Monday, November 30, 2015

அருகில் இரு


என் அருகில் இரு;சும்மா இரு. மற்றவற்றை நான் கவனித்துக் கொள்கிறேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, November 29, 2015

ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யம்


ஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்ற  புத்தகம் உண்மையில் கடவுளின் அவதாரமேயாகும். பாபாவின் சக்தி  சத்சரிதத்தின் ஒவ்வொரு எழுத்தின் உள்ளேயும் பொதிந்து கிடக்கின்றன. சத்சரிதத்தை வாய்விட்டு உரக்கவோ, மனதிற்குள்ளாகவோ, மனமும் குரலும் சேர்ந்து உபன்யாசமாகவோ பக்தியுடன் பாராயணம் செய்யும் பொழுது ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யம்  அந்த திசையை நோக்கி ஈர்க்கப்படும். ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை  சென்றடைகின்றன. அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் பக்தன்  இகலோக சுகங்களையும் பரலோக சுகங்களையும் பெறுவான்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, November 28, 2015

அடிமை


அனைத்து கவலைகளையும் மறந்து என்னை மட்டுமே தியானிப்பவர்களுக்கு நான் அடிமை. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, November 27, 2015

அஹங்காரம் ஆணவம்


ஸ்ரீ சாய்பாபாவின் கிருபையைப் பெற நம்மிடம் உள்ள அஹங்காரம், ஆணவம் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும். எல்லாவிதமான படோடபங்களும் பெருமைகளும் ஒழிய வேண்டும். பின்னர் தான் அவரது சக்தியை, இரக்கக்குணத்தை உண்மையான சுபாவத்தை நாம் அறிய இயலும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, November 26, 2015

ஞானம்


" ஸ்ரீ  சாயிபாபாவின் அருள் கிருபையைப்  பெற சிறந்த ஞானம், பேரறிவு தேவை இல்லை. மறுபக்கத்தில் ஞானம் என்ற பெருமிதம், கர்வம் நம்மை அவரிடமிருந்து கண்ணுக்கெட்டாத தூரத்தில் தள்ளிவைத்துவிடும்." 

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, November 25, 2015

அடைக்கலம்


ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவின் தாள் பணிந்து பணிவன்புடன் அவரை அடைக்கலம் புகுபவர் ஒரு தாயின் அன்பிலும் அரவணைப்பிலும் பாதுகாப்பிலும் மடியில் உள்ள குழந்தை போல முற்றிலும் பாதுகாக்கப்படுவார்கள். அவர்கள் அனைத்து செல்வ வளங்களையும் பொருட்செல்வங்களையும் பெறுவார்கள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, November 24, 2015

ஸ்ரீ சாய்பாபாவின் கிருபை


கடவுள் மனித உருவில் அவதரிப்பது மனிதன் எளிய முயற்சியாலேயே சிறந்த பலனை அடைய ஏதுவாகிறது. ஆகையால் மனிதர்கள் கலியுகத்தில் மிக மிக அதிர்ஷ்டம் செய்தவர்கள். நினைத்த மாத்திரத்திலேயே ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவின் அருளானது கிடைத்துவிடும். மனிதன் கலியுகத்தில் வழி தவறி தவறானப் பாதையில் செல்லப் பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் அவற்றைப் போலவே இருமடங்கு வழிகள் ஸ்ரீ சாய்பாபாவின் கிருபையை அடையவும் உள்ளன. இதுதான் சத்தியமான  உண்மை. நாம ஸ்மரணம், சாய் சத்சரித்ர பாராயணம் மற்றும் பல செயல்களும் ஸ்ரீ சாயியின் தொடர்பை ஏற்படுத்துகின்றன. இவ்விதமாக எல்லாவித பக்தர்களின் பாவச் செயல்களும் தீவினைகளும் ஸ்ரீ சாயியின் சைதன்யத்தை அடைகின்றன. ஸ்ரீ  சாயியிடமிருந்து  புண்ணியங்களும் நல்ல அதிர்வலைகளும் அவரைச் சார்ந்த பக்தர்களைச் சென்றைடைகின்றன.    

