Friday, September 18, 2015

எது வேண்டுமோ கேள்

பாபா: என் கஜானாவின் சாவி இப்போது உன் கைகளில். எது வேண்டுமோ கேள்.மாதந்தோறும் ரூபாய் ஐந்து முதல் நூறு வரையோ அல்லது எது வேண்டுமோ,எதுவாயினும் நான் உனக்கு அளிக்கிறேன்.

பக்தர் (ரேகே) கேட்க மறுக்கிறார்.

பாபா: ஏதாவது கேள். உனக்கு ஏதாவது கொடுக்க நான் ஆவலுடன் உள்ளேன்.

பக்தர் (ரேகே): நான் எது கேட்பினும் தாங்கள் கொடுப்பீர்கள் என் ஒத்துக் கொள்ளப்பட்டது தானே?

பாபா: ஆம்.

பக்தர் (ரேகே): பாபா,அப்படியானால் நான் விரும்புவது இதுதான். இப்பிறவியிலோ,இனி எனக்கு நேரக் கூடிய பிறவிகளிலோ, தாங்கள் என்னைவிட்டு பிரியக்கூடாது.எப்போதும் தாங்கள் என் கூடவே இருக்கவேண்டும்.

பாபா; அப்படியே ஆகட்டும்.நான் உன்னுடன் இருப்பேன்.உன் உள்ளே இருப்பேன்,புறத்தே இருப்பேன். நீ எப்படியிருந்தாலும்,என்ன செய்தாலும் அவ்வாறு இருப்பேன்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவின் சமாதி /சாயி சமஸ்தானம் உருவாகுதல் / காகா சாஹேப் தீக்ஷித்

1918ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாபாவின் உடலைவிட்டு உயிர் பிரிந்த போது, எல்லா பக்தர்களுக்கும் அது பெருத்த அடியாக இருந்தது. சாயியின் உடலை எ...