Tuesday, June 30, 2015

தியானம் செய்யுங்கள்

ஒருமுனைச் சித்தமாக தியானம் செய்வதாலேயே ஆத்மாவைப்பற்றிய விஞ்ஞானம் அடையப்படுகிறது. அந்த தியானமே அனுஷ்டானம் (ஆன்மீக ஒழுக்கம்) ஆகும். அதுவே மனத்திருப்தியையும் நிறைவையும் அளிக்கும்.
முதல் காரியமாக, ஆசைகளிலிருந்து விடுபடவேண்டும். எல்லா உயிர்களிலும் உறையும் இறைவனை மனத்திற்குள்  கொண்டுவர வேண்டும். அப்பொழுது தியானம் ஒரு வரையறைக்குள் நிற்கும்; கிடைக்க வேண்டியது கிடைக்கும்.  ஸத்தும் சித்தும் ஆனந்தமும் என்னுடைய சொரூபமென்றெ அறிவீராக . ஆகவே, அதன்மீதே தினமும் தியானம் செய்வீராக. இவ்வாறு தியானம் செய்ய உம்மால் இயலவில்லையென்றால், என்னுடைய அவதார உருவத்தின் மீது தியானம் செய்யும். இம்முறையில் ,தியானம் செய்பவர் தூய உன்னதமான உணர்வை அடைவர். இதுவே எல்லா தியானங்களின் முடிவான இலக்காகும்.ஏனெனில், நீர் பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுவீர் -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 25, 2015

தனது குருவைப்பற்றி பாபா

நான் பன்னிரண்டு வருடங்கள் குருபாதங்களில் இருந்தேன். என் குருவைப்போல குரு கிடைப்பதரிது. அவருடைய சங்கத்தில் நான் அனுபவித்த சந்தோஷத்தை விவரிக்கமுடியாது. அவருடைய முகத்தைப்  பார்த்தவுடனே என்னுடைய கண்கள் தியானத்தில் மூழ்கிவிடும். வேறெதையும் எனக்குப் பார்க்கத் தோன்றாது. எனக்குப் பசியோ தாகமோ தெரியவில்லை. அவர் இல்லாவிட்டால் மனம் அவஸ்தைப்பட்டது. அவரைத் தவிர வேறெதென்மேலும் என்னால் தியானம் செய்யமுடியவில்லை. அவரைத் தவிர எனக்கு லட்சியம் ஏதும் இல்லை. அவரே நான் எப்பொழுதும் கடைப்பிடிக்கவேண்டிய குறிக்கோள். குருவினுடைய திறமை அதியற்புதமானது. என் குருவும் இதையே எதிர்பார்த்தார். இதற்குமேல் எதையும் எதிர்பார்க்கவில்லை. -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 24, 2015

நம்பிக்கையும் விசுவாசமும்

" யோக சாதனைகள் ஏதும் தேவையில்லை; ஆறு சாஸ்திரங்களை அறியவேண்டிய அவசியமும் இல்லை. காப்பவரும் ஆழிப்பவரும்  குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் போதும்"  -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 23, 2015

பாதுகாக்கிறேன்

நீங்கள் என்னிடம் அனன்னியமான (வேறொன்றிலும் நாட்டமில்லாத) அன்பு செலுத்துங்கள்.  நானும் உங்களை அவ்வாறே  பாதுகாக்கிறேன். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 22, 2015

அதிதி

உணவு சமயத்தில் பசியோடு எந்த ஜீவன் வருகிறதோ, மனிதனோ, பறவையோ, மிருகமோ,புழுபூச்சியோ எது வருகிறதோ அதுவே அதிதி. இவை யாவும் உணவை நாடுகின்றன.உன்னிடம் வரும் உண்மையான அதிதியை, நீ அதிதியாகக் கருதுவதில்லை. காக்கைக்கு உணவு அளிக்கும் சமயத்தில், சமைத்த சாதத்தை நிறைந்த அளவில் எடுத்துக்கொண்டு போய்  வீட்டுக்கு வெளியே வை. எந்தப் பிராணியையும் கூவி அழைக்காதே. வந்த எந்தப் பிராணியையும் விரட்டாதே. எந்தப் பிராணி உணவுகொள்ள வந்தாலும் அதைப்பற்றி மனதை அலட்டிக்கொள்ளாதே. இவ்வாறாக இலட்சம்  விருந்தினர்களுக்கு உணவளித்த புண்ணியத்தை நீ பெறுகிறாய்.  "பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக!"-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 21, 2015

