Thursday, April 30, 2015

எப்போதும் திறந்த கதவுகளையுடைய இடம்

மசூதிக்குத் ' துவாரகாமாயி'   என்று பாபா அளித்த பெயர், பாபா எந்த உண்மைக்காக உழைக்கிறாரோ  அதையே காட்டுகிறது. கந்தபுராணத்தில் இந்தச் சொல்லுக்குப் பொருளாக, "நான்கு வருணத்தவர்களுக்கும், நான்குவித
வாழ்க்கைப் பயன்களான  அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைப் பெறுவதற்காக எப்போதும் திறந்த கதவுகளையுடைய இடம்" என்று கூறப்படுகிறது. பாபாவின் மசூதி, யாவருக்கு திறந்தேயுள்ள காரணத்தால், அவர் கொடுத்துள்ள பெயர் மிகவும் பொருத்தமானதே.
"பொறு, உன்னுடைய கவலைகளைத் தூர எறி, உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. ஒருவன் எவ்வளவு தான் நசுக்கப்பட்டு வேதனைப்பட்டவனாக இருப்பினும், இச் மசூதியில்( துவாரகாமாயி ) கால் வைத்தவுடனே அவன் மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான்."-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 29, 2015

நீ எனக்குள் இருக்கிறாய்

 மக்கள் தாங்கள் என்னிடமிருந்து வேறுபட்டவர்கள் என்று தவறாக நினைக்கிறார்கள். நான் உனக்குள் இருக்கிறேன் ; நீ எனக்குள் இருக்கிறாய்.தொடர்ந்து இவ்விதமாகவே நினைத்துவா. அப்போது நீ அதை உணர்வாய்!- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 28, 2015

பாபாவும் அவரது படமும்பாபாவின் எங்கும் நிறைந்த தன்மை பாபாவின் படத்திற்கும் பொருந்தும். பம்பாயைச் சேர்ந்த பாலபுவா சுதார் என்பவர் புகழ்பெற்ற ஒரு மகான். அவர்  1917ஆம்  ஆண்டு, முதன்முறையாக ஷீரடிக்கு வந்து சாய்பாபாவை வணங்கினார். உடனே பாபா, அவரைப் பற்றி மற்ற பக்தர்களிடம், " இந்த மனிதனை எனக்கு நான்கு ஆண்டுகளாகத் தெரியும் " என்றார்.அது எப்படி உண்மையாக இருக்க முடியுமென்று  பாலபுவா வியந்தார். ஆனால் அதைப்பற்றி தீவிரமாகச் சிந்தித்தபோது, சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், பம்பாயில் பாபாவின் படத்துக்கு முன்னால் தாம் வணங்கியது அவருக்கு நினைவு வந்தது. இவ்வுண்மை நமக்கு எத்தகைய நம்பிக்கையையும்  உறுதியையும் அளிக்கிறது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 27, 2015

வித்தியாசம் எதுவுமில்லை

நமக்கிடையே பரஸ்பரம் தீர்த்துக் கொல்லப்பட வேண்டிய கடன்கள், ரீணானுபந்தம்  உள்ளது. பல நூற்றாண்டுகளாக இருந்து வரும், ஆயிரம் ஆண்டுகளாகவும் இருக்கலாம். கடன்களால் நாம் இருவரும்
பிணைக்கப்பட்டுள்ளோம். ஆகையால் நம்மிருவருமிடையே வித்தியாசம் எதுவுமில்லை.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, April 26, 2015

நான் உங்களுடனேயே இருப்பேன்

ஒவ்வொரு பிறவியிலும் பாபா சீடனை பின்தொடர்கிறார்.
உங்கள் முந்தைய ஜன்மங்களில் எத்துனை முறைகள் நான் உங்களுடனேயே இருந்திருக்கிறேன் ! இன்னும் எத்தனை பிறவிகளில் நான் உங்களுடனேயே இருப்பேன் !! மீண்டும் மீண்டும் நாம் சந்தித்துக்கொள்வோம்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, April 25, 2015

வல்லமை வாய்ந்தவர்

குரு அவர்கள் நினைத்தால் ஒரு நொடியில் ஏழையை பணக்காரராக மாற்றிவிடுவார்.பிரம்மா எழுதியதைக்கூட  மாற்ற வல்லமை வாய்ந்தவர் குரு மட்டுமே.-ஸ்ரீ குரு சரித்திரம்.

