Tuesday, September 29, 2015

தியாகம்


எனது  மொழிகளைக்  காப்பதற்கு  நான்  எனது  உயிரையே  தியாகம்  செய்வேன். எனது  மொழிகளுக்கு  மாறுபட்டு நான்  இருக்கவே மாட்டேன். - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா [ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

துவாரகாமாயீ

 "துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு  உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்".


         

பாபாவின் திருவாய்மொழியை விகற்பமாகப் பார்ப்பவர்களுக்கு எந்த சங்கற்பமும் நிறைவேறாது. சங்கற்பம் சக்தியில்லாததும் பலனளிக்காததுமான பிதற்றலாகவே முடியும். பாபாவின் வசனத்தின் பொருளை எவர் வணக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறாரோ, அவர் இகத்திலும் பரத்திலும் நலம் பெறுவார். எவர் அதில் தோஷமும் குதர்க்கமும் காண்கிறாரோ, அவர் அதலபாதாளத்தில் வீழ்கிறார்.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, September 28, 2015

காரியம் கைகூடும்


என்னிடம் அடைக்கலம் தேடி வந்தவர் நிவாரணம் பெறவில்லை என்பது, சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களிலும் நடக்காத விஷயம். உங்களுடைய  காரியம் கைகூடும் என்று அறீவீர்களாக .-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, September 27, 2015

இடைத் தரகர்களின் உதவி

பக்தர்களின் நம்பிக்கை, நேர்மையான பக்தி, ஆன்மீக வளர்ச்சிக்கேற்ப, சாய்பாபா அளித்திடும் அனுபவங்கள் பக்தருக்கு பக்தர் மாறுபடும். சில முக்கியமான நிகழ்வுகள் மூலம் பாபா சில பக்தர்களுக்கு உதவுகிறார். அவர்கள் வாழ்க்கையில் பொருளாதார மேம்பாட்டை அளிக்கிறார். சில பக்தர்களுக்கு கனவுகளில் தோன்றி, கனவுகளில் செய்திகள் சொல்லி சிலரது பக்தியை அதிகப்படுத்துகிறார். முழுமையான நம்பிக்கை, நேர்மை மற்றும் பக்தியுடன் சாயிபாபாவை நோக்கி யார் பிரார்த்தனை செய்தாலும் பாபா அவர்களுடன் நேராக பேசுகிறார், அவர்கள் இடைத் தரகர்களின் உதவியை நாடத் தேவையில்லை.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, September 26, 2015

மகத்தான விளையாட்டுக்காரர்

மனிதன் தானே செய்விப்பவனும்,அனுபவிப்பவனும் என்று நினைத்துக்கொண்டு முடிவற்ற இடர்பாடினால் தன்னை தானே சிக்கவைத்துக் கொள்கிறான். விடுவித்துக்கொள்ளும் வழியும் அவனுக்கு புலப்படவில்லை. பாபாவின் பாதத்தில் செலுத்தும் அன்பான  பக்தி ஒன்றே ஒரே வழி.


சாய்பாபா என்னும் மகத்தான விளையாட்டுக்காரர் தமது அடியவர்களை வழிநடத்துகிறார், அவர்களை தாமாகவே, தமது பண்புருவாகவே மாற்றம் செய்து கொள்கிறார்.- ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, September 25, 2015

நான் வழிகாட்டுகிறேன்நிலையற்ற புத்தியுள்ள மனிதன், ஒரு முறை கவலையை இறக்கிவைப்பான். இன்னொரு முறை அதை தன் மீது ஏற்றிக்கொண்டு திரிவான். அவனது மனதுக்கு உறுதி என்றால் என்ன என்பதே தெரியாது. அவனுக்கு உதவி செய்ய நான் இறக்கம் கொண்டுள்ளேன். உங்களுடைய நம்பிக்கையை என் மீது வைத்து அதை பற்றிக்கொள் நான் வழிகாட்டுகிறேன்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, September 24, 2015

9 வியாழக்கிழமை விரதம்


வைதீகம், பட்டினி(விரதம்)  இவற்றுக்கு பாபா முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவர் விரும்புவது எல்லாம் தன் பக்தனிடம் உளப்பூர்வமான நம்பிக்கையை மட்டுமே.