நாயும் பாபாவே

பாபா ஷீரடியில் ஐந்து வீடுகளிலிருந்து தம் உணவை பிச்சை எடுத்தார். அதைக் கொண்டு வந்து மசூதியில் உண்பார். ஷீரடியில் அதிகமாகத் தங்கிவந்த திருமதி ஜி. எஸ். கபர்டே என்னும் பெண்மணி, பாபாவுக்குத் தினமும் மசூதியில் உணவை நைவேத்தியமாக அளித்து வந்தாள்.  ஒருமுறை பாபாவைத் தன் விடுதிக்குச் சாப்பிட வரும்படி அழைத்தாள். சிறுது காலம் இவ்வாறே தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவரை அழைத்தாள். ஒருநாள் பாபா, அவளது வீட்டிற்கு வருவதாக உறுதியளித்தார்; ஆனால் வரவில்லை. மற்றொரு நாளும் அவள் பாபாவை அழைத்தபோது, அவர் வருவதாக உறுதி அளித்தார்.
அன்றைய தினம் அவள் விதவிதமான பதார்த்தங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும்போது, அந்த வாசனையால் தூண்டப்பட்ட ஒரு நாய் அங்கு வந்தது. பாபாவுக்காகத் தூய்மையாகத் தயாரிக்கும் பண்டங்களை அது தூய்மைகெடச் செய்து விடுமோ என்று திருமதி கபர்டே பயந்தாள். அதை விரட்டுவதற்குக் கைக்கு எளிதாக எதுவும் கிடைக்காமற் போகவே, அடுப்பிலிருந்து எரிந்து கொண்டிருக்கும் விறகு ஒன்றை எடுத்து நாயின் மேல் ஏறிய ,அது ஓடிவிட்டது. அன்றும்கூடப் பாபா வரவில்லை. எனவே அவள், நைவேத்தியத்தை மசூதிக்கு எடுத்துச் சென்றாள். அவளைப் பார்த்தவுடன், பாபா  " நான் உன் வீட்டிற்க்கு வந்த போது, எரிந்து கொண்டிருக்கும் விறகுக் கட்டையை என்மேல் எறிந்தாய் " என்றார்.திருமதி கபர்டே அவர் கூறியதன் பொருளை உணர்ந்து, தனது அறியாமைக்காக வருந்தினாள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 20, 2015

நானே கட்டுபடுத்துபவன்,

நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இருதயத்தில் அமர்ந்து இருக்கிறேன். இந்த உலகின் கண் அசையும் அசைவற்ற சர்வ ஜீவராசிகளையும் நானே அரைவணைக்கிறேன். இப்பிரபஞ்சமென்னும் தோற்றத்தை நானே கட்டுபடுத்துபவன்,ஆட்டுவிப்பவன்.எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே.நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன்,படைப்பவன்,காப்பவன்,அழிப்பவனுமாம்.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத் சரித்திரம்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 19, 2015

உன்னதமான சிரத்தை

சாய் சத்சரித்திரத்தின் பாதை எளிமையானது;  நேர்மையானது. இது படிக்கப்படும் இடம் எல்லாம் துவாரகாமாயி! ஆகவே, சாயியும் அங்கு நிச்சயம் வாசம் செய்வார். எங்கு சாய் சத்சரித்திரம் படிக்கபடுகிறதோ, அங்கு சாயி எப்பொழுதும் பிரசன்னமாக இருக்கிறார். பக்தியுடன் விசுவாசத்துடனும் மறுபடியும் மறுபடியும் படிக்கப்படும்போது அவர் சகல பா(BHA)வங்களுடனும்  அங்கு வாசம் செய்வார். ஆத்மானந்தத்தில் திளைக்கும் சாயியை மனத்திற்கொண்டு அனுதினமும் அவருடைய நாமத்தை ஜபித்துவந்தால், இதர ஜபங்கள், தியானம், தாரணை போன்ற கஷ்டமான சாதனைகள் எதுவும் செய்யத் தேவையில்லை. அவருடைய பாதங்களில் நம்பிக்கை வைத்து நித்திய நியமமாக உதியைப் பூசி, நீருடன் கலந்து அருந்துபவர்களுடைய மனோரதங்கள் அனைத்தும் நிறைவேறும். நம்பிக்கையில்லாத தர்க்கவாதிகளும் அறிவுஜீவிகளும் வாதப்பிரதிவாதங்களில் நாட்டமுள்ளவர்களும் எதையும்   உரித்துப் பார்க்கும் சுபாவம் உள்ளவர்களும் பாபாவிடமிருந்து எந்தப் பலனும் பெறமாட்டார்கள்.  இங்கு காரணவாதமும்  தர்க்கமும் செல்லாது; புத்தியின் சாதுர்யமும் இங்கு எடுபடாது. உன்னதமான சிரத்தையே தேவைப்படுகிறது. சுத்தமான பக்தி உடையவரே பலன் பெறுவர்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 18, 2015

