Sunday, January 31, 2016

சர்வாந்தர்யாமி

ஜனங்கள் பாபாவை அணுகும்போது, பாபா அல்லா பலே கரேகே (கடவுள் அருள் புரிவார் ) என சொல்லிக் கொண்டே ஊதியை அளிப்பார்; அவர் கூறியது யாவும் அப்படியே நடக்கும். ஒரு முறை " நான் இங்கே பேசிக் கொண்டிருக்கிறேன், அவை அங்கே நிகழ்கின்றன", என பாபா கூறினார். பாபாவின் சொற்கள் பிரமாணம் நிறைந்தவை. வறண்ட பாறையில் தண்ணீர் உள்ளது என அவர் கூறும்போது, அங்கே தண்ணீர் கிட்டியது. பஞ்ச பூதங்களும் அவரது ஆணைக்கு கட்டுப்பட்டன. நெருப்பு, நீர், காற்று ஆகியவை அவருடைய ஆணைக்கு கீழ்ப்படிந்ததை பல பக்தர்கள் கண்டிருக்கின்றனர். கொழுந்துவிட்டு உயரமாக எரியும் தீ அவரது ஆணைக்கு கட்டுப்பட்டு அடங்கிற்று. பலத்த காற்றும் மழையும் அவருடைய ஆணையை மதித்து நின்றன. கொளுத்தும் வெய்யில் காலத்தில் எரியும் நெருப்பின் அருகே குளுமையான காற்று வீச வேண்டுமென பாபா சங்கல்பம் செய்ய, அவ்வாறே குளிர் காற்று வீசியது. மாண்டவர் மீண்டும் உயிர்பெற்றனர். தம் முன் இருப்பினும் இல்லாவிடினும் ஒருவனது இதயத்தில் உள்ளதை அறியும் சக்தியும், அதை சீர்படுத்தும் சக்தியும் அவரிடம் இருந்தது. அவர் சர்வாந்தர்யாமி என் உணரப்பட்டார். - பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, January 30, 2016

பாபா பார்த்துக் கொண்டிருக்கிறார்


" நீ என்ன செய்தாலும் அதை  நான் அறிவேன்.  உன் செயல்கள் நல்லதாகவும், உனது நடத்தை சரியாகவும் இருந்தால் உனது அனைத்து விஷயங்களையும் நானே உடனிருந்து கவனித்துக் கொள்வேன்!" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

நாம் செய்கிற அனைத்தையும் பாபா பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை தெரிந்துவிட்டால், நாம் படுகிற துன்பத்தைப் பற்றியோ, எதிர்பார்க்கிற விஷயத்தைப் பற்றியோ கவலை படமாட்டோம்.
அனைத்தையும் அவர் கண்கள் பார்க்க, அவரால் நடைபெறுகிறது என்பதை தெரிந்து அமைதியாக இருப்போம். அமைதியாக - பொறுமையாக அனைத்தையும் கவனியுங்கள். பாபா உங்களை கவனித்து வருகிறார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 29, 2016

ஷிர்டி தரிசனம்

"நான் அழைக்காமல் எவரும் இங்கு (ஷிர்டி) வருவதில்லை. என்னுடைய விருப்பம் இல்லாது யார் அவருடைய வாயிற்படியைத் தாண்டமுடியும்?  தம்மிச்சையாகவே யார் ஷிர்டிக்கு தரிசனம் செய்ய முடியும்?"
                                                                                              -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. 


நம்முடைய எண்ண ஓட்டங்கள் அனைத்தும் கிருபாமூர்த்தியான சமர்த்த சாயியின் ஆதீனத்தில் இருக்கின்றன. அவருடைய சித்தத்தில் கிருபை உதித்தால்தான் எவரும் தரிசனத்திற்கு வரமுடியும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 28, 2016

ஆசைப்படாதே


"'நான்' 'என்னுடையது' என்னும் உணர்வுகளை அறவே ஒழித்துவிட்டுப் பற்றற்ற செய்கைகளைச் செய்துகொண்டு வாழ்வாயாக. இறைவன் அளிப்பதை தியாக பூர்வமான உணர்வுடன் ஏற்றுக்கொள். எவருடைய உடைமைக்கோ சொத்துக்கோ ஆசைப்படாதே." - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 27, 2016

குரு பக்தியைப் பற்றிச் சில மொழிகள்.

                        குரு பக்தியைப் பற்றிச் சில மொழிகள்."குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை" என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். சாய்பாபாவின் மேல் உள்ள நம் பக்தியை வளர்த்துக் கொள்வதற்குரிய சில கருத்துக்களைக் கூறுவது உபயோகமாயிருக்கும் என்று கருதுகிறேன்.

முதன்முதலில் சாயிபாபாவின் ஓர் உருவப்படம் இன்றியமையாத ஒன்று. ஏனெனில், பாபாவும் அவரது படமும் வேறல்ல.தவிர, அது  பாபாவின் மேல் இடையறாத தியானம் செய்ய வேண்டியதின் உயர்வைப் பற்றிச் சக்திவாய்ந்த முறையில் நினைவுபடுத்துகிறது. பாபாவின் படம், அத்தகைய குறிக்கோளை அடைய முயலும்படித் தூண்டுகிறது. பாபாவின் படத்தைப் பார்ப்பது மிகவும் சக்தி வாய்ந்த சாதனையாகும்.