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, November 23, 2015

மகத்தான விளையாட்டுக்காரர்


மனிதன் தானே செய்விப்பவனும்,அனுபவிப்பவனும் என்று நினைத்துக்கொண்டு முடிவற்ற இடர்பாடினால் தன்னை தானே சிக்கவைத்துக் கொள்கிறான். விடுவித்துக்கொள்ளும் வழியும் அவனுக்கு புலப்படவில்லை. பாபாவின் பாதத்தில் செலுத்தும் அன்பான  பக்தி ஒன்றே ஒரே வழி.
சாய்பாபா  என்னும் மகத்தான விளையாட்டுக்காரர் தமது அடியவர்களை வழிநடத்துகிறார், அவர்களை தாமாகவே, தமது பண்புருவாகவே மாற்றம் செய்து கொள்கிறார். - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, November 22, 2015

ஸ்ரீ சாயி


தேஹமும் இந்திரியங்களும் பொருந்திய ஓர் அமைப்பு - மூன்றரைமுழ நீளமுள்ள பாரவண்டி - இது மட்டும்தானா நமது சாயீ ? இந்த பிரமையை வேருடன் களைந்தெறியுங்கள். ஸ்ரீ சாயி உருவத்திற்கு அப்பாற்ப்பட்டவர். நம் ஊனக்கண்களுக்கத் தெரியாதபோதிலும், அவர் எங்கும்  நிறைந்திருக்கிறார். தம்மளவில் சூட்சமமாக இருந்தபோதிலும், நம்மை அவர்பால் வசீகரித்து இழுக்கிறார். அவருடைய மரணம் ஒரு பாசாங்கு மட்டுமே; நம்மை ஏமாற்றும் ஓர் உத்தியே. பூரணத்துவம் பெற்ற அவர் பல வேஷங்களில் நடிக்கிறார். அவருடைய இதயத்தில் கனிந்த அன்பை கெட்டியாக பற்றிக்கொல்வோமாக! அவருடைய மார்க்கத்தை நன்கு புரிந்துகொண்டு காரியசாதனை பெறுவோமாக!

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, November 21, 2015

விஷ்ணு சகஸ்ரநாமம்


விஷ்ணு சகஸ்ரநாமம் மிகவும் பயனுள்ளது. ஒருமுறை எனக்கு மிகவும் படபடப்பாக வந்தபோது இந்தப் புத்தகத்தைதான் என் நெஞ்சில் வைத்துக் கொண்டேன். ஹரியே நேரிடையாக என் நெஞ்சுக்குள் இறங்கி என்னை காப்பாற்றுவது போல் உணர்ந்தேன். எனவே விஷ்ணு சகஸ்ரநாமத்தை நிதானமாக படி. தினமும் பாராயணம் செய். -ஸ்ரீ ஷீரடி சாய்பாபா. [ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, November 20, 2015

தனது குருவைப்பற்றி பாபா


நான் பன்னிரண்டு வருடங்கள் குருபாதங்களில் இருந்தேன். என் குருவைப்போல குரு கிடைப்பதரிது. அவருடைய சங்கத்தில் நான் அனுபவித்த சந்தோஷத்தை விவரிக்கமுடியாது. அவருடைய முகத்தைப்  பார்த்தவுடனே என்னுடைய கண்கள் தியானத்தில் மூழ்கிவிடும். வேறெதையும் எனக்குப் பார்க்கத் தோன்றாது. எனக்குப் பசியோ தாகமோ தெரியவில்லை. அவர் இல்லாவிட்டால் மனம் அவஸ்தைப்பட்டது. அவரைத் தவிர வேறெதென்மேலும் என்னால் தியானம் செய்யமுடியவில்லை. அவரைத் தவிர எனக்கு லட்சியம் ஏதும் இல்லை. அவரே நான் எப்பொழுதும் கடைப்பிடிக்கவேண்டிய குறிக்கோள். குருவினுடைய திறமை அதியற்புதமானது. என் குருவும் இதையே எதிர்பார்த்தார். இதற்குமேல் எதையும் எதிர்பார்க்கவில்லை. -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, November 19, 2015

அனுமதிக்க முடியாது


பட்டினியாய் இருப்பது நன்றன்று. மனம், உடல், ஆரோக்கியம் மற்றும் இறைவனை அடைய மிதமான உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு புனிதமான நாளில் எனது குழந்தைகள் பட்டினியாயிருப்பதை என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது .- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, November 18, 2015

