Thursday, March 31, 2016

ஆண்டவன்
ஆண்டவன் தன் இஷ்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும்படி விட்டுவிடு. மௌனமாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிரு. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 30, 2016

அளவற்ற பயனை எய்துவான்

குரு கீதையின் (குரு சரித்திரம்) ஜபத்தால் ஒருவன் அளவற்ற பயனை எய்துவான். இது எல்லா பாவங்களையும் போக்குவது, எல்லா ஏழ்மையையும் நாசம் செய்வது. அகால மரணத்தை தடுப்பது, எல்லா சங்கடங்களையும் நாசம் செய்வது. யக்ஷர், ராட்சதர், பூதங்கள்,திருடர்கள்,புலி முதலிய பயங்களை போக்குவது.  
கொடிய குஷ்டம் முதலிய உபத்ரவங்களையும் தோஷங்களையும் நிவாரணம் செய்வது. குருவின் சந்நிதியில் என்ன பலனோ அது படிப்பதாலேயே கிட்டும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 29, 2016

சர்வாந்தர்யாமிபாபா: நானா (பாபாவின் நெருங்கிய பக்தர்), எனக்கு பூர்ண போளி வேண்டும். அதை நைவேத்யமாக தயார் செய்து கொண்டு வா.
 
அதன்பிறகு நானா எட்டு பூர்ண போளிகளும் அதற்கேற்ற பண்டங்களையும் தயார் செய்ய வைத்து, பாபாவின் முன் கொண்டு வந்து சமர்பித்தார்.

நானா: பாபா உட்கொள்ளுங்கள்.

பாபா சற்று நேரம் தாமதித்தார். போலியின் மீது ஈக்களும் எறும்புகளும் மொய்க்கலாயின.

பாபா: நல்லது, இந்த தட்டுகளை எடுத்துச் செல்.

நானா: அவற்றை தொட்டுக் கூட பாராமல் தாங்கள் என்னை எடுத்துச் செல்லச் சொல்வது எப்படி? தாங்கள் ஒன்றையும் உண்ணப்போவதில்லை என்றால் என்னை ஏன் இதை தயாரிக்க சொல்லவேண்டும்? கொஞ்சமாவது எடுத்துகொள்ளாவிட்டால் ,நான் தட்டுகளை எடுத்துச் செல்லமாட்டேன். நானும் உண்ணமாட்டேன்.

பாபா: ஏதோ ஒரு நேரத்தில் நான் நீ கொண்டுவந்த போளியை சாப்பிட்டுவிட்டேன். பிடிவாதம் வேண்டாம். தட்டுகளை எடுத்துச் சென்று, உணவு உட்கொள்.

நானா சிணுங்கியவாறு மீண்டு சாவடிக்குச் சென்று விட்டார். மறுபடியும் பாபா அவரை வரவழைத்தார்.

பாபா: நானா! நீ என்னுடன் பதினெட்டு ஆண்டுகளாக பழகுகிறாய். இவ்வளவு தானா நீ அறிந்துகொண்டது! என்னைப் பற்றிய உனது கணிப்பு இவ்வளவுதானா! 'பாபா' என்றால் உனக்கு கண்முன் தோன்றும் இந்த எண் ஜாண் உடல்தானா!அவ்வளவுதானா?
இதோபார், நான் எறும்பு உருவிலும் உண்கிறேன். மொய்க்கும் ஈயின் வாயிலாகவும் சாப்பிடுகிறேன். எனக்கு தோன்றிய வடிவத்தை நான் எடுத்துக் கொண்டு அந்த வடிவத்தின் மூலம் உண்பேன். உன் போளியை  வெகுநேரம் முன்பே சாப்பிட்டு விட்டேன். அளவு கடந்த பிடிவாதம் பிடிக்க வேண்டாம்.

நானா: தாங்கள் இப்படிக் கூறினாலும், என்னால் எதையும் புரிந்து கொள்ளமுடியவில்லை. என்ன செய்யட்டும்? எனக்கு புரிய வைத்தீர்களானால், நான் தட்டுகளை எடுத்துச் செல்கிறேன்.சாப்பிடுகிறேன்.

அச்சமயம் பாபா ஒரு சமிக்ஞை செய்தார். அது நானா ஆழ்மனதில் வேறு யாருக்குமே தெரியாத ஒரு ரகசியத்தை புதைத்து வைத்திருந்ததை பற்றியது. அது பாபா தனது அந்தராத்மா எனவும், ஆகவே எல்லோரினுள்ளும், எறும்பு உள்பட உறையும் சர்வாந்தர்யாமி எனவும் நானாவுக்கு திடமாக புலப்படுத்துயது.

 பாபா: நானா, நான் செய்த இந்த சமிக்ஞையை எப்படிப் பார்த்தாயோ,அவ்வாறே நான் (எல்லா உருவங்களாகவும்) உண்கிறேன் என்பதை தெரிந்து கொள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, March 28, 2016

சாயி நாமம்


சாயி நாமம் நம்முள் எப்போதும் எதிரொலித்துக் கொண்டே இல்லாமல் இருப்பது ஏன் ? இவ்வாறு சாயி நாமம் நம்முள் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்க நாம் எவ்வாறு முயற்சி செய்ய வேண்டும்.?

நமது மூச்சுக்கு அஜபா ஜெபம் என்று பெயர். அதாவது இறைவனின் நாமத்தை நம் மூச்சுடன், நாம் உணராவிட்டாலும் கூட, நமக்குள் தொடர்ச்சியாகவும் இயல்பாகவும் திரும்பத் திருபக் கூறிக்கொண்டேயிருப்பது மூச்சுவிடுவதற்கு
நாம் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. அது தன்பாட்டிற்கு ஒரு சீரான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. இறைவனின் நாமத்தை சுவாசத்துடன் இணைக்கும்போது அது மிகவும் சக்தி வாய்ந்ததாகிறது. ஆனால் ஒரு குடும்பஸ்தர் இதனை அனுஷ்டிப்பது கடினம். ஏனென்றால் அவருக்கு பல்வேறு கடமைகள் உள்ளன. நம்மால் முடிந்த போதெல்லாம் ஒவ்வொரு மூச்சுக்கும் 'சாயி சாயி' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருப்பது அல்லது நாமத்தை ஜெபிக்காமல் சாயியின் நினைவை மனதில் கொள்வது இவையும் நன்றே. மெல்ல மெல்ல நமக்குள், நம்மையறியாமலேயே, உள்ளுக்குள் நிகழும் ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக இது மாறிவிடும். ஒவ்வொரு செயலும், எண்ணமும் பாபாவின் நினைவுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். இதையே மானசீக ஜபமாகக் கொள்ளலாம்.
                 
                            " ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி "http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, March 27, 2016

தெய்வபலம் அவசியம் வேண்டும்


ஒருவருக்கு இணையில்லாத புத்திசாதுர்யம் இருக்கலாம். ஆடாத அசையாத சிரத்தையும் இருக்கலாம். ஆயினும் சாயியைப்போன்ற பலமான குரு அமைவதற்கு தெய்வபலம் அவசியம் வேண்டும். - ஸ்ரீ சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 26, 2016

தம் பக்தர்கள் தவறு செய்வார்கள் என்பது பாபாவுக்கும் தெரியும்.
மனித பிறவிகள் தவறு செய்வது இயற்கையே. மாயையின் விளையாட்டில் தம் பக்தர்கள் தவறு செய்வார்கள் என்பது பாபாவுக்கும் தெரியும். எனவே பாபா எப்போதும் விழிப்பாய் இருந்து அவர்கள் தவறு செய்வதைத் தவிர்த்து தடுத்தாட் கொள்ளவே பார்ப்பார். பக்தன் தானே செய்யும் தவறுகளின் காரணமாய் ஆபத்தில் சிக்கிக்கொண்டால் பாபா நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பக்தனைக் காப்பாற்றி விடுவார். " நீங்கள் எங்கேயிருந்தாலும் நீங்கள் என்ன செய்தாலும் நான் அதை முழுமையாக அறிவேன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் " என்று பாபா கூறுவது வழக்கம். பாபா சகலமும் அறிந்தவராக இருந்தார் என்பதை ஸ்ரீ சாயி சத்சரித்திரம் காட்டுகிறது. நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறுகளுக்கு கண்டிப்பாகக் பாபாவிடமிருந்து நமக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
சில சமயம் நாம் பாபா காட்டிய வழியைப் பின்பற்ற முடியாமல் போகலாம். அதற்காக பாபா வருத்தபடுவதில்லை. அவர் வெறுப்பு மற்றும் சினம் ஆகிய குணங்களுக்கு அப்பாற்பட்டவர். அவர் கருணையே உருவானவர். குருபாதையில் முன்னேற பக்தனுக்கு உள்ள உண்மையான நோக்கத்தை அவர் கண்காணிக்கிறார். மனஉறுதியுடன் திடமாக இருந்து பாபாவிடம் முழுமையாக சரணாகதியடைந்தால், அவனுடைய தவறுகளையும் பொருட்படுத்தாது பாபா தன் பக்தனை தன்னுடனேயே வைத்துக் கொள்கிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 25, 2016

சாய்பாபாவின் தரிசனம் எனக்கு கிடைக்குமா


சாய்பாபாவின் தரிசனம் எனக்கு எப்பொழுதாவது கிடைக்குமா ? மேலும், என் அன்பிற்குரிய பாபாவுடன் நான் இரண்டறக் கலப்பது எப்போது ? 

