Monday, February 29, 2016

நம்பிக்கை எப்பொழுதும் குறையவே கூடாதுபாபாவிடம் எனக்குள்ள நம்பிக்கை எப்பொழுதும் குறையவே கூடாது. இந்தக் குறிக்கோளை அடைவதில் நான் வெற்றிக் காண்பேனா? 

பதில் : பாபாவைப் பற்றியே படியுங்கள், சிந்தியுங்கள், பேசுங்கள், கேளுங்கள், எழுதுங்கள், அவரையே தியானியுங்கள். உங்களின் அனைத்து சக்திகளையும் ஒட்டுமொத்தமாக பாபாவிடமே செலுத்துங்கள். முயற்சி செய்யுங்கள். முயற்சி செய்து கொண்டே இருங்கள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, February 28, 2016

பாபாவிடம் இன்னும் நெருக்கமாக இருப்பதற்கு ஆசைப்படுகிறேன்வழிபாட்டின் மூலமாகவும், தியானத்தின் மூலமாகவும் பாபாவிடம் இன்னும் நெருக்கமாக இருப்பதற்கு நான் மிகவும் ஆசைப்படுகிறேன். பல சமயங்களில் எல்லாம் சுமூகமாக நடந்தபோதிலும், மாயையின் பிடியில் அடிக்கடி சிக்கித் தவிக்கிறேன். இதை தவிர்ப்பது எப்படி ?

மாயை என்று அழைக்கப்படும் இவ்வுலக வாழ்க்கை நிகழ்வுகளுக்கு நடுவில் வாழும் வரை இந்நிலைமையை ஒருவரால் தவிர்க்க முடியாது. இவ்வுலக நடவடிக்கைகளை முற்றிலும் துறந்து ஒரு யோகி அல்லது சன்னியாசியாக மாறினால்தான் இந்த நிலையை தவிர்க்க முடியும். அதே சமயத்தில் ஒருவர், பாபாவின் நாமத்தை ஜெபிப்பது, பாபாவை பற்றி மற்றவர்களிடம் பேசுவது, பாபாவைப் பற்றி படிப்பது, பாபாவையே நினைப்பது போன்ற சில வழிகளில் எப்போதும் பாபாவையே இறுகப் பற்றிக்கொண்டால், மாயையின் தாக்குதல்களை எதிர்க்கும் மனோபலத்தை வளர்த்துக் கொள்வதற்க்கு பாபாவின் உதவி நமக்குக் கிடைக்கிறது. தினமும் சாய் சத்சரிதத்தின் ஒரு அத்தியாயத்தையாவது படியுங்கள்.  நேரம் கிடைக்கும்போதெல்லாம் சாய் நாமத்தை சொல்லுங்கள் ( ஓம் சாய், ஸ்ரீ சாய், ஜெய் ஜெய் சாய் ). எவ்வளவுக்கெவ்வளவு பாபாவின் மீது உள்ள ஈடுபாடு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மாயத்தோற்றமான இவ்வுலக நடவடிக்கைகளில் ஈடுபாடு குறைகிறது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, February 27, 2016

பாபாவை ஏன் அடையமுடிவதில்லை

பாபா நமக்குள்ளே உறைகிறார் எனில் நாம் ஏன் அவரை அடையமுடிவதில்லை ?

 யாவும் கடந்த உண்மை நிலையில், கடவுள், குரு, ஆத்மா இவையாவும் மாறுபடாத ஒன்றேயான நிலையான விழிப்புணர்வாகும். 'அந்தர் சாட்சி ' என நாம் அழைக்கும் சூட்சும வடிவத்தில், பாபா நம் ஆன்மாவினுள் நம்மை முழுவதும் அறிந்தவராய் உறைகிறார். நம்முள் அவர் சுயம் பிரகாசமாய் திகழ்கிறார். நம் மனதுள் நற்சிந்தனைகளை உருவாக்குகிறார். அவரை ஒளி வடிவமாய் பார்க்கக்கூடிய  ' அந்த சக்தி அல்லது ஞான திருஷ்டி ' நம்மிடத்தில் இல்லை. யோகிகள், ஜென்ம ஜென்மங்களாய் செய்யும் இடைவிடா முயற்சியின் காரணமாக ஞான திருஷ்டியைப் பெறுகிறார்கள்.

