Saturday, January 31, 2015

மகிழ்ச்சி அடைவீர்கள்

யாரேனும் நூற்றுக்கணக்கான விஷயங்களை உங்களுக்கு எதிராக கூறட்டும், ஆனால் கசப்பான எவ்விதத்திலும் அவர்களுக்கு பதில் அளிக்கும் படியான சீற்றங்கொள்ளாதீர்கள். இவ்வாறான விஷயங்களை எப்போதும் சகித்துக் கொண்டிருப்பீர்களேயானால் நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவீர்கள்.
உங்களிடமிருந்து என்னைப் பிரிக்கும் வேற்றுமைச் சுவரை இடித்து விடுங்கள். பின்னர் நமது சந்திப்பிற்குரிய சாலையானது தடங்கலின்றியும் திறந்தும் இருக்கும். ‘நான்’ ‘நீ’ என்ற வேறுபாட்டுணர்வே குருவிடமிருந்து சீடனைப் பிரிக்கும் தடையரணாகும். அது அழிக்கப்பட்டாலன்றி இரண்டறக் கலத்தல் அல்லது ஐக்கியமாதல் இயலாது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 15, 2015

உபதேசம் அளிக்கும் வழிகள் எண்ணிலடங்கா


ஒருவருக்கு ஒன்று, மற்றொருவருக்கு வேறு. தீஷை (உபதேசம்) அளிக்கும் வழிகள் எண்ணிலடங்கா. ஒருவரை தம்முடைய காலடியிலேயே கிடக்கச்சொன்னார். அச்சமயத்திலேயே மற்றொருவரை கண்டோபா கோவிலுக்கு அனுப்பினார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவரின் கனவிலும் தோன்றினார். அவருடைய மார்பில் அமர்ந்துகொண்டு கைகளாலும், கால்களாலும் அவரை அமுக்கினார். குடிகாரர் தம்முடைய கைகளை காதுகளில் வைத்துக்கொண்டு இனி மதுவை தொடமாட்டேனென்றும் அறவே விட்டுவிடுவேன் என்றும் சத்தியம் செய்த பின்னரே அவரை விடுதலை செய்தார்.        

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 13, 2015

எந்தத் தீங்கும் வராதுஉன்னைச் சுற்றியிருக்கிறவர்கள் திடிரென தாழும் போதும், விழும்போதும், அழும்போதும் அது அவர்கள் கர்மாவினால் வந்தது என்பதை உணர்ந்து அமைதியாக இரு. அதைப் பார்த்து நீ பயந்துவிடாதே. நான் எதுவரை உனது அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கிறேனோ, அதுவரை உனக்கு எந்தத் தீங்கும் வராது.

உன்னை நம்பி வருகிறவர்கள் யாராக இருந்தாலும் மனப்பூர்வமாக உதவி செய். திரும்ப வரும் என பலனை எதிர்பார்க்காதே. அது உனக்கு நல்லதாக இருக்கும். உன்னை அண்டியிருப்பவர்களுக்கு வஞ்சனை செய்ய நினைக்காதே. உன் மேல் பொறாமை உள்ளவர்களைப் பார்த்தும், உனக்கு விரோதமாகப் புறம் பேசித் திரிபவர்களைப் பார்த்தும் நீ பயப்படாதே.

என்னை மீறி யாரும் உனது இடத்தைப் பிடித்துக் கொள்ளமுடியாது - ஸ்ரீ சாயி தரிசனம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, January 10, 2015

மாற்றம்உங்களை இங்கு இழுப்பதற்காக கடும் முயற்சி செய்தவர் பாபா. அவர் உங்களை வெறுங்கையுடன் திருப்பி அனுப்பமாட்டார். உங்களுக்கு நன்மை செய்வதற்காகவே அவர் மெனக்கெட்டு உங்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி அழைத்து வந்திருக்கிறார்.    

