Saturday, October 31, 2015

கர்மாகர்மாவை அனுபவிக்காமல் குறைக்க இயலாது. இந்த கர்ம சூத்திரம் எல்லோருக்கும் பொருந்தும். வியாதிகளும், துயரங்களும், கர்மாவின்படியே பிராப்தித்தாலும் சில முறை கர்மா, அதிர்ஷ்டத்தை தந்து மகான்களிடம் கொண்டு செல்லும். ஒன்று மட்டும் வாஸ்தவம். கடந்த பிறவிகளின் புண்ய பலன் இருந்தாலொழிய பாபாவின் தரிசன பாக்கியம் கிடைக்காது. விதியின் லீலா விலாசங்களை நம்மால் கூற இயலுமா? பாபாவின் லீலைகள் அற்புதமானவை. எந்த நேரத்தில் பாபாவின்  தரிசனம் கிடைத்ததோ, அந்த நேரமே வாழ்க்கையின் பொன்னான நேரம். பாபாவை தரிசிக்க போகிறோம் என்பதை ஜீவர்கள் அறியமாட்டார்கள். ஆனால் அந்த ஜீவர்கள் தன்னை தரிசிப்பார்கள் என்று பாபா நன்கு அறிவார். ஏன்? காலத்தின் ஓட்டம் அவரின்  கண் விழிகளுக்கு நன்றாகத் தென்படும். காலத்தைக் கட்டுபடுத்துபவரும் அவரே. காலம் பாபாவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். தன்னை பூஜிப்பவர்களுக்கும் , தியானிப்பவர்களுக்கும்,   ஸ்மரிப்பவர்களுக்கும் கர்மாவை தாங்கும் சக்தியை அளிப்பதாகவும், அவரே மறைமுகமாக அதை அனுபவிப்பதுமாக பாபா கூறியுள்ளார்.

"உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும்.ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால்,எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதை போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்.
 கர்மா, எனது பக்தர்களிடம் சக்தியற்ற நிலையில் இருக்கும். ஆகையால்    மிக்க விஸ்வாசத்துடன் என்னையே நினைத்துக் கொண்டிருங்கள். காலத்தின் போக்கு கர்மா பற்றிய சிந்தனையின்றி இருங்கள். நான் இருக்கிறேன்!. நம்புங்கள்." - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, October 30, 2015

குரு கீதை


குரு கீதையின் (குரு சரித்திரம்) ஜபத்தால் ஒருவன் அளவற்ற பயனை எய்துவான். இது எல்லா பாவங்களையும் போக்குவது, எல்லா ஏழ்மையையும் நாசம் செய்வது. அகால மரணத்தை தடுப்பது, எல்லா சங்கடங்களையும் நாசம் செய்வது. யக்ஷர், ராட்சதர், பூதங்கள், திருடர்கள்,புலி முதலிய பயங்களை போக்குவது.  கொடிய குஷ்டம் முதலிய உபத்ரவங்களையும் தோஷங்களையும் நிவாரணம் செய்வது. குருவின் சந்நிதியில் என்ன பலனோ அது படிப்பதாலேயே கிட்டும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, October 29, 2015

குருவே கடவுள்உங்கள் குருவாகிய என்னிடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை, ஆழமான அன்பு கொள்ளுங்கள். இதைத் தவிர வேறுவழிபாடு வேண்டாம். குருவே கடவுள் என்பதில் உறுதியாக நில்லுங்கள். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, October 28, 2015

அஹங்காரமின்மை

அஹங்காரமின்மையே என் வடிவம், என் தத்துவம். என் உதவியை வேண்டுபவர்கள் அஹங்காரமற்றவர்களாக இருக்க வேண்டும் - ஷீரடி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, October 27, 2015

ஏன் வருத்தப்படவேண்டும்

'எல்லாம் பாபா செயல்' என்றால் பின் நாம் எதற்கும் ஏன் வருத்தப்படவேண்டும்?


'இட்டமுடன்' என் தலையிலே இன்னபடி யென்றெழுதிவிட்ட சிவன் செத்துவிட்டானோ! என்பார்கள்.
நக்ஷத்திரங்கள் எல்லாம் கடவுள் வழியால் சுழல்கின்றன. திரிலோகங்களும் அவனுடைய சக்கரத்தில் ஆடுகின்றன. நீ அவன், உன் மனம், உன் மனத்தின் நினைப்புகள் எல்லாம் அவனே. "சர்வம் விஷ்ணுமயம் ஜகத்" - அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச்  சுமக்கின்றாய்? பொறுப்பையெல்லாம் தொப்பென்று கிழே போட்டுவிட்டு, சந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்து கொண்டிரு. எது எப்படியானால் உனக்கென்ன? நீயா இவ்வுலகத்தை படைத்தாய்? நீயா இதை நடத்துகிறாய்? உன்னை கேட்டா நீ பிறந்தாய்? எந்த விஷயத்துக்கும் நீ ஏன் பொறுப்பை வகித்துக் கொள்கிறாய்?
பாபாவை நினைத்து, அவர் செயலென்றும், அவர் பொருட்டாக செயல்படுவதென்றும் நன்கு நினைவில் நிறுத்தி, நீங்கள் எத்தொழிலைச்  செய்யப் புகுந்தாலும், அதில் பாவம் ஒட்டாது. தாமரை இலை மீது நீர் தங்காமல் நழுவி ஓடிவிடுவது போல் உங்கள் மதியைப் பாவம் கவர்ந்து நிற்கும் வலியற்றதாய் உங்களை விட்டு நழுவியோடிப் போய்விடும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, October 26, 2015

செய்யக்கூடிய சக்தி

இதோ பார்,உனக்கு நடப்பவையெல்லாம் மறைந்து வேலைசெய்யும் கர்மவினைகளின் வானளாவிய ஓட்டமே. நான் செய்பவனுமல்லேன், செய்ய வைப்பவனுமல்லேன் என்பதை உறுதியாக அறிந்துகொள்.  ஆனாலும், செய்யக்கூடிய சக்தி என் வாயிற்படியில் படுத்துக்கிடக்கிறது!
எவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் என்மீது தன் பாரத்தைப் போடுகிறானோ, அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, October 25, 2015

நவவித பக்தி

பக்தியின் வெளிபாடுகளைப்பற்றி இவ்விதம் அறிவீராக.-

முதலாவதாக, சிரவணம் (சாயியின் பெருமையை கேட்டல்),
இரண்டாவதாக, கீர்த்தனம்(சாயியின் லீலைகளைப் பாடுதல்),
மூன்றாவதாக, ஸ்மரணம்(சாயியை நினைத்தால்),
நான்காவதாக, பாதசேவனம்(பாதங்களைக் கழுவுதல்-பிடித்து விடுதல்),
ஐந்தாவதாக, அர்ச்சனம்(மலர்களால் அர்ச்சனை செய்து பூஜித்தல்),
ஆறாவதாக, வந்தனம் (பணிதல்-நமஸ்காரம் செய்தல்-வணங்குதல்),
ஏழாவதாக, தாஸ்யம் (அடிமைபோல் சாயிக்கு சேவை செய்தல்),
எட்டாவதாக, ஸக்யம் (சாயியிடம் தோழமை கொள்ளுதல்),
ஒன்பதாவதாக,ஆத்மநிவேதனம் (தன்னையே சாயிக்கு அர்ப்பணம் செய்தல்).

நவவித பக்திகளில் ஏதாவது ஒன்றையாவது பூரணமான பா(BHA)வத்துடன் கடைப்பிடித்தால்,வேறெதையும் வேண்டாத ஸ்ரீ சாயிபாபா,பக்தனுக்கு தம்மை வெளிப்படுத்துவார். 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, October 24, 2015

உபதேசங்களை கடைப்பிடிப்பதில்லைநான் சமாதியடைந்துவிட்ட போதிலும் என்னை நம்புங்கள் என்று பாபா சொன்னார். ஆனால், சாயி பக்தர் என சொல்லிக் கொள்ளும் நம்மில் பலருடைய நிலையைப் பாருங்கள்.

இன்ப நேரத்தில் பாபா இருக்கிறார் என்றும், துன்ப நேரத்தில் பாபா என்னை கைவிட்டார். அவர் இல்லை என்றும் நினைத்துக்கொள்கிறார்கள்.

பாபா இருப்பது உண்மை என்பதில் உறுதியாக இருந்தால், எந்த நிலையிலும் அவர்கள் நம்பிக்கை இழக்கமாட்டார்கள். நம்பிக்கை இழந்தவர்களுக்கு பாபா உயிரோடு இல்லை எனபது உண்மைதான். ஏனெனில், அவர்கள் பாபாவை தங்கள் மனதிலிருந்து கொன்று விடுகிறார்கள்.