சாய் பக்தர்கள் தங்களை " SAIBABA TAMIL SAYINGS"  WHATSAPP  GROUP'ல்  இணைத்துக்கொள்ள  00971-558941451 என்ற எண்ணுக்கு WHATSAPP  மெசேஜ் அனுப்பவும். ஜெய் சாய்ராம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, April 24, 2015

பாபாவின் சத்சரித்திரம்

பாபாவின் சத்சரித்திரம் அழகாக சொல்லித் தருகிறது:


உன் வாழ்வில் தரித்திரம் [துன்பம்] முக்கியப் பங்கு வகிக்கிறதா? கவலைப்படாதே. ஞானியரின் சரிதத்தை ஒரு வாரத்திற்குள் படி. முழுதும் படிக்க முடியவில்லையா? குரு ராயர் தொடர்பான அத்தியாயங்களையாவது படி. அப்படி செய்தால் உன் வீட்டில் திருமகள் வாசம் செய்ய ஆரம்பித்துவிடுவாள்.

நான் ஒரு வாரம் சப்தாகம் செய்தேன்.. எதுவும் நல்லது நடக்கவில்லையே! என்கிறீரா?
நீங்கள் ஒருவாரம் படித்தபோது, திருமகள் வந்து விட்டாள். அவளைத் தக்கவைத்துக் கொள்ள நீங்கள் முன்வரவில்லை. அதனால் வந்தவள், உங்களை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டாள். அடுத்தடுத்து சுற்று என சரிதத்தை தொடர்ந்து பாராயணம் செய்பவர்களுக்கு தெய்வ அருள் நிச்சயம் உண்டு.

ராமாயணம் படிக்கிற இடத்திலெல்லாம் அனுமன் வந்திருப்பது எப்படி உண்மையோ! அப்படியே, சத்சரித்திரம் படிக்கப்படும் இடங்களில் பாபா வாசம் செய்ய வருவதும் உண்மை.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 23, 2015

முன்ஜென்ம வினை

முன்ஜென்ம வினைகளால் சுகத்தையும், துக்கத்தையும் அனுபவித்தே தீர வேண்டும். கர்மத்தை அனுசரித்தே புத்தியும் வேலை செய்யும். ஆயினும் விதியால் நிர்ணயிக்கப்பட்டதை, பாபாவின் மேல் நம்பிக்கையும், பொறுமையுமுள்ள பக்தன் சுலபமாகத் தவிர்த்து விடலாம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 22, 2015

குரு சரித்திர பாராயண மகிமை

குரு கீதையின் (குரு சரித்ரம்) ஜபத்தால் ஒருவன் அளவற்ற பயனை எய்துவான். இது எல்லா பாவங்களையும் போக்குவது, எல்லா ஏழ்மையையும் நாசம் செய்வது. அகால மரணத்தை தடுப்பது, எல்லா சங்கடங்களையும் நாசம் செய்வது. யக்ஷர், ராட்சதர், பூதங்கள்,திருடர்கள்,புலி முதலிய பயங்களை போக்குவது.  
கொடிய குஷ்டம் முதலிய உபத்ரவங்களையும் தோஷங்களையும் நிவாரணம் செய்வது. குருவின் சந்நிதியில் என்ன பலனோ அது படிப்பதாலேயே கிட்டும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 21, 2015

நான் உன்னுடனேயே இருப்பேன்

நீ எப்போதும் வாய்மையைக் கடைப்பிடிக்கவேண்டும் ; நீ அளித்த  வாக்குறுதிகள் யாவற்றையும் நிறைவேற்ற வேண்டும். விசுவாசமும் பொறுமையும் பெற்றிரு. நீ எங்கே இருந்தாலும் எல்லா நேரங்களிலும் அப்போது நான் உன்னுடனேயே இருப்பேன். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 20, 2015

நம்பிக்கை

என்மேல்  நம்பிக்கை இருந்தால், என்னால் உனக்கு செய்ய முடியாத காரியம் என்று ஏதும் கிடையாது. -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, April 19, 2015

கடமைகளை செய்

உன் கடமைகளை நீ செய், உன் கரங்களால் வேலை செய், வாயினால் பேசு, கண்களால் பார், அவ்விதமாக உன் தேவைகளை பூர்த்திசெய்துகொள். மனத்தை மட்டும் என்னிடம் லயமாக்கு. உன் சிரமத்திற்கு அதிகமாக 100 மடங்கு நான் கொடுக்கிறேன். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, April 18, 2015

என்னிடம் இழுத்துக்கொள்கிறேன்


ஒருமுறை பக்தர் ஒருவர், உலக ஆதாய நன்மையை நாடி பாபாவிடம் மக்கள் போவதை ஆட்சேபித்தபோது, பாபா "ஒருபோதும் அப்படி செய்யாதே. எனது
மக்கள் முதலில் அதற்காகத்தான் என்னை நாடி வருகிறார்கள். தமது ஆசைகள் நிறைவேறி, வாழ்க்கையில் சவுகரியத்தை அடைந்த பிறகு, அவர்கள் என்னை பின்பற்றி ஆத்மீகத் துறையிலும் முன்னேறுகிறார்கள். என்னைச் சேர்ந்தவர்களை தொலை தூரத்தில் இருந்தெல்லாம் பல்வேறுவித முகாந்திரமாக இங்கே வரவழைக்கிறேன். நானேதான் அவர்களை என்னிடம் வரவழைக்கிறேன். அவர்கள் தம் இச்சைப்படி தாமே வருவதில்லை. நான் அவர்களை என்னிடம் இழுத்துக்கொள்கிறேன்" என்றார். இச்சொற்கள் இன்றும் பலித்து வருகின்றன.    http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, April 17, 2015

விசுவாசம் அவசியமாகிறது

குரு தாமாக உனது குரு ஆகிவிடுவதில்லை.நீயே அவரை குருவாக மதிக்கவேண்டும். அதாவது அவரிடம் விசுவாசம் வைக்க வேண்டும். ஒரு ஓட்டாஞ்சில்லை எடுத்து வைத்துக் கொண்டு அதை உனது குருவாக பாவித்து வா. அப்போது  உன் இலக்கு அல்லது  குறிக்கோள் கிட்டிவிடுகிறதா இல்லையா என்று பார். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

நமக்கென நிர்ணயக்கப்பட்ட கடமையை செய்வோம். நமது உடல், வாக்கு, உயிர் முழுவதையும் எல்லாவற்றையும் வியாபித்து நிற்கும் தன்மையுடைய பாபாவிடம் அர்ப்பணம் செய்யவேண்டும். அவரிடம் விசுவாசம் வைப்பது இப்போது அவசியமாகிறது..

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sri Sai Satcharithra in Tamil-CHAPTER 1[links to complete satcharithra i...http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 16, 2015

பிராரப்தையும் மீறி பாபா புத்திரபாக்கியம் அருளுகிறார்


ஹர்தாவைச்  சேர்ந்த சிந்தே என்பவருக்கு ஏழு புத்திரிகள், ஒரு புத்திரன் கூட இல்லை.1903-ம் ஆண்டில் அவர் கங்காபூருக்குச்  சென்று ஒரு புத்திரனை வேண்டி தத்தரிடம் பிரார்த்தனை செய்து கொண்டார். 12 மாதங்களுக்குள் ஒரு மகன் பிறந்து விட்டால், குழந்தையுடன் தரிசனம் செய்ய கங்காபூருக்கு வருவதாக நேர்ந்து கொண்டார். அவருக்கு 12 மாதங்களில் மகன் பிறந்தான்; ஆனால்  அவர் குழந்தையை எடுத்துக் கொண்டு கங்காபூருக்கு  செல்லவில்லை. 1911-ம்  ஆண்டு நவம்பர் மாதம் அவர் ஷிர்டிக்கு  பாபாவிடம் வந்தார்.
பாபா : என்ன! திமிறு  ஏறி விட்டதா உனக்கு? உன் பிராரப்தத்தின்  படி (விதிப்படி)உனக்கு ஏது ஆண் குழந்தை? நான் இந்த உடலை (தமது உடலைக் காட்டி) கிழித்து உனக்கு ஒரு ஆண் மகவு அளித்தேன்.

