Wednesday, August 20, 2014

ராவ் பகதூர் அனுபவம்நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனித்து வருகிறேன். இரவு பூராவும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன் என என்  தனிப்பட்ட வாழ்க்கையில் அக்கறை கொண்ட பாபா, தொழில் ரீதியாகவும் நிறைய அற்புதங்கள் செய்தார்.

1910 அல்லது 1916-ம் ஆண்டு. ஷீரடியில் ஒரு கிரிமினல் வழக்கு. எல்லா கிராமத்திலும் இருப்பது போல ஷிர்டியிலும் மக்கள் இரு பிரிவுகளாக பிளவு பட்டிருந்தனர். பாபாவுக்கு  சேவை செய்யும் ரகு மற்றும் அவருடன் சேர்ந்து ஐந்து பேரை மார்வாடி பெண்ணை இழிவாகப் பேசியதாக கைது செய்து, நீதி மன்ற தீர்ப்பின்படி ஆறு மாதம் சிறையில் அடைத்தனர். நேரடியாகப் பார்த்தவர்கள் வலுவான சாட்சி அளித்ததால் வழக்கு வலுவடைந்தது. பாபா பக்தர் தாத்யா கோதே பாடீல், குற்றவாளிக்காக இரக்கப்பட்டார்.

தீர்ப்பின் நகலை எடுத்துக் கொண்டு ஷீரடியில் இருந்த புகழ்பெற்ற வக்கீல் திரு. கபர்டே, காகா சாகேப் தீட்சித், ஓய்வு பெற்ற நீதிபதி ராவ் பகதூர் சாதே- இவர்களிடம் காட்டி மேல் முறையீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டினார். அவர்கள் தீர்ப்பின் நகலை படித்துவிட்டு, வழக்கு மிக வலுவாக உள்ளதால் மேல்முறையீட்டுக்கு மறுத்துவிட்டனர்.

தாத்யா, பாபாவிடம் ஆலோசனை கேட்டார். எல்லா பேப்பர்களையும் எடுத்துக்கொண்டு 'பாவ்' இடம் (துமாலிடம்) போ என்றார். தாத்யா என்னிடம் நாசிக் வந்தார். நான் எல்லாவற்றையும் படித்துவிட்டு மும்பை அல்லது அகமது நகரிலுள்ள தலைசிறந்த வக்கீலிடம் செல்லச் சொன்னேன். வழக்கு வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

உடனே தாத்யா, பாபாதான் என்னிடம் அனுப்பியதாகக் கூறினார். எனக்கு வேறு வழி தெரியவில்லை. உடனே, மேல் முறையீட்டு மனுவை தயாரித்து அகமது நகரின் மாவட்ட நீதிபதியின் வீட்டுக்குச் சென்றேன். அவருக்கு  தீர்ப்பின் நகல் வரவில்லை, படிக்கவில்லை. எனது மேல் முறையீட்டு மனுவையும் அவர் படிக்கவில்லை.என்ன வழக்கு எனக் கேட்டார். 'ஷீரடியில் ஒரு மார்வாடி பெண்ணை இழிவாக பேசியதாக, நேரடி சாட்சியங்களை வைத்து ஆறு பேருக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றேன்'.

"துமால், வழக்கு வலுவாக உள்ளது. உனது கருத்து என்ன?" எனக் கேட்டார் நீதிபதி. "இந்த வழக்கும், சாட்சியங்களும் இரு பிரிவினருக்கு இடையேயுள்ள பகையால் ஏற்பட்டது" என்றேன். "அப்படியா நினைக்கிறாய்?" என்றார் நீதிபதி.

"அப்படி நினைப்பது மட்டுமல்ல நீதிபதி அவர்களே, இதுவே என் உறுதி மொழியும் கூட!" என்றேன்.

நான் சொன்னதை நம்பிய நீதிபதி, உடனே மேல் முறையீட்டு மனுவை வாங்கி அந்த ஆறு பேரையும் நிரபராதி என தீர்ப்பு வழங்கி எழுதி விட்டார். பின் என்னிடம் நீதிபதி, "உன் ஷிர்டி சாயி பாபா எப்படி இருக்கிறார்? அவர் இந்துவா? முஸ்லிமா? உனக்கு என்ன உபதேசிக்கிறார் எனக் கேட்டார்.

'அவர் இந்துவும் அல்ல, முஸ்லிமும் அல்ல. அதற்கும் மேலானவர். அவரின் உபதேசத்தை என்னால் விளக்கமுடியாது.  - ராவ்  பகதூர் எஸ்.பி துமால். சாயி யுகம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஸாயீ உங்களை கிருபை செய்து பாதுகாப்பார்

           "வெல்லக் கட்டியின் இனிமையை விரும்பும் எறும்பு, தன் மண்டையை உடைத்துக் கொள்வதாயினும் சரி, அதை விடவே விடாது.  ஸாயீ பாதங்க...