Monday, October 31, 2016

அங்கேயே அப்போழுதே அருள் புறிவேன்
"நான் பக்தர்களின் அடிமை.அவர்களுக்காகவே நான் இருக்கிறேன்.பக்தர் அழைக்கும்போதெல்லாம் அங்கேயே அப்போழுதே அருள் புறிவேன். அவர்களின் அன்புதான் எனக்கு உயிர்."-ஷீரடி சாய்பாபா[மாண்புமிகு மகான்கள்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, October 27, 2016

நூறு பங்குக்கு மேலேயே திரும்பக் கொடுத்தார்


தர்மத்தை பற்றி பாபா, நம்பிக்கையுடன் கொடுங்கள், பணிவுடன் கொடுங்கள், பயபக்தியுடன் கொடுங்கள், இரக்கத்துடன் கொடுங்கள். தான தர்மத்தை அடியவர்களுக்கு போதிப்பதற்கும் பணத்தில் அவர்களுக்குள்ள பற்று குறைவதற்கும் அதன் மூலம் அவர்கள் மனது சுத்தமடையும்படி செய்வதற்கும் பாபா பக்தர்களிடமிருந்து தக்ஷிணையைக் கட்டாயமாகப் பெற்றார். அனால் அதில் ஒரு விசித்திரம் இருந்தது. அதாவது தாம் வாங்கியதைப் போன்று நூறு பங்குக்கு மேலேயே திரும்பக் கொடுத்தார். - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
சாய் பக்தர்களுக்கு ஸ்ரீ சாய் சத்சரித்திரமே வேதம். அந்த தெய்வீக புத்தகம் சாக்ஷாத் சாயியின் ஸ்வரூபமே அன்றி வேறல்ல... சாய் சத்சரித்திரத்தில் இருந்து சில துளிகள்...

* பாபா எங்கும் உள்ளார். அவர் எந்த எல்லைக்கும் உட்பட்டவர் அல்ல. பாபா ஷீரடியில் மட்டுமே இருக்கிறார் என்பவர், உண்மையில் பாபாவை காணத் தவறியவரே.

*பாபாவின் படத்திற்கும் பாபாவுக்கு சிறிதளவும் வித்தியாசம் இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும் பாபாவின் படமும் சாக்ஷாத் எப்போதும்  வாழ்கின்ற தெய்வீக அவதாரமான பாபாவே. இதில் சந்தேகமே வேண்டாம்.

* ஜோதிடம், ஜாதகம் ஆகியவற்றை நம்பாமல், தன்னை மட்டுமே நம்பும்படி பாபா கூறியுள்ளார். ஏனென்றால், தன்னிடம் பூரண சரணாகதி அடைந்த பக்தர்களின் காரியங்களை பொம்மலாட்டத்தை போன்று தானே நடத்துவதாக கூறியுள்ளார்.

* எப்பொழுதும் உணவு உண்ணும் முன் பாபாவுக்கு மானசீகமாகவாவது நிவேதனம் செய்யுங்கள், இது போன்ற பக்தர்களிடம் எப்பொழும் கூடவே இருப்பதாக கூறியுள்ளார். பட்டினியாய் இருப்பதை ( விரதம் ) இருப்பதை பாபாஒருபோதும் அங்கிகரிக்கவில்லை.

* நாய், பூனை, நோய்வாய்ப்பட்ட மனிதன் என நீங்கள் காணும் சகலமும் பாபாவின் ரூபமே. பசியாய் இருக்கும் எந்த ஜீவனுக்கும் உணவளிப்பவர் உண்மையில் அதை பாபாவின் வாயிலேயே இடுவதாக கூறியுள்ளார்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, October 26, 2016