பாபாவுக்கு பிடித்த ஒரு சிறுவன் ஒருவன் இருந்தான். அவனது முதல் ஆண்டு பிறந்தநாள் விழா மாதவராவ் தேஷ்பாண்டே வீட்டில் சிறப்பாக நடந்தது. இந்த விழாவுக்கு பாலா சாகேப் பாடே என்ற பாபா பக்தரும் அழைக்கப்பட்டிருந்தார். அவர் வர இயலாமையைத் தெரிவித்துவிட்டு, பாபாவை பார்க்கச் சென்றிருந்தார்.
"பிறந்தநாள் விழா விருந்தில் சாப்பிட்டாயா? என்று கேட்டார் பாபா." இன்று வியாழக் கிழமை ஆதலால் நான் சாப்பிடவில்லை! என்றார் பாலா சாகேப்.
"இருந்தால் என்ன?" என்றார் பாபா. "குருவுக்கு உகந்த நாட்களில் நான் வெளியே சாப்பிடுவதில்லை. அது என் வழக்கம்!" என்றார் பாலா சாகேப்.
"யாரை திருப்திப்படுத்த இந்த விதி?" என்று பாபா கேட்ட போது, "தங்களைத் திருப்திப்படுத்தவே !" என்றார் பாலா சாகேப்.
"அப்படியானால் நான் சொல்கிறேன், மாதவராவ் அளிக்கும் விருந்தில் சாப்பிடு!" எனக் கூறி திருப்பி அனுப்பினார். பாலா சாகேப் விருந்துக்கு வந்து சாப்பிட்டார். 
நான் உன்னோடு தானே இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு.

பாபாவின்  மிக நெருங்கிய பக்தர்களில் ஒருவரான தத்யா என்பவர், மிகவும் வைதீகமானவர். முறையாகத் தவறாமல் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர். ஆனால், பாபாவிடம் வந்த பிறகு, பாபா, விரத நாட்களில் தின்பதற்கு எதையாவது தந்து கொண்டேயிருந்ததால், அவர் பட்டினி இருப்பதை நிறுத்த வேண்டியதாயிற்று. மனுதர்ம சாஸ்திரம் போன்ற சட்ட நூல்கள் கூட, சாஸ்த்திரங்களுக்கும் பரிபூரணமடைந்த ஞானி ஒருவரின் சொற்களுக்கும் முரணிருக்குமாகில், ஞானியின் சொற்களே ஏற்கப்பட வேண்டுமென்றுதான் கூறுகின்றன.

பொதுவாக சாய்பக்தர்கள் தங்கள் விருப்பம் நிறைவேற 9 வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து அவரை பூஜித்து வழிபடுவார்கள். இந்த விரதத்தை ஏதாவது ஒரு வியாழக்கிழமை தான் தொடங்குவார்கள். 
எனவே உங்களது மேலான லட்சியம் நிறைவேற இன்று நீங்கள் 9 வார சாய்பாபா விரதத்தைத் தொடங்கலாம். இது நல்ல வாய்ப்பு. அதிர்ஷ்டமான வாய்ப்பு. சாய்பாபா ஒரு போதும் பட்டினியாக இருந்ததில்லை. மற்றவர்களையும் பட்டினியாக இருக்க விட்டது இல்லை. எனவே பட்டினி கிடந்து 9 வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். 

அதற்கு மாறாக 9 வியாழக்கிழமைகளிலும் சாய்பாபா கதை படித்தும், அற்புதங்களை வாசித்தும் விரதம் இருக்கலாம். "சாயி சாயி" என்று அவரது நாமத்தை தொடர்ந்து உச்சரிக்கலாம். அது ஆறு கடலுடன் இரண்டற கலந்து விடுவது போல உங்களை சாய்பாபாவுடன் இரண்டற கலந்து விடசெய்யும். ஜெய் சாய்ராம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, September 23, 2015

உபாஸனி பாபாவின் சிறப்பு' பெரியவர் '  என்று பாபா  கூறுவதை 'ஆத்மீகத் துறையில் முன்னேற்றம் அடைந்தவர் ' என்ற பொருளில் எடுத்துக்கொண்டால், சாயிபாபாவின் இறுதிச் சடங்குகளைச் செய்த உபாஸனி சாஸ்திரியை, உபாஸனி பாபா மஹாராஜாக மாற்றியதோடு, வெளிப்படையாகவே தமக்கும் உபாஸனி பாபாவுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என்று அறிவித்தார்.

தனது முழுச் செல்வத்தையும் உபாஸனி பாபாவுக்குக் கொடுப்பதாகக்  கூறினார் பாபா . சில ஜனங்கள் சாயிபாபாவின் கூற்றையே ஒதுக்கிவிட்டு,  உபாஸனிபாபாவைச் சாயிபாபாவைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக மதிக்கின்றனர். இருந்தும் தம்மை சாயிபாபாவின் பக்தர்களாக கருதுகின்றனர். ஒருவர் சத்குருவாக இருந்தால் , அது மற்றவரைச் சத்குருவாக இருப்பதிலிருந்து தடுக்கிறது என்று அவர்கள் கருதினர் போலும். தமது நிலைக்குச் சற்றும் தாழாத ஒரு சத்குருவே தமது உடலுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்வது என்பதைக் காட்டிலும், ஒருவருக்கு உயர்ந்த மரியாதை வேறு என்ன இருக்க முடியும் ? உண்மையில் ஆத்மீகத் துறை வரலாற்றில், இதற்கு இணையாகக் கூறத் தகுந்தது வேறு எதுவுமே இல்லை எனலாம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, September 22, 2015