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 9, 2015

அன்னதானம்


பசித்தவருக்கு  உணவு கொடுங்கள்.தாகத்தில் இருப்பவர்களுக்குத் தண்ணீர் கொடுங்கள்.உடையில்லாமல் இருப்பவர்களுக்கு ஆடைகளைக் கொடுங்கள்.அப்படிச் செய்தால் நான்  மிகவும் சந்தோஷபடுவேன்.-ஷீரடி சாய்பாபா[மாண்புமிகு மகான்கள்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 8, 2015

நிச்சயம் கிடைக்கும்உங்கள் குருவாகிய என்னிடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை, ஆழமான அன்பு கொள்ளுங்கள். இதைத் தவிர வேறுவழிபாடு வேண்டாம். குருவே கடவுள் என்பதில் உறுதியாக நில்லுங்கள்.

எதிர்ப்பதற்கு அல்ல, பொறுப்பதற்கே தைரியம் வேண்டும். உறுதியான நம்பிக்கை வேண்டும். இன்று கிடைக்கும் என்றிரு. இன்று கிடைக்காவிட்டால் நாளை கிடைக்கும் என்று எதிர்பார்த்திரு. நாளையும் கிடைக்காவிட்டால் மறுநாள் கிடைக்கும் என எதிர்பார். உனது எதிர்பார்ப்பைத் தாண்டினாலும் கிடைக்காத போது ஒருநாள் கிடைக்கும் என்றிரு. நிச்சயம் கிடைக்கும். ஸ்ரீ சாயி தரிசனம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 7, 2015

புண்ணிய பலம்
நீங்கள் தாமாக முன்வந்து பாபாவை வணங்குவதாக நினைக்கிறீரா? உண்மை அதுவல்ல, யாருடைய பாவங்கள் ஒழிந்தனவோ, யாருக்கு புண்ணிய காலம் தர ஆரம்பித்து உள்ளதோ அவர்கள் மட்டுமே பாபாவை வணங்குகிறார்கள் என சத்சரித்திரம் தெளிவாகக் கூறுகிறது.

முலே சாஸ்திரி என்ற பக்தர் பாபாவை தரிசனம் செய்ய வந்தபோது, அவரை பாபாவுக்கு அறிமுகம் செய்து வைத்த காகா சாகேப் தீட்சிதர், பின்வருமாறு பாபாவிடம் கூறினார்.

'பாபா இவர் புண்ணிய  க்ஷேத்திரமாகிய நாசிக்கில் வசிக்கும் முலே சாஸ்திரி. புண்ணிய பலத்தால் உம்முடைய திருவடிகளைத் தொழுவதற்கு இங்கு வந்திருக்கிறார்.' பாபாவை எல்லோரும் வணங்கமுடியாது என்பதற்கு இதைவிட சான்று இருக்கமுடியாது. புண்ணிய பலம் இருந்தால் மட்டுமே அவரை வணங்க முடியும். நீங்களும், நானும் புண்ணிய பலத்தைப் பெற்று இருக்கிறோம். ஆகவே பாபாவை வணங்குகிறோம்.     

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 6, 2015

சாயினுடைய கிருபை


பாபாவின் தரிசனமே ஒழுக்கத்திலும் நடத்தையிலும் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவர வல்லது. மிச்சம்மீதி இருக்கும் பூர்வஜென்மவினை துடைக்கப்பட்டு,இந்திரிய சுகங்களின் மீது விருப்பமின்மை படிப்படியாகப் படரும். சாயினுடைய கிருபைமிகுந்த பார்வை பல ஜென்மங்களாக நாம் சேமித்த பாவங்களை அளித்து, அவருடைய பாதங்கள் அழியாத ஆனந்தத்தை நமக்கு அளிக்கும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 1, 2015

புத்தாண்டு நல்வாழ்த்துகள்

சாய் பக்தர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்
1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.
2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.
3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.
5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.
6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.
7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.
9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.
10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.
11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.

பாபாவின் கருணாகடாக்ஷம் ஒன்றே போதும் !

பாபாவினுடைய கருணாகடாக்ஷமும் ஆசீர்வாதமும் பிரசாதமும் எல்லாத் துன்பங்களையும் ஒழிக்கின்றன; வேறெதுவும் தேவையில்லை ! - ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம் htt...