Wednesday, August 31, 2016

செயல்கள் அனைத்தும் வெற்றியடையும்பாபாவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர்  தூயவரானாலும் சரி, கபடரானாலும் சரி, கடைசியில் கரையேற்றப்படுவார். செயல் புரியும் கடமை மாத்திரம் என்னுடையது; பலனை அளிப்பவர் 'எல்லாம் வல்ல சாயிபாபா' என்னும் திடமான நம்பிக்கை எவரிடம் உள்ளதோ, அவருடைய செயல்கள் அனைத்தும் வெற்றியடையும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 30, 2016

குருபக்தி

தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும். 

உதாரணத்திற்கு, பாபாவின் நெருங்கிய பக்தரான சாமாவை ஒருமுறை நச்சுப் பாம்பு ஒன்று கடித்துவிட்டது. வலி கடுமையாக இருந்தது. விஷம் மெல்ல உடல் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது. சாமாவும் பயத்தில் மிரண்டு போயிருந்தார். உடல் முழுவதும் சிவந்து போயிருப்பதைப் பார்த்த அருகிலிருந்தவர்களில்  ஒவ்வொருவரும் மருத்துவரிடமும் செல்லவும், விரோபா கோயிலுக்கு (பாம்பு கடித்தவர்களை இக்கோயிலுக்கு  சென்றால், உயிர் பிழைத்து விடுவதாக ஷிர்டி மக்கள் நம்பினர்) செல்ல சொன்ன போதும் சாமா " எனக்கு எல்லாமே பாபாதான். அவரிடமே நான் செல்ல விரும்புகிறேன். ஒருவேளை எனது உயிர் போவதாக இருந்தாலும் அது எனது ஒரே அடைக்கலமான பாபாவின் மசூதியிலேயே போகட்டும் என்று கூறி அழுதபடி பாபா வாழ்ந்து வந்த மசூதிக்கு (துவாரகாமாயி) ஓடிச் சென்று பாபா பாதத்தில் வீழ்ந்து பணிந்தார் (உயிர் பிழைத்தார்) இதற்குப் பெயர் தான் குருபக்தி.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 29, 2016

பாபாவுக்கு சமமானவர் எவரும் இல்லை.எவர் எனக்கு சமமானவர் என்று எவரையும் அரியமாட்டாரோ, எவர் எனக்குப் பின்னரே பசியாறி தாகம் தீர்த்துக்கொள்கிறாரோ, அவரையே நான் எப்பொழுதும் தியானத்தில் வைக்கிறேன்; நான் அவருடைய ஆதீனத்தில் வாழ்கிறேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil


Sunday, August 28, 2016

முழுமையான பக்தி


"சாயி சாயி"என்று எப்போதும் கூறிக் கொண்டிருப்பீர்களானால் நான் உங்களை ஏழு கடலுக்கு அப்பால் எடுத்துச் செல்வேன். இம்மொழிகளை நம்புங்கள். நீங்கள் நிச்சயம் நன்மையடைவீர்கள். வழிபாட்டின் உபசாரங்கள் எட்டோ பதினாறோ எனக்கு தேவையில்லை. எங்கு முழுமையான பக்தி இருக்கிறதோ அங்கு நான் அமர்கிறேன். - ஸ்ரீ சாயி  சத்சரித்திரம் [அத்தியாயம்13]


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 27, 2016

ஜோதிட பூர்வமான தடைகளையும் மீறி புத்திரப்பேறு அருளினார்


ஹர்தாவைச்  சேர்ந்த சிந்தே என்பவருக்கு ஏழு புத்திரிகள், ஒரு புத்திரன் கூட இல்லை.1903-ம் ஆண்டில் அவர் கங்காபூருக்குச்  சென்று ஒரு புத்திரனை வேண்டி தத்தரிடம் பிரார்த்தனை செய்து கொண்டார். 12 மாதங்களுக்குள் ஒரு மகன் பிறந்து விட்டால், குழந்தையுடன் தரிசனம் செய்ய கங்காபூருக்கு வருவதாக நேர்ந்து கொண்டார். அவருக்கு 12 மாதங்களில் மகன் பிறந்தான்; ஆனால்  அவர் குழந்தையை எடுத்துக் கொண்டு கங்காபூருக்கு  செல்லவில்லை. 1911-ம்  ஆண்டு நவம்பர் மாதம் அவர் ஷிர்டிக்கு  பாபாவிடம் வந்தார்.
பாபா : என்ன! திமிறு  ஏறி விட்டதா உனக்கு? உன் பிராரப்தத்தின்  படி (விதிப்படி)உனக்கு ஏது ஆண் குழந்தை? நான் இந்த உடலை (தமது உடலைக் காட்டி) கிழித்து உனக்கு ஒரு ஆண் மகவு அளித்தேன்.

பாபாவின் மற்றொரு அடியவரான தாமோதர ராசனே சம்பந்தப்பட்டவரை கூட, பாபா ஜோதிட பூர்வமான தடைகளையும் மீறி புத்திரப்பேறு அருளினார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, August 26, 2016

பத்து நிமிடமாவது பாபாவுக்காக ஒதுக்குங்கள்
ஸ்ரீ சாய் சத்சரித்திர பாராயணம் சித்தத்தை தூய்மைப்படுத்தி ஆன்மீக நல்வாழ்வை அளிக்கும். விரும்பாதவைகளும் இன்னல்களும் விரட்டியடிக்கப்படும். விரும்பினவும் நன்மைகளும் விளையும். பாபாவினுடைய அற்புதமான சக்தியையும் ( நம்பிக்கையுடன் பாராயணம் செய்தால் ) அனுபவிக்கலாம். பக்தியுடன் பாராயணம் செய்வதால், உங்களுடைய அபூர்வமான இச்சைங்களுங்கூடப் பூர்த்திசெய்யப்படும். கடைசியில் நீங்கள் எதையும் வேண்டாதவராக ஆகிவிடுவீர்கள். இவ்வாறாக நீங்கள் எளிதில் கிடைக்காத ஸாயுஜ்ய முக்திநிலையை ( பாபாவுடன் ஒன்றிவிடுதல் ) அடைவீர்கள். அகண்டமான சாந்தியும் திருப்தியும் உங்கள் இதயத்தை நிரப்பும். சாய் பக்தர்கள் தினம் ஒரு அத்தியாமாவது பாராயணம் செய்யவேண்டும். தினமும் குறைந்தது ஒரு பத்து நிமிடமாவது பாபாவுக்காக ஒதுக்கி சாயி நாமஜபம் ( சாயி, சாயி, சாயி என்று சொன்னாலே போதும் ....வேறு விசேஷமான மந்திரங்கள்  தேவையில்லை ) செய்தும் ஒரு அத்தியாயம்  பாராயணம் செய்யுங்கள். நிச்சயம் பாபா உங்கள் அருகிலேயே அமர்ந்து பாராயணத்தை கேட்பார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 25, 2016

