Monday, August 31, 2015

தெய்வபலம்


ஒருவருக்கு இணையில்லாத புத்திசாதுர்யம் இருக்கலாம். ஆடாத அசையாத சிரத்தையும் இருக்கலாம். ஆயினும் சாயியைப்போன்ற பலமான குரு அமைவதற்கு தெய்வபலம் அவசியம் வேண்டும். - ஸ்ரீ சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 30, 2015

நினைத்தது நடக்கும்


இந்த உலகில் குருவின் வாக்கு ஒன்றுதான் மனிதனை காப்பாற்ற முடியும். குருவை நம்பியவர்களுக்குக் கேட்டதெல்லாம் கிடைக்கும். யார் யார் நினைவுகள் எப்படி இருக்குமோ, பயனும் அப்படி இருக்கும். குரு சொன்ன வார்த்தையில்  நம்பிக்கை வைத்தவனுக்கு நினைத்தது நடக்கும். -  ஸ்ரீ குரு சரித்திரம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 29, 2015

எப்போதும் துன்பம் நேராது" நீங்கள் எங்கிருந்தாலும்,எதைச் செய்தாலும் அவை எல்லாவற்றையும் நான் அறிவேன். உங்களை ஆட்டுவிப்பவன் நானே...எல்லாவற்றையும் படைத்துக் காப்பவனும் நானே...உலகத்தின் ஆதாரம் நானே..எவன் என்னை மனதார நினைக்கிறானோ அவனுக்கு எப்போதும் துன்பம் நேராது "   - ஸ்ரீ  ஷீரடி சாய்பாபா [மாண்புமிகு மகான்கள்]


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, August 28, 2015

உதீ

மஹானுபாவரான சாயி மஹராஜைத் தவிர வேறெந்த நிவாரணமும் உமக்கு இல்லை. முழுமையான விசுவாசத்துடனும் பக்தியுடனும் நீர் பாபாவின் உதீயை ஏற்றுக்கொண்டால்,அது தன்னுடைய சக்தியைத் தானே வெளிப்படுத்தும். பக்திபா(BHA)வத்துடன் உதீயை அணுகவும் பிறகு அது விளைவிக்கும் அற்புதத்தைப் பார்க்கலாம். அது உடனே உம்மை இன்னல்களிலிருந்து விடுவிக்கும். உதீயினுடைய இயல்பான குணம் இதுவே.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 27, 2015

அரணாக நிற்கிறார்


பாபா எங்கிருக்கிறார்  என்று எவருக்கும் தெரியாத வகையில் நூலை இழுக்கிறார்; ஆனாலும், விளைவுகள் என்னவோ, பக்தர்களுக்குப் பின்னால் எந்நேரமும் அரணாக நிற்கிறார் என்பதை பக்தர்கள் உணரவேண்டும். - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.    

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 26, 2015

நம்மை காப்பவர்

                                         

கடவுள் ஒருவர் தான் நம்மை காப்பவர். அவரைத்தவிர வேறு யாரும் இல்லை. அவருடைய எண்ணம் மட்டுமே ஈடேறும். கடவுள் அனைவரிடத்திலும் இருக்கிறார். அவர் நமக்கு கொடுப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து கடவுள் கொடுப்பதை பக்தி சிரத்தையோடும் அடக்கத்தோடும் வாங்கிக் கொள்ளவேண்டும். -ஸ்ரீ ஷீரடி சாய்பாபா [ஸ்ரீ சாய் சத்சரித்திர சாராம்சம்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 25, 2015

நன்மை பயக்கும் கோரிக்கை

மனதில் ஏதோதோ கோரிக்கைகளை வைத்து கொண்டு என்னை ஆராதிக்கிறாய். அந்தக் கோரிக்கைகளின் நன்மை தீமைகள் உனக்கு தெரியாது, நிறைவேற வேண்டும் என்ற ஆவல் மட்டுமே உன்னிடம் இருக்கிறது. உனக்கு நன்மை பயக்கும் கோரிக்கைகளை நான் நிறைவேற்றுகிறேன். - ஷீரடிசாய்பாபா[சத்குருவாணி].

