Thursday, September 1, 2016

ஷீரடி " பக்தர்: பாபா என்னை ஏன் இங்கு (ஷிர்டி) வரவழைத்தீர்கள்?

 பாபா : ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கின்றனர். நான் அவர்களை   எல்லாம் இங்கு அழைப்பதில்லை. நீரும் நானும் பல ஜன்மங்களாக நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள். நீர் அதை அறிய மாட்டீர். ஆனால் நான் அறிவேன். நேரம்  கிடைக்கும் போதெல்லாம், இங்கு (ஷிர்டி) வந்து போய் கொண்டிரும்.

பாபா உங்களை அழைத்தால் மட்டுமே உங்களால் ஷீரடிக்கு செல்ல முடியும்.
ஷீரடிக்கு செல்லும் உங்களுக்கு சில உதவி குறிப்புகள்.....                                                                 

எப்படி செல்வது ?


இந்தியாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் ரயில், பேருந்து, மற்றும் கார் மூலமாக ஷீரடிக்குச் செல்லலாம். ஷீரடிக்கு நேரிடையாக வந்து சேரும் வசதியற்ற நகரங்களில் வசிப்பவர்கள் புனே (200 கி.மீ ), கோபர்காவ் (14 கி.மீ ) மன்மாட் (55 கி. மீ ) நாசிக் ( 85 கி.மீ ) மற்றும் ஔரங்கபாத் (132 கி .மீ ) ஆகிய நகரங்களுக்கு வந்து சேர்ந்து, அங்கிருந்து ஷீரடியைப் பேருந்து மற்றும் கார் மூலம் சென்றடையலாம்.

சென்னையிலிருந்து சுமார் 1400 கி.மீ. தொலைவில் உள்ள ஷீரடிக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஒவ்வொரு புதன் கிழமையிலும் காலை 10.00 மணிக்கு ஷீரடி விரைவு ரயில் புறப்பட்டு, வியாழன் காலை 11.30 மணிக்கு ஷீரடியைச் சென்றடைகிறது. அதே போல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் ஷீரடியிலிருந்து காலை 8.00 மணிக்கு சென்னை விரைவு ரயில் புறப்பட்டு சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது. முன்பதிவு செய்து கொண்டு சென்று வரலாம்.

சென்னையிலிருந்து மும்பை செல்லும் ரயிலில் புனே வரை சென்றால் அங்கிருந்து 200 கி.மீ. தூரத்தில் இருக்கும் ஷீரடிக்கு அரை மணிக்கு ஒரு பேருந்து செல்கிறது. அல்லது ரயிலில் தோண்ட் வரை சென்று அங்கிருந்து கோபர்காவுக்கு  ரயில் அல்லது பேருந்து மூலம் செல்லலாம். நவஜீவன் விரைவு ரயிலிலும் புஷாவல் வரை சென்று அங்கிருந்து மன்மாட் வழியாக ஷீரடிக்குப் பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம். முன்பதிவு செய்து கொண்டு பயணம் மேற்கொள்வதே சிறந்தது.
இந்திய ரயில்வே சுற்றுலாத்துறை மற்றும் தனியார் சுற்றுலா நிறுவனங்கள் ஷீரடிக்குப் பக்தர்களைக் கூட்டிச் சென்று வருகின்றன.GOOGLE இல் SHIRDI SPIRITUAL TOUR என்று தேடினாலே விவரங்கள் கொட்டுகின்றன.

எங்கே தங்குவது ?

ஷீரடியில் உணவு விடுதிகளுடன் கூடிய எண்ணற்ற தங்கும் விடுதிகள் உள்ளன. ( வாடகை ரூ.100/- முதல் ரூ. 2000/- வரை )

இவை மட்டுமல்லாது ஷீரடி சாயிபாபா கோவிலின் ஸ்ரீ சாயி சன்ஸ்தான் டிருஸ்டுக்கு சொந்தமான சாயி ஆஷ்ரம் விடுதியில் 1536 அறைகள் உள்ளன. தவிர குளிர்சாதன வசதியுடன் கூடிய 384 அறைகளும் உள்ளன.

பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள துவாரவதி விடுதியில் 334 அறைகளும், பெரிய குடும்பத்தினர் ஒன்றாகக் கூடி தங்கா வசதி கொண்ட பெரிய அறைகளும் உள்ளன. குளிர்சாதன வசதி கொண்ட 80 அறைகளும் உள்ளன. இவையனைத்தும் 24 மணி நேர தண்ணீர் மற்றும் மின்சார வசதி, வண்டிகளை நிறுத்த இட வசதி ஆகியவற்றுடன் அமைந்துள்ளன.

சன்ஸ்தான் டிருஸ்ட் பாபாவை தரிசிக்க வருகை தரும் எளிய பக்தர்களுக்காக, குளியலறை மற்றும் கழிப்பறை வசதியுடன் கூடிய, நால்வர் தங்க முடிகிற எளிமையான அறைகளை நாளொன்றுக்கு ரூ. 50/- வாடகையில் அளிக்கிறது.

தவிர ஐநூறுக்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட பக்த நிவாஸ், சமாதி மந்திருக்கு தெற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 24 மணி நேர மின்சாரம், குடிநீர், உணவகம், வண்டிகளை நிறுத்த இடம் ஆகிய வசதிகளும் இங்கு உள்ளன.

https://online.sai.org.in/  என்ற வலைதளத்தில் அறைகள், ஆரத்தி மற்றும் தர்ஷன் ஆகியவற்றுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மகாராஷ்டிர மாநில சுற்றுலாத் துறை விடுதியும் உண்டு. அனைத்து வசதிகளும் கொண்ட அறைகள் கிடைக்கும். வாடகை ரூ.1200/- முன்பதிவுக்கு அணுக வேண்டிய முகவரி ;

MAHARASHTRA TOURISM DEVELOPMENT CORPORATION,

PIMPALWADI ROAD,SHIRDI,AHMEDNAGAR DISTRICT,

MAHARSHTRA, INDIA

Tel : 91-11-(02423)-255194, 255195, 255196, 255197.
Email - contactmaharashtratourism@gmail.com

தரிசன நேரம் 

சமாதி மந்திர் காலை 04.00 மணி முதல் இரவு 11.15 மணி வரை திறந்திருக்கும். தினதோறும் அதிகாலை 04.30 மணிக்கு காகட் ஆரத்தி, நண்பகல் 12.00 மணிக்கு மதிய ஆரத்தி, மாலை அஸ்தமன நேரத்தில் தூப் ஆரத்தி, இரவு 10.30 மணிக்கு ஸேஜ் ஆரத்தி என நான்கு கால ஆரத்தி நடைபெறும். தவிர சத்யநாராயண பூஜையும் தினமும் நடைபெறுகிறது.

60 வயதைக் கடந்தவர்களுக்கும், அயல்நாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் சிறப்பு அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.


" என் பக்தன் ஆயிரம் மயில்களுக்கு அப்பால் இருந்தாலும், ஒரு குருவி யின் கால்களுக்கு கயிறு கட்டி இழுப்பது போல். இந்த மசுதி தாயிடம் இழுத்துக்கொண்டு வருவேன். - ஷிர்டி சாய்பாபா "http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவால் அருளப்பட்ட அத்தனையும் நன்மைக்கே !

பாபாவால் நமக்கு அருளப்பட்ட அத்தனையும் நிச்சயமாக நன்மைக்காகவே ஆனது என்னும் உறுதியான நம்பிக்கையுடன் பாபா அருளிய யாவற்றையும் மகிழ்ந்து அனுபவிக்...