செல்வம் என்றுமே நிரந்தரமில்லை


"செல்வம் என்றுமே நிரந்தரமில்லை. சரீரமோ ஒரு நீர்க்குமிழி. மரணம் எப்பொழுதுமே பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறது என்பதை அறிந்து தருமவழியில் நடப்பீராக". - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 24, 2016

நான் நடத்துகிறேன்


என்னை நம்பி என்பால் லயமாகும் பக்தனின் எல்லா காரியங்களையும் பொம்மலாட்டத்தைபோன்று நான் நின்று நடத்துகிறேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 23, 2016

அலைச்சலும் குழப்பமும்

                                                      

உமக்கு பிடித்திருந்தால் திடமான விசுவாசத்தை என் இடத்தில் வையும். உமது இப்போதைய அலைச்சலும் குழப்பமும் பயனற்றவை. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 22, 2016

பாபா மீதான என் நம்பிக்கை நிலைகுலைந்து போகிறது

காற்றடித்தால் கலைவதைப் போல  பாபா மீதான என் நம்பிக்கை நிலைகுலைந்து போகிறது. இதைத் தடுப்பது எப்படி ? இது மீண்டும் நடக்காமலிருக்க என்ன வழி? 

பாபாவிடம் இன்னும் நெருக்கமாக வரவேண்டும் என்று விரும்புபவர்களுக்கான ஒரே வழி எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் அவரிடம் அசைக்க முடியாத, மாறாத நம்பிக்கை கொள்வது மட்டுமே. ஆனால் சிலர் உலகியல் ஆதாயங்களுக்கான ஆசைகளுடன் பாபாவை நாடி வருகின்றனர். அல்லது இதுபோன்ற எதிர்பார்ப்புகளுடன் தங்களது பக்தியை வெளிபடுத்துகின்றனர். சில சமயங்களில் அவர்களது ஆசைகள் பூர்த்தி அடையாவிட்டாலோ அல்லது அவர்களது முன்வினைகளின் பலனாக கஷ்டப்பட நேர்ந்தாலோ, அவர்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கத் தொடங்குகின்றனர்.
எந்த ஒரு அவதாரம் அல்லது சத்குருவின் காலத்திலும் எல்லா மனிதர்களுடைய எல்லா ஆசைகளும் எப்போதுமே நிறைவேறியதில்லை. பக்தர்கள் இறைவனை அடைய தடையாய்  இருக்கும் எந்தவிதமான ஆசைகளையும் சத்குரு நிறைவேற்றுவதில்லை. இதுபோன்ற ஆசைகள் நிறைவேறாமல் போவதன் பின்னணியிலும் பாபாவே உள்ளார். எனவே இன்பத்திலும், துன்பத்திலும் என இரண்டிலுமே பாபாவைக் காணக்கூடியவர் யாரோ அவரே உண்மையான பக்தராவார். இன்பத்தை மட்டுமே நாடுபவர்கள் பாபாவை விட்டு விலகிச்செல்லவே நேரிடும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 21, 2016

சாயியின் தர்பாரில் யந்திரம், பரிகாரம் என்று எதுவுமில்லைபக்தர்களின் நம்பிக்கை, நேர்மையான பக்தி, ஆன்மீக வளர்ச்சிக்கேற்ப, சாய்பாபா அளித்திடும் அனுபவங்கள் பக்தருக்கு பக்தர் மாறுபடும். சில முக்கியமான நிகழ்வுகள் மூலம் பாபா சில பக்தர்களுக்கு உதவுகிறார். அவர்கள் வாழ்க்கையில் பொருளாதார மேம்பாட்டை அளிக்கிறார். சில பக்தர்களுக்கு கனவுகளில் தோன்றி, கனவுகளில் செய்திகள் சொல்லி சிலரது பக்தியை அதிகப்படுத்துகிறார். முழுமையான நம்பிக்கை, நேர்மை மற்றும் பக்தியுடன் சாயிபாபாவை நோக்கி யார் பிரார்த்தனை செய்தாலும் பாபா அவர்களுடன் நேராக பேசுகிறார், அவர்கள் இடைத் தரகர்களின் உதவியை நாடத் தேவையில்லை.  பாபாவிடம் முழு சரணாகதி அடைந்த ஒருவர், தேர்வு முடிவு, வேலை போன்ற இவ்வுலக வாழ்க்கைக்குரிய சாதாரண விஷயங்களை விடுத்து, பாபாவிடம் என்றும் மாறாத நம்பிக்கைக்கும், அவரது அருளாசிக்காக பிரார்த்தனை செய்யுங்கள். காமதேனு (தேவலோகத்துப் பசு) நாம் விரும்பிய பொருளை உடனே அளிக்கும். காமதேனுவைவிடச் சிறந்தவர் குருதேனு. நம்மால் சிந்தனைசெய்து பார்க்கமுடியாத பதவியையும் (வீடுபேறு நிலையையும்) அளிப்பார் !
பாபா கூறியிருக்கிறார், "உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும். ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால், எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதைப் போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்" என்று. அதாவது, பாபாவின் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையே பிரதானம்..வியாபாரமயமாகிவிட்ட இந்த உலகத்தில், உங்கள் பிரச்சனைகளை களைய, வேலை கிடைக்க, குழந்தை பிறக்க என சாய்பாபா யந்திரம், மந்திரித்த எலுமிச்சை, சாய் பரிகார பூஜைகள்  என்று நிறைய ஏமாற்று வேலைகள் நடப்பதை நாம் காண்கிறோம். சாயியின் தர்பாரில் யந்திரம், பரிகாரம் என்று எதுவுமில்லை. பாபா தன் பக்தர்களிடம், தன்னை மட்டுமே நம்பும்படி கூறியுள்ளார். இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுவது, பாபா மீதான நம்பிக்கை இல்லாமையே காட்டுகிறது. எப்பொழுதும், பாபா உங்கள் உடனே இருக்கிறார். தொடர்ந்து இவ்விதமாக எண்ணிவாருங்கள். மற்றவற்றை பாபா பார்த்துக்கொள்வார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 20, 2016