இரண்டாவதாக , பாபாவின் வாழ்க்கைச் சரிதத்தைத் தவறாமல் பாராயணம் செய்வது, நமது மனதை ஆத்மீகக் குறிக்கோளை நோக்கி இழுக்கும். நமது எல்லா எண்ணங்களும் உணர்வுகளும் பாபாவைப் பற்றியே வட்டமிடும்படிச் செய்யும். பாபாவின் சரிதத்தைக் கற்ற புத்திசாலியான ஒருவருக்குத் தடையே உதவியாக மாறிவிடுகிறது.

மூன்றாவதாக, எப்போதுமே பாபாவின் நினைவிலேயே மூழ்கி, அவரது திவ்ய நாமத்தை இடையறாது உச்சரிப்பதில் நம் மனதை ஈடுபடுத்தும்படியான வழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

நாலாவதாக, நாம் எதை உண்டாலும் அல்லது பருகினாலும், அதை மானசீகமாகப் பாபாவுக்கு நிவேதனம் செய்து, அவரது பிரசாதமாக உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

ஐந்தாவதாக, நாளின் முதல் 15 நிமிடநேரத்தை,நாள் முழுவதும் நாம் பாபாவின் நினைவில் தோய்ந்திருப்பதற்காக, நம் பாவனையை இசைவு செய்துகொள்ளுவதில் செலவிடவேண்டும்.மீண்டும், தூங்குவதற்கு முன், நாளின் இறுதி 15 நிமிடங்களையும் பாபாவைப் பற்றிச்  சிந்திப்பதிலும் செலவிட முயல வேண்டும்.

ஆறாவதாக, ஸ்ரீ சாயிபாபாவின் விபூதியை( உதி ) நாள்தோறும் இட்டுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஏழாவதாக, வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் பாபாவை மனமார வழிபடுவதற்காக ஒதுக்க வேண்டும். பாபா, தமது படத்தோடு ஒன்றுப்பட்டவர் என்பதைப் பலமாக நினைவுகூர்ந்து, அவரது இருப்பை உணர்ந்து, அவரது படத்தைப் பூஜை செய்ய வேண்டும்.

எட்டாவதாக முடிந்தபோதெல்லாம்,தினசரி, வாரந்திர சாய் சத்சங்கத்தில் பங்கேற்க முயல வேண்டும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 26, 2016

கருணை மிகுந்த பக்கீர்அஞ்சாதே, கருணை மிகுந்த பக்கீர் உன்னை காப்பாற்றுவார். என் மேல் நம்பிக்கைகொண்டு  பயமற்றவனாக இரு. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 25, 2016

ஜாதகம் கைரேகைக்காரர்களின் ஜோசியம்


ஜாதகம் ,கைரேகைக்காரர்களின் ஜோசியம் ஆகியோரின் முன்னோடி உரைகளைத் தூக்கியெறிந்துவிட்டு என்னை மட்டுமே நம்புங்கள். என்னை நம்பி என்பால் லயமாகும் மனிதனின் எல்லாக் காரியங்களையும் பொம்மலாட்டத்தைப் போன்று நான் நின்று நடத்துகிறேன். -  ஷீரடி சாய்பாபா [ஸ்ரீ சாய் சத் சரித்திரம்] 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, January 24, 2016

குருபக்தி

தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும். 

உதாரணத்திற்கு, பாபாவின் நெருங்கிய பக்தரான சாமாவை ஒருமுறை நச்சுப் பாம்பு ஒன்று கடித்துவிட்டது. வலி கடுமையாக இருந்தது. விஷம் மெல்ல உடல் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது. சாமாவும் பயத்தில் மிரண்டு போயிருந்தார். உடல் முழுவதும் சிவந்து போயிருப்பதைப் பார்த்த அருகிலிருந்தவர்களில்  ஒவ்வொருவரும் மருத்துவரிடமும் செல்லவும், விரோபா கோயிலுக்கு (பாம்பு கடித்தவர்களை இக்கோயிலுக்கு  சென்றால், உயிர் பிழைத்து விடுவதாக ஷிர்டி மக்கள் நம்பினர்) செல்ல சொன்ன போதும் சாமா " எனக்கு எல்லாமே பாபாதான். அவரிடமே நான் செல்ல விரும்புகிறேன். ஒருவேளை எனது உயிர் போவதாக இருந்தாலும் அது எனது ஒரே அடைக்கலமான பாபாவின் மசூதியிலேயே போகட்டும் என்று கூறி அழுதபடி பாபா வாழ்ந்து வந்த மசூதிக்கு (துவாரகாமாயி) ஓடிச் சென்று பாபா பாதத்தில் வீழ்ந்து பணிந்தார் (உயிர் பிழைத்தார்) இதற்குப் பெயர் தான் குருபக்தி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, January 23, 2016

சாய்பாபாவின் தோற்றமும் நடையுடை பாவனை

சாய்பாபாவின் தோற்றமும், நடையுடை பாவனை.

