Friday, July 31, 2015

விசுவாசத்தை விரும்புகிறேன்

அந்த அல்லா என்னை மறக்கமாட்டார். நான் உங்களை மறக்க இயலாது. நீங்கள் என் அனுக்கிரகத்தை விரும்புகிறீர்கள். நான் உங்கள் விசுவாசத்தை விரும்புகிறேன். அன்பால் என் பாதத்தைக் கட்டிப்பிடித்துள்ளீர்கள். பரவசமடைந்து உங்களை நான் கட்டித் தழுவுகிறேன். இப்படைப்பு அன்பு மயம். நீங்கள் அன்பே வடிவானவர்கள். நீங்கள் எனக்கு மிகவும் நெருங்கியவர்கள். நான் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவன். இப்படியே இருந்து விடலாம்! இங்கேயே இருந்து விடலாம்!- ஸ்ரீ சாயி திருவாய் மொழி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 28, 2015

சாயி சாயி

சாய் பாபாவை எப்போதும் நினைவில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள். ஒரு மனிதனின் உடல் மனம் இரண்டும் சிறப்பாக இருக்கும் போது ஒவ்வொரு வினாடியும் பாபாவை நினைத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய புத்திசாலித்தனத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு எப்போதும் "சாயி சாயி" என்று நினைவு வைத்துக் கொள்வீர்கள் என்றால் இந்த உலகின் பிடிகளிலிருந்து நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள். -ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 27, 2015

பிரேமை

சிருஷ்டியின் எந்த மூலைக்கு  வேண்டுமானாலும் செல்லுங்கள். கிட்டவோ, எட்டவோ எழுகடல் தாண்டியோ செல்லுங்கள். எனது பக்தர்களின்மேல் உண்டான பிரேமை எல்லை அறியாதது. ஆகவே,கவலையின்றி எங்கும் செல்லுங்கள். நீங்கள் செல்லும் இடத்திற்கு உங்களுக்கு முன்பாகவே சென்று நான் அங்கு இருப்பேன்.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 26, 2015

மாயையின் சவுக்கடி

இந்த சராசர சிருஷ்டியனைத்திலும், உள்ளும் புறமும் நானே நிறைந்துள்ளேன். உங்கள் செயல்கள் அனைத்தும் எனக்குத் தெளிவாகத் தெரியும்.இதை எப்போதும் மறக்காமலிருங்கள். நான் உங்கள் இதயத்துள் வசிப்பவன். என்னை லட்சியமாகக் கொண்டவர்களுக்கு எந்த துன்பமும் இருக்காது. என்னை மறந்தவர்கள் மாத்திரம் மாயையின் சவுக்கடிகளை ஏற்பார்கள்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 25, 2015

கவலையை விட்டொழியும்

"கவலையை விட்டொழியும்; உறுதியுடன் இரும்; என் பக்தர்கள் துக்கப்படுவதில்லை.ஷிர்டியில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய துன்பத்திற்கு முடிவேற்பட்டுவிட்டது. நீர் தடங்கல்களெனும் கடலில் கழுத்துவரை மூழ்கியிருக்கலாம்; துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் ஆழமாக அமிழ்ந்துபோயிருக்கலாம்; ஆனால், யார் இந்த மசூதிமாயியின் படிகளில் ஏறுகிறாரோ,அவர் சுகத்தின்மீது சவாரி செய்வார் என்று அறிந்துகொள்ளும்." - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 24, 2015

ஷிர்டி

பக்தர்: பாபா என்னை ஏன் இங்கு (ஷிர்டி) வரவழைத்தீர்கள்?

பாபா ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கின்றனர்.நான் அவர்களை  எல்லாம் இங்கு அழைப்பதில்லை .நீரும் நானும் பல ஜன்மங்களாக நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள்.நீர் அதை அறிய மாட்டீர்.ஆனால் நான் அறிவேன்.நேரம்  கிடைக்கும் போதெல்லாம்,ஷிர்டி வந்து போய் கொண்டிரும்.

                                                         -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவின் திருமொழிகள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 23, 2015

நம்பிக்கை சகிப்புத்தன்மை


பொறுமையும் சகிப்புத்தன்மையுமே தைரியம்.  அதைத் தொலைத்துவிடாதீர்கள். எப்பொழுது பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் அது உங்களை கரைசேர்க்கும். சகிப்புத்தன்மை இல்லாத மனிதனின் நிலைமை பரிதாபகரமானது. பண்டிதராக இருந்தாலும் சரி,நற்குணம் படைத்தவராக இருந்தாலும் சரி,சகிப்புத்தன்மை இல்லாவிடில்  வாழ்க்கை வீணாகிவிடும். குரு மஹாபலம் படைத்தவராக இருக்கலாம். ஆயினும்,ஆழமாகப் பாயும் நுண்ணறிவையும் தம்மிடம் அசையாத  நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையின் துணிவான பலத்தையும் தம் சிஷ்யனிடமிருந்து எதிர்பார்க்கிறார்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 22, 2015