நம்பிக்கை உள்ளவர்களோ, தங்கள் துயரத்திலும் திடமாக இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள அவரையே சரணடைகிறார்கள்.

நம்பிக்கை இழக்கிற நிலை எதற்காக வருகிறது? என்பதை ஆராய்ந்து பார்த்தால், பாபாவின் உபதேசங்களை கடைப்பிடிப்பதில்லை. அவற்றை அசட்டை செய்கிறோம். மந்தமாக, உற்சாகமின்றி சோம்பியிருக்கிறோம்.   


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, October 23, 2015

எல்லாவற்றையும் பிரசாதமாக நினை
குசபாவ் என்ற பக்தர் ஏகாதசி விரதத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார். அவருக்கு பாபா எப்படி அருள்பாலித்தார் என்பதை கூறும் கதை:

ஒரு ஏகாதசி தினம், குசபாவ் பாபாவின் அருகில் வந்து அமர்ந்தார். பாபா அவரிடம், இன்று என்ன சாப்பிடுவாய்? எனக் கேட்டார்.

குசபாவ்: ஒன்றுமில்லை. இன்று ஏகாதசி.
பாபா: ஏகாதசி என்றால் என்ன?
குசபாவ்: உபவாசம் இருக்க வேண்டிய தினம்.
பாபா: உபவாசம் என்றால் என்ன?
குசபாவ்: ரோஜஸ் (விரதம்) போன்றது.
பாபா: ரோஜஸ் (விரதம்) என்பது என்ன?
குசபாவ்: பட்டினி இருப்போம். அதாவது சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற கந்த (மண்ணிலிருந்து விளையக்கூடிய) மூலம் தவிர வேறு எதையும் உண்ணோம்.
பாபா: ஓ! கந்தா சாப்பிடுவாயா? இதோ இங்கே கந்தா (வெங்காயம்) இருக்கிறது. சாப்பிடு.
குசாபவ்: ஆச்சாரமில்லாத உணவை பாபா தன் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டு, பாபா தாங்கள் அதை சாப்பிட்டால், நானும் சாப்பிடுகிறேன்.
பாபா: பாபா சிறிதளவு சாப்பிட்டார். குசபாவும் சிறிது சாப்பிட்டார். பாபா சற்று வேடிக்கை செய்து பார்க்க விரும்பினார்.
பாபா: (மற்றவர்களிடம்) இந்த பாம்நியாவை (பிராம்மணன் என்ற சொல்லை ஏளனமாகவும், திரித்தும் கூறுவது) பாருங்கள். ஏகாதசி தினத்தில் வெங்காயம் சாப்பிடுகிறார். 
குசபாவ்: பாபா சாப்பிட்டார். நானும் சாப்பிட்டேன்.
பாபா: நான் உண்டது கந்தா. அதாவது சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பாருங்கள். இப்படி சொல்லிக்கொண்டே பாபா வாந்தி எடுத்தார். வெங்காயம் சர்க்கரை வள்ளிக்கிழங்காக மாறி வெளியே வந்து விழுந்தது.
குசபாவ்: இந்த அற்புதத்தைக் கண்டு, பேராவலுடன் அந்தக் கிழங்கைப் பிரசாதமாக மதித்து எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, October 22, 2015

சர்வ சக்தி வாய்ந்தவர்


பக்தன் தான் சாயியோடு ஒன்றியவன் என்ற பாவனையிலேயே குருவை வழிபட வேண்டும்.  சாயியும் பக்தனைத் தன்னில் ஒன்றியவன் என்றே வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார்.  இவ்வாறான பரஸ்பர சமரசபாவனை இல்லாவிட்டால் எல்லாச் செயல்களும் கேவலம் வெளிவேஷங்களே. அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.  நாம் ஒன்றும் அறியாத குழந்தைகள்.  கோணல் சிந்தனைகளும், உடும்புப்பிடியாக பலவற்றைப் பிடித்துக் கொள்ளுகிற தன்மையும் உள்ள மனதை அவரது பாதங்களில் சமர்ப்பித்து அவர் எப்படி செயல்பட நம்மை அனுமதிக்கிராரோ அப்படியே நடக்க விட்டுவிடுங்கள். நடப்பதெல்லாம் அவன் செயல் என்ற எண்ணம் உங்கள் மனதில் உதிக்கட்டும். எதையும் நான்தான் செய்கிறேன் என எண்ணாதீர்கள். இந்த நிலைக்கு நீங்கள் மாறும்போது அவர் உங்கள் கைகளை வலியப் பிடித்துக்கொண்டு செயலாற்றுவதை உணர்வீர்கள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, October 21, 2015