சாயிபாபா ஏறக்குறைய ஐந்தரையடி உயரம் இருந்தார். அவர் பருமனுமல்ல, மெலிந்தும் இருக்கவில்லை. அவர் தங்கத்தைப் போன்ற மஞ்சள் நிறமுடையவராயிருந்தார். அவரது கண்கள் நீலநிரமானவை. அவை இருட்டில் கூட ஒளிரும். உண்மையில் அவைகளே பக்தர்களின் வியப்பைத் தூண்டுபவை. ஸ்ரீ சாயி சரனானாந்தாஜி பாபாவைப் பார்த்த சமயத்தில், பாபாவின் சில பற்கள் விழுந்திருந்தன. மற்றவை தூய வெண்மையாய் இருக்கவில்லை. பாபா ஒருபோதும் பல் தேய்த்ததே இல்லை. காலைவேளைகளில் சிறிது நீரைக்கொண்டு வாயைக் கொப்பளிப்பார். அவ்வளவே. அவர் காப்பியோ தேநீரோ அருந்தியதே இல்லை. புகைக்குழாயில் புகை பிடிக்கும் வழக்கத்தை எப்படி ஆரம்பித்தார் என்று அவர் ஒருபோதும் ஒருவரிடமும் கூறியதில்லை.
 பாபா எப்போதும் முரட்டு வெள்ளைத் துணியிலான உடைகளையே அணிந்தார். தமது தலையைச் சுற்றி எதற்க்காக துணியைக் கட்டிக் கொண்டிருந்தார் என்று எவருக்கும் அவர் கூறியதில்லை. அவர் தினந்தோறும் குளித்ததே இல்லை. அவருக்கு தோன்றும்போது குளிப்பார். சில சமயங்களில் ஆறு வாரங்கள் கூட அவர் குளிக்காமல் இருந்திருக்கிறார்.
அவர் போக்கில் விடப்பட்டால், பாபா மிகவும் குறைவாகவே பேசுவார். மிக அவசியமானால்தான் பேசுவார். அவர் ஒருபோதும் உரக்கச் சிரித்ததில்லை. மென்மையாக புன்னகை செய்வார். பெரும்பான்மையான நேரம் அவர் கண்களை மூடியவாறு இருப்பார்.
 மிக வியப்பிற்குரிய விஷயம் யாதெனில், பாபா ஒருபோதும் மசூதியிலுள்ள சுவரில் சாய்ந்து அமர்ந்ததே இல்லை. அவர் கால்களை நீட்டிக் கொண்டு அமர்ந்தபோது கூட, சுவரிலிருந்து சில அங்குலங்கள் தள்ளியே அமர்வார். பகல் வேளைகளில் அவர் ஒருபோதும் படுத்ததே இல்லை. ஷீரடியில் உள்ள கோவில்கள் எதற்கும் அவர் சென்றதில்லை.
பாபாவுக்கேயுரிய சில குறிப்பிட்ட செய்கைகள் உண்டு. ஒவ்வொருநாள் காலையிலும் பாபா வேப்பமரத்துக்கு முன்னாலுள்ள குருஸ்தான் என்று அழைக்கப்படும்   இடத்துக்கு நடப்பார். பின்னர் அவர் மசூதிக்கு முன்னாள் நின்று, நான்கு முக்கிய  திசைகளிலும் தமது கைகளைத் திரும்பத் திரும்ப அசைப்பார். கண்ணுக்குத் தெரியாத ஜீவன்களுக்கு ஏதோ சைகை செய்வதுபோல் இருக்கும் அது. பிறகு மசூதியிலுள்ள தமது இருக்கைக்குத் திரும்புவார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 22, 2016

நான்தான் செய்கிறேன்
எல்லாச் செயல்புரியும் சக்திகளையும் சாயி பாதங்களில் சமர்ப்பித்துவிடுங்கள். பிறகு அவர் ஆணையிட்ட ரீதியிலேயே செயல்படுங்கள். சாயி சர்வசக்தியும் நிரைந்தவரென்பதை அறிந்துகொள்ளுங்கள். பாரத்தை அவர்மீது போட்டுவிட்டு அபிமானம் கொள்ளாது செயல் புரியுங்கள்; எல்லா சித்திகளையும் பெறுவீர்கள்.
மாறாக, மிகச் சிறிய அளவில் அபிமானம் ஒட்டிகொண்டிருந்து, ' நான்தான் செய்கிறேன் ' என்று நினைத்தால் ஒரு கணமும் தாமதமில்லாது உடனே அதனுடைய விளைவு தெரியும்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 21, 2016

நம்பிக்கையுடன் கூடிய பொறுமை


எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால், தன் பக்தர்களுக்காக பாபா செய்யும் எல்லா செயல்களையும் அந்த பக்தர்கள் அந்த நேரத்தில் அறியமாட்டார்கள். பக்தருடைய முன்வினைகளை (முந்தைய கர்மாக்களை) நன்கு அறிந்த சத்குரு அமைதியாக பக்தரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். கால ஓட்டத்திலும், மேலும் பாபாவால் நிர்ணயிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட நேரத்திலும் பாபாவின் ஆசிகளின் பலனை ஒருவர் பெறவேண்டுமானால் அதற்கு மிகுந்த நம்பிக்கையும், பொறுமையும் தேவைப்படுகிறது. இக்காரணத்தினால்தான் சிரத்தாவுடன் கூடிய சபூரி அதாவது நம்பிக்கையுடன் கூடிய பொறுமை என்பதை பாபா முக்கிய தகுதிகளாகக் கூறியுள்ளார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 20, 2016

பாபா இறப்பை தடுப்பதில்லை

இறப்பது நல்லதுக்காகவே எனும் போது பாபா இறப்பை தடுப்பதில்லை.

( நடுப்பகல் வெய்யிலில் கீழே விழுந்து இறந்துபோனது போல் காணப்பட்ட ஒரு பையனை பாபா உயிர் பிழைத்தெழச் செய்த சிறிது காலம் கழித்து, சர்ப்பத்தால் தீண்டப்பட்டு மாண்டுபோன தனது மகனுக்கு ஊதி அளித்து உயிர் பெறச் செய்ய வேண்டுமென பாபாவிடம் ஒரு பெண் கதறி அழுது கொண்டு வந்து வேண்டினால்.)