   அந்த ஞான திருஷ்டியின் மூலமாக பாபாவின் உண்மை உருவை தமக்குள்ளே ஒளிவடிவமாக அவர்களால் காணமுடிகிறது. அன்பு மற்றும் பக்தி என்ற உணர்வுகளின் மூலம் நாமும் சில சமயம் பாபாவை ஆத்மாவினுள் உணர்கிறோம். ஆனால், பெரும்பாலான நேரங்களில் நாம் பாபாவை மானசீகமாக அல்லது கற்பனையில் மட்டும் தரிசித்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் பாபாவின் புகைப்பட உருவம், அவர்தம் சொற்கள், செயல்கள் ஆகியவற்றை நினைவு கூர்ந்த வண்ணம் உள்ளோம். படிப்படியாக முன்னேறி நம்மை சூழ்ந்து கவ்விக்கொண்டிருக்கும் அஹங்காரம், ஆசைகள் இவற்றினின்று விடுபட்டு காமம், கோபம், வெறுப்பு ஆகியவனற்றை நம் கட்டுக்குள் கொண்டு வந்து முழு பற்றற்ற நிலையை அடையும்போது அவரது உண்மை வடிவம் நம்முள் துலங்கும். நம் மனம் சலனமற்ற நிலையை அடைந்து இதயம் நிர்மலமான பின்புதான் பாபாவின் இத்தகைய உண்மை வடிவம் நமக்குள் புலப்படும். நீர் கலங்கிய நிலையில் இருக்கும்போது அல்லது அலைகள் நீர்நிலையை அலைக்கழித்துக் கொண்டிருக்கும்போது
அது ஆகாயத்தை பிரதிபலிப்பதில்லை.
அதேபோல மனம் முழுவதும் அடங்கி நிலைபெற்று ஆன்மாவிற்குள் ஒன்றி அடங்கிப்போனால் அன்றி பாபாவின் இந்த நிஜ ஸ்வரூபம் காணக்கிடைப்பதில்லை. இந்நிலையை அடைய பெருமுயற்சி அவசியம், பாபாவையே சதா  தியானம் செய்யவேண்டும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, February 26, 2016

பாபாவிடமிருந்து எனக்கு ஏன் எந்த உதவியும் கிடைக்கவில்லைநான் சிலகாலமாக மிகுந்த கஷ்டத்தில் இருந்து வருகிறேன். என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பாபா செவி சாய்க்காததால் பல சமயங்களில் என்னுடைய நம்பிக்கையை இழக்கிறேன். பாபாவின் உதவியை நாடி நான் பிரார்த்தனை செய்தபோதிலும், பாபா அதற்க்கும் செவி சாய்த்ததாகத்  தெரியவில்லை. பாபாவிடமிருந்து எனக்கு ஏன் எந்த உதவியும் கிடைக்கவில்லை.? 

எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால், தன பக்தர்களுக்காக பாபா செய்யும் எல்லா செயல்களையும் அந்த பக்தர்கள் அந்த நேரத்தில் அறியமாட்டார்கள். பக்தருடைய முன்வினைகளை ( முந்தைய கர்மாக்களை ) நன்கு அறிந்த பாபா, அமைதியாக பக்தரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். கால ஓட்டத்திலும், மேலும் பாபாவால் நிர்ணயிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட நேரத்திலும் பாபாவின் ஆசிகளின் பலனை ஒருவர் பெறவேண்டுமானால் அதற்கு மிகுந்த நம்பிக்கையும், பொறுமையும் தேவைபடுகிறது.  இக்காரணத்தினால்தான் சிரத்தாவுடன் கூடிய சபூரி அதாவது நம்பிக்கையுடன் கூடிய பொறுமை என்பதை பாபா முக்கிய தகுதிகளாகக் கூறியுள்ளார். ஒன்று,
மற்றொன்று இல்லாமல் நிலைக்க முடியாது. ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தை தினமும் படியுங்கள், பக்தர்களின் இதுபோன்ற கேள்விகளுக்கு பாபா தனக்கே உரித்தான முறையில் பதில் கூறியுள்ளார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, February 25, 2016

நம்பிக்கை நிலைகுலைந்து போகிறது

காற்றடித்தால் கலைவதைப் போல  பாபா மீதான என் நம்பிக்கை நிலைகுலைந்து போகிறது. இதைத் தடுப்பது எப்படி ? இது மீண்டும் நடக்காமலிருக்க என்ன வழி? 