100 மடங்கு


உன் கடமைகளை நீ செய், உன் கரங்களால் வேலை செய், வாயினால் பேசு, கண்களால் பார், அவ்விதமாக உன் தேவைகளை பூர்த்திசெய்துகொள். மனத்தை மட்டும் என்னிடம் லயமாக்கு. உன் சிரமத்திற்கு அதிகமாக 100 மடங்கு நான் கொடுக்கிறேன். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 20, 2015

கடமையும் தர்மமும்

 "அமிர்தத்தையொத்த தங்கள் சொல் எங்களுக்குச் சட்டமாகும்.  எங்களுக்கு வேறு எவ்விதச் சட்டமும் தெரியாது.  எப்போதும் தங்களையே நினைவு கூர்கிறோம்.  தங்கள் ரூபத்தைத் தியானிக்கிறோம்.  இரவும், பகலும் தங்களுக்கே கீழ்ப்படிகிறோம்.சரியா, தவறா என்பது எங்களுக்குத் தெரியாது அல்லது அதை நாங்கள் கருதுவதில்லை.  பொருட்களுக்கான காரணத்தை ஆராயவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்புவதில்லை.  ஆனால் உங்களின்  கட்டளைகளுக்கு ஐயுறாப் பற்றுறுதிப்பாட்டுடன் ஒழுங்கான பணிவிணக்கப் பண்புடன் நடத்தலே எங்களது கடமையும், தர்மமும் ஆகும்."-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 19, 2015

அல்லா

 "அல்லா  உனக்கு தாராளமாக அளிப்பார்.  உனக்கு எல்லாவித நன்மைகளையும் செய்வார்"-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 18, 2015

பயப்படாதே


"பயப்படாதே. நான் உன்னோடு இருக்கிறேன். எப்போது எங்கே என்னை நீ நினைத்தாலும் நான் உன்னோடு இருப்பேன். பயப்படாதே, இதை நன்றாக மனப்பாடம் செய்துகொள்" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 17, 2015

ஹிருதயவாசி

பக்தர்களுக்கு அனுக்கிரஹமும் உபதேசமும் அளிப்பதில் பாபாவினுடைய சாமர்த்தியம் ஆலங்காணமுடியாதது.அதை அவர் பல வழிமுறைகளில் செய்தார். அவர்கள் அருகிலிருந்தாலும் சரி,வெகுதூரத்திலிருந்தாலும் சரி,பாபா ஹிருதயவாசியாக (இதயத்தில் வசிப்பவராக) பக்தர்களுடனேயே இருந்தார்.-ஸ்ரீ சாயி இராமாயணம் .


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 16, 2015

தத்தர்

1911ம்  ஆண்டு தத்தஜயந்தி தினம்.பலவந்த் கொஹோஜ்கர் என்பவர் சீரடியில் பாபாவிடம் வந்தார்.மாலை மணி ஐந்து.

பாபா: எனக்கு பிரசவ வலி; வலி தாங்க முடியவில்லை.

இவ்வாறு சொல்லிக் கொண்டு,பாபா மசூதியிலிருந்து எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டார்.

அவர் தம்மை அனசுயா  தேவியுடன் ஒருமைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.சிறிது நேரம் கழித்து பாபா எல்லோரையும் உள்ளே அழைத்தார். முதலில் சென்ற கோஹோஜ்கர் பாபாவின் ஆசனத்தில் பார்த்தது பாபாவை அல்ல, ஆனால் மூன்று முகங்களுடன் கூடிய அழகிய குழந்தை,அதாவது தத்தரை!ஒரு கணத்தில் தத்தர் மறைந்தார்,பதிலாக பாபா காணப்பட்டார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 15, 2015

உண்மையான பக்தன்


இங்கு நீங்கள் பார்க்கும்  மூன்று முழ சரீரம் தான் சாயி  என்று நினைத்துவிடாதீர்கள். எனது உண்மையான பக்தன் எல்லா இடங்களிலும் எனது இருப்பை உணர்வான். எல்லா உயிர்களிலும் என்னை காண்பான்.- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 14, 2015

சாயி என்ற பரம்பொருள்


 பஞ்ச பூதங்களான இவ்வுடம்பு அழியக்கூடியது, நிலையற்றது.  ஆனால் அதனுள் இருக்கும் ஆன்மாவே பரம்பொருள்.  அதுவே அழியாததும், நிலையானதுமான பரிபூர்ண உண்மையாகும்.  இப்புனித மெய்மை, உணர்வுநிலை அல்லது பிரம்மமே மனத்திற்கும், புலன்களுக்கும் அதிபதியாகவும் ஆட்டுவிப்போராகவும் உள்ள சாயி என்ற பரம்பொருள்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 13, 2015

உனக்கு ஏதாவது கொடுக்க நான் ஆவலுடன் உள்ளேன்.