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 24, 2015

உங்கள் கோரிக்கை

உங்கள் காரியங்களுக்கு காரணமாய் இருப்பவன் நானே.உங்கள் கோரிக்கைகளை நிறைவேறச்  செய்யவே இரவும் பகலும் நான் உழைக்கிறேன். இதை தெரிந்து கொண்டு பாரத்தை என்மேல் சுமத்துபவரின் காரியங்கள் விரைவாகவே நிறைவேற்றப் படுகின்றன.- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[சத்குருவாணி].


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 23, 2015

நான் விரும்புவதில்லை

நான் உனது ஆசைகளை பூர்த்தி செய்ய ஆவலாய் இருக்கும்போது வீணாக மற்றவர்களை கேட்டு தெரிவது பயனில்லை. உனது எல்லா கேள்விக்கும் நானே விடையளிக்கத் தயாராக இருக்கும்போது மற்றவர்களைக் கேட்பதையும், அனாவசியமாகப் பிறரிடம் விசாரிப்பதையும் நான் விரும்புவதில்லை-ஸ்ரீ  ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 22, 2015

சாயி கைவிடமாட்டார்

பலவீனங்களைக்  கொண்டவர்களாகவும், எவ்வித ஏற்றமும் அற்ற  நாம் "பக்தி" என்றால்  என்ன என்பதை அறியோம். ஆனால் மற்றல்லோரும் கைவிட்ட போதிலும்  சாயி  நம்மைக் கைவிடமாட்டார் என்ற அளவு  அறிவோம். எவர்,அவர்தம்  பாதாரவிந்தங்களில்  சரணாகதி  அடைகிறார்களோ      
அவர்களின் முன்னேற்றம்  நிச்சயமானது. - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, August 21, 2015

என்னுடைய பெருமை

எங்கே பக்தர்கள் என்னுடைய பெருமையைப் பாடுகிறார்களோ, அங்கு கண் கொட்டாமல் விழித்துக்கொண்டிருகிறேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 20, 2015

ஷீரடியின் மகிமைஷீரடியின் மண்ணும், புல்லும் புண்ணியம் செய்தவை. பிரயத்தனம் (யோக சாதனை) ஏதும் இன்றியே பாபாவின் பாதங்களைத் தினமும் மூத்தமிட்டு, அவரது பாததூளியை சிரசின்மேல் ஏற்றுக்கொண்டன.  ஷிர்டியே நமது பண்டரிபுரம், ஷிர்டியே நமது ஜகந்நாதாபுரி, ஷிர்டியே நமது துவாரகை, ஷிர்டியே நமது கயை, காசி விச்வேச்வரம், ஷிர்டியே நமது ராமேஸ்வரம், ஷிர்டியே நமது பத்ரிநாதம், கேதாரநாதம், நாசிக்கின் திரியம்பகேச்வரம், உஜ்ஜைனியின் மகாகாலேச்வரம்.

சாயியின் ஷிர்டியே நமது வாழ்க்கையின் துன்பங்களையும், வலிகளையும் போக்கும். எளிதான முக்திமார்க்கமும் சாயியின் அண்மையே.        

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 19, 2015

ரூஸோ மம ப்ரியாம்பிகா...எனது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், சகோதர, சகோதரி, மாமனார், மாமியார் எவர் என்மீது கோபப்பட்டாலும் குருவான தாய் சாயிமாத்திரம் என்மீது எப்போதும் கோபப்படாமல் இருக்கட்டும். - ஸ்ரீ குருப்ரசாத யாசன தசகம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 18, 2015

ஏன் கவலை

(1918-ம் ஆண்டு) திருமதி தார்கட்,அவரது மகன் இருவரும்  சாயிபாபாவை தரிசனம் செய்ய வந்தனர்.

பாபா: தாயே! இப்போதெல்லாம் நான் மிகவும் நச்சரிக்கபடுகிறேன்.சிலருடைய தேவை செல்வம்,சிலருக்கு பெண்டிர்,சிலருக்கு புத்திரர்கள்.அந்தோ! என்னிடம் இருப்பதை யாரும் கேட்பதில்லை!நானும் பொறுத்து பொறுத்து போகிறேன்;ஒரு தினம் திடீரென நான் மறைந்துவிடுவேன்.எனக்கு அலுத்துவிட்டது.

திருமதி தார்கட்: பாபா, ஏன் இப்படி பேசுகிறீர்கள்.பின் எங்கள் கதி என்னாவது?