 ஒரு சத்குருவை உடல் உருவில் தரிசிப்பது என்பது அவர் பூதஉடலில் இருக்கும்போது மட்டுமே சாத்தியம். அதன்பின்பு, ஆழ்ந்த தியானத்தின் மூலம் தமக்குள்ளேயே அந்தர்முகமாக அவரின் தரிசனத்தை ஒருவர் காண முடியும். ஸ்ரீ சாயியிடம் அவருடைய 'ஸ்வரூப தரிசனம்' தந்து உங்களுக்கு ஆசிகள் வழங்கும்படி எப்பொழுதும் வேண்டிக்கொள்ளுங்கள்.
பாபா அதி சூட்சுமமான வடிவில் இருக்கிறார். பிரபஞ்சம் முழுமையும் சக்தி வடிவமாய் எங்கும் பரவி நிறைந்து நிற்கிறார். கணக்கில்லாப் பிறவிகளின் மூலம் ஏற்படும் முன்னேற்றத்தால் ஒரு மனிதன் தன் ஸ்தூலத்திலிருந்து விடுபட்டு உடலற்ற சக்தி ரூபமான ஒரு நிலையை, தானே அடைந்து பாபாவுடன் இரண்டறக் கலக்க முடியும். இப்பரிணாம வளர்ச்சி முழுமையடைய நெடுங்காலம் ஆகலாம். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 24, 2016

பாபா நேராக பேசுகிறார்

பக்தர்களின் நம்பிக்கை, நேர்மையான பக்தி, ஆன்மீக வளர்ச்சிக்கேற்ப, சாய்பாபா அளித்திடும் அனுபவங்கள் பக்தருக்கு பக்தர் மாறுபடும். சில முக்கியமான நிகழ்வுகள் மூலம் பாபா சில பக்தர்களுக்கு உதவுகிறார். அவர்கள் வாழ்க்கையில் பொருளாதார மேம்பாட்டை அளிக்கிறார். சில பக்தர்களுக்கு கனவுகளில் தோன்றி, கனவுகளில் செய்திகள் சொல்லி சிலரது பக்தியை அதிகப்படுத்துகிறார். முழுமையான நம்பிக்கை, நேர்மை மற்றும் பக்தியுடன் சாயிபாபாவை நோக்கி யார் பிரார்த்தனை செய்தாலும் பாபா அவர்களுடன் நேராக பேசுகிறார், அவர்கள் இடைத் தரகர்களின் உதவியை நாடத் தேவையில்லை.  பாபாவிடம் முழு சரணாகதி அடைந்த ஒருவர், தேர்வு முடிவு, வேலை போன்ற இவ்வுலக வாழ்க்கைக்குரிய சாதாரண விஷயங்களை விடுத்து, பாபாவிடம் என்றும் மாறாத நம்பிக்கைக்கும், அவரது அருளாசிக்காக பிரார்த்தனை செய்யுங்கள். காமதேனு (தேவலோகத்துப் பசு) நாம் விரும்பிய பொருளை உடனே அளிக்கும். காமதேனுவைவிடச் சிறந்தவர் குருதேனு. நம்மால் சிந்தனைசெய்து பார்க்கமுடியாத பதவியையும் (வீடுபேறு நிலையையும்) அளிப்பார் !

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 23, 2016

சிஷ்யனிடமிருந்து எதிர்பார்க்கிறார்

பொறுமையும் சகிப்புத்தன்மையுமே தைரியம். அதைத் தொலைத்துவிடாதீர்கள். எப்பொழுது பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் அது உங்களை கரைசேர்க்கும். சகிப்புத்தன்மை இல்லாத மனிதனின் நிலைமை பரிதாபகரமானது. பண்டிதராக இருந்தாலும் சரி, நற்குணம் படைத்தவராக இருந்தாலும் சரி, சகிப்புத்தன்மை இல்லாவிடில் வாழ்க்கை வீணாகிவிடும். குரு மஹாபலம் படைத்தவராக இருக்கலாம். ஆயினும், ஆழமாகப் பாயும் நுண்ணறிவையும் தம்மிடம் அசையாத நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையின் துணிவான பலத்தையும் தம் சிஷ்யனிடமிருந்து எதிர்பார்க்கிறார்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 22, 2016

ஒரு சாதாரண மனிதன் பாபாவை எப்போது எவ்வாறு வழிபட வேண்டும்


ஒரு சாதாரண மனிதன் பாபாவை எப்போது,எவ்வாறு வழிபட வேண்டும்?

நாம் இறைவனை வணங்குவதே அவரை உணர்வதற்காகத் தான். வழிபடும் முறை என்பது அவரை அடைவதற்கான ஒரு வழி மட்டுமே, அதுவே இலக்காகாது. நம் இலக்கு பாபா ஆவார். பாரம்பரியமான வழிபாட்டு முறைகள் எதையும் பின்பற்றாமலே, பலர் இறைவனை உணர்ந்திருக்கின்றனர்.

சிறந்த முறை எதுவென்றால் ...

* அதிகாலையில் சிறிது நேரம் பாபாவை தியானம் செய்ய வேண்டும்.

* நாம் எப்போதும் வழிபடும் முறையில் அவரை வழிபட வேண்டும். ஆனால் தீவிரமான பக்தியுடன் செய்தல் அவசியம்.

* பாபாவை நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே எப்போதும் எண்ணிக்கொண்டு அவர் மீது அன்பு  செலுத்த வேண்டும். நாம் உண்ணும் உணவு, உடுத்தும் உடை மற்றும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவருக்கே அர்ப்பணிக்க வேண்டும்.

* இவ்வாறு நாம் எப்போதும் பாபாவையே நினைவில் கொண்டு வணங்கி வந்தால் அதுவே ஒருவகையான இடைவிடாத வழிபாடாகும். பதினைந்து நிமிடம் அல்லது ஒரு மணி நேர வழிபாட்டினால் பெரிதாக பலன் ஒன்றும் விளைவதில்லை. சதா சர்வ காலமும் பாபாவின் நினைவுடன் இருப்பதே உண்மையான வழிபாடாகும். இதுவே தன்னிச்சையான இயல்பான வழிபாடு ஆகும். சுருங்கச்சொன்னால் பாபாவை அன்புடனும், இடைவிடாதும் நினைத்தவண்ணம் இருப்பதே உன்னதமான வழிபாடு எனலாம்.

* சம்பிரதாயமான வழிபாடு முக்கியம் என கருதினால், அதற்கு உகந்த நேரம் காலை நேரமே. பாரம்பரிய முறையில் காலையில் ஆரத்தி, புஷ்பாஞ்சலி, நைவேத்தியம் இவைகளுடன் வழிபாட்டை வீட்டிலேயே நடத்திக் கொள்ளலாம். இரவில் உறங்கும் முன்பும், நெற்றியில் சிறிதளவு விபூதியை (ஊதி) அணிந்து, ஒரு சிட்டிகை வாயிலும் போட்டுக் கொண்டு, அவர் நாமாவை மனதில் இருத்திய வண்ணம் உறங்கத் தொடங்கலாம். இதுவே பாபாவை வணங்கும் பாரம்பரிய முறை ஆகும். சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் இவ்வழிமுறைகளில் சிறிது மாற்றங்களும் செய்து கொள்ளலாம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, March 20, 2016

பாபாவிற்கு தினசரி பூஜை எப்படி செய்ய வேண்டும்

பாபாவிற்கு தினசரி பூஜை எப்படி செய்ய வேண்டும் ?

பதில் : உங்கள் தினசரி பூஜையில் அன்புடன் சமர்ப்பிக்கப்படும் ஒரு மலர் அல்லது ஊதுபத்தியே போதுமானது. சடங்குகள் எதுவும் தேவையில்லை.
நீங்கள் எது செய்தாலும் ஒருமுனைப்பட்ட மனதுடன் செய்யுங்கள்.
 சம்பிரதாயமான பூஜை எதுவும் செய்ய இயலவில்லை என்றால் சற்றும் வருத்தப்பட வேண்டாம். வீட்டை விட்டு செல்லும் முன்னும், உறங்கப்போகும் முன்னும் ஒரு சிறிய வழிபாடு போதுமானது. மனதை ஒருமுகப்படுத்தி பாபாவையே நினைப்பதன் மூலம் மானசீகமாகக்கூட நீங்கள் பூஜை செய்யலாம். பாபாவை இடைவிடாது அன்புடன் நினைத்துக் கொண்டிருப்பதே சிறந்த வழியாகும். ஸ்ரீ சாயி சத்சரித்திராவை தினமும் படியுங்கள்.


 http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 19, 2016

குண்டலினி சக்தியை எழுப்ப வேண்டும்
ஸ்ரீ சாய்பாபாவின் பாதங்களில் முழுமையாக சரணடைவதன் மூலம் ஒரு பக்தன் ஆன்மீகப் பாதையில் செல்ல முடிவதுடன் அப்பாதையில் செல்வது எளிதாகவும் ஆகிறது. 'உலகியல் வாழ்வில் உள்ள மனிதன்' என்ற நிலையில் உள்ள ஒருவர் ஒரு யோகியாகவோ, சித்தராகவோ அல்லது குண்டலினி சக்தியை எழுப்ப வேண்டும் என்றோ ஒரேடியாக முன்னேற வேண்டும் என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது. இந்தச் சொற்கள் அவற்றின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் உபயோகிப்பது பெரும் முட்டாள்தனமாகும்.  பாபாவிடம் அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கை கொள்வது மிகவும் இன்றியமையாததாகும்.

பாபாவிடம் அவர் தோற்றத்தை நமக்கு வெளிப்படுத்திக் காட்ட தொடர்ந்து பிரார்த்தனை செய்யவேண்டும். செயல் புரிபவர்கள் நாம் அல்ல என்ற உண்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 'செயலைச் செய்பவர்' என்ற உணர்விலிருந்தும் நாம் விடுபடுதல் அவசியமாகும். செயலைச் செய்பவர் என்ற அந்த உணர்வு, நம் அகங்காரத்திலிருந்து பிறக்கிறது. அது மிக மிக மெதுவாகவே குறைகிறது. பாபா விரும்பினால் அவர் நமக்கு சித்தி, முக்தி அல்லது எதை வேண்டுமானாலும் அளிக்கலாம்.

வெறும் படிப்பதினால் மட்டுமோ அல்லது மற்றவர்கள் கூறுவதைக் கவனுத்துடன் கேட்பதினால் மட்டுமோ அல்லது ஆன்மீக வளர்ச்சியை ஒரு கால அட்டவணைக்குட்பட்ட நிர்வாகம் என்னும் கருத்துடன் திட்டமிடுவதாலோ, ஆன்மீகப் பாதையில் எவரும் முன்னேற்றம் அடைய முடியாது. எந்த ஒரு அறிவும் நடைமுறையில் பயன்படுத்தப்படவில்லை என்றால் அது முற்றிலும் பயனற்றது. ஆன்மீகப் பாதையில் செல்வதற்கு நமக்குத் தேவையான நடத்தை வழிமுறைகளை நாம் பழக்கத்தில் கொணர்வது என்பது மிகவும் கடினமானது. இதற்கு நம்பிக்கையும் திடசித்தமும் தேவை.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 18, 2016

பாபாவிற்கு படைப்பதற்கு என்று குறிப்பிட்ட உணவு வகைபாபாவிற்கு படைப்பதற்கு என்று தனியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்பது அவசியமா? பாபாவிற்கு படைப்பதற்கு  என்று குறிப்பிட்ட உணவு வகை ஏதேனும் உண்டா?

பதில் : நம் வீட்டில் நமக்காக சமைக்கப்பட்டது எதுவோ, அதுவே பாபாவிற்கும் படைக்கப்பட வேண்டும். அவ்வாறு படைக்கப்பட்டவை மற்றவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். பரிசுத்தம்மான மனதுடன் எது படைக்கப்பட்டாலும் அதை பாபா ஏற்றுக்கொள்கிறார். சில வழிபாட்டு முறைகளில், இறைவனுக்கு அசைவு உணவுகள் படைப்பதுகூட குறிப்பிடப்பட்டுள்ளன. படைக்கப்படும் பொருளை விட, அதன்பின் உள்ள உணர்வுபூர்வமான பக்தியும், தீவிர விருப்பமும்தான் பாபாவால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பசியால் வாடும் எந்த மனிதருக்கோ, நாயோ, பூனைக்கோ உணவளித்தால், அதை பாபாவின் வாயில் நேரடியாக  இடுவதற்கு சமம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 17, 2016

ஸ்ரீ சாய் சத்சரித்திரம்
சாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள். எப்படி சாயி பக்தர்கள் ஸ்ரீ சாயி சத்சரிதத்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்ள சிறந்த ஒன்பது வழிகளை இங்கே பார்க்கலாம்:

1. சாயி சத்சரித்திரம் புத்தகத்தில் (அது என்ன மொழி புத்தகமாக இருந்தாலும் பரவாயில்லை), அதனை ஒருஅழகான துணியினால் மடித்து, பாபா புகைப்படம் அல்லது சிலை அருகே (வீட்டில் என்ன வைத்து வழிபடுகிறோமோ அதன் முன்னர் ) மிகப் புனிதமாக கருதி வைத்து வழிபட வேண்டும்.
2. வீட்டிலோ அல்லது வேறு எங்கு இருந்தாலும், தினசரி இரவு எப்போதும் தூங்க செல்லும் முன், ஒவ்வொரு இரவும் சாயி சத்சரித புத்தகத்தின் ஒரு சில பக்கங்களை படிக்க வேண்டும் .ஒவ்வொரு பக்தரும் தூங்கச் செல்லும் முன் கடைசி சிந்தனையாக பாபாவினை மனதில்வைக்க முயற்சிக்க வேண்டும்.

3. ஏதேனும் சங்கடம் ஏற்படின், ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது போல், ஒரு வாரம் தீவிரமாக வாசிக்க வேண்டும். முடிந்தவரை வாசிப்பு ஒரு வியாழக்கிழமை அல்லது வேறு சில சிறப்பு நாட்களில் தொடங்க வேண்டும். சிறப்பு நாட்கள் என்றால் ராமநவமி, தசரா, குருபூர்ணிமா, ஜன்மாஷ்டமி, மஹாசிவராத்திரி, நவராத்திரி, முதலியன ஆகும். தொடர்ந்து படித்து முடித்த ஏழாவது நாளில், ஒருஏழை அல்லது ஆதரவற்ற ஒருவருக்கு உணவளிக்க வேண்டும்..

4. ஏதாவது ஒரு கோயிலில்,தனிமைப்படுத்தப்பட்ட மூலையில் அல்லது பாபா சிலை அல்லது புகைப்படம் / ஓவியம் முன்னால் உட்கார்ந்து படிக்க வேண்டும் .மற்ற மக்கள் இருந்தால்,குழு வாசிப்பு முறையில் எப்போதும் அவற்றை படிக்கவும் ஊக்குவிக்க வேண்டும் .

5. எப்போதேல்லாம் அல்லது எங்கெங்கெல்லாம் சாத்தியப்படுகிறதோ அந்த கோவில்களில் விசேட நாட்களில் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை தொடர்ந்து படிக்க வேண்டும். அங்கு வரும் பக்தர்களை ஒவ்வொருவராக ஒவ்வொரு பக்கத்தினை படிக்கச்செய்யலாம். நாம ஜெபம் செய்ய ஊக்குவிக்கலாம். கோவிலுக்கு வரும் குழந்தைகளை சாயி சத்சரித்திர புத்தகத்தை படிக்க வைக்க ஏற்பாடு செய்யலாம். ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தினைஅடிப்படையாக வைத்து கேள்வி பதில் போட்டிகள் கோவில்களில் ஏற்பாடு செய்து நடத்தலாம்.

6. வயதானவர்கள், உடல் நலிவு அடைந்தவர்கள் மற்றும் முதுமையால் மரணத்தினை நெருங்குபவர்கள் அருகமர்ந்து சாயி சத்சரித்திரத்தினை வாசிக்க அவர்கள் அனைவருக்கும் மன அமைதி கிடைக்கும்.

7. ஸ்ரீ சாய் சத்சரித்திரம் புத்தகம் எளிய நியாயமான விலையில் பல மொழிகளிலும் ஷீரடியில் எளிதாக கிடைக்கும். எனவே, ஷீரடி சென்று வரும் பக்தர்கள், இலவசமாக மக்கள் மத்தியில் விநியோகிக்க அவருடன் சில பிரதிகளை வாங்கி கொண்டு வர வேண்டும்

8. மன வேதனை மற்றும் பிரச்சனைகளில் உள்ள ஒருவர் மனத்தூய்மையுடன் சாயி சத்சரித்திரத்தினை படிக்கும் போது அவரது பிரச்சனைகட்கு உண்டான பதில்கள் மட்டுமல்ல,  மிகப்பெரிய மன ஆறுதலும் அவருக்கு கிடைக்கும். மேலும், அவருக்கு பாபா மேல் உள்ள  நம்பிக்கை மேன்மேலும் வளரும்.

9. சாயி சத்சரித்தினை எழுதிய ஹேமாட்பந்து எப்படி சாயிபாபாவினால் ஈர்க்கப்பட்டு பாபாவின் அருளுக்கு பாத்திரமானாரோ, அதே போன்று சாயிசத்சரித்திரம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பாபா அவர்களின்தெய்வீக அனுபவம் கிடைக்கும் மற்றும் பாபா அவர்களின் அருளுக்கும் பாத்திரமாவோம்..

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 16, 2016

சாயி சிந்தனை


நம்முடைய மனமே நமக்கு விரோதி என்பதும், பரம விரோதியும் செய்ய நினைக்காத கெடுதல்களையும் உற்பத்தி செய்யும் என்பதும், எல்லோருக்கும் நிச்சயமாகத் தெரியும். மற்றவர்களுக்கு நமது எண்ணங்கள் தெரியாமல் இருக்கலாம். மகாராஜரான பாபாவுக்கு உடனே தெரிந்துவிடும். நம் மனத்தில் குதர்க்கமான எண்ணங்கள் எழலாம். அவற்றை அறவே விடுத்து, பாபாவின் பாதங்களின்மேல் மனத்தைச் செலுத்தினால், மனம் ஒருமுகப்படுத்தல் விருத்தியடையும். ஒருமுகப்பட்ட மனத்தில் சாயி சிந்தனை பின்தொடரும். இதைத்தான் சாயி நம்மைச் செய்யவைக்கிறார். எடுத்த காரியமும் தடங்கலின்றி நிறைவேறுகிறது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 15, 2016

அற்புதங்கள்


எனது அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். எனது லீலைகளை ஆனந்தமாக பார்த்துக்கொண்டு  உட்கருத்தை கிரகிக்கும் விதத்தில் மனதைத் என்னிடம் திருப்புங்கள். என் உதவி உங்களுக்கு எப்போதும் கிடைக்கும். நான் செய்யும் உதவி அற்புதங்களாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். எனது லீலைகள் தென்பட்டுக் கொண்டிருந்தாலும் சிறிதும் விளங்காது. சிருஷ்டி தெளிவாகத் தென்பட்டுக் கொண்டிருந்தாலும், எப்படி உண்டாக்கினார் என்பது மாத்திரம் விளங்காது. என் பக்தர்களின் ஷேமத்தை நான் காப்பாற்றி கொண்டே இருப்பேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, March 14, 2016

சேவை


சேவை செய்வதோ, செய்யாமலிருப்பதோ நமது இஷ்டம் என்ற எண்ணத்துடன் சேவை செய்வது சேவை ஆகாது. இந்த சரீரம் நமது உடமையல்ல, அது பாபாவினுடையது. அவருக்கு பணி புரிவதற்கென்றே  ஏற்பட்டது என்ற மனோபாவத்துடன் செய்யப்படும் பணியே சேவை ஆகும்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, March 13, 2016

ஏழையை பணக்காரராக மாற்றிவிடுவார்


குரு அவர்கள் நினைத்தால் ஒரு நொடியில் ஏழையை பணக்காரராக மாற்றிவிடுவார். பிரம்மா எழுதியதைக்கூட  மாற்ற வல்லமை வாய்ந்தவர் குரு மட்டுமே. - ஸ்ரீ குரு சரித்திரம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 12, 2016

சாய்பாபா ஆசிர்வதிக்கிறார்


யார் அதிர்ஷ்டசாலியோ, எவருடைய பாவங்கள் ஒழிந்தனவோ, அவர்கள் சாய்பாபாவின்  வழிபாட்டை எய்துகிறார்கள். தம்முன் வீழ்ந்து பணிந்து சரணாகதியடைந்த எந்த மனிதரையும் சாய்பாபா ஆசிர்வதிக்கிறார். - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 11, 2016

என் பக்தர்கள் துக்கப்படுவதில்லை


"கவலையை விட்டொழியும்; உறுதியுடன் இரும்; என் பக்தர்கள் துக்கப்படுவதில்லை. ஷிர்டியில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய துன்பத்திற்கு முடிவேற்பட்டுவிட்டது. நீர் தடங்கல்களெனும் கடலில் கழுத்துவரை மூழ்கியிருக்கலாம்; துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் ஆழமாக அமிழ்ந்துபோயிருக்கலாம்; ஆனால், யார் இந்த மசூதிமாயியின் படிகளில் ஏறுகிறாரோ, அவர் சுகத்தின்மீது சவாரி செய்வார் என்று அறிந்துகொள்ளும். " - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 10, 2016

ஆண்டியையும் அரசனாக்க வல்லவர்


ஊரும் பெயரும் இல்லாத சாயி அளவுகடந்த மஹிமை வாய்ந்தவர். கடைக்கண் பார்வையால் ஆண்டியையும் அரசனாக்க வல்லவர்! தனது பக்தனின் எல்லா காரியங்களையும் முன் நின்று நடத்துபவர் அவரே. அதேசமயம் எந்த விஷயத்திலும் சம்பந்தபடாதவர் போல் தோன்றுகிறார். அவர் எவர்களுக்கெல்லாம் கிருபை செய்ய விரும்புகிறாரோ அவர்களிடமெல்லாம் பலவிதமான மாறுவேஷங்களில் தோன்றுகிறார். கணக்கற்ற அற்புதங்களை திட்டமிட்டு நிறைவேற்றுகிறார்.  அவரை தியானத்தாலும் பிரேமை பொங்கும் பஜனையாலும் அணுக முயல்பவர்களுடைய தேவைகள் அனைத்தையும்  நிறைவேற்றி அவர்களைப் பாதுகாக்கிறார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 8, 2016

ஷீரடிக்கு செல்லும் உங்களுக்கு சில உதவி குறிப்புகள் " பக்தர்: பாபா என்னை ஏன் இங்கு (ஷிர்டி) வரவழைத்தீர்கள்?

 பாபா : ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கின்றனர். நான் அவர்களை   எல்லாம் இங்கு அழைப்பதில்லை. நீரும் நானும் பல ஜன்மங்களாக நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள். நீர் அதை அறிய மாட்டீர். ஆனால் நான் அறிவேன். நேரம்  கிடைக்கும் போதெல்லாம், ஷிர்டி வந்து போய் கொண்டிரும்.

பாபா உங்களை அழைத்தால் மட்டுமே உங்களால் ஷீரடிக்கு செல்ல முடியும்.
ஷீரடிக்கு செல்லும் உங்களுக்கு சில உதவி குறிப்புகள்.....                                                                 

எப்படி செல்வது ?


இந்தியாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் ரயில், பேருந்து, மற்றும் கார் மூலமாக ஷீரடிக்குச் செல்லலாம். ஷீரடிக்கு நேரிடையாக வந்து சேரும் வசதியற்ற நகரங்களில் வசிப்பவர்கள் புனே (200 கி.மீ ), கோபர்காவ் (14 கி.மீ ) மன்மாட் (55 கி. மீ ) நாசிக் ( 85 கி.மீ ) மற்றும் ஔரங்கபாத் (132 கி .மீ ) ஆகிய நகரங்களுக்கு வந்து சேர்ந்து, அங்கிருந்து ஷீரடியைப் பேருந்து மற்றும் கார் மூலம் சென்றடையலாம்.

சென்னையிலிருந்து சுமார் 1400 கி.மீ. தொலைவில் உள்ள ஷீரடிக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஒவ்வொரு புதன் கிழமையிலும் காலை 10.00 மணிக்கு ஷீரடி விரைவு ரயில் புறப்பட்டு, வியாழன் காலை 11.30 மணிக்கு ஷீரடியைச் சென்றடைகிறது. அதே போல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் ஷீரடியிலிருந்து காலை 8.00 மணிக்கு சென்னை விரைவு ரயில் புறப்பட்டு சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது. முன்பதிவு செய்து கொண்டு சென்று வரலாம்.