செல்வம் வந்து சேரும்


வீரபத்ரனின் கேள்வி: " பாபா, செல்வம் என்னை அலட்சியப்படுத்துகிறது. மனைவியோ, இதை கொண்டுவா, அதைக் கொண்டுவா என்று முடிவேயில்லாமல் உரிமையுடன் கேட்கிறாள். போதும், போதும் இந்த அவமானம். எனக்கு இந்த இல்லறத்தின் கெளரவமே வேண்டாம்"
பாபா பதில்: "உன்னுடைய பாக்கியகாலம் நெருங்குகிறது; வீணாக துவண்டுவிடாதே. கையைக் கழுவுவது எவ்வளவு சுலபமோ அவ்வளவு சுலபமாக உனக்கு செல்வம் வந்து சேரும். பெரும் செல்வத்திற்கு அதிபதி ஆவாய்". (பாபாவின் நல்வாக்கு)
பின்னர் நடந்தது: வீரபத்ரனின் தரிசு நிலத்தின் மதிப்பு திடிரென்று உயர்ந்தது. 1 லட்சம் ருபாய் (100 வருடங்களுக்கு முன்பு) கொடுக்கத்தயார் என்று சொல்லிக்கொண்டு வாங்குபவர் ஒருவர் வந்தார்.        

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, November 11, 2015

சமர்த்த சத்குரு

பாபா ஒரு சாதாரண வித்தைகாரர் அல்ல, அவர் ஒரு சமர்த்த சத்குரு. பக்தர்களின் உள்ளங்களில் விசுவாமும் நம்பிக்கையும் நிரம்பி வழிய பாபா சில சமத்காரங்களையோ, வியக்கத்தகும் உத்திகளையோ கையாளுகிறார். நன்றி உணர்ச்சி,பிரேமை,பக்தியாக மாறுகிறது. இவ்வாரு பாபாவின் செயல்பாட்டின் உண்மை நோக்கம் காணப்படுகிறது. கீழ்த்தரமான பற்றுக்களால் உண்டாகும் மாசுகளையும் அதன் விளைவுகளையும் பக்தர்களின் இதயங்களிலிருந்து போக்கி, தூய்மைப்படுத்தி, படிப்படியாக பக்தர்களின் ஆன்மாக்களை உயர்ந்த, மேன்மேலும் உயர்ந்த, நிலைகளுக்கு நடத்திச் சென்று அவர்கள் இறுதியில் தம்முடனே இரண்டறக் கலந்து விடும்படி செய்கிறார் பாபா. தங்கள் தேவைகள் யாவற்றையும் அளிக்கக் கூடிய வள்ளல் என்ற நோக்கத்துடன் மக்கள் பாபாவை அணுகுகின்றனர். அவர்களது லௌகீக தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே பாபாவிடம் செல்கின்றனர். ஆனால் பின்னர் பலர் பாபா ராமன்,சிவன் போலவே தங்கள் இஷ்ட தெய்வம் என்றும், தங்கள் முன்னோர்களின் குல தெய்வமே பாபாவாக புதிய உருவில் தோன்றி வையகத்தில் புராதானதெய்வீக பணிகளை நிறைவேற்றுகிறது எனவும், கண்டு கொண்டுவிடுகின்றனர்.
                                                                             -பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, November 10, 2015

மயக்கத்தில் இருந்து வெளியே வாநீங்கள் ஏதோ ஒரு வடிவத்தை மனதில் இருத்திக் கொண்டு, நான் அவ்விதமாக இருப்பேன் என்ற மயக்கத்தில் இருந்து வெளியே வா. நான் எல்லா ஜீவர்களிலும் இருக்கிறேன். இந்த சத்தியத்தை நீங்கள் உணர்ந்த கொண்டபோது  நான் ரகசியமாகவும், மறைமுகமாகவும் எங்கிருக்க முடியும்? உங்களுக்கும் எனக்கும் தூரம் எனபது இல்லவே இல்லை.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, November 9, 2015

திடமாக நம்பு

சதா என்னை நினை. நான் நடத்துகிறேன் என திடமாக நம்பு. எனக்கு நானாகவே செய்கிறேன் என்ற பாவத்தை வரவிடாதே. நான் துணையாக இருப்பேன். நீ நடக்கும் பாதையில் முட்கள் இருந்தால் நான் முன்பாகவே களைந்து விடுகிறேன். நான் உன்னுடனேயே வந்து கொண்டிருப்பதை நீ மறந்தால் நான் என்ன செய்ய முடியும்?

