Sunday, May 31, 2015

பணம் ஆரோக்கியம் குழந்தைகள்

என்னிடம் வரும் எல்லா மனிதர்களும் பணம், ஆரோக்கியம், குழந்தைகள் இவைகளையே கேட்கிறார்கள். நான் என் பக்தர்களுக்குக் கொடுப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் அந்த மேன்மையான ஆத்மீக அனுபவத்தைத் தவிர, வேறு எதுவும் வேண்டாமென்று கேட்கும் மனிதன் கிடைப்பதே அரிது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, May 30, 2015

அசைக்க முடியாத நம்பிக்கை

பாபாவின் அருகில் இருக்கும் பாக்கியம் நமக்கு கிடைக்க வேண்டும்; அதன்பிறகு, தாண்டமுடியாதது எதுவுமே இல்லை.கொஞ்சங் கொஞ்சமாக அனைத்து விஷயங்களும் ஓர் ஒழுங்கிற்கு வந்து நிற்கும். ஓய்வெடுப்பதோ,
பேசுவதோ,நடப்பதோ,எந்த வேலையை செய்தாலும் சரி,ஒவ்வொரு கணமும் அசைக்க முடியாத நம்பிக்கையை பாபாவிடம் கடைப்பிடித்தால்,பக்தன் தான் விரும்பிய மனோரதங்கள் அனைத்திலும் நிறைவு பெறுவான்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, May 29, 2015

உனது கர்மவினைகள் எரிக்கப்படும்

உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும்.ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால்,எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதை போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா[ஸ்ரீ சாயி சத்சரித்திரம்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, May 28, 2015

சாய்பாபா 9 வியாழக்கிழமை விரதம்


வைதீகம், பட்டினி(விரதம்)  இவற்றுக்கு பாபா முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவர் விரும்புவது எல்லாம் தன் பக்தனிடம் உளப்பூர்வமான நம்பிக்கையை மட்டுமே.

பாபாவுக்கு பிடித்த ஒரு சிறுவன் ஒருவன் இருந்தான். அவனது முதல் ஆண்டு பிறந்தநாள் விழா மாதவராவ் தேஷ்பாண்டே வீட்டில் சிறப்பாக நடந்தது. இந்த விழாவுக்கு பாலா சாகேப் பாடே என்ற பாபா பக்தரும் அழைக்கப்பட்டிருந்தார். அவர் வர இயலாமையைத் தெரிவித்துவிட்டு, பாபாவை பார்க்கச் சென்றிருந்தார்.
"பிறந்தநாள் விழா விருந்தில் சாப்பிட்டாயா? என்று கேட்டார் பாபா." இன்று வியாழக் கிழமை ஆதலால் நான் சாப்பிடவில்லை! என்றார் பாலா சாகேப்.
"இருந்தால் என்ன?" என்றார் பாபா. "குருவுக்கு உகந்த நாட்களில் நான் வெளியே சாப்பிடுவதில்லை. அது என் வழக்கம்!" என்றார் பாலா சாகேப்.
"யாரை திருப்திப்படுத்த இந்த விதி?" என்று பாபா கேட்ட போது, "தங்களைத் திருப்திப்படுத்தவே !" என்றார் பாலா சாகேப்.
"அப்படியானால் நான் சொல்கிறேன், மாதவராவ் அளிக்கும் விருந்தில் சாப்பிடு!" எனக் கூறி திருப்பி அனுப்பினார். பாலா சாகேப் விருந்துக்கு வந்து சாப்பிட்டார். 
நான் உன்னோடு தானே இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு.

பாபாவின்  மிக நெருங்கிய பக்தர்களில் ஒருவரான தத்யா என்பவர், மிகவும் வைதீகமானவர். முறையாகத் தவறாமல் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர். ஆனால், பாபாவிடம் வந்த பிறகு, பாபா, விரத நாட்களில் தின்பதற்கு எதையாவது தந்து கொண்டேயிருந்ததால், அவர் பட்டினி இருப்பதை நிறுத்த வேண்டியதாயிற்று. மனுதர்ம சாஸ்திரம் போன்ற சட்ட நூல்கள் கூட, சாஸ்த்திரங்களுக்கும் பரிபூரணமடைந்த ஞானி ஒருவரின் சொற்களுக்கும் முரணிருக்குமாகில், ஞானியின் சொற்களே ஏற்கப்பட வேண்டுமென்றுதான் கூறுகின்றன.

பொதுவாக சாய்பக்தர்கள் தங்கள் விருப்பம் நிறைவேற 9 வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து அவரை பூஜித்து வழிபடுவார்கள். இந்த விரதத்தை ஏதாவது ஒரு வியாழக்கிழமை தான் தொடங்குவார்கள். 
எனவே உங்களது மேலான லட்சியம் நிறைவேற இன்று நீங்கள் 9 வார சாய்பாபா விரதத்தைத் தொடங்கலாம். இது நல்ல வாய்ப்பு. அதிர்ஷ்டமான வாய்ப்பு. சாய்பாபா ஒரு போதும் பட்டினியாக இருந்ததில்லை. மற்றவர்களையும் பட்டினியாக இருக்க விட்டது இல்லை. எனவே பட்டினி கிடந்து 9 வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். 
அதற்கு மாறாக 9 வியாழக்கிழமைகளிலும் சாய்பாபா கதை படித்தும், அற்புதங்களை வாசித்தும் விரதம் இருக்கலாம். "சாயி சாயி" என்று அவரது நாமத்தை தொடர்ந்து உச்சரிக்கலாம். அது ஆறு கடலுடன் இரண்டற கலந்து விடுவது போல உங்களை சாய்பாபாவுடன் இரண்டற கலந்து விடசெய்யும். ஜெய் சாய்ராம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, May 27, 2015

பாபா அன்றும் இன்றும் ஜீவுடனேயே விளங்குகிறார்

"ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பதற்காக, நான் ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் செல்ல வேண்டியவனாக உள்ளேன்.என்னை நினைவில் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.  எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, இரயிலோ, அல்லது விமானமோ தேவையில்லை.  என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம் ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துகொள்கிறேன் "- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. 
பாபா தமது உடலில் இருந்த போதும், உண்மையில் அவர் உடலில் கட்டுண்டு இருக்கவில்லை. அவர் எல்லா இடங்களிலும் எல்லா உருவிலும் இருந்தார். பாபா அன்றும் இன்றும் ஜீவுடனேயே விளங்குகிறார். ஆனால் நம்மிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலையில்தான். இன்றும்கூட அவர் மீண்டும் தமது பக்தர்களுக்கு முன் தோன்ற முடியும் ; தோன்றுகிறார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, May 26, 2015