பாபாவை காண முடியும், அவருடன் பேசவும் முடியும்

10 கட்டளைகள்


கடவுளைக்(பாபாவை) காண பாபா அருளியிருக்கும் 10 கட்டளைகள்.
எல்லோரும் தமது வாழ்நாளிலேயே கடவுளைப் (பாபாவை) பார்க்கவும் தெளிவாக உணரவும் முடியும். அதற்குச் சில தகுதிகள் தேவைப்படுகின்றன. மனிதர்கள் அவற்றைப் பெற்றால், நிச்சயம் பாபாவை காண முடியும், அவருடன் பேசவும் முடியும். அந்த தகுதிகள் என்னென்ன?
1. முமுக்ஷை : அதாவது சுதந்திர உணர்வுடன் கூடிய இறைவனைக் காண வேண்டும் என்ற விருப்பம். மனைவி, சமூகம், உறவு, வேலை என்று ஏகப்பட்ட விலங்குகளால், தான் பூட்டப்பட்டிருப்பதாக எண்ணுகிறான் மனிதன். முதலில் இந்த தடைகளிலிருந்து விடுபட வேண்டும். தான் தடைகளாக நினைத்துக் கொண்டிருப்பவை எல்லாம் தடைகளே அல்ல என்பதை புரிந்து, பாபாவை கண்டே ஆக வேண்டும் என்ற லட்சியத்தை மேற்கொள்ளவேண்டும்.
2. விரக்தி : இந்த உலகப் பொருட்கள், புகழ், கெளரவம், ஆதாயம் ஆகியவற்றின் மீது இருக்கும் பற்றை விலக்க வேண்டும். இவை கூடவே கூடாது என்று பொருள் அல்ல. பணம், புகழ், கெளரவம், ஆதாயம் ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு அவற்றுக்காகவே உழைக்கக் கூடாது.
3. அந்தர்முகதா : உள்முகச் சிந்தனை. மனிதன் வெளியில் நடப்பவற்றையே எப்போதும் பார்க்கிறான். அதை விடுத்து உட்புறமாகப் பார்க்க வேண்டும். அதாவது பாபாவை சிறிது நேரமாவது தியானம் செய்ய வேண்டும் அல்லது மனதை ஒருமுகமாக நிலை கொள்ள வேண்டும்.
4. தீவினைகள் கசடறக் கழிபடுதல் : கொலை, கொள்ளை, மற்றவர்களை அழிப்பது, தீங்கு விளைவிப்பது போன்ற கொடுஞ் செயல்களை செய்யக்கூடாது.
5. உண்மை : உண்மை பேசுவது, நேர்மையைக் கடைப்பிடிப்பது, மனிதர்கள் தமக்கு தாமே நேர்மை கடைபிடிக்க வேண்டும்.
6. புலனடக்கம் : புலன் இன்பம் தருபவை ப்ரியாக்கள். ஆன்மிக வளர்ச்சி தருபவை ச்ரியாக்கள். பேராசை, அதிகப் பற்று போன்றவை புலன் இன்பத்துக்கே வழி வகுக்கும். அவற்றை விலக்கி பாபாவிடம் நாட்டம் செலுத்த வேண்டும்.
7. வைராக்யம் : மனதையும், உணர்வையும் அடக்கி ஆளுதல்.
8. தூய்மை : மனத் தூய்மை வேண்டும். மனதளவிலும் எவ்வித ஜீவ ராசிகளுக்கும் தீமை எண்ணாமை.
9. குருவின் இன்றியமையாமை : நல்ல குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் கடவுளைக் காண இயலாது. எனவே, கடவுளைக் காணவேண்டுமெனில் நல்ல குருவை நாட வேண்டும்.
10. பாபாவின் அனுக்கிரகம் : முதல் 9 கட்டளைகளையும் நிறைவேற்றினால், பாபாவின் அருள் தானாகக் கிட்டும். ஒன்பது கட்டளைகளையும் நிறைவேற்றுபவரிடம் பாபா மகிழ்ச்சியுற்று தன்னை அடைய வழிகாட்டுவார். - ஷிர்டி சாயி சந்நிதானம். 

இவ்வனைத்து கட்டளைகளையும் பெற ஒரே வழி பாபாவின் பால் சரணாகதி அடைவதே.  


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 16, 2015

என் சர்க்கார்

"பிறர் கொடுப்பது நமக்கு எப்படிப் போதும்? எவ்வளவு கொடுக்கப்பட்டாலும் அது குறைவாகத்தான் இருக்கும். ஆனால்,இறைவன் நமக்கு அளிப்பதோ முடிவில்லாத செல்வம். யுகம் முடிந்தாலும் முடியாத செல்வம். என் சர்க்கார் (இறைவன்) கொடுப்பதே கொடுப்பது.மற்றவர்கள் கொடுப்பதை இதனுடன் எப்படி ஒப்பிட முடியும்?" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 15, 2015

இறைவன் ஒருவனே

"விதியின் வலிமையால் என்னென்ன நிகழ்ச்சிகள் நேர்கின்றனவோ அவற்றிற்கு நான் சாட்சி மாத்திரமே. செயல்புரிபவனும், செயல் புரியவைப்பவனும் இறைவன் ஒருவனே. நான் தேவனுமல்லேன், ஈஸ்வரனுமல்லேன். நான் 'அனல் ஹக்' குமல்லேன் (கடவுளுமல்லேன்). நான் 'யாதே ஹக்' (இறைவனை எப்பொழுதும் மனதில் இருத்தியவன்). நான் அல்லாவின் மிகப் பணிவான அடிமை" -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 14, 2015

அனைத்து வியாதிகளும் குணப்படுத்தப்படும்

என்னுடைய கதைகள், உபதேசங்கள் இவைகளைக் கேட்போருக்கு நான் பணிவிடை செய்வேன். செய்வது மட்டுமல்ல, அவர்கள் ஆசைகளையும் பூர்த்தி செய்வேன். என்னுடைய கதைகள் வெறுமனே கேட்கப்பட்டால் கூட அவர்களது அனைத்து வியாதிகளும் குணப்படுத்தப்படும். என்னுடைய பக்தர்களை எக்கணமும் அச்சுறுத்துகின்ற ஆபத்துக்களின் கோரப்பற்களிலிருந்து நான் வெளியே இழுத்துவிடுவேன்.-  ஷீரடி சாயிபாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 13, 2015

நாய் பன்றி பசுமாடு பூனை

சில சமயம் நான் ஒரு  நாய் ;சில சமயம் நான் ஒரு பன்றி; சில சமயம் நான் ஒரு பசுமாடு; சில சமயம் ஒரு பூனை; சில சமயம்  ஓர் எறும்பு; ஓர் ஈ, ஒரு நீர்வாழ் பிராணி- பலவிதமான உருவங்களில் நான் இவ்வுலகில் உலவிவருகிறேன். உயிருள்ள ஜந்துகள் அனைத்திலும் என்னைப் பார்ப்பவரையே நான் விரும்புகிறேன், என்று அறிந்துகொள்ளும். பேதபுத்தியை விட்டுவிடும்.அதுவே என்னை   வழிபடும் சிறந்த முறையாகும்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 12, 2015

அற்புதம்

" எனக்கு அஷ்டோபசார பூஜையோ ஷோடோபசார பூஜையோ வேண்டாம். எங்கு பக்தி பா(BHA)வம் இருக்கிறதோ அங்கு நான் இருக்கிறேன். நம்பிக்கை உள்ள பக்தியால் மட்டுமே எனது அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். கேட்காமலேயே கிடைக்கும். எனது பக்தனுக்கு இது ஒரு அற்புதம்." -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

பாபா தனக்கு ஷோடோபசார பூஜை வேண்டாம் என்று கூறியிருக்கிறார். பக்தர்களின் மீதிருந்த அன்பினால் இதையே பாபா பலமுறைகள் திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார்.

