Thursday, June 30, 2016

வேண்டுதல்களும் துயரங்களுக்கும் பாபா செவிசாய்க்கிறார்பாபாவை, குறிப்பிட்ட ஆலயத்தில் மட்டுமே மிகவும் விசேஷமான சக்திகள் கொண்டவராக உருவகப்படுத்துவது, மேலும் பக்தர்களின் பிரார்த்தனைகளை பாபாவிடம் எடுத்துக்கூறும் பிரதிநிதிகள் போன்ற மனப்போக்கில்  பலர் ஈடுபடுகிறார்கள். உண்மை அதுவல்ல, எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் எல்லோருடைய வேண்டுதல்களும், துயரங்களுக்கும் பாபா செவிசாய்க்கிறார். பக்தர்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, பாபா தமது பக்தர்களை தமது சொந்தக் குழந்தைகள், சிசுக்கள் போலவே நேசித்தார், நேசித்தும் வருகிறார்.
ஒருசமயம், பாபா  ஒரு குழந்தையைச் சுட்டிக் காட்டி, ' இக் குழந்தை தூங்கும் போது நாம் அருகிலிருக்க வேண்டும். விழித்திருந்து, கவனித்து, சிரமம் ஏற்கவேண்டும்' எனக் கூறினார். பக்தர்களின்பால் பாபாவின் அக்கறை அத்தகையது. எப்போதுமே பாபா, தமது பக்தர்களின் பின்னாலேயே இருந்து பக்தர்களை தாங்கி வருகிறார். இதுவே உண்மை. இதில் முழுநம்பிக்கை கொள்ளுங்கள். இந்த உண்மையை கிரகித்து கொள்ளும்போது உங்களது மனதில் அச்சம், கவலை எதுவுமில்லாமல் போகும்.
  
  " நான் எங்கும் இருக்கிறேன் - நீரிலும், நிலத்திலும், காய்ந்துபோன    கொம்பிலும், மனிதர்களிடையேயும், வனத்திலும், இந்த தேசத்திலும்,  வெளிதேசங்களிலும் எங்கும் இருக்கிறேன். நான் எந்த தேசத்தின்  எல்லைகளுக்கும் உட்பட்டவன் அல்லன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா."  http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 29, 2016

பாபாவின் குழந்தை


யாரேனும் ஒருவர் தன்னை பாபாவின் குழந்தையாக பாவித்து பாபாவிடம் வேண்டிய அளவு சரணடைந்து, அந்த சரணாகதியை முழுமையானதாகச் செய்துகொள்ள முயற்சிகள் முழுவதும் எடுத்துக் கொண்டு விட்டால், பாபா அவருடைய எல்லா சுமைகளையும் ஏற்க முன் வந்து, அந்த பக்தரை உண்மையிலேயே தனது குழந்தையாக ஆக்கி கொள்கிறார். அதாவது அவனுடைய பொறுப்புகள் யாவற்றையுமோ பாபா ஏற்பார்.
பாபாவே கூறியுள்ளபடி,  " ஒருவன் காண்பது என்னை - என்னை மட்டுமே - எனினும், என்னைப் பற்றிய பேச்சுக்களையே செவிமடிப்பினும், என்னிடம் மட்டும் பக்தி கொள்வானாயினும், ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி, என்னிடமே நிலைத்திருப்பின், அவன் உடல் ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த வித கவலையும் கொள்ள தேவையில்லை ".

பாபாவிடம் பக்தி செலுத்துவோர் இங்கு ஏராளமானோர் உள்ளனர். ஆனால் பாபாவிடம் சரணடைந்து அவரது குழந்தையாக வேண்டுபவர்கள் எத்தனை பேர்? மனித குலத்தில் உள்ள பெருங்குறை இது. சுலபமாக அளிக்கப்படுவதை யாரும் மதிப்பதில்லை. தமது குழந்தைகளுக்கு அமானுஷ்யமான, அதிசயத்தக்க உதவி பாபா அளித்த நூற்றுக்கணக்கான சம்பவங்களுக்குப் பின்னரும் விசுவாசம் ஏற்படவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே நீ பாபாவிடம் சரண்புகுந்துவிட்ட குழந்தை எனில், வேண்டியதை அளிக்கத் தயாராக பாபா இருப்பதை நீ உணர்வை. பாபாவிடம் இந்த கணமே பூரண சரணாகதி அடையுங்கள், மற்ற எல்லாவற்றையும் பாபா பார்த்துக் கொள்வார்.

                                                                * ஜெய் சாய்ராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 28, 2016

எல்லா பொறுப்புகளும் என்னுடையவை"காகா துலா கால்ஜி கஸ்லி மலா சாரா கல்ஜி ஆஹே " , அதாவது, " காகா, உமக்கு ஏன் கவலையும் பொறுப்பும் ? எல்லா பொறுப்புகளும் என்னுடையவை " - ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா

 ( பாபா தனது பக்தரான எச்.எஸ். தீக்ஷித்திடம் கூறியது. திரு. தீக்ஷீத் பாபாவிடம் வைத்திருந்த திடமான விஸ்வாசத்திற்காக பாபா விசேஷமாக அருளிய வாக்கு இது. மானுட சக்திகளைக் கொண்ட எந்த ஒரு சாதாரண மனிதனும் அத்தகைய சாஸனத்தை அளிக்கமுடியாது. ஆனால், அதை அருளியது தெய்வீக அவதாரமான பாபா.)
பாபாவிடம் பூரண சரணாகதி அடைந்த எல்லா பக்தர்களுக்கும், பாபாவின் இந்த வாக்குறுதி பொருந்தும். அத்தகைய  பக்தன் மற்றும் அவனது குடும்பத்தினரின் எல்லா பொறுப்பும் பாபாவின் தெய்வீக தோள்களால் தாங்கப்படுகிறது, எந்த வித தீங்கு நேரும் என நினைக்கவும் அவசியமில்லை.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 27, 2016

உண்மையான பக்தன்


மனைவி மக்கள், பெற்றோர் யாவரிடமிருந்தும் உள்ளத்தைத் திருப்பி என்னிடம் மட்டுமே அன்பு செலுத்துபவன் எனது உண்மையான பக்தன். கடலில் கலந்து விடும் ஆற்றைப் போல அவன் என்னுடனேயே கலந்து விடுகிறான். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 26, 2016

சாயிபக்தர்கள் தங்களுக்கான குருவை தேடுகின்றனர்.
சாயிபக்தர்கள் பலர் தங்களுக்கான குருவை தேடுகின்றனர். குரு ஒருவரைப் பெறும் ஆவல் பெற்றால், கண்கள் முன் தோன்றாத சாயிபாபா அத்தகைய குரு என கண்டுகொள்ளலாம். தமது தாயன்பினால் பாபா தமது மறைந்து நிற்கும் நிலையிலிருந்தவாறே, தனது பக்தரை சந்திக்க தயாராகவும், ஆவலுடனுமுள்ள பக்தர்கள், சீடர்கள் இம்மை, ஆன்மீக நலன்கள் பெறுவதற்கான முழு பொறுப்பையும் தொடர்ந்து வகித்துக்கொண்டு வருகின்றார்.

வி .டி.பாவே என்பவர் தத்த சரித்திரத்தை முறையாக பாராயணம் செய்கையில் அவருக்கு ஒரு சமாதி காட்சியளித்தது. அந்த சமாதி சாயி பாபாவினுடையது என்பதை அவர் பின்பு கண்டுகொண்டார். ஆனால் நடமாடும் ஒருவரை குருவாகப் பெறாமல் ஒரு சமாதியை மட்டுமே குருவாகப் பெற்றது அவருக்கு திருப்தியளிக்கவில்லை. ஆகவே அவர் கேட்காம்பெட் ஸ்ரீ நாராயண மகாராஜிடம் செல்ல, அவர் ஒரு கனவு மூலம் பாவேயை மீண்டும் சீரடிக்கு சாயிபாபாவிடமே திருப்பி அனுப்பிவிட்டார். பாபாவின்  உடலின் அழிவு அவருடைய ஆதிக்கத்தையும், செயலாற்றுவதையும் முடிவுக்குக் கொண்டு வராது, என பாபா கூறியுள்ளதை நினைவில் கொள்ளவும்  (இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்). நம்பிக்கையுள்ள பக்தன்,  எல்லா இடத்திலும், பாபாவை காண்கிறான். ஸ்தூல உடலில் பாபா இருப்பதோ, இல்லாமல் இருப்பதோ அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை.
           
                                               * ஜெய் சாயிராம் *


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 25, 2016

குருவே ஒரே கடவுள்


நமது புலன்கள் எல்லாம் நல்லமுறையில் இருக்குந்தோறும் நிமிடத்திற்கு நிமிடம், பாபாவை மனதில் இருத்திக் கொள்ள பழக வேண்டும். மற்ற எல்லாத் தேவதைகளும் வெற்றுத் தோற்றமே. குருவே ஒரே கடவுள். பாபாவின் புனிதத் திருவடிகளை நினைவு கூர்வோமானால், அவர் மேலும் சிறப்பான நிலைக்கு நமது அதிர்ஷ்டத்தை மாற்றி விடுவார். -ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 24, 2016

சிலருக்கு பாபாவை இறைவனாக ஏற்க மனம் மறுக்கிறதுகேள்வி : சிவன், ராமன் போன்ற தெய்வங்கள் வழிபடுவதற்காக இருக்கும்போது , சாயியை வழிபடுவதற்காக அந்த வழிபாடுகளைக் கைவிடவேண்டுமா?

பதில் : ஜனங்கள் சிவனையே ராமனையோ மற்ற எந்த தெய்வத்தையோ  வழிபடுவதை விட்டுவிட்டு அதற்கு பதிலாக சாயியை வழிபடவேண்டுமென யாருமே கூறவில்லை. ( நிச்சயமாக சாயி அவ்வாறு கூறவில்லை ). பாபா எல்லா தெய்வங்களின் மீதும் விசுவாசத்தை ஊக்குவித்தார். " ஒரு குறிப்பிட்ட உருவ வழிபாட்டில் ஒருவர் அதிகமாக ஈடுபடும்போது, அவர் மற்ற எந்த உருவத்தின் வழிபாட்டையும் தனது எண்ணங்களையும், சக்தியையும் அவசியமில்லாமல் திசை திருப்பக் கூடியதாகக் கருதி ஒதிக்கிவிடும் வாய்ப்பு உள்ளது ; எனினும், இது மற்ற வடிவங்களை நிந்தனை செய்துவிட்டது ஆகாது". மாறாக, நிறைவாக சாயி ஒரே தெய்வமென ஆகி, அதனால் சிவன் ராமன் முதலிய இறைவனின் மற்ற உருவங்களைப் போலவே ஆகிவிடுகிறார். இதயப்பூர்வமான சாயி வழிபாட்டின் மூலம் அபரிமிதமான, சந்தேகத்துக்கு இடமில்லாத நிச்சயமான பலன் கிட்டுகிறது என்று பக்தர்கள் கண்டு கொண்டுள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, தங்களுடைய லௌகீக ஆன்மீக நலன்களையும் காக்கும் விரதம் பூண்ட பாபா அத்தகைய பக்தர்கள் சாயியிடம் வருவதற்கு முன் எண்ணிகூடப் பார்த்திராத அதிசயத்தக்க வழியில் தாம் ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவேற்றுவதன் மூலம் எப்போதும் கூடவே இருக்கும் போஷகராக சாயியின் சான்னித்யத்தை  உணர்ந்து வருகிறார்கள்.

இன்றும் பெரும்பாலான சாயி வழிபாடு செய்யும் பக்தர்கள் கூட  , பாபாவை குரு என்ற ஸ்தானத்தில் மட்டுமே வைத்திருக்கிறார்கள். பாபாவை இறைவனாக ஏற்க அவர்களது மனம் மறுக்கிறது. உண்மையில் சாயி இறைவனிடமிருந்து வேறுபட்டவர் அல்ல. ஆகவே தான் பூஜிப்பது கடவுளையே என்ற இதயபூர்வமான உணர்வுடன் ஒருவன் சாயியை உண்மையாகவும், சிரத்தையுடனும் வழிபட்டு வரவேண்டும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 23, 2016

பாபாவுக்கு அர்ப்பணிக்காமல் சாப்பிடமாட்டார்கள்" எவன் ஒருவன் எப்போதும் என்னை அவன் மனத்தில் இருத்தி, எனக்கு நிவேதனம் செய்யாமல் உணவை ஏற்கமாட்டானோ, நான் அவனுடைய அடிமை. என்னிடமே வேட்கை கொண்டு மற்றெல்லாவற்றையும் துச்சமாகக் கருதுபவனுக்கும் நான் அதே போல் இருப்பேன்- ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா " 

எந்த உணவையோ பானத்தையோ சாப்பிடுவதற்கு முன்னால், பாபாவை நினைத்து, அவருக்கு சமர்ப்பித்த பிறகே சாப்பிடவேண்டும். பாபாவின் சிலையோ படமோ அருகில் இல்லையென்றாலும், கண்களை மூடி அவரை மனதுள் நினைத்து, அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஒருபோதும் தனித்து உண்ணக்கூடாது... ஏனெனில், நாம் ஒருபோதும் தனியாக இல்லை, பாபா எப்போதும் நம்முடனேயே இருக்கிறார். 

மேலும் பாபா  கூறுகிறார் : " நீ சாப்பிடுவதை எல்லாம் பக்கத்தில் உள்ளவர்களோடு பகிர்ந்துகொள்வாயென்று எனக்குத் தெரியும். ஆனால், நீ தனியாக இருக்கும்போது.... அதை என்னுடன் பகிர்ந்து கொள்கிறாயா ? நான் உன்னுடன் இல்லையா ? "

பாபாவின் இந்த வார்த்தைகள் விலைமதிப்பற்றவை. இச்சொற்களின் ஆழத்தைப் புரிந்துகொண்ட எவரும், ஒரு கவளம் உணவையோ அல்லது ஒரு மிடறு தண்ணீரையோ, பாபாவுக்கு அர்ப்பணிக்காமல் சாப்பிடமாட்டார்கள்.

உணவு மட்டுமல்லாமல், புலன் இன்பத்திற்கான நமது செயல்களையும் பாபாவின் பாதங்களில் சமர்ப்பித்துவிடவேண்டும். உலக வாழ்வின் எந்தப் பொருளை அனுபவிக்கும் முன்பும், பாபாவின் பெயரை நினைவுகூர வேண்டும். இதுவே அவருக்கு அர்ப்பணிப்பதற்கு ஒப்பானது.இப்படி செய்வதின் மூலம், நமது தீய பழக்கங்களையும் ஒழுக்கக்கேடான செயல்களையும் கட்டுப்படுத்திக்கொள்ளலாம்.

                                                      * ஜெய் சாய்ராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 22, 2016

சந்தேகமோ கேள்வியோ இல்லாமல் நாம் பாபாவை நம்ப வேண்டும்நமக்கு எது சிறந்ததென்று பாபாவிற்குத் தெரியும். எனவே சந்தேகமோ, கேள்வியோ இல்லாமல் நாம் அவரை நம்ப வேண்டும். பாபாவைச் சந்தித்ததும் அவரது குரு செய்த முதல் செயல், மிகுந்த சவாலான, சோதனையான நிலையில் அவரை வைத்ததுதான். பொதுவாக பாபா பக்தர்களின் அனுபவங்களை எடுத்துக்கொண்டால் , பாபா நம் வாழ்வுக்குள் வரும்போது, நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக நம்மைப் பரிசோதனைக்கு உட்படுத்துகிறார். அவரால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய தகுதி நம்மிடம் உள்ளதை நாம் நிரூபிக்கவேண்டும். நமது நம்பிக்கையும் நமது தகுதியும், கடினமான சோதனைகளாலும் கொந்தளிப்பான புயல்களாலும் பரிசோதிக்கப்படுகின்றன. நமது இருப்பையே தலைகீழாக அசைத்துவிடுகிறார். பரிசோதனைகளைத் தாங்க இயலாதவர்கள், பாபாவை விட்டு விலகி, வீசும் காற்றைத் தாக்குப்பிடிக்க இயலாத பலவீனமான இலைகளைப்போல் வாடிப்போய் வீழ்ந்துவிடுகிறார்கள். ஆனால், தீவிர நம்பிக்கையுடனும் கேள்வி கேட்காத சரணாகதியுடனும் பற்றிக்கொள்பவர்கள், துன்பமான காலங்களைக் கூட புன்னகையுடனும், பாபாவிடம் தளராத நம்பிக்கையுடனும் எதிர்கொள்பவர்கள், அவரது அன்பையும் ஆதரவையும் நிரந்தரமாகப் பெறுவார்கள்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 21, 2016

எல்லாவற்றையும் அளிக்கக்கூடிய தெய்வம்
ரிணானுபந்தம் அல்லது வேறு காரணங்களுக்காக பாபா, ஆயிரக்கணக்கானோரை  தம்மிடம் தருவித்துக் கொள்கிறார். அவர்களை அவ்வாறு தம்மிடம் வரச்செய்து பின்னர் அவர்களை தம்மை விடாமல் பிடித்துக் கொண்டு அவரிடமிருந்து மேன்மேலும் பலன்கள் பெறச் செய்வதன் பொருட்டு, பாபா தமது அசாதாரண சக்திகளை உபயோகித்து பலவித நலன்களை அருளுகிறார்.

பாபாவுடன் தொடர்பு கொண்டவர்களாலும் , அவருடைய மாகாசமாதிக்குப் பின் அவரைப் பற்றி சிந்திப்பவர்களாலும் பெரும்பாலும் பாபா ஒரு ஆசானாகக் கருதப்படவில்லை. பாபா ஒரு ஆசான் என்பது இப்போது அதிக அளவில் உணரப்படுகிறது. அப்படிக் கூறுவதும் சரியாகாது. அவர் ஒரு ஆசான் மட்டுமே அல்ல. அவர் ஒரு பயிற்சியாளர். அதற்கும் மேலாக, அண்டிவரும் பக்தனின் ஸ்வரூபத்தையே நல்ல முறையில் உருவாக்கும் பொறுப்பை ஏற்பவர். அதையும் விட அதிகமாகவும் கூறலாம். அவரிடம் தஞ்சம் புகுந்துவிட்டவர்களின் முன்னேற்றத்துக்கு, லௌகீகமாகவும் ஆன்மீக ரீதியாகவும், தேவையான எல்லாவற்றையும் அளிக்கக்கூடிய தெய்வம். அதற்கும் மேலாக, பாபா ஒரு ஆசானோ, பயிற்சியாளரோ மட்டுமல்ல. அவரே ஒரு பள்ளி அல்லது கலாசாலை, ஏன் முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்புத் திட்டங்கள் அடங்கிய ஒரு பல்கலைக்கழகமே ஆவார். இவ்வாறாக முடிவில்லாது சிந்தித்தும் பார்க்க முடியாத நிலைகளுக்கு கொண்டு செல்லத் தக்கவர். ஒவ்வொரு சீடனுக்கும் ஏற்ற முறையில் இருந்து, ஒவ்வொரு மாணவனுக்கும் தனிப்பட்ட முறையில் தக்கதான விசேஷ கல்வி முறைகளை அளிப்பவர். ( பாபா என்ற ) ஒருவரே ஆசானாகவும், பயிற்சியாளராகவும், போதிப்பவராகவும், மேற்பார்வையாளராகவும், வெகு தொலைவிலுள்ள இடங்களிலும் உள்ள பல்லாயிரக் கணக்கானோருக்கு உணவளிப்பவராகவும் இருக்கக்கூடிய விசேஷமான சக்தி இதற்கு முன் காணப்படாதது, கேள்விப்படாது.

                                               * ஜெய் சாய்ராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 20, 2016

சாயி பேசுவதை கேட்கலாம்பாபா கூறுகிறார், " சமாதியிலிருந்தும் ஊக்கத்துடனும் சுறுசுறுப்புடனும் இருப்பேன். மஹாசமாதிக்குப் பின்னரும், நீ நினைத்த மாத்திரத்தில், நீ எங்கிருந்தாலும், நான் உன்னுடன் இருப்பேன். நேசத்துடன் ஒரு பக்தன் என்னை அழைத்த மாத்திரத்தில் நான் தோன்றுவேன்.  பயணம் செய்ய புகைவண்டி எதுவும் தேவையில்லை ".

சாயிபாபா உடலோடு வாழ்ந்த போது பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்தார். ஆனால் மஹாசமாதி அடைந்த பிறகும், அதே போன்ற பாதுகாப்பு கிடைக்குமா என சந்தேகப்படுபவர்கள் பாபாவை சரியாக புரிந்து கொள்ளாத ஜனங்களே. அப்படி சந்தேகப்படுவது பாபாவிடமும் அவரது திருமொழிகளிலும் நம்பிக்கையின்மையை காட்டுகிறது. சாயியிடம் மனதை ஒருமைப் படுத்தவேண்டும் என்ற ஆர்வம் பக்தனிடம் இருந்தால் போதும். இப்போதும் சாயி பேசுவதை கேட்கலாம், அவருடன் பழகலாம், இதற்கு அசாதாரணமான சமத்காரங்கள் தேவையில்லை. இடைவிடாத சாயி நாமஜெபம் ஒன்றே போதும். இதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை. இது விசுவாசம் பற்றிய விஷயமே ஆகும். விசுவாசம் திடமாக இருந்தால் பிரதிபலன் விரைவில் கிட்டும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 19, 2016

ஸ்ரீ சாயிபாபாவுடைய உண்மையான மகிமைஷிர்டி ஸ்ரீ சாயிபாபாவுடைய உண்மையான மகிமையை உணர்வதும், புரிந்து கொள்வதும் மிகக் கடினம்.அவருடைய செயல்களும் சொற்களும் பெரும்பாலும் நூதனமாகவும், விந்தையாகவும் இருக்கும். அத்தகைய மஹாபுருஷர் ஒருவருடைய இயல்பை ஆழ்ந்த பக்தி, தீவிர விசுவாசம், உள்ளார்ந்த தூய்மை பொருந்திய ஒரு பக்தரால் மட்டுமே கண்டு கொள்ளக்கூடும். அத்தகைய பக்தர் பாபாவுக்கு மிகவும் நெருங்கியவர் ஆகிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 18, 2016

ஆண்டவனை அடைவான்


" ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி, என்னிடமே நிலைத்திருப்பின், அவன் உடல், ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த விதக் கவலையும் கொள்ளவேண்டியது இல்லை. ஒருவன் காண்பது என்னை, என்னை மட்டுமே ஆயினும், என்னைப்  பற்றிய பேச்சுக்களையே செவிமெடுப்பினும், என்னிடம் மட்டுமே பக்தி கொள்வானேயாயினும், அவன் ஆண்டவனை அடைவான் ".  - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 17, 2016

பாபாவே நிலையான துணையாவார்
மனித ஆத்மாக்கள் தங்கள் கர்ம வினைகளிலிருந்தும், பல பிறவிகளில் இருந்தும் விடுபடுவதற்காக, அவர்களைத் தம் பக்கம் இழுத்து, உதவி செய்து,பண்படுத்தி,ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடையச் செய்வதே பரம சத்குருவான ஸ்ரீ சாயிநாத்தின் முக்கியப் பணியாகும். எல்லா ஆத்மாக்களும் ஆன்மீக முன்னேற்றத்தில் எந்த நிலையில் உள்ளனர் என்பது பற்றியும் அவர் தெளிவாக அறிந்திருக்கிறார். அனவே அனைத்து ஆத்மாக்களையும் நற்பயன் அளிக்கும் முறையில் கட்டுபடுத்தி வழிகாட்டுகிறார். பாபா அடிக்கடி கூறுவார்- 'ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் என் பக்தர்கள் இருந்தபோதும், என் பக்தரில் எவரேனும் ஒருவர் இறப்பைச் சந்திக்க நேரிடும்போது, அந்த ஆத்மாவை என்னிடம் இழுத்துக் கொள்ள முடியும். எல்லாரையும் பற்றி எல்லாவற்றையும் நான் அறிந்திருக்கிறேன்.'

ஒரு உண்மையான பக்தனுக்கு, இப்படிப்பட்ட ஒரு சமர்த்த சத்குருவைப் பற்றிக்கொள்வதே அடிப்படையான மற்றும் இறுதியான தேவையாகும். இந்த மனிதப் பிறவியின் துன்பங்களிலிருந்தும், குறைபாடுகளிலிருந்தும்  விடுபட்டு ஆன்மீக முன்னேற்றம் காண்பதே, எல்லாவிதமான பிரார்த்தனைகள் , சாதனைகள், பூஜைகள் யோகப் பயிற்சிகளின் நோக்கமாகும். எனவே ஜீவாத்மாக்களை, முழுமையான உண்மைப் பொருளிடம் அழைத்துச் செல்லக் கூடிய சத்குரு என்பவர் மிகவும் முக்கியமானவர். இத்தகைய சத்குருவானவர்,பிறப்பு,இறப்பு அற்றவர் என்பதால் அவருடைய பக்தர்களின் பல பிறவிகளுக்கும் அவரே வழிகாட்டியாய் அமைகிறார்.

பெற்றோர்கள் ஒரு பிறவியில் நம்முடன் தொடர்புடையவர்கள். ஆனால் ' ஸ்ரீ சாயிபாபா ' பல பிறவிகளாக நம்முடன் தொடர்பு உடையவர். தந்தை,தாய், மனைவி, குழந்தைகள் என் எல்லா மனித உறவுகளும் இறப்பு வரையே ஒருவருடன் கூட வரமுடியும். ஆனால், பாபா ஒருவர் மட்டும்தான் தமது பக்தர்களாகிய நமது இறப்பிற்குப் பிறகும் நம்முடனேயே வருகிறார். ஆகவே, அவரே நமது சிறந்த, நிலையான துணையாவார். நாம் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பு, பக்தி, நம்பிக்கை இவற்றை முழுமையாக அவர்பால் செலுத்தி அவரையே நாம் இறுகப் பற்றிக்கொள்ளவேண்டும்.

                                                     *  ஜெய் சாய்ராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 16, 2016

ஸ்ரீ சுவாமி சமர்த்தர்

                           மகான்களை அறிவோம் - 1

                    ஸ்ரீ சுவாமி சமர்த்தர் ஸ்ரீ தத்தாத்ரேயரின் அவதாரமான சுவாமி சமர்த்தர் ( அக்கல்கோட் மகராஜ் ) என்று பிரபலாமாக அழைக்கப்படும் இந்த ஆன்மீகக் குருவின் பெயர், மகாராஷ்டிரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எல்லா வீடுகளிலும் அறியப்படும் பெயராகும். அக்கல்கோட்  என்னும் இடத்தை 22 வருடங்களாகத் தம் வசிப்பிடமாக இந்தச் சத்குரு தேர்ந்தெடுத்துக் கொண்டதனாலும், 1878-இல் அங்கேயே அவர் மகாசமாதியும் அடைந்ததனாலும், அவர் ' அக்கல்கோட் மகராஜ் ' என்றும் அழைக்கப்பட்டார். மகாராஷ்ட்ராவிலுள்ள சோலாப்பூர் மாவட்டத்தில் அக்கல்கோட் அமைந்துள்ளது.

ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவின் பக்தர்களுக்கு சுவாமி சமர்த்தரின் வாழ்வும், அவரது செயல்களும் பற்றி அறிந்துகொள்வது மிகுந்த ஊக்கத்தை அளிக்கும்.
ஸ்ரீ சுவாமி சமர்த்தர், ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா இருவரின் வாழ்வையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவர்கள் வாழ்விலும், செயல்களிலும் வியக்கத்தக்க அளவு ஒற்றுமை இருப்பது தெரியவரும். அவர்கள் போதனா முறைகள், உலக அளவிலான அவர்களின் அணுகுமுறை, அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் இவை யாவற்றிலும் அந்த ஒற்றுமை உண்டு. உண்மை என்னவெனில், சுவாமி சமர்த்தரும், ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவும், இரு வெவ்வேறு ஸ்தூல சரீரங்களில், ஒரே தெய்வீக சக்தியின் வெளிப்பாடு ஆவர்கள். தம்முடைய மகாசமாதிக்கு முன்னர், சுவாமி சமர்த்தர், அவருடைய சீடர் ஒருவரிடம், ஷிர்டியில் உள்ள ஸ்ரீ சாயியை வணங்கும்படியும், எதிர்காலத்தில் தாம் ( சுவாமி சமர்த்தர் ) ஷிர்டியில் இருக்கப்போவதாகவும் அறிவுறுத்தினார்.

சுவாமி சமர்த்தரின் இளமைக் கால வாழ்க்கையும் கூட ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவின் வாழ்க்கையைப் போலவே, யாரும் அறியாத புதிராகவே உள்ளது. குருச்சரித்திரத்தில் ஸ்ரீ தத்த  அவதாரம் ஸ்ரீ  ந்ரசிம்ம சரஸ்வதி அவர்கள் 1458 ம் ஆண்டு கர்தாளிவனத்தில் மஹாசமாதி அடைந்ததாக குறிப்பிடபட்டிருக்கிறது. 300 ஆண்டுகள் தவ நிலையில் இருந்தபோது அவர்மேல் ஒரு பெரிய எறும்பு புற்று வளர்ந்து வெளியுலகத்திலிருந்து அவரை மறைத்தது. ஒருநாள் ஒரு மரம்வெட்டியின் கோடாரி மரம் வெட்டும்பொழுது தவநிலையில் இருந்த ஸ்ரீ  ந்ருசிம்ம  சரஸ்வதி ஸ்வாமிகள் மேல் தவறுதலாக விழுந்தது.  கோடாரியின் வெட்டும் பாகத்தில் இரத்தக்கறை படிந்திருப்பதைக் கண்டு அவன் அதிர்ச்சியுற்றான். அந்தப் புற்றை சுத்தம் செய்து பார்த்தபோது, ஆ! அங்கு அவன் கண்டதென்ன? அவன் அங்கு ஒரு யோகி, மெதுவாகக் கண்திறந்து, வாயடைத்து நின்ற விறகு வெட்டியைச் சமாதானப்படுத்தி, அவருடைய குறிக்கோளைத் திரும்பவும் நிறைவேற்ற, அவர் மறுபடியும் இவ்வுலகில் தோன்ற வேண்டும் என்பது தெய்வ விருப்பம் என்றும் கூறினார். இந்த யோகி, இந்த புதிய அவதாரத்தில், ' சுவாமி சமர்த்தர்' என்று அழைக்கப்பட்டார்.

சுவாமி சமர்த்தர், அக்கல்கோட்டில் வந்து குடியேறும் வரை பல இடங்களில் சுற்றித் திரிந்தார். இமயமலைப் பகுதிகளில் அலைந்தபோது, அவர் சீனாவிர்க்குச் சென்றார். அதன்பின்பு, பூரி, பனாரஸ், ஹரித்வார், கிர்னஸ் , கத்தியவாட், இராமேஸ்வரம்  போன்ற பல இடங்களுக்கும் சென்றார். மகாராஷ்டிரத்தில், சோலாப்பூர் மாவட்டத்தில் பண்டர்பூருக்கு அருகிலுள்ள நகரமான மங்கல்வேதாவிலும் தங்கியிருந்தார்.1856-ஆம் ஆண்டு அக்கல்கோட்டுக்கு வந்து, அங்கு அவர் பூத உடலில் 22 வருடகாலம் தொடர்ந்து இருந்தார். அவர் அக்கல்கோட்டுக்கு, சின்டோ பண்ட்டோல் என்ற ஒருவரின் அழைப்பின் பேரில் வந்து அந்நகரின் வெளிப்புறத்தில் ஓரிடத்தில் தங்கினார்.
ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தவர் என்பதை விரைவிலேயே அப்பகுதி மக்கள் உணர்ந்தனர். சோலப்பா என்பவரின் வீட்டில் அவர் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தார். இந்த சிறிய வீட்டில்தான் இறுதிவரை சுவாமி சமர்த்தர் வசித்துவந்தார்.

விரைவிலேயே, ஓர் ஆன்மீக குரு என்ற முறையில் சுவாமி சமர்த்தரின் பெயர் எல்லா இடங்களிலும் பரவியது. பக்தர்கள், அவர் ஆசிகளைப் பெறத் தேடிவந்தனர். அவர் ஹிந்து, முஸ்லிம்கள், கிறித்துவர்கள் மற்றும் பார்சிகள் அனைவரையும் சமமாகப் பாவித்தார். ஏழைகள், தேவையுள்ளவர்கள் மற்றும் சமுதாயத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்கள்- இவர்கள்பால் அவர் எப்போதும் கருணை புரிந்தார். ஷீரடியைப் போல, அக்கல்கோட்டிலும் வியாழக்கிழமை கொண்டாட்டத்திற்குரிய  சிறப்பு நாளாயிற்று.

பல வருடங்கள், ஏழை எளியவர்க்குத் தொண்டு செய்து, நோயுற்றவர்களைக் குணப்படுத்தி, எண்ணற்ற லீலைகளை புரிந்தபின்னர்,சுவாமி சமர்த்தர் ஒருநாள் திடீரென தம் பூதஉடலை விடுத்துச் செல்லும் காலம் வந்துவிட்டது என்று அறிவித்தார். அது ஷாக்கா 1800, சைத்ர சுதா திரியோதசி - அதாவது கி.பி. 1878- ஆம் வருடத்தில், ஒரு செவ்வாய்க்கிழமை, மாலை 4 மணி. அந்நேரத்தில் அவர் பத்மாசனத்தில் அமர்ந்துகொண்டு அவருடைய இறுதி மொழிகளைக் கூறினார். ' யாரும் அழக் கூடாது ' நான் எப்பொழுதும் எல்லா இடங்களிலும் இருப்பேன். பக்தர்களின் ஒவ்வோர் அழைப்பிற்கும் பதிலளிப்பேன். ஸ்ரீ சாயிபாபாவும் மகாசமாதி அடைவதற்கு முன் இதையேதான்  கூறினார்.

சுவாமி சமர்த்தர் தம் உடலை விட்டு நீங்குவதற்கு முன், கேசவ் நாயக் என்ற பக்தர் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு ' மகாராஜ், நீங்கள் செல்வதால் எங்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பார்கள்? ' எனக் கேட்டார். சுவாமி சமர்த்தர் தம் பாதுகைகள் ஒரு ஜோடியை வணங்குவதற்காக அவருக்கு அளித்தார். ' இனிவருங்காலங்களில், அஹமது நகர் மாவட்டத்திலுள்ள ஷிர்டியில்  நான் தங்கியிருப்பேன் ' எனக் கூறினார். இன்னொரு பக்தரான கிருஷ்ணா அலி பாக்கர், அக்கல்கோட்டுக்குச்  சென்று சுவாமி சமர்த்தரின் பாதுகைகளை வழிபடத் தீர்மானித்தார். அப்போது சுவாமி சமர்த்தர் அவர் கனவில் தோன்றி ' நான் இப்போது ஷிர்டியில்  தங்கியுள்ளேன் ' அங்குச் சென்று என்னை வழிபடு. எனக்கூறினார். பாக்கர் சீரடி சென்று ஆறு மாதம் அங்குத் தங்கினார். பின்னர், அவர் ஸ்ரீ சாயியிடம் விடைபெற்றுக்கொண்டு மீண்டும் அக்கல்கோட் செல்ல விரும்பியபோது, ஸ்ரீ சாயி, ' அக்கல்கோட்டில் என்ன இருக்கிறது ? அக்கல்கோட் மஹராஜ் இங்கு வசித்துக் கொண்டிருக்கிறார்' என்று கூறினார்.

சுவாமி சமர்த்தரின் தெய்வீக லீலைகளை அவர் மகாசமாதி அடைந்ததும் நின்றுவிடவில்லை. இன்றும் கூட அவரது பக்தர்கள், கண்ணுக்குப் புலப்படும் மற்றும் கண்ணுக்குப் புலப்படாத உதவிகள் என அவருடைய அற்புங்களை அனுபவித்து வருகின்றனர்.

                                                * ஜெய் சாய்ராம் *
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 15, 2016

மனம் உடைந்து போகவேண்டாம்.
' ஒரு கஷ்டமான நிலைமையைச் சந்திக்கும் பொது மனம் உடைந்து போகவேண்டாம். பொறுமையுடன் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்த வண்ணம் இருங்கள். ஏனெனில், என்னுடைய பக்தர்களை எப்படியாவது காப்பாற்றுவதே என்னுடைய கடமையாகும். ' - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் சுக துக்கங்கள் யாவும் பாபாவுடைய கட்டுப்பாட்டிற்கும் வழிகாட்டுதலுக்கும் உட்பட்டே நடக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். இத்தகைய அனுபவங்கள் ஆத்மாவை உய்விக்கத்தான் என்பதால் அவை தேவையானவை என்றும் நாம் உணர வேண்டும். இத்தகைய தீவிர நம்பிக்கையும் பொறுமையும் உடையவர்கள், பாபாவிடம் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 14, 2016

பாபாவின் மீதான நம்பிக்கை மேலும் வளரும்

" வேதனை சூழும் நிலையிலும், நெருக்கடியான வேலைகளிலும் ஒருவர் முழுமனதுடனும், நம்பிக்கையுடனும் ஸ்ரீ சாயி சத்சரித்திராவில் தீர்வுகளை தேடினால், அவ்வடியாருக்குத் தீர்வு கிடைப்பது மட்டுமல்லாது மன அமைதியும் கிட்டும். பாபாவின் மீதான அவரது நம்பிக்கையும் மேலும் வளரும் ".

ஒரு சாயி பக்தரின் தலையாய கடமை என்னவென்றால், ஸ்ரீ சாயி சத்சரித்திராவைப் படித்து அதை முழுமையாகத் தன்னுள் வாங்கிக் கொள்வதே. எவ்வளவுக்கெவ்வளவு இதை பக்தர் ஒருவர் படிக்கிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர் பாபாவுக்கு நெருக்கமாகிறார் என்பது மட்டுமல்லாமல் அவருள் எழும் அச்ச உணர்வும் ஐயஉணர்வும் விலகிப் போகும். ஒரு சிக்கலான சமயத்தில் அடியவர் ஒருவருக்கு விளக்கம் / தெளிவு / பதில் ஒன்று தேவைப்பட்டால் பாபாவை முழுமனதுடனும், நம்பிக்கையுடனும் நினைத்து வணங்கி எதேச்சையாகப் புத்தகத்தைப் பிரித்து பார்த்தால், பிரித்த பக்கத்தில் அடியவர் கோரும் பதில் / விளக்கம் கிடைக்கும் என்பதைப் பலரும் அனுபவித்திருக்கின்றனர். பலரும் ஒருவார காலம் அதைப் பாராயணம் செய்து, தங்கள் விரும்பிய நன்மைகளைப் பெற்று இருக்கின்றனர்.

எனவே, சாயி பக்தர்கள் அனைவரும் சாயி சத்சரித்திராவைக் கீழ்க்கண்ட விதமாகப் பயன்படுத்திக் கொள்வது நலம் ;

1 * ஸ்ரீ சாயி சத்சரித்திரா அதிக விலையுள்ள புத்தகம் அன்று. புத்தகத்தை வாங்கி, அதை ஒரு புதிய துணியில் நன்கு சுற்றி, வீட்டின் பூஜையறையில் பாபாவின் படம் அல்லது உருவச்சிலை முன்பு பக்தியுடன் சாக்ஷாத் சாயியின் ஸ்வரூபமாகவே எண்ணி வழிபட்டு வரவும். தினமும் ஒரு அத்யாயமாவது படிக்கப்படவேண்டும்.

2 * வீட்டிலிருந்தாலும், வெளியிலிருந்தாலும் ஒவ்வொரு நாளும் உறங்கப் போகுமுன், தவறாமல் சில பக்கங்கள் படிக்கப்பட வேண்டும். பாபாவை தன் சிந்தனையில் நிறுத்திய வண்ணமே, கண் இமைகளை மூடி உறங்க ஆரம்பிக்க வேண்டும்.

3 * ஸ்ரீ சாயி சத்சரித்திராவில் சொல்லி உள்ளபடி சிக்கலான நேரங்களில் பக்தி சிரத்தையுடன் ஒருவாரம் இதைப் படிக்க வேண்டும். முடிந்தால் பாராயணம், வியாழன் அல்லது முக்கிய நாட்களான ராமநவமி, தசரா, குருபூர்ணிமா, ஜன்மாஷ்டமி, மகாசிவராத்திரி ஆகிய நாட்களில் தொடங்கினால் நன்று. ஏழாவது நாள் பாராயணம் முடிந்தவுடன் ஏழைகள், ஆதரவற்றவர்கள் ஆகியோர்களுக்குக் கோயிலிலோ தத்தம் இல்லங்களிலோ அன்னதானம் செய்ய வேண்டும்.

                                        * ஜெய் சாய்ராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 13, 2016

அனைத்து வியாதிகளையும் குணமாக்குவார்


ஹர்தாவைச் சேர்ந்த தந்தோபந்த் 14 ஆண்டுகளாக கடுமையான வயிற்றுவலியால் அல்லல்பட்டுக் கொண்டிருந்தார். வெவ்வேறு வகையான சிகிச்சைகளை கையாண்டு ஒரு பலனுமில்லை.

சாயிபாபா எப்படிப்பட்ட வியாதியினையும் வெறும் ஒரு பார்வையாலேயே குணப்படுத்த முடியும் என்பதனை கேள்விப்பட்டு தந்தோபந்த் ஷீரடிக்கு சென்று பாபாவின் திருப்பாதங்களில் சாஷ்டங்க நமஸ்காரம் செய்தார்.
பாபா இரக்க உணர்வுடன் அவரைப்பார்த்து, தமது தெய்வீகத் திருக்கரத்தால் அவரது சிரசைத் தொட்டு ஆசிர்வதித்து உதயையும் கொடுத்தார். தந்தோபந்துக்கு பாபாவின் தெய்வீக சங்கல்பத்தால் அவருடைய நெடுநாள் வயிற்றுவலி உடனே குணமாயிற்று. பாபாவின் அனுமதியுடனும் ஆசிகளுடனும் அவர் ஷீரடியை விட்டு கிளம்பினார்.

பாபாவின் ஆசிகள் நேரிடையாகவோ, கனவுகள் மூலமாகவோ மற்ற பல பக்தர்களின் ஆரோக்யத்தை மீட்டுத் தந்திருக்கின்ற பல சம்பவங்கள் நடைப்பெற்றுள்ளன. குருடர்களுக்கு பார்வை அளித்தல், புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு அளித்தல், நீண்டகால நோயாளிகளை குணமாக்குதல், துன்பப்படுவோருக்கு ஆரோக்கியம் அளித்தல், சந்தோஷத்தையும், சுபிட்சத்தையும் அருளுதல். இவையனைத்தும் பாபா அவர்களால் அன்புடன் செய்யப்பட்டன.  இல்வாழ்க்கைக்குரிய பக்தர்களின் கோரிக்கைகளையும் (ஒரு வேலை கிடைத்தல், ஒரு பணி உயர்வு கிடைத்தல், ஒரு வீடு கிடைத்தல் போன்றவை ) தமது பக்தர்களுக்காக அவர் நிறைவேற்றினார்.

பாபா இவ்வாறு கூறுவதுண்டு " அமர்ந்திரு, உனது கவலைகளை தூரஎரி. உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. இங்குள்ள பக்கிரி மிகவும் அன்புள்ளவர். அவர் அனைத்து வியாதிகளையும் குணமாக்குவார். அனைவரையும் அன்புடன் பட்சத்துடன் பாதுகாப்பார் ".http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 12, 2016

ஷீரடி சாய்பாபா தனிச்சிறப்பானவர்

உலகத்தின் பெரும்பாலான மதங்கள் " தெயவீகத்தினை நீங்கள் பற்ற விரும்பினால் உங்கள் ஆசைகளை துறந்துவிடுங்கள் " என்ற நடைமுறை சாத்தியமற்ற கொள்கையை உபதேசிக்கும்போது, ஷீரடி சாய்பாபா, முழுமையும் மாறுபட்ட நிலையில், தம் பக்தர்களிடம் கூறினார். " அனைத்து ஆசைகளுடனும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறுதற்பொருட்டும் தங்களின் பாரங்களை என்னிடம் மாற்றிவிடுதற் பொருட்டும் என்னிடம் வாருங்கள். நான் அவைகளைத் தாங்கிக்கொண்டு உடனடியாக அவைகளிலிருந்து தங்களை விடுவிப்பேன் ". " ஷீரடி சாயிபாபா " அல்லது "இப்பூவுலகில் பூத உடலுடன் நடந்த ஆண்டவன் " பெருமிதத்துடன் தமது பக்தர்களுக்கு சந்தோஷம், வெற்றி, உலகாயத சுபிட்சங்கள் இவைகளை உறுதி செய்தார். தெய்வீக அவதாரங்களில் அவர் தனிச்சிறப்பானவர்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 11, 2016

தீங்குமிழைக்க முடியாது" இன்று மட்டுமல்ல என்றென்றும், இப்பிறப்பில் மட்டுமல்ல இனி வரப்போகும் பிறவிகளிலும், உமக்கு எந்தவிதமான தீங்குமிழைக்க முடியாது. யாம் அதைப் பார்த்துக் கொள்கிறோம் " - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா ( பாபா தனது பக்தரான மகால்சாபதியிடம் கூறிய வார்த்தைகள் இவை. இவ்வார்த்தைகள் மஹல்சாபதிக்கு மட்டுமல்ல, தம்மை வழிபடும் ஒவ்வொரு பக்தனுக்கு என்றென்றுக்கும் அளிக்கப்பட்ட சரணாகதி மந்திரம் )

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 10, 2016

பாபா உதவும் முறை
பாபாவின் அன்புக்கு எல்லையே கிடையாது. தம் பக்தர்களுக்கு எந்தவிதக் குறைவுமின்றி பலவிதங்களில் அவர் உதவி வருகிறார். முக்கியமாக பாபா உதவும் முறை மூன்று வகைப்படும் என கூறலாம்.

( 1 ) நாம் கஷ்டத்திலிருக்கும் போது, நாம் என்ன செய்யவேண்டுமென்பதை பாபா நம் உள்ளுணர்வாகத் தோன்றச் செய்கிறார். இது நாம் நல்ல நினைவோடு விழித்திருக்கும்போது ஏற்படும் உணர்வு என்பதையறிந்து அதன்படி நடப்பதால் பயன் கிட்டுகிறது.

( 2 ) கனவுகளிலோ, மெய்மறந்த நிலைகளிலோ பாபாவின் உருவம் நம்முன் தோன்றி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணரச் செய்கிறது.

( 3 ) நம் மனதில் உள்ள சிக்கலை அவிழ்க்க வேறு ஏதோ வ்யஜத்திற்காக பாபா நம்மை சம்பந்தமேயில்லாத மூன்றாவது மனிதரிடம் அனுப்புவது. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 9, 2016

பாபாவே குருவாக இருந்து உதவுவார்


"யாரிடமும் மந்திரமோ, உபதேசமோ பெற முயலாதே. என்னையே உன்னுடைய எண்ணங்கள். செயல்கள் யாவற்றுக்கும் லட்சியமாகக் கொள். ஆன்மீக வாழ்வின் லட்சியமாகிய பரமார்த்தம் உனக்கு சந்தேகமின்றி உறுதியாகக் கிட்டும். சாஸ்த்திரங்களில் தேர்ச்சியோ, உடலை வாட்டும் சாதனைகளோ தேவையில்லை. உன்னுடைய குருவினிடத்தில் அசையா நம்பிக்கை மட்டுமே போதும். எல்லாக் காரியங்களையும் இயக்குபவர் குருவே என்பதை திடமாக நம்பு. குருவின் மகிமையை உணர்ந்து, அவரே ஹரி, ஹரன், ப்ரம்மா - திருமூர்த்தி என்பதையறிந்தவன் பாக்யத்தை என்னவென்று சொல்வது!"  - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

பாபா ஒப்புயர்வற்ற சமர்த்த சத்குரு. பாபா ஒருபோதும் தம்மை ஒரு குருவாக சொல்லிக் கொள்ளவில்லை. தம்மிடம் திடமான நம்பிக்கை கொண்ட ஒரு சில பக்தர்களுக்கு குருவாக இருந்து உதவுகிறார். ஒரு சமயம் தீக்ஷிதர் என்ற பக்தரும் மற்றும் சில நண்பர்களும் பம்பாய் செல்ல பாபாவிடம் உத்திரவு கேட்டார்கள். " நீங்கள் போகலாம் " என்றார் பாபா. " பாபா எங்கு போவது?" என்று ஒருவர் கேட்டார். " மேலே " ( அதாவது சுவர்க்கத்திற்கு ) என்று பதிலளித்தார் பாபா.

" போகும் வழி ?" கேள்வி.

" பல இடங்களிலிருந்தும் பல வழிகள் உள்ளன. இந்த இடத்திலிருந்தும் (துவாரகாமாயிலிருந்தும் ) ஒரு வழி  உள்ளது. ஆனால் வழியில் இடையூறுகள் நிறைய உள்ளன. வழியில் புலிகளும், கரடிகளும் உள .
 ஒருவன் அஜாக்கிரதையாக இருந்தால், வழியிலுள்ள ஒரு ஆழமான குழியில் விழுந்துவிட நேரும் " - பாபா.

" பாபா ! துணை இருந்தால் ?" -தீக்ஷிதர்.

" அப்போது கஷ்டமோ, அபாயமோ இல்லை. புலிகளும் கரடிகளும் ஒதுங்கிப் போய்விடும் " -பாபா.

இந்த சம்பாஷணையிலிருந்து தெய்வீக நிலையைப் பெற விரும்புவோருக்கு துணையாக ஒரு குரு அவசியம் என்பதும், சீரடியிலிருந்து துணை கிடைக்கும் ( அதாவது பாபாவே குருவாக இருந்து உதவுவார் ) என்பதும் நன்கு விளங்குகிறதன்றோ ? பாபா தற்போது ஸ்தூல உடலில் இல்லையே என்ற கேள்வி எழலாம் . அதற்க்கு அவசியமேயில்லை. உண்மையான பக்தன், பாபாவின் இருப்பை எப்போதும் நன்கு உணர்வான். எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பாபாவின் பதிலை பெறுகிறான்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 8, 2016

சீரடி மாஜே பண்டரீபுர, சாயிபாபா ரமாவார


1913ல் ஒரு சமயம் பாபாவின் பக்தரான புறந்தரேயின் தாயார் பண்டரீபுரத்திற்குச் செல்ல அவாக் கொண்டிருந்தார். ஆனால் பாபாவிடம் அனுமதி கேட்கவில்லை. ஒருதினம் பாபாவே இவ்விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். எப்போது அவள் பண்டரீபுரம் செல்லவிருக்கிறாள் என்று கேட்டார் பாபா. ஆனால் புரந்தரேயின் தாயும், மனைவியும் அவ்வாறு கேட்ட பாபாவே, சீரடி மசூதியில் பண்டரீபுர விட்டலாகவும், ரகுமாயியாகவும் காட்சியளித்து நிற்பதைக் கண்டனர்! புரந்தரேயின் தாய் பண்டரீபுரம் செல்லவில்லை என்று பதிலளித்தார். அதற்குப் பின் பலமுறைகள் பாபா அவ்வம்மையாரை அவ்வாறு கேட்பதுண்டு.ஆனால் ஒரே பதில்தான்;  " சீரடியே எனது பண்டரீபுரம்; சாயிபாபாவே வித்தோபா !" என்பதுதான். இக்கருத்துடனேயே இப்போது " சீரடி மாஜே பண்டரீபுர, சாயிபாபா ரமாவார" என்ற பாடல் ஆரத்தி சமயத்தில் தொன்று தொட்டு பாடப்பட்டு வருகிறது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 7, 2016

சீரடி சென்றுதான் ஆகவேண்டுமா?சாயிபாபாவின் அருள்கிட்ட, அவரிடம் பக்தி வளர, சீரடி சென்றுதான் ஆகவேண்டுமா? அவசியமேயில்லை. பக்தர்கள் நினைக்குந்தோறும், நினைக்கும் இடமெல்லாம் பாபா தோன்றுகிறார். மனதை ஒருமுகப்படுத்தி பாபாவை தியானம் செய்தால் போதுமானது. ஆனால் சீரடி சூழ்நிலை, தொடர்பு யாவும் பாபாவிடம் பக்தி வளர உதவும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 6, 2016