        உனக்கு ஏதாவது கொடுக்க நான் ஆவலுடன் உள்ளேன்.

பாபா: என் கஜானாவின் சாவி இப்போது உன் கைகளில்.எது வேண்டுமோ கேள்.மாதந்தோறும் ரூபாய் ஐந்து முதல் நூறு வரையோ அல்லது எது வேண்டுமோ,எதுவாயினும் நான் உனக்கு அளிக்கிறேன்.

பக்தர் (ரேகே) கேட்க மறுக்கிறார்.

பாபா:ஏதாவது கேள்.உனக்கு ஏதாவது கொடுக்க நான் ஆவலுடன் உள்ளேன்.

பக்தர் (ரேகே):நான் எது கேட்பினும் தாங்கள் கொடுப்பீர்கள் என் ஒத்துக் கொள்ளப்பட்டது தானே?

பாபா: ஆம்.

பக்தர் (ரேகே): பாபா,அப்படியானால் நான் விரும்புவது இதுதான்.இப்பிறவியிலோ,இனி எனக்கு நேரக் கூடிய பிறவிகளிலோ,தாங்கள் என்னைவிட்டு பிரியக்கூடாது.எப்போதும் தாங்கள் என் கூடவே இருக்கவேண்டும்.

பாபா; அப்படியே ஆகட்டும்.நான் உன்னுடன் இருப்பேன்.உன் உள்ளே இருப்பேன்,புறத்தே இருப்பேன்.நீ எப்படியிருந்தாலும்,என்ன செய்தாலும் அவ்வாறு இருப்பேன்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 11, 2015

குருவின் வார்த்தை

யார் எதைச் சொன்னாலும் சொல்லட்டும். அவையனைத்தையும் நாம் கேட்டுக்கொள்வோம். ஆனால், நம்முடைய லட்சியப் பாதையிலிருந்து தடம்புரளக்கூடாது. நம் குருவின் வார்த்தைகளை மறந்துவிடக்கூடாது. -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 10, 2015

சாயி நம்மைக் கைவிடமாட்டார்

பலவீனங்களைக்  கொண்டவர்களாகவும்,எவ்வித  ஏற்றமும்  அற்ற  நாம் "பக்தி" என்றால்  என்ன என்பதை அறியோம்.ஆனால் மற்றெல்லோரும் கைவிட்ட போதிலும்  சாயி  நம்மைக் கைவிடமாட்டார் என்ற அளவு  அறிவோம். எவர்,அவர்தம்  பாதாரவிந்தங்களில்  சரணாகதி  அடைகிறார்களோ      
அவர்களின் முன்னேற்றம்  நிச்சயமானது.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்<>

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 9, 2015

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்

பக்தன் பாட்டிசைக்கும் இடத்திலேயே இறைவன் இருப்பார்.வெல்லம் இருக்கும் இடத்தில் எறும்புகள் இருப்பதைப் போன்று, நாமஸ்மரணை செய்பவரின் வீட்டிலேயே இறைவன் இருப்பார்.ஆன்மீக விஷயத்தில் நாளை என்பதை மறந்து இந்த வினாடியிலிருந்தே நாமஸ்மரணை செய்யத் தொடங்குங்கள்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 7, 2015

தாரக மந்திரம்


ஆன்மிகப் பாதையில் முன்னேற முயற்சிக்கும் லெளகீக (சாதாரண) மக்களை கர்மவினை, சிறிய மற்றும் பெரிய சம்பவங்களை தடைகளாக ஏற்படுத்தி, அச்சம்பவங்களின் பிடியில் மனதை சிக்க வைத்து வாழ்வின் சில காலத்தை விழுங்கி விடுகிறது. இச்சம்பவங்கள் நமது சக்தியையும் அறிவின் எல்லையையும் மீறி வாழ்க்கை துன்பங்களால் வெவ்வேறு ரூபங்களில் நம்மை கட்டுப்படுத்துகிறது.  இதற்காக பாபாவால் அறிவுறுத்தப்பட்ட தாரக மந்திரமே "நம்பிக்கை" மற்றும் "பொறுமை" ஆகும்.

