Friday, February 27, 2015

அரசனும் ஆண்டியும்


இன்பங்களால் பாபா உயர்ந்து போகவும் இல்லை.துரதிஷ்டங்களால் அவர் தாழ்ச்சியுறவும் இல்லை.அரசனும் ஆண்டியும் அவருக்கு ஒன்றே.அவருடைய கடைக்கண் பார்வை ஒன்றே பிச்சைக்காரனையும் அரசனாக்கும் வல்லமை படைத்தது.-ஸ்ரீ சாய் சத் சரித்திரம்


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, February 26, 2015

நம்பிக்கை வேண்டும்

விரும்பிய வேஷத்தை அணிந்து கொண்டு எங்கு நினைக்கிறாரோ அங்கெல்லாம் தோன்றுகிறார். பக்தர்களுக்கு நல்லது செய்வதற்காக எங்கெல்லாமோ அலைகிறார். பக்தருக்குத்தான் (அடையாளம் கண்டுகொள்ள) நம்பிக்கை வேண்டும். - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, February 25, 2015

குருகுருவிற்குச் சமமான தெய்வமும் இல்லை, பிதாவும் இல்லை, பந்துக்களுமில்லை, குருவிற்குச் நிகரான சுவாமியும் இல்லை. அவருக்குச் சமமான பதவியுமில்லை.

விவேகமுடையவர்களுக்கு விவேகமாயும், ஆராய்பவருக்கு ஆராய்ச்சியாயும், பிரகாசம் உடையவர்களுக்குப் பிரகாசமாயும், ஞானிகளுக்கு ஞான ரூபியாயும் உள்ளது குருவே.

சிவனுடைய கோபத்திலிருந்து காப்பாற்றக் கூடியவர் குரு. குருவினுடைய கோபத்திலிருந்து சிவன் காப்பாற்ற மாட்டார். ஆகையால் முழு முயற்சியுடன் குருவின் கட்டளையைக் கடவாமல் இருக்கவேண்டும். -குரு கீதை.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, February 24, 2015

சாய்பாபாவின் பாதங்களில் அடைக்கலம்

ஒரு மனிதன் கடலில் மூழ்கும்போது,எல்லா  தீர்த்தங்களிலும்  புனித  ஆறுகளிலும் நீராடிய  புண்ணியம் அவனை  வந்தெய்துகிறது.அதே  மாதிரியாக  ஒரு மனிதன் சாய்பாபாவின்  பாதங்களில் அடைக்கலம்  புகும்போது,அவன்  பிரம்மா விஷ்ணு மஹாதேவரையும்,பரப்பிரம்மத்தையும்  வணங்கும் பேறு  அவனுக்கு உண்டாகிறது.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, February 23, 2015

விவேகமாக செயல்படுங்கள்ஒவ்வொரு சாயி பக்தரும் தனது எண்ணம், செயல் மீது பாபாவைச் சார்ந்தே நம்பிக்கை வைக்கிறார்கள். எதைச் செய்தாலும் இதை பாபா செய்கிறார் என நம்புகிறார்கள், எதை சிந்தித்தாலும் பாபா சிந்திக்க வைக்கிறார் என்றே எண்ணமிடுகிறார்கள். அதே சமயம், சிறிது யோசிக்கவும் வேண்டும்.

பாபாவின் பெயரால் தொழில் ஆரம்பிக்கலாம், கச்சேரி நடத்தலாம் என முன் பின் தெரியாதவர்கள், அல்லது புதியதாக அறிமுகமான நபர்கள் கூறினால் எச்சரிக்கையாக இருங்கள்.

நம்முடைய ஆசையினால் நாம் ஏமாறுகிறோம், நப்பாசையினால், நிறைய கிடைக்கும் என நினைத்து இருப்பதை முதலீடு செய்வதாக நினைத்துத் தந்துவிடுகிறோம். பிறகு, பாபா பெயரில் பழியைப் போட முயற்சிக்கிறோம். எது கிடைக்கிறதோ அதுவே போதும் என நினைத்துக் கொண்டிருங்கள். விரைந்து கிடைக்க வேண்டும் என ஒரு போதும் குறுக்கு வழியை நாடாதீர்கள். உங்களைப் படைத்த சாயி தேவன், உங்களை எல்லா நேரங்களிலும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார் என்பதை அறியுங்கள்.

எறும்பின் காலில் கட்டப்பட்ட மணியின் ஓசையைக் கூட துல்லியமாகக் கேட்கிற காதுள்ள அவர், உங்கள் கூப்பிடுதலைக் கேட்க்கமாட்டாரா என்ன? பொறுமையாக இருங்கள், விவேகமாக செயல்படுங்கள்.

