என்ன நடக்குமோ அது பாபாவின் ஆணைப்படியே நடக்கும். அவரே காரியங்களை செய்பவரும் செய்விப்பவரும் ஆவார். செயல்புரியும் அதிகாரத்தை பாபாவின் கைகளில் ஒப்படைத்துவிட்டு பூரண சரணாகதி அடையுங்கள். பக்தனின் கரைகாணாத அன்பும் அசையாத நம்பிக்கையால் பாபா குதுகலம் அடைகிறார்; பக்தனை கொண்டாடுகிறார். பக்தர்களில் எவரெல்லாம் முழுமையான சரணடைகிறார்களோ, அவர்கள் எல்லோருடைய நன்மையையும் கருதி சாயி அவர்களை சன்மார்க்கத்தில் செலுத்துகிறார். அளவற்ற புண்ணியத்தின் பலத்தால் மட்டுமே ஒருவர் சாயியின் தர்பாருக்குள் வரமுடியும். வந்தவர்கள், யாரையும் வெறும் கையுடன் பாபா அனுப்புவதில்லை. சாயி சாயி என்று அவருடைய திவ்ய நாமத்தை நாம் கூறும்பொழுது அவர் நம் கண்ணிற்கு புலப்படாமல் அவர் அங்கேயே இருக்கிறார். இது சத்தியம். அவர் தனது சக்தியையும், நிலையையும் நமக்கு தெய்வீக அற்புதங்கள் மூலம் நிரூபித்துக் காட்டுகிறார்.
http://www.shirdisaibabasayings.comhttp://www.facebook.com/shirdisaibabasayingsintamil