பாபாவுக்கு மிக நெருங்கிய பக்தர் யார் ?வேறெதிலும் ஈடுபடாத  விசுவாசத்துடன், மனம்,வாக்கு, உடல், செல்வம், அனைத்தயும் சாயி பாதங்களில் சமர்ப்பணம் செய்துவிடுபவரே  பாபாவுக்கு மிக நெருங்கிய பக்தராகிறார்.- ஸ்ரீ சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

SAI SATCHARITHRA TAMIL

ஸ்ரீ சாய் சத்சரிதத்தின் அனைத்து அத்யாயங்களையும் காண இந்த லிங்க்' ஐ கிளிக் செய்யவும்.

https://www.youtube.com/playlist?list=PLwqvrbsoIAx7j-cTpiT4Gw5dKRifkyhir
Monday, September 21, 2015

குரு பரம்பரை

ஒவ்வொரு சாய் பக்தரும் அறியவேண்டிய விஷயம் தத்த  குரு பரம்பரை.

 குரு பரம்பரை


ஆதி குரு ஸ்ரீ குருதேவதத்தர்பிரம்மா விஷ்ணு சிவனின்  அவதாரமே ஸ்ரீ தத்தாத்ரேயர்குருவிற்க்கெல்லாம் குருவானவர்.எப்போதும்வாழும் அவதாரமும் ஆவார்.குரு பரம்பரை என்பது  தத்தாத்திரேயரின் அவதாரத்துக்குப் பிறகே தோன்றின. அவரே குரு பரம்பரை என்பது துவங்க வழி வகுத்தார். திருமூர்த்திகளின் அவதாரமான அவரே குருக்களுக்கு எல்லாம் குருவான சத்குரு ஆவார்.  இந்த பூமியில் குரு மற்றும் சிஷ்யர்களுக்கு இடையே எப்படிப்பட்ட உறவு இருக்க வேண்டும், ஒரு குருவின் மூலமே மக்களின் மன நிலையை ஆன்மீக வழியில் செலுத்தி கலிகாலத்தில் கலியின் தாக்கத்தினால் விளையும் தீமையை எப்படி அழிக்க வேண்டும் போன்றவற்றை  நடைமுறையில் எடுத்துக் காட்டவே தத்தாத்திரேயர் தாமே ஒரு குருவாகவும் அவருடைய சிஷ்யராகவும் பல அவதாரங்களை எடுத்துக் காட்டி உள்ளார்.  தத்தாத்திரேயரே ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபாவாகவும், ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளாகவும், ஸமர்த்த ஸ்வாமிகளாகவும், ஷீரடி சாயிபாபா, மானிக் பிரபு போன்ற பல ரூபங்களில் தோன்றி முதல் குரு பரம்பரையை உருவாக்கினார். இவர்களில் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளே ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகளாக பிறப்பை எடுத்தார் என்றும் சிலர் நம்புகிறார்கள்.

ஸ்ரீ தத்தர் வழி வந்த குருமார்களை உள்ளடங்கியதே தத்த பரம்பரை.நமது சத்குரு ஸ்ரீ சாய்பாபா குரு பரம்பரையின் கடைசி குரு ஆவார்.

குரு பரம்பரையில் உள்ள ஒவ்வொரு குருமார்களை பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

1.ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபா. (1300 A .D )


ஸ்ரீ தத்தாத்ரேயரின் முதல் அவதாரம்தந்தை ஸ்ரீ அப்பளராஜா ஷர்மா,தாய் பதிவிரதை சுமதிக்கு மூன்றாவது மகனாக ஆந்திர மாநிலம்கோதாவரியில் உள்ள பித்தாபுரத்தில்  பிறந்தார்தனது பாதங்களில்சங்கு சக்கர முத்திரைகளை கொண்டந்தாலேயே இப்பெயரால்அழைக்கப்பட்டார்.

2. ஸ்ரீ ந்ரசிம்ம சரஸ்வதி சுவாமிகள்.(AD 1378 to 1459)


கலியுகத்தில் ஸ்ரீ தத்தாத்ரேயரின்  இரண்டாவது  அவதாரமாகும்.
தந்தை ஸ்ரீ மாதவ்,தாய் அம்பா பவானிக்கு மகாராஷ்டிர மாநிலம்கரஞ்சபூரில் பிறந்தார்இவர் பிறந்தவுடன் அழுவதற்கு மாறாக 'ஓம் 'என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரித்தவர்.

3.மாணிக் பிரபு.1817 A .D


தந்தை ஸ்ரீ மனோஹர நாயக ஹரகுடேதாய் ஸ்ரீ பய தேவி,தொடர்ந்து16 வருடங்கள் குருச்சரித்திரத்தை பாராயணம் செய்ததன் பலனாக,குரு தத்தாத்ரயரே நேரில் காட்சி அளித்து தானே அவர்களுக்குமகனாக பிறப்பதாக உறுதியளித்து ,மகாராஷ்டிராமாநிலம்,கல்யானுக்கு அருகில் உள்ள லத்வந்தி என்னும் கிராமத்தில்பிறந்தார்தனது 48 வது  வயதில் ஜீவசமாதி அடைந்தார்.