சாயியின் அமிழ்தம் போன்ற போதனைகள்


சாயியின் அமிழ்தம் போன்ற போதனைகள்:

1. என்னை நேசிப்பவரின் பார்வையில் நான் மட்டுமே தெரிவேன்.
2. அவருடைய வாயில் என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும்.
3. அவர் என்னையே அகண்டமாகத் தியானம் செய்வார்.
4. நாக்கு என் நாமத்தையே ஜெபம் செய்யும்.
5. என் சரித்திரத்தையே பாடிக் கொண்டிருப்பர்.
6. என்னிடம் சேர்ந்தவரின் கடனை தலையில் ஏற்று அவரை கைதூக்கி விடுவதன் மூலம் அக்கடனை திருப்பிச் செலுத்துகிறேன்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, October 20, 2015

அறுவை சிகிச்சை


நானா சாஹேப் பாபாவின் மிகப்பெரிய பக்தர்; ஒருமுறை அவருக்கு முதுகுப்புறம் ஏற்பட்ட கட்டியின் காரணமாக அறுவை சிகிச்சை செய்தாகவேண்டும் என்று டாக்டர்கள் குழு தெரிவித்தது. அவரும் அவ்வாறே தயாரானார்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த நாளில்; அவர் இருக்கும் அறையின் மேல்தளத்தின் ஓடுகள் சரியத்தொடங்கின, அதில் ஒரு கூர்மையான ஓடு மிகச்சரியாக குப்புறப்படுத்துக் கொண்டிருந்த நானாவின் முதுக்கட்டியின் மீது சரக்கென்று விழுந்து, சிதைத்தது. வழியால் துடித்தார் நானா. டாக்டர்கள் அதிர்ந்து போனார்கள்.

கட்டி உடைந்து, ரத்தமும், சீழுமாய் வெளியேறிற்று. டாக்டர்கள் அவசர அவசரமாய் நானாவை சோதித்தார்கள். என்ன ஆச்சரியம்! அறுவை சிகிச்சையே செய்யவேண்டாம் என்று சொன்னது மருத்துவக் குழு.  அத்தனை அற்புதமாக ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆம். ஏழெட்டு டாக்டர்கள் உத்திரவாதம் தராமல் செய்வதாக இருந்த அறுவை சிகிச்சையை, உத்திரத்திலிருந்து விழுந்த ஒரு ஓடு செய்துவிட்டது!

சில நாட்கள் சென்றன. நானா  சாஹேப் பூரண குணமடைந்ததும் பாபாவைக் காணச் சென்றார்.

"வா-வா .." என்று அவரை அழைத்த சாயிபாபா, தன் ஆட்காட்டி விரலை நானா சாஹேப் முன்னால் நீட்டினார். ஒன்றும் புரியாமல் பார்த்தார் நானா. பாபா புன்னகைத்தார். "என்னப்பா, என்னிடம் நீ சொல்லாவிட்டால் எனக்குத் தெரியாதா என்ன? இதோ என் ஆட்காட்டிவிரலால் கூரையிலிருந்து ஓட்டினைத் தள்ளி, உனக்கு சிகிச்சை செய்ததே நான்தான்!" என்று புன்னகைத்தார் ஷிர்டி சாயிபாபா.

பரவசத்தில் நெகிழ்ந்து போனார் நானா சாஹேப்.

ஆமாம். உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் பாபாவை பிராத்தனை செய்யுங்கள். நீங்கள் பிராத்தனை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, பாபா உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார், உங்கள் மேல் அக்கறையுடன்தான் இருக்கிறார் என்பதை மட்டுமாவது நம்புங்கள்.உளமார நம்புங்கள். அப்புறம் பாருங்கள், உங்கள் வாழ்வில் நடக்கும் அற்புதங்களை! நம்பவே முடியாத ஆச்சர்யங்களை. 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, October 19, 2015

பாபா தென்படுகிறார்பாபா யாரை எப்போது எப்படி இழுக்க வேண்டும் என திட்டமிடுகிறாரோ, அதை முடிப்பதற்காக தானே முன்கூட்டி அங்கு சென்று கவனிக்கப்படாத காட்சியாளனாக அமர்ந்து விடுகிறார். அவர் அங்கே ஆண்டுக் கணக்கில் இருந்தாலும் நாம் அவரை அடையாளம் கண்டு கொள்வதில்லை. நமக்கு விதிக்கப்பட்ட நேரம் எப்போது வருகிறதோ, அப்போது அவர் நமக்குத் தென்படுகிறார், அது மட்டுமல்ல, நம்மை பக்தனாக்கி, பித்தேற்றி எல்லாவற்றையும் துறந்து தன்னை மட்டுமே நினைக்கும்படி செய்துவிடுகிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, October 18, 2015

பாபாவின் பரிட்சைநம்பிக்கை இல்லாதவர்களுக்கு கடவுள் அற்புதத்தைச் செய்வதே இல்லை. நம்பிக்கையில்லாதவர்களுக்கு கடவுளிடமிருந்து அற்புதத்தைப் பெற இயலுவதுமில்லை என்றும் கூறலாம். எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் கடவுள் மீது நம்பிக்கை வைக்கும்போது, அவர் நமக்கு தன்னம்பிக்கையைத் தருகிறார்.

பொறு, உன்னுடைய கவலைகளை தூர எறி, உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. ஒருவன் எவ்வளவுதான் நசுக்கப்பட்டவனாக இருந்தாலும், இம்மசுதியில் கால் வைத்தவுடனே மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான். இங்கேயுள்ள பக்கிரி மிகவும் அன்பானவர். இவர் இவ்வியாதியைக் குணப்படுத்துவார். அன்புடனும், ஆசையுடனும் எல்லோரையும் பாதுகாப்பார், என்று, பக்தனுக்கு பாபா நம்பிக்கை தருவார்.  

பல வேளைகளில் நமது நம்பிக்கை ஆட்டம் காணும் அளவுக்குப் பிரச்சனைகள் அதிகமாகும். நம்பிக்கையே போய்விடும். வேறு எங்காவது போய் பார்க்கலாமா? என எண்ணத்தோன்றும். இப்படி அடிக்கடி மனம் மாறுகிறாயா? தன்னம்பிக்கை இழக்கிறாயா? அல்லது வருவது வரட்டும், பாபா தான் என்னோடு இருக்கிறாரே! என தைரியமாக இருக்கிறாயா? என்பதை அவர் கவனிப்பார். என்ன செய்யப்போகிறாய் என வேடிக்கைப் பார்பார். 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, October 17, 2015

குரு


ஒரு பக்தனுக்கு தனது குருவின் திருவடிவே தியானத்திற்கு மூலமாகவும், குருவின் பாதங்களே அனைத்துப் பூஜைகளுக்கும் உரிய மூலப்பொருளாகவும், குருவின் திருவாய் மொழிகளே அனைத்து மந்திரங்களிலும் சிறந்த மூல மந்திரமாகவும், குருவின் திருவருளே முக்திக்கு மூலமாகவும் விளங்குகிறது. -அக்கல்கோட் ஸ்ரீ சுவாமி சமர்த்தர்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, October 16, 2015

கவலைகள் விலகும்சாய் தர்பாருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இங்கு வருவதற்கு எவருக்குமே தடை கிடையாது. சிட்டுக்குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பது போன்று ஸ்ரீ சாய் பாபாவே அவரின் ஆதீனத்திற்கு உங்களை இழுத்து கொண்டார். உடலாலும் வாக்காலும் மனதாலும், ஐந்து பிராணன்களையும் புத்தியையும், உறுதியுடனும், பணிவுடனும், பாபாவின் ஆதீனத்தில் மொத்தமாக விட்டுவிடுங்கள்..இவ்வாறு பாபாவிடம் சரணடைந்த பிறகு எதை பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை. உங்களுடைய கவலைகள் விலகும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, October 15, 2015

குரு

குருவைத் தவிர வேறெவருக்கும் இம் மனிதவுடலுக்கு நற்கதியளிப்பது எப்படி என்பது தெரியாது. குரு தமது கரங்களால் தூக்குவதால் தான் ஜடம் போன்ற மனிதர்கள் மேலெழுப்பப்படுகிறார்கள்.
குரு, மந்திரங்கள், புனிதத்தலங்கள், தேவதைகள், வைத்தியர்கள், இந்த ஐந்திற்கும் ஒருவருடைய நம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும்.
நம்பிக்கையும் விசுவாசமும் எவ்வளவு ஆழமோ,அதற்கேற்றவாறே சித்திகளின் பரிமாணமும் அமையும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, October 14, 2015