பாபாவிடம் இன்னும் நெருக்கமாக வரவேண்டும் என்று விரும்புபவர்களுக்கான ஒரே வழி எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் அவரிடம் அசைக்க முடியாத, மாறாத நம்பிக்கை கொள்வது மட்டுமே. ஆனால் சிலர் உலகியல் ஆதாயங்களுக்கான ஆசைகளுடன் பாபாவை நாடி வருகின்றனர். அல்லது இதுபோன்ற எதிர்பார்ப்புகளுடன் தங்களது பக்தியை வெளிபடுத்துகின்றனர். சில சமயங்களில் அவர்களது ஆசைகள் பூர்த்தி அடையாவிட்டாலோ அல்லது அவர்களது முன்வினைகளின் பலனாக கஷ்டப்பட நேர்ந்தாலோ, அவர்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கத் தொடங்குகின்றனர்.
எந்த ஒரு அவதாரம் அல்லது சத்குருவின் காலத்திலும் எல்லா மனிதர்களுடைய எல்லா ஆசைகளும் எப்போதுமே நிறைவேறியதில்லை. பக்தர்கள் இறைவனை அடைய தடையாய்  இருக்கும் எந்தவிதமான ஆசைகளையும் சத்குரு நிறைவேற்றுவதில்லை. இதுபோன்ற ஆசைகள் நிறைவேறாமல் போவதன் பின்னணியிலும் பாபாவே உள்ளார். எனவே இன்பத்திலும், துன்பத்திலும் என இரண்டிலுமே பாபாவைக் காணக்கூடியவர் யாரோ அவரே உண்மையான பக்தராவார். இன்பத்தை மட்டுமே நாடுபவர்கள் பாபாவை விட்டு விலகிச்செல்லவே நேரிடும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, February 24, 2016

ஒருமுகபடுத்தி பாபாவை வணங்க முடியவில்லைநான் ஒரு சாயி பக்தன். ஆனால் சில சமயங்களில் என்னால் மனதை ஒருமுகபடுத்தி பாபாவை வணங்க முடியவில்லை. இன்னும் அதிக சிரத்தையுடன் பாபாவை வழிபடுவது எப்படி ?

பாபா கூறியது போல் பெரிய காரியங்கள் செய்யும்போது மட்டுமல்லாமல், சிறு சிறு வேலைகள் செய்யும் போதும் கூட பாபாவை நினைத்துக் கொள்ளுங்கள். உறங்கப் போவதற்குமுன், உறங்கி விழித்தபின், சாப்பிடுவதற்கு முன், புதிய பொருட்களை உபயோகிப்பதற்கு முன், புதிய வேலைகள் ஆரம்பிப்பதற்கு முன் என இவ்வாறான  எல்லா நேரங்களிலும் பாபாவை நினையுங்கள். நாம் பாபாவை நினைத்துக் கொள்வதற்கும், நம் அன்றாட வாழ்வில் பாபாவின் நினைவுடன் எல்லா செயல்களையும் செய்வதற்கும் காலம், இடம் அல்லது சூழ்நிலை என்ற கட்டுப்பாடுகளோ, வரையறைகளோ கிடையாது. இதுதான் பக்தியின் சுலபமான வழியாகும். இவ்வாறாக தொடர்ந்து செய்யும்போது மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை நம்முள் வளர்கிறது. மற்றும் பாபாவுடன் ஒரு உள்ளார்ந்த தொடர்பும் ஏற்படுகிறது.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, February 23, 2016

எவ்விதமாக பாபாவின் நல்ல பக்தனாக ஆக முடியும்
ஒரு மனிதன் எவ்விதமாக பாபாவின் நல்ல பக்தனாக ஆக முடியும் ?

' தான் ' என்ற அகம்பாவத்தை விடுத்து, கருணை, மன்னிக்கும் தன்மை, சேவை மனப்பான்மை, அஹிம்சை போன்ற தெய்வீக குணங்களை ஒருவர் தமக்குள்  கொண்டுவர முடிந்தால் பாபா அவருடனேயே இருந்து வழிநடத்திச் செல்கிறார். பாபாவிடம் முழுமையாக சரணடைந்தவர்கள் பாபாவிற்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தார்கள் என்பது சாயி சத்சரித்திரத்தை படிக்கும்போது தெளிவாகத் தெரிகிறது. பூஜை, புனஸ்காரங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் இவையாவும் நம் மனதை நாம் தூய்மைப் படுத்துவதற்கான வழிமுறைகள் மட்டுமே. இருப்பினும், உள்மனது பரிசுத்தமானதாக இல்லையென்றால், எவ்வளவு தான் வழிபாடுகள் செய்தபோதிலும் சாயி பக்தர் என்ற தகுதியை அடைய முடியாது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, February 22, 2016

விரதம்
பாபாவிற்கு உண்ணாவிரதத்தில் அல்லது பட்டினியாக இருப்பதில் ஏன் நம்பிக்கை இல்லை என்பதை தங்களிடம் கேட்க விரும்புகிறேன் ?