தீக்ஷித் ( பாபாவின் பக்தர் ) : பாபா! அந்த பெண்ணின் கதறல் நெஞ்சைப் பிளக்கிறது. எனக்காக, இறந்துபோன அவள் மகனை உயிர் பெறச் செய்யுங்கள்.

பாபா : பாவ், இதில் குறிக்கிட்டு நீ சிக்கிக் கொள்ளவேண்டாம். நடந்தது நன்மைக்கே. அவன் ஒரு புது உடலில் புகுந்து விட்டான். அந்த சரீரத்துடன் அவன் விசேஷமான நல்ல கர்மாக்களை செய்வான். அவற்றை இந்த சரீரத்துடன் செய்ய முடியாது. நான் இந்த உடலுக்குள் அவனை மீண்டும் கொண்டு வந்தால், அவன் இப்போது எடுத்துக்கொண்டுள்ள புதிய உடல் உயிரிழந்து இந்த பழைய உடல் உயிர்பெறும். உன் பொருட்டு இதை என்னால் செய்ய முடியும். ஆனால்  அதன் விளைவுகளைப் பற்றி சிந்தித்தாயா? அது எத்தகையோர் பொறுப்பு என்பதை அறிவாயா ?. அந்த பொறுப்பை ஏற்க நீ தாயாரா?http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 19, 2016

உன் சுமைகளை என் மீது இறக்கிவிடு
அமைதியாக உட்கார். தேவையானதை நான் செய்கிறேன். நிறைவு காணும் வரை நான் உங்களை நடத்திச் செல்கிறேன். கவலையை விடு ! எல்லா விதத்திலும் உங்களை நான் கவனித்துக் கொள்கிறேன். உன் சுமைகளை என் மீது இறக்கிவிடு. -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
https://play.google.com/store/apps/details?id=com.saisayings

Monday, January 18, 2016

வெருப்பகிவிட்டதுகாலம் சீரழிந்து வருகிறது. ஜனங்கள் அநேகமாக பிறரைப் பற்றி எண்ணுவதும் பேசுவதும் இழிவாகவே. ஆனால் நான் பதிலடி கொடுக்கவில்லை. அத்தகைய பேச்சுக்களை  நான் காதில் போட்டுக் கொள்வதில்லை. ஜனங்கள் மேன்மேலும் விசுவாசமற்றவர்களாக நடந்து கொள்கின்றனர். அவர்கள் கவனமெல்லாம் எல்லாவற்றிழிமுள்ள தீயவன் மேலேயே அதிகமாக இருக்கிறது.
சாதுக்களும் சமநோக்குடன் இருப்பதில்லை. ஒரு நல்ல சாதுவை காண்பது கடினம். ஜனங்கள் கெட்டவர்களாகி, கஷ்டம் கொடுக்கிறார்கள். என்னிடம் பணம் கேட்டு நச்சரிக்கிறார்கள். இப்போது எனக்கு வெருப்பகிவிட்டது. - ஷிர்டி சாய்பாபா. ( 1918)

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
https://play.google.com/store/apps/details?id=com.saisayings

Sunday, January 17, 2016

தக்ஷிணை


புரந்தரே என்ற பக்தர் தாங்கள்(பாபா) ஏன் இவ்வளவு பணம் தக்ஷிணையாக  கேட்கிறீர்கள்?

பாபா : நான் எல்லோரிடமும் கேட்பதில்லை. ஆண்டவன் யாரை குறிப்பிட்டு காட்டுகிறாரோ அவரிடமிருந்து மட்டுமே கேட்கிறேன். ஆனால் பதிலுக்கு, நான் பெற்றுக் கொண்ட தொகையைப் போல் பத்து மடங்கு அந்த நபருக்கு நான் கொடுக்க வேண்டியதாகிறது. எனது சொந்த உபயோகத்துக்காக நான் பணம் பெறுவதில்லை. எனக்கு குடும்பம் எதுவும் கிடையாது.

ஒவ்வொரு தினமும் காலையில் பாபா கையில் ஒன்றுமே இல்லாத எளிய பகீர்; பகல் முழுவதும் தக்ஷிணைகள் குவியும். மாலை அல்லது இரவில் சேர்ந்த தொகை முழுவதும் பட்டுவாடா செய்து விடப்பட்டுவிடும். பாபா மறைந்த போது சுமார் பத்து ஆண்டுகள் ஒரு கவர்னருடைய வருமானத்துக்கு சமமான தக்ஷிணையைப் பெற்று வந்த போதும், அவர் கையில் எஞ்சி இருந்தது ரூ.16 மட்டுமே. பாபா ரூபாய்களை தூசாக மதிப்பவர். அவர் விரும்புவது உங்கள் மனமும் இதயமும், உங்கள் நேரமும் ஆன்மாவும் அவரிடம் ஈடுபடுத்தபட வேண்டுமென்பது மட்டுமே.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 15, 2016

ஏன் கவலை?

(1918-ம் ஆண்டு) திருமதி தார்கட்,அவரது மகன் இருவரும்  சாயிபாபாவை தரிசனம் செய்ய வந்தனர்.

பாபா: தாயே! இப்போதெல்லாம் நான் மிகவும் நச்சரிக்கபடுகிறேன்.சிலருடைய தேவை செல்வம்,சிலருக்கு பெண்டிர்,சிலருக்கு புத்திரர்கள்.அந்தோ! என்னிடம் இருப்பதை யாரும் கேட்பதில்லை!நானும் பொறுத்து பொறுத்து போகிறேன்;ஒரு தினம் திடீரென நான் மறைந்துவிடுவேன்.எனக்கு அலுத்துவிட்டது.