4.அக்கல்கோட் ஸ்ரீ சுவாமி சமர்த்தர்.1900 AD.

ஸ்ரீ தத்தரின் 4 வது அத்தியாயம்இவரின்  பிறப்பு தாய் தந்தை பற்றியகுறிப்புகள் இல்லைகுருச்சரித்திரத்தில் 2 வது அவதாரம் ஸ்ரீ  ந்ரசிம்மசரஸ்வதி அவர்கள் 1458 ம் ஆண்டு கர்தாளிவனத்தில் மஹாசமாதிஅடைந்ததாக குறிப்பிடபட்டிருக்கிறது. 300 ஆண்டுகள் கழித்து ஒருமரம்வெட்டியின் கோடாரி மரம் வெட்டும்பொழுது தவநிலையில்இருந்த ஸ்ரீ  ந்ருசிம்ம  சரஸ்வதி ஸ்வாமிகள் மேல் தவறுதலாகவிழுந்ததுஅங்கிருந்து எழுந்த அந்த தெய்வீக புருஷரே ஸ்ரீ தத்தரின்அடுத்த அவதாரமாக  ஸ்ரீ சுவாமி சமர்த்தர் என்று அழைக்கப்படுகிறார்.

5.சமர்த்த சத்குரு ஸ்ரீ சாய்பாபா.


ஸ்ரீ தத்தரின் கடைசி அவதாரமேஸ்ரீ ஷிர்டி சாய்பாபாஇவரை பற்றியோஇவரது லீலைகளை பற்றியோ வார்த்தைகளால் யவராலும்  விளக்க இயலாது. எனினும் அவரின் 11 உபதேச மொழிகளை இங்கு பதிவு செய்கிறோம்.

1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.
2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.
3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.
5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.
6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.
7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.
9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.
10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.
11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, September 20, 2015

குருவின் கிருபை பூரணமாக கிடைக்கும்

பக்த வத்சலனான சத்குரு தன்  கிருபையை எல்லா உயிர்களிடம் எப்பொழுதும் பொழிவார்.அவரைச் சேவித்தும் உன் துன்பங்கள் தீரவில்லையென்றால் உனக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை.உன் மனதில் அவரை சந்தேகிக்கிறாய்.முழுமையான பக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு குருவின் கிருபை பூரணமாக கிடைக்கும்.-ஸ்ரீ குரு சரித்திரம்.

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வர. குரு சாக்ஷாத் பர பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நம:  

சாய் ராம்,  குரு சரித்திரம் படிக்க விரும்பும் சாயி அன்பர்கள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு saibabasayings@gmail.com  குரு சரித்திரம்[தமிழ்] கேட்டு எழுதுங்கள் தங்களுக்கு pdf file இலவசமாக அனுப்பபடும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, September 19, 2015

இறந்தவளைப் பிழைப்பித்ததுD.R. ஜோஷி தேவ்காங்கர் என்பவரது மகளான திருமதி மலன்பாய் என்பவள் காசநோயால் துன்புற்றுக் கொண்டிருந்தால். மருந்துகள் பலனளிக்கத் தவறவே அவளை பாபாவிடம் அழைத்துச்சென்றனர். பாபா அவளை ஒரு கம்பளியின் மேல் படுக்கும்படியும், நீரைத் தவிர, வேறெதுவும் உண்ணாமல்   இருக்கும்படியும் கூறினார். அவரது அறிவுரைப்படியே விழிப்புடன் நடந்து வந்த அப்பெண், ஒரு வார காலத்துக்குப்பின்  ஒரு நாள் விடிகாலை இறந்து போனால்.  பாபா அப்போது சாவடியில் இருந்தார். ஷீரடி வரலாற்றிலேயே பாபா முதன்முறையாக, பாபா காலை எட்டு மணி ஆகியும் சாவடியை விட்டு நகரவில்லை. அந்தப் பெண்ணின் பெற்றோர் அந்திமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, மலன்பாய் மூச்சுவிடுவதைப் போலத் தோன்றியது. அவள் கண்களை விழித்துப்பார்த்தாள். பின்னர் தனது அனுபவத்தை விவரித்தால் :" ஒரு கரும் மனிதன் என்னைத் தூக்கிச் சென்றான். பெரும்பீதியுற்ற நான், பாபாவின் உதவியை நாடி கத்தினேன்.பாபா அங்கே தோன்றித் தமது தடியை எடுத்து அவனை அடித்து என்னை அவன் கைகளிலிருந்து பிடுங்கிச் சாவடிக்குத் தூக்கி வந்தார் " என்றாள். சாவடியைப் பார்த்திராத அவள், அதைப் பற்றி மிகச்சரியாக விவரித்தால். அவள் உயிர் பிழைத்த அக்கணமே பாபா சாவடியை விட்டுப் புறப்பட்டு, மோசமான வசவுகளை உரத்த குரலில் கூறிக்கொண்டும், தமது குச்சியால் பூமியை அடித்துக்கொண்டும், அந்தப் பெண் படுத்துக் கொண்டிருந்த தீக்ஷிதரின் வாடாவை அடைந்தார். 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, September 18, 2015

எது வேண்டுமோ கேள்

பாபா: என் கஜானாவின் சாவி இப்போது உன் கைகளில். எது வேண்டுமோ கேள்.மாதந்தோறும் ரூபாய் ஐந்து முதல் நூறு வரையோ அல்லது எது வேண்டுமோ,எதுவாயினும் நான் உனக்கு அளிக்கிறேன்.

