Friday, September 30, 2016

பக்தரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதில்லைஒரு உண்மையான பக்தரின் கோரிக்கைகள் பாபாவினால் எப்போதும், எந்த சூழ்நிலையிலும் நிராகரிக்கப்பட்டதில்லை. குறித்த நேரத்தில் பாபா கஷ்டங்களை போக்கியருள்வார் என்ற திடமான நம்பிக்கை (நிஷ்டை), பொறுமை (ஸபூரி)  இரண்டும் வேண்டும். இப்பிறவியில் மட்டுமல்ல எத்தனை பிறவிகள் பிறவிகள் எடுத்தாலும் தனது பக்தர்களை காப்பதாக பாபா உறுதி பூண்டுள்ளார் என்பதை சாயி பக்தர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, September 29, 2016

பாபா உன்னுடன் இருப்பார்


சாய்பாபாவின் கூற்றுப்படி, அவருடைய குரு ( இந்தப் பிறவியிலோ,  முற்பிறவியிலோ யாரறிவார்! ) பாபா எங்கிருந்தாலும் அவருடன் தாம் இருப்பதாக வாக்களித்துள்ளார். சாய்பாபாவும் அம்முறையையே  தம் பக்தர்களிடம் கடைபிடித்துள்ளார். அவர் கூறியுள்ளார்;
"எப்பொழுது எங்கே நீ என்னை நினைத்தாலும் நான் உன்னுடன் இருப்பேன்."

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, September 28, 2016

விரதம் இருப்பதில் பாபாவுக்கு விருப்பமில்லை.


ஒரு தினம் பகல் ஆராத்திக்காக மசூதியில் மக்கள் குழுமியிருந்தனர். அக்கூட்டத்தில் நானும் ஒருவன். பாபா என்னை அழைத்து சாப்பிட்டுவிட்டு வரச்சொன்னார். அன்று ஏகாதசி என நான் கூறினேன். என்னுடன் வந்த நண்பர்கள் விரதம் அனுஷ்டித்து வந்ததால், நானும் அவர்களுடன் ஒத்துப் போக எண்ணினேன். ஆனால் நான் விரதம் இருப்பதை பாபா விருப்பவில்லை.
என் தோழர்களைக் காண்பித்து, "இவர்கள் பித்தர்கள். நீ வாடாவுக்குச் சென்று சாப்பிடு" என பாபா பணித்தார். ஏகாதசி தினத்தன்று சாப்பாட்டுக்கு அலைகிறேன் என முணுமுணுத்துக் கொண்டு வாடாவில் உணவளிப்பவர்  ஆரத்தி முடியும் வரையில் சாப்பாடு போட முடியாது எனக் கூறிவிட்டார். அவரும் மசூதிக்கு வந்தார். நானும் சாப்பிடாமல் திரும்பினேன். நான் சாப்பிட்டாகிவிட்டாதா என பாபா மீண்டும் வினவ அது ஆரத்தி வேலை ஆனதால் ஆரத்தி முடியும்வரை சாப்பாடு தள்ளிப் போடப்படலாமென நான் கூறினேன். ஆனால், பாபா விடுவதாக இல்லை. "நீ உன் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வரும்வரை, ஆரத்தி நிறுத்தி வைக்கப்பட்டு நீ வந்த பின்னரே தொடங்கும்" என அவர் கூறி விட்டார். வாடா உரிமையாளரும் பணிய வேண்டி வந்தது. எனக்கு உணவு பரிமாறினார். பின்னர் நான் ஆர்த்திக்காக மசூதிக்கு திரும்பி வந்தேன். - ஸாந்தாராம் பலவந்த் நாச்னே.

"நான் உன்னோடு தானே இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக்    கொள்கிறேன். விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு.".
                                                                       - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, September 27, 2016

பாபா உங்களிடம் இருப்பதை உணர்வீர்கள்


உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது.உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடமாக வேரூன்றிய பிறகு, உருவமுள்ள இறைவனை அறிந்துகொள்வது தானாகவே பின்தொடர்கிறது. நிர்குனமான, நிராகரமான, இறைவனை பக்தர்களுக்குப் புரியவைப்பதற்கு பாபா கையாண்ட உபாயங்கள் எத்தனை எத்தனையோ! அவரவர்களுடைய ஆன்மீகத் தகுதிக்கும் திறமைக்குமேற்ப பக்தர்களைத் தனித்தனியாக நிர்வகித்தார். பல  சந்தர்ப்பங்களில் தரிசனம் தரவும் மறுத்தார். ஒருவரை சிர்டியிலிருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பிவிடுவார். மற்றவரை தனிமையில் வாழச் செய்வார். பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாசங்களில் ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்து கொண்டிருக்கும்போதும், உறங்கும்போதும் உணவருந்தும்போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள்! இச்செயல்களின் நோக்கம் இதுவே. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, September 26, 2016