ஷோடோபசார (16 உபசாரங்கள்) பூஜை கீழ்க்கண்டவாறு.
1.ஆவாஹனம் - தெய்வத்தை ஒரு விக்கிரஹத்திலோ, படத்திலோ  எழுந்தருளும்படி  வேண்டிக் கொள்ளுதல்.

2.ஆசனம்- தெய்வத்திற்கு  ஓர் இருக்கை சமர்பித்தல்.

3.பாத்யம்- பாதங்களை அலம்பிக் கொள்வதற்குச்  சுத்தநீர் சமர்பித்தல் 

4அர்க்கியம்- அக்ஷதை, அருகம்புல், மலர்கள் இவற்றுடன் நீர் சேர்த்து அல்லது வெறும் நீர் சமர்ப்பணம் செய்தல்.

5.ஆசமனம்- உள்ளங்கையில் நீரேந்தி மூன்றுமுறை குடிப்பதற்கு நீர் சமர்ப்பணம் செய்தல்.

6.ஸ்நானம்-குளிப்பதற்கு நீர் சமர்ப்பணம் செய்தல்.

7.வஸ்த்ரம்- உடுத்துக்கொள்வதர்க்கு உடை சமர்ப்பணம் செய்தல்.

8.யக்ஞோபவீதம்- பூணூல் அணிவித்தல்.

9.கந்தம்- அரைத்த சந்தனம் இடுதல்.

10.புஷ்பம்- மலர்களை சமர்பித்தல்.

11.தூபம்- சாம்பிராணிப் புகைச் சூழச் செய்தல்.

12.தீபம்- விளக்கை காட்டுதல்.

13. நைவேத்தியம்- உணவு மற்றும் குடிநீர் சமர்பித்தல்.

14.தக்ஷிணா - தக்ஷிணை சமர்பித்தல்.

15.பிரதக்ஷினம்  - வலம்  வருதல்.

16. மந்திர புஷ்பம்- வேதமந்திரங்களைக் கோஷித்தவாறு இரண்டு கைகளாலும் தெய்வத்தின்மேல் பூமாரி பொழிதல் .  
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

GURU CHARITHRA TAMIL -PART-2/ குரு சரித்திரம்http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 11, 2015

சாதாரண வித்தைக்காரர் அல்ல

பாபா ஒரு சாதாரண வித்தைக்காரர் அல்ல, அவர் ஒரு சமர்த்த சத்குரு. பக்தர்களின் உள்ளங்களில் விசுவாசமும் நம்பிக்கையும் நிரம்பி வழிய பாபா சில அற்புதங்களையோ, வியக்கத்தகும் உத்திகளையோ கையாளுகிறார். நன்றி உணர்ச்சி,பிரேமை,பக்தியாக மாறுகிறது. தங்கள் தேவைகள் யாவற்றையும் அளிக்கக் கூடிய வள்ளல் என்ற நோக்கத்துடன் மக்கள் பாபாவை அணுகுகின்றனர். அவர்களது லௌகீக தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே பாபாவிடம் செல்கின்றனர். அனால் பின்னர் பலர் பாபா ராமன்,சிவன் போலவே தங்கள் இஷ்ட தெய்வம் என்றும்,தங்கள் முன்னோர்களின் குல தெய்வமே பாபாவாக புதிய உருவில் தோன்றி வையகத்தில் புராதன தெய்வீக பணிகளை நிறைவேற்றுகிறது எனவும் கண்டு கொண்டுவிடுகின்றனர்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 10, 2015

GURU CHARITHRA TAMIL -PART-1/ குரு சரித்திரம்http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

குருவின் கிருபை பூரணமாக கிடைக்கும்

பக்த வத்சலனான சத்குரு தன கிருபையை எல்லா உயிர்களிடம் எப்பொழுதும் பொழிவார்.அவரைச் சேவித்தும் உன் துன்பங்கள் தீரவில்லையென்றால் உனக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை.உன் மனதில் அவரை சந்தேகிக்கிறாய்.முழுமையான பக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு குருவின் கிருபை பூரணமாக கிடைக்கும்.-ஸ்ரீ குரு சரித்திரம்.

