Tuesday, April 28, 2015

பாபாவும் அவரது படமும்



பாபாவின் எங்கும் நிறைந்த தன்மை பாபாவின் படத்திற்கும் பொருந்தும். பம்பாயைச் சேர்ந்த பாலபுவா சுதார் என்பவர் புகழ்பெற்ற ஒரு மகான். அவர்  1917ஆம்  ஆண்டு, முதன்முறையாக ஷீரடிக்கு வந்து சாய்பாபாவை வணங்கினார். உடனே பாபா, அவரைப் பற்றி மற்ற பக்தர்களிடம், " இந்த மனிதனை எனக்கு நான்கு ஆண்டுகளாகத் தெரியும் " என்றார்.அது எப்படி உண்மையாக இருக்க முடியுமென்று  பாலபுவா வியந்தார். ஆனால் அதைப்பற்றி தீவிரமாகச் சிந்தித்தபோது, சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், பம்பாயில் பாபாவின் படத்துக்கு முன்னால் தாம் வணங்கியது அவருக்கு நினைவு வந்தது. இவ்வுண்மை நமக்கு எத்தகைய நம்பிக்கையையும்  உறுதியையும் அளிக்கிறது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நானே உடனிருந்து கவனித்துக் கொள்வேன்

" நீ என்ன செய்தாலும் அதை  நான் அறிவேன்.  உன் செயல்கள் நல்லதாகவும், உனது நடத்தை சரியாகவும் இருந்தால் உனது அனைத்து விஷயங்களையும் நா...