Monday, March 7, 2016

பாபா என் கெட்ட எண்ணங்களை ஏன் நிறுத்தக்கூடாது ?





 கேள்வி: நான் ஸ்ரீ சாயிபாபாவின் பக்தன். அவர் என்னுடன் எப்பொழுதும் இருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் என் வாழ்வில் நான் பல தவறுகளை செய்கிறேன். இந்தத் தவறுகளை செய்வது என்னுள் குற்ற உணர்வைத் தோற்றுவிக்கிறது.  இதை என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. இதிலிருந்து நான் வெளிவருவது எப்படி ?

பதில் : நீங்கள் செய்த தவறுகள் உங்கள் மனதை உறுத்துகிறது என்றால், நீங்கள் நல்லதை விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். பாபா பரிசுத்தமே உருவானவர். அவர் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை முழுமையானது என்றால் பாபா உங்கள் மனதை கட்டுப்படுத்துவார். தினமும் ஸ்ரீ சாயிபாபாவின் புனித நூலான ஸ்ரீ சாய் சத்சரிதத்தின் ஒரு அத்யாயமாவது படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் குறைகளை உங்களால் வெல்ல முடியும்.

கேள்வி : நான் தவறுகளை செய்ய ஆரம்பிக்கும்முன் பாபா என்னுடைய இருதயத்தில் இருந்து கொண்டு என் கெட்ட எண்ணங்களை ஏன் நிறுத்தக்கூடாது ?

பதில் : உங்கள் மனசாட்சியே பாபா. நிச்சயமாக நீ செய்வது தவறு என்ற உள்மனக்குரலை கேட்பீர்கள். கெட்ட எண்ணம் தோன்றும்  போதெல்லாம் , எப்பொழுதும் உங்கள் எண்ணங்களை பாபாவை நோக்கி செலுத்துங்கள். தொடர்ந்து சாயிநாமத்தை  சொல்லி பழகுங்கள். சாயிநாமம் ( ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி ) சொல்வதற்கு இடமும், காலமும் தடை இல்லை.



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba    http://www.shirdisaibabasayings.com ...