பாபாவும் தத்தாத்ரேயரும் ஒருவரே

பாபாவின் மஹாசமாதிக்கு நீண்டகாலத்துக்குப் பின் நிகழ்ந்தது (1918இல்). ரயில்வே இலாக்காவில் குமாஸ்தாவாக இருந்த விநாயக் தாஜிபாவே என்பவர், தமக்கு ஒரு குரு கிடைக்கவேண்டுமென்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். எனவே, அவர் இவ்விஷயத்தில் விரைவில் பலன்தரக்கூடிய 'குருகீதை' பாராயணத்தைத் தினமும் பக்தியோடு செய்ய தொடங்கினார். ஒரு மாதத்துக்குப் பின் ஒரு வியாழக்கிளமையன்று அவர் தத்தரின்  கோவில் ஒன்றுக்குச் சென்றார். ஆனால் அங்கே தத்தரின் விக்ரஹத்துக்குப் பதிலாக, ஒரு சமாதியைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். மறுநாள் காலை அவர் முதன்முறையாக, ஸ்ரீ தாபோல்கர், சாயிபாபாவைப் பற்றி எழுதிய புத்தகத்தைப் பார்க்கும்படி நேரிட்டது. அதில் சாயிபாபாவின் சமாதியின் படத்தைக் கண்டார். உடனே, தாம் தத்தருடைய கோயிலில் கண்ட அதே சமாதி தான் என்பதை அறிந்து, சாயிபாபாதாம் தமது குரு என்பதையும் புரிந்து கொண்டார். சிறிது காலம் அவர் பாபாவின் உதியை உபயோகித்தும், அவரைப் பற்றிய புத்தகங்களைப் படித்தும் வந்தார். கொஞ்ச காலத்துக்குப்பின் சமாதி குருவாக இருக்க முடியாது என்றும்,நேரில்  பேசமுடிகின்ற, உயிரோடு உள்ள குருவுக்கு அது எவ்விதத்திலும் ஈடாகாது என்றும் அவருக்குச் சந்தேகம் எழுந்தது. எனவே, மீண்டும் குருகீதையை ஒரு வாரத்துக்குப் பாராயணம் செய்தார். அப்போது கேட்கான்பெட் என்னும் இடத்தைச் சேர்ந்த நாராயண மஹராஜ் என்ற பெரும் மஹான்  அவரது கனவில் தோன்றினர். அதிலிருந்து நாராயண மஹராஜ் தான் தமது குரு என்று ஊகித்து அவர் கேட்கான்பெட்டுக்குச் சென்றார். அங்கே ஸ்ரீ நாராயண மஹராஜ் அவரது கனவில் தோன்றி, "நானும் சாயிபாபாவும் ஒருவரிலிருந்து மற்றவர் வேறுபட்டவர் அன்று. நீ ஏன் அங்கே செல்லவில்லை? " என்று கேட்டார். இவ்வாறு உறுதியானவுடன், தாஜிபாவே சாயிபாபாவைத் தம் குருவாக ஏற்றார்.  
        1900 ஆம் ஆண்டு, நானா சாஹேப் சந்தோர்க்கரின் நெருங்கிய உறவினரான பாலாசாஹேப் பின்னேவாலா என்பவர், சாயிபாபாவைக் காணச் சென்றார். அவருக்குப் பாபாவிடம் நம்பிக்கை இல்லை. நானாசாஹேப்பைத் திருப்திபடுத்துவதற்காகவே அவர் அங்கே சென்றார். அவர் தத்தாத்ரேயரைப் பூஜிப்பவர். அவர் சாயிபாபவைத் தரிசித்தபோது, பாபா தத்தரின்  மூன்று தலைகளோடு காட்சி கொடுத்தார். உடனே சாயிபாபா தத்தரே என்று உறுதியடைந்த பாலா சாஹேப்,தமது இறுதிக்காலம் வரை பாபாவின் திடபக்தராக இருந்தார்.  பாபாவும் தத்தாத்ரேயரும் ஒருவரே என்ற உண்மையைச் சந்தேகத்துக்கிடமின்றி இந்த நிகழ்வுகள்  நிலை நாட்டுகிறது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, May 25, 2015

நான் உன்னுடன் இருப்பேன்

சாய்பாபாவின் கூற்றுப்படி, அவருடைய குரு ( இந்தப் பிறவியிலோ,  முற்பிறவியிலோ யாரறிவார்! ) பாபா எங்கிருந்தாலும் அவருடன் தாம் இருப்பதாக வாக்களித்துள்ளார். சாய்பாபாவும் அம்முறையையே  தம் பக்தர்களிடம் கடைபிடித்துள்ளார். அவர் கூறியுள்ளார்;
"எப்பொழுது எங்கே நீ என்னை நினைத்தாலும் நான் உன்னுடன் இருப்பேன்."

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, May 24, 2015

பக்தரின் நலன் உணர்ந்து செயல்படும் பாபா

                   பக்தரின்  நலன் உணர்ந்து  செயல்படும் பாபா

எல்லாம் வல்ல சக்தி படைத்த பாபா, தாங்கள் விரும்பியதை எல்லாம் செய்வார்  என்று, பாபாவைப் போன்ற தெய்வீக மனிதரின் பக்தர்கள் தவறாகக் கருத இடமுண்டு. பாபாவின் மேலான அறிவுக்கு, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தைக் காட்டிலும் சிறந்த முடிவுக்கு வரமுடியும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 1915ஆம் ஆண்டில் காசநோயால் துன்புற்றுக் கொண்டிருந்த ஹார்தவைச் சேர்ந்த தனவந்தரான ஒரு கிழவர், ஒரு பெண்மணியுடன் ஷீரடிக்கு வந்தார். முதல் மாதத்தில் அவரது உடல்நிலை ஓரளவு படிப்படியாகத் தேறி வந்தது. ஆனால் அதன்பிறகு திடீரென்று உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. அவரது முடிவு நெருங்கிவிட்டது போல் தோன்றவே, பேராசிரியர் நார்கேயை உதியை  பெறுவதற்காக அனுப்பினார். பாபா அவரிடம், அந்த மனிதர் உலகத்தை விட்டுச் செல்வதே அவருக்கு நன்மையை அளிக்கும் என்று கூறி, "உதியால்; அவனுக்கு என்ன பயன்? ஆனால் அவர்கள் கேட்டதால் உதியை எடுத்துச் செல்" என்றார். பேராசிரியரிடம் கூறியதையே, ஆனால் மறைபொருள் தரும்வகையில் ஷாமாவிடமும் பாபா கூறினார். "அவர் எப்படி இறக்க முடியும்? காலையில் அவர் மீண்டும் பிழைப்பார்" என்றார்.
                                      அந்த வயதான மனிதர் பிழைத்து விடுவார் என்று இதற்குப் பொருள் கொண்டுவிட்டனர். இரண்டாவது வாக்கியத்தில் மறைந்துள்ள எச்சரிக்கையை ஒருவரும் கவனிக்கவில்லை. அந்த மனிதர் இறந்துவிட்டார். பாபா தங்களுக்கு தவறான நம்பிக்கையை ஊட்டியதாகப் பக்தர்கள் கருதினர். சிறிது காலத்துக்குப்பின் கிழவரின் உறவினர் ஒருவர் கனவில் பாபாவை கண்டார். அவர் இறந்துபோன மனிதருடைய நுரையீரல்களைத் திறந்து காட்டினார். அவை அழுகிய நிலையில் இருந்தன. "இவை அளிக்கும் கொடிய துன்பத்திலிருந்து அவனைக் காத்தேன்" என்றார் பாபா. அதன்பிறகு, இறந்த கிழவரின் உறவினர்கள் மீண்டும் ஷீரடிக்கு வரத் தொடங்கினர்.ஏனெனில் துன்பப்படுபவருக்குத் தகுந்தது என்றும், நலமளிக்கக்கூடியது  என்றும் பாபா கருதினால், பாபா எத்தனையோ பேருக்குக் குணமளித்திருப்பதை  அவர்கள் அறிவர்.ஒருவரைக் குணப்படுத்துவதா வேண்டாமா என்று தீர்மானிக்க அதுவே அளவுகோலே தவிர, மற்ற உறவினர்கள் அந்த நோயாளியின்மேல் வைக்கும் பற்று  அளவுகோல் அன்று. பாபா ஒருவரது இறந்த காலத்தைப் பற்றி நூறு பிறவிகள் வரை அறிவார்;அதனால் அவரது இன்ப துன்பங்களுக்கான   காரணத்தையும் வெகு நுட்பமாக அறிவார். ஆண்டவனின் தீர்ப்பையும் அதிகமாக மீறாமல் தமது பக்தர்களுக்கு எது மிகச் சிறந்ததோ, அதையே பாபா அளித்தார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, May 23, 2015

நானே அளிப்பேன்

என் பக்தன் எப்படி இருந்தாலும்,நல்லவனோ கெட்டவனோ,அவன் என்னுடையவன்; அவனுக்கு தேவையானவை எல்லாம் நானே அளிப்பேன். அவனுக்கும் எனக்குமிடையே பேதம் எதுவுமில்லை. இப்போது அவன் பொறுப்பு முழுவதும் என்னிடமே உள்ளது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, May 22, 2015

குருவின் அழைப்பு

                                                   குருவின் அழைப்பு 

முடிவான ஆத்மானுபூதியை அடைவதற்காக, ஒரு குருவை அடைவது அவசியம் என்று பெரும்பான்மையான இந்து மத நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட மகான், தகுந்த குருவா அல்லவா என்பதை எப்படி அறிந்து கொள்ளுவது?  நாம் குருவைத் தேடி அலைய வேண்டாமென்றும், தக்க சமயத்தில் அவரே நம்மிடம் வருவார் என்றும் கபீர் கூறுகிறார். பகவான் ரமண மகரிஷியும், பன்முறை தம் பக்தர்களிடம், கடவுள், குரு, ஆத்மா ஆகிய யாவும் ஒன்றே என்பது உண்மையானாலும், சாதகன் ஒருவனுக்கு மனித உருவில் குரு தேவையாயிருக்கும் போது, இறைவனே அவனுக்கு அவ்வுருவில் காட்சியளித்து, அவன் மனத்தை உண்முகமாக்குகிறார் என்று கூறியுள்ளார்.
             சாய்பாபா, மனித உருவிலுள்ள குருவாயிருந்து, சாதகரைத் தம்மிடம் வரவழைத்துக் கொண்ட எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. எனினும் ஒரு சத்குருவை அடைந்த ஒவ்வொருவரும் இந்தப் பிறவியிலேயே பூரணத்துவம் அடைவார்கள் என்று நினைத்துவிடக்கூடாது.ஒவ்வொருவரும் தத்தமது பக்குவத்திற்கும், ஆழ்ந்த உள்ளார்வத்திற்க்கும்  தக்கவாறே பலன் அடைவார்கள். அவர்களில் பெரும்பாலோர் உள்வளர்ச்சி  பெற்ற பிறப்புக்களை அடைகிறார்கள். ஒவ்வொரு பிறவியுளும்  சத்குரு, மேலும் உயர்ந்த நிலைக்கு அவர்களைத் தூக்கி விடுகிறார். சிலருக்கு  இந்த வளர்ச்சி அவர்களாலேயே வெளிப்படையாக அறிந்து கொள்ள முடியாததாக இருக்கலாம்.- ஆச்சார்யா E .பரத்வாஜா .

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, May 21, 2015

மாறாத நம்பிக்கை

எந்த வித சம்பிரதாயமான பூஜை முறைகளையோ,விரதங்களையோ எனது பக்தனிடமிருந்து நான் எதிர்பார்ப்பது இல்லை.எந்த சூழ்நிலையிலும் என்மீது மாறாத நம்பிக்கை வைத்திருப்பவனையே மிகவும் நேசிக்கிறேன்.-ஷீரடி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, May 18, 2015

சவுக்கடி படுவான்

எவன் தன் கவனத்தை என் மீது திருப்புகிறானோ, அவன் எந்த சங்கடமும் படமாட்டான். ஆனால் என்னை மறந்துவிடுபவன் மாயையிடம் இரக்கமின்றிச் சவுக்கடி படுவான். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, May 17, 2015

பக்தர் பந்காராவின் அனுபவம்.

 சாய்பாபா,  தாம் தமது கல்லறைக்குள்ளிருந்தும் கூடச் செயல் புரிவார்  என்று, நமக்கு உறுதியளித்திருந்தார். பகவான் ரமண மஹரிஷி கூறியபடி, ஆத்மானுபூதியடைந்த  மஹானான  ஒரு சத்குருவிடம் கொள்ளும் தொடர்பு, அவரது பூத உடல் மறைந்த பின்னும் தொடர்கிறது. இன்று, இந்நாட்டில் சாயிபாபா பக்தி இவ்வளுவு தூரம் பரவி இருக்கிறதென்றால், அதற்குப் பேசியும் நடமாடியும் வரும் அவரது கல்லறையின் செயலே காரணம். 

பாபாவின் பக்தர் பந்காராவின் அனுபவம்.

திரு. பங்காரா என்ற டெல்லிவாசி, எல்லா மகான்களிடமும் பக்தி செலுத்தும் பண்பைப் பெற்றிருந்தார். ஆனால் மிகவும் பழைய பழக்க வழக்கங்களில் ஊறிய அவரது மனைவிக்கு அத்தகைய நம்பிக்கை இல்லை. 1956ஆம் ஆண்டு அவருக்குச் சாய்பாபாவின் படமுள்ள ஒரு காலண்டர் கிடைத்தது. பாபாவின் மேல் விசேஷ பக்தி என்று எதுவும் இல்லாமல், அதை அவர்கள் தங்கள் படுக்கை அறையில் மாட்டி வைத்தனர். ஒருநாள் அவர் படுக்கை அறையிலிருந்து வெளியே வரும்போது, காலண்டரில் இருந்த மகானை வணங்கி, அவரது பாதங்களைத் தொடும்படி திடீரென்று ஒரு உந்துதல் ஏற்பட்டது. அதைப்பற்றி தம் மனைவியிடம் தெரிவித்தால், வீணாக விவாதம் வளரும் என்று அஞ்சியவராக, அவர் அதைத் தம் மனைவியிடம் தெரிவிக்கவில்லை. மறுநாள் காலை, அந்தப் படத்திற்கு மாலை அணிவிக்கப் பட்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தார்.அவரது மனைவி, தான் வீட்டில் இருந்த படங்களை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, படுக்கை அறையிலிருந்து ஒரு மர்மமான குரல், "குழந்தாய், எனக்குத்  தவறாமல் மாலை அணிவிப்பாய், உனக்கு நன்மை உண்டாகும் " என்று கூறுவதைக் கேட்டதாகவும் , இருமுறை இச் சொற்களைக் கேட்ட அவள், தன்னை அறியாமலேயே, அதன்படி செய்ததாகவும் கூறினாள். திரு. பந்காராவின் நண்பர் ஒருவர், அவரது அனுபவங்களைக் கேட்டு, பாபாவின் படத்துக்குச் சட்டம் (FRAME) இட்டு, ஒரு வியாழக்கிழமையன்று, அவர்களது பூஜையறையில் வைத்துக் கொள்ளும்படி கூறினார். அவர் அவ்வாறே செய்ய, அவரது மனைவி அதற்கு நாள்தோறும் மாலையிடுவது வழக்கமாயிற்று.
                                ஒரு நாள் பாபாவின் படத்திலிருந்து, அவளது ஆசை என்ன என்று கேட்கும் குரலை அவள் கேட்டாள். தன்  கணவன் நலமாயிருக்க வேண்டும் என்ற தன முதல் ஆசையையும், பின்னர் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்ற இரண்டாவது ஆசையையும் தெரியபடுத்தினாள். சாயியின் பூஜை தொடங்கிய ஒரு வாரத்தில் வீட்டின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் கண்டது.  திரு.பந்காராவிற்கு ஊதிய உயர்வும் கிடைத்தது. 1957ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்  திரு.பந்காராவுக்கு ஒரு மகன் பிறந்தான்.  
 பங்காரா குடும்பத்தினருக்கு எந்தவிதப் பிரச்சினை ஏற்பட்டாலும், அவர்கள் பாபாவிடம் பிரார்த்தனை செய்தவுடன்,பொருத்தமான தீர்வு அவர்கள் மனதில் உதிக்கும். பாபாவின் அருளால் அவர்கள் எண்ணியதெல்லாம் நிறைவேறி வந்தது.
எங்கெல்லாம் பாபாவின் படம் இருக்கிறதோ, அங்கே பாபா வாசம் செய்கிறார்.
பாபாவை நேரிலே தரிசிப்பதற்கும் அவரின் படத்தை தரிசிப்பதற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை.

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, May 16, 2015

குருவிடம் திடமான பக்தி

அறியாமையினால் உனக்கு குருவிடம் திடமான பக்தி ஏற்படவில்லை. குருவை முழுமையான நம்பிக்கையோடு பக்தியுடன் சேவிப்பவர்களுக்கு அவரின் கருணை மழை தெரியும். அப்படி சேவிக்கும்  பக்தனின் கூடவே இருந்து காப்பாற்றுவதே அவரின் தர்மம். அவர்களின் துயரங்கள் தீர்ந்து வேண்டியது நிறைவேறும். சிந்தாமணி நாம் வேண்டியதை தான் கொடுக்கும். ஆனால், குருவின் அருளோ நமக்கு என்னென்ன தேவையோ,எது நன்மைகளோ அவை எல்லாம் நாம் கேட்காமலேயே கொடுக்கும்.- ஸ்ரீ குரு சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, May 15, 2015

குருவின் அருள்

பக்தவத்சலனான சத்குரு தன் கிருபையை எல்லா உயிர்களிடமும் எப்பொழுதும் பொழிவார் ! அவரைச் சேவித்தும் உன் துன்பங்கள் தீரவில்லை என்றால் உனக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை. உன் மனதில் அவரை  சந்தேகிக்கிறாய். முழுமையான, உண்மையான பக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு குருவின் அருள் பூரணமாக கிடைக்கும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, May 14, 2015

குரு கடாக்ஷம்

தீட்சை பெறுபவர்களுக்கு பாபா செவி வழியே மந்திரோபதேசம் செய்ததில்லை. ஆயினும் ஜபம் செய்ய ராமநாமத்தை பலருக்கு ( உதாரணமாக திரு. மொரேச்வர் பிரதான்) எடுத்துக் கூறினார்.

" எங்கள் வழிமுறை தனிப்பட்டது. இதை நினைவில் கொள்ளுங்கள். ஆத்மா ஞானம் பெற, மனத்தை ஒடுக்கி சமாதி நிலைக்கு இட்டுச் செல்லக்கூடிய தியானம், ஆத்மானுஷ்டானம் அவசியமானது. ஆகவே எல்லா ஆசைகளையும் விடுத்து எல்லோரிடமும் உள்ள இறைவனை உங்கள் மனதில் காணுங்கள். இவ்வாறு மனம் ஒருமுகப்படுதப்பட்டால்  இலட்சியத்தை அடைந்து விடலாம்.
என்னை இந்த உருவத்துடனோ அல்லது நிராகாரமாகவோ, ஆனந்த வடிவாக தியானம் செய்யுங்கள், நிராகர தியானம் சாத்தியமில்லை எனில், இங்கே நீங்கள் காணும் என்னுடைய இந்த உருவத்தை தியானம் செய்யுங்கள். இரவும் பகலும் அதையே எண்ணுங்கள். அத்தகைய தியானத்தால் மனம் லயம் பெறுகிறது. செயல்புரிவதற்குள்ள பேதம், (அதாவது உனக்கும் எனக்குமிடையே உள்ள வேற்றுமை), தியானம் என்ற செயல் எல்லாம் மறைந்துவிடும். சீடனுக்கு குரு கடாக்ஷம் ஒன்றே உண்ணும் உணவும் பருகும் நீரும்."
.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, May 13, 2015

எதைப் பற்றியும் அஞ்ச வேண்டாம்

ஆத்மானுபூதி ஆண்டவனின் அருளால் ஏற்படுகிறது என்றாலும், முயற்சி இல்லாவிடில் அருள் என்பது தானாகவே ஏற்படாது. சாய்பாபா ஒவ்வொருவரையும் ஆத்மீக சாதனைகளில் ஈடுபட்டு இயன்ற அளவு முயற்சி செய்யும்படிச் சொல்வார். அவரது போதனைகளின் வகைகளைத் தொகுத்து, அவரது சரித்திரத்தை முதலில் எழுதிய ஹேமத்பந்தின் சொற்களைக் காண்போம்.

"பிறப்பு இறப்பாகிய சுழற்சிகளைக் கடக்க விரும்புபவர், அடங்கிய மனத்தோடு நேர்மையான வாழ்க்கை வாழ வேண்டும். பிறரைப் புண்படுத்துமாறு கொடிய மொழிகளைப் பேச கூடாது. எப்போதும் நல்ல செயல்களிலேயே ஈடுபட்டுத் தன் கடமைகளைச் செய்து முழுமையாக ஆண்டவனைச் சரணடைய வேண்டும். பிறகு அவர் எதைப் பற்றியும் அஞ்ச வேண்டாம். எவர் ஒருவர் ஆண்டவனைப் பூரணமாக நம்புகிறாரோ, அவரது லீலைகளையே கேட்டும் சொல்லியும் வருகிறாரோ, வேறு எதைப் பற்றியும் நினையாமல் இருக்கிறாரோ அவர் ஆத்மானுபூதி அடைவது நிச்சயம்."

பாபா அநேகம் பேரிடம் தம் நாமத்தை நினைக்கும்படி கூறினார். ஆத்மானுபூதி அடைய விரும்பியவர்களுக்கு அவர் சிரவணத்தையும் மனனத்தையும் (குருவின் போதனைகளைத் தொடர்ந்து சிந்தித்தல்) சிபாரிசு செய்தார். மற்றும் சிலரிடம் ஆண்டவனின் நாமத்தை நினைக்கும்படி கூறினார். மற்றும் சிலரிடம் அவரது லீலைகளைக் கேட்கும்படியும் சிலரிடம் அவர் பாதங்களை வழிபடும்படியும் கூறினார். சிலரைத் தம் பாதங்களுக்கருகிலேயே அமரும்படிச் செய்தார். சிலரை அத்யாத்ம இராமாயணம், குருச்சரித்ரம் முதலிய புனித நூல்களை படிக்கும்படிச் செய்தார். அவர் அறிவுரை அளிப்பதிலும் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. சிலருக்கு அவற்றை நேரிலேயே அளித்தார். மற்றும் சிலருக்குக் கனவில் அளித்தார். அதிகமாகக் குடித்து வந்த ஒருவரின் கனவில் தோன்றி, அவரது மார்பில் அமர்ந்து அவரைப் பலமாக அழுத்தி, இனிமேல் குடிப்பதில்லையென்று வாக்குறுதி கொடுத்தபின்பே அவரைவிட்டார். அவரது எல்லா முறைகளைப் பற்றியும் விவரிப்பதென்பது இயலாத செயல். சாதாரண விஷயங்களில் அவரது செயல்களே தக்க உதாரணங்களாக உள்ளன....

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, May 12, 2015

பாபாவை பிராத்தனை செய்யுங்கள்.


நானா சாஹேப் பாபாவின் மிகப்பெரிய பக்தர்; ஒருமுறை அவருக்கு முதுகுப்புறம் ஏற்பட்ட கட்டியின் காரணமாக அறுவை சிகிச்சை செய்தாகவேண்டும் என்று டாக்டர்கள் குழு தெரிவித்தது. அவரும் அவ்வாறே தயாரானார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த நாளில்; அவர் இருக்கும் அறையின் மேல்தளத்தின் ஓடுகள் சரியத்தொடங்கின, அதில் ஒரு கூர்மையான ஓடு மிகச்சரியாக குப்புறப்படுத்துக் கொண்டிருந்த நானாவின் முதுக்கட்டியின் மீது சரக்கென்று விழுந்து, சிதைத்தது. வழியால் துடித்தார் நானா. டாக்டர்கள் அதிர்ந்து போனார்கள்.

கட்டி உடைந்து, ரத்தமும், சீழுமாய் வெளியேறிற்று. டாக்டர்கள் அவசர அவசரமாய் நானாவை சோதித்தார்கள். என்ன ஆச்சரியம்! அறுவை சிகிச்சையே செய்யவேண்டாம் என்று சொன்னது மருத்துவக் குழு.  அத்தனை அற்புதமாக ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆம். ஏழெட்டு டாக்டர்கள் உத்திரவாதம் தராமல் செய்வதாக இருந்த அறுவை சிகிச்சையை, உத்திரத்திலிருந்து விழுந்த ஒரு ஓடு செய்துவிட்டது!

