தோஷமாக இருந்தாலும் சரி, கசப்பான செயலாக இருந்தாலும் சரி. அல்லாமாலிக் நம்மை காப்பவர். நடப்பதை சுமப்பவரும் அவரே.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 17, 2014

ஆனந்தத்தை அனுபவிக்கலாம்


நான் உனக்குள் இருக்கும்போது நீ வேறாக எங்கு இருக்க முடியும்.உனக்கும் எனக்கும் இடையில் தூரமென்பது மாயை.அதுவே சுவர் போன்ற தடையாகும்.அதைத் தகர்த்தெரி.அப்போது நாம் இருவரும் ஒன்று சேரலாம்.ஆனந்தத்தை அனுபவிக்கலாம்.-ஷீரடி சாய்பாபா[சத்குருவாணி]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, August 15, 2014

பஞ்ச பூதங்கள்பஞ்ச பூதங்களால்  அமைக்கப்பட்ட  நம் உடம்பானது அவைகளின் எல்லா இன்பங்களையும் துய்த்து  முடித்த பின்னர் ஓய்ந்து சாம்பலாக்கப்படும்.அவர்களின்  உடல்  சாம்பலாக்கப்படும்  என்ற  உண்மையை  பக்தர்களுக்கு நினைவூட்டவே  பாபா உதியை  வழங்கினார்."பிரம்மம்" ஒன்றே  மெய்பொருள் என்பதையும்,பிரபஞ்சம்  நிலையற்றது என்றும் தந்தை,தாய்,மகன் இவர்கள் யாவரும்  நம்முடையது  அல்ல என்றும்  இதனால்  உபதேசித்தார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 14, 2014

பாபாவின் வழிகள்..


ஒருவருக்கு ஒன்று, மற்றொருவருக்கு வேறு. தீஷை (உபதேசம்) அளிக்கும் வழிகள் எண்ணிலடங்கா. ஒருவரை தம்முடைய காலடியிலேயே கிடக்கச்சொன்னார். அச்சமயத்திலேயே மற்றொருவரை கண்டோபா கோவிலுக்கு அனுப்பினார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவரின் கனவிலும் தோன்றினார். அவருடைய மார்பில் அமர்ந்துகொண்டு கைகளாலும், கால்களாலும் அவரை அமுக்கினார். குடிகாரர் தம்முடைய கைகளை காதுகளில் வைத்துக்கொண்டு இனி மதுவை தொடமாட்டேனென்றும் அறவே விட்டுவிடுவேன் என்றும் சத்தியம் செய்த பின்னரே அவரை விடுதலை செய்தார்.   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 12, 2014

தராசுத் தட்டுக்கள் யாருக்காகவும் இறங்குவதும் இல்லை, ஏறுவதும் இல்லை.
நல்லவனோ, கெட்டவனோ அதை நான் பார்ப்பதில்லை, என்னை நம்பி முழுமையாக சரண் அடைந்துவிட்டவர்களை  நான் புறம் தள்ளுவது இல்லை. அவர்களுடைய அனைத்து விஷயங்களுக்கும் நான் பொறுப்பேற்கிறேன். அவர்களைக் காப்பதே என்னுடைய வேலை. அவர்களின் நன்மை தீமைக் கணக்கைப் பார்த்து காப்பாற்றும் தன்மையுள்ளவன் அல்ல நான். அதை வேறு ஒருவன் பார்த்துக்கொள்வான். அதற்கேற்ப பலன் தருவான். நான் தரும் நன்மைகள் அனைவருக்கும் பொதுவானவை. எனது தராசுத் தட்டுக்கள் யாருக்காகவும் இறங்குவதும் இல்லை, ஏறுவதும் இல்லை.