இனி உனக்குக் கவலையில்லை


"இப்பாதங்கள் தொன்மையானவை, புனிதமானவை. இப்போது உனக்குக் கவலையில்லை. என் மீது முழு நம்பிக்கையயும் வை. நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை எய்துவாய்" - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, September 25, 2016

தீங்கு நேரிட விடமாட்டேன்


என் பக்தர்களுக்கு தீங்கு நேரிட விடமாட்டேன். என் பக்தர்களை நானே கவனித்துக் கொள்ளவேண்டும். ஒரு பக்தன் விழும் நிலையிலிருந்தால், நான் நான்கு கரங்களை அத்தருணத்தில் நீட்டி காக்கிறேன். அவனை விழவிடவே மாட்டேன். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா      


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, September 24, 2016

சாயி நம்மைக் கைவிடமாட்டார்


பலவீனங்களைக்  கொண்டவர்களாகவும், எவ்வித  ஏற்றமும்  அற்ற  நாம் "பக்தி" என்றால்  என்ன என்பதை அறியோம். ஆனால் மற்றெல்லோரும் கைவிட்ட போதிலும்  சாயி  நம்மைக் கைவிடமாட்டார் என்ற அளவு  அறிவோம். எவர், அவர்தம்  பாதாரவிந்தங்களில் சரணாகதி அடைகிறார்களோஅவர்களின் முன்னேற்றம்  நிச்சயமானது. - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்<>


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, September 23, 2016

அல்லாமாலிக்


கடவுளே சகலத்திற்கும் ஒரே உரிமையாளர் (“அல்லாமாலிக்”). வேறொருவரும் நமது பாதுகாவலரல்ல. அவர் வேலை செய்யும் முறை அசாதாரணமானது. விலைமதிக்க முடியாதது. அறிவாலறிய முடியாதது. அவரது சங்கல்பமே ஈடேறும். அவர் நமக்கு வழிகாட்டுவார். நமது உள்ளத்தின் ஆசைகளைப் பூர்த்தி செய்வார். ருணானுபந்தத்தின் (முன்ஜென்மத்தின் உறவு) மூலமாகவே நாம் இணைந்துள்ளோம். ஒருவருக்கொருவர் அன்பாயிருந்தும், சேவை செய்தும் நாம் மகிழ்ச்சியுடன் இருப்போம். எவன் வாழ்க்கையின் மிகமிக உயர்ந்த குறிக்கோளை எய்துகிறானோ அவன் இறவா புகழுடையவன். மகிழ்ச்சியுடையவன். மற்றவரெல்லாம், வெறுமனே உளதாயிருக்கிறார்கள் அல்லது மூச்சு விடும்வரை வாழ்ந்திருக்கிறார்கள். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, September 22, 2016

இருதயத்தில் அமர்ந்து இருக்கிறேன்


நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இருதயத்தில் அமர்ந்து இருக்கிறேன். இந்த உலகின் கண் அசையும் அசைவற்ற சர்வ ஜீவராசிகளையும் நானே அரைவணைக்கிறேன். இப்பிரபஞ்சமென்னும் தோற்றத்தை நானே கட்டுபடுத்துபவன், ஆட்டுவிப்பவன். எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே. நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன், படைப்பவன், காப்பவன், அழிப்பவனுமாம்.- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத் சரித்திரம்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, September 21, 2016

வெளிப்படையானவை
ஓர் பக்தன் எவ்வளவு தூரம் நெஞ்சுரங் கொண்டவனாகவும் தீர்மானமுள்ளவனாகவும் இருக்கிறானோ, அங்ஙனமே பாபாவின் உடனடியான பிரதிச் செயலும் இருக்கிறது. அவரது முறை திரையிடப்பட்டதோ இரகசியமானதோ அல்ல. ஆனால் முற்றிலும் வெளிப்படையானவை. - ஸ்ரீ சாய் சத்சரித்திரம். 

http://www.shirdisaibabasayings.com
https://www.youtube.com/user/saimaharajkijai
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, September 20, 2016

பொறுமை, நம்பிக்கை


பாபா யோகாசனத்தையோ, பிராணாயாமத்தையோ, இந்திரியங்களைப் பலவந்தமாக அடக்குவதையோ, மந்திரத்தையோ, தந்திரத்தையோ, யந்திர பூஜையையோ, யாருக்கும் போதிக்கவோ, விதிக்கவோ இல்லை. பாபாவின்  ஓரே போதனை பொறுமை, நம்பிக்கை - ஸ்ரீ சாயி சத்சரித்ரா - 10 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, September 19, 2016

ஓம் சாயி ஸ்ரீ சாயி


                      

      "ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி" 

சாயி நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு, சங்கடங்களை தைரியமாக நேருக்குநேராக சந்தித்தால், எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும். சாயி நாமத்தின் சக்தி அவ்வளவு பிரம்மாண்டமானது. - ஸ்ரீ சாயி இராமாயணம்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, September 18, 2016

ஸ்ரீ சாயிபாபாவின் அருள் கிருபை


" ஸ்ரீ  சாயிபாபாவின் அருள் கிருபையைப்  பெற சிறந்த ஞானம், பேரறிவு தேவை இல்லை. மறுபக்கத்தில் ஞானம் என்ற பெருமிதம், கர்வம் நம்மை அவரிடமிருந்து கண்ணுக்கெட்டாத தூரத்தில் தள்ளிவைத்துவிடும்." 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, September 17, 2016

பாபா ஒருவரையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்" வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு தேவ, தேவதைகள் பின்னால் ஓடுவதையும் வெவ்வேறு கோயில்களுக்கு அலைவதையும் விடுத்து பாபா ஒருவரையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்." 

