Sunday, July 31, 2016

பக்தன் அனுக்ரஹம் பெற்றவனாகிறான்எனக்கு சேவை செய்ய பாகுபாடுகளை விட்டுவிட வேண்டும். சில நேரங்களில் நான் நாயாகவும், சில நேரங்களில் பன்றியாகவும் வருகிறேன். ஒவ்வொரு உருவத்திலும் என்னைக் கண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்ளும் பக்தன் அனுக்ரஹம் பெற்றவனாகிறான். - ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 30, 2016

பாபா பார்த்துக்கொள்வார்


நமக்கு எது தேவை, எது நல்லது என்பது பாபாவுக்குத் தெரியாதா? ஆகவே நமக்கு எதை அளிக்கவேண்டும், எதை அளிக்கக்கூடாது என்பதை பாபாவே தீர்மானித்துக் கொள்ளட்டுமே !. பாபா பக்தர்களின் ஒவ்வொரு செயலும், வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியும், பாபாவாலேயே கவனிக்கப்பட்டும், உருவாக்கப்பட்டும் வருகிறது... பாபா தன்னிடம்  பூரண சரணாகதி அடைந்த பக்தர்களிடம், "உம்முடைய எல்லா பொறுப்புகளும் என்னுடையவை. உம்முடைய எல்லா காரியங்களையும் நானே முன் நின்று நடத்துகிறேன்" என்று கூறியுள்ளார். பிரார்த்தனை நல்லதே..அது பக்தியை அதிகரிக்கச் செய்யும். ஆனால் நடந்த சம்பவங்களை எடுத்துக் கொண்டால், தன்  பக்தனுக்கு எது நன்மையோ, அதை மட்டுமே பாபா அளித்துள்ளார். பிரார்த்தனைகளை விடுத்து பாபாவிடம் பூரண சரணாகதி அடையுங்கள். மற்றவற்றை பாபா பார்த்துக்கொள்வார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 29, 2016

நீ ஷீரடிக்கு வரவேண்டிய அவசியமில்லை1912 ம் ஆண்டு பாபாவை தரிசிக்க நான் ஷீரடி சென்றேன். என்னுடைய துரதிருஷ்டங்கள், கஷ்டங்கள், வேதனைகள் எல்லாம் பற்றி பாபாவிடம் சொல்லவேண்டுமென்பது என் எண்ணம். ஆனால் நான் சொல்ல எண்ணியதை முன்னதாகவே சொல்லாமலேயே அறிந்து கொண்ட பாபா, 'அமைதியாக இரு, அஞ்ச வேண்டாம் ' என மொழிந்தார். அவர் என்னை காத்துக் கொண்டிருப்பதால் எனக்கு எந்த பயமுமில்லை என நான் பதிலளித்தேன்.

1916-ம் ஆண்டு நான் பாந்தராவுக்குக் குடியேறினேன். அப்போது, 1917-ல் அல்லது 1918-ல் எங்கள் வீட்டுக்கு முன் ஒரு சாது வந்து நின்று ஒரு தம்பிடி கேட்டார். என் மகன் அவருக்கு ஒரு தம்பிடி அளித்து விட்டு தாங்கள் யார் என்று எனக்குத் தெரியும் என்றான்; அடையாளங் கண்டுகொள்ள முடியாத ஒரு உருவில் சாயிபாபாவே வந்திருப்பதாக அவன் நம்பினான். அப்போது அவர் ' ஸ்ரீ சாயிபாபா ஆஹே காகேயகரும் நவநேம் ' என்றார். வராந்தாவில் நின்று அவர் இவ்வாறு சொன்னவுடன், நான் அவருடைய பாதங்களைப் பணிந்து அவரை வீட்டிற்குள் வரும்படி அழைத்தேன். அவர் உள்ளே வந்தவுடன் நான் மீண்டும் அவர் பாதங்களில் வணங்கினேன். ' துகா ஸமாதான் பாரலே ' அதாவது, ' உனக்கு திருப்தியா ' என அவர் கேட்க நான் 'ஆம்' என பதிலளித்தேன். பிறகு அவர் உணவு தயாரிக்க கோதுமை மாவு போன்ற பொருட்களை கேட்டார். அவற்றைக் கொடுத்தேன். என்னை ஆசிர்வதித்துவிட்டு, 'நான் உன்னோடு எப்போதும் இங்கேயே இருக்கிறேன். நீ ஷீரடிக்கு வரவேண்டிய அவசியமில்லை.' எனக் கூறி சென்றுவிட்டார். அதன் பின் நான் ஷீரடிக்குச் செல்லவே இல்லை. - பாலகிருஷ்ண வாமன் வைத்யா (ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர்)

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 28, 2016

அனைத்துப் பிரச்சினைகளும் விலகும்
வெவ்வேறு தெய்வங்களுக்கும், ஆன்மீக குருக்களுக்கும் மரியாதை செலுத்துவது என்பது நல்லது. ஆனால் எல்லா ஞானிகளும் கூறியுள்ளபடி, நம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீதுதான் இருக்க வேண்டும். ஆன்மீக வளர்ச்சிப் பயணத்தில் ஒருவர் தம் குருவைத் தனக்குள்ளேயே தேட வேண்டும். பாபா நமக்குள் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு  விட்டால் வேறெங்கு செல்வது என்ற கேள்வியே ஏன் எழப்போகிறது ?. வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு தேவ, தேவதைகள் பின்னால் ஓடுவதையும் வெவ்வேறு கோயில்களுக்கு அலைவதையும் விடுத்து பாபா ஒருவரையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.
தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 27, 2016

நல்ல பலன்கள்நீ நல்ல கர்மாவைச் செய்து, அதை பகவானிடம் அர்ப்பணம் செய்துவிட்டால், உனக்கு நல்லதே கிட்டும். நல்ல காரியங்களை செய்பவர்களின் பிரபு ஆவார் பகவான். தீயவர்கள், நேர்மையானவர்கள், இரு சாராருமே நல்ல பலன்களை என்னிடமிருந்து பெற விரும்புகிறார்கள். எவ்வாறு ( அல்லது எங்கிருந்து ) என்னால் கொடுக்க இயலும் ? ( அதாவது பலனைப் பெற போதுமான நல்ல செயல்கள் புரிந்திராவிட்டால் ) - ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 26, 2016

வீட்டில் நீங்கள் வழிபடும் பாபாவின் படம்வீட்டில் நீங்கள் வழிபடும் பாபாவின் படத்திற்கும் , பாபாவிற்கும்  சிறிதளவும் வித்தியாசம் இல்லை. பாபாவின் படத்திற்கு செய்யும் நமஸ்காரம், பாபாவின் படத்திற்கு அணிவிக்கும் மாலைகள் உண்மையில் பாபாவிற்கு நேரிடையாக அணிவித்ததற்கு சமம்..

பம்பாய் பாந்த்ராவைச்  சேர்ந்த திருமதி டெண்டூல்கர் பாந்த்ராவில் தமது இல்லத்தில் வைத்திருக்கும் பாபாவின் திருவுருவப்படத்திற்கு இரண்டு மாதங்களாக ஒவ்வொரு தினமும் வகுள மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை குவியல், குவியலாக அணிவித்து வந்தார். பின்னர் அவர் ஷீரடிக்கு சென்றார்...

பாபா : காகா! ( ஹரிஸீதாராம் தீக்ஷித் ) இந்த இரண்டு, மூன்று மாதங்களாக நான் ஷீரடியில் இருக்கவே இல்லை. இந்த அன்னை என்னை வகுள மலர்களில் மூழ்க வைத்து திணற அடித்து விட்டார்; நான் மிகவும் திக்குமுக்காடிப் போய் நினைவையும் இழந்துவிட்டேன். இப்போது மெதுவாக பழைய  நிலைக்கு வந்து கொண்டிருக்கிறேன்.

மற்றொரு சம்பவம்....

பாலபுவா சுதார் என்ற பக்தர், முதன்முதலாக பம்பாயிலிருந்து 1917ம் ஆண்டில் ஷீரடிக்கு வந்து பாபாவை வணங்கினார்.

பாபா : ( வேறு ஒருவரை நோக்கி ) இவரை எனக்கு நான்கு ஆண்டுகளாகத் தெரியும்.

பாலபுவா இதற்கு முன்பு பாபாவை சந்தித்ததில்லை. ஆகவே வியப்பு. ஆனால் பம்பாயில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை பாபாவின் திருவுருவப் படத்தின் முன் விழுந்து நமஸ்காரம் செய்ததை நினைவு கூர்ந்தார்... 

                                           * ஜெய் சாயிராம் *


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 25, 2016

கொத்தடிமைநான் யாரிடமும்  கோபிப்பதில்லை. ஒரு தாய் தன் சிசுக்களிடம் கோபம் கொள்வாளா?  கடல் பல நதிகளுக்கும் நீரை திருப்பி அனுப்புமா ? நான் பக்தியை விரும்புகிறேன். என் பக்தனுடைய கொத்தடிமை நான். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 24, 2016

எந்தப் புத்தகத்தையும் படிக்காதே."எந்த புத்தகத்தையும் படிக்கவேண்டாம், என்னை உன் இதயத்தில் அமர்த்து "

ஒவ்வொரு குரு பூர்ணிமா தினமும் பாபா துவாரகாமாயியில் அமர்ந்திருப்பார். பக்தர்கள் ஒவ்வொருவரும் கையில் ஒரு புத்தகத்துடன் வந்து அதை பாபாவிடம் சமர்ப்பிப்பார்கள். அதைப் படித்து பயன் பெற வேண்டும் என ஆசிர்வதித்து பாபா அந்த நூலை அவருக்கு திருப்பியளிப்பார் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு. சாதாரணமாக பாபா புத்திகத்தை கொண்டு வந்தவரிடமே  திருப்பியளித்து விடுவார். ஆனால் சில சந்தர்ப்பங்களில் ஒருவர் கொண்டுவந்த புத்தகத்தை மற்றொருவருக்கு என மாற்றியளித்துவிடுவும் செய்வார். அம்மாதிரி ஒரு குரு பூர்ணிமா தினம் 'ரேகே' என்ற பக்தர் தன் கையில் எந்த புத்தகமும் எடுத்து வராமல் வந்து விட்டார்.

பாபா : ( ரேகேயை நோக்கியவாறு ) : நீ செய்தது சரி. எந்தப் புத்தகத்தையும் படிக்காதே. இந்த புத்தகங்களில் 'ப்ரஹ்மனைக்' கண்டுவிடலாமென்று இந்த ஜனங்கள் எண்ணுகின்றனர்; ஆனால் அவர்கள் காண்பதோ ப்ரமா (குழப்பம்). நீ உன் இதயத்தில் என்னை அமர்த்திவிட்டால் போதும். அவ்வாறாக, இதயமும், மூளையும் ( அன்புணர்வும், அறிவுத்திறனும் ) ஒருமித்து செயல்படச்செய் .
         
                                             * ஜெய் சாய்ராம் *


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 23, 2016

பூனை
பாபா : ( ஆஸ்துமா நோயால் பீடிக்கப்பட்ட ஹன்ஸ்ராஜை நோக்கி ) : தயிரையோ அல்லது அமிலம் நிறைந்த பொருட்களையோ புசிக்காதே.

ஆனால், ஹன்ஸ்ராஜ் ஒவ்வொரு இரவும் மறுநாள் பகல் உணவுடன் சேர்த்து புசிப்பதற்காக தயிர் தயாரித்து வந்தார், தினமும் ஒரு பூனை அதை குடித்துவிட்டு சென்று வந்தது. ஒருநாள் அவர்  அந்த பூனையை அடித்துவிட்டார்.

பாபா : ( மற்றவர்களிடம் ஹன்ஸ்ராஜின் முன் ) : வக்கிர புத்தியும், பிடிவாதக்காரனுமான ஒரு ஊபன்டியா ( சொன்னதற்கு மாறாக செய்பவன் ) இருக்கிறான். தயிர் உண்பதை தவிர்க்கும்படி நான் அவனிடம் கூறினேன். ஆனால் அவன் தினமும் தயிர் தயார் செய்து வந்தான். அவன் உயிரை காப்பதற்காக தினமும் நான் ஒரு பூனை உருவில் சென்று தயிரை குடித்து வந்தேன். அவன் என்ன செய்தான் தெரியுமா? என் தோள் பட்டையில் அடித்துவிட்டான். ( பாபாவின் தோள்பட்டையில் ஒரு புது அடிபட்ட தழும்பு இருப்பதை ஹன்ஸ்ராஜ் கண்டார்; ஆனால் அவர் தடி கொண்டு அடித்தது ஒரு பூனையையே ! )

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 22, 2016

நான் கடவுள்


நான் பர்வர்திகார் ( கடவுள் ). நான் வசிப்பது ஷீரடி மற்றும் எங்கும். என் வயது லக்ஷக்கனக்கான ஆண்டுகள். ஆசிகள் வழங்குவதே என் தொழில். எல்லா பொருட்களும் என்னுடையவை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றையும் நான் அளிக்கிறேன். கங்காபூர், பண்டரிபுரம், மற்ற எல்லா இடங்களிலும் நான் இருக்கிறேன். இவ்வுலகின் ஒவ்வொரு துகளிலும் நான் உள்ளேன். இவ்வையகம் முழுவதும் என்னுள் அடக்கம். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 21, 2016

சாப்பிடும் போது என்னை நினைக்கிறாயா ?


சாப்பிடும் போது என்னை நினைக்கிறாயா ? உன் அருகில் நான் இல்லை? எனக்கு ஒரு கவளம் கொடுக்கிறாயா? - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா    (பாபா தனது பக்தரிடம் கூறிய வார்த்தைகள் இவை. இன்றும் பக்தர்கள் பாபாவுக்கு செய்யும் நிவேதனத்தை பாபா நிச்சயம் ஏற்றுக் கொள்கிறார். இதில் சந்தேகமே வேண்டாம் )

ஸ்ரீமதி தார்கட் என்ற மாது , பம்பாய் பாந்தராவில் உள்ள தனது வீட்டில் தினமும் மூன்று முறை பாபாவுக்கு நிவேதனம் செய்து வந்தார்.
1914ம் ஆண்டு மே மாதம், தனது புதல்வனுடன் பாபாவை காண ஷிர்டி வந்தார்...

பாபா : தாயே ! நான் உன் இல்லத்திற்கு ஒவ்வொரு நாளும் மூன்று முறைகள் வர வேண்டியிருக்கிறது.

ஸ்ரீமதி தார்கட் : ஆம், பாபா.

அங்கிருந்த உள்ளூர்வாசியான ஒரு பெண்மணி வியப்புற்றார்; ஏனெனில் தினமும் அவள் பாபா ஷிர்டியிலேயே இருப்பதை பார்த்துள்ளாள். " பாபா, இது என்ன வினோதமான பேச்சு ? " என்று வினவினாள்.

பாபா : நான் பொய் பேசுவதில்லை. தாயே! நான் உன் இல்லத்திற்கு வருகிறேன். நீ நான் புசிக்க பண்டங்களை அளிக்கிறாய். உண்மை அல்லவா?

ஸ்ரீமதி தார்கட் :  ஆம்.

ஷீரடி மாது : உண்மையிலேயே பாபா உங்கள் வீட்டுக்கு வருகிறாரா? அவருக்கு நீங்கள் உணவளிக்கிறீர்களா ?

ஸ்ரீமதி தார்கட் :  ஆம்.

பாபா : ( ஷீரடி பெண்மணியிடம் ) : ஆம், தாயே. நான் தார்கட் வீட்டிற்கு (பாந்தரா,பம்பாய்)  எளிதாக செல்கிறேன். வழியில் ஒரு சுவர். அதன் மீது ஏறி தாண்டினால், பின்னர் ரெயில்வே தண்டவாளம், அதற்கப்பால் தார்கட்டின் வீடு. (பாபா பாந்தராவில் அந்த மாதின் வீட்டிற்கு ஷீரடியிலிருந்து விண்  வழி மார்கத்தை விவரிக்கிறார். )
நான்கு சுவர்களையும், தோண்டப்பட்டுள்ள பள்ளங்களையும் கடந்து பறந்து செல்ல வேண்டியுள்ளது.
   
                                                * ஜெய் சாய்ராம் * 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 20, 2016

கூடாப்பழக்கம்- பாபாவின் கண்டிப்பு
ஸ்ரீ சாயிபாபா, தன்னிடம் முழுமையாக சரணடைந்த பக்தர்களை, எப்போதும் கண்காணித்து வரும் காவல் தெய்வம்.
பாபாவின் பக்தரான ஸாடே என்பவர், தவறுதலாலும், அஜாக்கிரதையாலும்  நடத்தை சரியில்லாத பெண் ஒருவள் வீட்டிற்குப் போய்விட்டார். அங்கே அவளுடன் தனியாக இருந்து தன் நடத்தை சீரழிந்து போய்விடக் கூடிய நிலமையை நெருங்கிவிட்டார். கதவு சாத்தப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அது திறந்தது. நிலைப்படியில் பாபா நிற்கிறார், ஸாடேக்கு ஏதோ சமிக்ஞகள் செய்கிறார். "என்ன! இவ்வளவு தூரம் என்னிடம் வந்துவிட்டு, நரகத்தில் விழப்பார்க்கிறாயே ! நல்ல செயல்தான்!" எனக் கண்டிப்பது போலிருந்தது. அகப்பட்டுக் கொண்ட திருடனைப் போல ஸாடே மிகவும் வெட்கிப் போய், மீண்டும் வருவதில்லை என்ற சங்கல்பத்துடன் அந்த பெண்ணின் வீட்டை விட்டு வெளியேறினார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 19, 2016

வெறுப்பு, பொறாமை, விரோதம்,
நம் மனதில் மற்றவர்கள் மீது வெறுப்பு, பொறாமை, விரோதம், பழிவாங்கும் மனோபாவம் இருக்கக் கூடாது. பிறர் நம்மிடம் வெறுப்பைக் காட்டினால், நாம் நாமஜபம் மேற்கொண்டு அவர்களைவிட்டு ஒதுங்கிவிடுவோம். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 18, 2016

சாயி சாயி

பாபா தமது அடியவர்களுக்காக, சுவாச நியமத்தையோ, அல்லது எத்தகைய வழிபாட்டு முறைகளையோ,அவர் வகுத்துரைக்கவில்லை. அல்லது எவ்வித மந்திரத்தையும், எவர் காதிலும் அவர் ஓதவில்லை. எல்லா புத்திசாலித் தனத்தையும் விட்டொழித்துவிட்டு எப்போதும் "சாயி சாயி "என்று ஞாபகமூட்டிக் கொள்ளும்படியும் அவர்களிடம் கூறினார். - ஸ்ரீ சாயி சத்சரித்திரம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 17, 2016

குருபௌர்ணமி
பாபாவுக்கு விசேஷமாக குருபூஜை செய்வது தாதா கேல்கர் என்ற பக்தரால் ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 1910ம் ஆண்டில் பாபா ஒரு தினம் தாதாகேல்கரை வரவழைத்து, " இன்று குருபௌர்ணமி என்று தெரியாதா? பூஜா திரவியங்களைக் கொணர்ந்து குருபூஜை செய்யுங்கள்" என்று கூறினார். அவ்வாண்டு முதல் பாபாவின் பக்தர்கள் யாவரும் குரு பௌர்ணமியன்று சமர்த்த சத்குருநாதனான பாபாவுக்கு குரு பூஜையை சிரத்தையுடன் செய்ய ஆரம்பித்தனர்.
ஷீரடியில் ஒவ்வொரு ஆண்டும் குருபௌர்ணமி மிக விமர்சியாக 3 தினங்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டு 18/19/20- 07- 2016 மூன்று தினங்கள் கொண்டாடப்படுகிறது. சாய் பக்தர்கள் அனைவரும், இந்த விசேஷமான நாட்களில் ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படித்தும், சாயி நாமத்தை சொல்லியும் , பாபாவுக்கு ஆரத்தி பாடியும், பாபாவின் ஆசியை பெறுவோம்...

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 16, 2016

குருவின் கிருபை
குருவின் கிருபையால் ஏற்படும் எழுச்சியும் விழிப்பும் கண்களுக்குப் புலப்படாது, அது எல்லா இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டது. மூவுலகங்களிலும் தேடினாலும் சத்குருவைத் தவிர இதை அளிக்கக்கூடியவர் வேறெவரையும் காணமுடியாது.- ஸ்ரீ சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 15, 2016

குடிப் பழக்கம் - பாபாவின் எச்சரிக்கை


டி.வி. சாம்பாரே என்ற பக்தர், குடி பழக்கம் உள்ள ஒரு எஜமானின் கீழ் வேலை செய்ய நேரிட்டு, அவரும் அந்த கெட்ட பழக்கத்துக்கு ஆளாகும் நிலைமையிலிருந்தார். ஒரு சமயம் அவருடைய கனவில் பாபா தோன்றி,
" ஓரிரு முறை  உன்னை எச்சரிப்பேன். என் எச்சரிக்கையை நீ மதித்து நடக்காவிட்டால், உன்னை உன் விதிவசமே விட்டுவிடுவேன்." என எச்சரித்தார்.
அந்த மனிதருக்கு தான் திருந்த வேண்டுமென்ற எண்ணம் தோன்றி, இனி மதுவைத் தொடுவதில்லை என ஒரு சபதம் செய்து கொண்டார். அவருடைய எஜமானர் ஒரு சமயம் எல்லோருக்கும் ஒரு விருந்து அளித்தார். விருந்தில் முக்கியமான பொருள் மது . மது கோப்பைகள் வலம் வந்து கொண்டிருந்தன. சாம்பாரேயின் முன் இருந்த கோப்பையில் மதுவை நிரப்ப அவருடைய எஜமானர் வந்தார். ( சாயி பாபாவின் பெயரைக் குறிப்பிட அஞ்சிய ) சம்பாரே 'நான் மது அருந்தக்கூடாது என டாக்டர் கூறியுள்ளார்' என்று சொன்னார். ஆனாலும் அவரது எஜமானர் அதை பொருட்படுத்தாது, சம்பாரேயை குடிக்கும்படி வலியுறுத்தினார். நிலமை ஆபத்தாயிற்று. திடீரென பாபாவின் திருவருளால் எல்லா மின் விளக்குகளும் ஆணையவே கூடம் முழுவதும் இருள் சூழ்ந்தது. இதனிடையே, சம்பாரேக்கு அருகில் இருந்தவர் சம்பாரே முன்பு வைக்கப்பட்டிருந்த கோப்பை மது முழுவதையும் பருகிவிட்டார். இவ்வாறாக பாபா ஒரு பக்தரை மீண்டும் குடிப்பழக்கத்துக்கு ஆளாகிவிடாமல் காத்தருளினார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 14, 2016

பாபா உன்னிடம் இருக்கிறார்"என் முன்னர் பக்தியுடன் தங்கள் கரங்களை நீட்டுவீர்களேயானால் உடனேயே நான் தங்களுடன் இரவும் பகலும் இருக்கிறேன். நான் இங்கு இருப்பினும் நீ ஏழ்கடலுக்கு அப்பால் செய்வதையும் நான் அறிவேன். உலகம் முழுவதும் நீ எங்கு வேண்டுமானாலும் போ, நான் உன்னிடம் இருக்கிறேன் ."
                                                                                 - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 13, 2016

என்னை நேசிப்பவர்கள்


                                                        https://youtu.be/hGVH2CrbdD4

( அயராத கண்காணிப்புடன் கூடிய ) எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 12, 2016

பாபா கடவுளே


1917 ம் ஆண்டு அக்டோபர் மாதம், பாபா பம்பாய் மாது ஒருவரிடம் பேசினார்.

பாபா : தாயே, என்ன வேண்டும் ? கேளுங்கள்.

மாது : பிறப்பு, இறப்பு எனும் சுழலிலிருந்து விடுபடவேண்டும்.

பாபா : ( நகைத்தவாறு ) இவ்வளவு தானா உங்களுக்கு வேண்டும்? என்ன! இறப்பதற்காகவா இங்கே வந்துள்ளீர்கள்?

மாது ( அதிர்ந்தவராக ) : பாபா ! தங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பாபா : நீங்கள் யார் என்பதை எண்ணிப்பாருங்கள்.

மாது : எனக்கு விளங்கவில்லை.

பாபா ( இம்மாதின் கணவரை சுட்டிக்காட்டி ) : அவர் உமக்கு சொல்லுவார்.

பின்னர் அம்மாது தான் கணவருடன் தங்குமிடம் சேர்ந்து, பாபா கூறியதன் பொருள் என்ன என அவரிடம் கேட்டார்.

கணவர் : பாபாவின் சொற்கள் மர்மமானவை. அவர் என்ன பொருளுடன் பேசினார் என்பது எனக்கு தீர்மானமாகத் தெரியாது. ஒருவேளை இம்மாதிரி இருக்கலாம். இறையுணர்வு பெறும் வரை ஜீவன் மீண்டும் மீண்டும் பல முறைகள் பிறவி எடுக்கிறது. பாபா கடவுளே, ஆனால் அவரைக் காணும் ஜனங்கள் பூரண விசுவாசம் கிடைக்கப் பெறாமல் அவரை கடவுள் என அறிவதில்லை. ஆகவே அவர்களுக்கு முக்தியும் கிட்டாது.

ஜீவனும் சிவனும் ஒன்றே என்பதை சாத்திரங்களிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும். உன்னை ஒரு ஜீவனாகவே கருதுகிறாய், அல்லவா ?

மாது : ஆம்.

கணவர் : பாபாவும் சாத்திரங்களும் கூறுவது உன்னை சிவம் அல்லது கடவுள் என உணர வேண்டுமென்பது.

மாது : இல்லை, இல்லை. நான் ஒரு அற்பமான பாபியாகிய ஒரு ஜீவனே, உயரிய தெய்வமான சிவனல்ல..

கணவர் : உன் உணர்வு அப்படி இருக்கலாம். ஆனால் தொடர்ந்து உன்னையே கடவுளாக எண்ணி வருவதால், நீ ஒரு அழியும் ஜீவனே என்று உன் மனதில் ஆழ்ந்து பதிந்திருக்கும் நம்பிக்கை அகன்றுவிடும் என்பது பாபாவின் கூற்று. இந்த வழிமுறை தொடர்ந்து, பல பிறவிகளிலும் இருக்கலாம். பின்பற்றப்பட்டும், உறுதிபடுத்தப்பட்டும், மகான்களுடைய தொடர்பினால் உதவப்பட்டும், நீ பிரம்மன் என்ற திடமான நம்பிக்கை உனக்கு ஏற்பட்டு விடும். பாபாவின் சொற்களின் பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

(தம்பதிகள் மீண்டும் துவாரகாமாயிக்கு திரும்பி வந்தனர்.)

பாபா : தாயே! ( இங்கிருந்தவாறே ) உம் கணவர் உம்மிடம் கூறியதை எல்லாம் நான் கேட்டேன். அதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

பாபா அடிக்கடி சொல்லுவார் " நாம் யார்? " இரவும் பகலும் இதை எண்ணிப் பார் என்று....

                                                        * ஜெய் சாய்ராம் *


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 11, 2016

பாபா உங்கள் வீட்டிலேயே உள்ளார்.நீ எப்படி இருப்பினும், என்ன செய்யினும், நான் உன்னுடன் இருப்பேன். உன் உள்ளும் இருப்பேன், புறத்திலும் இருப்பேன் ! எமக்கு உள்ளே வரவோ, வெளியே செல்லவோ கதவுகள் தேவையில்லை. எமக்கு உருவமே கிடையாது. நாம் எங்கும் நிறைந்துள்ளோம். எம்மிடத்தில் முழுவதும் சரணடைந்து, தம் செயல்களை எல்லாம் எம்மிடம் அர்ப்பணித்து வரும் பக்தனுடைய தேவைகள் யாவையும் யாமே கவனித்துக் கொள்கிறோம்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

 ( " மீ சாடே தீன் ஹாத் தேஹாமத்யே நாஹீம், சர்வ டிகாணீ ஆஹேம் சர்வ டிகாணீம் மலாஷாஹத் ஜா, " ) அதாவது, நான் ( பாபா ) இந்த மூணரை முழு சரீரம் அல்ல, நான் எங்கும் உளேன். ஒவ்வொரு இடத்திலும் என்னை காணுங்கள் என பாபா கூறியுள்ளார்.  பாபாவின் கிருபையை பெற , பாபாவை முழுமனதுடன் தியானித்து சாயிபாபாவுக்கு பிரேமையுடன் இதயத்தை அர்ப்பணிக்க வேண்டும். பாபாவிடம் பூரண சரணாகதி அடைந்தால், பாபா உங்கள் உள்ளும் புறமும், உங்கள் வீட்டிலேயே எப்போதும் இருப்பதை உணர்வீர்கள். பாபாவின் மீதான பக்தி வளர, ஷீரடி பயணம், ஷீரடி சுற்று சூழ்நிலை உதவக் கூடியதாயினும், ஷீரடிக்குச் சென்றுதான் பாபாவின் அருளைப் பெறவேண்டும் என்பதில்லை. புலனடக்கம் செய்து பாபாவை பக்தியுடன் தியானம் செய்தால் போதும். பக்தன்  எதையெல்லாம் பெற தகுதி படைத்திருக்கிறானோ அவை அனைத்தையும் பாபாவின் கிருபையால் நிச்சயம் பெற்றுவிடலாம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 10, 2016

பாபாவிடம் சரணாகதி அடை


என்னை சரணாகதி அடைந்தவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறாமல் போவது என்ற பேச்சே என் சங்கல்பத்தில் இல்லை. என்னை சரணாகதி அடைந்தவர்கள், துன்பத்தில் விழும் தருவாயில் எனது நான்கு கரங்களையும் கொடுத்து அவனை மேல எழசெய்வேன், என்றும் அவனை கண் இமை காப்பது போல் காப்பேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil


Saturday, July 9, 2016

பாபாவை நினைவில் கொள்


நீ எந்த காரியத்தை செய்து கொண்டிருந்தாலும், எங்கிருந்தாலும், எதைச் செய்தாலும் என்னையே நினைவில் நிறுத்தி உன் வேலையைச் செய். அதை நான் வெற்றியடையும் படி செய்வேன்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 8, 2016

இகழ்ந்து பேசாதேநீ யாரைப் பற்றியாவது இகழ்ந்து பேசினாலோ, யாரிடமாவது குற்றம் கண்டாலோ, அக்கணமே நான் வலியை அனுபவிக்கிறேன்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 7, 2016

உனது கர்மவினைகள் எரிக்கப்படும்


உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும். ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால், எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதைப் போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 6, 2016

ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீவல்லபர்ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீவல்லபர்


ஆதி குரு ஸ்ரீ குருதேவதத்தர். பிரம்மா விஷ்ணு சிவனின்  அவதாரமே ஸ்ரீ தத்தர். குருவிற்க்கெல்லாம் குருவானவர். எப்போதும்வாழும் அவதாரமும் ஆவார். குருபரம்பரை என்பது  தத்தாத்திரேயரின் அவதாரத்துக்குப் பிறகேதோன்றின.அவரே குரு பரம்பரை என்பது துவங்க வழி வகுத்தார். திருமூர்த்திகளின் அவதாரமான அவரே குருக்களுக்கு எல்லாம்குருவான சத்குரு ஆவார்.  இந்த பூமியில் குரு மற்றும் சிஷ்யர்களுக்கு இடையே எப்படிப்பட்ட  உறவு  இருக்க வேண்டும், ஒரு குருவின்மூலமே மக்களின் மன நிலையை ஆன்மீக வழியில் செலுத்திகலிகாலத்தில் கலியின் தாக்கத்தின ல் விளையும் தீமையை எப்படிஅழிக்க வேண்டும் போன்றவற்றை  நடைமுறையில் எடுத்துக்காட்டவே தத்தாத்திரேயர் தாமே ஒரு குருவாக பல அவதாரங்களைஎடுத்துக் காட்டி உள்ளார்.  தத்தாத்திரேயரே ஸ்ரீ பாத ஸ்ரீவல்லபாவாகவும், ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளாகவும்,ஸமர்த்த ஸ்வாமிகளாகவும், ஷீரடி சாயிபாபா, மானிக் பிரபு போன்றபல ரூபங்களில் தோன்றி முதல் குரு பரம்பரையை உருவாக்கினார்.


ஸ்ரீ தத்தாத்ரேயரின் முதல் அவதாரம் ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீவல்லபர் ஆவார். அவருடைய வாழ்க்கையைப் பற்றி வெளிஉலகிற்கு தெரிந்துள்ள விபரங்கள் மிக குறைந்த அளவே ஆகும்.

கி.பி. 1320 ஆண்டு  ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் ப்ரம்மஸ்ரீ கண்டிகோட்டா  அப்பலராஜ சர்மா அவர்களுக்கும் அகண்ட லக்ஷ்மி சௌபாக்யவதி சுமதி மஹா ராணிக்கும் மூன்றாவது குழந்தையாக ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிதாபுரம் என்னும் ஊரில் பிறந்தார்.
ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் தான் பிரபஞ்சத்திலிருக்கும் ஸ்தாவர, ஜங்கம வஸ்துக்கள் அனைத்திற்கும் மூல காரணம். அவர் ஒரு ஆலமரம் போன்றவர். அவரது துணை, அம்ச/பின்ன அவதாரங்கள் அந்த மரத்தின் கிளைகள் போன்றவையாகும். ஆலமரத்தின் வேர்கள் கிளைகளிலிருந்து தலைகீழாக தோன்றினாலும் தாய் மரமே எல்லாவற்றிற்கும் அடிப்படையாகும். தேவர்கள் முதல் பூத பிசாசுகள் வரை உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அவரே அடைக்கலம் கொடுப்பவர். புகலிடம் கொடுப்பவர். அனைத்து சக்திகளும் அவரிடமிருந்தே தோன்றி அவரையே தஞ்சம் புகுகின்றன.
அநேக ஜென்மங்களில் செய்த பாவங்கள் ஒழிந்த பிறகு புண்ணியங்கள் பலன் கொடுக்கத் துவங்கும் பொழுது தான் ஒருவருக்கு தத்தரிடம் பக்தி பிறக்கும். தத்தரிடம் பரிபூரண பக்தி ஏற்படும்பொழுது  ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர் தரிசனம், தொட்டு ஆசிர்வதித்தல், பேசுதல் இவற்றால் அருட்ச் செல்வத்தை எந்த வயதிலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பெறலாம்.

ஸ்ரீ ஸ்ரீபாதர் சத் புருஷர்களுக்கு  எளிதாக கிடைக்ககூடிய தங்கச் சுரங்கம். பாவம் செய்பவர்களுக்கோ, தர்மத்தை மீரியவர்களுக்கோ அவர் ஒரு யமதர்மராஜா மாதிரி. ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபரின் பெயரைச் சொன்னாலேயே, நாம் உறுதியாக அவரது அருளைப் பெறலாம். நாம் அனைத்து துன்பங்களிலிருந்தும் இழப்பிலிருந்தும் விடுதலை பெறலாம்.  

ஸ்ரீ பாதரின் பக்தர்களுக்கு ' முடியாத காரியம் ' என்று ஒன்று இல்லவே இல்லை. நெற்றியில் எழுதியுள்ளத் தலை எழுத்தை மாற்றி எழுதும் வலிமை வேறு எந்த தெய்வத்துக்கும் இல்லை. அனால் ஸ்ரீ தத்தாத்ரேயரின் அவதாரமான ஸ்ரீ ஸ்ரீபாதர், தன் பக்தனின் துன்பத்தைக் கண்டு மனம் இறங்கி பிரம்மாவை அவன் தலை எழுத்தை அழித்துவிட்டுப் புதிய தலையெழுத்தை எழுதுமாறு உத்தரவிடுவார்....
."இன்று என் பக்தன் இறக்க வேண்டிய நாளாகும். நான் அவனது ஆயுளை மேலும் இருபது ஆண்டுகள் நீட்டித்துள்ளேன். இந்த முடிவை அவனுடைய பக்தியின் காரணமாக அளிக்கிறேன் ."- ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர்.


ஸ்ரீ பாதரின் சத்திய வார்த்தைகள் சில...