திருமதி தார்கட்: பாபா, ஏன் இப்படி பேசுகிறீர்கள்.பின் எங்கள் கதி என்னாவது?

பாபா: ஏன் கவலை? உங்கள்  நலனை ஆண்டவன் பேணுகிறாரல்லவா?என் குழந்தைகள் என்னை நாடி வருவது என்னை மகிழ்விக்கிறது;அப்போது என் இரண்டு கவளங்கள் ஆகாரத்தையும் உற்சாகத்துடன் எடுத்துக் கொண்டு மேலும் பருமனாகிறேன்.

சிறுவன்: தாங்களிடம் இருப்பதை கேட்டு பெற்றுக் கொள்ளவே நாங்கள் வருகிறோம்.தாங்கள் அறிவீர்களல்லவா?

பாபா:ஆம்,உங்களுக்கு அது கிட்டும்.

சிறுவன்:பாபா! அதை அடைவதற்கு முன் நான் இன்னும் எத்தனை பிறவிகள்
எடுக்கவேண்டியிருக்கும் என்பது பற்றி தாங்கள் உறுதிமொழியை வேண்டுகிறேன்.

பாபா:இன்னும் மூன்று பிறவிகள் போதுமானது.

சிறுவன்:பாபா,ஆனால் தாங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்கள் அல்லவா?

பாபா:ஆஹா உன்னுடன் முன்னரே எத்தனை பிறவிகள் இருந்திருக்கிறேன் என்பதை அறிவாயா?மீண்டும் மீண்டும் நாம் சந்திப்போம்.இரவும் பகலும் என் குழந்தைகளை நான் பேணி வந்து,ஆண்டவனிடம் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கொடுக்க வேண்டியுள்ளது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

சாயிபாபா நேரடியாகவே தோன்றுவார்

சாயி நாமத்தை மிஞ்சிய சக்தி வேறொன்றில்லை. சாயியுடன் ஐக்கியமடைய இந்த நாம உச்சாரணை பாலமாய் விளங்கும். சாயி நாமம் உச்சரிக்கப்படும் இடத்தில் சாயிபாபா நேரடியாகவே தோன்றுவார். - ஸ்ரீ சாயி திருவாய்மொழி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 14, 2016

உண்மையான பக்தன்


சாய்பாபா ஓர் பூரணமான லீலாவதாரி; நினைத்தமாத்திரத்தில் எங்கும் சஞ்சாரம் செய்யக்கூடியவர். போவதும் வருவதும் மனிதப் பிறவிகளுக்கே. அவரோ எல்லாப் பொருள்களிலும் உள்ளும் புறமும் நிறைந்தவர். அவர் அங்கிருந்து இங்கே வருவது, இங்கிருந்து அங்கே திரும்பி போவது, ஆகிய இரு செயல்களையும் வானமும் அறியாது. ஏனெனில்,அவர் வானத்திலும் நிரம்பி   இருக்கிறார். பாபாவின் சஞ்சாரம் புரிந்துகொள்ள முடியாதது. நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் அவர் நிரம்பியிருக்கிறார். இவ்வாறிருக்க, அவர் வருவதென்ன, போவதென்ன! உண்மையான பக்தன் பாபாவை நினைத்தமாத்திரத்தில் நிச்சயமாக அவர்முன் தோன்றுகிறார்..-ஸ்ரீ சாயி இராமாயணம் .

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 13, 2016

ஷிர்டி


பக்தர்: பாபா என்னை ஏன் இங்கு (ஷிர்டி) வரவழைத்தீர்கள்?

பாபா : ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கின்றனர். நான் அவர்களை  எல்லாம் இங்கு அழைப்பதில்லை. நீரும் நானும் பல ஜன்மங்களாக நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள். நீர் அதை அறிய மாட்டீர். ஆனால் நான் அறிவேன். நேரம்  கிடைக்கும் போதெல்லாம், ஷிர்டி வந்து போய் கொண்டிரும்.
                                                                             -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவின் திருமொழிகள்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 12, 2016

நான் யார்
முக்தி என்பதே உண்மையான ஆனந்தம் அல்லது சந்தோஷம். சம்சாரத்தில் தோன்றும் இன்பங்களும் துன்பங்களும் உண்மையானதல்ல. உலக நடவடிக்கைகளை மகிழ்ச்சியுடன் கவனித்து வா. ஆனால் கடவுளை மறந்து விடாதே. இந்த சம்சாரம் என்னுடையதல்ல, கடவுளுடையது என்பதை நினைவில் கொள். எப்போதும் ' நான் யார் ' என்று மனத்தினுள் விசாரம் செய்து கொண்டிரு. - ஸ்ரீ சாயி பாபாவின் சாஸனாம்ருதத் திருமொழிகள். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 11, 2016

நலம் உண்டாகச் செய்கிறேன்

நானா(பாபாவின் பக்தர்); பாபா, தாங்கள் எல்லாவற்றையும் அறிவீர்கள். தங்களுடைய பாதுகாப்பிலிருந்தும் கூடவா எங்களுக்கு இந்த துக்கங்கள் நேரவேண்டும்? [உறவினர்களின் பிரிவு, இழப்பு போன்றவை ]

பாபா: உமக்கு நெருக்கமானவர்களின் நலனை எண்ணிக் கொண்டு அதன் பொருட்டு நீர் இங்கு வருகிறீரென்றால், அது தவறு. இவற்றிற்காக நீர் எம்மிடம் வரவேண்டியத்தில்லை. இவை என் சக்திக்கு உட்பட்டவை அல்ல.
இவை (குழந்தை பிறப்பது,உறவினர் இறப்பது போன்றவை) ஊழ்வினையைப் பொருத்தது. தேவாதி தேவனானவரும், உலகையே படைத்தவருமான,
பரமேச்வரனால் கூட இவற்றை மாற்றிவிட முடியாது. அவரால் சூரியனையோ சந்திரனையோ நோக்கி, 'வழக்கமாக உதிக்கும் இடத்திலிருந்து இரண்டு கஜம் தள்ளி உதிப்பாய்'  எனக் கூற இயலுமா? இயலாது, ஏனெனில் அவரால் முடியாதது மட்டுமின்றி, அவர் அப்படி செய்யவும் மாட்டார்.அ து  ஒழுங்கின்மை, குழப்பம் விளைவிக்கும்.