பாபாவை நம்பு, வேறெதுவும் தேவையில்லை."குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை" என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். சாய்பாபாவின் மேல் உள்ள நம் பக்தியை வளர்த்துக் கொள்வதற்குரிய சில கருத்துக்களைக் கூறுவது உபயோகமாயிருக்கும் என்று கருதுகிறேன்.

முதன்முதலில் சாயிபாபாவின் ஓர் உருவப்படம் இன்றியமையாத ஒன்று. ஏனெனில், பாபாவும் அவரது படமும் வேறல்ல.தவிர, அது  பாபாவின் மேல் இடையறாத தியானம் செய்ய வேண்டியதின் உயர்வைப் பற்றிச் சக்திவாய்ந்த முறையில் நினைவுபடுத்துகிறது. பாபாவின் படம், அத்தகைய குறிக்கோளை அடைய முயலும்படித் தூண்டுகிறது. பாபாவின் படத்தைப் பார்ப்பது மிகவும் சக்தி வாய்ந்த சாதனையாகும்.

இரண்டாவதாக , பாபாவின் வாழ்க்கைச் சரிதத்தைத் தவறாமல் பாராயணம் செய்வது, நமது மனதை ஆத்மீகக் குறிக்கோளை நோக்கி இழுக்கும். நமது எல்லா எண்ணங்களும் உணர்வுகளும் பாபாவைப் பற்றியே வட்டமிடும்படிச் செய்யும். பாபாவின் சரிதத்தைக் கற்ற புத்திசாலியான ஒருவருக்குத் தடையே உதவியாக மாறிவிடுகிறது.

மூன்றாவதாக, எப்போதுமே பாபாவின் நினைவிலேயே மூழ்கி, அவரது திவ்ய நாமத்தை இடையறாது உச்சரிப்பதில் நம் மனதை ஈடுபடுத்தும்படியான வழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

நாலாவதாக, நாம் எதை உண்டாலும் அல்லது பருகினாலும், அதை மானசீகமாகப் பாபாவுக்கு நிவேதனம் செய்து, அவரது பிரசாதமாக உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

ஐந்தாவதாக, நாளின் முதல் 15 நிமிடநேரத்தை, நாள் முழுவதும் நாம் பாபாவின் நினைவில் தோய்ந்திருப்பதற்காக, நம் பாவனையை இசைவு செய்துகொள்ளுவதில் செலவிடவேண்டும்.மீண்டும், தூங்குவதற்கு முன், நாளின் இறுதி 15 நிமிடங்களையும் பாபாவைப் பற்றிச்  சிந்திப்பதிலும் செலவிட முயல வேண்டும்.

ஆறாவதாக, ஸ்ரீ சாயிபாபாவின் விபூதியை( உதி ) நாள்தோறும் இட்டுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஏழாவதாக, வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் பாபாவை மனமார வழிபடுவதற்காக ஒதுக்க வேண்டும். பாபா, தமது படத்தோடு ஒன்றுப்பட்டவர் என்பதைப் பலமாக நினைவுகூர்ந்து, அவரது இருப்பை உணர்ந்து, அவரது படத்தைப் பூஜை செய்ய வேண்டும்.

எட்டாவதாக முடிந்தபோதெல்லாம்,தினசரி, வாரந்திர சாய் சத்சங்கத்தில் பங்கேற்க முயல வேண்டும்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, August 19, 2016

தெய்வீக அவதாரம்குன்றுகளும் மலைகளும் நடுவே தடையாக இருந்தபோதிலும் சாயிநாதரின் பார்வையிலிருந்து எதையும் மறைக்க முடியாது. பரம ரகசியமாக நாம் கருதும் விஷயமும் அவர் முன்னே திறந்து கிடக்கிறது. எப்போதோ வாழ்ந்த மகான் அல்ல அவர். தன்னை தவிர வேறெதிலும் நாட்டமில்லாமல், தன்னிடம் மட்டுமே பூரண சரணாகதி அடைந்த பக்தர்களுடன் எப்போதும் இருக்கின்ற தெய்வீக அவதாரம் அவர்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 18, 2016

எல்லாமே பாபா தான்

ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி.அன்றாட அலுவல்களுக்கு இடையேயும், ஆழ்மனதில் எப்போதும் பாபாவையே நினைத்திருப்பது நல்லது. இயன்றபோதெல்லாம் பாபாவின் நாமத்தை உச்சரியுங்கள். நேரம் கிடைக்கும்பொழுது பாபாவின் உருவைத் தியானம் செய்யுங்கள்.இவை மூன்றையும் தொடர்ந்து செய்யமுடிந்தால்,          அதுவே எல்லாவற்றிலும் சிறந்தது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 17, 2016