பாபாவின் மற்றொரு அடியவரான தாமோதர ராசனே சம்பந்தப்பட்டவரை கூட, பாபா ஜோதிட பூர்வமான தடைகளையும் மீறி புத்திரப்பேறு அருளினார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 15, 2015

கவலையே வேண்டாம்

சிறிதளவும் கவலைக்கு இடம்கொடுக்காதிர்கள் எப்போதும் ஆனந்தம் நிரம்பியவர்களாக இருங்கள்.மரணம் பற்றிய கவலை வேண்டாம், கவலையே வேண்டாம்.. அனைத்திற்கும் சாட்சியாக நான் இருக்கிறேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 14, 2015

சந்தோஷத்தை அளிக்கிறார்

எனக்கு என்ன வீடா,வாசலா,குடும்பமா,குழந்தையா? நான் ஏன் தக்க்ஷினை கேட்கவேண்டும்?நான் எதையும் எவரிடமிருந்தும் பெற்றுக்கொள்வதில்லை. கடனைத் திருப்பி கேட்பவள் இந்த மசூதிமாயீ! கொடுப்பவர் தம் கடனிலிருந்து விடுபடுகிறார்.தேவைப்படும் நேரத்தில் மிகப் பணிவாகவும் இரக்கமாகவும் கெஞ்சுகிறார்கள்;காரியம் கைகூடிய பிறகு அதைப்பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. என் பக்தர்கள் எவர் கடன்பாக்கி இல்லாதவரோ அவரே எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறார்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 13, 2015

என் உதவி கண்டிப்பாக கிடைக்கும்

துன்பம் வந்தபோதும் கூட என் மீது நம்பிக்கை குறைவுபடாமல் இருந்தால் அவர்களுக்கு என் உதவி கண்டிப்பாக கிடைக்கும்.உங்கள் கர்மத்தை உங்களுக்கு பதில் நான் சுமக்கிறேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, April 12, 2015

நம்பிக்கை இழந்தவர்களுக்கு பாபா உயிரோடு இல்லை

நான் சமாதியடைந்துவிட்ட போதிலும் என்னை நம்புங்கள் என்று பாபா சொன்னார். ஆனால், சாயி பக்தர் என சொல்லிக் கொள்ளும் நம்மில் பலருடைய நிலையைப் பாருங்கள்.

இன்ப நேரத்தில் பாபா இருக்கிறார் என்றும், துன்ப நேரத்தில் பாபா என்னை கைவிட்டார். அவர் இல்லை என்றும் நினைத்துக்கொள்கிறார்கள்.

பாபா இருப்பது உண்மை என்பதில் உறுதியாக இருந்தால், எந்த நிலையிலும் அவர்கள் நம்பிக்கை இழக்கமாட்டார்கள். நம்பிக்கை இழந்தவர்களுக்கு பாபா உயிரோடு இல்லை எனபது உண்மைதான். ஏனெனில், அவர்கள் பாபாவை தங்கள் மனதிலிருந்து கொன்று விடுகிறார்கள்.

நம்பிக்கை உள்ளவர்களோ, தங்கள் துயரத்திலும் திடமாக இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள அவரையே சரணடைகிறார்கள்.

நம்பிக்கை இழக்கிற நிலை எதற்காக வருகிறது? என்பதை ஆராய்ந்து பார்த்தால், பாபாவின் உபதேசங்களை கடைப்பிடிப்பதில்லை. அவற்றை அசட்டை செய்கிறோம். மந்தமாக, உற்சாகமின்றி சோம்பியிருக்கிறோம்.   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, April 11, 2015

நான் நடத்திவைக்கிறேன்

உங்கள் செயல்களில் உங்களை விட நானே முன்னால் நிற்பேன். நீங்கள் விழிப்புணர்வு இன்றி இருந்தாலும், நான் மிகவும் விழிப்புடன் உங்களை முன் நடத்திவைக்கிறேன்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, April 10, 2015

நம்பிக்கை பொறுமை

பாபா தனது பக்தர்களிடம் நம்பிக்கை, பொறுமை என்ற இரண்டு வார்த்தைகளை எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்துவார்.
காரணம், நல்லவன் துன்பப்படும் போது, தாமாக அவனை வலியத் தேடிச் சென்று அவனுக்கு அனுக்கிரகம் செய்கிறார். இதற்காக அவர் மாறுவேடங்களில் சென்று கணக்கற்ற அற்புதங்களை திட்டமிட்டுச்செய்கிறார்.
வீட்டினுள்ளோ, வெளியிலோ, அல்லது வழியிலோ நீங்கள் எவரை எதிர்கொண்டாலும் அவர்கள் அனைவரும் என்னுடைய வெளிப்பாடுகளே.
அவர்கள் அனைவருள்ளும் நான் உறைகிறேன் (அத்:15-71) என்கிறார் பாபா. எந்த வடிவில் அவர் வருகிறார் என்பது தெரியாமலே நமக்கு நன்மை நடக்கும்.
ஏற்கனவே அவர் திட்டமிட்டு செயல்படுவதால், எந்த விக்ஷயத்திலும் அவரது பக்தன் அவசரப்படத்தேவையில்லை. பொறுமையாக அவரை நம்பிக்கொண்டிருந்தால்போதுமானது.
அவர் நினைப்பதே நடக்கும், அவரே வழியைக்காட்டுவார். நம்முடைய இனிய விருப்பங்கள் ஒரு கணமும் தாமதமின்றி நிறைவேறும் நேரம் வரும் என பாபா கூறியிருக்கிறார். அதுவரை பொறுமை காக்க வேண்டும்.
எப்பொழுது பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் பொறுமையாக இருப்பது மட்டுமே நம்மை கரை சேர்க்கும் உபாயம் என பாபா கூறியிருக்கிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 9, 2015

ஒரே தேவன்


இதர தேவதைகள் அனைத்தும் மாயை;குருவே சாசுவதமான ஒரே தேவன்.அவரிடம் விசுவாசம் செலுத்தினால்,நம்முடைய தலையெழுத்தையே மாற்றிவிடுவார்.-ஸ்ரீமத் சாயி இராமாயணம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 8, 2015

உதி விதியை மாற்றும்

துகாராம் பார்க்கு, இவர் ஷீரடியில் விவசாயம் செய்துவந்தார்.1912-ல்  ஷீரடியிலிருந்து இருபது கி.மீ. தொலைவில் கரஞ்சிகாவோன்  என்ற கிராமத்திற்குச் சென்று வேலை செய்து சம்பாதிக்கப் புறப்பட்டு விட்டார்.
அப்போதுதான் கோதாவரியைச் சுற்றியுள்ள வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்துவிட்டார்கள். அதனால் வேலை கிடைக்கும் என புறப்பட்டார்.

கோபர்கான்  சாலையில் செல்லும்போது பாபா அவரது கழுத்தில் தன்  கையைப் போட்டு, 'போகதே' என்றார். ஆனால் துகாராம்  பாபாவின் வார்த்தையை கண்டுகொள்ளவில்லை. கரஞ்சிகாவோன் வந்தார். வந்த மறுநாளே அவருக்கு காய்ச்சல் வந்தது.காய்ச்சல் நிற்கவே இல்லை.

தன் சாப்பாட்டிற்காக சம்பாதிக்க வந்தவர், தற்போது சொந்தகாரர்களை சார்ந்திருக்க வேண்டி வந்தது. பதினைந்து நாட்கள் கழித்து ஷீரடிக்கு திரும்பிவிட  நினைத்தார்.காய்ச்சல் நிற்கவில்லை. நாற்பத்தைந்து நாட்கள் தொடர்ந்து, உடனே தன்
அம்மாவிடம் சொல்லி பாபாவின் உதியை  அனுப்பச் சொன்னார்.உதியை  இட்டுக் கொண்ட மறுநாளே காய்ச்சல் முற்றிலும் நின்றுவிட்டது.
தினமும் குளித்து பின் உதியை நெற்றியில் இட்டுக்கொண்டு, கொஞ்சம் நீரில் கலந்து சாப்பிட்டால் மன உடல் நோய் நிவாரணம் தரும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 7, 2015

ஸ்ரீ சாய் சத்சரித்திரம்

பாபாவின் சத்சரித்திரம் அழகாக சொல்லித் தருகிறது: உன் வாழ்வில் தரித்திரம் [துன்பம்] முக்கியப் பங்கு வகிக்கிறதா? கவலைப்படாதே. ஞானியரின் சரிதத்தை ஒரு வாரத்திற்குள் படி. முழுதும் படிக்க முடியவில்லையா? குரு ராயர் தொடர்பான அத்தியாயங்களையாவது படி. அப்படி செய்தால் உன் வீட்டில் திருமகள் வாசம் செய்ய ஆரம்பித்துவிடுவாள்.
நான் ஒரு வாரம் சப்தாகம் செய்தேன்.. எதுவும் நல்லது நடக்கவில்லையே! என்கிறீரா?
நீங்கள் ஒருவாரம் படித்தபோது, திருமகள் வந்து விட்டாள். அவளைத் தக்கவைத்துக் கொள்ள நீங்கள் முன்வரவில்லை. அதனால் வந்தவள், உங்களை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டாள். அடுத்தடுத்து சுற்று என சரிதத்தை தொடர்ந்து பாராயணம் செய்பவர்களுக்கு தெய்வ அருள் நிச்சயம் உண்டு.
ராமாயணம் படிக்கிற இடத்திலெல்லாம் அனுமன் வந்திருப்பது எப்படி உண்மையோ! அப்படியே, ஸ்ரீ சாய் சத்சரித்திரம் படிக்கப்படும் இடங்களில் பாபா வாசம் செய்ய வருவதும் உண்மை.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 6, 2015

சாயியின் திருவிளையாடல்

D.R.ஜோஷி தேவ்காங்கர்  என்பவரது மகளான,திருமதி மலன்பாய் என்பவள் காசநோயால் துன்புற்றுக் கொண்டிருந்தாள். மருந்துகள் பலனளிக்கத் தவறவே அவளை பாபாவிடம் அழைத்துச் சென்றனர். பாபா அவளை ஒரு கம்பளியின் மேல் படுக்கும்படியும்,நீரைத் தவிர, வேறெதும்  உண்ணாமலிருக்கும்படியும் கூறினார். அவரது அறிவுரைப் படியே விழிப்புடன் நடந்துவந்த அப்பெண், ஒரு வாரகாலத்துக்குப் பின் ஒரு நாள் விடிகாலை இறந்து போனாள்.பாபா அப்போது சாவடியில் இருந்தார்.ஷீரடி வரலாற்றிலேயே முதன் முறையாக,பாபா காலை எட்டுமணி ஆகியும் சாவடியை விட்டு நகரவில்லை. அந்தப் பெண்ணின் பெற்றோர் அந்திமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது,மலன்பாய் மூச்சு விடுவதைப் போல தோன்றியது. அவள் கண்களை விழித்துப் பார்த்தாள்.பின்னர் தனது அனுபவத்தை விவரித்தாள்; "ஒரு கரும் மனிதன் என்னைத் தூக்கிச் சென்றான்.பெரும்பீதியுற்ற நான்,பாபாவின் உதவியை நாடிக்கத்தினேன்.பாபா அங்கே தோன்றித் தமது தடியை எடுத்து அவனை அடித்து என்னை அவன் கைகளிலிருந்து பிடுங்கிச் சாவடிக்கு தூக்கி வந்தார்" என்றாள்.சாவடியைப் பார்த்திராத அவள்,அதைப்பற்றி மிகச் சரியாக விவரித்தால்.அவள் உயிர் பிழைத்த அக்கணமே பாபா சாவடியை விட்டுப் புறப்பட்டு,மோசமான வசவுகளை உரத்த குரலில் கூறிக்கொண்டும்,தமது குச்சியால் பூமியை அடித்துக் கொண்டும்,அந்தப் பெண் படுத்துக் கொண்டிருந்த தீக்ஷிதரின் வாடாவை அடைந்தார்.-ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, April 4, 2015