பக்தர் (ரேகே) கேட்க மறுக்கிறார்.

பாபா: ஏதாவது கேள். உனக்கு ஏதாவது கொடுக்க நான் ஆவலுடன் உள்ளேன்.

பக்தர் (ரேகே): நான் எது கேட்பினும் தாங்கள் கொடுப்பீர்கள் என் ஒத்துக் கொள்ளப்பட்டது தானே?

பாபா: ஆம்.

பக்தர் (ரேகே): பாபா,அப்படியானால் நான் விரும்புவது இதுதான். இப்பிறவியிலோ,இனி எனக்கு நேரக் கூடிய பிறவிகளிலோ, தாங்கள் என்னைவிட்டு பிரியக்கூடாது.எப்போதும் தாங்கள் என் கூடவே இருக்கவேண்டும்.

பாபா; அப்படியே ஆகட்டும்.நான் உன்னுடன் இருப்பேன்.உன் உள்ளே இருப்பேன்,புறத்தே இருப்பேன். நீ எப்படியிருந்தாலும்,என்ன செய்தாலும் அவ்வாறு இருப்பேன்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, September 17, 2015

திடமான பக்தி" குருமூர்த்தியிடம்  திடமான  பக்தியும் நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு எப்பொழுதும் இன்னல்களும் ஏழ்மையும் இருக்காது."   - ஸ்ரீ குருச்சரித்ரா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஷிர்டி சாய்பாபா

Wednesday, September 16, 2015

வலுவிழந்துவிடும்


இவ்வுலகம் அழியும்வரை புலன்கள் அவற்றுக்குரிய நாட்டங்களால் ஈர்க்கப்பட்டே தீரும்; இதைத் தடுக்க இயலாது. ஆனால், அந்த நாட்டங்களை பாபாவின் பாதங்களில் சமர்ப்பித்துவிட்டால் அவை இயற்கையாகவே வலுவிழந்துவிடும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, September 15, 2015

ஜாதகம் கைரேகை

ஜாதகம் ,கைரேகைக்காரர்களின் ஜோசியம் ஆகியோரின் முன்னோடி உரைகளைத் தூக்கியெறிந்துவிட்டு என்னை மட்டுமே நம்புங்கள். என்னை நம்பி  என்பால் லயமாகும் மனிதனின் எல்லாக் காரியங்களையும் பொம்மளாட்டத்தைப் போன்று நான் நின்று நடத்துகிறேன் - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா [ஸ்ரீ சாய் சத் சரித்திரம்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, September 14, 2015

எனது விருப்பபடியே நடக்கிறது

எனது உண்மையான பக்தன் எனது அன்பை தவிர வேறெதையும் என்னிடம் எதிர்ப்பார்ப்பது இல்லை.எனது விருப்பமே அவனது விருப்பமாக இருக்கும்.அவனது வாழ்க்கையில் நடக்கின்ற எல்லா நிகழ்வுகளும் எனது விருப்பபடியே நடக்கிறது என திடமாக நம்புவான்.அப்படிப்பட்ட என் பக்தனை காக்க ஏழு கடல்களையும் தாண்டி செல்வேன்.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, September 12, 2015

குரு பக்தியைப் பற்றிச் சில மொழிகள்.

           குரு பக்தியைப் பற்றிச் சில மொழிகள்.


"குருவை நம்பு.ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை"என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். சாய்பாபாவின் மேல் உள்ள நம் பக்தியை வளர்த்துக் கொள்வதற்குரிய சில கருத்துக்களைக் கூறுவது உபயோகமாயிருக்கும் என்று கருதுகிறேன்.

முதன்முதலில் சாயிபாபாவின் ஓர் உருவப்படம் இன்றியமையாத ஒன்று.ஏனெனில், பாபாவும் அவரது படமும் வேறல்ல.தவிர,அது  பாபாவின் மேல் இடையறாத தியானம் செய்ய வேண்டியதின் உயர்வைப் பற்றிச் சக்திவாய்ந்த முறையில் நினைவுபடுத்துகிறது.பாபாவின் படம்,அத்தகைய குறிக்கோளை அடைய முயலும்படித் தூண்டுகிறது.பாபாவின் படத்தைப் பார்ப்பது மிகவும் சக்தி வாய்ந்த சாதனையாகும்.