உண்மையான பக்தன் முன் தோன்றுகிறார்


மனிதப் பிறவிகளுக்கே. அவரோ எல்லாப் பொருள்களிலும் உள்ளும் புறமும் நிறைந்தவர். அவர் அங்கிருந்து இங்கே வருவது, இங்கிருந்து அங்கே திரும்பி போவது, ஆகிய இரு செயல்களையும் வானமும் அறியாது. ஏனெனில்,அவர் வானத்திலும் நிரம்பி   இருக்கிறார். பாபாவின் சஞ்சாரம் புரிந்துகொள்ள முடியாதது. நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் அவர் நிரம்பியிருக்கிறார். இவ்வாறிருக்க, அவர் வருவதென்ன, போவதென்ன! உண்மையான பக்தன் பாபாவை நினைத்தமாத்திரத்தில் நிச்சயமாக அவர்முன் தோன்றுகிறார்..- ஸ்ரீ சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 16, 2016

தம் பக்தர்கள் தவறு செய்வார்கள் என்பது பாபாவுக்கு தெரியும்.மனித பிறவிகள் தவறு செய்வது இயற்கையே. மாயையின் விளையாட்டில் தம் பக்தர்கள் தவறு செய்வார்கள் என்பது பாபாவுக்கும் தெரியும். எனவே பாபா எப்போதும் விழிப்பாய் இருந்து அவர்கள் தவறு செய்வதைத் தவிர்த்து தடுத்தாட் கொள்ளவே பார்ப்பார். பக்தன் தானே செய்யும் தவறுகளின் காரணமாய் ஆபத்தில் சிக்கிக்கொண்டால் பாபா நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பக்தனைக் காப்பாற்றி விடுவார். " நீங்கள் எங்கேயிருந்தாலும் நீங்கள் என்ன செய்தாலும் நான் அதை முழுமையாக அறிவேன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் " என்று பாபா கூறுவது வழக்கம். பாபா சகலமும் அறிந்தவராக இருந்தார் என்பதை ஸ்ரீ சாயி சத்சரித்திரம் காட்டுகிறது. நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறுகளுக்கு கண்டிப்பாகக் பாபாவிடமிருந்து நமக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
சில சமயம் நாம் பாபா காட்டிய வழியைப் பின்பற்ற முடியாமல் போகலாம். அதற்காக பாபா வருத்தபடுவதில்லை. அவர் வெறுப்பு மற்றும் சினம் ஆகிய குணங்களுக்கு அப்பாற்பட்டவர். அவர் கருணையே உருவானவர். குருபாதையில் முன்னேற பக்தனுக்கு உள்ள உண்மையான நோக்கத்தை அவர் கண்காணிக்கிறார். மனஉறுதியுடன் திடமாக இருந்து பாபாவிடம் முழுமையாக சரணாகதியடைந்தால், அவனுடைய தவறுகளையும் பொருட்படுத்தாது பாபா தன் பக்தனை தன்னுடனேயே வைத்துக் கொள்கிறார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 15, 2016

என்னுடைய பக்தர் பணத்தைத் தேடமாட்டார்.


"என்னுடைய பக்தர் பணத்தைத் தேடமாட்டார். அவர் ஒருபொழுதும் செல்வத்தின் வைபவத்தில் மாட்டிக்கொள்ளமாட்டார்- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா."


மகல்சாபதி, எப்பொழுதும் பாபாவின் அண்மையிலேயே இருந்த பக்தர். மசூதியிலும், சாவடியிலும் ஒரு நாள் விட்டு மறுநாள் என மாறி மாறி பாபா இரவுகளைக் கழிப்பார்; இரண்டு இடங்களுக்குமே மகல்சாபதி பாபாவுடன் சென்று அவருடனேயே உறங்குவார். சதா சாயிபாதங்களிலேயே மூழ்கியிருந்த மகல்சாபதி, சங்கடத்தில் உழன்றவாறே வறுமையில் காலந்தள்ளினார். சாயி அவரை சிறிதளவும் செல்வம் சேர்க்க விடவில்லை.
தமக்கு தக்ஷிணை ரூபத்தில் வந்த பணத்தை சாயி பல பேர்களுக்கு விநியோகம் செய்தார். ஆனால், வறுமையில் வாடிக்கொண்டிருந்த மகல்சாபதிக்கு ஒருநாளும் ஒருபைசாவும் கொடுத்தாரில்லை.

ஒருசமயம், ஹம்ஸராஜ் என்னும் பெயர்கொண்ட தயாளகுணமுள்ள வியாபாரி ஒருவர், மகல்சாபதியின் கைகளில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். ஆனால், "சாயியின் அனுமதியின்றி நான் இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று மிகப்பணிவாக பணத்தைத் திருப்பி கொடுத்துவிட்டார்.ஆகவே ஹம்சராஜ் சாயியை அனுமதி வேண்டிக் கெஞ்சினார். ஆனால் மகல்சாபதியை ஒரு பைசாவைக்கூடத் தொட சாயி அனுமதிக்கவில்லை. சாயி சொன்னார், "என்னுடைய பக்தர் பணத்தைத் தேடமாட்டார். அவர் ஒருபொழுதும் செல்வத்தின் வைபவத்தில் மாட்டிக்கொள்ளமாட்டார்" என்று...

அனுதினமும் பாபா, ஒருவருக்கு ரூ.15, மேலும் ஒருவருக்கு ரூ.10 என அளித்துவந்தார். பல முறைகள் பாபா மகல்சாபதியிடம், "இந்த மூன்று ரூபாயைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவ்வாறு பெற்றுக் கொண்டேயிருங்கள். நான் உங்களை வசதி படைத்தவராக ஆக்கிவிடுகிறேன்" எனக் கூறியிருக்கிறார். ஆனால்  எப்போதுமே மகல்சாபதி மறுத்து வந்தார். அவருடைய பதில் இதுதான்; "எனக்கு இதெல்லாம் வேண்டாம். நான் தங்கள் பாதங்களுக்கு பூஜை செய்வது ஒன்றையே விரும்புகிறேன்." தானங்கள் பெறுவதைத் தவிர்த்து, கிடைத்ததை வைத்து திருப்தியடைவதை லௌகீகமான செல்வத்தைப் பெறுவதையும் தக்கவைத்துக் கொள்வதையும் விட உயர்வானதாகக் கருதினார்.
   
