Sunday, March 22, 2015

ஒரு துரும்பும் அசையாது

எனது அருள்  பாரபட்சமற்றது.அதை நான் எல்லோருக்கும்  சமமாகவே வழங்குகிறேன். என்  சங்கல்பமின்றி ஒரு  துரும்பும் அசையாது- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா [சாயி சுதா].

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 21, 2015

நானே உனது தந்தை

எல்லா திசைகளிலும் நான் உன்னை  சூழ்ந்து நிற்கையில் நீ எதற்காக பயப்படுகிறாய்?நீ  எனது பிடியிலேயே இருக்கிறாய். நானே உனது தந்தை[பாதுகாவலன்]. உனக்கு துன்பம் நேர நான் எப்படி அனுமதிப்பேன். வெறும் தண்டத்துக்கா நான் இங்கு இருக்கிறேன்?உனது எல்லா கவலைகளிலிருந்தும் எப்படி விடுவிக்கிறேன் என்று மட்டும் பார்.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.(ஸ்ரீ சாய் சத்சரித்ர சாராம்சம்)

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 20, 2015

பாசத்தோடு நினைத்தால் போதும்

பாபாவை வணங்குபவர்களுக்கும், மற்ற கடவுள்களை வணங்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மற்ற கடவுள்களை நாம் பக்தியோடு வணங்குகிறோம். அப்போதுதான் வேண்டுதல் நிறைவேறும். பாபாவை மட்டும் பாசத்தோடு நினைத்தால் போதும். கோரிக்கை நிறைவேறும்.      

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 19, 2015

கோரிக்கைகள்

என்னை சரணாகதி அடைந்தவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறாமல் போவது என்ற பேச்சே என் சங்கல்பத்தில் இல்லை. என்னை சரணாகதி அடைந்தவர்கள், துன்பத்தில் விழும் தருவாயில் எனது நான்கு கரங்களையும் கொடுத்து அவனை மேல எழசெய்வேன். என்றும் அவனை கண் இமை காப்பது போல் காப்பேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 18, 2015

முழு நம்பிக்கையயும் வை


"இப்பாதங்கள் தொன்மையானவை,புனிதமானவை.இப்போது உனக்குக் கவலையில்லை.என் மீது முழு நம்பிக்கையயும் வை. நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை எய்துவாய்" -ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 17, 2015

உங்களுக்கு உதவுகிறேன்

கோபம்,பேராசை,காமம்,தவறான எண்ணம்,அகங்காரம்,பொறாமை என்கிற இந்த ஆறு எதிரிகளிடமும் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.பேரானந்தத்தை நீங்கள் அடைய இந்த ஆறு எதிரிகளிடமும் போராடுங்கள்.நிச்சயமாக நான் அதற்க்கு உங்களுக்கு உதவுகிறேன்.என்னை நம்புங்கள்.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[மாண்புமிகு மகான்கள்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, March 16, 2015

எப்போதும் உயிருடன் இருக்கிறேன்

என்னிடம் வருபவர்களுக்கும், என்னையே தஞ்சமாக சரணடைபவர்களுக்கும் என் உபதேசத்திற்காக, என்னிடம் தீவர நம்பிக்கை உடையவர்களுக்கும் நான் எப்போதும் உயிருடன் இருக்கிறேன். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, March 15, 2015

பாபாவின் செயல்கள் புரிந்துகொள்ளமுடியாதவை.

ஒருமுறை பாபாவை அன்புடன் நோக்கினால், அவர் ஆயுள் முழுவதற்க்கும் நம்முடையவர் ஆகிவிடுகிறார். உண்மையான அன்பைத் தவிர நம்மிடம் அவர் வேறெதையும் எதிர்பார்ப்பதில்லை. நாம் கூப்பிடும்போது காப்பாற்ற ஓடிவருகிறார். அந்நேரத்தில் காலமோ, நேரமோ அவருக்குக் குறுக்கே நிற்கமுடியாது. சதாசர்வ காலமும் அவர் நமக்குப் பின்னால் உறுதியாக நிற்கிறார். அவர் எங்கு, எவ்வாறு, எந்த விசையை இயக்குவார் என்று நமக்குத் தெரியாது. அவருடைய செயல்கள் புரிந்துகொள்ளமுடியாதவை.பாபாவின் 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 14, 2015

குரு கீதை

குரு கீதையின் (குரு சரித்திரம்) ஜபத்தால் ஒருவன் அளவற்ற பயனை எய்துவான். இது எல்லா பாவங்களையும் போக்குவது, எல்லா ஏழ்மையையும் நாசம் செய்வது. அகால மரணத்தை தடுப்பது, எல்லா சங்கடங்களையும் நாசம் செய்வது. யக்ஷர், ராட்சதர், பூதங்கள்,திருடர்கள்,புலி முதலிய பயங்களை போக்குவது.  
கொடிய குஷ்டம் முதலிய உபத்ரவங்களையும் தோஷங்களையும் நிவாரணம் செய்வது. குருவின் சந்நிதியில் என்ன பலனோ அது படிப்பதாலேயே கிட்டும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 13, 2015

இன்னல்களும் துயரங்களும் ஒழிந்துபோகும்.

 
பாபா-வின் திருவாய் முலம் உதிர்ந்த கதைகளை கேட்கவேண்டும். ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட அவருடைய லீலைகளை அனுபவிக்கவேண்டும். எத்தனை லீலைகளைச் சேகரிக்கமுடியுமோ அத்தனையையும் சேகரித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். சாயியின் அற்புதமான சரித்திரத்தை பக்தியுடன் கேட்கப்பட்டால், எடுத்துச் சொல்பவர், கேட்பவர்கள், இவர்களுடைய இன்னல்களும், துயரங்களும் ஒழிந்துபோகும்.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 12, 2015

நம்பிக்கை வை

என்மேல் நம்பிக்கை இருந்தால், என்னால் உனக்கு முடியாத காரியம் என்று எதுவுமே இருக்க முடியாது. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 11, 2015

கவசமாய் நான் இருக்கிறேன்

உங்கள் உச்சிமுதல் உள்ளங்கால் வரை கவசமாய் நான் இருக்கிறேன்.உங்கள் தொழில் எதுவானாலும் உங்கள் வேலையை என்னுடையதாக மாற்றி விடுகிறேன். பார்வையும் பார்க்கப்படும் பொருளும் நானாக இருக்கிறேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 10, 2015

உனது கர்மவினைகள் எரிக்கப்படும்

உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும். ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால், எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதைப் போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 7, 2015

நான் உன்னோடு இருக்கிறேன்

"பயப்படாதே. நான் உன்னோடு இருக்கிறேன். எப்போது எங்கே என்னை நீ நினைத்தாலும் நான் உன்னோடு இருப்பேன். பயப்படாதே, இதை நன்றாக மனப்பாடம் செய்துகொள்" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 6, 2015

பூரணமாக சமர்ப்பிப்பீர்களாக

பெருமையையும், அகங்காரத்தையும் ஒழித்து விட்டு  எள்ளளவும் அவற்றின் அடையாளம் கூட இருக்காதபடி விலக்கு. உங்கள் இதயத்தே அமர்ந்துகொண்டிருக்கிற என்னிடம் உங்களை பூரணமாக சமர்ப்பிப்பீர்களாக.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 5, 2015

என்னை முழு மனதாக நம்புங்கள்

இந்த மசூதியில் அமர்ந்து கொண்டு நான் உண்மையே பேசுகிறேன்.உண்மையை தவிர வேறெதுவும் பேசவில்லை.என்னை முழு மனதாக நம்புங்கள்.எனது பெருமையை அறிபவன்,என்னையே பிரம்மா,விஷ்ணு,சிவனாக, அல்லா, இயேசு வாகவே நம்புபவன் ஆசிர்வதிக்கப் பட்டவன்.-ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா[மாண்புமிகு மகான்கள்]
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 4, 2015

நானே நடத்தி வைக்கிறேன்

ஒருவன் தனது சுமைகளை என் மீது இறக்கிவிட்டு, என்னையே நினைத்திருப்பானாகில் நான் அவனுடைய எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்கிறேன். அவனுடைய எல்லா காரியங்களையும் நானே முன் நின்று நடத்தி வைக்கிறேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, March 2, 2015

விரும்பியதை அடைவான்

நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அதை உடனே உங்களுக்கு காட்டிக்கொடுக்கிறேன். ஆனால் என்னுடைய சொல்லுக்கு கட்டுப்பட்டவனே தான் விரும்பியதை அடைவான்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...