சீட்டுக் குலுக்கிப் போட்டு ஏமாறுவதை விட சற்று கால அவகாசம் கொடுத்துக் காத்திருந்து பார்த்தால், நமக்கு வரவேண்டியது வரும், வராமல் தட்டிப்போவது சுவடு தெரியாமல் ஓடிப் போகும்.

இனியாவது எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்களால் பாதிக்கப் பட்டவர்களுக்காக ஒரு நிமிடம் பாபாவிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவர்கள் இழந்த பொருள் அவர்களுக்கு வந்து கிடைக்கும்.   


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, February 22, 2015

பாபாவை காண முடியும் அவருடன் பேசவும் முடியும்

கடவுளைக் காண பாபா அருளியிருக்கும் 10 கட்டளைகள்

எல்லோரும் தமது வாழ்நாளிலேயே கடவுளைப் (பாபாவை) பார்க்கவும் தெளிவாக உணரவும் முடியும். அதற்குச் சில தகுதிகள் தேவைப்படுகின்றன. மனிதர்கள் அவற்றைப் பெற்றால், நிச்சயம் பாபாவை காண முடியும், அவருடன் பேசவும் முடியும். அந்த தகுதிகள் என்னென்ன?

1. முமுக்ஷை : அதாவது சுதந்திர உணர்வுடன் கூடிய இறைவனைக் காண வேண்டும் என்ற விருப்பம். மனைவி, சமூகம், உறவு, வேலை என்று ஏகப்பட்ட விலங்குகளால், தான் பூட்டப்பட்டிருப்பதாக எண்ணுகிறான் மனிதன். முதலில் இந்த தடைகளிலிருந்து விடுபட வேண்டும். தான் தடைகளாக நினைத்துக் கொண்டிருப்பவை எல்லாம் தடைகளே அல்ல என்பதை புரிந்து, பாபாவை கண்டே ஆக வேண்டும் என்ற லட்சியத்தை மேற்கொள்ளவேண்டும்.
2. விரக்தி : இந்த உலகப் பொருட்கள், புகழ், கெளரவம், ஆதாயம் ஆகியவற்றின் மீது இருக்கும் பற்றை விலக்க வேண்டும். இவை கூடவே கூடாது என்று பொருள் அல்ல. பணம், புகழ், கெளரவம், ஆதாயம் ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு அவற்றுக்காகவே உழைக்கக் கூடாது.
3. அந்தர்முக்
தா : உள்முகச் சிந்தனை. மனிதன் வெளியில் நடப்பவற்றையே எப்போதும் பார்க்கிறான். அதை விடுத்து உட்புறமாகப் பார்க்க வேண்டும். அதாவது பாபாவை சிறிது நேரமாவது தியானம் செய்ய வேண்டும் அல்லது மனதை ஒருமுகமாக நிலை கொள்ள வேண்டும்.
4. தீவினைகள் கசடறக் கழிபடுதல் : கொலை, கொள்ளை, மற்றவர்களை அழிப்பது, தீங்கு விளைவிப்பது போன்ற கொடுஞ் செயல்களை செய்யக்கூடாது.
5. உண்மை : உண்மை பேசுவது, நேர்மையைக் கடைப்பிடிப்பது, மனிதர்கள் தமக்கு தாமே நேர்மை கடைபிடிக்க வேண்டும்.
6. புலனடக்கம் : புலன் இன்பம் தருபவை ப்ரியாக்கள். ஆன்மிக வளர்ச்சி தருபவை ச்ரியாக்கள். பேராசை, அதிகப் பற்று போன்றவை புலன் இன்பத்துக்கே வழி வகுக்கும். அவற்றை விலக்கி பாபாவிடம் நாட்டம் செலுத்த வேண்டும்.
7. வைராக்யம் : மனதையும், உணர்வையும் அடக்கி ஆளுதல்.
8. தூய்மை : மனத் தூய்மை வேண்டும். மனதளவிலும் எவ்வித ஜீவ ராசிகளுக்கும் தீமை எண்ணாமை.
9. குருவின் இன்றியமையாமை : நல்ல குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் கடவுளைக் காண இயலாது. எனவே, கடவுளைக் காணவேண்டுமெனில் நல்ல குருவை நாட வேண்டும்.
10. பாபாவின் அனுக்கிரகம் : முதல் 9 கட்டளைகளையும் நிறைவேற்றினால், பாபாவின் அருள் தானாகக் கிட்டும். ஒன்பது கட்டளைகளையும் நிறைவேற்றுபவரிடம் பாபா மகிழ்ச்சியுற்று தன்னை அடைய வழிகாட்டுவார். - ஷிர்டி சாயி சந்நிதானம்.