                                                     * ஜெய் சாய்ராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 14, 2016

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் சப்தாக ( ஏழு நாட்கள் ) பாராயணம்


"நம்பிக்கையுடன் ஸ்ரீ சாய் சத்சரித்திரம் படித்தால், நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியம் பெறுவர். தரித்திரர்கள் செல்வந்தர்கள் ஆவார்கள். சந்தேகங்களும் மனக்கோணல்களும் அகன்று, உறுதியும் தெளிவும் பிறக்கும். தீனர்களும் வள்ளன்மை பெறுவர். - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்."


ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தின் பாதை எளிமையானது; நேர்மையானது. இது படிக்கப்படும் இடமெல்லாம் துவாரகாமாயீ! ஆகவே, சாயியும் அங்கு நிச்சயம் வாசம் செய்கிறார்.

எங்கு சாயி சத்சரித்திரம் படிக்கப்படுகிறதோ, அங்கு சாயி எப்பொழுதும் பிரசன்னமாக இருக்கிறார். பக்தியுடனும் விசுவாசத்துடனும் மறுபடியும் மறுபடியும் படிக்கப்படும்போது அவர் சகல பா(BHA)வங்களுடன் அங்கு வாசம் செய்வார்.

ஆத்மானந்தத்தில் திளைக்கும் சாயியை மனத்திற்கொண்டு அனுதினமும் அவரது நாமத்தை ஜெபித்து, ஒரு அத்தியாயமாவது படித்தால், இதர ஜபங்கள், தவங்கள், தியானம், தாரணை போன்ற கஷ்டமான சாதனைகள் எதுவும் செய்யத் தேவையில்லை. 

இதுவரை ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்காதவர்கள், அல்லது சத் சரிதத்தை ஏழு நாட்களுக்குள் ( சப்த பாராயணம் ) செய்ய நினைப்பவர்கள், நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டில் இருந்தபடியே  வரும் வியாழன்  (18/08/16 ) அன்று தொடங்குங்கள்.

சப்தாக ( ஏழு நாட்கள் ) பாராயண முறை ;

காலையில் எழுந்து நீராடி பாராயணம் செய்யும் இடத்தை சுத்தம் செய்து தீபத்தை ஏற்றி பூக்களுடன் அலங்கரித்து நூலினை சாயியின் ஸ்வரூபமாகவே பாவித்து சாய் அஷ்டோத்திரத்தை படித்து பாராயணம் ஆரம்பிக்க வேண்டும்.
அன்றைய பாராயணம் முடிந்தவுடன் ஆரத்தி எடுத்து வணங்க வேண்டும்.
ஏழு  நாட்கள் பாராயணம் முடிந்தவுடன் அவரவர் சக்திக்கு ஏற்ப
 அன்னதானம் செய்ய வேண்டும்.
இப்படி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் தாங்கள் வேண்டியது நிறைவேறும். பாபாவின் அருளும் ஆசியும் கிடைக்கும்.

ஏழு  நாட்கள் பாராயணம்
செய்ய வேண்டிய
அத்தியாயங்களின் விவரங்கள்;

18/08/16--- அத்தியாயம் 1 முதல் அத்தியாயம் 7 வரை.

19/08/16--- அத்தியாயம்  8 முதல் அத்தியாயம்   15

20/08/16---  அத்தியாயம் 16 முதல்   அத்தியாயம்  22

21/08/16---  அத்தியாயம் 23  முதல்  அத்தியாயம் 30

22/08/16--- அத்தியாயம் 31 முதல் அத்தியாயம்  37

23/08/16---   அத்தியாயம் 38 முதல் அத்தியாயம்  44

24/08/16 -- அத்தியாயம் 44 முதல் முடிவுரை வரை.
இது ஸ்ரீ சாய் சத்சரித்திர பாராயணத்தை ஊக்குவிக்கும் முயற்சியே.


                                       ஜெய் சாய்ராம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 13, 2016

கடுமையான தண்டனை


"நாங்கள் கண்டிப்பு மிகுந்த, இரக்கமில்லாத ஜாதி. ஓரிரு முறை சொல்லிப்பார்ப்போம். திருந்தாவிட்டால் கடுமையான தண்டனை கொடுப்போம். எம்முடைய சொல்லைக் கேட்காதவனை இரண்டாகத் துண்டித்துத் தூக்கியெறிந்து விடுவோம்; எம் குழந்தையாக இருப்பினும் சரி." - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

 (  கருணையே வடிவான பாபா இதுபோன்ற மொழிகளை கூறியிருக்க மாட்டார் என்று பலர் நினைப்பர். அனால், சில பக்தர்களின்  குடிப்பழக்கம் போன்ற தீய பழக்கங்களை விடுவதற்காக மிகவும் அதிகார தோரணையில் பாபா ப்ரயோகித்த வார்த்தைகள் இவை. தெய்வீக அவதாரமான பாபாவின், வசவுகளும் மறைமுகமான ஆசிர்வாதமே என்பதை நினைவில் கொள்ளவும்.)


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, August 12, 2016

எஞ்சி இருந்தது ரூ 16 மட்டுமேபுரந்தரே என்ற பக்தர் : தாங்கள்(பாபா) ஏன் இவ்வளவு பணம் தக்ஷிணையாக  கேட்கிறீர்கள்?

பாபா: நான் எல்லோரிடமும் கேட்பதில்லை. ஆண்டவன் யாரை குறிப்பிட்டு காட்டுகிறாரோ அவரிடமிருந்து மட்டுமே கேட்கிறேன். ஆனால் பதிலுக்கு, நான் பெற்றுக் கொண்ட தொகையைப் போல் பத்து மடங்கு அந்த நபருக்கு நான் கொடுக்க வேண்டியதாகிறது. எனது சொந்த உபயோகத்துக்காக நான் பணம் பெறுவதில்லை. எனக்கு குடும்பம் எதுவும் கிடையாது.