எந்த தாயும் தன் குழந்தை தனக்காக உண்ணாமல் இருப்பதை விரும்புவதில்லை. அதேபோலத்தான் பாபாவும். கடுமையான விரதங்களைக் கடைபிடிக்கும் கஷ்டங்களை தன்  குழந்தைகளுக்குக் கொடுக்காமல் பாபா அவர்களை கவனித்துக் கொள்கிறார்.
மனம் விரதத்தில் லயிக்காமல் உடளவு மட்டும் விரதம் இருப்பதில் எந்தப் பலனும் இல்லை. உண்ணாவிரதம் இருக்கும் போது, மனம் உலக நாட்டங்களையும் எதிர்மறையான எண்ணங்களையுமே நினைத்துக் கொண்டிருந்தால் அவ்விரதத்தால் என்ன பயன் ? அவ்விரதத்திற்கு அர்த்தமேயில்லை.
 இந்து மதத்தில் விரதம் என்பது உடலை முதலில் ஒரு கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்து திடப்படுத்தி பின்னர் மெல்ல மெல்ல சூட்சும நிலைகளுக்குக் கொண்டு செல்லும் கருத்தில் ஏற்பட்டது. பக்தி மார்கத்தில், குருவிடம் தன்னைத் தானே முழுமையாக அர்பணித்துக் கொள்வது மட்டுமே தேவைபடுகிறது. முழுமையான சரணாகதி அடையும் போது, பாபா மற்ற எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறார். 

நான் உன்னோடு தானே இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு."
 - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.{ ஸ்ரீ சாய் சத்சரித்திரம் }

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, February 21, 2016

ஜோதிடத்தின் உதவியை நாடலாமா


சிக்கல்கள் நிறைந்த இந்த உலகியல் வாழ்வில் சாயி பக்தர் தன்னுடைய வாழ்க்கைக்கு ஜோதிடத்தின் உதவியை நாடலாமா?

பதில் :  ஜோசியர்கள் ஓரளவுக்குத்தான் நம்முடைய வருங்கால வாழ்கையை கணித்துத்  தருவார்கள். ஆனால், பாபா முழுமையாகவும், விரைவாகவும் உதவுவார். நீங்கள் அவரிடம் சரணாகதி அடைந்துவிட்டால், உங்களுடைய வாழ்கையின் முழு பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொள்கிறார். உங்களுடைய துயரங்களை குறைக்கிறார். உங்களுடைய ஆனந்தத்தை அதிகப்படுத்துகிறார். நீங்கள் சுகம், துக்கம் இரண்டிலும் பாபாவைப் பாருங்கள். உலகியல் மற்றும் ஆன்மீக வாழ்க்கை இரண்டிலும் பாபாவைப் பாருங்கள். உதாரணமாக, ஜாதகத்தில் குழந்தைபேறு இல்லாத எண்ணற்ற பக்தர்களுக்கு பாபா குழந்தை வரம் அளித்துள்ளார்.

"ஜாதகம் ,கைரேகைக்காரர்களின் ஜோசியம் ஆகியோரின் முன்னோடி உரைகளைத் தூக்கியெறிந்துவிட்டு என்னை மட்டுமே நம்புங்கள். என்னை நம்பி என்பால் லயமாகும் மனிதனின் எல்லாக் காரியங்களையும் பொம்மலாட்டத்தைப் போன்று நான் நின்று நடத்துகிறேன். -  ஷீரடி சாய்பாபா [ஸ்ரீ சாய் சத் சரித்திரம்] "


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintami~Saturday, February 20, 2016

ஏன் இவ்வாறு வேதனையில் கஷ்டப்பட வேண்டும்என் கேள்வி என்னவென்றால் அடியவர்கள் அனைவரும் வேதனையில் உழன்ற வண்ணம் உள்ளனர். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிரச்சனையில் உழன்று வருகின்றனர். பாபாவுக்கு நெருக்கமாய் இருந்தபோதும் இவர்கள் ஏன் இவ்வாறு வேதனையில் கஷ்டப்பட வேண்டும்?

 பதில் : எல்லா பக்தர்களும் கண்டிப்பாக வேதனையில் இல்லை. உண்மையான பக்தர் எவரும் இவ்வுலக வேதனைகளை வேதனைகளாகக் கருதுவதில்லை. பாபாவை விட்டு பிரிந்திருப்பதையே, உண்மையான பக்தர், பொல்லாத வேதனையாகக் கருதுவர். உலகையே பணயம் வைத்தும்கூட பாபாவுக்கு நெருக்கமாய் இருப்பதையே அவர்கள் முயற்சி செய்வார்கள். சாதரணமாக வேதனையில் இருக்கும் மக்களே பாபாவை நாடி வருகின்றனர். பிரச்னை எதுவுமே இல்லையென்றாலும்  பாபாவை நாடி வருபவர்கள் சிலர் உண்டு. மனிதர்கள் எப்போதும் இறைவனைப் பொறுத்தவரை இந்த விதமாகவே நாடுகிறார்கள். இருந்தபோதிலும் பாபா அனைவருக்கும் அருட்கடாட்சம் வழங்கி வருகிறார். பாபாவை பூஜை செய்ததால் அவர்கள் அவதிபடுகிறார்கள் என்று ஏற்றுக் கொள்ளமுடியாது. பாபாவை நெருங்காதிருந்தால் அவர்கள் வேதனை அதிகமாக இருந்திருக்கும் என்பதே உண்மை. பாபாவின் உதவியின் மகிமையை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ளமுடியாது.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, February 19, 2016