சில நாட்கள் சென்றன. நானா  சாஹேப் பூரண குணமடைந்ததும் பாபாவைக் காணச் சென்றார்.

"வா-வா .." என்று அவரை அழைத்த சாயிபாபா, தன் ஆட்காட்டி விரலை நானா சாஹேப் முன்னால் நீட்டினார். ஒன்றும் புரியாமல் பார்த்தார் நானா. பாபா புன்னகைத்தார். "என்னப்பா, என்னிடம் நீ சொல்லாவிட்டால் எனக்குத் தெரியாதா என்ன? இதோ என் ஆட்காட்டிவிரலால் கூரையிலிருந்து ஓட்டினைத் தள்ளி, உனக்கு சிகிச்சை செய்ததே நான்தான்!" என்று புன்னகைத்தார் ஷிர்டி சாயிபாபா.

பரவசத்தில் நெகிழ்ந்து போனார் நானா சாஹேப்.

ஆமாம். உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் பாபாவை பிராத்தனை செய்யுங்கள். நீங்கள் பிராத்தனை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, பாபா உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார், உங்கள் மேல் அக்கறையுடன்தான் இருக்கிறார் என்பதை மட்டுமாவது நம்புங்கள்.உளமார நம்புங்கள். அப்புறம் பாருங்கள், உங்கள் வாழ்வில் நடக்கும் அற்புதங்களை! நம்பவே முடியாத ஆச்சர்யங்களை. ஆமாம் அதுதான் பாபா. 

.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, May 11, 2015

துவாரகாமாயி

மசூதி (துவாரகாமாயி) மிகவும் பழையதாகவும் பாழடைந்த மண் கட்டிடாமாகவும் இருந்தது. அடிக்கடி கூரையிலிருந்து கற்களும் மண்ணும் உதிருவது வழக்கம். ஒருநாள் பாபா சில பக்தர்களுடன் பகலுணவு உண்டு கொண்டிருந்தார். தலைக்கு மேல் ஏதோ இடிவது போன்று சத்தம் எல்லோருக்கும் கேட்டது. உடனே பாபா தம் கையை உயர்த்தி "இரு, இரு" என்றார். உடனே சத்தம் நின்று விட்டது. எல்லோரும் உணவை முடித்தவுடன் பாபாவும் பக்தர்களுடன் வெளியே வந்துவிட்டார். உடனே மேலேயிருந்து மண்ணும் கல்லும் கூரையின் பெரும்பகுதியும், இடிந்து, பலத்த சத்தத்துடன் சற்று முன்பு பாபா அமர்ந்திருந்த அதே இடத்தில் விழுந்தது. அப்போதுதான், யாரிடம் பாபா 'இரு' என்று ஊறினார் என்பதை எல்லோரும் புரிந்து கொண்டனர். இடிந்து கொண்டிருந்த கூரையிடம் தான் அவர் அவ்வாறு கூறியிருக்கிறார். அதுவும் நல்ல பையனைப் போல அவர் தமது மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு வெளியேறும் வரை காத்திருக்கவே செய்தது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, May 10, 2015

நான் உன்னுடன் இருப்பேன்


ஒரு நாள் சாய்பாபா சின்னகிருஷ்ணா சாஹேப் என்ற பக்தரை அணைத்துக் கொண்டு " எனது செல்வக் களஞ்சியத்தின் சாவி உன் கையில் உள்ளது. உனக்கு என்ன வேண்டுமோ, கேள் " என்றார். புத்திசாலியான சின்ன கிருஷ்ணா, "பாபா, இந்த ஜென்மத்திலும் இனிவரும் பிறவிகளிலும் நீங்கள் எப்போதும் என்னுடனேயே இருக்கவேண்டும்" என்றார். பாபா மகிழ்வோடு அவரைத் தட்டிக் கொடுத்து, " ஆம், நான் உன்னுடன் இருப்பேன், உனக்கு உள்ளேயும் புறத்திலேயும் நான் இருப்பேன் " என்றார்.
1912 ஆம்  ஆண்டு , புனிதமான குருபூர்ணிமைத் தினத்தன்று, சின்ன கிருஷ்ணா பாபாவைத் தரிசித்தார். மற்ற பக்தர்கள் மலர் மாலைகள் மற்றும் அன்பளிப்புகளைப் பாபாவுக்கு அளிப்பதைக் கண்ட சின்ன கிருஷ்ணா, தான் எதுவும் கொண்டுவர மறந்துபோன துரதிர்ஷ்டத்தை நினைத்து வருந்தினார். உடனே பாபா "இவை அனைத்தும் உன்னுடையவையே" என்று, மற்ற பக்தர்கள் கொண்டு வந்து தமக்களித்த மாலைக் குவியல்களைக் காட்டினார். அளிக்க வேண்டுமென்று மனமார விரும்புவதே, வெறும் சம்பிரதாயத்துக்காக அளிப்பதைக்  காட்டிலும் அதிக மதிப்புடையது என்று இதன்மூலம் உணர்த்தினார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, May 9, 2015

சாயி நாமத்தின் சக்தி

சாயி நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு,சங்கடங்களை தைரியமாக நேருக்குநேராக சந்தித்தால்,எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும்.சாயி நாமத்தின் சக்தி அவ்வளவு பிரம்மாண்டமானது.-ஸ்ரீ சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com

Thursday, May 7, 2015

குருவே ஒரே கடவுள்

நமது புலன்கள் எல்லாம் நல்லமுறையில் இருக்குந்தோறும் நிமிடத்திற்கு நிமிடம்,பாபாவை மனதில் இருத்திக் கொள்ள பழக வேண்டும்.மற்ற எல்லாத் தேவதைகளும் வெற்றுத் தோற்றமே.குருவே ஒரே கடவுள்.பாபாவின் புனிதத் திருவடிகளை நினைவு கூர்வோமானால்,அவர் மேலும் சிறப்பான நிலைக்கு நமது அதிர்ஷ்டத்தை மாற்றி விடுவார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஷிர்டியில் உள்ள சாய்பாபா சிலை உருவான விதம்

                  ஷிர்டியில்  உள்ள சாய்பாபா சிலை உருவான விதம்.

36 வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து வந்தனர். அப்பொழுது ஒரு நாள் இத்தாலியில் இருந்து வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது. அது அப்பொழுது எதற்கு வந்தது, ஏன் வந்தது, அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை. உடனே துறைமுக நிர்வாகம் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர். இதை அறிந்த சாய் சன்ஸ்தான் அதிகாரி அதை ஏலத்தில் எடுத்து அதை பம்பாயில் உள்ள பாலாஜி வசந்த் தாலிம்  என்னும் சிற்பியிடம் பாபாவின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை அளித்து அதே மாதிரி சிலை செய்ய கூறினார்கள். அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி தாலிம் மிகவும் கஷ்டப்பட்டார்.
அப்பொழுது பாபா அவர் கனவில் தோன்றி அவருடைய முகத்தை பலவித கோணங்களில் காட்டி சிற்பியின் கஷ்டத்தை போக்கி அவரை உற்சாகப்படுத்தினார். சிற்பி பின்னர் தெளிவு பெற்று மிகவும் சிறப்பாக எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் மிகவும் அழகாகச் செய்து கொடுத்தார்.பின்னர் அந்தச் சிலை 7ம் தேதி அக்டோபர் மாதம் 1954ம் ஆண்டு பிரதிஷ்டை செய்தார்கள். அன்று விஜயதசமி, அந்தச் சிலையை உண்மையான மனிதராக எண்ணி அதிகாலை வெந்நீர் ஸ்நானம் செய்து காலை, மதியம் , மாலை,இரவு என 4 வேலையும் உடை மாற்றி தங்க க்ரிடம் சார்த்தி பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவு ஆரத்திக்குப்பின் கொசுவலை சார்த்தி சமாதி மீது பருத்தியினால் ஆன  வெள்ளைத் துணியை போர்த்தி விடுவார்கள். சிலை வைப்பதற்கு முன்பு வழிபட்ட கருப்பு வெள்ளை புகைப்படம் இன்றும் சமாதியில் இருக்கிறது.தற்போது உள்ள கோயில் கட்டிடம் முந்தைய கட்டிடத்தை விட  இருமடங்கு பெரியதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, May 6, 2015

பூரண சரணாகதி

எவன் என்னை பூரண சரணாகதி அடைகிறானோ,எவன் என்னை விஸ்வாசத்துடன் வணங்குகிறானோ,எவன் என்னை நினைவில் இருத்தி நிரந்தரமாக தியானம் புரிகிறானோ,அவனுடைய எல்லா கஷ்டங்களில் இருந்தும் விடுவிப்பது எனது சிறப்பியல்பாகும்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத் சரித்திரம்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, May 5, 2015

குருவின் பாதங்களே சரணம்


தேகத்தையும், மனதையும், புத்தியையும் ஒரு குருவுக்கு மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.அவரையே தியானிக்க வேண்டும்.தியானம் தியானிக்கப்படும் பொருளாகவும் அவரே இருக்க வேண்டும்.அப்போது எங்கு பார்த்தாலும் அந்த குருவே பிரசன்னமாவார்.அந்த குரு உடலை விட்டு நீங்கி இருந்தாலும் ஆத்மார்த்த நட்புணர்ச்சி,ஆத்மா வடிவத்தில் சிஷ்யனைச் சுற்றியே திரிந்து கொண்டிருக்கும்.இவ்விதமாக குரு சிஷ்யர்கள் பௌதீகமாயும், உடலற்றபோதும்  (நிர்குண சாகாரத்தில்)
ஒன்றாக சேர்ந்தே இருப்பார்கள்.குரு ஆத்ம சொரூபனே என்ற பாவம் நிச்சயமாய் இருக்க வேண்டும்.அந்த பாவனை இல்லாத குரு பூஜை வீணாகிப்போகும்.குருவின் பாதங்களே சரணம்.-ஸ்ரீ சாயி திருவாய் மொழி.

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, May 4, 2015

ஆண்டவனின் அருள்

 ஊமையை ப் பேசவைக்கிறது.முடவனை மலையை கடக்கச் செய்கிறது.அவரின் விருப்பபடி காரியங்களைச் செயற்படுத்தும் தந்திரத்தை அவர் ஒருவரே அறிவார்-ஸ்ரீ சாய் சத்சரித்ரா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, May 3, 2015

உபதேசம் அளிக்கும் வழிகள்

ஒருவருக்கு ஒன்று, மற்றொருவருக்கு வேறு. தீஷை (உபதேசம்) அளிக்கும் வழிகள் எண்ணிலடங்கா. ஒருவரை தம்முடைய காலடியிலேயே கிடக்கச்சொன்னார். அச்சமயத்திலேயே மற்றொருவரை கண்டோபா கோவிலுக்கு அனுப்பினார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவரின் கனவிலும் தோன்றினார். அவருடைய மார்பில் அமர்ந்துகொண்டு கைகளாலும், கால்களாலும் அவரை அமுக்கினார். குடிகாரர் தம்முடைய கைகளை காதுகளில் வைத்துக்கொண்டு இனி மதுவை தொடமாட்டேனென்றும் அறவே விட்டுவிடுவேன் என்றும் சத்தியம் செய்த பின்னரே அவரை விடுதலை செய்தார்.   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, May 2, 2015

குரு பரம்பரை

ஒவ்வொரு சாய் பக்தரும் அறியவேண்டிய விஷயம் தத்த  குரு பரம்பரை.

