Monday, September 29, 2014

குருவின் பெருமை

தனது குருவின் பெருமையை அறிபவன்,அவரையே ஹரிஹர பிரம்மமென்ற திரிமூர்த்தி அவதாரமென்று கருதுபவன்,ஆசிர்வதிக்கப்பட்டவன்-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, September 28, 2014

நான் அங்கு இருப்பேன்

சிருஷ்டியின் எந்த மூலைக்கு  வேண்டுமானாலும் செல்லுங்கள்.கிட்டவோ, எட்டவோ எழுகடல் தாண்டியோ செல்லுங்கள்.எனது பக்தர்களின்மேல் உண்டான பிரேமை எல்லை அறியாதது.ஆகவே,கவலையின்றி எங்கும் செல்லுங்கள்.நீங்கள் செல்லும் இடத்திற்கு உங்களுக்கு முன்பாகவே சென்று நான் அங்கு இருப்பேன்.-ஷீரடி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, September 27, 2014

குரு சரித்திர மகத்துவம்

                                            

                                         குரு சரித்திர மகத்துவம்

குரு கீதையின் (குரு சரித்ரம்) ஜபத்தால் ஒருவன் அளவற்ற பயனை எய்துவான். இது எல்லா பாவங்களையும் போக்குவது, எல்லா ஏழ்மையையும் நாசம் செய்வது. அகால மரணத்தை தடுப்பது, எல்லா சங்கடங்களையும் நாசம் செய்வது. யக்ஷர், ராட்சதர், பூதங்கள்,திருடர்கள்,புலி முதலிய பயங்களை போக்குவது.  
கொடிய குஷ்டம் முதலிய உபத்ரவங்களையும் தோஷங்களையும் நிவாரணம் செய்வது. குருவின் சந்நிதியில் என்ன பலனோ அது படிப்பதாலேயே கிட்டும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, September 26, 2014

இறந்தவளைப் பிழைப்பித்தது.

                                               இறந்தவளைப்   பிழைப்பித்தது.
                 
D.R.ஜோஷி தேவ்காங்கர்  என்பவரது மகளான,திருமதி மலன்பாய் என்பவள் காசநோயால் துன்புற்றுக் கொண்டிருந்தாள். மருந்துகள் பலனளிக்கத் தவறவே அவளை பாபாவிடம் அழைத்துச் சென்றனர். பாபா அவளை ஒரு கம்பளியின் மேல் படுக்கும்படியும்,நீரைத் தவிர, வேறெதும்  உண்ணாமலிருக்கும்படியும் கூறினார். அவரது அறிவுரைப் படியே விழிப்புடன் நடந்துவந்த அப்பெண்,ஒரு வாரகாலத்துக்குப் பின் ஒரு நாள் விடிகாலை இறந்து போனாள்.பாபா அப்போது சாவடியில் இருந்தார்.ஷீரடி வரலாற்றிலேயே முதன் முறையாக,பாபா காலை எட்டுமணி ஆகியும் சாவடியை விட்டு நகரவில்லை. அந்தப் பெண்ணின் பெற்றோர் அந்திமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது,மலன்பாய் மூச்சு விடுவதைப் போல தோன்றியது. அவள் கண்களை விழித்துப் பார்த்தாள்.பின்னர் தனது அனுபவத்தை விவரித்தாள்; "ஒரு கரும் மனிதன் என்னைத் தூக்கிச் சென்றான்.பெரும்பீதியுற்ற நான்,பாபாவின் உதவியை நாடிக்கத்தினேன்.பாபா அங்கே தோன்றித் தமது தடியை எடுத்து அவனை அடித்து என்னை அவன் கைகளிலிருந்து பிடுங்கிச் சாவடிக்கு தூக்கி வந்தார்" என்றாள்.சாவடியைப் பார்த்திராத அவள்,அதைப்பற்றி மிகச் சரியாக விவரித்தால்.அவள் உயிர் பிழைத்த அக்கணமே பாபா சாவடியை விட்டுப் புறப்பட்டு,மோசமான வசவுகளை உரத்த குரலில் கூறிக்கொண்டும்,தமது குச்சியால் பூமியை அடித்துக் கொண்டும்,அந்தப் பெண் படுத்துக் கொண்டிருந்த தீக்ஷிதரின் வாடாவை அடைந்தார்.-ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, September 25, 2014

குரு பக்தியைப் பற்றிச் சில மொழிகள்

                               குரு பக்தியைப் பற்றிச் சில மொழிகள்.

"குருவை நம்பு.ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை" என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். சாய்பாபாவின் மேல் உள்ள நம் பக்தியை வளர்த்துக் கொள்வதற்குரிய சில கருத்துக்களைக் கூறுவது உபயோகமாயிருக்கும் என்று கருதுகிறேன்.

முதன்முதலில் சாயிபாபாவின் ஓர் உருவப்படம் இன்றியமையாத ஒன்று.ஏனெனில், பாபாவும் அவரது படமும் வேறல்ல.தவிர,அது  பாபாவின் மேல் இடையறாத தியானம் செய்ய வேண்டியதின் உயர்வைப் பற்றிச் சக்திவாய்ந்த முறையில் நினைவுபடுத்துகிறது.பாபாவின் படம்,அத்தகைய குறிக்கோளை அடைய முயலும்படித் தூண்டுகிறது.பாபாவின் படத்தைப் பார்ப்பது மிகவும் சக்தி வாய்ந்த சாதனையாகும்.