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வர. குரு சாக்ஷாத் பர பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நம:  

சாய் ராம்,  குரு சரித்திரம் படிக்க விரும்பும் சாயி அன்பர்கள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு saibabasayings@gmail.com  குரு சரித்திரம்[தமிழ்] கேட்டு எழுதுங்கள் தங்களுக்கு pdf file இலவசமாக அனுப்பபடும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 9, 2015

புண்ணியம்

ஒரு மனிதன் கடலில் மூழ்கும்போது,எல்லா  தீர்த்தங்களிலும்  புனித  ஆறுகளிலும் நீராடிய  புண்ணியம் அவனை  வந்தெய்துகிறது.அதே  மாதிரியாக  ஒரு மனிதன் சாய்பாபாவின்  பாதங்களில் அடைக்கலம்  புகும்போது,அவன்  மூவரையும் பிரம்மா விஷ்ணு மஹாதேவரையும்,பரப்பிரம்மத்தையும்  வணங்கும் பேறு  அவனுக்கு உண்டாகிறது.-
https://www.youtube.com/user/saimaharajkijai
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 7, 2015

GURU CHARITHRA TAMIL -INTRODUCTION/ குரு சரித்திரம்http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

மற்றவர்களை கேட்டு பயனில்லை

நான் உனது ஆசைகளை பூர்த்தி செய்ய ஆவலாய் இருக்கும்போது வீணாக மற்றவர்களை கேட்டு தெரிவது பயனில்லை. உனது எல்லா கேள்விக்கும் நானே விடையளிக்கத் தயாராக இருக்கும்போது,மற்றவர்களைக் கேட்பதையும், அனாவசியமாகப் பிறரிடம் விசாரிப்பதையும் நான் விரும்புவதில்லை.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 6, 2015

குரு சேவையில் உன் வாழ்வை கழித்திடு

'குரு' மும்மூர்த்திகளின் அவதாரம். ஆகையால் 'குரு' திருப்தி அடைந்தால் மும்மூர்த்திகள் சந்தோஷமடைவார்கள். குரு  கோபித்தால் மும்மூர்த்திகளில் யாரும் காப்பாற்றமுடியாது. குருவின் கருணையினால் மனிதன் முக்தி அடைவான். குரு தன் சீடனுக்கு நல்லது, கேட்டதை தெரிவித்து நன்மார்கத்தில் செல்வதற்கு வழி காட்டுவார். அவர் ஞானஜோதி சொரூபம். அப்படிப்பட்ட குருவின் சேவையினால் மனிதனுக்கு எல்லா வளமும் கிடைத்து சத்கதி அடைவான். எவனொருவன் மிக்க பக்தியுடன், சிரத்தையுடன் குருவை சேவிக்கிறானோ அவனுக்கு சகல தேவதைகள் வசமாகும். ஆகையால் குரு சேவையில் உன் வாழ்வை கழித்திடு -ஸ்ரீ குரு சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 5, 2015

எனது இருப்பிடம்

உன் இதயம் எனக்காக  எங்கு ஏங்குகிறதோ  அங்கு நான் இருக்கிறேன். உன் பரிசுத்தமான இதயம் கொள்ளும் ஏக்கமே எனக்கு செய்யும்  பூஜையாகும். என்  பக்தன் வசிக்குமிடமே எனது இருப்பிடம். என்னிடம் மிகுந்த அன்பு கொண்டோர் இருப்பிடத்திலேயே மசூதி,துவாரகமாயி ,துணி ,சாவடி ஆகியவை இருக்கும். அப்படிபட்டவர்களுடைய இல்லமே  என்னுடைய சமாதிமந்திரம்.-ஷீரடி  சாய்பாபா .[சத்குருவாணி]]

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 4, 2015

சுபம் விளையும்

நான் இம்மசூதியில் அமர்ந்து அசத்தியம் பேசமாட்டேன். என் சொற்களை நம்பி,உன் ஆர்வத்தை என்பால் திருப்பு. என் பார்வையை உன்மேல் வைப்பேன். ஆகையால் மந்திரம்,தந்திரம்,உபதேசங்கள் எல்லாம் வீண். என் பேச்சை கேள்.விரதத்தை கைவிட்டு உணவு உட்கொள். என்னையே லட்சியமாகக் கொள். உனக்கு நிச்சயம் சுபம் விளையும். என் குரு எனக்கு இதைத்தவிர்த்து வேறொன்றையும் கற்றுக் கொடுக்கவில்லை.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 3, 2015