அனைத்து வியாதிகளும் குணப்படுத்தப்படும்என்னுடைய கதைகள், உபதேசங்கள் இவைகளைக் கேட்போருக்கு நான் பணிவிடை செய்வேன். செய்வது மட்டுமல்ல, அவர்கள் ஆசைகளையும் பூர்த்தி செய்வேன். என்னுடைய கதைகள் வெறுமனே கேட்கப்பட்டால் கூட அவர்களது அனைத்து வியாதிகளும் குணப்படுத்தப்படும். என்னுடைய பக்தர்களை எக்கணமும் அச்சுறுத்துகின்ற ஆபத்துக்களின் கோரப்பற்களிலிருந்து நான் வெளியே இழுத்துவிடுவேன்.  - ஸ்ரீ ஷீரடி சாயிபாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, October 25, 2016

சாதாரண வித்தைகாரர் அல்ல

பாபா ஒரு சாதாரண வித்தைகாரர் அல்ல, அவர் ஒரு சமர்த்த சத்குரு. பக்தர்களின் உள்ளங்களில் விசுவாமும் நம்பிக்கையும் நிரம்பி வழிய பாபா சில சமத்காரங்களையோ, வியக்கத்தகும் உத்திகளையோ கையாளுகிறார். நன்றி உணர்ச்சி, பிரேமை, பக்தியாக மாறுகிறது. இவ்வாரு பாபாவின் செயல்பாட்டின் உண்மை நோக்கம் காணப்படுகிறது. கீழ்த்தரமான பற்றுக்களால் உண்டாகும் மாசுகளையும் அதன் விளைவுகளையும் பக்தர்களின் இதயங்களிலிருந்து போக்கி, தூய்மைப்படுத்தி, படிப்படியாக பக்தர்களின் ஆன்மாக்களை உயர்ந்த, மேன்மேலும் உயர்ந்த, நிலைகளுக்கு நடத்திச் சென்று அவர்கள் இறுதியில் தம்முடனே இரண்டறக் கலந்து விடும்படி செய்கிறார் பாபா. தங்கள் தேவைகள் யாவற்றையும் அளிக்கக் கூடிய வள்ளல் என்ற நோக்கத்துடன் மக்கள் பாபாவை அணுகுகின்றனர். அவர்களது லௌகீக தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே பாபாவிடம் செல்கின்றனர். ஆனால் பின்னர் பலர் பாபா ராமன், சிவன் போலவே தங்கள் இஷ்ட தெய்வம் என்றும், தங்கள் முன்னோர்களின் குல தெய்வமே பாபாவாக புதிய உருவில் தோன்றி வையகத்தில் புராதானதெய்வீக பணிகளை நிறைவேற்றுகிறது எனவும், கண்டு கொண்டுவிடுகின்றனர்.
                                                                             -பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, October 23, 2016

உன்னுடன் இருப்பேன்.நான் உன்னுடன் இருப்பேன். உன் உள்ளே இருப்பேன், புறத்தே இருப்பேன். நீ எப்படியிருந்தாலும்,என்ன செய்தாலும் அவ்வாறு இருப்பேன். -  ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, October 22, 2016

பாபாவின் லீலைகள்

சாய் ராம்,  குரு சரித்திரம்,ஸ்ரீ சத்சரித்திரம், ஸ்ரீ ஸ்வாமி சமர்த்தர் வாழ்க்கை வரலாறு, ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் சரித்ராம்ருதம் (ENGLISH PDF FILES) புத்தகங்களை ஆங்கிலத்தில் படிக்க விரும்பும்   சாயிஅன்பர்கள்  saibabasayings@gmail.com  மின்னஞ்சல் முகவரிக்கு கேட்டு எழுதுங்கள் தங்களுக்கு pdf file  அனுப்பபடும்.

குரு சரித்திரம்,ஸ்ரீ சத்சரித்திரம்,ஸ்தவனமஞ்சரி (TAMIL PDF FILES) படிக்க விரும்பும் சாயி அன்பர்கள்  saibabasayings@gmail.com  மின்னஞ்சல் முகவரிக்கு கேட்டு எழுதுங்கள் தங்களுக்கு pdf file  அனுப்பபடும். 


குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வர
குரு சாக்ஷாத் பர பிரம்மா 
தஸ்மை ஸ்ரீ குருவே நம:  


குருவை முழுமையான நம்பிக்கையோடு பக்தியுடன் சேவிப்பவர்களுக்கு அவரின் கருணை மழை பொழியும். அப்படி சேவிக்கும் பக்தனின் கூடவே இருந்து காப்பாற்றுவதே அவரின் தர்மம். அவர்களின் துயரங்கள் தீர்ந்து வேண்டியது நிறைவேறும்.-ஸ்ரீ குரு சரித்திரம்.

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் சாஃஷாத் சாயியின் சொரூபமே..தனது சரிதத்தை படிக்கும் இடத்தில் பாபா அமர்ந்து மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருப்பார். 
நம்பிக்கையுடன் படிப்பவர்களின் துயரங்கள் அனைத்தும் விலகும். இது நம் பாபாவின் சாத்தியவாக்கு. சப்தாக பாராயணம் ( 7 நாட்களுக்குள் புத்தகத்தை படித்து முடித்தல்) செய்வதன் மூலம் எல்லா விதமான நேர்மையான கோரிக்கைகளும் நிறைவேறும். பாபாவின் மேல் முழு நம்பிக்கை வைத்து படியுங்கள். நம் அறிவிற்கு அப்பாற்பட்டவை பாபாவின் லீலைகள். 

ஸ்ரீ குருச்சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளை கவனியுங்கள்...

"பக்தவத்சலனான சத்குரு தன் கிருபையை எல்லா உயிர்களிடமும் எப்பொழுதும் பொழிவார் ! அவரைச் சேவித்தும் உன் துன்பங்கள் தீரவில்லை என்றால் உனக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை. உன் மனதில் அவரை  சந்தேகிக்கிறாய். முழுமையான, உண்மையான பக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு குருவின் அருள் பூரணமாக கிடைக்கும்."

                                            
                                                     *ஜெய் சாயிராம்*

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, October 21, 2016

சிறிதளவும் அஞ்சாதீர்


"நீர் உமது கடமையைச் செய்யும்.சிறிதளவும் அஞ்சாதீர். என் மொழிகளில் நம்பிக்கை வையும்.என்னுடைய லீலைகளை நினைவில் கொள். நான் உன்னுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்து உன்னுடைய பக்தியை அதிகப்படுத்துவேன்."

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, October 20, 2016

உங்களுடைய காரியம் கைகூடும்நம்பிக்கையுடன் பாபாவை வணங்கும் எல்லா இடமும் துவாரகாமையியே! பாபாவை தவிர வேறெதிலும் நாட்டமில்லாத பக்தர்களாலேயே இது உணரப்படும். அப்படிப்பட்ட பக்தர் கடல் கடந்து இருந்தாலும் பாபா அவருடனேயே  இருப்பார். தனக்காக எந்த விதமான பூஜை முறைகளையோ, விரதம் இருக்கவோ பாபா கூறியது இல்லை. அவர் கேட்பது அசைக்க முடியாத நம்பிக்கையை மட்டுமே. பாபா மீது அத்தகைய நம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால் இயலாத காரியம் என்று எதுவுமில்லை.

என்னிடம் அடைக்கலம் தேடி வந்தவர் நிவாரணம் பெறவில்லை என்பது,சென்றகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம் ஆகிய முக்காலங்களிலும் நடக்காத விஷயம்.உங்களுடைய காரியம் கைகூடும் என்று அறீவீர்களாக .-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, October 18, 2016

நினைத்தது நடக்கும் கேட்டதெல்லாம் கிடைக்கும்


இந்த உலகில் குருவின் வாக்கு ஒன்றுதான் மனிதனை காப்பாற்ற முடியும். குருவை நம்பியவர்களுக்குக் கேட்டதெல்லாம் கிடைக்கும். யார் யார் நினைவுகள் எப்படி இருக்குமோ, பயனும் அப்படி இருக்கும். குரு சொன்ன வார்த்தையில்  நம்பிக்கை வைத்தவனுக்கு நினைத்தது நடக்கும். -  ஸ்ரீ குரு சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, October 17, 2016