லெளகீக (சாதாரண) மக்களுக்கு பாபாவால் அளிக்கப்பட்ட ஒரே சக்தி துன்ப வேளையில் பொறுமை காத்து, பாபாவின் மேல் நம்பிக்கை சிதறாமல் போராடுவதுதான்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 6, 2015

உன் நிலையில் நீ உறுதியாக இரு

மீதமுள்ள தீவினையின் காரணமாகவே இந்த உடல் கிடைத்துள்ளது.உடல் வாய்த்த காரணத்தால் கர்மா அதன் வேலையைச் செய்யாமலிராது.அந்தக் கர்மம் இன்பவடிவம் கொண்டிருந்தாலும் துக்க வடிவம் கொண்டிருந்தாலும் பாதிக்கப்படாமல் இருங்கள்.கர்மா அப்படிச் செயல்படும் என்று அறிந்து,பயமின்றி அவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்.வானம் இடிந்து மேலே விழுந்தாலும் உன் நிலையில் நீ உறுதியாக இரு,தாங்கும் சக்தியை நான் கொடுக்கிறேன்.உன் முன்னும் பின்னும் நானே பாதுகாவலனாக  இருப்பேன்.மீதமுள்ள தீவினை அழியாவிடில் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டியிருக்கும்.இதைத் தவிர்க்க முடியாது.உங்களுக்கு அந்தச் சக்தி எப்படிக் கிடைக்கும் என்ற சந்தேகம் வேண்டாம்.என் நாமஸ்மரணையில் உள்ள சக்தி அத்தகையது.சுயநலமின்றி என்னை ஆராதித்து வந்தால்,ஸ்மரணை செய்துவந்தால்,ஜெபம் செய்துவந்தால்,அப்படிப்பட்ட அனுபூதி உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.இந்த உண்மையை நீங்களே உணர்வீர்கள்.-ஸ்ரீ சாய் சத்குருவாணி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 5, 2015

நேரிடை அனுபவம்

பாபாவை நேருக்குநேராக  தரிசனம் செய்தவர் சிலர். காட்சியாக தரிசனம் பெற்றவர் பலர். வேறு உருவத்திலும் மாறுவேஷத்திலும் அற்புத தரிசனம் பெற்றவர் அநேகர். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அவர் தெரிவதில்லை, நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர்கள் எங்கிருந்தாலும் தரிசனம் தருவார். மக்களுடைய மனச்சாய்வு எப்படியோ அப்படியே நேரிடை அனுபவம் ஏற்படுகிறது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 4, 2015

சாயி சிந்தனை

நம்முடைய மனமே நமக்கு விரோதி என்பதும், பரம விரோதியும் செய்ய நினைக்காத கெடுதல்களையும் உற்பத்தி செய்யும் என்பதும், எல்லோருக்கும் நிச்சயமாகத் தெரியும். மற்றவர்களுக்கு நமது எண்ணங்கள் தெரியாமல் இருக்கலாம். மகாராஜரான பாபாவுக்கு உடனே தெரிந்துவிடும்.    
நம் மனத்தில் குதர்க்கமான எண்ணங்கள் எழலாம். அவற்றை அறவே விடுத்து, பாபாவின் பாதங்களின்மேல் மனத்தைச் செலுத்தினால், மனம் ஒருமுகப்படுத்தல் விருத்தியடையும். ஒருமுகப்பட்ட மனத்தில் சாயி சிந்தனை பின்தொடரும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 3, 2015

கைகட்டிச் சேவகம் செய்தன

பாபா அணிமா சித்தியை பெற்றவர்,கண்ணில் விழும் தூசியளவிளுங்கூட சௌகரியமாக மறைந்து கொள்ளலாம்.ஈயினுடைய உருவத்திலோ, எறும்பினுடைய  ரூபத்திலோ,புழுவினுள்ளோ பாபா சுலபமாக சஞ்சாரம் செய்தது இவ்விதமாகவே. அணிமா,மஹிமா,லகிமா என்னும் அஷ்டமஹா சித்திகளும் நவநிதிகளும் அவருடைய சந்நிதியில் கைகட்டிச் சேவகம் செய்தன.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 2, 2015

வருவது வரட்டும்

"வருவது வரட்டும்,விட்டு விடாதே. என்னையே  உறுதியாகப்  பற்றிக்கொண்டு
எப்போதும்  நிதானத்துடனும்,சதாகாலமும் என்னுடன்  ஒன்றியும்  இருப்பாய்"-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்] 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 1, 2015

அனன்னிய அவதானம்

குருவுக்கு புறம்பாக வேறெதுமின்றி, எல்லாமே குருவாகத் தெரியுமாறு குருவை மாத்திரம் தியானத்தின் இலக்காகக் கொண்டு செய்யப்படும் தியானம், ' அனன்னிய அவதானம்' ( மன ஒருமைப்பாடு) என்றழைக்கப்படும். குருவின் சொரூபத்தை தியானம் செய்யும்போது மனமும் புத்தியும் உறைந்து போகின்றன. ஆகவே, அவருடைய திருவடிகளுக்கு வணக்கம் செலுத்திவிட்டு சத்தமில்லாத மௌனத்தில் கரைந்துவிட வேண்டும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...