Wednesday, March 2, 2016

பூஜ்யஸ்ரீ நரசிம்மஸ்வமிஜி / மயிலாப்பூர் சாய்பாபா ஆலய வரலாறு" இன்று கோடிக்கணக்கான மக்கள் உலகெங்கும் சாயி பக்தர்களாக பூஜ்யஸ்ரீ நரசிம்மஸ்வமிஜியே காரணம் "

தமிழ்நாடு கோவை மாவட்டம் பவானி நகரில் 1874 ஆகஸ்டு  21- ம் தேதி ஒரு கண்ணியமான குடும்பத்தில் பிறந்தவர் நரசிம்மன். சட்டப்படிப்பை முடித்து நேர்மை, நாணயம் நிரம்பப் பெற்ற முன்னிலை வழக்கறிஞராகத் திகழ்ந்தார். சேலம் பி. வி. நரசிம்ம அய்யர் என்று நன்கு அறிமுகமாகியிருந்த இவர் சேலம் முனிசிபல் கவுன்சில் சேர்மனாக பதவி வகித்தார். மேலும், மதராஸ் லெஜிஸ்லேடிவ் கவுன்சில் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கபட்டார். சுய ஆட்சி இயக்கத்தில் சேர்ந்து தீவிர தேசியவாதியாகி சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்கு கொண்டார். 1921-ம் ஆண்டு அவர் குடும்ப வாழ்க்கையில் அவருக்கு நேர்ந்த ஒரு பேரிழப்பு அவரை சம்சார பந்தத்திலிருந்து  விடுபட்டு ஆன்மீகப் பாதையில் செல்ல வைத்தது.
திருவண்ணாமலை தலத்தில் பகவான் ரமணரின் கீழ் தவமியற்றி அங்கிருந்து பல தலங்களுக்கு  புனித யாத்திரை மேற்கொண்டு பல மகான்களை சந்தித்தார். பகவான் ரமணரின் வாழ்க்கை வரலாற்றை " ஆத்மானுபவம் "(SELF REALISATION ) என்ற ஆங்கில நூலாக எழுதி ரமண மகரிஷியை உலகறியச் செய்த பெருமை நரசிம்ம ஸ்வமிஜியையே சாரும்.
பல மகான்களை தரிசித்துவிட்டு, 1936-ம்  ஆண்டு ஷீரடியில் தனது சத்குருவை கண்டறிந்தார். 1936 -ம் ஆண்டு வரை ஷீரடிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. 1936ம் ஆண்டிலிருந்து 1939ம்  ஆண்டின் தொடக்கம் வரை ஷீரடியிலேயே தங்கி சாய்பாபாவை நேரில் தரிசித்த பக்தர்களின் அனுபவங்களை சேகரித்தார். 1939 ம் ஆண்டு சென்னை திரும்பிய அவர், சாய்பாபாவின் புகழை பரப்ப 1940 ம்  ஆண்டு சென்னையில் அகில இந்திய சாயி சமாஜை நிறுவினார். இந்த காலகட்டத்தில் சாயிபாபாவை பற்றி பல புத்தகங்களை எழுதினார்.
1949-ம் ஆண்டு அகில இந்திய சாய் சமாஜ் ப்ரூடீஸ் சாலையிலிருந்து தற்போதுள்ள மயிலை அலமேலு மங்காபுரத்திர்க்கு இடம்பெயர்ந்தது. பல பக்தர்களின் தாராளமான நன்கொடையில் இந்த இடம் வாங்கப்பட்டது ( 10 GROUND ). 7-ம் தேதி ஜூலை மாதம் 1952-ம்  ஆண்டு குருபூர்ணிமா தினத்தன்று சாய்பாபாவின் படத்தை வைத்து சுவாமிஜி வழிபாட்டை துவங்கி வைத்தார்.
1953-ம்  ஆண்டு, ஷீரடியில் இருப்பது போன்று கோபுரத்துடன் கோவில் முழுவடிவம் பெற்றது. கோவிலின் மகாகும்பாபிஷேகம் 18-அக்டோபர் 1953-ம்  ஆண்டு நடைபெற்றது. 19 அக்டோபர் 1956-ம்  ஆண்டு சுவாமிஜி தனது 86-ம்  வயதில் பாபாவின் திருவடி சேர்ந்தார்.
ஷீரடி  சாய்பாபாவின் சமாதி மந்திரில் 26 ஜனவரி 1966-ம் ஆண்டு சுவாமிஜியின் படம் வைக்கப்பட்டது. இன்றும் சமாதி மந்திரில் சாய்பாபாவின் நெருங்கிய பல பக்தர்களின் படங்களுடன் சுவாமிஜியின் படமும் இருப்பதை நீங்கள் காணலாம்.
1935-ம்  ஆண்டிலிருந்து இருபது ஆண்டுகள் விடாது சாயி பிரச்சாரம் செய்து இன்று கோடிக் கணக்கான மக்கள் உலகெங்கும் சாயி பக்தர்களாக இவரே காரணமாவார். பாபாவைப் பற்றி அவர் எழுதிய பல நூல்களும் அவரால் நிறுவப்பட்ட அகில இந்திய சாயி சமாஜத்தாரால் வெளியிடப்பட்டு வருகின்றன. சாயிபாபாவின் பெயர் உள்ளவரை சுவாமிஜியின் பெயரும் அத்துடன் இணைந்தே விளங்கும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்

பாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார்.  ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...