இறைவனின் அவதாரமேபாபாவை பக்தியுடன் வணங்கும் பலரும், பாபாவை குரு என்ற ஸ்தானத்தில் மட்டுமே வைத்திருக்கிறார்கள். பாபாவே  இறைவன் என்று ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. குரு என்பவர் தெய்வத்துக்கு சமமானவர். எனவே பாபாவிடம் தெய்வீகத்தன்மை இருக்கிறது என்பது பலரது நம்பிக்கை. உண்மையில் இறைவனின் பல அவதாரங்களில் பாபாவும் ஒருவரே.
எந்த சூழ்நிலையிலும் மாறா நம்பிக்கையோடு பாபாவை நீங்கள் வணங்கினால், பாபா  தாம் இறைவனின் ஒரு அவதாரமே என்று வெளிப்படுத்துவார்.

ஸ்ரீ  சாயி எப்போதும் ஒரு சாதாரண பக்கிரி போலவும், இறைவனின் சேவகர் போலவுமே நடந்து கொண்டார். ஆனால், பல சமயங்களில், அவர் பேரருளைப் பெற யார் தகுதியானவர்களோ, அம்மாதிரியான ஒரு சில அடியவர்களுக்கு மட்டுமே தான் இறைவனே என்பதை வெளிபடுத்திக் கொண்டார். பாபா ஒரு அவதாரம் என்பதற்கான குணாதிசயங்கள், 'சர்வ வல்லமை', 'சர்வ வியாபித்துவம்' ( எங்கும் நிறைதன்மை ), 'சர்வ ஞானம்' (எல்லாம் அறியும் தன்மை ) ஆகியவைகளாகும். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் அனைத்தின் மீதும் அவருக்கு முழு கட்டுப்பாடு இருந்தது.

ஸ்ரீ சாயிநாத்தின்  வாழ்க்கை வரலாற்றைக் கூறும் புத்தகமான 'ஸ்ரீ சாய் சத் சரித்திரா' வில் விவரித்துள்ளபடி அவர் மழையையும், நெருப்பையும் எப்படி தன் கட்டுக்குள் அடக்கி ஆண்டார் என்பதையும் நாம் அறிவோம். எனவே சந்தேகமே வேண்டாம், ஸ்ரீ சாய்பாபா இறைவனின் அவதாரமே.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, October 16, 2016

கவலை கொள்ளாதீர்கள்


நான்  உங்களிடத்து இல்லையென்பதாகக்  கவலை கொள்ளாதீர்கள். ஆனால்  என்னையே எப்போதும் நினைவு  கூறுங்கள். உள்ளம் உயிர் இவற்றால்  என்னை நம்புங்கள். அப்போதுதான் நீங்கள் மிகுந்த பலனை அடைவீர்கள். - ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா [ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, October 15, 2016

