Monday, October 13, 2014

மகிழ்ச்சியின் பாதை

பொறு, உன்னுடைய கவலைகளைத் தூர எறி, உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. ஒருவன் எவ்வளவு தான் நசுக்கப்பட்டு வேதனைப்பட்டவனாக இருப்பினும், இச் சமாதியில் கால் வைத்தவுடனே அவன் மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, October 12, 2014

குரு

ஒரு பக்தனுக்கு தனது குருவின் திருவடிவே தியானத்திற்கு மூலமாகவும்,குருவின் பாதங்களே அனைத்துப் பூஜைகளுக்கும் உரிய மூலப்பொருளாகவும், குருவின் திருவாய் மொழிகளே அனைத்து மந்திரங்களிலும் சிறந்த மூல மந்திரமாகவும்,குருவின் திருவருளே முக்திக்கு மூலமாகவும் விளங்குகிறது.-அக்கல்கோட் ஸ்ரீ சுவாமி சமர்த்தர்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, October 11, 2014

ஆட்டுவிப்பவன் நானே

"நீங்கள் எங்கிருந்தாலும்,எதைச் செய்தாலும் அவை எல்லாவற்றையும் நான் அறிவேன்.உங்களை ஆட்டுவிப்பவன் நானே...எல்லாவற்றையும் படைத்துக் காப்பவனும் நானே...உலகத்தின் ஆதாரம் நானே..
எவன் என்னை மனதார நினைக்கிறானோ அவனுக்கு எப்போதும் துன்பம் நேராது"-ஷீரடி சாய்பாபா [மாண்புமிகு மகான்கள்]
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, October 9, 2014

அளவுகடந்த மஹிமை வாய்ந்தவர்

ஊரும் பெயரும் இல்லாத சாயி அளவுகடந்த மஹிமை வாய்ந்தவர்.கடைக்கண் பார்வையால் ஆண்டியையும் அரசனாக்க வல்லவர்!தனது பக்தனின் எல்லா காரியங்களையும் முன் நின்று நடத்துபவர் அவரே.அதேசமயம் எந்த விஷயத்திலும் சம்பந்தபடாதவர் போல் தோன்றுகிறார்.அவர் எவர்களுக்கெல்லாம் கிருபை செய்ய விரும்புகிறாரோ அவர்களிடமெல்லாம் பலவிதமான மாறுவேஷங்களில் தோன்றுகிறார்.கணக்கற்ற அற்புதங்களை திட்டமிட்டு நிறைவேற்றுகிறார்.அவரை தியானத்தாலும் பிரேமை பொங்கும் பஜனையாலும் அணுக முயல்பவர்களுடைய தேவைகள் அனைத்தையும்  நிறைவேற்றி அவர்களைப் பாதுகாக்கிறார்
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, October 7, 2014

ஸ்ரீஹரி

கள்ளம் கபடமற்ற எளிய பக்தர்களுக்காக ஸ்ரீஹரி மிகவும் ஏங்குகிறார். அன்பு வலையில் ஒரு முழுமையாக கைதியாக இருக்கிறார். ஆனால் பெருமை கொள்பவர்களுக்கு, போலிகளுக்கு, வேஷதாரிகளுக்கு ஸ்ரீஹரி எட்டாத தூரத்தில் இருப்பார்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, October 6, 2014

உண்மையான ஆர்வம்

எங்கே உண்மையான  ஆர்வமும் , ஏக்கமும் இருக்கின்றதோ,பாபா தம்மைத்தாமே அவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து கொள்கிறார்-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.  
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, October 5, 2014

மாயை

மாயை மிகவும் பலமானது.ஆனால் இறைநாமமோ அதைவிட சக்தி வாய்ந்தது.இறை நாமம் ஒன்றே உய்யும் வழி. மாயையை வெல்ல இறைவனிடம் விஸ்வாசம் தவிர்த்து வேறொரு சாதனை இல்லை.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, October 4, 2014

ஆத்மானந்தத்தை உண்டாக்குவேன்

என் பக்தர்களுக்குத் தூரமாக இருக்க மாட்டேன்.அஹம்பாவம் கொண்டவர்களின் அருகில் கூட வரமாட்டேன்.இச் சொற்களில் எந்த சந்தேகமும் இல்லை.பக்திமார்க்கத்தைத் தவிர்த்து வேறோர் மார்கத்தில் நான் கிடைக்கமாட்டேன்.யார் ஆத்மீய பாவத்துடன் என் கதைகளைக் கேட்பார்களோ,அங்கு நான் கட்டுபட்டவன் போல் இருப்பேன்.அவர்களுக்கு
ஆத்மானந்தத்தை உண்டாக்குவேன்.-ஸ்ரீ சாயி திருவாய்மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, October 2, 2014

அனுகிரகத்தை பெறுவார்கள்

லோபம், டாம்பீகம், மன அழுக்கு, கபடம், அசத்தியம் (பொய்)  முதலியன யாரிடம் இருக்கிறதோ அப்படிப்பட்டவர்கள் என் தரிசனம் பெற்றாலும், அவர்களுக்கு கிடைக்கும் பலன் தாமரை இலையின் மீது தண்ணீர் போன்றதே. அவைகளை வெளியேற்றிய மறு நிமிடமே அவர்கள் என்
அனுகிரகத்தை  பெறுவார்கள். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா  
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, October 1, 2014

நான் இல்லாத இடமே இல்லை

நீ எங்கு இருக்கின்றாயோ அங்கேயே இருந்துகொண்டு என்னை கேள்வி கேள்!தேவையில்லாது எதற்காகக் காட்டிலும், வனத்திலும் திரிந்து விடைகளைத் தேடுகிறாய்? நான் உன்னுடைய ஞான நாட்டத்தை திருப்தி செய்கிறேன். அந்த அளவிற்கு என்னை நம்புவாயாக.- நான் அனைவருள்ளும்  வியாபித்திருக்கிறேன்.  நான் இல்லாத இடமே இல்லை. பக்தர்களுக்காக நான் எங்கும் , எப்படியாவது தோன்றுவேன்-ஸ்ரீ  சாய் சத்குருவாணி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...