என்னுடைய நம்பிக்கையை மாற்றிக் கொண்டிருக்கிறேனா." வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு தேவ, தேவதைகள் பின்னால் ஓடுவதையும் வெவ்வேறு கோயில்களுக்கு அலைவதையும் விடுத்து பாபா ஒருவரையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்." 

கேள்வி : சில வருடங்களாக நான் பாபாவையே வணங்கி, பாபாவின் பாதங்களையே தியானித்து .வருகிறேன். சமீபத்தில் வேறு ஒரு தெய்வத்தை / குருவை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதிலிருந்து அந்த குருவின் திருவடிகளையே பரவசத்துடன் நான் தியானிக்கத் துவங்கிவிட்டதை உணர்கிறேன். என்னுடைய கேள்வி இது தான். " நான் என்னுடைய நம்பிக்கையை மாற்றிக் கொண்டிருக்கிறேனா.?

பதில் : வெவ்வேறு தெய்வங்களுக்கும், ஆன்மீக குருக்களுக்கும் மரியாதை செலுத்துவது.என்பது நல்லது. ஆனால் எல்லா ஞானிகளும் கூறியுள்ளபடி, நம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீதுதான் இருக்க வேண்டும். ஆன்மீக வளர்ச்சிப் பயணத்தில் ஒருவர் தம் குருவைத் தனக்குள்ளேயே தேட வேண்டும். பாபா நமக்குள் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு  விட்டால் வேறெங்கு செல்வது என்ற கேள்வியே ஏன் எழப்போகிறது ?
 உங்கள் நம்பிக்கை பாதிக்கப்படவில்லை. உங்களுக்கு எது மிகவும் சிறந்தது என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளும் வகையில் நம்பிக்கையின் வெவ்வேறு அம்சங்களைத்தான் நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
பாபாவின் திருவாய் மொழியை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் .
"வருவது வரட்டும், விட்டு விடாதே. என்னையே  உறுதியாகப்  பற்றிக்கொண்டு எப்போதும்  நிதானத்துடனும், சதாகாலமும் என்னுடன்  ஒன்றியும்  இருப்பாய்" - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintami

Thursday, February 18, 2016

குருவின் வழிகாட்டுதல்


கேள்வி : நான் பாபாவின் அடியவன். பாபாவை பூஜிப்பதன் மூலமும் அவர் அருளை வேண்டி நிற்பதன் மூலமும் நான் ஒரு குருவின் துணையேதும்  இல்லாமலேயே சரியான வழியில் செல்லுவதாக எண்ணுகிறேன். ஆனால் சமீப காலங்களில் நான் படித்த சில புத்தகங்களில் துணைக்கும், வழிகாட்டுதலுக்கும்  ஒரு குரு அவசியம் என்பது அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது. நான் பெரிதும் குழம்பிப்போய் உள்ளேன். நேரிடையாக பாபாவை வழிபட்டு எனக்கு என்ன தேவையோ அதை நான் பாபாவிடமிருந்து நேரடியாகவே பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு. ஒரு குரு தேவைதானா என்ற கேள்வி எப்போதும் என் மனதில் இருந்து வருகிறது. 

பதில்
:  மனசாட்சியாக பிரதிபலிக்கும் நமது ஆன்மாவே நம் உள்ளிருக்கும் குரு. குருக்களும், ஞானிகளும் இந்த அந்தராத்மாவில் மாற்றங்களை நிகழ்த்தி தன் பக்தர்களை முன்னேறச் செய்கின்றனர். நீங்கள் செய்வது சரியே. பாபாவைப்பற்றிய புத்தகங்களைப் படியுங்கள். அவரையே நினையுங்கள். சத்சங்கத்தில் பங்கு கொள்ளுங்கள். அதாவது தெய்வ பக்தி உடையவர்கள் தங்கள் அனுபவங்களை தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளுங்கள். பாபா உங்கள் இதயத்தில் வீற்றிருக்கும் போது, ஸ்தூல உடலில் வாசம் செய்யும் ஒரு குரு அவசியமில்லை, மாறாக பாபாவையே பூத உடலில் இருக்கும் ஒரு குருவாகப் பாவித்துக் கொள்ளலாம்.