*  நானே அனைத்து ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் வடிவம் ஆவேன்.
* என் செயல்கள் யாவும் உங்கள் குணம் சத்கர்மா, பாவ புண்ணியங்களுக்கு  ஏற்பவே அமையும். என்னை முழுமையாக சரணடைந்த பக்தனை நான்  ஒருபோதும் கை விடமாட்டேன். வெகுதூரத்தில் வசிக்கும் என் பக்தனையும்    என் ஷேத்திரத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்து வந்து விடுவேன். ரிஷி  மூலம் நதி மூலம் கேட்கக் கூடாது.
* நான் தான் ஸ்ரீ தத்தாத்ரேயர். என் தத்துவம் மட்டுமே கோடான கோடி  அண்டங்களில் வியாபித்து உள்ளது. திசைகளே எனக்கு ஆடைகள். நான் ஒரு  திகம்பரர். எவனொருவன் உடல் மனம் சொல் தூய்மையுடன் " தத்த திகம்பரா!  ஸ்ரீபாத ஸ்ரீ வல்லப  திகம்பரா! நரசிம்ம சரஸ்வதி திகம்பரா ! " என்று  கூறுகிறானோ அங்கு நான் சூக்ஷ்ம ரூபத்தில் இருப்பேன்.
* எவனொருவன் நான் பிறந்த புனிதமான வீட்டில் தங்குகிறானோ அவன் நிச்சயமாக பரிசுத்தனாக மாறிவிடுவான். அவனின் முன்னோர்கள் புண்ணிய லோகங்களை அடைவார்கள் .
* பல்வேறு பிறவிகளில் செய்த புண்ணியத்தின்  விளைவாகவே ஒருவன் பீடிகாபுர அக்ரஹாரத்தில் அடியெடுத்து வைக்கிறான்.
என்னுடைய சக்தியைத் தெரிந்துக்கொள்ள முதலில் நீங்கள் ஆன்மீகத் தேடுதலில் தீவிர ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும். அதன் பின்னரே என் சக்தி, இரக்கம், கருணை, அன்பு, பாதுகாப்பு, நான் பாவங்களிலிருந்து மீட்பதை நன்கு தெரிந்து கொள்ள முடியும்.
* நீங்கள் அனைவரும் என் விருப்பப்படியே அந்த அந்த நிலையில்  இருக்கிறீர்கள். நான் நினைத்தால் ஆண்டியையும் அரசனாக்குவேன்.  அரசனை ஆண்டியாக்குவேன். என்னை நம்பியுள்ள பக்தனுக்கு அவன் என்ன  கேட்டாலும் தருவேன். நான் 'தேவை' என முடிவு செய்து விட்டால்    மண்ணையும் விண்ணாக்குவேன். விண்ணையும்  மண்ணாக்குவேன்.
* என்னுடையவன் என எனக்கு யாரைப் பிடிக்குமோ அவனை தலை முடியைப்  பிடித்து பீடிகாபுரத்திற்கு இழுத்து வந்து விடுவேன். என்னுடைய விருப்பம்  இன்றி எவரும் என் பீடிகாபுரம் சமஸ்தானத்திற்கு வர இயலாது. அவர்  எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் மிகப் பெரிய யோகியாக இருந்தாலும்  சரி. இது உறுதியான சத்தியமாகும். நான் மட்டுமே யார் எப்பொழுது எத்தனைப்  பேராக எந்த மாதிரி பயணம் செய்து என்னை தரிசிக்க வரவேண்டும் என்பதை  முடிவு செய்வேன்.அது என் விருப்பமே.
* இந்தப் பிரபஞ்சப் படைப்பில் ஒவ்வொரு மனிதனும் ஒரு கூலிக்காரன்தான்.    நான் தான் முதலாளி. நான் மகிழ்ச்சியடைந்தால் உங்களுக்கு உரியதைவிட  மிக மிக அதிகமாகவே தருவேன். நான் கோபம் அடைந்தால் எவ்வளவு  குறைத்துக்கொண்டு மிதத்தை மட்டும்  தான் தருவேன்.
 மனமுருகி நான் பாவங்களிலிருந்து விடுபட்டவன் என உணர்ந்து, என்னை  அடைக்கலம் அடைந்து என்னை அன்புடன் , தத்த திகம்பரா ! ஸ்ரீபாத வல்லப  திகம்பரா ! என்ற அழைத்தால் அந்தச்   க்ஷ்ணத்திலிருந்தே உங்களது  பாவங்களை எரித்துப் பொசுக்கி உங்களை புண்ணியவான் ஆக்குவேன்.
* நான் என்னுடைய பக்தர்களுக்கு தாசானுதாசன் ஆவேன். என்னை தன்    மனதில் சிறை பிடிப்பவனே மிக மிகச் சிறந்த சக்ரவர்த்தி ஆவான்.  அப்படிப்பட்ட பக்தனுக்கு மூவுலகங்களையும் ஆளும் ஸ்ரீ பரமேஸ்வரனே கூட  வேலைக்காரன் போலச் சேவை செய்வார்.
* நான் ஒருவனே அனைத்து தர்மங்கள் மதங்கள் தத்துவங்கள் அனைத்திலும்  சுயமாகப் பிராகாசிப்பவனாவேன். அனைத்து தெய்வங்களிலும் தெய்வீக  சக்திகளிலும் நுணுக்கமாகப் பிரகாசிப்பவன் நானேயாவேன். நான் ஒருவனே  உங்கள் அனைவரின் வேண்டுதல்களையும் பிரார்த்தனைகளையும் அந்தந்த  உருவங்களின் மூலம் பெற்றுக் கொள்பவன் ஆவேன். நான் ஒருவனே தான்  அனைவருக்கும் அருள் பாலிப்பவன்.
* என் புனித வரலாற்றை (ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப சரித்ராம்ருதம் ) படித்தால் ஆசைகள் நிறைவேறும். எல்லாத்  தடைகளும் விலகும். இந்த சரித்ராம்ருதத்தை ஒரு சராசரிப் புத்தகம் என்று  நினைத்துக் கொள்ளாதே. இது ஒரு தெய்வீகச் சைத்தன்யத்தின் உயிருள்ள  சக்திப் பிராவகம் ஆகும். நீ பக்தியுடன் இதைப் பாராயணம் செய்யும்போது  அந்த எழுத்துகளின் வலிமையானது என்னுடைய மானசீக  சைத்தன்யத்திற்குள் பாயும். உனக்கு தெரியாமலேயே உனக்கு என்னுடன்  ஒரு தொடர்பு எற்பட்டுவிடுவதால் உன்னுடைய நியாயமான கோரிக்கைகள்,  பிரார்த்தனைகள் ஆசைகள் அனைத்தும் என்னுடைய கருணையால்  நிறைவேற்றப் பட்டுவிடும். இந்த புத்தகத்தை பூஜை ஆறையில்  வைத்திருந்தால் துரதிர்ஷ்டமும் தீய சக்திகளும் அங்கிருந்து  துரத்தி  அடிக்கப்பட்டுவிடும்.ஷீரடி சாயி அவதரித்தல்
ஹனுமனுக்கும் ஸ்ரீபாதருக்கும் நடந்த உரையாடல்;

ஸ்ரீபாதர் ; நீ கோடி கோடியாக இராம நாமாக்களை ஜெபித்துக் கொண்டிருக்கிறாய். ஆகையால் நீ காலத்தைக் கடந்தவன். நீ ' காலத்மகன்' ஆகிவிட்டாய். நீ ஒரு முறை கலியுகத்தில் அவதாரம் செய்ய வேண்டும். புலன்கள் ஆசையை அடக்க வல்லவனாய் இருப்பதால் ' சாயி' என்ற பெயரால் நீ புகழ்பெற்று விளங்குவாய்.

ஹனுமன் ; பிரபோ ! உடல் ரீதியாகவோ நான் உங்களுக்கு ஒரு சேவகன் தான். உயிர் சக்தியின் அடிப்படையால் நான் உங்களின் ஒரு பகுதியே ஆவேன். ஆத்மாவின் நோக்கில் நானே நீயாவேன். ஆகையால் நான் எந்த ரூபத்தில் அவதரிக்க வேண்டும் என்று கூறுங்கள்.

ஸ்ரீ பாதர் ; சிவனின்  மூலத்திலிருந்து நீ தோன்றியிருந்தாலும் நீ இராம பக்தனாகிவிட்டாய். அரபு மொழியில் "அல்" என்றல் சக்தி என்று பொருள்.ஆஹா என்றால் சாக்த, சக்தியை தாங்குபவன் என்று பொருள். ஆகையால் " அல்லாஹ்" என்பதன் பொருள் சிவனும் சக்தியும் சேர்ந்த ரூபமாகும். ஆகையால் இனிமேல் என்னை சிவ சக்தியாக " அல்லாஹ் " என்று பெயரை கூறுவதன் மூலம் பிற நாட்டவரும் ஏற்று கொள்ளும் வகையில் அழைத்து பூஜிப்பாயக.

ஹனுமன் ; நான் எடுக்கவிருக்கும் அம்சாவதரமானது இடைவிடாது எப்பொழுதும் மூலதத்துவமாகிய உம்முடன் தொடர்பு கொண்டும் அந்த பழைய மூல தத்துவம் பெற்றிருக்கும் அனைத்து வளங்களையும் சக்தியையும் பெற்றிருப்பதாகவும் இருக்கவேண்டும்  என்று வேண்டினார்.

அதற்கு ஸ்ரீ பாதர். " என் அருமை ஹனுமனே! நீ மிகவும் புத்திசாலி . என்னுடைய அனைத்து சக்திகளும் என்னுடைய அனைத்து வகையான சிறப்புகளும் உன்னுள்ளும் விளங்கட்டும்.  நான் கதலி வனத்தில் ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதியின் உடலில் மறைந்து 300 ஆண்டுகளுக்கு யோகா சமாதியில் இருப்பேன். பின்னர் நான் சுவாமி சமர்த்தர் என்ற பெயரில் ப்ரஞாபூரில் அவதரிப்பேன்.என்னுடைய பூத உடலை நீக்கும் சமயம் வரும்போது நான் உன்னுள்  " சாயி"யாக அவதரிப்பேன்.  என் அவதாரம் உன்னுள் உள்ளதாக பகிரங்கமாக அறிவிப்பேன்.  நீ என்னுடைய சர்வ சமர்த்த சத்குரு அவதாரமாகப் புகழ் பெருவை என்று கூறினார்.