பாபா: ஏன் கவலை? உங்கள்  நலனை ஆண்டவன் பேணுகிறாரல்லவா?என் குழந்தைகள் என்னை நாடி வருவது என்னை மகிழ்விக்கிறது;அப்போது என் இரண்டு கவளங்கள் ஆகாரத்தையும் உற்சாகத்துடன் எடுத்துக் கொண்டு மேலும் பருமனாகிறேன்.

சிறுவன்: தாங்களிடம் இருப்பதை கேட்டு பெற்றுக் கொள்ளவே நாங்கள் வருகிறோம்.தாங்கள் அறிவீர்களல்லவா?

பாபா:ஆம்,உங்களுக்கு அது கிட்டும்.

சிறுவன்:பாபா! அதை அடைவதற்கு முன் நான் இன்னும் எத்தனை பிறவிகள்
எடுக்கவேண்டியிருக்கும் என்பது பற்றி தாங்கள் உறுதிமொழியை வேண்டுகிறேன்.

பாபா:இன்னும் மூன்று பிறவிகள் போதுமானது.

சிறுவன்:பாபா,ஆனால் தாங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்கள் அல்லவா?

பாபா:ஆஹா உன்னுடன் முன்னரே எத்தனை பிறவிகள் இருந்திருக்கிறேன் என்பதை அறிவாயா?மீண்டும் மீண்டும் நாம் சந்திப்போம்.இரவும் பகலும் என் குழந்தைகளை நான் பேணி வந்து,ஆண்டவனிடம் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கொடுக்க வேண்டியுள்ளது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 17, 2015

பாபாவிடம் பரிபூரணமாக சரணடைவோமாக

பாபாவுக்கு பக்தியுடன்  சேவை செய்யும் அடியவர், இறைவனிடம் ஒன்று கலந்த உணர்வை அடைகிறார். இதர சாதனைகளைத் தள்ளி வைத்து விட்டு குரு சேவையில் பணிவுடன் ஈடுபடுங்கள். அந்த சேவையில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும், கபடமான சாமர்த்தியத்தின் நிழல் பட்டாலும், சாதகருக்கு தீமையே விளையும். தேவை என்னவென்றால், பாபாவின் மீது உறுதியான விசுவாசமே.
மேலும், சிஷ்யன் சுயமுயற்சியால் என்ன செய்கிறான்? ஒன்றுமில்லையே! அவன் செய்வதையெல்லாம் சத்குருவன்றோ லாவகப் படுத்துகிறார்! சிஷ்யனுக்கு தனக்கு வரப்போகும் அபாயங்களை பற்றி எதுவும் தெரிவதில்லை. பாபா அந்த அபாயங்களை விலக்குவதற்காக செய்யும் உபாயங்களும் கூட சிஷ்யனுக்கு தெரிவதில்லை!
மூவுலகங்களிலும் தேடினாலும் பாபாவைப் போன்ற தர்மதாதாவை காண்பதரிது. சரணமடைந்தவர்களுக்கு மாபெரும் புகலிடமான பாபாவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக. - ஸ்ரீ சாயி இராமாயணம். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 16, 2015

சுபம் ஏற்படும்


நீங்கள் அனுபவிப்பது, உங்களிடமிருப்பது, நான் உங்களுக்கு ஆசிர்வதித்து கொடுத்ததாகும் என்பதை நீங்கள் அறிந்தால் உங்களுக்கு சுபம் ஏற்படும் - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 15, 2015

உறுதியாக அறிந்துகொள்

இதோ பார்,உனக்கு நடப்பவையெல்லாம் மறைந்து வேலைசெய்யும் கர்மவினைகளின் வானளாவிய ஓட்டமே. நான் செய்பவனுமல்லேன்,செய்ய வைப்பவனுமல்லேன் என்பதை உறுதியாக அறிந்துகொள்.  ஆனாலும்,செய்யக்கூடிய சக்தி என் வாயிற்படியில் படுத்துக்கிடக்கிறது!
எவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் என்மீது தன் பாரத்தைப் போடுகிறானோ, அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

https://play.google.com/store/apps/details?id=com.saisayings
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, August 14, 2015