கேள்வி : ஆன்மீக வளர்ச்சியில் முன்னேறுவதற்கு, உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குருவின் வழிகாட்டுதல் அத்யாவசியம் என்று கேள்விப்பட்டேன். இது எவ்வளவு தூரம் உண்மை?

பதில்
: உயிருடன் உள்ள குரு வாய்க்கப் பெற்றால் அது நன்றே. உயிருள்ள ஒரு குரு இல்லையென்றாலும் கூட, பாபாவையே வணங்கினால் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையலாம் என்பதை நீங்கள் அனுபவத்தால் உணர்வீர்கள்.
ஒவ்வொருவரும் ஒரு குருவைத் தேடி எங்காவது அலைந்து கொண்டேயிருக்கின்றனர். அது அப்படித்தான் இருக்க வேண்டும். ' ஒரு தேனீ ஒவ்வொரு மலராகத் தேனைத்தேடி, பறந்து செல்வதைப் போல சாதகனும் கூட ஒவ்வொரு குருவாக தேடிப்போக வேண்டும் ' என்று குருகீதையில் கூறப்பட்டுள்ளது. என்றாலும், பாபாவை போன்ற சத்குருவை ஒருவர் கண்டுகொண்டவுடன்  முழுமனதுடன் அவரையே பின்பற்ற வேண்டும். அனால் எல்லா குருக்களும் சத்குருக்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆத்மாவை பரமாத்மாவுடன் யார் இணைக்க வல்லவரோ, யார் எல்லாச் சூழ்நிலைகளிலும் தன் பக்தனை பாதுகாக்கும் ஆற்றல் உடையவரோ, அவரே சத்குருவாவார். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா பரம சத்குரு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பாபாவை போன்ற சத்குருவிடம் சரணாகதி அடைந்துவிட்டால், உயிருடன் உள்ள ஒரு குருவைத் தேடும் அவசியமே இல்லாது போகிறது. பாபாவின் கிருபையால் ஏற்படும் எழுச்சியும் விழிப்பும் கண்களுக்குப் புலப்படாது, அது எல்லா இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டது. மூவுலகங்களிலும் தேடினாலும் பாபாவை போன்ற சத்குருவைத் தவிர இதை அளிக்கக்கூடியவர் வேறெவரையும் காணமுடியாது

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, February 17, 2016

நான் ஸ்ரீ சாயிபாபாவின் புதிய பக்தன்

 நான் ஸ்ரீ சாயிபாபாவின் புதிய பக்தன். நான் எவ்வாறு அவரை அணுகுவது என்று தயவுசெய்து கூறுங்கள்.

உங்கள் உணர்ச்சிகளுக்குத் தகுந்தாற்போல, ஒரு குரு, ஒரு தந்தை, தாய் அல்லது ஒரு சினேகிதன் என யாராவது ஒருவராக அவரைப் பாவித்துக் கொண்டு வணங்குங்கள். பாபாவுக்குச் செய்யும் பிரார்த்தனைகளில் மிகச்சிறந்தது பாபாவிடம் அன்பு செலுத்துவதேயாகும். அன்பு இருந்தால், சம்பிரதாயமான பிரார்த்தனைகளோ, பூஜைகளோ  தேவையேயில்லை. மேலும் தெளிவுபெற, பாபாவின் வாழ்க்கைச்சரித்திரமான  ஸ்ரீ சாயிசத் சரித்திராவைப் படியுங்கள்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, February 16, 2016

ஷீரடி சாய்பாபா என்பவர் யார்ஷீரடி சாய்பாபா என்பவர் யார் ? அவர் ஒரு சத்குருவா அல்லது அவதாரமா? தயவு செய்து விளக்கவும்.

ஷீரடி சாயிபாபா ஒரு அவதாரமா அல்லது சத்குருவா என்ற கேள்வியைக் கேட்பதற்கு முன்னால், சத்குருவுக்கும், அவதாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு பற்றி தெரிந்திருப்பது அவசியம் . நம்முள் மண்டிக்கிடக்கும் அஞ்ஞானம் எனும் இருளை விலக்கி ஞானதீபத்தை நம்முள் ஏற்றி வைப்பவரே சத்குரு. அதோடு மட்டுமின்றி, அவர் நமக்கு வழிகாட்டியாகவும், இறைவனை நோக்கிய பயணத்தில் வழிநடத்துபவராகவும் இருக்கிறார்.

அவதாரம் எனப்படுபவர் ( அவரே இறைவன், இறைவன் அன்றி அவர் வேறில்லை ) மனிதகுலத்தை உய்விக்க கருணை கொண்டு இறங்கி வந்தவர் எனலாம். அவர் அவ்வாறு இறங்கி வரும்போது 16 அம்சங்களுடன் ( SHODASH KALAS ) கூடிய முழு அவதாரமாகவோ அல்லது 16 அம்சங்களில் சில அம்சங்கள் மட்டும் கொண்ட ஒரு அவதாரமாகவோ அவதரிக்கலாம். எந்த சூழ்நிலையிலும் மாறா நம்பிக்கையோடு பாபாவை நீங்கள் வணங்கினால், பாபா  தாம் இறைவனின் ஒரு அவதாரமே என்று வெளிப்படுத்துவார்.

ஸ்ரீ  சாயி எப்போதும் ஒரு சாதாரண பக்கிரி போலவும், இறைவனின் சேவகர் போலவுமே நடந்து கொண்டார். ஆனால், பல சமயங்களில், அவர் பேரருளைப் பெற யார் தகுதியானவர்களோ, அம்மாதிரியான ஒரு சில அடியவர்களுக்கு மட்டுமே தான் இறைவனே என்பதை வெளிபடுத்திக் கொண்டார். பாபா ஒரு அவதாரம் என்பதற்கான குணாதிசயங்கள், 'சர்வ வல்லமை', 'சர்வ வியாபித்துவம்' ( எங்கும் நிறைதன்மை ), 'சர்வ ஞானம்' (எல்லாம் அறியும் தன்மை ) ஆகியவைகளாகும். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் அனைத்தின் மீதும் அவருக்கு முழு கட்டுப்பாடு இருந்தது.

ஸ்ரீ சாயிநாத்தின்  வாழ்க்கை வரலாற்றைக் கூறும் புத்தகமான 'ஸ்ரீ சாய் சத் சரித்திரா'வில் விவரித்துள்ளபடி அவர் மழையையும், நெருப்பையும் எப்படி தன் கட்டுக்குள் அடக்கி ஆண்டார் என்பதையும் நாம் அறிவோம். எனவே சந்தேகமே வேண்டாம், ஸ்ரீ சாய்பாபா இறைவனின் அவதாரமே.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, February 15, 2016

உண்மையான பக்தன்

 
எனது உண்மையான பக்தன் எனது அன்பை தவிர வேறெதையும் என்னிடம் எதிர்ப்பார்ப்பது இல்லை. எனது விருப்பமே அவனது விருப்பமாக இருக்கும். அவனது வாழ்க்கையில் நடக்கின்ற எல்லா நிகழ்வுகளும் எனது விருப்பபடியே நடக்கிறது என திடமாக நம்புவான். அப்படிப்பட்ட என் பக்தனை காக்க ஏழு கடல்களையும் தாண்டி செல்வேன்.- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, February 14, 2016

அல்லா

 "அல்லா  உனக்கு தாராளமாக அளிப்பார்.  உனக்கு எல்லாவித நன்மைகளையும் செய்வார்"- ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, February 13, 2016

பேராசை


பேராசையை வெல்லாத வரையில் நீங்கள் என்றுமே என்னை அடையமுடியாது.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, February 12, 2016

நிலையற்ற புத்தியுள்ள மனிதன்

 
நிலையற்ற புத்தியுள்ள மனிதன், ஒரு முறை கவலையை இறக்கிவைப்பான். இன்னொரு முறை அதை தன் மீது ஏற்றிக்கொண்டு திரிவான். அவனது மனதுக்கு உறுதி என்றால் என்ன என்பதே தெரியாது. அவனுக்கு உதவி செய்ய நான் இறக்கம் கொண்டுள்ளேன். உங்களுடைய நம்பிக்கையை என் மீது வைத்து அதை பற்றிக்கொள்ளுங்கள். நான் வழிகாட்டுகிறேன். - ஷிரிடி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, February 11, 2016

முழுமனதான பக்தி


சாயிபாபா எப்போதுமே கருணை நிறைந்தவராக இருக்கிறார்.  அவர்பால் முழுமனதான பக்தியே நம்மைப் பொறுத்தவரை தேவைப்படுவதாகும்.  உறுதியான நம்பிக்கையும், பக்தியும் ஒரு பக்தன் பெறும்போது அவனது விருப்பங்கள் விரைவில் நிறைவேறுகின்றன.- ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, February 10, 2016

மாறாத நம்பிக்கை


எந்த வித சம்பிரதாயமான பூஜை முறைகளையோ,விரதங்களையோ எனது பக்தனிடமிருந்து நான் எதிர்பார்ப்பது இல்லை. எந்த சூழ்நிலையிலும் என்மீது மாறாத நம்பிக்கை வைத்திருப்பவனையே மிகவும் நேசிக்கிறேன்.- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, February 9, 2016

அன்னதானம்


உணவு சமயத்தில் பசியோடு எந்த ஜீவன் வருகிறதோ, மனிதனோ, பறவையோ, மிருகமோ, புழுபூச்சியோ, எது வருகிறதோ அதுவே அதிதி. இவை யாவும் உணவை நாடுகின்றன. உன்னிடம் வரும் உண்மையான அதிதியை, நீ அதிதியாகக் கருதுவதில்லை. காக்கைக்கு உணவு அளிக்கும் சமயத்தில், சமைத்த சாதத்தை நிறைந்த அளவில் எடுத்துக்கொண்டு போய்  வீட்டுக்கு வெளியே வை. எந்தப் பிராணியையும் கூவி அழைக்காதே. வந்த எந்தப் பிராணியையும் விரட்டாதே. எந்தப் பிராணி உணவுகொள்ள வந்தாலும் அதைப்பற்றி மனதை அலட்டிக்கொள்ளாதே. இவ்வாறாக இலட்சம்  விருந்தினர்களுக்கு உணவளித்த புண்ணியத்தை நீ பெறுகிறாய்.  "பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக!"-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, February 2, 2016

குருவின் திருவாய்மொழி

யார் எதைச் சொன்னாலும் சொல்லட்டும். அவையனைத்தையும் நாம் கேட்டுக்கொள்ளலாம். ஆனால், நம்முடைய  லட்சியப்பாதையிலிருந்து தடம்புறளகூடாது. நம் குருவின் வார்த்தைகளை மறந்துவிடக்கூடாது.
குருவின் திருவாய்மொழிதான் நமக்கு பரம மங்களங்களை விளைவிக்கும். அதுதான் நம் போதியும் புராணமும் அனுஷ்டானமும் ஜபமும் தவமும்-அனைத்தும் ஆகும்.-ஸ்ரீ சாயி இராமாயணம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

மசுதிஇந்த மசுதியின் கதவுகள் யாருக்காகிலும், எப்போதும் திறந்தே இருக்கும்.
-  ஸ்ரீ  ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, February 1, 2016

நீ என் குழந்தை
ரேகே ( பாபாவின் பக்தர் ), பட்டதாரி, முதன்முதலாக ஷீரடிக்கு வந்து பாபாவைப் பணிந்தார். அப்போது பாபா அவரை, " என்ன! நீ ஒரு மனிதனை வணங்குவதா? " எனக் கேட்டார்.
பாபாவின் பேச்சு ரேகேயை வியப்பிலாழ்த்தியது. அவர் துயரத்திலாழ்ந்தார். முடிவாக பாபா தனியாக இருந்த சமயம் அவர் பாபாவிடம் சென்றார். பாபா அவரை தம்மிடம் வருமாறு சைகை காட்டினார். ரேகே பாபாவின் பாதங்களில் சிரத்தை வைத்தவுடன், பாபா அவரைத் தழுவி, தமதருகிலேயே உட்காரச் செய்தார்.

பாபா : நீ என் குழந்தை. மற்றவர்கள்  (அதாவது வேற்று மனிதர்கள் ) கூட இருந்தால், குழந்தைகளை தள்ளியே வைத்துக் கொள்கிறோம்.

ரேகே சாயி நாமத்தை ஜபம் செய்யத் தொடங்கிய பிறகு, பாபா அவரை வரவழைத்தார்.

பாபா : காலையில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்.
ரேகே : நாமஜபம்
பாபா  : எந்த நாமாவை ?
ரேகே : என் தெய்வத்தின் நாமாவை .
பாபா : உன் தெய்வம் எது ?
ரேகே : தாங்கள் அறிவீர்கள்.
பாபா: (முறுவலித்து): அது சரி.

இந்த விதமாக சாயி நாம ஜபம் செய்வதையும், ஒவ்வொருவரும் தத்தம் ஆன்மீக சாதனையை ரகசியமாக வைத்துக் கொள்ளவேண்டிய அவசியத்தையும் பாபா அங்கீகரித்தார்.

ஒரு சந்தர்பத்தில் எல்லா பக்தர்களும் மாலைகளைக் வந்து ஒவ்வொருவராக பாபாவுக்கு அணிவித்தனர். ரேகே மட்டும் ஒன்றும் கொண்டு வரவில்லை. கொண்டு வர மறந்ததை எண்ணி அவர் மனம் நொந்தார். அப்போது கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த மாலைகளை கொத்தாக எடுத்து தூக்கிக் காட்டியவாறு பாபா ரேகேயிடம், " இவை  உன்னுடையவை தான் " எனக் கூறினார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...