அதேபோல, என்னை நாற்பது ஆண்டுகள் வணங்கியவனாக இருந்தாலும் சரி, நான்கு நாட்கள் மட்டும் வணங்கியவனாக இருந்தாலும் சரி, ஆத்மார்த்தமாக என்னை நோக்கிக் கூப்பிட்டால் உடனடியாக நான் பதில் கூறுகிறேன்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 7, 2014

இன்றும் நான் உயிருடன் இருக்கிறேன்

இன்றும் நான் உயிருடன் இருக்கிறேன் என்பதை எப்போதும் உணர்.பக்தனாகிய நீ அழைத்தால் நான் ஓடோடி வருவேன்.இது சத்தியம்.-ஷீரடி சாய்பாபா[மாண்புமிகு மகான்கள்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 6, 2014

தாசனாக நின்றிருப்பேன்

நான் என் பக்தனின் அருகிலேயே தாசனாக நின்றிருப்பேன்.அவர்களின் பிரேமையே எனக்கு உணவு.அதற்காக நான் பசியுடன் தவித்துக் கொண்டிருக்கிறேன் -ஷீரடிசாய்பாபா[சாயி தரிசனம்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 4, 2014

ஆறு எதிரிகள்கோபம்,பேராசை,காமம்,தவறான எண்ணம்,அகங்காரம்,பொறாமை என்கிற இந்த ஆறு எதிரிகளிடமும் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.பேரானந்தத்தை நீங்கள் அடைய இந்த ஆறு எதிரிகளிடமும் போராடுங்கள்.நிச்சயமாக நான் அதற்க்கு உங்களுக்கு உதவுகிறேன்.என்னை நம்புங்கள்.-ஷீரடி சாய்பாபா[மாண்புமிகு மகான்கள்]http://www.shirdisaibabasayings.com

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 3, 2014

எல்லா விஷயங்களையும் ரகசியமாகவேச் செய்து தருவேன்யாருடைய கண்களில் கண்ணீர்த் துளிகள் கசிந்து உருகி ஓடுகின்றனவோ அவர்கள் ஆத்மார்த்தமாக வேண்டுகிறார்கள். மற்றவர்கள் அந்த அவசியத்தில் இல்லை என்பதால், மேம் போக்காக வேண்டுகிறார்கள்.

எந்த வெள்ளம் புரண்டுவருகிறதோ அந்த வெள்ளம் வழிகளை உண்டாக்குகிறது. எங்கே நீர் வரத்து இல்லையோ அங்கே வழிகள் உண்டாவதில்லை. இதுதான் கண்ணீருடன் வேண்டுகிற வேண்டுதலுக்கும், கடமைக்காக வேண்டுகிற வேண்டுதலுக்கும் இடையேயுள்ள வித்தியாசம்.

என்னிடமிருந்து பற்றிக்கொண்டாயே எனக் கேட்டு அழாதே . நீ என்னைப் பற்றிக் கொண்டு என்னிடமிருக்கிறாயே! நான் என்ன பேரு பெற்றவன் என எண்ணி அழுது என்னைப் போற்று.

என்னை வணங்குவதற்காக பூஜை புனஸ்காரங்கள் செய்வதையும், பிறர் பாராட்ட நடந்து கொள்வதையும் தவிர்த்துவிடு. நான் இதை விரும்புவதில்லை. வெளிப்படையான ஆடம்பர வழிபாட்டுக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை. காரணம், அதைச் செய்வதற்கான பலனை உடனே அடைந்துவிட முடியும். அதற்கு மேல் பலனை எதிர்பார்க்க முடியாது அல்லவா? ஆத்மார்த்தமாக-இதயத்திற்குள் என்னை குடியேற்றி, அங்கே என்னை வழிபடு. அப்போது உன் மனதும், செயலும் யாருக்கும் தெரியாது.

அனைத்தும் ரகசியமாக இருப்பதால், நானும் எல்லா விஷயங்களையும் ரகசியமாகவேச் செய்து தருவேன்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, August 1, 2014

பாபாவின் அன்புபாபாவுக்கும், பக்தனுக்கும் இடைவெளி ஏதும் இல்லை. அவர்கள் இருவரும் எப்பொழுதும் இணைந்தேயிருக்கிறார்கள். பக்தன் பாபாவின் பாதங்களில் தலைசாய்ப்பது உடலளவில் செய்யப்படும் மரியாதையே. பக்தன், தான் பாபாவோடு ஒன்றியவன் என்ற எண்ணத்திலேயே பாபாவை வழிபடுகிறான். பாபாவும் பக்தனை தன்னில் ஒன்றியவன் என்றே வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறான பரஸ்பர அன்பை பக்தன் புரிந்துகொள்ளவேண்டும்


http://www.shirdisaibabasayings.com

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

.

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...