வியாதியையும் வலியையும்


இவ்விடத்திலிருக்கும் பக்கீர் மஹா தயாளன்; உம்முடைய வியாதியையும் வலியையும் நிர்மூலமாக்கிவிடுவான். அனைவரின் மீதும் கருணை கொண்ட இந்தப் பக்கீர் அன்புடன் உம்மை பாதுகாப்பான். யார் இந்த மசூதிமாயியின் படிகளில் ஏறுகிறாரோ,அவர் சுகத்தின்மீது சவாரி செய்வார் என்று அறிந்துகொள்ளும். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 13, 2015

பாபா கையாண்ட உபாயங்கள்

                                              

உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது. உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடமாக வேரூன்றிய பிறகு, உருவமற்ற இறைவனை   அறிந்துக்கொள்வது தானாகவே பின்தொடர்கிறது. நிர்குணமான, நிராகரமான, இறைவனை பக்தர்களுக்குப் புரியவைப்பதற்கு  பாபா கையாண்ட உபாயங்கள் எத்தனை எத்தனையோ! அவரவர்களுடைய ஆன்மீகத் தகுதிக்கும் திறமைக்குமேற்ப  பக்தர்களைத் தனித்தனியாக நிர்வகித்தார். பல சந்தர்ப்பங்களில் தரிசனம் தரவும் மறுத்தார். ஒருவரை ஷிர்டியிலிருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பிவிடுவார். மற்றவரை ஷிர்டியிலேயே தனிமையில் வாழச் செய்வார். மற்றொருவரை வாடாவை விட்டு வெளிவராமலேயே இருக்கச்செய்து, தாம் நியமித்தவாறு புராணங்களைப் பாராயணம் செய்யச் சொல்வார். பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாஸங்களில் ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்து கொண்டிருக்கும் போதும், உறங்கும்போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள் ! இச்செயல்களின் நோக்கம் இதுவே..

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 12, 2015

பாபாவிடம் வேண்டுவோம்

பாபாவிடம் இங்ஙனம் வேண்டுவோம்; "எங்களது புத்தியை திசை திருப்பிவிடுங்கள். அந்தர்முகமாகச் செய்யுங்கள். நித்ய (வேண்டுவன) - அநித்ய (வேண்டாதவை) வஸ்துக்களை பகுத்துணரும் விவேகம், எல்லா உலகப் பொருட்களின் மீது பற்றின்மை ஆகியவைகளை எங்களுக்கு நல்கி ஆத்ம உணர்வை அடைய இவ்விதமாக எங்களை ஊக்குவியுங்கள். ஆன்மாவையும், உடலையும் உம்மிடம் ஒப்புவித்தோம் (உடலுணர்வு மற்றும் அஹங்காரம்). எங்களது கண்களை தங்களதாக்குங்கள்.அதன் முலம் நாங்கள் இன்ப - துன்பங்களையே உணராதிருப்போம். தங்கள் சங்கல்பத்தின்படி, விருப்பத்தின்படி எங்களது மனதையும்,உடலையும் கட்டுப்படுத்துங்கள். தங்கள் பாதத்தில் எங்கள் மனது ஆறுதல் பெறட்டும்" ஸ்ரீ சாய் சத்ச்சரித்ரா 26.        

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 11, 2015

இரவும் பகலும் நினைத்திருப்பேன்


ஒருவர் என்னைத் தியானித்து, என் பெயரை உச்சரித்து, எனது லீலைகளைப் பாடி, இவ்வாறு நானாகவே மாறிவிட்டால், அவரது கர்மா அழிந்து போகிறது. நான் எப்போதும் அவர் அருகிலேயே இருப்பேன். அவர் தவறும்படி நான் விடமாட்டேன். இரவும் பகலும் அவர்களைப்பற்றியே நினைத்திருப்பேன். எனது பக்தன் ஆயிரம் மைல்களுக்கப்பால் இறந்தாலும், அவன் இறக்கும் சமயத்தில் அவனை என்னை நோக்கி இழுத்துக் கொள்வேன்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

GOOGLE PLAYSTORE APP;https://play.google.com/store/apps/details?id=com.saisayings
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 9, 2015

தியானம் செய்யுங்கள்

ஜெய் சாய்ராம்,

SAIBABA SAYINGS APPS'ஐ GOOGLE PLAYSTORE'ல் DOWNLOAD செய்ய இந்த லிங்க்'ஐ கிளிக் செய்யவும்.
https://play.google.com/store/apps/details?id=com.saisayings