நானா:அப்படி என்றால், ஒருவரிடம் " உனக்கு குழந்தை பிறக்கும் " என தாங்கள் கூறுகிறீர்கள், அவருக்கு குழந்தை பிறக்கிறது. மற்றொருவரிடம் " உனக்கு வேலை கிடைக்கும் " என சொல்லுகிறீர்கள், அவருக்கு வேலை 
கிடைக்கிறது. இவை எல்லாம் தங்களுடைய அற்புதங்கள் அல்லவா?

பாபா:இல்லை, நானா. நான் எந்த சமத்காரமும் செய்வதில்லை. கிராமத்து ஜோதிடர்கள் சில தினங்கள் முன்னதாகவே பின்னர் நடக்கப் போவதைக் கூறுகிறார்கள். அவற்றுள் சில பலிக்கின்றன. நான் அவர்களை விட எதிர்காலத்தை தீர்க்கமாகப் பார்க்கிறேன். நான் கூறுவதும் நடக்கிறது. என் வழியும் ஒருவகை ஜோதிடத்தைப் போன்றதே. உங்களுக்கெல்லாம் இது புரிவதில்லை. உங்களுக்கு.என் சொற்கள் அற்புதங்களாகத் தோன்றுகின்றன; ஏனெனில், நீங்கள் எதிர்காலத்தை அறியமாட்டீர்கள். ஆகையால் நிகழ்ச்சிகளை  நீங்கள் எமது அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தியாக முடிவு செய்து, எம்மிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுகிறீர்கள். பதிலுக்கு நான் உங்கள் பக்தியை இறைவனிடம் திருப்பி உங்களுக்கு நலம் உண்டாகச் செய்கிறேன். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, January 10, 2016

முக்தி
ஏன் இந்த துயரம்? மாந்தர் பிறப்பது இறப்பதற்காகவே. ஒரு நாள் நாம் ஒவ்வொருவரும் இறப்போம். இறப்பும் வாழ்வும் இறைவனின்  லீலையின் வெளிப்பாடுகள். இரண்டையும் பிரிக்கமுடியாது. எல்லாவற்றிலும் நிறைந்து நிற்ப்பவர் ஈசன். எனினும், ( உண்மையில் பார்த்தால்) யாரும் பிறப்பதில்லை.
ஒருவரும் இறப்பதில்லை. உனது அகக்கண் மூலம் பார். அப்போது நீயே இறைவன், அவரிடமிருந்து வேறுப்பட்டவரல்ல என்பதை புரிந்துகொள்வாய். 
லாப நஷ்டம், பிறப்பு இறப்பு, இவை இறைவனின் கையில் இருப்பவை. ஆனால் எவ்வளவு கண்மூடித்தனமாக ஜனங்கள் இறைவனை மறந்து விடுகின்றனர்! உயிர் உள்ள வரை, வாழ்க்கையை கவனி, மரணம் வரும்போது துயருறாதே. இவ்வுடல் மண்ணால் ஆனது. பார், உண்மையில் எல்லாம் ஒன்றே. ஆகவே அது மண்ணுக்கே திரும்பச் சென்று விடுவது வருத்தப்பட வேண்டிய விஷயமல்ல.
 பிறப்பையும் இது போன்றே பார்க்க வேண்டும். ஒரு குழந்தை பிறந்தது பற்றி கொண்டாடி மகிழவேண்டாம். இது படைப்பின் போக்கு ( ஆதிகாலம் முதல் நிகழ்ந்து வருவது). அது உங்களை பாதிக்க வேண்டாம். எதற்கும் குதுகலிப்பதோ, விசனப்படுவதோ வேண்டாம். அப்படி இருந்தால் உங்களுக்கு துயரம் எங்கிருந்து வரும்?  துயரமின்மையே  முக்தி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, January 9, 2016

பகவான்

1911 - 1914 ஆண்டுகளில் ஷீரடியில் வாசம் செய்த காசிநாத் கோவிந்த உபாசினி மகராஜ் உணவு தயார் செய்து கொண்டிருப்பதை ஒரு கருப்பு நாய் கவனித்துக் கொண்டிருந்தது. அந்த நாய்க்கு உணவு எதுவும் அளிக்காமல் உபாசனி  மசூதிக்கு சென்று உணவை பாபாவுக்கு சமர்பித்தார்.

பாபா : ஏன் இதை இங்கே கொண்டு வந்தாய் ? நான் அங்கே இருந்தேன்.

உபசனி : பாபா! ஒரு கருப்பு நாய் தவிர வேறு ஒருவரும் அங்கே இருக்கவில்லையே?

பாபா : அந்த கருப்பு நாய் நான் தான்.

அன்று பாபா  உணவை ஏற்க மருத்துவிட்டார். மறுதினம் உபாசனி தனது இருப்பிடத்தில் நிவேதனம் தயார் செய்தார். நாய் எதுவும் காணப்படவில்லை. 
ஆனால் நோய் வாய்ப்பட்ட சூத்திரன் ஒருவன் சுவற்றில் சாய்ந்தவாறு உணவையே பார்த்துக் கொண்டிருந்தான். வைதீகரான உபாசனி அந்த இடத்திலிருந்து அவனை விரட்டி விட்டு உணவை பாபாவிடம் எடுத்துச் சென்றார்.

பாபா : நேற்று எனக்கு உணவு அளிக்கவில்லை. இன்றும் என்னை விரட்டி விட்டாய். ஏன் உணவை இங்கு கொண்டு வருகிறாய் ?

உபாசனி : பாபா ! அங்கே நீங்கள் எங்கிருந்தீர்கள் ?

பாபா : நான் சுவற்றின் மீது சாய்ந்தவாறு நின்றிருந்தேன்.

உபாசினி : என்ன ! தாங்கள் அத்தகைய மனிதனின் உள்ளும் இருக்கக்கூடுமா?

பாபா : ஆம், நான் எல்லாவற்றிலும், அவற்றிற்கப்பாலும் இருக்கிறேன்.

குறிப்பு : ஸ பூமிம் விச்வதோ(ஆ)வ்ருத்வா அத்யதிஷ்டத் தசாங்குலம்  (புருஷ ஸுக்தம்)

அதாவது, அவர் ( பகவான் ) வையகம் முழுவதும் வியாபித்து அதையும் கடந்து நிற்பவர்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 8, 2016

பொறாமை

பொறாமை என்கிற வேண்டாத குணத்தைப் பொறுத்த வரை நமக்கு எந்த விதமான (நேரிடை) லாபமோ, நஷ்டமோ கிடையாது. பொறாமை என்பது இன்னொருவருக்கு கிட்டியிருக்கும் லாபம் அல்லது வளம் கண்டு தாளாமை. வேறு ஒருவருக்கு ஒரு அதிருஷ்டமோ, செல்வாக்கோ கிட்டி விட்டால், நம்மால் அதை சகித்துக் கொள்ள முடியாமல், அவரை அவதூறாகப் பேசுகிறோம். அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டால் மகிழ்ச்சியடைகிறோம். இது நல்லதா? அந்த மனிதன் வளம் பெற்றால், நமக்கு என்ன நஷ்டம் ஏற்ப்பட்டுவிட்டது? ஆனால் ஜனங்கள் இந்த விதத்தில் சிந்திப்பதில்லை. அவனுக்கு நலம் கிட்டினால் (அவனுடன் சேர்ந்து) நாமும் மகிழ்வோமே. நமக்கும் நலம் கிட்டியது, நாமும் பாக்கியசாலிகள் என் எண்ணுவோமே, அல்லது அதே நலம் நாமும் பெறுவோம் அல்லது பெறுவதற்கு முயற்சி மேற்கொள்வோம். அதுவே நமது விருப்பமும், தீர்மானமுமாக இருக்க வேண்டும். நம்மிடமிருந்து அவன் எதை எடுத்துச் சென்றுவிட்டான்?ஒன்றுமில்லை. அவனுடைய கர்மாவின் பலனாக அவன் வளம் பெற்றான். அப்படியிருக்க அதைக் கண்டு நாம் ஏன் பொறாமை படவேண்டும்? ஆகவே, முதலில் 
பொறாமையை வென்றுவிடு. -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 7, 2016

அசைக்க முடியாத நம்பிக்கை


பாபாவின் அருகில் இருக்கும் பாக்கியம் நமக்கு கிடைக்க வேண்டும்; அதன்பிறகு, தாண்டமுடியாதது எதுவுமே இல்லை. கொஞ்சங் கொஞ்சமாக அனைத்து விஷயங்களும் ஓர் ஒழுங்கிற்கு வந்து நிற்கும். 
 ஓய்வெடுப்பதோ,பேசுவதோ,நடப்பதோ,எந்த வேலையை செய்தாலும் சரி,ஒவ்வொரு கணமும் ஓய்வெடுப்பதோ, பேசுவதோ, நடப்பதோ, எந்த வேலையை செய்தாலும் சரி, ஒவ்வொரு கணமும் அசைக்க முடியாத நம்பிக்கையை பாபாவிடம் கடைப்பிடித்தால், பக்தன் தான் விரும்பிய மனோரதங்கள் அனைத்திலும் நிறைவு பெறுவான்.
http://www.shirdisaibabasayings.comacebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 6, 2016

தக்ஷிணை


தனத்தையும், தானியத்தையும், வஸ்திரங்களையும் அளிப்பது மட்டும் தக்ஷிணை ஆகிவிடாது. குருவின் ஆணையை (பொறுமை, நம்பிக்கை)  நிறைவேற்றி அவரை சந்தோஷப்படுத்துவதும் தக்ஷிணையே.- ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 5, 2016

கடுமையான பரீக்ஷை


சில சமயம் பாபா தனது பக்தர்களை எல்லைவரை இழுத்துவிடுகிறார். அவனுடைய பக்திக்கும் பிரேமைக்கும் கடுமையான பரீக்ஷை வைத்துவிடுகிறார். அதன்பிறகே அவனுக்கு உபதேசமளிக்கிறார்.-ஸ்ரீ சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 4, 2016

நவவித பக்தி

    


            பக்தியின் வெளிபாடுகளைப்பற்றி இவ்விதம் அறிவீராக.-முதலாவதாக, சிரவணம் (சாயியின் பெருமையை கேட்டல்),
இரண்டாவதாக, கீர்த்தனம்(சாயியின் லீலைகளைப் பாடுதல்),
மூன்றாவதாக, ஸ்மரணம்(சாயியை நினைத்தால்),
நான்காவதாக, பாதசேவனம்(பாதங்களைக் கழுவுதல்-பிடித்து விடுதல்),
ஐந்தாவதாக, அர்ச்சனம்(மலர்களால் அர்ச்சனை செய்து பூஜித்தல்),
ஆறாவதாக, வந்தனம் (பணிதல்-நமஸ்காரம் செய்தல்-வணங்குதல்),
ஏழாவதாக, தாஸ்யம் (அடிமைபோல் சாயிக்கு சேவை செய்தல்),
எட்டாவதாக, ஸக்யம் (சாயியிடம் தோழமை கொள்ளுதல்),
ஒன்பதாவதாக,ஆத்மநிவேதனம் (தன்னையே சாயிக்கு அர்ப்பணம் செய்தல்).

நவவித பக்திகளில் ஏதாவது ஒன்றையாவது பூரணமான பா(BHA)வத்துடன் கடைப்பிடித்தால்,வேறெதையும் வேண்டாத ஸ்ரீ சாயிபாபா,பக்தனுக்கு தம்மை வெளிப்படுத்துவார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, January 3, 2016

குருவின் ஆணை
குருவின் ஆணை தெளிவாக இருக்கும்போது, இது செய்யக்கூடிய செயலா, செய்யக்கூடாத செயலா, இது விரும்பத்தக்கதா, வெறுக்கத்தக்கதா என்றெல்லாம் கேள்வி எழுப்பும் பக்தன் கடமையிலிருந்து வீழ்ந்தவன் ஆகிறான். பாபாவின் பாதங்களிலேயே சித்தம் நிலைக்க வேண்டும்; உயிர் இருந்தாலென்ன, போனாலென்ன? எங்களுக்கு பாபாவின் ஆணையே பிரமாணம். தொடர்ச்சியாக ஏற்படப்போவதையும் கடைசியான முடிவையும் அவரே அறிவார்! - ஸ்ரீ சாயி இராமாயணம். 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, January 2, 2016

பாபாவை பார்க்கலாம்


பாபாவின் மரணம், லோகாசாரம் (உலகியல் நடப்பு) மட்டுமே. பார்வை பெற்றால், நகரும் நகராப்  பொருள்கள் அனைத்தினுள்ளும் பாபாவை பார்க்கலாம்.
ஒருவருடைய வழிபாட்டு நிலை எப்படியோ, அப்படியே அவருக்குக் கிடைக்கும் நித்திய அனுபவமும் அமைகிறது. உள்ளத்தில் சந்தேகம் எதையும் வைக்க வேண்டாம். சாயீ மரணத்திற்கு அப்பாற்பட்டவர். நம் ஊனக்கண்களுக்குத் தெரியாத போதிலும், அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். தம்மளவில் சூட்சுமமாக இருந்த போதிலும், நம்மை அவர்பால் வசிகரித்து இழுக்கிறார். அவருடைய மரணம் ஒரு பாசாங்கு மட்டுமே. நம்மை ஏமாற்றும் ஓர் உத்தியே. பூரணத்துவம் பெற்ற அவர் பல வேஷங்களில் நடிக்கிறார். உடலை இழந்த நிலையில் இருந்து அவர் அழிவற்ற நிலைக்குச் சென்றுவிட்டார். 
சமர்த்த சாயி தீனதயாளர்; பக்தியுடன் தன்னை வனங்குபவர்களை பாதுகாப்பவர். உயர்ந்த பிரேமைக்காகப் பசியோடிருப்பவர். அவருடைய இதயத்தில் கனிந்த அபரிமிதமான அன்பை கெட்டியாகப் பற்றிகொள்வோமாக! அவருடைய மார்கத்தை நன்கு புரிந்துகொண்டு காரியசாதனை பெறுவோமாக!   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 1, 2016

பூரண சரணாகதி அடையுங்கள்

என்ன நடக்குமோ அது பாபாவின் ஆணைப்படியே நடக்கும். அவரே காரியங்களை செய்பவரும் செய்விப்பவரும் ஆவார். செயல்புரியும் அதிகாரத்தை பாபாவின் கைகளில் ஒப்படைத்துவிட்டு பூரண சரணாகதி அடையுங்கள். பக்தனின் கரைகாணாத அன்பும் அசையாத நம்பிக்கையால் பாபா குதுகலம் அடைகிறார்; பக்தனை கொண்டாடுகிறார். பக்தர்களில் எவரெல்லாம் முழுமையான சரணடைகிறார்களோ, அவர்கள் எல்லோருடைய நன்மையையும் கருதி சாயி அவர்களை சன்மார்க்கத்தில் செலுத்துகிறார். அளவற்ற புண்ணியத்தின் பலத்தால் மட்டுமே ஒருவர் சாயியின் தர்பாருக்குள் வரமுடியும். வந்தவர்கள், யாரையும் வெறும் கையுடன் பாபா அனுப்புவதில்லை. சாயி சாயி  என்று அவருடைய திவ்ய நாமத்தை நாம் கூறும்பொழுது அவர் நம் கண்ணிற்கு புலப்படாமல் அவர் அங்கேயே இருக்கிறார். இது சத்தியம். அவர் தனது சக்தியையும், நிலையையும் நமக்கு தெய்வீக அற்புதங்கள் மூலம் நிரூபித்துக் காட்டுகிறார். 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...