கேள்வி : சில வருடங்களாக நான் பாபாவையே வணங்கி, பாபாவின் பாதங்களையே தியானித்து .வருகிறேன். சமீபத்தில் வேறு ஒரு தெய்வத்தை / குருவை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதிலிருந்து அந்த குருவின் திருவடிகளையே பரவசத்துடன் நான் தியானிக்கத் துவங்கிவிட்டதை உணர்கிறேன். என்னுடைய கேள்வி இது தான். " நான் என்னுடைய நம்பிக்கையை மாற்றிக் கொண்டிருக்கிறேனா.?

பதில் : வெவ்வேறு தெய்வங்களுக்கும், ஆன்மீக குருக்களுக்கும் மரியாதை செலுத்துவது.என்பது நல்லது. ஆனால் எல்லா ஞானிகளும் கூறியுள்ளபடி, நம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீதுதான் இருக்க வேண்டும். ஆன்மீக வளர்ச்சிப் பயணத்தில் ஒருவர் தம் குருவைத் தனக்குள்ளேயே தேட வேண்டும். பாபா நமக்குள் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு  விட்டால் வேறெங்கு செல்வது என்ற கேள்வியே ஏன் எழப்போகிறது ?
 உங்கள் நம்பிக்கை பாதிக்கப்படவில்லை. உங்களுக்கு எது மிகவும் சிறந்தது என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளும் வகையில் நம்பிக்கையின் வெவ்வேறு அம்சங்களைத்தான் நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, September 16, 2016

நினைத்தது நடக்கும்

இந்த உலகில் குருவின் வாக்கு ஒன்றுதான் மனிதனை காப்பாற்ற முடியும். குருவை நம்பியவர்களுக்குக் கேட்டதெல்லாம் கிடைக்கும். யார் யார் நினைவுகள் எப்படி இருக்குமோ, பயனும் அப்படி இருக்கும். குரு சொன்ன வார்த்தையில்  நம்பிக்கை வைத்தவனுக்கு நினைத்தது நடக்கும். -  ஸ்ரீ குரு சரித்திரம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, September 15, 2016

குரு இருந்துதான் ஆக வேண்டுமென்ற அவசியமில்லை


பாபாவின் பக்தர் ராமச்சந்திர ஸீதாராம் தேவின் அனுபவம்.

பக்தர் தேவ் : பாபா, தாங்கள் என் குருவாக இருந்து எனக்கு உபதேசம் அளிக்கவேண்டும்.

பாபா ; ஒருவனுக்கு குரு இருந்துதான் ஆக வேண்டுமென்ற அவசியமில்லை. எல்லாம் நம் முன்னேயே இருக்கிறது. நீ விதைப்பதை அறுவடை செய்வாய். கொடுப்பதைத் திரும்பப் பெருகிறாய். ஒரு குருவுக்கு அவசியமே இல்லை. (ஆபாலா ஜமலசூ ஆஹே) எல்லாம் உன்னுலேயே உள்ளது. உள்ளே கவனமாகக் கேட்டு, கிடைக்கும் அறிவுரையின் படி நட. நம் ஆன்மாவை நாம் பார்க்க வேண்டும். அதுவே வழிகாட்டி, குரு. (ஆபனா பஹாங்ய ஆபலா ஆபண் பஹாவா).  


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, September 14, 2016

எளிய பக்தர்களுக்காக ஸ்ரீஹரி ஏங்குகிறார்


கள்ளம் கபடமற்ற எளிய பக்தர்களுக்காக ஸ்ரீஹரி மிகவும் ஏங்குகிறார். அன்பு வலையில் ஒரு முழுமையாக கைதியாக இருக்கிறார். ஆனால் பெருமை கொள்பவர்களுக்கு, போலிகளுக்கு, வேஷதாரிகளுக்கு ஸ்ரீஹரி எட்டாத தூரத்தில் இருப்பார்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, September 13, 2016

பாபாவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை"குருவை நம்பு.ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை"என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். சாய்பாபாவின் மேல் உள்ள நம் பக்தியை வளர்த்துக் கொள்வதற்குரிய சில கருத்துக்களைக் கூறுவது உபயோகமாயிருக்கும் என்று கருதுகிறேன்.

முதன்முதலில் சாயிபாபாவின் ஓர் உருவப்படம் இன்றியமையாத ஒன்று. ஏனெனில், பாபாவும் அவரது படமும் வேறல்ல. தவிர,அது பாபாவின் மேல் இடையறாத தியானம் செய்ய வேண்டியதின் உயர்வைப் பற்றிச் சக்திவாய்ந்த முறையில் நினைவுபடுத்துகிறது. பாபாவின் படம், அத்தகைய குறிக்கோளை அடைய முயலும்படித் தூண்டுகிறது. பாபாவின் படத்தைப் பார்ப்பது மிகவும் சக்தி வாய்ந்த சாதனையாகும்.

இரண்டாவதாக, பாபாவின் வாழ்க்கைச் சரிதத்தைத் தவறாமல் பாராயணம் செய்வது, நமது மனதை ஆத்மீகக் குறிக்கோளை நோக்கி இழுக்கும். நமது எல்லா எண்ணங்களும் உணர்வுகளும் பாபாவைப் பற்றியே வட்டமிடும்படிச் செய்யும். பாபாவின் சரிதத்தைக் கற்ற புத்திசாலியான ஒருவருக்குத் தடையே உதவியாக மாறிவிடுகிறது.

மூன்றாவதாக, எப்போதுமே பாபாவின் நினைவிலேயே மூழ்கி, அவரது திவ்ய நாமத்தை இடையறாது உச்சரிப்பதில் நம் மனதை ஈடுபடுத்தும்படியான வழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

நாலாவதாக, நாம் எதை உண்டாலும் அல்லது பருகினாலும், அதை மானசீகமாகப் பாபாவுக்கு நிவேதனம் செய்து, அவரது பிரசாதமாக உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

ஐந்தாவதாக, நாளின் முதல் 15 நிமிடநேரத்தை, நாள் முழுவதும் நாம் பாபாவின் நினைவில் தோய்ந்திருப்பதற்காக, நம் பாவனையை இசைவு செய்துகொள்ளுவதில் செலவிடவேண்டும். மீண்டும், தூங்குவதற்கு முன், நாளின் இறுதி 15 நிமிடங்களையும் பாபாவைப் பற்றிச்  சிந்திப்பதிலும் செலவிட முயல வேண்டும்.

ஆறாவதாக, ஸ்ரீ சாயிபாபாவின் விபூதியை நாள்தோறும் இட்டுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஏழாவதாக, வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் பாபாவை மனமார வழிபடுவதற்காக ஒதுக்க வேண்டும். பாபா, தமது படத்தோடு ஒன்றுப்பட்டவர் என்பதைப் பலமாக நினைவுகூர்ந்து, அவரது இருப்பை உணர்ந்து, அவரது படத்தைப் பூஜை செய்ய வேண்டும்.

எட்டாவதாக முடிந்தபோதெல்லாம்,தினசரி, வாரந்திர சாய் சத்சங்கத்தில் பங்கேற்க முயல வேண்டும்.

                                                                             - ஆச்சார்யா  E . பரத்வாஜா.
                  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, September 12, 2016

கடைக்கண் பார்வை


இன்பங்களால் பாபா உயர்ந்து போகவும் இல்லை.துரதிஷ்டங்களால் அவர் தாழ்ச்சியுறவும் இல்லை.அரசனும் ஆண்டியும் அவருக்கு ஒன்றே.அவருடைய கடைக்கண் பார்வை ஒன்றே பிச்சைக்காரனையும் அரசனாக்கும் வல்லமை படைத்தது.- ஸ்ரீ சாய் சத் சரித்திரம்
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, September 11, 2016

நம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும்


குருவைத் தவிர வேறெவருக்கும் இம் மனிதவுடலுக்கு நற்கதியளிப்பது எப்படி என்பது தெரியாது. குரு தமது கரங்களால் தூக்குவதால் தான் ஜடம் போன்ற மனிதர்கள் மேலெழுப்பப்படுகிறார்கள்.
'குரு, மந்திரங்கள், புனிதத்தலங்கள், தேவதைகள், வைத்தியர்கள்', இந்த ஐந்திற்கும் ஒருவருடைய நம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும்.
நம்பிக்கையும் விசுவாசமும் எவ்வளவு ஆழமோ,அதற்கேற்றவாறே சித்திகளின் பரிமாணமும் அமையும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, September 10, 2016

எல்லாமே பாபாவின் செயல்

பக்தன் தான் சாயியோடு ஒன்றியவன் என்ற பாவனையிலேயே பாபாவை வழிபட வேண்டும். சாயியும் பக்தனைத் தன்னில் ஒன்றியவன் என்றே வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார்.  இவ்வாறான பரஸ்பர சமரசபாவனை இல்லாவிட்டால் எல்லாச் செயல்களும் கேவலம் வெளிவேஷங்களே. அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.  நாம் ஒன்றும் அறியாத குழந்தைகள்.  கோணல் சிந்தனைகளும், உடும்புப்பிடியாக பலவற்றைப் பிடித்துக் கொள்ளுகிற தன்மையும் உள்ள மனதை அவரது பாதங்களில் சமர்ப்பித்து அவர் எப்படி செயல்பட நம்மை அனுமதிக்கிறாரோ அப்படியே நடக்க விட்டுவிடுங்கள். நடப்பதெல்லாம் பாபாவின் செயல் என்ற எண்ணம் உங்கள் மனதில் உதிக்கட்டும். எதையும் நான்தான் செய்கிறேன் என எண்ணாதீர்கள். இந்த நிலைக்கு நீங்கள் மாறும்போது அவர் உங்கள் கைகளை வலியப் பிடித்துக்கொண்டு செயலாற்றுவதை உணர்வீர்கள். 'நீரே கதி' என்று அவரை சரணம் அடையுங்கள்; நீங்கள் மங்களம் நிறைந்தவராக ஆகிவிடுவீர்கள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, September 9, 2016

குரு சேவையில் உன் வாழ்வை கழித்திடு


'குரு' மும்மூர்த்திகளின் அவதாரம். ஆகையால் 'குரு' திருப்தி அடைந்தால் மும்மூர்த்திகள் சந்தோஷமடைவார்கள். குரு  கோபித்தால் மும்மூர்த்திகளில் யாரும் காப்பாற்றமுடியாது. குருவின் கருணையினால் மனிதன் முக்தி அடைவான். குரு தன் சீடனுக்கு நல்லது, கேட்டதை தெரிவித்து நன்மார்கத்தில் செல்வதற்கு வழி காட்டுவார். அவர் ஞானஜோதி சொரூபம். அப்படிப்பட்ட குருவின் சேவையினால் மனிதனுக்கு எல்லா வளமும் கிடைத்து சத்கதி அடைவான். எவனொருவன் மிக்க பக்தியுடன், சிரத்தையுடன் குருவை சேவிக்கிறானோ அவனுக்கு சகல தேவதைகள் வசமாகும். ஆகையால் குரு சேவையில் உன் வாழ்வை கழித்திடு -ஸ்ரீ குரு சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, September 8, 2016

நூறு மடங்கு திருப்பியளிப்பேன்


"என்னைத் தம்முடைய ஜீவப்பிராணனைவிட அதிகமாக எவர் நேசிக்கிறாரோ அவரே எனக்கு வேண்டும். அப்பேர்ப்பட்டவருக்கு, அவர் ஒரு குணம் (மடங்கு) கொடுத்தால் நான் நூறு குணம் (மடங்கு) திருப்பியளிப்பேன்." - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, September 7, 2016

நம்பிக்கையோடு இருங்கள், பாபா உங்களை காப்பாற்றுவார்.


D.R. ஜோஷி தேவ்காங்கர் என்பவரது மகளான திருமதி மலன்பாய் என்பவள் காசநோயால் துன்புற்றுக் கொண்டிருந்தால். மருந்துகள் பலனளிக்கத் தவறவே அவளை பாபாவிடம் அழைத்துச்சென்றனர். பாபா அவளை ஒரு கம்பளியின் மேல் படுக்கும்படியும், நீரைத் தவிர, வேறெதுவும் உண்ணாமல்   இருக்கும்படியும் கூறினார். அவரது அறிவுரைப்படியே விழிப்புடன் நடந்து வந்த அப்பெண், ஒரு வார காலத்துக்குப்பின்  ஒரு நாள் விடிகாலை இறந்து போனால்.  பாபா அப்போது சாவடியில் இருந்தார். ஷீரடி வரலாற்றிலேயே பாபா முதன்முறையாக, பாபா காலை எட்டு மணி ஆகியும் சாவடியை விட்டு நகரவில்லை. அந்தப் பெண்ணின் பெற்றோர் அந்திமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, மலன்பாய் மூச்சுவிடுவதைப் போலத் தோன்றியது. அவள் கண்களை விழித்துப்பார்த்தாள். பின்னர் தனது அனுபவத்தை விவரித்தால் :" ஒரு கரும் மனிதன் என்னைத் தூக்கிச் சென்றான். பெரும்பீதியுற்ற நான், பாபாவின் உதவியை நாடி கத்தினேன்.பாபா அங்கே தோன்றித் தமது தடியை எடுத்து அவனை அடித்து என்னை அவன் கைகளிலிருந்து பிடுங்கிச் சாவடிக்குத் தூக்கி வந்தார் " என்றாள். சாவடியைப் பார்த்திராத அவள், அதைப் பற்றி மிகச்சரியாக விவரித்தால். அவள் உயிர் பிழைத்த அக்கணமே பாபா சாவடியை விட்டுப் புறப்பட்டு, மோசமான வசவுகளை உரத்த குரலில் கூறிக்கொண்டும், தமது குச்சியால் பூமியை அடித்துக்கொண்டும், அந்தப் பெண் படுத்துக் கொண்டிருந்த தீக்ஷிதரின் வாடாவை அடைந்தார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, September 6, 2016

பூரணமான நம்பிக்கை


                                           


"இந்த பாதங்கள் புராதனமானவை. உம்முடைய கவலைகள் எல்லாம் தூக்கியடிக்கப்பட்டுவிட்டன. என்னிடம்  பூரணமான நம்பிக்கை வையும். சீக்கிரமே நீர் பேறுபெற்றவர் ஆவீர்"
                                                                                         -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, September 5, 2016

அறுவை சிகிச்சை


நானா சாஹேப் பாபாவின் மிகப்பெரிய பக்தர்; ஒருமுறை அவருக்கு முதுகுப்புறம் ஏற்பட்ட கட்டியின் காரணமாக அறுவை சிகிச்சை செய்தாகவேண்டும் என்று டாக்டர்கள் குழு தெரிவித்தது. அவரும் அவ்வாறே தயாரானார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த நாளில்; அவர் இருக்கும் அறையின் மேல்தளத்தின் ஓடுகள் சரியத்தொடங்கின, அதில் ஒரு கூர்மையான ஓடு மிகச்சரியாக குப்புறப்படுத்துக் கொண்டிருந்த நானாவின் முதுக்கட்டியின் மீது சரக்கென்று விழுந்து, சிதைத்தது. வழியால் துடித்தார் நானா. டாக்டர்கள் அதிர்ந்து போனார்கள்.

கட்டி உடைந்து, ரத்தமும், சீழுமாய் வெளியேறிற்று. டாக்டர்கள் அவசர அவசரமாய் நானாவை சோதித்தார்கள். என்ன ஆச்சரியம்! அறுவை சிகிச்சையே செய்யவேண்டாம் என்று சொன்னது மருத்துவக் குழு.  அத்தனை அற்புதமாக ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆம். ஏழெட்டு டாக்டர்கள் உத்திரவாதம் தராமல் செய்வதாக இருந்த அறுவை சிகிச்சையை, உத்திரத்திலிருந்து விழுந்த ஒரு ஓடு செய்துவிட்டது!

சில நாட்கள் சென்றன. நானா  சாஹேப் பூரண குணமடைந்ததும் பாபாவைக் காணச் சென்றார்.

"வா-வா .." என்று அவரை அழைத்த சாயிபாபா, தன் ஆட்காட்டி விரலை நானா சாஹேப் முன்னால் நீட்டினார். ஒன்றும் புரியாமல் பார்த்தார் நானா. பாபா புன்னகைத்தார். "என்னப்பா, என்னிடம் நீ சொல்லாவிட்டால் எனக்குத் தெரியாதா என்ன? இதோ என் ஆட்காட்டிவிரலால் கூரையிலிருந்து ஓட்டினைத் தள்ளி, உனக்கு சிகிச்சை செய்ததே நான்தான்!" என்று புன்னகைத்தார் ஷிர்டி சாயிபாபா.

பரவசத்தில் நெகிழ்ந்து போனார் நானா சாஹேப்.

ஆமாம். உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் பாபாவை பிராத்தனை செய்யுங்கள். நீங்கள் பிராத்தனை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, பாபா உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார், உங்கள் மேல் அக்கறையுடன்தான் இருக்கிறார் என்பதை மட்டுமாவது நம்புங்கள்.உளமார நம்புங்கள். அப்புறம் பாருங்கள், உங்கள் வாழ்வில் நடக்கும் அற்புதங்களை! நம்பவே முடியாத ஆச்சர்யங்களை.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, September 4, 2016

செய்யக்கூடிய சக்தி என் வாயிற்படியில் படுத்துக்கிடக்கிறதுஇதோ பார், உனக்கு நடப்பவையெல்லாம் மறைந்து வேலைசெய்யும் கர்மவினைகளின் வானளாவிய ஓட்டமே. நான் செய்பவனுமல்லேன், செய்ய வைப்பவனுமல்லேன் என்பதை உறுதியாக அறிந்துகொள். ஆனாலும், செய்யக்கூடிய சக்தி என் வாயிற்படியில் படுத்துக்கிடக்கிறது!
எவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் என்மீது தன் பாரத்தைப் போடுகிறானோ, அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, September 3, 2016

பாபா வியாதியை நிவாரணம் செய்துவிடுகிறார்ரோகம் எது, ஆரோக்கியம் எது ? ஒருவருடைய புண்ணியமோ பாவமோ தீராமல், கர்மவினை கழியாமல், எந்த வைத்தியமும் பலன் தராது.
இருப்பினும், ஒருவருடைய பாக்கியத்தால் பாபாவின் அருட்பார்வை கிடைத்தால், அது வியாதியைத் துடைத்துவிடுகிறது. பீடிக்கப்பட்டவர் வியாதியைச் சுலபமாகவும் துன்பமின்றியும் பொறுத்துக்கொள்வார்.
வியாதி பொறுக்கமுடியாத வலியையும் கஷ்டத்தையும் கொணர்கிறது. ஆனால், பாபா தம்முடைய கருணை மிகுந்த பார்வையால் எந்த துக்கமும் ஏற்படாதவாறு வியாதியை நிவாரணம் செய்துவிடுகிறார். பாபாவின் கிருபை கனிந்த பார்வையொன்று போதும்; பட்டமரம் துளிர்த்துவிடும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, September 2, 2016

