நான் ஒரு சாயி பக்தன். ஆனால் சில சமயங்களில் என்னால் மனதை ஒருமுகபடுத்தி பாபாவை வணங்க முடியவில்லை. இன்னும் அதிக சிரத்தையுடன் பாபாவை வழிபடுவது எப்படி ?
பாபா கூறியது போல் பெரிய காரியங்கள் செய்யும்போது மட்டுமல்லாமல், சிறு சிறு வேலைகள் செய்யும் போதும் கூட பாபாவை நினைத்துக் கொள்ளுங்கள். உறங்கப் போவதற்குமுன், உறங்கி விழித்தபின், சாப்பிடுவதற்கு முன், புதிய பொருட்களை உபயோகிப்பதற்கு முன், புதிய வேலைகள் ஆரம்பிப்பதற்கு முன் என இவ்வாறான எல்லா நேரங்களிலும் பாபாவை நினையுங்கள். நாம் பாபாவை நினைத்துக் கொள்வதற்கும், நம் அன்றாட வாழ்வில் பாபாவின் நினைவுடன் எல்லா செயல்களையும் செய்வதற்கும் காலம், இடம் அல்லது சூழ்நிலை என்ற கட்டுப்பாடுகளோ, வரையறைகளோ கிடையாது. இதுதான் பக்தியின் சுலபமான வழியாகும். இவ்வாறாக தொடர்ந்து செய்யும்போது மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை நம்முள் வளர்கிறது. மற்றும் பாபாவுடன் ஒரு உள்ளார்ந்த தொடர்பும் ஏற்படுகிறது.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil