பக்தர்களின் நம்பிக்கை, நேர்மையான பக்தி, ஆன்மீக வளர்ச்சிக்கேற்ப, சாய்பாபா அளித்திடும் அனுபவங்கள் பக்தருக்கு பக்தர் மாறுபடும். சில முக்கியமான நிகழ்வுகள் மூலம் பாபா சில பக்தர்களுக்கு உதவுகிறார். அவர்கள் வாழ்க்கையில் பொருளாதார மேம்பாட்டை அளிக்கிறார். சில பக்தர்களுக்கு கனவுகளில் தோன்றி, கனவுகளில் செய்திகள் சொல்லி சிலரது பக்தியை அதிகப்படுத்துகிறார். முழுமையான நம்பிக்கை, நேர்மை மற்றும் பக்தியுடன் சாயிபாபாவை நோக்கி யார் பிரார்த்தனை செய்தாலும் பாபா அவர்களுடன் நேராக பேசுகிறார், அவர்கள் இடைத் தரகர்களின் உதவியை நாடத் தேவையில்லை. பாபாவிடம் முழு சரணாகதி அடைந்த ஒருவர், தேர்வு முடிவு, வேலை போன்ற இவ்வுலக வாழ்க்கைக்குரிய சாதாரண விஷயங்களை விடுத்து, பாபாவிடம் என்றும் மாறாத நம்பிக்கைக்கும், அவரது அருளாசிக்காக பிரார்த்தனை செய்யுங்கள். காமதேனு (தேவலோகத்துப் பசு) நாம் விரும்பிய பொருளை உடனே அளிக்கும். காமதேனுவைவிடச் சிறந்தவர் குருதேனு. நம்மால் சிந்தனைசெய்து பார்க்கமுடியாத பதவியையும் (வீடுபேறு நிலையையும்) அளிப்பார் !
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil