Monday, June 13, 2016

அனைத்து வியாதிகளையும் குணமாக்குவார்


ஹர்தாவைச் சேர்ந்த தந்தோபந்த் 14 ஆண்டுகளாக கடுமையான வயிற்றுவலியால் அல்லல்பட்டுக் கொண்டிருந்தார். வெவ்வேறு வகையான சிகிச்சைகளை கையாண்டு ஒரு பலனுமில்லை.

சாயிபாபா எப்படிப்பட்ட வியாதியினையும் வெறும் ஒரு பார்வையாலேயே குணப்படுத்த முடியும் என்பதனை கேள்விப்பட்டு தந்தோபந்த் ஷீரடிக்கு சென்று பாபாவின் திருப்பாதங்களில் சாஷ்டங்க நமஸ்காரம் செய்தார்.
பாபா இரக்க உணர்வுடன் அவரைப்பார்த்து, தமது தெய்வீகத் திருக்கரத்தால் அவரது சிரசைத் தொட்டு ஆசிர்வதித்து உதயையும் கொடுத்தார். தந்தோபந்துக்கு பாபாவின் தெய்வீக சங்கல்பத்தால் அவருடைய நெடுநாள் வயிற்றுவலி உடனே குணமாயிற்று. பாபாவின் அனுமதியுடனும் ஆசிகளுடனும் அவர் ஷீரடியை விட்டு கிளம்பினார்.

பாபாவின் ஆசிகள் நேரிடையாகவோ, கனவுகள் மூலமாகவோ மற்ற பல பக்தர்களின் ஆரோக்யத்தை மீட்டுத் தந்திருக்கின்ற பல சம்பவங்கள் நடைப்பெற்றுள்ளன. குருடர்களுக்கு பார்வை அளித்தல், புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு அளித்தல், நீண்டகால நோயாளிகளை குணமாக்குதல், துன்பப்படுவோருக்கு ஆரோக்கியம் அளித்தல், சந்தோஷத்தையும், சுபிட்சத்தையும் அருளுதல். இவையனைத்தும் பாபா அவர்களால் அன்புடன் செய்யப்பட்டன.  இல்வாழ்க்கைக்குரிய பக்தர்களின் கோரிக்கைகளையும் (ஒரு வேலை கிடைத்தல், ஒரு பணி உயர்வு கிடைத்தல், ஒரு வீடு கிடைத்தல் போன்றவை ) தமது பக்தர்களுக்காக அவர் நிறைவேற்றினார்.

பாபா இவ்வாறு கூறுவதுண்டு " அமர்ந்திரு, உனது கவலைகளை தூரஎரி. உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. இங்குள்ள பக்கிரி மிகவும் அன்புள்ளவர். அவர் அனைத்து வியாதிகளையும் குணமாக்குவார். அனைவரையும் அன்புடன் பட்சத்துடன் பாதுகாப்பார் ".



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

சாயி நாம ஜெபம்

https://youtu.be/gf4LDqvForY PLEASE SUBSCRIBE TO SHIRDI SAIBABA STORIES YOUTUBE CHANNEL                           https://www.youtube.com/ch...