சென்னையிலிருந்து மும்பை செல்லும் ரயிலில் புனே வரை சென்றால் அங்கிருந்து 200 கி.மீ. தூரத்தில் இருக்கும் ஷீரடிக்கு அரை மணிக்கு ஒரு பேருந்து செல்கிறது. அல்லது ரயிலில் தோண்ட் வரை சென்று அங்கிருந்து கோபர்காவுக்கு  ரயில் அல்லது பேருந்து மூலம் செல்லலாம். நவஜீவன் விரைவு ரயிலிலும் புஷாவல் வரை சென்று அங்கிருந்து மன்மாட் வழியாக ஷீரடிக்குப் பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம். முன்பதிவு செய்து கொண்டு பயணம் மேற்கொள்வதே சிறந்தது.
இந்திய ரயில்வே சுற்றுலாத்துறை மற்றும் தனியார் சுற்றுலா நிறுவனங்கள் ஷீரடிக்குப் பக்தர்களைக் கூட்டிச் சென்று வருகின்றன.GOOGLE இல் SHIRDI SPIRITUAL TOUR என்று தேடினாலே விவரங்கள் கொட்டுகின்றன.

எங்கே தங்குவது ?

ஷீரடியில் உணவு விடுதிகளுடன் கூடிய எண்ணற்ற தங்கும் விடுதிகள் உள்ளன. ( வாடகை ரூ.100/- முதல் ரூ. 2000/- வரை )

இவை மட்டுமல்லாது ஷீரடி சாயிபாபா கோவிலின் ஸ்ரீ சாயி சன்ஸ்தான் டிருஸ்டுக்கு சொந்தமான சாயி ஆஷ்ரம் விடுதியில் 1536 அறைகள் உள்ளன. தவிர குளிர்சாதன வசதியுடன் கூடிய 384 அறைகளும் உள்ளன.

பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள துவாரவதி விடுதியில் 334 அறைகளும், பெரிய குடும்பத்தினர் ஒன்றாகக் கூடி தங்கா வசதி கொண்ட பெரிய அறைகளும் உள்ளன. குளிர்சாதன வசதி கொண்ட 80 அறைகளும் உள்ளன. இவையனைத்தும் 24 மணி நேர தண்ணீர் மற்றும் மின்சார வசதி, வண்டிகளை நிறுத்த இட வசதி ஆகியவற்றுடன் அமைந்துள்ளன.

சன்ஸ்தான் டிருஸ்ட் பாபாவை தரிசிக்க வருகை தரும் எளிய பக்தர்களுக்காக, குளியலறை மற்றும் கழிப்பறை வசதியுடன் கூடிய, நால்வர் தங்க முடிகிற எளிமையான அறைகளை நாளொன்றுக்கு ரூ. 50/- வாடகையில் அளிக்கிறது.

தவிர ஐநூறுக்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட பக்த நிவாஸ், சமாதி மந்திருக்கு தெற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 24 மணி நேர மின்சாரம், குடிநீர், உணவகம், வண்டிகளை நிறுத்த இடம் ஆகிய வசதிகளும் இங்கு உள்ளன.

https://online.sai.org.in/  என்ற வலைதளத்தில் அறைகள், ஆரத்தி மற்றும் தர்ஷன் ஆகியவற்றுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மகாராஷ்டிர மாநில சுற்றுலாத் துறை விடுதியும் உண்டு. அனைத்து வசதிகளும் கொண்ட அறைகள் கிடைக்கும். வாடகை ரூ.1200/- முன்பதிவுக்கு அணுக வேண்டிய முகவரி ;

MAHARASHTRA TOURISM DEVELOPMENT CORPORATION,

PIMPALWADI ROAD,SHIRDI,AHMEDNAGAR DISTRICT,

MAHARSHTRA, INDIA

Tel : 91-11-(02423)-255194, 255195, 255196, 255197.
Email - contactmaharashtratourism@gmail.com

தரிசன நேரம் 

சமாதி மந்திர் காலை 04.00 மணி முதல் இரவு 11.15 மணி வரை திறந்திருக்கும். தினதோறும் அதிகாலை 04.30 மணிக்கு காகட் ஆரத்தி, நண்பகல் 12.00 மணிக்கு மதிய ஆரத்தி, மாலை அஸ்தமன நேரத்தில் தூப் ஆரத்தி, இரவு 10.30 மணிக்கு ஸேஜ் ஆரத்தி என நான்கு கால ஆரத்தி நடைபெறும். தவிர சத்யநாராயண பூஜையும் தினமும் நடைபெறுகிறது.

60 வயதைக் கடந்தவர்களுக்கும், அயல்நாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் சிறப்பு அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.


" என் பக்தன் ஆயிரம் மயில்களுக்கு அப்பால் இருந்தாலும், ஒரு குருவி யின் கால்களுக்கு கயிறு கட்டி இழுப்பது போல். இந்த மசுதி தாயிடம் இழுத்துக்கொண்டு வருவேன். - ஷிர்டி சாய்பாபா "


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஷீரடிக்கு வா ! " பக்தர்: பாபா என்னை ஏன் இங்கு (ஷிர்டி) வரவழைத்தீர்கள்?

 பாபா : ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கின்றனர். நான் அவர்களை   எல்லாம் இங்கு அழைப்பதில்லை. நீரும் நானும் பல ஜன்மங்களாக நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள். நீர் அதை அறிய மாட்டீர். ஆனால் நான் அறிவேன். நேரம்  கிடைக்கும் போதெல்லாம், ஷிர்டி வந்து போய் கொண்டிரும்.

பாபா உங்களை அழைத்தால் மட்டுமே உங்களால் ஷீரடிக்கு செல்ல முடியும்.
ஷீரடிக்கு செல்லும் உங்களுக்கு சில உதவி குறிப்புகள்.....                                                                 

எப்படி செல்வது ?

இந்தியாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் ரயில், பேருந்து, மற்றும் கார் மூலமாக ஷீரடிக்குச் செல்லலாம். ஷீரடிக்கு நேரிடையாக வந்து சேரும் வசதியற்ற நகரங்களில் வசிப்பவர்கள் புனே (200 கி.மீ ), கோபர்காவ் (14 கி.மீ ) மன்மாட் (55 கி. மீ ) நாசிக் ( 85 கி.மீ ) மற்றும் ஔரங்கபாத் (132 கி .மீ ) ஆகிய நகரங்களுக்கு வந்து சேர்ந்து, அங்கிருந்து ஷீரடியைப் பேருந்து மற்றும் கார் மூலம் சென்றடையலாம்.

சென்னையிலிருந்து சுமார் 1400 கி.மீ. தொலைவில் உள்ள ஷீரடிக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஒவ்வொரு புதன் கிழமையிலும் காலை 10.00 மணிக்கு ஷீரடி விரைவு ரயில் புறப்பட்டு, வியாழன் காலை 11.30 மணிக்கு ஷீரடியைச் சென்றடைகிறது. அதே போல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் ஷீரடியிலிருந்து காலை 8.00 மணிக்கு சென்னை விரைவு ரயில் புறப்பட்டு சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது. முன்பதிவு செய்து கொண்டு சென்று வரலாம்.

சென்னையிலிருந்து மும்பை செல்லும் ரயிலில் புனே வரை சென்றால் அங்கிருந்து 200 கி.மீ. தூரத்தில் இருக்கும் ஷீரடிக்கு அரை மணிக்கு ஒரு பேருந்து செல்கிறது. அல்லது ரயிலில் தோண்ட் வரை சென்று அங்கிருந்து கோபர்காவுக்கு  ரயில் அல்லது பேருந்து மூலம் செல்லலாம். நவஜீவன் விரைவு ரயிலிலும் புஷாவல் வரை சென்று அங்கிருந்து மன்மாட் வழியாக ஷீரடிக்குப் பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம். முன்பதிவு செய்து கொண்டு பயணம் மேற்கொள்வதே சிறந்தது.
இந்திய ரயில்வே சுற்றுலாத்துறை மற்றும் தனியார் சுற்றுலா நிறுவனங்கள் ஷீரடிக்குப் பக்தர்களைக் கூட்டிச் சென்று வருகின்றன.GOOGLE இல் SHIRDI SPIRITUAL TOUR என்று தேடினாலே விவரங்கள் கொட்டுகின்றன.

எங்கே தங்குவது ?

ஷீரடியில் உணவு விடுதிகளுடன் கூடிய எண்ணற்ற தங்கும் விடுதிகள் உள்ளன. ( வாடகை ரூ.100/- முதல் ரூ. 2000/- வரை )

இவை மட்டுமல்லாது ஷீரடி சாயிபாபா கோவிலின் ஸ்ரீ சாயி சன்ஸ்தான் டிருஸ்டுக்கு சொந்தமான சாயி ஆஷ்ரம் விடுதியில் 1536 அறைகள் உள்ளன. தவிர குளிர்சாதன வசதியுடன் கூடிய 384 அறைகளும் உள்ளன.

பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள துவாரவதி விடுதியில் 334 அறைகளும், பெரிய குடும்பத்தினர் ஒன்றாகக் கூடி தங்கா வசதி கொண்ட பெரிய அறைகளும் உள்ளன. குளிர்சாதன வசதி கொண்ட 80 அறைகளும் உள்ளன. இவையனைத்தும் 24 மணி நேர தண்ணீர் மற்றும் மின்சார வசதி, வண்டிகளை நிறுத்த இட வசதி ஆகியவற்றுடன் அமைந்துள்ளன.

சன்ஸ்தான் டிருஸ்ட் பாபாவை தரிசிக்க வருகை தரும் எளிய பக்தர்களுக்காக, குளியலறை மற்றும் கழிப்பறை வசதியுடன் கூடிய, நால்வர் தங்க முடிகிற எளிமையான அறைகளை நாளொன்றுக்கு ரூ. 50/- வாடகையில் அளிக்கிறது.

தவிர ஐநூறுக்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட பக்த நிவாஸ், சமாதி மந்திருக்கு தெற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 24 மணி நேர மின்சாரம், குடிநீர், உணவகம், வண்டிகளை நிறுத்த இடம் ஆகிய வசதிகளும் இங்கு உள்ளன.

https://online.sai.org.in/  என்ற வலைதளத்தில் அறைகள், ஆரத்தி மற்றும் தர்ஷன் ஆகியவற்றுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மகாராஷ்டிர மாநில சுற்றுலாத் துறை விடுதியும் உண்டு. அனைத்து வசதிகளும் கொண்ட அறைகள் கிடைக்கும். வாடகை ரூ.1200/- முன்பதிவுக்கு அணுக வேண்டிய முகவரி ;

MAHARASHTRA TOURISM DEVELOPMENT CORPORATION,

PIMPALWADI ROAD,SHIRDI,AHMEDNAGAR DISTRICT,

MAHARSHTRA, INDIA

Tel : 91-11-(02423)-255194, 255195, 255196, 255197.
Email - contactmaharashtratourism@gmail.com

தரிசன நேரம் 

சமாதி மந்திர் காலை 04.00 மணி முதல் இரவு 11.15 மணி வரை திறந்திருக்கும். தினதோறும் அதிகாலை 04.30 மணிக்கு காகட் ஆரத்தி, நண்பகல் 12.00 மணிக்கு மதிய ஆரத்தி, மாலை அஸ்தமன நேரத்தில் தூப் ஆரத்தி, இரவு 10.30 மணிக்கு ஸேஜ் ஆரத்தி என நான்கு கால ஆரத்தி நடைபெறும். தவிர சத்யநாராயண பூஜையும் தினமும் நடைபெறுகிறது.

60 வயதைக் கடந்தவர்களுக்கும், அயல்நாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் சிறப்பு அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.


" என் பக்தன் ஆயிரம் மயில்களுக்கு அப்பால் இருந்தாலும், ஒரு குருவி யின் கால்களுக்கு கயிறு கட்டி இழுப்பது போல். இந்த மசுதி தாயிடம் இழுத்துக்கொண்டு வருவேன். - ஷிர்டி சாய்பாபா "


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, March 7, 2016

பாபா என் கெட்ட எண்ணங்களை ஏன் நிறுத்தக்கூடாது ?

 கேள்வி: நான் ஸ்ரீ சாயிபாபாவின் பக்தன். அவர் என்னுடன் எப்பொழுதும் இருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் என் வாழ்வில் நான் பல தவறுகளை செய்கிறேன். இந்தத் தவறுகளை செய்வது என்னுள் குற்ற உணர்வைத் தோற்றுவிக்கிறது.  இதை என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. இதிலிருந்து நான் வெளிவருவது எப்படி ?

பதில் : நீங்கள் செய்த தவறுகள் உங்கள் மனதை உறுத்துகிறது என்றால், நீங்கள் நல்லதை விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். பாபா பரிசுத்தமே உருவானவர். அவர் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை முழுமையானது என்றால் பாபா உங்கள் மனதை கட்டுப்படுத்துவார். தினமும் ஸ்ரீ சாயிபாபாவின் புனித நூலான ஸ்ரீ சாய் சத்சரிதத்தின் ஒரு அத்யாயமாவது படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் குறைகளை உங்களால் வெல்ல முடியும்.

கேள்வி : நான் தவறுகளை செய்ய ஆரம்பிக்கும்முன் பாபா என்னுடைய இருதயத்தில் இருந்து கொண்டு என் கெட்ட எண்ணங்களை ஏன் நிறுத்தக்கூடாது ?

பதில் : உங்கள் மனசாட்சியே பாபா. நிச்சயமாக நீ செய்வது தவறு என்ற உள்மனக்குரலை கேட்பீர்கள். கெட்ட எண்ணம் தோன்றும்  போதெல்லாம் , எப்பொழுதும் உங்கள் எண்ணங்களை பாபாவை நோக்கி செலுத்துங்கள். தொடர்ந்து சாயிநாமத்தை  சொல்லி பழகுங்கள். சாயிநாமம் ( ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி ) சொல்வதற்கு இடமும், காலமும் தடை இல்லை.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, March 6, 2016

வீட்டில், பாபாவின் வழிபாடு எந்த முறைப்படி செய்யப்பட வேண்டும்


வீட்டில், பாபாவின் வழிபாடு எந்த முறைப்படி செய்யப்பட வேண்டும் ?

ஒரு கோயிலில் பாபாவை வழிபடுவதற்கும் வீட்டில் வழிபடுவதற்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது. வீட்டில் வழிபடப்படும் பாபாவின் விக்கிரகத்திற்கு பொதுவாக ' பிராண பிரதிஷ்டை ' செய்வதில்லை. அவரது உருவப் படங்கள்தான் பொதுவாக வழிபடப்படுகின்றன. வீட்டில், பாபாவை வழிபடும் முறையை எளிதாக வைத்துக் கொள்வது அவசியம். தேவையான பக்தியை உள்ளுக்குள் உருவாக்காவிட்டால், பெரும்பாலான சடங்குகளும், சாங்கியங்களும் செயற்கையானதும் பயனற்றதும் ஆகும்.
 சத்குருவின்மீது அசையாத நம்பிக்கையுடனும் உணர்வுபூர்வமாகவும் ஒரே ஒரு மலரை அர்ப்பணித்தால் கூட போதுமானது. நாம் வீட்டை விட்டு ஏதோ காரணமாக வெகு தூரத்தில் இருந்தாலும், ஓர் இடத்தில் அமர்ந்தவண்ணம் வீட்டில் செய்யும் வழிபாட்டைப் போலவே மானசீகமாக அப்பொழுதும் பாபா வழிபாட்டை நாம் செய்யலாம். அதேசமயம் வீட்டில் இவ்வழிபாட்டை வேறு யாரையாவது செய்யச் சொல்லலாம்.  வெவ்வேறு மதங்கள், சாதிகள், மத நம்பிக்கைகள், சிறியவர், பெரியவர், ஏழை, பணக்காரர் என்ற பேதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் பாபா.
சத்குருவினுள் எல்லா தெய்வங்களும் அடங்கியுள்ளன என்று வேதங்கள் கூறுகின்றன. எனவே மற்ற தெய்வங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு பாபாவை மட்டுமே தெய்வமாக வணங்குவதில் தவறேதுமில்லை. அல்லது மற்ற தெய்வங்களை வணங்குகின்ற முறையிலேயே பாபாவையும் வணங்குவதிலும் தவறு ஏதுமில்லை. சீக்கிய மதத்தினர் தங்கள் குருக்களுக்காக மகிழ்ச்சியுடன் உயிர்த்தியாகம் செய்தனர். காரணம் சத்குருவானவர் நிரந்தரமானவர்  என்றும் தம்மோடு எப்போதும் இருப்பவர் என்றும் அவர்கள் உளமார நம்புகின்றனர். எனவே பாபாவின்பால் அசைக்கமுடியாத தீவிர நம்பிக்கை கொண்டிருப்பது என்பதே முற்றிலும் தேவையான ஒன்று.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 5, 2016

ஒரு நாள் உடலை விட்டுப் போகத்தான் வேண்டும்.

என் கணவர் ஓர் ஆண்டுக்கு முன்னால் புற்று நோயினால் இறந்து போனார். அவர் குணமாக வேண்டுமென்று பாபாவிடம் இரவும், பகலும் வேண்டிக் கொண்டோம். ஆனால், பாபா ஏன் எனது பிரார்த்தனைக்கு செவி சாய்க்கவில்லை? பாபா மீதான நம்பிக்கையை நான் இழந்துவிட்டதாக உணர்கிறேன்.

பதில் : பாபா தன்  பூதஉடலை விட்டுச் செல்லும்முன், அவரது அடியவர்கள் இவ்வுலகில் மேலும் வாழும்படி அவரைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் தானும் ஒருநாள் இந்த உடலை விட்டுப் போகத்தான் வேண்டுமென்ற உண்மையை பாபா எடுத்துக் கூறினார். உடலுடன் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் உடலை விட்டுப் போகத்தான் வேண்டும். இன்ன முறைப்படி இறப்பு நிகழும் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்று. இது 'பிராரப்தம்' (முன் வினை) என்று அழைக்கப்படும். முந்தைய பிறவி கர்ம வினைகளைப் பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் குறிப்பிட்ட காலத்திற்குள் இன்னின்ன காரியங்களை அவன் செய்து முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கிறது. இது நிறைவேறியவுடன் அம்மனிதன் உடலை விட்டுப் போக வேண்டியவனாகிறான். ஆத்மாவிற்கு ஏக்காரியத்திற்க்கும், எந்தவிதத்திலும் உடல் பயன்படாத போது, ஆத்மா அவ்வுடலை விட்டு விலகி அக்காரியங்களை முடிப்பதற்குத் தகுதியான வேறு உடலினுள் புகுகிறது. இந்த இயற்கை நியதி, நல்லவர், கெட்டவர், ஆஸ்திகர், நாஸ்திகர் என எல்லோரிடத்திலும் பாரபட்சமின்றி செயல்படுகிறது. உங்களது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று. ஆனால் பிரிந்துபோன ஆத்மாவுக்கு அமைதிகிட்ட, தொடர்ந்து பாபாவை வேண்டிக்கொள்ளுங்கள். இன்பம், துன்பம் இரண்டிலும் பாபாவை பாருங்கள். எந்த வித எதிர்ப்பார்ப்பும், வேண்டுதலும் இல்லாது பாபாவை நேசியுங்கள். பாபா உங்களுக்கு எல்லா வலிகளையும் தாங்கும் சக்தியை கொடுப்பார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 4, 2016

குருவிடம் திடமான பக்தி

அறியாமையினால் உனக்கு குருவிடம் திடமான பக்தி ஏற்படவில்லை. குருவை முழுமையான நம்பிக்கையோடு பக்தியுடன் சேவிப்பவர்களுக்கு அவரின் கருணை மழை தெரியும். அப்படி சேவிக்கும்  பக்தனின் கூடவே இருந்து காப்பாற்றுவதே அவரின் தர்மம். அவர்களின் துயரங்கள் தீர்ந்து வேண்டியது நிறைவேறும். சிந்தாமணி நாம் வேண்டியதை தான் கொடுக்கும். ஆனால், குருவின் அருளோ நமக்கு என்னென்ன தேவையோ,எது நன்மைகளோ அவை எல்லாம் நாம் கேட்காமலேயே கொடுக்கும்.- ஸ்ரீ குரு சரித்திரம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 3, 2016

சாயிபாபாவை பிரார்த்தனை செய்வது எப்படி


ஸ்ரீ ஷீரடி சாயிபாபாவை பிரார்த்தனை செய்வது எப்படி என்று தயவுசெய்து சொல்லுங்கள்.

ஸ்ரீ சாயிசத் சரித்திராவில் பாபா கூறியுள்ளபடி பாபாவின் திருவடிகளிலிருந்து உச்சந்தலை வரை, பின் உச்சி முதல் பாதம் வரை என அவர் உருவத்தில் மனதை ஒருமுகப்படுத்துவதில் ஆரம்பியுங்கள். உங்களுக்குத் தெரிந்த மொழியிலோ, பாபாவின் ஆரத்தி மூலமோ அல்லது ' சாயி, சாயி ' என்று சாயி நாமத்தின் மூலமாகவோ பாபாவை வழிபடுங்கள். அவர்பால் நீங்கள் கொண்டுள்ள அன்பு மட்டுமே இங்கு தேவையானது. ஒருமுகப்படுத்தப்பட்ட மனதுடன் செய்யப்படும் அமைதியான பிரார்த்தனை மிகவும் சிறந்தது. மிக முக்கியமாக, உங்களது பிரார்த்தனைகளை நீங்களே பாபாவிடம் தெரிவியுங்கள். தனது பக்தனின் நேர்மையான கோரிக்கைகளை பாபா எப்பொழுதுமே நிறைவேற்றுவார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 2, 2016

பூஜ்யஸ்ரீ நரசிம்மஸ்வமிஜி / மயிலாப்பூர் சாய்பாபா ஆலய வரலாறு" இன்று கோடிக்கணக்கான மக்கள் உலகெங்கும் சாயி பக்தர்களாக பூஜ்யஸ்ரீ நரசிம்மஸ்வமிஜியே காரணம் "

தமிழ்நாடு கோவை மாவட்டம் பவானி நகரில் 1874 ஆகஸ்டு  21- ம் தேதி ஒரு கண்ணியமான குடும்பத்தில் பிறந்தவர் நரசிம்மன். சட்டப்படிப்பை முடித்து நேர்மை, நாணயம் நிரம்பப் பெற்ற முன்னிலை வழக்கறிஞராகத் திகழ்ந்தார். சேலம் பி. வி. நரசிம்ம அய்யர் என்று நன்கு அறிமுகமாகியிருந்த இவர் சேலம் முனிசிபல் கவுன்சில் சேர்மனாக பதவி வகித்தார். மேலும், மதராஸ் லெஜிஸ்லேடிவ் கவுன்சில் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கபட்டார். சுய ஆட்சி இயக்கத்தில் சேர்ந்து தீவிர தேசியவாதியாகி சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்கு கொண்டார். 1921-ம் ஆண்டு அவர் குடும்ப வாழ்க்கையில் அவருக்கு நேர்ந்த ஒரு பேரிழப்பு அவரை சம்சார பந்தத்திலிருந்து  விடுபட்டு ஆன்மீகப் பாதையில் செல்ல வைத்தது.
திருவண்ணாமலை தலத்தில் பகவான் ரமணரின் கீழ் தவமியற்றி அங்கிருந்து பல தலங்களுக்கு  புனித யாத்திரை மேற்கொண்டு பல மகான்களை சந்தித்தார். பகவான் ரமணரின் வாழ்க்கை வரலாற்றை " ஆத்மானுபவம் "(SELF REALISATION ) என்ற ஆங்கில நூலாக எழுதி ரமண மகரிஷியை உலகறியச் செய்த பெருமை நரசிம்ம ஸ்வமிஜியையே சாரும்.
பல மகான்களை தரிசித்துவிட்டு, 1936-ம்  ஆண்டு ஷீரடியில் தனது சத்குருவை கண்டறிந்தார். 1936 -ம் ஆண்டு வரை ஷீரடிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. 1936ம் ஆண்டிலிருந்து 1939ம்  ஆண்டின் தொடக்கம் வரை ஷீரடியிலேயே தங்கி சாய்பாபாவை நேரில் தரிசித்த பக்தர்களின் அனுபவங்களை சேகரித்தார். 1939 ம் ஆண்டு சென்னை திரும்பிய அவர், சாய்பாபாவின் புகழை பரப்ப 1940 ம்  ஆண்டு சென்னையில் அகில இந்திய சாயி சமாஜை நிறுவினார். இந்த காலகட்டத்தில் சாயிபாபாவை பற்றி பல புத்தகங்களை எழுதினார்.
1949-ம் ஆண்டு அகில இந்திய சாய் சமாஜ் ப்ரூடீஸ் சாலையிலிருந்து தற்போதுள்ள மயிலை அலமேலு மங்காபுரத்திர்க்கு இடம்பெயர்ந்தது. பல பக்தர்களின் தாராளமான நன்கொடையில் இந்த இடம் வாங்கப்பட்டது ( 10 GROUND ). 7-ம் தேதி ஜூலை மாதம் 1952-ம்  ஆண்டு குருபூர்ணிமா தினத்தன்று சாய்பாபாவின் படத்தை வைத்து சுவாமிஜி வழிபாட்டை துவங்கி வைத்தார்.
1953-ம்  ஆண்டு, ஷீரடியில் இருப்பது போன்று கோபுரத்துடன் கோவில் முழுவடிவம் பெற்றது. கோவிலின் மகாகும்பாபிஷேகம் 18-அக்டோபர் 1953-ம்  ஆண்டு நடைபெற்றது. 19 அக்டோபர் 1956-ம்  ஆண்டு சுவாமிஜி தனது 86-ம்  வயதில் பாபாவின் திருவடி சேர்ந்தார்.
ஷீரடி  சாய்பாபாவின் சமாதி மந்திரில் 26 ஜனவரி 1966-ம் ஆண்டு சுவாமிஜியின் படம் வைக்கப்பட்டது. இன்றும் சமாதி மந்திரில் சாய்பாபாவின் நெருங்கிய பல பக்தர்களின் படங்களுடன் சுவாமிஜியின் படமும் இருப்பதை நீங்கள் காணலாம்.
1935-ம்  ஆண்டிலிருந்து இருபது ஆண்டுகள் விடாது சாயி பிரச்சாரம் செய்து இன்று கோடிக் கணக்கான மக்கள் உலகெங்கும் சாயி பக்தர்களாக இவரே காரணமாவார். பாபாவைப் பற்றி அவர் எழுதிய பல நூல்களும் அவரால் நிறுவப்பட்ட அகில இந்திய சாயி சமாஜத்தாரால் வெளியிடப்பட்டு வருகின்றன. சாயிபாபாவின் பெயர் உள்ளவரை சுவாமிஜியின் பெயரும் அத்துடன் இணைந்தே விளங்கும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 1, 2016

