Sunday, November 30, 2014

உங்களுடனேயே நான் இருப்பேன்

யாராவது எங்காவது பக்தி பாவத்துடன் என் எதிரில் கைகளை நீட்டினால் போதும் உடனே அவர்கள் முன்  நான் நிற்பேன்.நீங்கள் எங்காவது செல்லுங்கள்.  உங்களுடனேயே நான் இருப்பேன்.நீங்கள் செய்வதெல்லாவற்றையும் நான் அறிவேன்.நான் சர்வாந்தர்யாமி. உன் அந்தர்யாமியாய் உள்ளவன்.என் மீது நம்பிக்கை வைத்து நீ செய்யும் எல்லா காரியங்களையும்  நானே முன் நின்று நடத்துகிறேன்.இதை திடமாக நம்பு-ஸ்ரீ சாய் திருவாய் மொழி
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, November 29, 2014

நல்வினை


முன்னர் செய்த நல்வினைகளின் காரணமாகவே நாம், பாபாவின் பாதத்தடியில் உட்காருவதற்கும்,அவருடைய ஆசிர்வதிக்கப்பட்ட நட்பை மகிழ்ந்து அனுபவிப்பதற்கும், நல்ல அதிர்ஷ்டத்தைப் பெற்றோம்.பாபாவின் உயர்வையும்,தனித்தன்மைச் சிறப்பையும், போதுமான அளவிற்கு எவரும் விளக்க இயலாது. அவரின் பாதாரவிந்தங்களில் ஆனந்தத்தை நுகர்பவன் அவருடையதேயான ஆத்மாவிலேயே ஸ்தாபிக்கபடுகிறான்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, November 28, 2014

சிறப்பான நிலை

ஸ்ரீ சாய்பாபாவை நமது வழிகாட்டியாக நாம் அமைத்துக் கொள்வோமானால், நமது அனைத்துத் துன்பங்கள்,கவலைகள் என்னும் கடலைக் கடக்க அவரே உதவுவார்.குரு ஒருவரே கடவுள். சத்குருவின் புனிதத் திருவடிகளை நினைவு கூர்வோமானால்,அவர் மேலும் சிறப்பான நிலைக்கு நம்மை அழைத்துச் செல்வார்.-ஸ்ரீ  சாய் சத்சரித்திரம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, November 20, 2014

பாபா நேராக பேசுகிறார்

பக்தர்களின் நம்பிக்கை, நேர்மையான பக்தி,ஆன்மீக வளர்ச்சிக்கேற்ப, சாய்பாபா அளித்திடும் அனுபவங்கள் பக்தருக்கு பக்தர் மாறுபடும்..சில முக்கியமான நிகழ்வுகள் மூலம் பாபா சில பக்தர்களுக்கு உதவுகிறார்.அவர்கள் வாழ்க்கையில் பொருளாதார மேம்பாட்டை அளிக்கிறார்.சில பக்தர்களுக்கு கனவுகளில் தோன்றி,கனவுகளில் செய்திகள் சொல்லி சிலரது பக்தியை அதிகப்படுத்துகிறார். முழுமையான நம்பிக்கை , நேர்மை மற்றும் பக்தியுடன் சாயிபாபாவை நோக்கி யார் பிரார்த்தனை செய்தாலும் பாபா அவர்களுடன் நேராக பேசுகிறார்,அவர்கள் இடைத் தரகர்களின் உதவியை நாடத் தேவையில்லை.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, November 18, 2014

உளப்பூர்வமான நம்பிக்கை

வைதீகம், பட்டினி, சிலவற்றை ஒதுக்கி வைக்கும்முறை - இவற்றுக்கு பாபா முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவர் விரும்புவது எல்லாம் தன் பக்தனிடம் உளப்பூர்வமான நம்பிக்கையை மட்டுமே.  
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, November 16, 2014

உனது ஆசைகளை பூர்த்தி செய்ய

நான் உனது ஆசைகளை பூர்த்தி செய்ய ஆவலாய் இருக்கும்போது வீணாக மற்றவர்களை கேட்டு தெரிவது பயனில்லை.உனது எல்லா கேள்விக்கும் நானே விடையளிக்கத் தயாராக இருக்கும்போது மற்றவர்களைக் கேட்பதையும்,அனாவசியமாகப் பிறரிடம் விசாரிப்பதையும் நான் விரும்புவதில்லை-ஷீரடி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, November 15, 2014

செல்வம்

"பிறர் கொடுப்பது நமக்கு எப்படிப் போதும்? எவ்வளவு கொடுக்கப்பட்டாலும் அது குறைவாகத்தான் இருக்கும். ஆனால்,இறைவன் நமக்கு அளிப்பதோ முடிவில்லாத செல்வம். யுகம் முடிந்தாலும் முடியாத செல்வம். என் சர்க்கார் (இறைவன்) கொடுப்பதே கொடுப்பது.மற்றவர்கள் கொடுப்பதை இதனுடன் எப்படி ஒப்பிட முடியும்?" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, November 14, 2014

நிரந்தரமாகவே உன் அருகில் இருக்கிறேன்

காமம் எழும்போது என் விஷயமாக காமப்படு.கோபம் வரும்போது கோபத்தை என்மீது காட்டு.அபிமானத்தையும்  (தேஹத்தின் மீதுள்ள பிடிப்பையும்) துராகிருதத்தையும்(உரிமை இல்லாத இடத்து வலிய நிகழ்த்தும் செயலையும்)பக்தர்கள் என்னுடைய பாதங்களை நோக்கியே செலுத்தட்டும்.
காமம்,கோபம்,தேஹாபிமானம் போன்ற இயற்கையான உணர்ச்சிகள்  பொங்கியெழும்போது என்னைக் குறியாக ஆக்கி அவற்றை என்மீது ஏவுக.
நான்(பாபா) நிரந்தரமாகவே உன் அருகில் இருக்கிறேன் என்று உன் மனம் நம்ப ஆரம்பித்துவிட்ட பிறகு,உன் மனத்தின் வேகங்களும் தீவிரமான உணர்ச்சிகளும் தாமாகவே பலமிழந்துவிடும்.காலக்கிரமத்தில் வேருடன் அறுக்கப்படும்.மனம் வேகங்களிலிருந்து விடுபட்டுவிடும்.-ஸ்ரீ சாய் சத்குருவாணி 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, November 13, 2014

நான் இருக்கிறேன் நம்புங்கள்

கர்மாவை அழிப்பது எப்படி? அதைக் கூறுகிறேன் கேளுங்கள். வருபவற்றை வரவிடுங்கள்.வருந்தாதீர்கள். என்னை ஸ்மரிப்பவர்களுக்கும் தியானிப்பவர்களுக்கும், பூஜிப்பவர்களுக்கும் அதைத் தாங்கும் சக்தியை நான் பிரசாதிக்கிறேன்.வெளிப்பார்வைக்கு நீங்கள் அதை அனுபவிப்பதாகத் தோன்றினாலும், மறைமுகமாக அதை நானே அனுபவிக்கிறேன்.இந்த உடல் சாய் பாபாவினுடையது என்று உறுதியாக நம்புங்கள்.அது போதும்.ஒரே பிறவியில் மீதமுள்ள கர்மா அனைத்தையும் அனுபவிக்கும்படிச் செய்வேன்.மிக்க விஸ்வாசத்துடன் என் நாமத்தை ஸ்மரித்து என்னையே நினைத்து கொண்டிருங்கள்.காலத்தின் போக்கு கர்மா பற்றிய சிந்தனையின்றி இருங்கள்.நான் இருக்கிறேன்! நம்புங்கள்.-ஸ்ரீ சாயி திருவாய்மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, November 8, 2014