இரண்டாவதாக ,பாபாவின் வாழ்க்கைச் சரிதத்தைத் தவறாமல் பாராயணம் செய்வது,நமது மனதை ஆத்மீகக் குறிக்கோளை நோக்கி இழுக்கும்.நமது எல்லா எண்ணங்களும் உணர்வுகளும் பாபாவைப் பற்றியே வட்டமிடும்படிச் செய்யும்.பாபாவின் சரிதத்தைக் கற்ற புத்திசாலியான ஒருவருக்குத் தடையே உதவியாக மாறிவிடுகிறது.

மூன்றாவதாக, எப்போதுமே பாபாவின் நினைவிலேயே மூழ்கி,அவரது திவ்ய நாமத்தை இடையறாது உச்சரிப்பதில் நம் மனதை ஈடுபடுத்தும்படியான வழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

நாலாவதாக,நாம் எதை உண்டாலும் அல்லது பருகினாலும்,அதை மானசீகமாகப் பாபாவுக்கு நிவேதனம் செய்து,அவரது பிரசாதமாக உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

ஐந்தாவதாக, நாளின் முதல் 15 நிமிடநேரத்தை,நாள் முழுவதும் நாம் பாபாவின் நினைவில் தோய்ந்திருப்பதற்காக, நம் பாவனையை இசைவு செய்துகொள்ளுவதில் செலவிடவேண்டும்.மீண்டும்,தூங்குவதற்கு முன்,நாளின் இறுதி 15 நிமிடங்களையும் பாபாவைப் பற்றிச்  சிந்திப்பதிலும் செலவிட முயல வேண்டும்.

ஆறாவதாக, ஸ்ரீ சாயிபாபாவின் விபூதியை நாள்தோறும் இட்டுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஏழாவதாக,வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் பாபாவை மனமார வழிபடுவதற்காக ஒதுக்க வேண்டும்.பாபா,தமது படத்தோடு ஒன்றுப்பட்டவர் என்பதைப் பலமாக நினைவுகூர்ந்து,அவரது இருப்பை உணர்ந்து,அவரது படத்தைப் பூஜை செய்ய வேண்டும்.

எட்டாவதாக முடிந்தபோதெல்லாம்,தினசரி,வாரந்திர சாய் சத்சங்கத்தில் பங்கேற்க முயல வேண்டும்.

                                                                             - ஆச்சார்யா  E . பரத்வாஜா.
                 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, September 24, 2014

கடன்பாக்கி

எனக்கு என்ன வீடா,வாசலா,குடும்பமா,குழந்தையா? நான் ஏன் தக்க்ஷினை கேட்கவேண்டும்?நான் எதையும் எவரிடமிருந்தும் பெற்றுக்கொள்வதில்லை.கடனைத் திருப்பி கேட்பவள் இந்த மசூதிமாயீ! கொடுப்பவர் தம் கடனிலிருந்து விடுபடுகிறார்.தேவைப்படும் நேரத்தில் மிகப் பணிவாகவும் இரக்கமாகவும் கெஞ்சுகிறார்கள்;காரியம் கைகூடிய பிறகு அதைப்பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை.என் பக்தர்கள் எவர் கடன்பாக்கி இல்லாதவரோ அவரே எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறார்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, September 18, 2014

யார் அதிர்ஷ்டசாலியோ எவருடைய பாவங்கள் ஒழிந்தனவோ அவர்கள் சாய்பாபாவின்  வழிபாட்டை எய்துகிறார்கள்.தம்முன் வீழ்ந்து பணிந்து சரணாகதியடைந்த எந்த மனிதரையும் சாய்பாபா ஆசிர்வதிக்கிறார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

Friday, September 12, 2014

என்னையே சார்ந்திரு

ஏங்குதல்,போராட்டங்களை  விடுத்து என்னையே சார்ந்திரு,நான் உன்னுடனையே இருப்பேன்.நான் உன்னுடைய தாகத்தி தீர்ப்பதற்காக வருவதற்குள் உன் மனம் சஞ்சலமடைந்து,எங்கேயோ  செல்லுகிறாய்.நான் உனக்காகவே இருக்கிறேன். பாரத்தை என்மேல் சுமத்து சாந்தி ஏற்படும்.-ஸ்ரீ சாய் சத்குருவாணி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, September 11, 2014

சாயி நாமம்

நாமம் என்றால்  சொரூபத்தை ஒருமித்த உச்சரிப்பின் மூலம்,உண்மையை கிரகித்தலே.என் நாமத்தை உச்சரிப்பதால் வேறு சிந்தனைகள் தோன்றாது..அனர்த்ததமான துன்பங்கள் வராது.புளியினால் பித்தளைப் பாத்திரத்தின் களிம்பு நீங்குவது போல் என் நாம ஸ்மரணயினால் மாயை நசிகிறது.என் சுத்த தத்துவம் என் நாம ஸ்மரணயினால் தெரிய வரும்.-ஸ்ரீ சாய் சத்குருவாணி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, September 1, 2014

நெவாஸ்கர்

பாலாஜி பாடீல் நெவாஸ்கர்; பாபா ஸ்நானம் (குளிப்பது) செய்ததும், கை, கால், முகம் கழுவியதுமான நீரைத் தவிர வேறெந்த நீரையும் நெவாஸ்கர் அருந்தமாட்டார். - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...