Thursday, May 14, 2015

குரு கடாக்ஷம்

தீட்சை பெறுபவர்களுக்கு பாபா செவி வழியே மந்திரோபதேசம் செய்ததில்லை. ஆயினும் ஜபம் செய்ய ராமநாமத்தை பலருக்கு ( உதாரணமாக திரு. மொரேச்வர் பிரதான்) எடுத்துக் கூறினார்.

" எங்கள் வழிமுறை தனிப்பட்டது. இதை நினைவில் கொள்ளுங்கள். ஆத்மா ஞானம் பெற, மனத்தை ஒடுக்கி சமாதி நிலைக்கு இட்டுச் செல்லக்கூடிய தியானம், ஆத்மானுஷ்டானம் அவசியமானது. ஆகவே எல்லா ஆசைகளையும் விடுத்து எல்லோரிடமும் உள்ள இறைவனை உங்கள் மனதில் காணுங்கள். இவ்வாறு மனம் ஒருமுகப்படுதப்பட்டால்  இலட்சியத்தை அடைந்து விடலாம்.
என்னை இந்த உருவத்துடனோ அல்லது நிராகாரமாகவோ, ஆனந்த வடிவாக தியானம் செய்யுங்கள், நிராகர தியானம் சாத்தியமில்லை எனில், இங்கே நீங்கள் காணும் என்னுடைய இந்த உருவத்தை தியானம் செய்யுங்கள். இரவும் பகலும் அதையே எண்ணுங்கள். அத்தகைய தியானத்தால் மனம் லயம் பெறுகிறது. செயல்புரிவதற்குள்ள பேதம், (அதாவது உனக்கும் எனக்குமிடையே உள்ள வேற்றுமை), தியானம் என்ற செயல் எல்லாம் மறைந்துவிடும். சீடனுக்கு குரு கடாக்ஷம் ஒன்றே உண்ணும் உணவும் பருகும் நீரும்."
.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

கண்கண்ட தெய்வம் பாபா

1986- ம் ஆண்டில் சீரடியில் பிளேக் வியாதி கடுமையாக இருந்தது.  துவாரகாமாயிக்கு வழக்கமாக கொண்டு வரப்படும் அல்வா பிரசாதம்(நைவேத்தியம்)  ஒரு தினம...