இரண்டாவதாக ,பாபாவின் வாழ்க்கைச் சரிதத்தைத் தவறாமல் பாராயணம் செய்வது,நமது மனதை ஆத்மீகக் குறிக்கோளை நோக்கி இழுக்கும்.நமது எல்லா எண்ணங்களும் உணர்வுகளும் பாபாவைப் பற்றியே வட்டமிடும்படிச் செய்யும்.பாபாவின் சரிதத்தைக் கற்ற புத்திசாலியான ஒருவருக்குத் தடையே உதவியாக மாறிவிடுகிறது.

மூன்றாவதாக, எப்போதுமே பாபாவின் நினைவிலேயே மூழ்கி,அவரது திவ்ய நாமத்தை இடையறாது உச்சரிப்பதில் நம் மனதை ஈடுபடுத்தும்படியான வழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

நாலாவதாக,நாம் எதை உண்டாலும் அல்லது பருகினாலும்,அதை மானசீகமாகப் பாபாவுக்கு நிவேதனம் செய்து,அவரது பிரசாதமாக உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

ஐந்தாவதாக, நாளின் முதல் 15 நிமிடநேரத்தை,நாள் முழுவதும் நாம் பாபாவின் நினைவில் தோய்ந்திருப்பதற்காக, நம் பாவனையை இசைவு செய்துகொள்ளுவதில் செலவிடவேண்டும்.மீண்டும்,தூங்குவதற்கு முன்,நாளின் இறுதி 15 நிமிடங்களையும் பாபாவைப் பற்றிச்  சிந்திப்பதிலும் செலவிட முயல வேண்டும்.

ஆறாவதாக, ஸ்ரீ சாயிபாபாவின் விபூதியை நாள்தோறும் இட்டுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஏழாவதாக,வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் பாபாவை மனமார வழிபடுவதற்காக ஒதுக்க வேண்டும்.பாபா,தமது படத்தோடு ஒன்றுப்பட்டவர் என்பதைப் பலமாக நினைவுகூர்ந்து,அவரது இருப்பை உணர்ந்து,அவரது படத்தைப் பூஜை செய்ய வேண்டும்.

எட்டாவதாக முடிந்தபோதெல்லாம்,தினசரி,வாரந்திர சாய் சத்சங்கத்தில் பங்கேற்க முயல வேண்டும்.

                                                                             - ஆச்சார்யா  E . பரத்வாஜா.
                  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, September 11, 2015

ஷிர்டி சாய்பாபா சமாதி மந்திர் பஜனைகள்

அவநம்பிக்கை


இதயத்தில் எந்த மூலையிலாவது ஒரு சிறு மணல் துகள் அளவு அவநம்பிக்கை இருந்தாலும் என்னைப் பின்பற்றி பயன் இல்லை. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, September 10, 2015

திடமாக நிற்கிறேன்

நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் மன்றாடிக் கெஞ்சி பக்தியுடனும் விசுவாசத்துடனும் கை நீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும் விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவுபகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன். -ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, September 9, 2015

ஷிர்டி ஸ்ரீ சாய்பாபாவின் நான்கு வேளை ஆரத்தி பாடல்கள் .

           ஷிர்டி ஸ்ரீ சாய்பாபாவின் நான்கு வேளை ஆரத்தி பாடல்கள் .


காகட ஆரத்தி.

மத்யான ஆரத்தி 

தூப் ஆரத்தி

சேஜ் ஆரத்தி


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

தியானம் செய்வீராக


என்றும் நிலைத்து நிற்றல், பயமின்மை, விடுதலை பெறுதல், சுதந்திரம், பரமாத்மாவை அடைதல் - இவைதான் ஒரு ஜீவன் செய்யவேண்டியதும்  அடையவேண்டியதும் ஆகும். இவ்வுலக வாழ்வு நிலையில்லாதது என்ற தெளிவு பிறக்கும்போது, சுற்றியிருக்கும் மாயா உலகம் மனிதனை எதிர்க்கிறது. யாத்திரிகன் எவ்வழி செல்வது என்றறியாது தடுமாடுகிறான்.
இப்பிரபஞ்சமென்னும்  மாயை இதுவே. இதை மாயையென்றும் இறைவனின் விளையாட்டென்றும் முடிவில்லா உணர்வு என்றும் விவரிக்கலாம். இவ்வுலக வாழ்வே கனவில் தோன்றும் ஒரு காட்சி. இக் கனவுக்காகவா இத்தனை வீண் பிரயத்தனங்கள்? விழிப்பேற்பட்டவுடன் கனவு கலைந்துவிடுகிறது. ஆகவே, தன்னுடைய  நிஜஸ்வரூபத்தை அறிந்துகொண்டவன் உலக விவகாரங்களைப்பற்றிச் சிந்தனை செய்வதில்லை. ஆத்மாவின் விஞ்ஞானத்தை அனுபவத்தால் அறியதவரையில், ஆத்மாவின் உண்மையான சொரூபத்தை அறியாதவரையில், சோகமும் மோஹமுமாகிய   பந்தங்களை அறுத்தெரியவேண்டும் என்னும் விழிப்புணர்வைப் பெறுவதற்கு வழி ஏதுமில்லை. ஞானத்தினுடைய பெருமையை பாபா இரவுபகலாக விளக்கம் செய்தாரெனினும், பொதுவாக அவர் பக்திமார்க்கத்தை அனுசரிக்கும்படியாகவே அடியவர்களுக்கு உபதேசித்தார். தயை மிகுந்த சாயி, தம் பக்தர்களுக்கு பக்தி மார்க்கத்தின் பெருமையையும் தியானத்தின் மஹிமையையும் விவரணம் செய்தார். பகவான் ஸ்ரீ  கிருஷ்ணர் ஞானத்தைவிட தியானமே சிறந்தது என்று அர்ஜுனனுக்கு போதித்தார். சாயியும் தம் பக்தர்களுக்கு உலகபந்தகளிலிருந்து  விடுபடும் சாதனையாக அதை நியமித்தார். 

பாபா கூறினார், " நம்முடைய வழிமுறைகள் தனித்தன்மை வாய்ந்தவையல்லவோ! இது ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும். இது உமக்கு மிக உபகாரமாக இருக்கும்.
ஒருமுனைச் சித்தமாக தியானம் செய்வதாலேயே ஆத்மாவைப்பற்றிய விஞ்ஞானம் அடையப்படுகிறது. அந்த தியானமே ஆன்மீக ஒழுக்கம் ஆகும். அதுவே மனத்திருப்தியையும் நிறைவையும் அளிக்கும்.. முதல் காரியமாக, ஆசைகளிலிருந்து விடுபடவேண்டும். எல்லா உயிர்களிலும் உறையும் இறைவனை மனத்திற்குள் கொண்டுவர வேண்டும். அப்பொழுது தியானம் ஒரு வரையறைக்குள் நிற்கும் ; கிடைக்க வேண்டியது கிடைக்கும். இவ்வாறு தியானம் செய்ய உம்மால் இயலவில்லையென்றால், என்னுடைய அவதார உருவத்தின்மீது தியானம் செய்யும். இரவுபகலாக என்னுடைய உருவத்தை நகத்திலிருந்து சிகைவரை எல்லா குணாதிசயங்களுடன் தியானம் செய்வீராக."  http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, September 8, 2015

பாபாவின் அதீத சக்திமும்பையினை சேர்ந்த வியாபாரி சங்கர்லால் கே.பட். அவருக்கு கால் ஊனம்.  அவர் நடப்பது ஒரு மாதிரி கேலி செய்வது போலிருக்கும். இது அவரை மிகவும் வேதனைப்படுத்தியது.  எல்லாவித சிகிச்சை முறைகளையும் செய்து பார்த்தும் எந்த வித பிரயோசனமும் இல்லை. மனதால் ரணப்பட்ட அவருக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. இதற்க்கு வழி தெரியாமல் இருட்டில் நிற்பது போல் உணர்ந்தார். தன் கால் ஊனத்திற்க்கு என்னதான் விடிவு என்பது சங்கர்லால் விசாரிக்க ஆரம்பித்தார்.  அப்போது அவருக்குத் தெரிந்தவர்கள் சீரடி சாயிபாபா பற்றியும் அவரின் வியத்தகு சக்தி பற்றியும் எடுத்துக்கூறினார்கள்.
1911-ம் ஆண்டு அவர் சீரடி வந்தார். பாபாவை வீழ்ந்து வணங்கினார். அவரது ஆசிர்வாதம் பெற்றார்.  பின் பாபா அனுமதியுடன் சீரடியினை விட்டு புறப்பட்டார்.  கொஞ்ச தூரம் நடந்ததும், அவரது நடையில் மாற்றம் தெரிந்தது.  முன்போல நொண்டி நொண்டி நடக்காமல் நன்றாகவே நடந்தார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தனது ஊனம் நிரந்தரமாகவே குணமானது பற்றி நினைத்து நினைத்து பாபாவிற்க்கு நன்றி கூறினார். பாபாவின் அதீத சக்தியை எண்ணி ஆச்சரியப்பட்ட அவர், ஊர் திரும்பியவுடன் பாபாவின் தரிசன மகிமை பற்றியும், வியத்தகு சக்தி பற்றியும் எல்லோரிடமும் சொல்லி அனைவரையும் வியப்படையச் செய்தார். பாபா தன்னிடம் வருபவர்களின் வேண்டுகோளை தனது ஆசியால் தனது பார்வையால் நிறைவேற்றி வந்தார். இப்பொதும் நிறைவேற்றி வருகிறார். அவரின் சமாதி அத்தனை மந்திர சக்தி வாய்ந்தது.  சமாதியில் இருந்துகொண்டே தனது பக்தனின் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு தருகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, September 7, 2015

பாபாவிற்கு சேவை

பக்தர்கள் பாபாவிற்கு எவ்விதமாக சேவை செய்யவேண்டுமென்று தீர்மானம் செய்தாலும், வாஸ்தவத்தில் பாபாதாம் பக்தர்கள் மூலமாக சேவையைச் செய்துகொள்கிறார். இதுவிஷயத்தில் உணர்வூட்டுதலை பாபாவே செய்கின்றார். பக்தர்கள் வெறும் கருவி மாத்திரமே!  பக்தன் மூடமதி படைத்தவனாயினும், அவருடைய வேலையை எப்படிச் சிறப்பாக நடத்திக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.- ஸ்ரீ சாயி இராமயணம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, September 6, 2015

சாயி நாமம்

சாயி நாமத்தை மிஞ்சிய சக்தி வேறொன்றில்லை. சாயியுடன் ஐக்கியமடைய இந்த நாம உச்சாரணை பாலமாய் விளங்கும். சாயி நாமம் உச்சரிக்கப்படும் இடத்தில் சாயிபாபா நேரடியாகவே தோன்றுவார். -ஸ்ரீ சாயி திருவாய்மொழி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, September 5, 2015

சாயி என்ற பரம்பொருள்

பஞ்ச பூதங்களான இவ்வுடம்பு அழியக்கூடியது, நிலையற்றது.  ஆனால் அதனுள் இருக்கும் ஆன்மாவே பரம்பொருள்.  அதுவே அழியாததும், நிலையானதுமான பரிபூர்ண உண்மையாகும்.  இப்புனித மெய்மை, உணர்வுநிலை அல்லது பிரம்மமே மனத்திற்கும், புலன்களுக்கும் அதிபதியாகவும் ஆட்டுவிப்போராகவும் உள்ள சாயி என்ற பரம்பொருள்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, September 4, 2015

சொர்க்கம்

                                       
வியாதிகளுக்கும், கவலைகளுக்கும், வலிகளுக்கும், இன்னல்களுக்கும் எங்கு இடமில்லையோ, யாருமே பசியாலும், தாகத்தாலும், முதுமைபற்றிய பயத்தாலும் எங்கு வருத்தப்படுவதில்லையோ, எவ்விடத்தில் மரணபயம் இல்லையோ, எவ்விடத்தில் விதிக்கப்பட்டது, விதிக்கப்படாதது என்னும் பேதத்திற்கு இடமில்லையோ, எவ்விடத்தில் ஜீவன்கள் பயமற்று உலவுகின்றனவோ, அவ்விடமே துவாரகை (சொர்க்கம்).    
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, September 3, 2015

எல்லாம் பாபாவின் செயல்

செயல்களின் பலனை துறந்துவிட்டவர், ஸங்கல்பத்தையும் தியாகம் செய்துவிட்டவர் பாபாவினுடைய முழுப்பாதுகாப்பை அனுபவிக்கிறார்.
(ஸங்கல்பம் என்பது நான் இந்த காரியத்தை செய்யப்போகிறேன் என்று செய்யும் தீர்மானம். எல்லாம் பாபாவின் செயல் என்ற மனோபாவம் வளர,வளர,ஸங்கல்பம் படிப்படியாக விலகிவிடும்) - ஸ்ரீ சாயி இராமாயணம் .

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, September 2, 2015

சாயியே அடைக்கலம்

"ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தை எவர் பயபக்தியுடன் படிக்கிறாரோ, அல்லது பலமுறைகள் திரும்பத் திரும்பப் பாராயணம் செய்கிறாரோ, அவருடைய சங்கடங்கள் அனைத்தும் குருராயரால் நிவாரணம் செய்யப்படும். வேறெதையும் நாடாமல் ஸ்ரீ சாயியின் பாதங்களில் எவர் சிரம் தாழ்த்துகிறாரோ அவர், தம்மைக் காக்கும் தெய்வமும் அபயமளிப்பவரும் நன்மையைச் செய்பவரும் தீமையை அளிப்பவரும் ஒரே அடைக்கலமும் சாயியே என்று உணர்ந்துகொள்வார்."

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, September 1, 2015

குருபக்தி குருசேவை

குருபக்தி சுலபமானது. கடினமில்லாதது.  ஆனால் மனதைத் திடப்படுத்திக் கொண்டு முழு நம்பிக்கையுடன் குருவிடம் இருக்கவேண்டும். சிவனே குருவென்ற திடமான பாவனையுடன் குருவை சேவிக்க வேண்டும். ஆனால் குருசேவை கடினமானது. கலியின் பிரபாவத்தால் இந்திரிய சபலம், அவதூறுகள் முதலியன வரலாம். ஆனால் மனதை திடப்படுத்தி கொண்டு ஒரே நோக்குடன் குருசேவை செய்யவேண்டும். -ஸ்ரீ குரு சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவின் கருணாகடாக்ஷம் ஒன்றே போதும் !

பாபாவினுடைய கருணாகடாக்ஷமும் ஆசீர்வாதமும் பிரசாதமும் எல்லாத் துன்பங்களையும் ஒழிக்கின்றன; வேறெதுவும் தேவையில்லை ! - ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம் htt...