மந்திரமோ, உபதேசமோ பெற முயலவேண்டாம்


"எவரிடமிருந்தும் மந்திரமோ, உபதேசமோ பெற முயலவேண்டாம். என்னையே உங்களது எண்ணங்கள், செயல்கள் இவற்றின் ஒரே குறிக்கோளாக அமைத்துக் கொள்ளுங்கள். சந்தேகம் ஏதுமின்றி உங்கள் குறிக்கோளை அடைவீர்கள்".- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

பாபாவின் பக்தரான ராவ் பகதூர் ஹரி விநாயக் ஸதேயின் அனுபவம் ;

பாபா யாருக்கும் உபதேசம் அளித்ததில்லை. ஆகவே எனக்கு மந்திரோபதேசம் வேண்டுமென நான் அவரிடம் வேண்டவில்லை. ஆனால் பல சந்தர்ப்பங்களில் மற்ற குருக்களிடம் உபதேசம் பெற நான் அழைக்கப்பட்டேன். பாபா இருக்கும்பொழுது மற்ற குருக்களிடம் இந்த நோக்கத்துடன் நான் சொல்லவேண்டுமா என்ற பிரச்னை எழுந்தது. பாபாவிடம் வேண்டினேன்; பாபா ஒப்புதல் அளிக்கவில்லை.
பாபாவால் முறைப்படி தீக்ஷை அளிக்கப்படவில்லை எனினும் பாபா திசைமாறா கவனத்துடன் நான் அவரையே நம்பியிருக்கவேண்டும் என்பதே அவர் விருப்பம். தனது பக்தனின் லௌகீக, ஆன்மீக நலன்கள் யாவற்றையும் கவனித்துக் கொள்ள அவர் சக்தி படைத்தவராகவும், தயாராகவும் இருந்தார்.
குரு பௌர்ணமி தினத்தன்று பாபாவை குருவாக எல்லா பக்தர்களும் கூட்டு வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யும்படி என்னை பணித்தார். ஆனால் சிவராத்திரி நள்ளிரவில் அவரை சிவபெருமானாக நான் பூஜிக்க முயன்றபோது, அவர் அதை ஆமோதிக்கவில்லை. பாபா மற்றவர்களிடமிருந்து நான் உபதேசம் பெறுவதை விரும்பவில்லை எனினும் நான் சாதுக்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு அவர்களை உபசரிக்க வேண்டுமென விரும்பினார். 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, September 1, 2016

ஷீரடி " பக்தர்: பாபா என்னை ஏன் இங்கு (ஷிர்டி) வரவழைத்தீர்கள்?

 பாபா : ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கின்றனர். நான் அவர்களை   எல்லாம் இங்கு அழைப்பதில்லை. நீரும் நானும் பல ஜன்மங்களாக நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள். நீர் அதை அறிய மாட்டீர். ஆனால் நான் அறிவேன். நேரம்  கிடைக்கும் போதெல்லாம், இங்கு (ஷிர்டி) வந்து போய் கொண்டிரும்.

பாபா உங்களை அழைத்தால் மட்டுமே உங்களால் ஷீரடிக்கு செல்ல முடியும்.
ஷீரடிக்கு செல்லும் உங்களுக்கு சில உதவி குறிப்புகள்.....                                                                 

எப்படி செல்வது ?


இந்தியாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் ரயில், பேருந்து, மற்றும் கார் மூலமாக ஷீரடிக்குச் செல்லலாம். ஷீரடிக்கு நேரிடையாக வந்து சேரும் வசதியற்ற நகரங்களில் வசிப்பவர்கள் புனே (200 கி.மீ ), கோபர்காவ் (14 கி.மீ ) மன்மாட் (55 கி. மீ ) நாசிக் ( 85 கி.மீ ) மற்றும் ஔரங்கபாத் (132 கி .மீ ) ஆகிய நகரங்களுக்கு வந்து சேர்ந்து, அங்கிருந்து ஷீரடியைப் பேருந்து மற்றும் கார் மூலம் சென்றடையலாம்.

சென்னையிலிருந்து சுமார் 1400 கி.மீ. தொலைவில் உள்ள ஷீரடிக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஒவ்வொரு புதன் கிழமையிலும் காலை 10.00 மணிக்கு ஷீரடி விரைவு ரயில் புறப்பட்டு, வியாழன் காலை 11.30 மணிக்கு ஷீரடியைச் சென்றடைகிறது. அதே போல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் ஷீரடியிலிருந்து காலை 8.00 மணிக்கு சென்னை விரைவு ரயில் புறப்பட்டு சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது. முன்பதிவு செய்து கொண்டு சென்று வரலாம்.