எனது உருவமற்ற இயல்பை எப்போதும் தியானம் செய்யுங்கள். இதைச் செய்யத் தங்களால் இயலாவிடில் இங்கே இரவும்,பகலும் காண்பதைப் போன்று, உச்சி முதல் உள்ளங்கால் வரையுள்ள எனது ரூபத்தைத் தியானம் செய்யுங்கள். இதைத் தாங்கள் செய்து கொண்டே போகும் போது  தங்களின் எண்ணங்கள் ஒரே  இலக்கில் குவிக்கப்படும். தியானம் செய்பவர்,தியானம்,தியானிக்கப்படும் பொருள் இவைகளிலுள்ள வேறுபாடு மறைந்துவிடும். தியானம் புரிபவர் உச்ச உணர்ச்சித் திரளுடன் ஒன்றி,பிரம்மத்துடன் கலந்து ஐக்கியமாய் விடுவார். - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா [ஸ்ரீ சாய் சத்சரித்திரம்].

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 8, 2015

SAIBABA SAYINGS APPS IN GOOGLE PLAYSTORE

ஜெய் சாய்ராம்,

SAIBABA SAYINGS APPS'ஐ GOOGLE PLAYSTORE'ல் INSTALL செய்ய இந்த லிங்க்'ஐ கிளிக் செய்யவும்.
https://play.google.com/store/apps/details?id=com.saisayings


பக்தவத்சலனான சத்குரு தன் கிருபையை எல்லா உயிர்களிடமும் எப்பொழுதும் பொழிவார் ! அவரைச் சேவித்தும் உன் துன்பங்கள் தீரவில்லை என்றால் உனக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை. உன் மனதில் அவரை  சந்தேகிக்கிறாய். முழுமையான, உண்மையான பக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு குருவின் அருள் பூரணமாக கிடைக்கும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, August 7, 2015

சாயி பாதங்களில் சமர்ப்பித்துவிடுங்கள்


எல்லாச் செயல்புரியும் சக்திகளையும் சாயி பாதங்களில் சமர்ப்பித்துவிடுங்கள். பிறகு அவர் ஆணையிட்ட ரீதியிலேயே செயல்படுங்கள். சாயி சர்வசக்தியும் நிரைந்தவரென்பதை அறிந்துகொள்ளுங்கள். பாரத்தை அவர்மீது போட்டுவிட்டு அபிமானம் கொள்ளாது செயல் புரியுங்கள்;எல்லா சித்திகளையும் பெறுவீர்கள். மாறாக,மிகச் சிறிய அளவில் அபிமானம் ஒட்டிகொண்டிருந்து, 'நான்தான் செய்கிறேன்' என்று நினைத்தால் ஒரு கணமும் தாமதமில்லாது உடனே அதனுடைய விளைவு தெரியும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 5, 2015

பாபாவின் அனுமதி


பக்தர் ஒருவர் ஷிர்டி சென்று பாபாவை தரிசிக்க விரும்பினால் அவரால் நினைத்த மாத்திரத்தில் ஷீரடிக்குச் சென்றுவிடமுடியது. அதற்கு பாபாவின் அனுமதி தேவை. பாபா விரும்பினால் ஒழிய யாராலும் ஷிர்டிக்குச் சென்றுவிட முடியாது.பாபாவின் அருளால் ஷிர்டிக்குச் செல்லும் பேரு ஒருவருக்கு கிடைத்து விட்டால், அவர் ஷிர்டிக்குச் சென்று, தான் விருப்பப்பட்ட நாட்கள் வரை அங்கே தங்க இயலாது. பாபா அனுமதி கொடுக்கும் தினங்கள் வரையே ஷீரடியில் தங்க இயலும்.முற்றிலும் மாறுபட்ட இந்த அனுபவம் சாயி பக்தர்கள் அனைவருக்கும் ஏற்படுவதுண்டு. பாபா தம் பக்தரைத் தன்னருகிலேயே இருக்கச் சொன்னாலோ, அல்லது விலகிப் போகும்படி சொன்னாலோ அதற்குப் பின்னணியில் வலுவான காரணம் இருக்கும்.
ஒரு முறை காகா மகாஜனி என்னும் பக்தர் ஒருவர் மும்பையிலிருந்து ஷிர்டிக்குச் சென்றார். அங்கே ஒருவாரம் தங்கியிருந்து கோகுலாஷ்டமி பண்டிகையைக் கண்டு மகிழ விரும்பினார். 
பாபாவின் தரிசனத்தை பெற்றவுடனே, பாபா அவரை, "எப்போது விட்டுக்கு திரும்பப் போகிறாய் ?" என்று கேட்டார்.
காகா மகாஜனிக்கு பாபாவின் இந்த கேள்வி விநோதமாகப்பட்டாலும். "தங்கள் எப்போது அனுமதி அளிக்கிறீர்களோ அப்போதே நான் புறப்பட்டு விடுவேன்" என்றார். உடனே பாபா, நாளைக்கு போ! என்று சொல்லிவிட்டார்.பாபாவின் உத்தரவு ஏமாற்றத்தை அளித்தாலும் , ஆணைப்படி அவர் அடுத்த நாளே மும்பைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
மும்பையில் காகா மகாஜனி தமது அலுவலகத்துக்குப் போய்ச் சேர்ந்ததும்தான் அங்கே அவரது எஜமானர் அவரது வரவுக்காகக் கவலையுடன் காத்திருப்பதை அறிந்தார். ஒரு வாரம் கழித்து வர வேண்டியவர், முன்றாம் நாளே திரும்பி வந்ததைக் கண்டதும் அவரது எஜமானர் மிக மகிழ்ந்தார்.பாபாவின் அருளை வியந்து, கண்களில் நீர் மல்க, காகா மகாஜனியால் மட்டுமே செயலாற்ற முடியும் வேலை ஒன்றை அவரிடம் ஒப்படைத்தார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 4, 2015

ஸ்திரமான நம்பிக்கை


சாயிநாதருக்கு, இரண்டு கைகளையும் ( வணக்கம் செய்பவை)  தலையையும் (தாழ்த்தி வணங்கும் அங்கம்)ஸ்திரமான நம்பிக்கையையும் வேறெதிலும் நாட்டம் கொள்ளாத சிரத்தையையும் தவிர வேறென்ன வேண்டும்! பக்தனின் நேர்மையான நன்றியுணர்வே அவருக்குப் போதுமானது. - ஸ்ரீ சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 3, 2015

முழு நம்பிக்கை

                                              

என்னிடம் முழு நம்பிக்கை இருந்தால் நிறைவேறாத காரியம் இருக்காது. விசுவாசமே ஒரு வடிவம் கொண்டு நானாக இருக்கிறேன். ஆகையால் உங்கள் நம்பிக்கையை என் மேல் உறுதியக்குங்கள். உங்களுக்கு முன்புறமும்,பின்புறமும் நானே இருப்பதை கிரகிப்பீர்கள். உன் காரியங்கள் அனைத்திலும் நான் இருப்பேன். இது என்னுடைய வாக்கு தானம்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 2, 2015

தைரியத்தை இழந்துவிடதே

                                                
"தைரியத்தை இழந்துவிடதே; உன் மனத்தில் எந்தவிதமான கவலையும் வேண்டாம்; சுகமாகிவிடும்; கவலையை விடு. பக்கீர் தயாளகுணமுள்ளவர்;உன்னை ரட்சிப்பார்"- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்].

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 1, 2015

மனத்தை ஸ்திரபடுத்துங்கள்

புலன் அனைத்தும்,மனமும் எப்போதும் இறைவனது வழிபாட்டிற்கே உரித்தாகப் படட்டும்.வேறு எவ்விதப் பொருள்களிலும் எவ்விதக் கவர்ச்சியும் வேண்டாம். உடல்,செல்வம்,வீடு முதலிய வேறு எதைப்பற்றியும் மனது அலைந்து திரியாமல் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருப்பதிலேயே மனத்தை ஸ்திரபடுத்துங்கள்.அப்போது அது அமைதியாகவும்,அடக்கமாகவும்,கவலையற்றும் இருக்கும்.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

GURU CHARITHRA TAMIL -PART-3 / குரு சரித்திரம்http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

GURU CHARITHRA TAMIL -PART-3 / குரு சரித்திரம்http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...