 குரு பரம்பரை


ஆதி குரு ஸ்ரீ குருதேவதத்தர். பிரம்மா விஷ்ணு சிவனின்  அவதாரமே  ஸ்ரீ தத்தாத்ரேயர்குருவிற்க்கெல்லாம் குருவானவர்.எப்போதும் வாழும் அவதாரமும் ஆவார்.குரு பரம்பரை என்பது  தத்தாத்திரேயரின் அவதாரத்துக்குப் பிறகே தோன்றின. அவரே குரு பரம்பரை என்பது துவங்க வழி வகுத்தார். திருமூர்த்திகளின் அவதாரமான அவரே குருக்களுக்கு எல்லாம் குருவான சத்குரு ஆவார்.  இந்த பூமியில் குரு மற்றும் சிஷ்யர்களுக்கு இடையே எப்படிப்பட்ட உறவு இருக்க வேண்டும், ஒரு குருவின் மூலமே மக்களின் மன நிலையை ஆன்மீக வழியில் செலுத்தி கலிகாலத்தில் கலியின் தாக்கத்தினால் விளையும் தீமையை எப்படி அழிக்க வேண்டும் போன்றவற்றை  நடைமுறையில் எடுத்துக் காட்டவே தத்தாத்திரேயர் தாமே ஒரு குருவாகவும் அவருடைய சிஷ்யராகவும் பல அவதாரங்களை எடுத்துக் காட்டி உள்ளார்.  தத்தாத்திரேயரே ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபாவாகவும், ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளாகவும், ஸமர்த்த ஸ்வாமிகளாகவும், ஷீரடி சாயிபாபா, மானிக் பிரபு போன்ற பல ரூபங்களில் தோன்றி முதல் குரு பரம்பரையை உருவாக்கினார். இவர்களில் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளே ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகளாக பிறப்பை எடுத்தார் என்றும் சிலர் நம்புகிறார்கள்.

ஸ்ரீ தத்தர் வழி வந்த குருமார்களை உள்ளடங்கியதே தத்த பரம்பரை. நமது சத்குரு ஸ்ரீ சாய்பாபா குரு பரம்பரையின் கடைசி குரு ஆவார்.

குரு பரம்பரையில் உள்ள ஒவ்வொரு குருமார்களை பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

1.ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபா. (1300 A .D )


ஸ்ரீ தத்தாத்ரேயரின் முதல் அவதாரம். தந்தை ஸ்ரீ அப்பளராஜா ஷர்மா, தாய் பதிவிரதை சுமதிக்கு மூன்றாவது மகனாக ஆந்திர மாநிலம் கோதாவரியில் உள்ள பித்தாபுரத்தில்  பிறந்தார். தனது பாதங்களில் சங்கு சக்கர முத்திரைகளை கொண்டந்தாலேயே இப்பெயரால் அழைக்கப்பட்டார்.

2. ஸ்ரீ ந்ரசிம்ம சரஸ்வதி சுவாமிகள்.(AD 1378 to 1459)


கலியுகத்தில் ஸ்ரீ தத்தாத்ரேயரின்  இரண்டாவது  அவதாரமாகும்.
தந்தை ஸ்ரீ மாதவ்,தாய் அம்பா பவானிக்கு மகாராஷ்டிர மாநிலம் கரஞ்சபூரில் பிறந்தார். இவர் பிறந்தவுடன் அழுவதற்கு மாறாக 'ஓம் ' என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரித்தவர்.

3.மாணிக் பிரபு.1817 A .D


தந்தை ஸ்ரீ மனோஹர நாயக ஹரகுடே, தாய் ஸ்ரீ பய தேவி,தொடர்ந்து 16 வருடங்கள் குருச்சரித்திரத்தை பாராயணம் செய்ததன் பலனாக, குரு தத்தாத்ரயரே நேரில் காட்சி அளித்து தானே அவர்களுக்கு மகனாக பிறப்பதாக உறுதியளித்து ,மகாராஷ்டிரா மாநிலம்,கல்யானுக்கு அருகில் உள்ள லத்வந்தி என்னும் கிராமத்தில் பிறந்தார். தனது 48 வது  வயதில் ஜீவசமாதி அடைந்தார்.

4.அக்கல்கோட் ஸ்ரீ சுவாமி சமர்த்தர்.1900 AD.

ஸ்ரீ தத்தரின் 4 வது அத்தியாயம். இவரின்  பிறப்பு தாய் தந்தை பற்றிய குறிப்புகள் இல்லைகுருச்சரித்திரத்தில் 2 வது அவதாரம் ஸ்ரீ  ந்ரசிம்ம சரஸ்வதி அவர்கள் 1458 ம் ஆண்டு கர்தாளிவனத்தில் மஹாசமாதி அடைந்ததாக குறிப்பிடபட்டிருக்கிறது. 300 ஆண்டுகள் கழித்து ஒரு மரம்வெட்டியின் கோடாரி மரம் வெட்டும்பொழுது தவநிலையில் இருந்த ஸ்ரீ  ந்ருசிம்ம  சரஸ்வதி ஸ்வாமிகள் மேல் தவறுதலாக விழுந்தது. அங்கிருந்து எழுந்த அந்த தெய்வீக புருஷரே ஸ்ரீ தத்தரின் அடுத்த அவதாரமாக  ஸ்ரீ சுவாமி சமர்த்தர் என்று அழைக்கப்படுகிறார்.

5.சமர்த்த சத்குரு ஸ்ரீ சாய்பாபா.


ஸ்ரீ தத்தரின் கடைசி அவதாரமே, ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. இவரை  பற்றியோ, இவரது லீலைகளை பற்றியோ வார்த்தைகளால்  யவராலும்  விளக்க இயலாது. எனினும் அவரின் 11 உபதேச மொழிகளை இங்கு பதிவு செய்கிறோம்.

1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.
2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.
3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.
5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.
6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.
7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.
9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.
10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.
11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.

குரு பரம்பரையின் குருமார்களை விரிவாக பின்வரும் அத்தியாயங்களில் காண்போம். ஜெய் சாய்ராம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, May 1, 2015

கர்மா அழிந்து போகிறது

ஒருவர் என்னைத் தியானித்து, என் பெயரை உச்சரித்து,எனது லீலைகளைப் பாடி, இவ்வாறு நானாகவே மாறிவிட்டால், அவரது கர்மா அழிந்து போகிறது.நான் எப்போதும் அவர் அருகிலேயே இருப்பேன். அவர் தவறும்படி நான் விடமாட்டேன். இரவும் பகலும் அவர்களைப்பற்றியே நினைத்திருப்பேன். எனது பக்தன் ஆயிரம் மைல்களுக்கப்பால் இறந்தாலும், அவன் இறக்கும் சமயத்தில் அவனை என்னை நோக்கி இழுத்துக் கொள்வேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

சாய் பக்தர்கள் தங்களை " SAIBABA TAMIL SAYINGS"  WHATSAPP  GROUP'ல் இணைத்துக்கொள்ள  00971-558941451 என்ற எண்ணுக்கு WHATSAPP  மெசேஜ் அனுப்பவும். ஜெய் சாய்ராம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...