பாக்கியம்

பாபாவின் அருகில் இருக்கும் பாக்கியம் நமக்கு கிடைக்க வேண்டும்; அதன்பிறகு,தாண்டமுடியாதது எதுவுமே இல்லை.கொஞ்சங் கொஞ்சமாக அனைத்து விஷயங்களும் ஓர் ஒழுங்கிற்கு வந்து  நிற்கும். ஓய்வெடுப்பதோ,பேசுவதோ,நடப்பதோ,எந்த வேலையை செய்தாலும் சரி,ஒவ்வொரு கணமும் அசைக்க முடியாத நம்பிக்கையை பாபாவிடம் கடைப்பிடித்தால்,பக்தன் தான் விரும்பிய மனோரதங்கள் அனைத்திலும் நிறைவு பெறுவான்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, November 5, 2014

சாய்பாபா சிலை உருவான விதம்

                             ஷீரடியில் உள்ள சாய்பாபா சிலை உருவான விதம் 

36 வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து
வந்தனர்.அப்பொழுது ஒரு நாள் இத்தாலியில் இருந்து வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது.அது அப்பொழுது எதற்கு வந்தது,ஏன் வந்தது என்று யாருக்கும் தெரியாது.அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை.உடனே துறைமுக அதிகாரிகள் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர்.இதை அறிந்த சாய் சன்ஸ்தான் அதிகாரி அதை ஏலத்தில் எடுத்து அதை பம்பாயில் உள்ள பாலாஜி வஸந்த் தாலிம்  என்னும் சிற்பியிடம் பாபாவின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை அளித்து அதே மாதிரி சிலை செய்ய கூறினார்.அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி தாலிம் மிகவும் கஷ்டபட்டார்.அப்பொழுது பாபா அவர் கனவில் தோன்றி அவருடைய முகத்தை பலவித கோணங்களில் காட்டி சிற்பியின் கஷ்டத்தைப் போக்கி அவரை உற்சாகப்படுத்தினார்.சிற்பி பின்னர் தெளிவு பெற்று மிகவும் சிறப்பாக எல்லோரும் எதிர்பார்த்தது போல் மிகவும் அழகாகச் செய்து கொடுத்தார்.பின்னர் அந்த சிலை 7ம் தேதி அக்டோபர் மாதம் 1954ம் ஆண்டு பிரதிஷ்டை செய்தார்கள்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, November 4, 2014

குருவே நம் அன்னை

குருவே நம் அன்னையும் தந்தையும்,
குருவே பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் ஆவார்!
எண்ணற்ற ஜென்மங்களில் நம்மைப் 
பாதுகாப்பவரும் போஷிப்பவரும் அவரே!
செயல்புரிபவரும்,செயல்புரிய வைப்பவரும் அவரே!
                                                                                   -ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, November 3, 2014

குருபக்தி

தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா.பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.அதை உணர மட்டுமே முடியும்.பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து,எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து,வாழ்ந்தோமானால்,நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும். 
உதாரணத்திற்கு,பாபாவின் நெருங்கிய பக்தரான சாமாவை ஒருமுறை நச்சுப் பாம்பு ஒன்று கடித்துவிட்டது.வலி கடுமையாக இருந்தது.விஷம் மெல்ல உடல் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது.சாமாவும் பயத்தில் மிரண்டு போயிருந்தார்.உடல் முழுவதும் சிவந்து போயிருப்பதைப் பார்த்த அருகிலிருந்தவர்களில்  ஒவ்வொருவரும் மருத்துவரிடமும் செல்லவும்,விரோபா கோயிலுக்கு ( பாம்பு கடித்தவர்களை இக்கோயிலுக்கு  சென்றால்,உயிர் பிழைத்து விடுவதாக ஷிர்டி மக்கள் நம்பினர்) செல்ல சொன்ன போதும் சாமா " எனக்கு எல்லாமே பாபாதான்.அவரிடமே நான் செல்ல விரும்புகிறேன்.ஒருவேளை எனது உயிர் போவதாக இருந்தாலும் அது எனது ஒரே அடைக்கலமான பாபாவின் மசூதியிலேயே போகட்டும் என்று கூறி அழுதபடி பாபா வாழ்ந்து வந்த மசூதிக்கு (துவாரகாமாயி) ஓடிச் சென்று பாபா பாதத்தில் வீழ்ந்து பணிந்தார் (உயிர் பிழைத்தார்)இதற்குப் பெயர் தான் குருபக்தி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...