Sunday, February 28, 2016

பாபாவிடம் இன்னும் நெருக்கமாக இருப்பதற்கு ஆசைப்படுகிறேன்



வழிபாட்டின் மூலமாகவும், தியானத்தின் மூலமாகவும் பாபாவிடம் இன்னும் நெருக்கமாக இருப்பதற்கு நான் மிகவும் ஆசைப்படுகிறேன். பல சமயங்களில் எல்லாம் சுமூகமாக நடந்தபோதிலும், மாயையின் பிடியில் அடிக்கடி சிக்கித் தவிக்கிறேன். இதை தவிர்ப்பது எப்படி ?

மாயை என்று அழைக்கப்படும் இவ்வுலக வாழ்க்கை நிகழ்வுகளுக்கு நடுவில் வாழும் வரை இந்நிலைமையை ஒருவரால் தவிர்க்க முடியாது. இவ்வுலக நடவடிக்கைகளை முற்றிலும் துறந்து ஒரு யோகி அல்லது சன்னியாசியாக மாறினால்தான் இந்த நிலையை தவிர்க்க முடியும். அதே சமயத்தில் ஒருவர், பாபாவின் நாமத்தை ஜெபிப்பது, பாபாவை பற்றி மற்றவர்களிடம் பேசுவது, பாபாவைப் பற்றி படிப்பது, பாபாவையே நினைப்பது போன்ற சில வழிகளில் எப்போதும் பாபாவையே இறுகப் பற்றிக்கொண்டால், மாயையின் தாக்குதல்களை எதிர்க்கும் மனோபலத்தை வளர்த்துக் கொள்வதற்க்கு பாபாவின் உதவி நமக்குக் கிடைக்கிறது. தினமும் சாய் சத்சரிதத்தின் ஒரு அத்தியாயத்தையாவது படியுங்கள்.  நேரம் கிடைக்கும்போதெல்லாம் சாய் நாமத்தை சொல்லுங்கள் ( ஓம் சாய், ஸ்ரீ சாய், ஜெய் ஜெய் சாய் ). எவ்வளவுக்கெவ்வளவு பாபாவின் மீது உள்ள ஈடுபாடு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மாயத்தோற்றமான இவ்வுலக நடவடிக்கைகளில் ஈடுபாடு குறைகிறது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba    http://www.shirdisaibabasayings.com ...