பின்னர் ஹனுமன் பணிவுடன் " பிரபுவே ! உடல் ரீதியான நிலையிலிருந்து பார்க்கும் போது நான் உங்கள் சேவகன். ஆகையால் நான் ' அல்லா மாலிக்' என  பெயர் சொல்லிக் கொண்டு திரிவேன் . உங்களுடைய பேரொளியின் ஒரு பொறியைக் கொண்ட குரு ரூபமாக நான் விளங்குவேன். ஆனால் அது சாக்ஷாத் ஸ்ரீ பாதர் அல்ல. நம்மிருவரிடத்தில் இந்த வேறுபாடு தேவைதானா ? தயை கூர்ந்து என்னை ஸ்ரீ தத்தாத்ரேய ஸ்வரூபமாக உருமாற்றம் செய்து மாற்றி விடுமாறு  கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
பின்னர் ஸ்ரீபாதர், கால புருஷனை தன் முன் வருமாறு உத்தரவிட்டார்.  " கால புருஷரே! இந்த ஹனுமனை நான் என்னுடன் ஐக்கியமாக்கி கொள்ள விரும்புகிறேன். அவருக்கு ' நாத்' என்ற பட்டத்தையும் அளிக்கிறேன். ஆகையால் இவர் " சாயி நாதர்" என்ற பெயராலேயே அழைக்கப்படுவார். ஹனுமனில் உள்ள சைதன்ய அறிவானது ஏற்றபடி உருமாற்றமடைந்து  சாக்ஷாத் தத்தாத்ரேய ஸ்வரூபமாக மாற வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

மேலும் ஹனுமனிடம், உன் மனதை எப்பொழுதும் என் நினைவிலேயே ஒன்றி வைத்திருப்பாயாக ! உனக்கு குருவாக ' கோபால்ராவ்' என்பவர் அளிக்கப்படுவார். அவர் ஒரு வெங்கடேஸ்வர பக்தராக ' வெங்குசா ' என்று அழைக்கபடுவார் என்றார்.

ஸ்ரீ ஸ்ரீபாதர் தன் பக்தர்களுக்கு அளித்த பன்னிரண்டு வாக்குறுதிகள் .

1. என் வாழ்க்கை சத்சரித்திரத்தை பக்தியுடன் படிக்கும் ஒவ்வொரு இடத்திலும் நான் சூக்ஷ்ம ரூபத்தில் இருப்பேன்.

2. மனம், சொல், செயல் இவற்றால் என்னை பக்தியுடன் சரண் அடைந்தவனை நான் கண் இமை கண்ணைக் காப்பது போலக் காப்பேன்.

3. தினமும் மதியம் பீடிகாபுரத்தில் நான் பிக்ஷை எடுப்பேன். என் வருகை ரகசியமானது.

4. என்னை இடைவிடாது தியானிப்பவர்களின் அனைத்து கர்மக் குவியல்களையும் எரித்து சாம்பலாக்கிவிடுவேன். பல்வேறு ஜென்மங்களில் சேர்த்து வைத்திருந்த கர்மாக்களையும் எரித்துப் பொசுக்கிவிடுவேன்.

5. " ஓ ! ராமச்சந்திரா! சாப்பாடு போடு!" என்று பிக்ஷை கேட்பவருக்கு உணவு அளித்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

6. நான் ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் ! ஸ்ரீ மஹாலக்ஷ்மி அனைத்து சொவ்பாக்யங்களுடன் என் பக்தர்கள் வீட்டில் பிரகாசமாக ஜொலிப்பாள்.

7. உங்கள் மனம் தூய்மையாக இருந்தால் என் அருள் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு.

8. எந்த ஒரு கடவுளை வழிபட்டாலும், எந்த ஒரு சத்குருவின் வழி  நடந்தாலும் எனக்கு சம்மதமே.

9. உங்களின் அனைத்து பிரார்த்தனைகளும், வேண்டுதல்களும் ,என்னை வந்தடையும். என்னுடைய அருளானது உங்களுக்கு நீங்கள் வழிபடும் தெய்வம் வழியாகவோ, உங்களுடைய சத்குருவின் வழியாகவோ உங்களை வந்தடையும்.
10. ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் இந்த பெயருக்கும் உருவத்திற்கும் மட்டுமே கட்டுப்பட்டவர் அல்ல. என்னுடைய தெய்வீக விஸ்வ ரூபத்தை அனைத்து தெய்வங்களின் உருவமாகவும் என் உடல் பகுதிகளை அனைத்து சக்திகளாகவும் ஆன்மீக யோக சாதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

11. என்னுடையது அவதாரம் முழுமையான யோக அவதாரமாகும். மிகச் சிறந்த யோகிகளும், சித்தர்களும் என் மீது இடைவிடாது தியானம் செய்து கொண்டிருப்பார்கள்.

12. என்னுடைய ஆதரவை நாடினால் நான் உங்களுக்கு தர்மத்தின் வழியையும் கர்மத்தின் வழியையும் போதிப்பேன். உங்களை எப்பொழுதும் வீழ்ச்சியிலிருந்தும் துன்பத்திலிருந்தும் காப்பாற்றுகிறேன்.

                             ஸ்ரீ பாத ராஜம் சரணம் பிரபத்யே !

                 திகம்பரா திகம்பரா ஸ்ரீ  பாத ஸ்ரீ வல்லப திகம்பரா!

( இந்த மந்திரத்தை எப்பொழுதுவேண்டுமானாலும்  ஜெபித்தால் எல்லா துக்கங்களும் பாபங்களும் அழிந்து போய்விடும்)http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 5, 2016

பாபா எப்போதும் உன்னுடன் இருக்கிறார்.


ஒரு அடியவரை பாபா ஏற்றுக் கொண்டால், அவரை அவர் தொடர்கிறார். இரவும், பகலும், வீட்டிலும் வெளியிலும் அவருடனேயே இருக்கிறார். அவர் விரும்பியவாறு  எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். அறிவுக்கெட்டாத வகையில்  எதாவது  ஒரு ரூபத்தில் அவருக்கு முன்பாகவே சென்று பாபா அங்கு இருக்கிறார்.- ஸ்ரீ சாய் சத்சரித்திரம் 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 4, 2016

நாயும் நோய்வாய்ப்பட்ட சூத்திரனும்
ஒரு தினம் பாபாவின் பக்தரான காசிநாதர் ( உபாஸனி மஹராஜ் ) கந்தோபா ஆலயத்தில் ஆகாரம் தயார் செய்து கொண்டிருந்தபோது ஒரு கருப்பு நாய் அதை ஆவலுடன் உற்று நோக்கிக் கொண்டிருந்தது. தயார் செய்த ஆகாரத்தை பாபாவுக்கு சமர்ப்பித்து விட்டுப் பின்னர் பிரசாதமாக எடுத்துக் கொள்ள, காசிநாதர் மசூதியை நோக்கிச் செல்லலானார்.

அப்போது அந்நாய் அவருடன் சற்று தூரம் பின் தொடர்ந்து வந்து பின் மறைந்தது. பகவானுக்கு நிவேதனம் செய்யும் முன்பு ஒரு ஈன ஜந்துவான நாய்க்கு ஆகாரமளிப்பது சாஸ்திர விரோதம் என்று அவர் கருதினார்.

பட்டப் பகல் வெய்யிலில் மசூதியை அடைந்த அவரை,

பாபா ; எதற்காக இங்கு வந்தாய் ?

காசிநாதர் ; தங்களுக்கு நைவேத்தியம் தயார் செய்து கொண்டு வந்திருக்கிறேன்.

பாபா : நீ என் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டும்? நான் அங்கேயேதானே இருந்தேன் !

காசிநாதர் ; அங்கு ஒரு கருப்பு நாயைத் தவிர, வேறொருவரையும் பார்க்கவில்லையே ...

பாபா : அந்த கருப்பு நாய் நானே. நீ அங்கு உணவு அளிக்க மறுத்தமையால், இங்கும் நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

மனம் நொந்து திரும்பிய காசிநாதர் மறுதினம் அத்தவறு நடக்காமலிருக்க வேண்டும் என சங்கல்பம் செய்து கொண்டார். மறுதினம் ஆகாரம் தயார் செய்து கொண்டிருக்கும் போதே அந்த நாய் எங்காவது தென்படுகிறதாவென்று பார்த்தார். காணவில்லை. ஆனால் நோய்வாய்ப்பட்டு மெலிந்த சூத்திரன் ஒருவன் அங்கே சுவற்றில் சாய்ந்து கொண்டு அவர் ஆகாரம் தயார் செய்வதை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

வைதீக பிராம்மணரான அவர் தாம் சமைக்கும் ஆகாரத்தை சூத்திரன் ஒருவன் பார்ப்பதால் திருஷ்டி தோஷம் வந்துவிடும் எனக் கருதி அவனை அங்கிருந்து விரட்டவே, அவன் போய்விட்டான்.