ஒவ்வொரு தினமும் காலையில் பாபா கையில் ஒன்றுமே இல்லாத எளிய பகீர்; பகல் முழுவதும் தக்ஷிணைகள் குவியும். மாலை அல்லது இரவில் சேர்ந்த தொகை முழுவதும் பட்டுவாடா செய்துவிடப்பட்டுவிடும். பாபா மறைந்த போது சுமார் பத்து ஆண்டுகள் ஒரு கவர்னருடைய வருமானத்துக்கு சமமான தக்ஷிணையைப் பெற்று வந்த போதும், அவர் கையில் எஞ்சி இருந்தது ரூ.16 மட்டுமே. பாபா ரூபாய்களை தூசாக மதிப்பவர். அவர் விரும்புவது உங்கள் மனமும் இதயமும், உங்கள் நேரமும் ஆன்மாவும் அவரிடம் ஈடுபடுத்தபட வேண்டுமென்பது மட்டுமே.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 11, 2016

விரதம்"நான் உன்னோடு தானே இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு". - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.{ ஸ்ரீ சாய் சத்சரித்திரம் }


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 10, 2016

பாபாவின் உண்மையான பக்தர்


ரேகே, பாபாவின் உண்மையான  பக்தர்.  1914ம் ஆண்டு கர்ப்பவதியான தம் மனைவியுடன் ஷீரடி சென்றார். "என் பரிசு ஒன்று உன்னிடம் உள்ளது" என்றார் பாபா. குழந்தை பிறந்ததும் ரேகே குழந்தையை எடுத்துக் கொண்டு பாபாவிடம் சென்றார். பாபா குழந்தையைக் கைகளிலெடுத்து கொஞ்சிக் கொண்டே, " இந்தக் குழந்தை உன்னுடையதா, என்னுடையதா ?" என்று கேட்டார். "தங்களுடையது, பாபா !"என்று தயங்காமல் பதிலளித்தார் ரேகே ."அப்படியானால் எனக்காக இக்குழந்தையை உன் பொறுப்பில் வைத்திரு" என்றார் பாபா. பாபா ஏன் இப்படிக் கூறினார் என்று பலர் வியந்தனர். இதுவே ரேகேயின் முதற்குழந்தை. சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழிந்தன. குழந்தைக்கு நிமோனியா ஜுரம் கண்டது. குழந்தையின் நிலை கவலைக்கிடமானது.

ரேகே குழந்தையை எடுத்துக் கொண்டு பூஜை அறையினுள் சென்றார். அங்கே பாபாவின் திருவுருவப் படத்தின் முன்நின்று, "பாபா! இக்குழந்தை தங்களுடையது. ஆகவே இதைத் தங்களிடம் சேர்த்துக் கொண்டு அதற்கு சத்கதியளிக்க  வேண்டும். பின்னர் பாபாவைத் தியானித்துக் கொண்டே குழந்தையின் சிரத்தின் மீது கையை வைத்தார். குழந்தையின் உயிர் சிரம் வழியே உடலினின்றும் பிரிந்தது.  ரேகே, குழந்தை இழந்ததினால் பாபா மீதான நம்பிக்கையை சிறிதளவும் இழக்கவில்லை.

இரண்டு மாதங்கள் கழித்து, ரேகே ஷீரடி சென்று பாபாவைப் பணிந்தார். ரேகேயை சுட்டிக்காட்டி அவரை முன்பின் அறியாதவர் போல் பாபா அங்குள்ளோரிடம், "இம்மனிதன் யார்? எங்கு வசிக்கிறான்?" என்று வினவினார். அவர்கள், "இவர்தான் ரேகே; இந்தூரில் வசிக்கிறார்" என்று கூறினார்கள். " இல்லை நீங்கள் கூறுவது தவறு. "அவன் எப்போதும் இங்கேயே இருக்கிறான். நான் அவனுடனேயே இருக்கிறேன்" என்று பதிலளித்த பாபா மீண்டும் "அவனுக்கு குழந்தைகள் இருக்கின்றனவா?" என்று கேட்டார்.

அங்குள்ளவர்கள் "இல்லை, அவருடைய குழந்தை சமீபத்திலேயே இறந்தது" என்று பதிலளித்தனர். "இறந்ததா? இல்லவே இல்லை! அந்தக் குழந்தை என்னுடையது. எனக்காக தன் பொறுப்பில் வைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டான். இப்பொழுது அதை நான் எடுத்துக் கொண்டு இங்கே (தம் இதயத்தைச் சுட்டிக்காட்டி) வைத்துள்ளேன். குழந்தை நிரந்தரமாக இங்கேயே இருப்பான்" என்று கூறினார் பாபா.

குழந்தை பிறந்து விரைவிலேயே இறக்கப் போவதை முன்கூட்டியே அறிந்த பாபா, தம் அத்யந்த பக்தரை குழந்தையின் பிரிவைத் தாங்கச் செய்யவும், குழந்தைக்கு சத்கதியளித்து ஆட்கொள்ளவும் திருவுளங்கொண்டார்.

"சமய நூல்களும், மகான்களுடைய வாக்குகளும் கடவுள் எங்கும் வியாபித்துள்ளார் என அறிவிக்கின்றன. நான் பாபாவைக் கடவுளாகவே கருதுகிறேன். அப்படியானால் பாபா உள்ளும், புறமும் எங்குமுள்ளார். என்னுள்ளும் புழு, பூச்சி, ஜந்துக்கள் யாவற்றினுள்ளும் உறைகிறார். இந்த எண்ணத்துடன் தமது கண்கள் திறந்ததாகவும், உடனே மசூதிக்கு பாபாவிடம் ஓடிச் சென்றதாகவும், அவரைக் கண்டவுடன் பாபா "நீ உண்மையைப் புரிந்து கொண்டது பற்றி சந்தோஷம்; உனக்குத் தேவையானதை நானே செய்கிறேன்" என்று பகன்றதாகவும் கூறுகிறார்."


                                        * ஜெய் சாயிராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 9, 2016

பாபா தரிசனம் தருவார்பாபாவை நேருக்குநேராக  தரிசனம் செய்தவர் சிலர். காட்சியாக தரிசனம் பெற்றவர் பலர். வேறு உருவத்திலும் மாறுவேஷத்திலும் அற்புத தரிசனம் பெற்றவர் அநேகர். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அவர் தெரிவதில்லை, நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர்கள் எங்கிருந்தாலும் தரிசனம் தருவார். மக்களுடைய மனச்சாய்வு எப்படியோ அப்படியே நேரிடை அனுபவம் ஏற்படுகிறது.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 8, 2016

பரிபூரணமாக சரணடைவோமாக
பாபாவுக்கு பக்தியுடன்  சேவை செய்யும் அடியவர், அவரிடம்  ஒன்று கலந்த உணர்வை அடைகிறார். இதர சாதனைகளைத் தள்ளி வைத்து விட்டு குரு சேவையில் பணிவுடன் ஈடுபடுங்கள். அந்த சேவையில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும், கபடமான சாமர்த்தியத்தின் நிழல் பட்டாலும், சாதகருக்கு தீமையே விளையும். தேவை என்னவென்றால், பாபாவின் மீது உறுதியான விசுவாசமே. மேலும், சிஷ்யன் சுயமுயற்சியால் என்ன செய்கிறான்? ஒன்றுமில்லையே! அவன் செய்வதையெல்லாம் சத்குருவன்றோ லாவகப் படுத்துகிறார்! சிஷ்யனுக்கு தனக்கு வரப்போகும் அபாயங்களை பற்றி எதுவும் தெரிவதில்லை. பாபா அந்த அபாயங்களை விலக்குவதற்காக செய்யும் உபாயங்களும் கூட சிஷ்யனுக்கு தெரிவதில்லை!மூவுலகங்களிலும் தேடினாலும் பாபாவைப் போன்ற தர்மதாதாவை காண்பதரிது. சரணடைந்தவர்களுக்கு மாபெரும் புகலிடமான பாபாவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக. - ஸ்ரீ சாயி இராமாயணம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 7, 2016

கிரகபலன் சுபகரமாக இல்லை

" நீ மிகவும் சஞ்சலமடைந்துள்ளாய். எனக்கு பிக்ஷை கொடு. உனது உடல், மனம், முழுவதையும் பிக்ஷையாகக் கொடு " - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


1927ல் என் கிரகபலன் சுபகரமாக  இல்லை! என் தேக ஆரோக்யம் பாதிக்கப்பட்டது. பூனாவிலிருந்து சுமார் 40 மைல்கள் தொலைவிலுள்ள ஜன்னர் என்ற இடத்திலிருந்து இரண்டு மைல்கள் தூரத்தில் அமைந்திருந்த சிவபெருமான் ஆலயத்திற்கு நான் சென்றேன். ஒவ்வொரு ஞாயிறும் அந்த ஈசனை வழிபட்டு வந்தேன். ஒரு ஞாயிறன்று காலை 7 மணி அளவில் ஈசனுக்கு " சாயிபாபாவுக்கு நமஸ்காரம் " எனக் கூறிக்கொண்டே மலர்களை சமர்பித்தேன். அப்போது ஈசனுடைய திருவுருவத்தில் ஒரு ஒளியையும், அந்த ஒளியின் மத்தியில் எப்போதும் நான் வணங்கும் சாயிபாபாவின் திருவுருவையும் கண்டேன். அதன் பின்னர் என் உடல் நலம் அபிவிருத்திக் கண்டது. தளர்வடைந்த மனநிலை திடம் பெற ஆரம்பித்தது. அங்கே ஜானகிதாஸ் என்ற ஒரு மகான் உள்ளார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்  நான் அவரிடம் சென்று, உதடுகள் சாயிபாபாவின் நாவை முணுமுணுக்க அவர்தாள் பணிவேன். அப்போது அவர் என்னிடம் கூறினார் ; " நீ ஒரு பெரும் மகானிடம் ( ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா ) தஞ்சம் புகுந்துள்ளாய். என் போன்ற எளிய சாதுவிடம் ஏன் வரவேண்டும் ? என் போன்றவர்கள் சாயிபாபாவின் பாதங்களைப் பற்றுகிறோம் ". பின்னர் நான் என் தங்கும் விடுதிக்குச் சென்று உறங்கினேன். சாயிபாபா என் கனவில் தோன்றி " நீ மிகவும் சஞ்சலமடைந்துள்ளாய். எனக்கு பிக்ஷை கொடு. உனது உடல், மனம், முழுவதையும் பிக்ஷையாகக் கொடு " எனக் கூறினார். நான்
 பிக்ஷையை அளித்தேன். பின்னர் சாயிபாபா என் உடலை தமது உள்ளங்கையில் தாங்கி சட்டைப்பையினுள் போட்டுவிட்டார். என்னை அவருடைய இதயத்துக்கு அருகில் இருத்திவிடும் அளவுக்கு அவர் என்னிடம் அன்பு காட்டியுள்ளார் என்ற எண்ணம் எழுந்து நான் பேரானந்தம் நிறையப்பெற்றேன்.  -  நானா சாகேப் ராஸனே ( சாயிபாபாவின் பக்தர் )

                                         * ஜெய்  சாயிராம் *

                                             
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 6, 2016

விலகிச்செல்லும்படி விடமாட்டேன்"என்னுடையவனான ஒருவனை என்னை விட்டு விலகிச் செல்லும்படி விடமாட்டேன். என்னுடையவனாக இருப்பவன் ஒருவன் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இறப்பினும், அவனை நான் என்னிடம் இழுத்துக் கொள்வேன்" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, August 5, 2016

உனது அனுபவம்


' ஐயா மநீ ஜைசா பாவ, தயா தைஸா அனுபவ ' அதாவது,
உன் மனோபாவம் எப்படியிருக்கிறதோ, அதைப் போலவே இருக்கும் பாபாவைப் பற்றிய உனது அனுபவம் "