நட்பு முறையிலான வழிபாடு

பாபாவை நண்பனாக பாவித்து பக்தி செலுத்துவது நட்பு முறையிலான வழிபாடு, இந்த வழிபாடு செய்கிறவன், தனது ஐம்புலன்களையும் அடக்கி, அவற்றை உடம்பின் செயல்பாடுகள் வழியே விடாமல் தடுத்து, மூச்சை அடக்கி, நமது உடலிலுள்ள ஆறு ஆதாரங்களையும் அறிந்து அவற்றை எழுப்பி அதனுள்ளிருந்து இறைவனை வணங்குவதாகும். சதா சர்வ நேரமும் பாபாவை நினைக்கவே கிடைத்தல் தோழமை நெறி. இது போன்று இறைவனுடைய தோழமை நெறியில் நின்றவன் அர்ஜுனன்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, April 3, 2015

தன்னை மட்டுமே நினைக்கும்படி செய்துவிடுகிறார்

பாபா யாரை எப்போது எப்படி இழுக்க வேண்டும் என திட்டமிடுகிறாரோ, அதை முடிப்பதற்காக தானே முன்கூட்டி அங்கு சென்று கவனிக்கப்படாத காட்சியாளனாக அமர்ந்து விடுகிறார். அவர் அங்கே ஆண்டுக் கணக்கில் இருந்தாலும் நாம் அவரை அடையாளம் கண்டு கொள்வதில்லை. நமக்கு விதிக்கப்பட்ட நேரம் எப்போது வருகிறதோ, அப்போது அவர் நமக்குத் தென்படுகிறார், அது மட்டுமல்ல, நம்மை பக்தனாக்கி, பித்தேற்றி எல்லாவற்றையும் துறந்து தன்னை மட்டுமே நினைக்கும்படி செய்துவிடுகிறார். -ஸ்ரீ சாயி தரிசனம்.        
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 2, 2015

தரிசனம் தருவார்

நம்பிக்கை இல்லாதவர்களுக்கு பாபா தெரிவது இல்லை. நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர் எங்கிருந்தாலும் தரிசனம் தருவார். மக்களுடைய
மனச்சாய்வு எப்படியோ அப்படியே நேரிடை அனுபவம் ஏற்படுகிறது.-அத் 43.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 1, 2015

உண்மை

நீங்கள் தாமாக முன்வந்து பாபாவை வணங்குவதாக நினைக்கிறீரா?
உண்மை அதுவல்ல. யாருடைய பாவங்கள் ஒழிந்தனவோ, யாருக்கு புண்ணிய காலம் பலன் தர ஆரம்பித்து உள்ளதோ அவர்கள் மட்டுமே பாபாவை வணங்குகிறார்கள் என சத்சரித்திரம் தெளிவாக கூறுகிறது.
சாயி தரிசனம் நம்முடைய பாவங்களையெல்லாம் நிவர்த்தி செய்து,இவ்வுலக சுகங்களையும் மேல் உலக சுகங்களையும் அபரிமிதமாக அளிக்கும் சக்தி வாய்ந்தது  என்று சத்சரித்திரம்  12-வது அத்தியாயம் கூறுகிறது.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...