ஆகாரத்தை எடுத்துக் கொண்டு பாபாவின் முன் சென்றார் காசிநாதர்....

பாபா ( மிகுந்த கோபத்துடன் ) :  நேற்றும் எனக்கு உணவளிக்கவில்லை. இன்றும் விரட்டிவிட்டாய் .

காசிநாதர் : ஆ ! தாங்களா அந்த நோய்வாய்ப்பட்ட சூத்திரன் ?

பாபா : ஆம் ! எல்லாவற்றினுள்ளும், அவற்றைக் கடந்தும் வியாபித்து நிற்கிறேன்.

" இங்கு நீங்கள் பார்க்கும்  மூன்று முழ சரீரம் தான் சாயி  என்று நினைத்துவிடாதீர்கள்.எனது உண்மையான பக்தன் எல்லா இடங்களிலும் எனது இருப்பை உணர்வான்.எல்லா உயிர்களிலும் என்னை காண்பான்.-    ஸ்ரீ ஷீரடி சாய்பாபா "

         

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 3, 2016

பாபா ஒருவராலேயே வழி நடத்த முடியும்
தேகத்துடன் இருந்தபோதும், தேகத்தை விடுத்த பின்னரும் (மஹா சமாதிக்குப் பின்) 'நிராகார'ராக ( அருவமாக ) இருந்தும், எந்த வேளையிலும் அவர் 'ஸகார'ராகவும் ( உருவத்துடனும் ) இருக்க முடிந்தது.  இவ்வாறாக பாபா, உடலுடன் இல்லாவிடினும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டான  குருவாக தமது பக்தர்களுக்கு திகழ்கிறார். அவருடைய பழைய, புதிய பக்தர்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர் தமது பழைய திருவுடன் தோன்ற முடிகிறது. தோன்றியும் வருகிறார். உடலுடன் இல்லாத ஒருவர் தங்களுக்கு ஏற்றவரல்ல என பலர் எண்ணினார்கள், எண்ணுகிறார்கள். ஆனாலும் பாபாவின் திருவருளால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களை ( நாம் எல்லோருமே ), தமது சரணங்களை நோக்கி வருமாறு பாபாவால் இழுக்கப்பட்டு வருகின்றனர்.

பாபாவின் செயல் வெளிப்படையானதோ அல்லது காரணங்களை விளக்கி வாதிப்பதோ அல்ல; பேச்சில்லாத, கண்ணுக்குப் புலப்படாத உட்புறமானதொரு தாக்கம். எல்லாவிதமான குறைகாணும் மனப்போக்கையும் அகற்றி, அறவே எல்லா சுவடுகளையும் துடைத்து, பதிலுக்கு ஒரு பணிந்து போகும் மனப்பாங்கை தோற்றுவிக்கிறது. அந்த வினயம், " நான் ஒரு புழுவே, தாங்களே சர்வ சக்திமான், கருணாமூர்த்தி, காத்தருளவேண்டும், என் பாதையை ஒளிமயமாக்குங்கள். தங்கள் கரங்களிலே அடியேனை ஒரு ஆதரவற்ற குழந்தையாக எடுத்துக்கொண்டு, தங்கள் சங்கல்பப்படி செய்யவேண்டும் " என இறைஞ்சும். அந்த கண்முன் தோன்றா குரு ஜீவித்துள்ளார், சக்தி படைத்தவர், இலக்கை நோக்கி அவரே வழிநடத்துவார் ( பாபா ஒருவராலேயே வழி  நடத்த முடியும் ) என்ற உணர்வு அம்மனிதனின் உள்ளத்தில் தோன்ற ஆரம்பிக்கும் நிலை அது. அத்தகைய ஒருவருடைய முந்தைய குருமார்கள்,அவரை அந்த அளவு உணர்வு பெறச் செய்ததில்லை. பாபா அந்த பக்தனை மேலே உயர்த்தி, தம்மை பல வடிவங்களில் தோன்றும், பல பெயர்களால் அழைக்கப்படும் ஒரே ஸ்வரூபம் அல்லது ஆதாரசக்தி எனக் கண்டுகொள்ளும்படி செய்துவிடுகிறார்.

                                               *   ஜெய் சாயிராம் *
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 2, 2016

பாபாவே தெய்வம்
ஜி. ஜி. நார்கே, இங்கிலாந்தில் கல்வி பயின்ற முதுநிலை பட்டதாரி. பாபாவின் பக்தரான இவர் ஒருமுறை, ' பாபா ஒரு மனிதனே, தெய்வம் ஆகமாட்டார் ' எனக் கூறினார். இது பாபாவிடம் தெரிவிக்கப்பட்டது. லௌகீக நோக்கிலிருந்து அந்த கற்றறிந்த அறிவாளி கூறியது உண்மையே என  பாபா எடுத்துரைத்தார். அதாவது, பாபாவின் உடலை நீ பாபா என குறிப்பிட்டால், அது ஒரு மனித உடல், ஆகவே, பாபா ஒரு மனிதன் என்று சொல்வதில் தவறு எதுவுமில்லை. ஆனால், குறிப்பாக பாபாவிடமிருந்து தெய்வீகமான உதவியை எதிர்பார்க்கும்போது , அவரை ஜனங்கள் ஒரு மனிதனே என எண்ணிவிடுவது மிகப் பெரிய தவறு. மனித உடலின் அவயங்களான சதைகள், நரம்புகள், எலும்புகள் ஆகியவற்றிலிருந்து வரக்கூடியது அல்ல தெய்வீக உதவி; அது வருவது உள்ளே உறையும் ஆத்மாவிடமிருந்து, அந்த ஆத்மா தெய்வத்தன்மை வாய்ந்தது. ஆகவே தான் பாபா அவர்களிடம் கூறினார்.

" நீங்கள் அவ்வாறு பேசக்கூடாது. ( அதாவது நான் ஒரு பௌதீகமான மனிதப் பிறவியியே என ). ஏனெனில், நானே உங்கள் தந்தை, உங்கள் தேவைகளை எல்லாம் எல்லாம் நீங்கள் என்னிடமிருந்து பெறவேண்டியுள்ளது " 

பாபாவை தெய்வீகமாக பாவித்ததாலேயே, பல பக்தர்கள் பாபாவின் தடையில்லா அன்பையும், பாதுகாப்பையும், தேவைகளையும் பெற முடிந்தது;  அதாவது நாம் நினைவில் கொள்ளவேண்டியது அவரிடமுள்ள தெய்வீகத்தன்மையை; நிவாரணம் பெற வேண்டுமானால் மனித சரீரத்தை ஒதுக்கி அறவே மறந்துவிடவேண்டும். ஆகவே அவர்கள் காணும் மூணரை முழு உடலல்ல சாயிபாபா என்பது; அந்த உடலுக்குள் குடி கொண்டுள்ள பரமாத்ம  ஸ்வரூபம், அந்த உடலை விட்டு எத்தனை தொலைவிலிருந்தாலும் இயங்க வல்லது, அதுவே பாபா என பாபா அவர்களுக்கு எடுத்துக் காட்டினார். ஷீரடியில் அமர்ந்தவாறே ஆயிரம் மைல்களுக்குப்பால் உள்ள மாந்தரை வசப்படுத்தக்கூடியதும், சாகுந்தருவாயில் இருப்பவர்களின் ஆவிகளை தம்மிடம் வரவழைத்து தேவையான நல்ல கதி  கிடைக்கச் செய்யக்கூடியதுமான  சக்தி தம்மிடம் இருப்பதை பாபா வெளிப்படுத்தினார். இந்த ' பாபா சக்தி' யையே நாம் பாபா என அழைக்கின்றோம்.

                                                       * ஜெய் சாயிராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 1, 2016

பூரண சரணாகதி


எனக்கு தெரிந்தது ஒன்றே, என் குரு போதித்த சத்யம். பற்பல சாதனைகளும், புத்தகங்களும் தேவையில்லை. தேவையானது குருவிடம் பூரண சரண், பூரண பிரேமை  - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...