மாயை

மாயை  மற்றும் அதன் செயல்பாடுகள் இருந்தால் இருக்கட்டுமே. மாயை எனது பாதங்களில் சரணடைந்து என் ஆதீனத்திலேயே இருக்கும். என்னை எப்போதும் ஸ்மரிக்கின்றவர்களின் அருகில் கூட மாயை வராது. மாயையும் கூட எனது அம்சமே. எனது சேவையிலே மூழ்கி,என்னை சரணடைந்தவர்களுக்கு மாயையால் எவ்விதமான தீங்கும் வராது. என் வார்த்தைகளின் மேல் திடமான விஸ்வாசம் வையுங்கள். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, October 13, 2015

போதனை போதாது, பயிற்சி வேண்டும்
வரிவிதிப்புத் துறையில் குமாஸ்தாவாக இருந்த வி.எச். தாகூர் என்பவர் தமது வேலை நிமித்தமாக வட்கான் என்ற இடத்துக்குச் சென்றபோது, புகழ்பெற்ற கன்னட மகானான அப்பா என்பவரை தரிசித்தார். தாகூர் அவரை வணங்கியபோது, அவர் ஆசீர்வதித்துவிட்டு, "நீ வடக்கே உன் அலுவலக விஷயமாக சுற்றுப்பயணம் போகும்போது ஒரு பெரிய மகானை சந்திப்பாய். அவர் உனக்கு அமைதியடையும் வழியை காட்டுவார்" என்றார்.

தாகூருக்கு ஜூன்னார் என்ற இடத்துக்கு மாற்றல் கிடைத்தது. அங்கு மிக செங்குத்தான நானேகாட் என்ற மலையை எருமை மேல் ஏறி கடக்கவேண்டியிருந்தது. சவாரி அவரது உடலை மிகவும் வலிக்குள்ளாகியது.பின்னர் அங்கிருந்து கல்யான் என்ற இடத்திற்கு மாற்றல் பெற்று வேலை செய்தபோது நானா சாகேப் சந்தோர்க்கர் அறிமுகம் கிடைத்தது. அவருடன் ஷீரடிக்கு சென்று பாபாவை தரிசித்தபோது, அவரைப் பார்த்து

பாபா - "இங்கே காட்டப்படும் வழியானது கன்னட மகானான அப்பாவின் போதனைகளைப் போலவோ, நானேகாட் மலைப்பாதையில் செய்யும் எருமைச் சவாரியைப் போலவோ அவ்வளவு எளிதானதல்ல. இந்த ஆத்மீக வழியில் உன்னால் முடிந்த அளவு முழுமுயற்சி செய்ய வேண்டும். அப்பா கூறிய யாவும் சரியே. இவை எல்லாவற்றையும் பயிற்சியில் கொண்டுவந்து வாழவேண்டும். வெறும் படிப்பு மட்டும் உதவாது. பயிற்சி இல்லாமலும், குருவின் அருள் இல்லாமலும் இருக்கும் வெறும் படிப்பினால் பயன் இல்லை". ஷிர்டி சாய்பாபா  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, October 12, 2015

வழிபாடு


எந்த பக்தர் தமக்கு நன்மைகள் ஏற்பட வேண்டுமென்ற ஆர்வத்தால் உந்தப்பட்டு பக்திபா(BHA)வத்துடனும், ஒருமுனைப்பட்ட மனத்துடனும் ஸ்ரீ சாய் சத்சரித்தத்தை படிக்கிறாரோ, அவருடைய வழிபாடு என்றுமே வியர்த்தம் ஆகாது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, October 11, 2015

குருபாதங்களின் சக்தி

நான்கு புருஷார்த்தங்களில் (அறம்,பொருள்,இன்பம்,மோட்சம்) கடைநிலை மோட்சம். ஆயினும் அதுவும் குருபாதங்களின் சக்திக்கு ஒப்பாகாது. அத்தகைய குருவின் பாததீர்த்ததை அருந்தியவனின் வீட்டைத் தேடிக்கொண்டு மோட்சம் சத்தம் செய்யாமல் வரும். குரு கருணாமூர்த்தியாக அமைந்துவிட்டால்,சம்சார வாழ்க்கை சுகமாக இருக்கும், நடக்காததெல்லாம் நடக்கும். அரைக்கணத்தில் உம்மை அக்கறை சேர்ப்பார்.


"இந்த பாதங்கள் புராதனமானவை.உம்முடைய கவலைகள் எல்லாம் தூக்கியடிக்கப்பட்டுவிட்டன.என்னிடம்  பூரணமான நம்பிக்கை வையும்.சீக்கிரமே நீர் பேறுபெற்றவர் ஆவீர்"
                                                                                         -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, October 10, 2015

ஹிருதயவாசி


பக்தர்களுக்கு அனுக்கிரஹமும் உபதேசமும் அளிப்பதில் பாபாவினுடைய சாமர்த்தியம் ஆலங்காணமுடியாதது.அதை அவர் பல வழிமுறைகளில் செய்தார். அவர்கள் அருகிலிருந்தாலும் சரி,வெகுதூரத்திலிருந்தாலும் சரி, பாபா ஹிருதயவாசியாக (இதயத்தில் வசிப்பவராக) பக்தர்களுடனேயே இருந்தார். - ஸ்ரீ சாயி இராமாயணம் .
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, October 9, 2015

கடமையும் தர்மமும்


 "அமிர்தத்தையொத்த தங்கள் சொல் எங்களுக்குச் சட்டமாகும்.  எங்களுக்கு வேறு எவ்விதச் சட்டமும் தெரியாது.  எப்போதும் தங்களையே நினைவு கூர்கிறோம்.  தங்கள் ரூபத்தைத் தியானிக்கிறோம்.  இரவும், பகலும் தங்களுக்கே கீழ்ப்படிகிறோம்.சரியா, தவறா என்பது எங்களுக்குத் தெரியாது அல்லது அதை நாங்கள் கருதுவதில்லை.  பொருட்களுக்கான காரணத்தை ஆராயவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்புவதில்லை.  ஆனால் உங்களின்  கட்டளைகளுக்கு ஐயுறாப் பற்றுறுதிப்பாட்டுடன் ஒழுங்கான பணிவிணக்கப் பண்புடன் நடத்தலே எங்களது கடமையும், தர்மமும் ஆகும்."-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, October 8, 2015

என்னுடைய பெருமையார் என்னை பெரிதும் நேசிக்கிறாரோ அவருடைய பார்வையில் அகண்டமாக (இடைவிடாது) இருக்கிறேன். நான் இல்லாது அவருக்கு சிருஷ்டியனைதும் (இவ்வுலகம்) சூனியமாகத் தெரியும். அவருடைய வாயிலிருந்து என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, October 7, 2015

சுகமுடன் வாழ்வாய்நீ உண்மையான குருபக்தன் . ஆகையால் குருச்சரித்திரத்தை கேட்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மழை வருவதற்கு முன்பு ஜில்லென்ற காற்று வீசும். அதேபோல் குருவின் கருணை பெறுவதற்கு முன்பு அவர் கதையை கேட்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குரு கிருபையை பெற்றவர்களுக்கு துன்பங்கள் இருக்காது. சத்குருவை பூஜிப்பவர்கள் கண்டிப்பாக குருவின் அருளைப் பெற்று வாழ்வார்கள். ஆகையால் நீயும் குருவை நம்பிக்கையுடன் உறுதியான பக்தியுடன் சேவித்து சுகமுடன் வாழ்வாய் .- ஸ்ரீ குரு சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, October 6, 2015

எதற்காக பயப்படுகிறாய்


எல்லா திசைகளிலும் நான் உன்னை  சூழ்ந்து நிற்கையில் நீ எதற்காக பயப்படுகிறாய்? நீ  எனது பிடியிலேயே இருக்கிறாய். நானே உனது தந்தை[பாதுகாவலன்]. உனக்கு துன்பம் நேர நான் எப்படி அனுமதிப்பேன். வெறும் தண்டத்துக்கா நான் இங்கு இருக்கிறேன்? உனது எல்லா கவலைகளிலிருந்தும் எப்படி விடுவிக்கிறேன் என்று மட்டும் பார். - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.(ஸ்ரீ சாய் சத்சரித்ர சாராம்சம்)


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, October 5, 2015

குருபக்தி

தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா.பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால்,நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும். 
உதாரணத்திற்கு, பாபாவின் நெருங்கிய பக்தரான சாமாவை ஒருமுறை நச்சுப் பாம்பு ஒன்று கடித்துவிட்டது. வலி கடுமையாக இருந்தது. விஷம் மெல்ல உடல் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது. சாமாவும் பயத்தில் மிரண்டு போயிருந்தார். உடல் முழுவதும் சிவந்து போயிருப்பதைப் பார்த்த அருகிலிருந்தவர்களில்  ஒவ்வொருவரும் மருத்துவரிடமும் செல்லவும், விரோபா கோயிலுக்கு ( பாம்பு கடித்தவர்களை இக்கோயிலுக்கு  சென்றால்,உயிர் பிழைத்து விடுவதாக ஷிர்டி மக்கள் நம்பினர்) செல்ல சொன்ன போதும் சாமா " எனக்கு எல்லாமே பாபாதான்.அவரிடமே நான் செல்ல விரும்புகிறேன்.ஒருவேளை எனது உயிர் போவதாக இருந்தாலும் அது எனது ஒரே அடைக்கலமான பாபாவின் மசூதியிலேயே போகட்டும் என்று கூறி அழுதபடி பாபா வாழ்ந்து வந்த மசூதிக்கு (துவாரகாமாயி) ஓடிச் சென்று பாபா பாதத்தில் வீழ்ந்து பணிந்தார் (உயிர் பிழைத்தார்)இதற்குப் பெயர் தான் குருபக்தி. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, October 4, 2015

ஷீரடியில் உள்ள சாய்பாபா சிலை உருவான விதம்

  
                                          

36 வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து 
வந்தனர். அப்பொழுது ஒரு நாள் இத்தாலியில் இருந்து வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது. அது அப்பொழுது எதற்கு வந்தது, ஏன் வந்தது என்று யாருக்கும் தெரியாது. அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை. உடனே துறைமுக அதிகாரிகள் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர். இதை அறிந்த சாய் சன்ஸ்தான் அதிகாரி அதை ஏலத்தில் எடுத்து அதை பம்பாயில் உள்ள பாலாஜி வஸந்த் தாலிம்  என்னும் சிற்பியிடம் பாபாவின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை அளித்து அதே மாதிரி சிலை செய்ய கூறினார். அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி தாலிம் மிகவும் கஷ்டபட்டார். அப்பொழுது பாபா அவர் கனவில் தோன்றி அவருடைய முகத்தை பலவித கோணங்களில் காட்டி சிற்பியின் கஷ்டத்தைப் போக்கி அவரை உற்சாகப்படுத்தினார். சிற்பி பின்னர் தெளிவு பெற்று மிகவும் சிறப்பாக எல்லோரும் எதிர்பார்த்தது போல் மிகவும் அழகாகச் செய்து கொடுத்தார். பின்னர் அந்த சிலை 7ம் தேதி அக்டோபர் மாதம் 1954ம் ஆண்டு பிரதிஷ்டை செய்தார்கள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, October 3, 2015

எட்டுப் பிரகிருதிகள்


எட்டுப் பிரகிருதிகளின் (நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம்) ரூபத்தில் நான் இப்பிரபஞ்சத்தின் நான்கு பக்கங்களிலும் நிறைந்திருக்கிறேன். - ஸ்ரீ சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, October 2, 2015

வெளிப்படையானவைஓர் பக்தன் எவ்வளவு தூரம் நெஞ்சுரங் கொண்டவனாகவும் தீர்மானமுள்ளவனாகவும் இருக்கிறானோ, அங்ஙனமே பாபாவின் உடனடியான பிரதிச் செயலும் இருக்கிறது. அவரது முறை திரையிடப்பட்டதோ இரகசியமானதோ அல்ல. ஆனால் முற்றிலும் வெளிப்படையானவை. - ஸ்ரீ சாய் சத்சரித்திரம். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, October 1, 2015

பாபாவின் அருள்


பாபாவை தரிசிக்க  அவனாகவே  செல்கிறானென்று  ஒருவன் நினைத்தால்  அது வெறும்  டம்பமேயாகும். அவரின் அருளின்றி  எவரே அணுகி  அவரைத் தரிசிக்க இயலும்? மரத்தின் இலைகூட பாபாவின்  ஆணையின்றி அசைவதில்லை. - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...