குரு பரம்பரை

குரு பரம்பரை


ஒவ்வொரு சாய் பக்தரும் அறியவேண்டிய விஷயம் தத்த  குரு பரம்பரை.

 குரு பரம்பரை


ஆதி குரு ஸ்ரீ குருதேவதத்தர்பிரம்மா விஷ்ணு சிவனின்  அவதாரமே ஸ்ரீ தத்தாத்ரேயர்குருவிற்க்கெல்லாம் குருவானவர்எப்போதும் வாழும் அவதாரமும் ஆவார். குரு பரம்பரை என்பது  தத்தாத்திரேயரின் அவதாரத்துக்குப் பிறகே தோன்றின. அவரே குரு பரம்பரை என்பது துவங்க வழி வகுத்தார். திருமூர்த்திகளின் அவதாரமான அவரே குருக்களுக்கு எல்லாம் குருவான சத்குரு ஆவார்.  இந்த பூமியில் குரு மற்றும் சிஷ்யர்களுக்கு இடையே எப்படிப்பட்ட உறவு இருக்க வேண்டும், ஒரு குருவின் மூலமே மக்களின் மன நிலையை ஆன்மீக வழியில் செலுத்தி கலிகாலத்தில் கலியின் தாக்கத்தினால் விளையும் தீமையை எப்படி அழிக்க வேண்டும் போன்றவற்றை  நடைமுறையில் எடுத்துக் காட்டவே தத்தாத்திரேயர் தாமே ஒரு குருவாகவும் அவருடைய சிஷ்யராகவும் பல அவதாரங்களை எடுத்துக் காட்டி உள்ளார்.  தத்தாத்திரேயரே ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபாவாகவும், ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளாகவும், ஸமர்த்த ஸ்வாமிகளாகவும், ஷீரடி சாயிபாபா, மானிக் பிரபு போன்ற பல ரூபங்களில் தோன்றி முதல் குரு பரம்பரையை உருவாக்கினார். இவர்களில் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளே ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகளாக பிறப்பை எடுத்தார் என்றும் சிலர் நம்புகிறார்கள்.

ஸ்ரீ தத்தர் வழி வந்த குருமார்களை உள்ளடங்கியதே தத்த பரம்பரை. நமது சத்குரு ஸ்ரீ சாய்பாபா குரு பரம்பரையின் கடைசி குரு ஆவார்.

குரு பரம்பரையில் உள்ள ஒவ்வொரு குருமார்களை பற்றியும் இந்தபதிவில் காண்போம்.

1.ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபா. (1300 A .D )


ஸ்ரீ தத்தாத்ரேயரின் முதல் அவதாரம்தந்தை ஸ்ரீ அப்பளராஜா ஷர்மா,தாய் பதிவிரதை சுமதிக்கு மூன்றாவது மகனாக ஆந்திர மாநிலம் கோதாவரியில்  உள்ள பித்தாபுரத்தில்  பிறந்தார்தனது பாதங்களில் சங்கு சக்கர முத்திரைகளை கொண்டந்தாலேயே இப்பெயரால்அழைக்கப்பட்டார்.

2. ஸ்ரீ ந்ரசிம்ம சரஸ்வதி சுவாமிகள்.(AD 1378 to 1459)


கலியுகத்தில் ஸ்ரீ தத்தாத்ரேயரின்  இரண்டாவது  அவதாரமாகும்.
தந்தை ஸ்ரீ மாதவ்,தாய் அம்பா பவானிக்கு மகாராஷ்டிர மாநிலம்  கரஞ்சபூரில் பிறந்தார்இவர் பிறந்தவுடன் அழுவதற்கு மாறாக 'ஓம் 'என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரித்தவர்.

3.மாணிக் பிரபு.1817 A .D


தந்தை ஸ்ரீ மனோஹர நாயக ஹரகுடேதாய் ஸ்ரீ பய தேவி,தொடர்ந்து16 வருடங்கள் குருச்சரித்திரத்தை பாராயணம் செய்ததன் பலனாக,  குரு தத்தாத்ரயரே நேரில் காட்சி அளித்து தானே அவர்களுக்கு மகனாக பிறப்பதாக உறுதியளித்துமகாராஷ்டிராமாநிலம்,  கல்யானுக்கு அருகில் உள்ள லத்வந்தி என்னும் கிராமத்தில்  பிறந்தார்தனது 48 வது  வயதில் ஜீவசமாதி அடைந்தார்.

4.அக்கல்கோட் ஸ்ரீ சுவாமி சமர்த்தர்.1900 AD.

ஸ்ரீ தத்தரின் 4 வது அத்தியாயம்இவரின்  பிறப்பு தாய் தந்தை பற்றியகுறிப்புகள் இல்லைகுருச்சரித்திரத்தில் 2 வது அவதாரம் ஸ்ரீ  ந்ரசிம்மசரஸ்வதி அவர்கள் 1458 ம் ஆண்டு கர்தாளிவனத்தில் மஹாசமாதி  அடைந்ததாக குறிப்பிடபட்டிருக்கிறது. 300 ஆண்டுகள் கழித்து ஒருமரம்வெட்டியின் கோடாரி மரம் வெட்டும்பொழுது தவநிலையில் இருந்த ஸ்ரீ  ந்ருசிம்ம  சரஸ்வதி ஸ்வாமிகள் மேல் தவறுதலாகவிழுந்ததுஅங்கிருந்து எழுந்த அந்த தெய்வீக  புருஷரே ஸ்ரீ தத்தரின்அடுத்த அவதாரமாக  ஸ்ரீ சுவாமி சமர்த்தர் என்று அழைக்கப்படுகிறார்.

5.சமர்த்த சத்குரு ஸ்ரீ சாய்பாபா.


ஸ்ரீ தத்தரின் கடைசி அவதாரமேஸ்ரீ ஷிர்டி சாய்பாபாஇவரை பற்றியோஇவரது லீலைகளை பற்றியோ வார்த்தைகளால் யவராலும்    விளக்க இயலாது. எனினும் அவரின் 11 உபதேச மொழிகளை இங்கு பதிவு செய்கிறோம்.

1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.
2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.
3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.
5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.
6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.
7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.
9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.
10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.
11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.

குரு பரம்பரையின் குருமார்களை விரிவாக பின்வரும் அத்தியாயங்களில் காண்போம். ஜெய் சாய்ராம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவின் கருணாகடாக்ஷம் ஒன்றே போதும் !

பாபாவினுடைய கருணாகடாக்ஷமும் ஆசீர்வாதமும் பிரசாதமும் எல்லாத் துன்பங்களையும் ஒழிக்கின்றன; வேறெதுவும் தேவையில்லை ! - ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம் htt...