இவ்வனைத்து கட்டளைகளையும் பெற ஒரே வழி பாபாவின் பால் சரணாகதி அடைவதே.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, February 21, 2015

எனது அற்புதங்கள்

எனது அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.எனது லீலைகளை ஆனந்தமாக பார்த்துக் கொண்டு  உட்கருத்தை கிரகிக்கும் விதத்தில் மனதைத் என்னிடம் திருப்புங்கள்.என் உதவி உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்.நான் செய்யும் உதவி அற்புதங்களாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.எனது லீலைகள் தென்பட்டுக் கொண்டிருந்தாலும் சிறிதும் விளங்காது.சிருஷ்டி தெளிவாகத் தென்பட்டுக் கொண்டிருந்தாலும்,எப்படி உண்டாக்கினார் என்பது மாத்திரம் விளங்காது.என் பக்தர்களின் ஷேமத்தை நான் காப்பாற்றி கொண்டே இருப்பேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, February 20, 2015

நீ துவாரகாமாயியின் குழந்தை

எப்போதும் திருப்தி உள்ளவனாக இரு.சஞ்சலத்திற்கோ கவலைக்கோ எப்போதும் இடம் கொடுக்காதே.நீ துவாரகாமாயியின் குழந்தை.
துவாரகாமாயியின் நிழலில் வாழ்பவர் சுகத்தையும் சாந்தியையும் அளிக்கும் சிம்மாசனத்தில் உட்கார்ந்தவர் ஆகிறார்.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, February 16, 2015

மிகப்பெரிய உதவி

 பசியாக இருக்கிறது சாப்பாடு போடுங்கள் என்று யாராவது உன் வீட்டு வாசல் முன் நின்று கேட்டால், அந்த பசிக்கிறவன் உனக்கு மிகப்பெரிய உதவி செய்வதற்காக வந்திருக்கிறான் என்பதை மறவாதே.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

மிகப்பெரிய உதவி

 பசியாக இருக்கிறது சாப்பாடு போடுங்கள் என்று யாராவது உன் வீட்டு வாசல் முன் நின்று கேட்டால், அந்த பசிக்கிறவன் உனக்கு மிகப்பெரிய உதவி செய்வதற்காக வந்திருக்கிறான் என்பதை மறவாதே.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, February 4, 2015

நான் இருக்கிறேன்

என் முன்னர் பக்தியுடன் உங்களது கரங்களை நீட்டுவீர்களேயானால், உடனேயே இரவும், பகலும் உங்களுடன் கூடவே நான் இருக்கிறேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, February 3, 2015

தர்மம்

தர்மத்தை பற்றி பாபா,நம்பிக்கையுடன் கொடுங்கள், பணிவுடன் கொடுங்கள், பயபக்தியுடன் கொடுங்கள், இரக்கத்துடன் கொடுங்கள்.தான தர்மத்தை அடியவர்களுக்கு போதிப்பதற்கும் பணத்தில் அவர்களுக்குள்ள பற்று குறைவதற்கும் அதன் மூலம் அவர்கள் மனது சுத்தமடையும்படி செய்வதற்கும் பாபா பக்தர்களிடமிருந்து தக்ஷிணையைக் கட்டாயமாகப் பெற்றார்.அனால் அதில் ஒரு விசித்திரம் இருந்தது. அதாவது தாம் வாங்கியதைப் போன்று நூறு பங்குக்கு மேலேயே திரும்பக் கொடுத்தார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, February 2, 2015

குருவின் பெருமை

குருவே தனி ஒருவரான நடத்துனர், இயக்குனர் என நம்புங்கள். தனது குருவின் பெருமையை அறிபவன். அவரையே கடவுளின் அவதாரமென்று கருதுபவன், ஆசீர்வதிக்கப்பட்டவன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, February 1, 2015

ஆசைகளைப் பூர்த்தி செய்வார்

கடவுளே சகலத்திற்கும் ஒரே உரிமையாளர் (“அல்லாமாலிக்”). வேறொருவரும் நமது பாதுகாவலரல்ல. அவர் வேலை செய்யும் முறை அசாதாரணமானது. விலைமதிக்க முடியாதது. அறிவாலறிய முடியாதது. அவரது சங்கல்பமே ஈடேறும். அவர் நமக்கு வழிகாட்டுவார். நமது உள்ளத்தின் ஆசைகளைப் பூர்த்தி செய்வார். ருணானுபந்தத்தின் (முன்ஜென்மத்தின் உறவு) மூலமாகவே நாம் இணைந்துள்ளோம். ஒருவருக்கொருவர் அன்பாயிருந்தும், சேவை செய்தும் நாம் மகிழ்ச்சியுடன் இருப்போம். எவன் வாழ்க்கையின் மிகமிக உயர்ந்த குறிக்கோளை எய்துகிறானோ அவன் இறவா புகழுடையவன். மகிழ்ச்சியுடையவன். மற்றவரெல்லாம், வெறுமனே உளதாயிருக்கிறார்கள் அல்லது மூச்சு விடும்வரை வாழ்ந்திருக்கிறார்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...