ஆண்டியையும் அரசனாக்க வல்லவர்

ஊரும் பெயரும் இல்லாத சாயி அளவுகடந்த மஹிமை வாய்ந்தவர். கடைக்கண் பார்வையால் ஆண்டியையும் அரசனாக்க வல்லவர்! தனது பக்தனின் எல்லா காரியங்களையும் முன் நின்று நடத்துபவர் அவரே. அதேசமயம் எந்த விஷயத்திலும் சம்பந்தபடாதவர் போல் தோன்றுகிறார். அவர் எவர்களுக்கெல்லாம் கிருபை செய்ய விரும்புகிறாரோ அவர்களிடமெல்லாம் பலவிதமான மாறுவேஷங்களில் தோன்றுகிறார். 
கணக்கற்ற அற்புதங்களை திட்டமிட்டு நிறைவேற்றுகிறார்.அவரை தியானத்தாலும் பிரேமை பொங்கும் பஜனையாலும் அணுக முயல்பவர்களுடைய தேவைகள் அனைத்தையும்  நிறைவேற்றி அவர்களைப் பாதுகாக்கிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 2, 2015

ஸ்ரீ சுவாமி சமர்த்தர் ஷிர்டி சாய்பாபா


அக்கல்கோட் சுவாமி சமர்த்த மஹராஜ், இந்தியாவின் தலைசிறந்த மஹான்களுள் ஒருவர். அவர் தத்தாத்ரேயரின் அவதாரமாகக் கருதப்பட்டார். தம்மிடம் வந்தவர்கள் பலருக்கு அவர் உயர்ந்த ஆத்மீக அனுபவங்களைக் கொடுத்து, அவர்களைப் பெரிய மஹான்களாக்கியுளார். அவர் அக்கல்கோட்டில் (மஹாராஷ்டிரம்) 1856 முதல் 1878 வரை வாழ்ந்தார். 1878-ஆம் ஆண்டில் அக்கல்கோட் மஹராஜ் மஹாசமாதி அடைவதற்கான நேரம் நெருங்கிய போது,  கேசவ் நாயக் என்னும் பக்தர், அவரிடம் கண்களில் நீர்மல்க, " மஹராஜ், நீங்கள் போய் விட்டால் எங்களுக்கு வேறு புகலேது? " என்று  கேட்டார். மஹராஜ் , தம் பாதுகைகளைத் தம் பிரதிநிதியாக வைத்து வழிபடும் கேசவ் நாயக்கிடம் கொடுத்து, "எனது அவதாரம் அஹமது நகரிலுள்ள ஷீரடியில் ஏற்படப்போகிறது. அங்கே எப்போதும் செல். அவரிடம் பக்தியுடன் இரு. அவ்வாறு செய்தால் நான் இல்லாததால் துன்பப்பட மாட்டாய். நீ மகிழ்வுடன் இருப்பாய் என்றார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 1, 2015

நல்வழி காட்டுவார்

பொறுமையை யார் கையாள்கிறாரோ, அவருடன் தாம் இருப்பதாக பாபா எப்போதும் சொல்லி வந்தார். ஆனால் உங்களால் இயன்றவரை எதிர்மறையான சூழ்நிலைகளிலிருந்து விலகி நிற்பது நன்று. அவரை வேண்டி நின்றால், உள்ளிருந்த வண்ணமே அவர் நல்வழி காட்டுவார். பயனற்ற விவாதங்களிலும், சச்சரவுகளிலும் வீணாக்காமல் உங்கள் பொன்னான நேரத்தை சேமித்து வைத்து பாபாவின் சேவைக்கு என ஒதுக்குங்கள். ஸ்ரீ சாயிசத் சரித்திராவை கவனமாகவும், தொடர்ந்து இடைவிடாதும் படியுங்கள். எல்லா விடைகளும் உங்களுக்கு கிடைக்கும். எல்லா ஆன்மீகப் புத்தகங்களும், குருக்களின் வாழ்க்கை வரலாறுகளும் அடிப்படையில் உண்மையான வாழ்க்கை பாதை பற்றியே கூறுகின்றன. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...