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 4, 2016

பாபாவை அணுக விசேஷமான வழி

                                                      

பாபாவை அணுக விசேஷமான வழி முறைகள் ஏதுமில்லை. நம் தாயை எப்படி அணுகுவோம்? இம்மாதிரி ஒரு கேள்வி கேட்பது மடத்தனமானது. அன்பு என்ன என்று குழந்தை உணருவதற்கு வெகு நாட்கள் முன்னதாகவே தாய் தன் குழந்தைகள் மீது அன்பைப் பொழிந்து வருகிறாள். அதே போல் பாபா குழந்தைகள் மீது அன்பைப் பொழியும் ஒரு கண்ணுக்குத் தெரியாத அன்னையின் பாத்திரத்தை ஏற்று, முற்பிறவிகளிலிருந்தே தொடர்ந்து தம் பக்தர்களாகிய குழந்தைகள் மீது அன்பைப் பொழிகிறார். ஆனால் அவர்கள் இப்போது பாபாவை எப்படி அணுகுவது? அவர்கள் பாபாவை அணுகவேண்டும் என மனப்பூர்வமாக விரும்பட்டும். உடனே அணுகுமுறை துவங்கிவிட்டது. அக்கணத்திலிருந்தே அவர்கள் நிலையில் முன்னேற்றம் ஆரம்பமாகிவிட்டது. அவர்கள் மேலும் மேலும் உற்சாகமடைகின்றனர், மேன்மேலும் பலன் அடைகின்றனர். முதலில் ஒரு வித நன்றியுணர்வையும், நாளடைவில் பிரேம பக்தியையும் அவர்கள் பெறுகிறார்கள். பக்தர்கள் பாபாவின் திருவுருவை தங்களிடம் உள்ள லாக்கெட்டுகள்,  படங்கள் ஆகியவற்றில் அடிக்கடி பார்த்து, பாபாவின் திருவுருவை தினமும் மனதில் கொண்டுவரட்டும், கவிஞனின் கற்பனைகள் எல்லாவற்றையும் விட திறன்படைத்த பாபாவின் அத்புத லீலைகளை [ஸ்ரீ சாய் சத்சரித்திரம்] படிக்கட்டும். பாபாவின் குணாதிசயங்களை நினைவுபெற பாபாவின் அஷ்டோத்திர சத நாமாவளி [108 நாமாக்கள்] மிக்க சக்தி வாய்ந்த சாதனம். ஆர்வமுள்ள பக்தர்கள் ஒன்று கூடி செய்யும் பூஜைகள், பஜனைகள் ஆகியவற்றில் பங்கு கொள்ளட்டும். ஆர்வமுள்ள சாதகனுக்கு பாபாவே மேற்கொண்டு உள்ள வழிகளைக் காட்டுவார். ஒவ்வொரு உண்மையான பக்தனுக்கும் பலவித வழிகளில் பாபாவுடன் மேற்கொண்டு தொடர்பு எப்படி வைத்துக் கொள்வது, அதை எப்படி வளர்த்துகொள்வது என்பது பற்றி பாபாவே உணர்த்துவார். பாபா கடைபிடிக்கும் முறைகள் பலவகைப்படும். உணர்ச்சிமிக்க துடிப்புள்ள சில பக்தர்கள் இன்றும் பாபாவைக் காண்கிறார்கள், விழிப்புடன் இருக்கும்போதே அவருடன் பேசவும் செய்கிறார்கள். சிலருக்கு கனவுகளில் இந்த அனுபவம் கிட்டுகிறது. பாபாவே தெய்வம் என்ற திடமான நம்பிக்கை கொண்ட சாயி பக்தர்கள் எண்ணற்றவர்கள், அவர்கள் தங்கள் பிரார்த்தனைகள் பாபாவால் ஏற்கப்பட்டு பலன்களைப் பெறுகிறார்கள்.- பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 3, 2016

நம்பிக்கையுடன் கூடிய பொறுமை


எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால், தன் பக்தர்களுக்காக பாபா செய்யும் எல்லா செயல்களையும் அந்த பக்தர்கள் அந்த நேரத்தில் அறியமாட்டார்கள். பக்தருடைய முன்வினைகளை (முந்தைய கர்மாக்களை) நன்கு அறிந்த சத்குரு அமைதியாக பக்தரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். கால ஓட்டத்திலும், மேலும் பாபாவால் நிர்ணயிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட நேரத்திலும் பாபாவின் ஆசிகளின் பலனை ஒருவர் பெறவேண்டுமானால் அதற்கு மிகுந்த நம்பிக்கையும், பொறுமையும் தேவைப்படுகிறது. இக்காரணத்தினால்தான் சிரத்தாவுடன் கூடிய சபூரி அதாவது நம்பிக்கையுடன் கூடிய பொறுமை என்பதை பாபா முக்கிய தகுதிகளாகக் கூறியுள்ளார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 2, 2016

மீண்டும் நாம் சந்திப்போம்


உன்னுடன் முன்னரே எத்தனை பிறவிகள் இருந்திருக்கிறேன் என்பதை அறிவாயா?. மீண்டும் மீண்டும் நாம் சந்திப்போம். இரவும் பகலும் என் குழந்தைகளை நான் பேணி வந்து, ஆண்டவனிடம் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கொடுக்க வேண்டியுள்ளது.                                                                                                 -ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா .
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 1, 2016

உன்னுடன் இருப்பேன்


எக்காலத்திலும், எந்த இடத்திலும் நீ என்னை நினைக்கும் போது, நான் உன்னுடன் இருப்பேன். அஞ்சேல் ! - ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

எல்லாப் பாவங்களும் ஒழிய பாபாவின் பாதங்களை வழிபடுங்கள் ‌!

பாபாவே தன் அடியவர்களுக்கு, கேட்டதையெல்லாம் கொடுக்கும் கற்பகத்தரு ஆவார்.  அவருடைய புனிதமான சந்நிதியில் இருந்துகொண்டு அன்புடனும் ஆர்வத்துடனும்...