முக்தி நிச்சயம்தினமும் சித்தர்கள், சாதுக்கள் ஆகியோரை தரிசனம் செய். தூய வாழ்க்கை நடத்து. இங்ஙனம் இறக்கும்போது தூய்மையாக இருக்கக்கூடும். இறக்கும் தருணத்தில் எந்த ஆசையும் இருக்கக்கூடாது. உன்னுடைய இஷ்ட தெய்வத்தின் மீது மனதைச் செலுத்து. மனதை ஈசனிடம் ஒருமைப்படுத்தியிருக்கும் போது, சாவு வருமானால் முக்தி நிச்சயம். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா ( பாபா தனது பக்தரான நானாவிடம் கூறியது )

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 5, 2016

சண்டை போடவேண்டாம்


யாராவது நம்மீது பத்து வார்த்தைகள் பேசினால், நாம் ஒரே வார்த்தையில் பதில் சொல்வோம். யாருடனும் சண்டை போடவேண்டாம். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 4, 2016

நானிருக்க பயமேன்இது ( மசூதி ) நம் வீடு. இந்த வாடா நம் வீடு. நான் இங்கிருக்கும்போது ஏன் பயப்பட வேண்டும்? இந்த வீட்டை உன் வீடாகவே கருதவேண்டும். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 3, 2016

கடவுளைக் காண்பதெப்படி


நானா ( பக்தர் ) : பாபா, கடவுளைக் காண்பதெப்படி?

பாபா : மனம் முரட்டுத்தனமானது. கட்டுக்கடங்காதது. அதை அடக்க முயல வேண்டும். ஒரு ஈயானது எப்படி எல்லாப் பொருள்கள் மீதும் உட்கார்ந்துவிட்டு, தீயையணுகும்போது பறந்துவிடுகிறதோ, அதைப் போன்று மனமானது இந்திரிய சுகங்களை நாடி அவற்றை அனுபவித்து, அவற்றுள் மூழ்கி, தெய்வீகத்தைக் காணும்போது வேறு பக்கம் திரும்பிவிடுகிறது. கட்டுக்கடங்காத இந்த மனம் கடவுளிடம் ஒன்றுபடாத வரையில், சம்சாரம், பிறவிப் பெருங்கடல் தவிர்க்க முடியாததே. மனதை ஜெயிக்காத வரையில் மீண்டும் பிறந்தேயாக வேண்டும். ஆனால் பிறவிகளில் மானிடப்பிறவியே மிகச்சிறந்தது.
ஆகவே, மூர்த்தி பூஜை செய். அதாவது கடவுளை உருவங்களில் வழிபட்டு மனதை ஒரு நிலைப்படுத்து, சிலையும் கடவுளே. உருவ வழிபாட்டைப் புறக்கணிக்காதே. ஒரு உருவச்சிலை ஆழ்ந்த பக்தியுடன் பூஜிக்கப்படும் பொழுது, மனது லயத்தைப் பெறுகிறது.
பின்னர், மனனம் (அதாவது) கடவுளின் லீலைகளை எண்ணுவது, தியானம் இவற்றைக் கடைப்பிடி. புராணங்கள், சாத்திரங்கள் ஆகியவற்றைப் பாராயணம் செய். அவற்றுள் கூறியிருப்பதைக் கடைப்பிடி. ஆத்ம வித்யை எல்லா ஞானத்திலும் சாலச்சிறந்தது. அதில் தேர்ந்துவிட்டால் முக்தி கிடைத்து விடுகிறது.  கடவுளே நம் வசப்படுகிறார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 2, 2016

கடவுள் யார், நாம் அவரை எப்படிக் காண்பது?


நானா ( பாபாவின் நெருங்கிய பக்தர் ) ; பாபா! கடவுள் யார்? எதைப் போன்றிருப்பார்? எங்கே உள்ளார்? நாம் அவரை எப்படிக் காண்பது?

பாபா : பக்தர்கள் ( அதாவது சம்சாரத்தில் கட்டுண்டவர்கள் ) சரியானது, தவறானது இரண்டுக்குள் உள்ள வித்தியாசத்தையோ, கடவுள் யார் என்பதையோ அறிவதில்லை. அவர்களிடம் தூய எண்ணங்கள் இருப்பதில்லை. எப்போதும் சம்சாரத்திலேயே மூழ்கி இதயத்தில் தூய்மையில்லாமல் சாதுக்களிடமும், சாஸ்திரங்களிலும் நம்பிக்கை இல்லாமல், அவர்கள் கடவுளை அடைவதில்லை. நரகத்தை நோக்கியே விரைகின்றனர்.
முமுக்ஷூக்கள், இந்த கட்டுண்ட நிலையை வெறுத்து விவேகத்தைக் கடைப்பிடித்து விசாரம் செய்து, கடவுளைக் காணவேண்டுமென்ற துடிப்பைப் பெறுகிறார்கள். அவர்கள் தெய்வ பக்தியுடன், நீதிக்குக் கட்டுப்பட்டவர்கள் ஆகின்றனர். நாம ஜபம், தியானம் இவற்றின் மூலம் மனதை இந்திரியங்களிடம் திருப்பி அவர்கள் சாதகர்கள் ஆகிறார்கள். சாதுக்களுடன் பழக ஆசைப்படுகிறார்கள்.
இவர்கள் தங்கள் தியானம், ஜபம் இவற்றில் பூரண லயத்தைப் பெற்று விடும்போது, சித்தர்களாகிறார்கள். புகழும், இகழ்ச்சியும் ஒன்றாகிவிடுகிறது. ஆசைகள் அகன்றுவிடுகின்றன. இவ்வுடல் நம்முடையது, உடல்தான் நாம் என்ற எண்ணங்கள் போய்விடுகின்றன. தமது ஆத்மாவும், கடவுளும் ஒன்று என்பதை அறிந்துவிடுகிறார்கள். "நானே பிரம்மன்" என்ற எண்ணம் வந்து விடுகிறது. இறுதியில் அசையும், அசையாப் பொருள் யாவற்றிலும் கடவுள் வியாபித்திருப்பதைக் காணலாம்.
கடவுள் எங்குமுள்ளார். அவர் இல்லாத இடம் கிடையாது. நம்மை ஈஸ்வரனைக் காணவொட்டாமல் தடுத்துவிடும் மாயையின் சக்தியைப் பார்! நான், நீ இவ்வையகம் முழுவதும் ஈஸ்வரனுடைய அம்சங்களே!

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 1, 2016

விதியை வெல்ல யாரால் முடியும்


விதியை வெல்ல யாரால் முடியும் ? பாபாவின் பக்தர்களை கேட்டால் தயங்காமல் பதிலளிப்பார்கள் " பாபாவால் " என்று. தம்மையண்டிய பக்தர்கள் விஷயத்தில் விதியையும் மாற்றியமைத்தார் பாபா. சிறந்த ஜோதிடர்கள் ஒரு பக்தருக்கு குழந்தையே இருக்காது என்றனர். பாபா அந்த பக்தருக்குப்  பல குழந்தைகள் பிறக்க அருளினார். ஒரு பக்தருக்கு குறிப்பிட்ட தினத்தில் பெரிய அபாயம் வரப்போவதாக ஜோதிட சாத்திரம் கூறியது. " என் பக்தனிடம் எந்த அபாயம் நெருங்கும்? " என்று முழங்கினார் பாபா. பக்தனை அன்று தீண்ட வந்த சர்ப்பம் ஒதுங்கிச் சென்றது ! ஜோதிடர்கள் வியந்தனர். ஆம், பாபாவுடைய பக்தனாக ஆனவுடன், உண்மையான பக்தனானவுடன், "என்னுடைய பொறுப்பெல்லாம் உன்னுடையது " என்று பூரணமாகச் சரண்புகுந்த பக்தனான பின்னர், பாபா அந்த பக்தனை எட்டு திசைகளிலிருந்தும் சூழ்ந்து நின்று காப்பாற்றுகிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...