உன் முன்னாலும் பின்னாலும் நான் நிழலைப் போல் இருக்கிறேன்.-ஷீரடி சாய்பாபா.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, November 6, 2015

எந்த கெடுதலும் ஏற்படாதுஉன்னுடைய கடந்தகால புண்ணியங்கள் நிறைய இருப்பதால் இங்கு வந்திருக்கிறாய். எவனொருவன் இந்த மசூதியில் காலடி எடுத்து வைக்கிறானோ அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் எந்த கெடுதலும் ஏற்படாது. எனவே கவலையை விடு.-ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, November 5, 2015

எப்போதும் அவனை நினைத்திருப்பேன்


ரகுவீர் புரந்தரே, முதன் முதலாக 1909-ல் நான் சாயி பாபாவைப் பற்றி கேள்வியுற்று அவரை தரிசிக்க மனைவி, குழந்தை முற்றும் தாயாருடன் விஜயம் செய்தேன்.. பாபாவை சென்று தரிசித்தபோது, 
பாபா, "ஏழு நூற்றாண்டுகளாக அவருக்கும், எனக்கும் தொடர்பு உள்ளது என அவர் என் தாயாரிடம் கூறினார், மேலும் 2000 மைல்களுக்கு அப்பால் என் பக்தன் இருப்பினும் நான் அவனை மறக்க மாட்டேன்; எப்போதும் அவனை நினைத்திருப்பேன், அவனில்லாமல் ஒரு துளியும் உண்ண மாட்டேன்" என்றார். -ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர்கள் அனுபவங்கள்,பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, November 3, 2015

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்

                              

பக்தன் பாட்டிசைக்கும் இடத்திலேயே இறைவன் இருப்பார். வெல்லம் இருக்கும் இடத்தில் எறும்புகள் இருப்பதைப் போன்று, நாமஸ்மரணை செய்பவரின் வீட்டிலேயே இறைவன் இருப்பார். ஆன்மீக விஷயத்தில் நாளை என்பதை மறந்து இந்த வினாடியிலிருந்தே நாமஸ்மரணை செய்யத் தொடங்குங்கள்.

   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....
   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....
   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....
   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....
   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....
   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

தர்மசிந்தனை உள்ளவனாக இரு


தான தர்மங்களில் பொருளைச் செலவு செய்ய வேண்டும். ஆனால் எதிலும் மிதமிஞ்சி செலவு செய்யகூடாது. உடல் அழியக்கூடியதே. ஆயினும்,அது உள்ளவரை செல்வமும் ஒரு அளவுக்கு தேவையே. செல்வமே எல்லாம் என்று எண்ணி அதன் வசப்பட்டு லோபியாக மாறிவிடாதே. தாராளமாகவும், தர்ம சிந்தனை உள்ளவனாகவும் இரு. ஆனால் மிதமிஞ்சியும், பகட்டாகவும் செலவு செய்யாதே. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா,


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, November 2, 2015

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்


எந்த பக்தர் தமக்கு நன்மைகள் ஏற்படவேண்டுமென்ற ஆர்வத்தால் உந்தப்பட்டு பக்திபா(BHA)வத்துடனும் ஒருமுனைப்பட்ட மனத்துடனும் ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கிறாரோ, அவருடைய வழிபாடு என்றுமே வியர்த்தம் ஆகாது. சாயி அவருடைய வேண்டுகோள்களை நிறைவேற்றுகிறார். உலகியல் தேவைகளையும் ஆன்மீகத் தேவைகளையும் பூர்த்திசெய்கிறார். அவர் செய்யும் வழிபாடு என்றுமே வீண்போவதில்லை. கடைசியில் அவர் எல்லாப் பேறுகளையும் பெற்றவர் ஆகிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, November 1, 2015

மாயை

  

"கனவில் கண்ட ராஜ்ஜிய வைபவங்கள் விழித்துக்கொண்டவுடனே மறைந்துவிடுவது போலவே, இவ்வுலக வாழ்க்கை ஒரு மாயத்தோற்றம்.இவ்வுலகவாழ்வின் சுகமும் துக்கமும் மாயை."
                                                                               -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...