சென்னையிலிருந்து மும்பை செல்லும் ரயிலில் புனே வரை சென்றால் அங்கிருந்து 200 கி.மீ. தூரத்தில் இருக்கும் ஷீரடிக்கு அரை மணிக்கு ஒரு பேருந்து செல்கிறது. அல்லது ரயிலில் தோண்ட் வரை சென்று அங்கிருந்து கோபர்காவுக்கு  ரயில் அல்லது பேருந்து மூலம் செல்லலாம். நவஜீவன் விரைவு ரயிலிலும் புஷாவல் வரை சென்று அங்கிருந்து மன்மாட் வழியாக ஷீரடிக்குப் பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம். முன்பதிவு செய்து கொண்டு பயணம் மேற்கொள்வதே சிறந்தது.
இந்திய ரயில்வே சுற்றுலாத்துறை மற்றும் தனியார் சுற்றுலா நிறுவனங்கள் ஷீரடிக்குப் பக்தர்களைக் கூட்டிச் சென்று வருகின்றன.GOOGLE இல் SHIRDI SPIRITUAL TOUR என்று தேடினாலே விவரங்கள் கொட்டுகின்றன.

எங்கே தங்குவது ?

ஷீரடியில் உணவு விடுதிகளுடன் கூடிய எண்ணற்ற தங்கும் விடுதிகள் உள்ளன. ( வாடகை ரூ.100/- முதல் ரூ. 2000/- வரை )

இவை மட்டுமல்லாது ஷீரடி சாயிபாபா கோவிலின் ஸ்ரீ சாயி சன்ஸ்தான் டிருஸ்டுக்கு சொந்தமான சாயி ஆஷ்ரம் விடுதியில் 1536 அறைகள் உள்ளன. தவிர குளிர்சாதன வசதியுடன் கூடிய 384 அறைகளும் உள்ளன.

பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள துவாரவதி விடுதியில் 334 அறைகளும், பெரிய குடும்பத்தினர் ஒன்றாகக் கூடி தங்கா வசதி கொண்ட பெரிய அறைகளும் உள்ளன. குளிர்சாதன வசதி கொண்ட 80 அறைகளும் உள்ளன. இவையனைத்தும் 24 மணி நேர தண்ணீர் மற்றும் மின்சார வசதி, வண்டிகளை நிறுத்த இட வசதி ஆகியவற்றுடன் அமைந்துள்ளன.

சன்ஸ்தான் டிருஸ்ட் பாபாவை தரிசிக்க வருகை தரும் எளிய பக்தர்களுக்காக, குளியலறை மற்றும் கழிப்பறை வசதியுடன் கூடிய, நால்வர் தங்க முடிகிற எளிமையான அறைகளை நாளொன்றுக்கு ரூ. 50/- வாடகையில் அளிக்கிறது.

தவிர ஐநூறுக்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட பக்த நிவாஸ், சமாதி மந்திருக்கு தெற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 24 மணி நேர மின்சாரம், குடிநீர், உணவகம், வண்டிகளை நிறுத்த இடம் ஆகிய வசதிகளும் இங்கு உள்ளன.

https://online.sai.org.in/  என்ற வலைதளத்தில் அறைகள், ஆரத்தி மற்றும் தர்ஷன் ஆகியவற்றுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மகாராஷ்டிர மாநில சுற்றுலாத் துறை விடுதியும் உண்டு. அனைத்து வசதிகளும் கொண்ட அறைகள் கிடைக்கும். வாடகை ரூ.1200/- முன்பதிவுக்கு அணுக வேண்டிய முகவரி ;

MAHARASHTRA TOURISM DEVELOPMENT CORPORATION,

PIMPALWADI ROAD,SHIRDI,AHMEDNAGAR DISTRICT,

MAHARSHTRA, INDIA

Tel : 91-11-(02423)-255194, 255195, 255196, 255197.
Email - contactmaharashtratourism@gmail.com

தரிசன நேரம் 

சமாதி மந்திர் காலை 04.00 மணி முதல் இரவு 11.15 மணி வரை திறந்திருக்கும். தினதோறும் அதிகாலை 04.30 மணிக்கு காகட் ஆரத்தி, நண்பகல் 12.00 மணிக்கு மதிய ஆரத்தி, மாலை அஸ்தமன நேரத்தில் தூப் ஆரத்தி, இரவு 10.30 மணிக்கு ஸேஜ் ஆரத்தி என நான்கு கால ஆரத்தி நடைபெறும். தவிர சத்யநாராயண பூஜையும் தினமும் நடைபெறுகிறது.

60 வயதைக் கடந்தவர்களுக்கும், அயல்நாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் சிறப்பு அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.


" என் பக்தன் ஆயிரம் மயில்களுக்கு அப்பால் இருந்தாலும், ஒரு குருவி யின் கால்களுக்கு கயிறு கட்டி இழுப்பது போல். இந்த மசுதி தாயிடம் இழுத்துக்கொண்டு வருவேன். - ஷிர்டி சாய்பாபா "http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...