ஷிர்டி சாய்பாபா - 1


பாபா எப்போதும் தன் பக்தர்களுடனேயே இருக்கிறார்( நாயோ, பன்றியோ, பூனையோ, உங்களிடம் பிச்சை கேட்பவராகவோ, உங்கள் கற்பனைக்கும் எட்டாத ஒரு உருவமாகவோ அல்லது கண்ணுக்கு தெரியாமல் சூக்ஷம ரூபமாகவோ). இதை உணர்ந்த பக்தன் மிகவும் அதிர்ஷ்டசாலி என பாபாவே தெரிவித்துள்ளார். பாபா, உண்மையில் மும்மூர்த்தி (பிரம்மா,விஷ்ணு,சிவன்) அவதாரம். இந்த உண்மையை உணர்ந்த பக்தனின் பாக்கியத்தை என்னவென்று கூறுவது என்று பாபா குறிப்பிட்டுள்ளார். பிரேமை பொங்கும் பஜனையாலும், தொடர் நாமஜபத்தாலும், பாபாவின் இருப்பை பக்தர்களால் உணரமுடியும். நான் இந்த பெளதீக உடலுடன் ஷிரிடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன் என்று பாபா தெளிவாக கூறியுள்ளார். பாபா தன் பக்தர்களை எல்லா திசைகளிலும் சூழ்ந்து நின்று பாதுகாக்கிறார். வேறெதிலும் நாட்டமில்லாமல், பாபாவிடம் மட்டுமே தீவிர நம்பிக்கை ( சரணாகதி ) கொண்ட பக்தனின் காரியங்கள் யாவும் பாபாவால் பொம்மலாட்டத்தை போல் முன் நின்று நடத்த படுகின்றன. அத்தகைய பக்தர்கள் எதை பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை. லௌகீக தேவைகளுக்காகவே (வேலை, திருமணம், சம்பள உயர்வு குழந்தை பேறு போன்றவை )  பாபாவிடம்  செல்கிறோம். சில சமயங்களில் அது போன்ற வேண்டுதல்கள் நடக்காமல் போகலாம். உண்மையில் பாபா தன் பக்தர்களுக்கு எது நன்மையோ அதை மட்டுமே அளிப்பார். இது போன்ற சமயங்களில் மிகவும் நம்பிக்கையோடு பொறுமை காத்து எல்லாம் பாபாவின் விருப்பம் என்று விட்டுவிடுங்கள்.  அமைதியாக என்னிடம் இரு, மற்றவற்றை நான் பார்த்து கொள்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். நாம் கோரிக்கை வைத்தாலும், வைக்காவிட்டாலும், பாபா தன் பக்தர்களுக்கு எது நன்மை என்பதை நன்கு அறிவார்.                                                                
                                                                                              - தொடரும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil


Friday, October 14, 2016

கடவுள் அருள் புரிவார்

ஜனங்கள் பாபாவை அணுகும்போது, பாபா அல்லா பலே கரேகே (கடவுள் அருள் புரிவார் ) என சொல்லிக் கொண்டே ஊதியை அளிப்பார்; அவர் கூறியது யாவும் அப்படியே நடக்கும். ஒரு முறை " நான் இங்கே பேசிக் கொண்டிருக்கிறேன், அவை அங்கே நிகழ்கின்றன", என பாபா கூறினார். பாபாவின் சொற்கள் பிரமாணம் நிறைந்தவை. வறண்ட பாறையில் தண்ணீர் உள்ளது என அவர் கூறும்போது, அங்கே தண்ணீர் கிட்டியது. பஞ்ச பூதங்களும் அவரது ஆணைக்கு கட்டுப்பட்டன. நெருப்பு, நீர், காற்று ஆகியவை அவருடைய ஆணைக்கு கீழ்ப்படிந்ததை பல பக்தர்கள் கண்டிருக்கின்றனர். கொழுந்துவிட்டு உயரமாக எரியும் தீ அவரது ஆணைக்கு கட்டுப்பட்டு அடங்கிற்று. பலத்த காற்றும் மழையும் அவருடைய ஆணையை மதித்து நின்றன. கொளுத்தும் வெய்யில் காலத்தில் எரியும் நெருப்பின் அருகே குளுமையான காற்று வீச வேண்டுமென பாபா சங்கல்பம் செய்ய, அவ்வாறே குளிர் காற்று வீசியது. மாண்டவர் மீண்டும் உயிர்பெற்றனர். தம் முன் இருப்பினும் இல்லாவிடினும் ஒருவனது இதயத்தில் உள்ளதை அறியும் சக்தியும், அதை சீர்படுத்தும் சக்தியும் அவரிடம் இருந்தது. அவர் சர்வாந்தர்யாமி என் உணரப்பட்டார். - பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, October 13, 2016

உன்னுடனேயே இருக்கிறேன்நான் எப்போதும் உன்னுடனேயே இருக்கிறேன். பயப்படாதே. எங்கெல்லாம் என்னை நினைக்கிறயோ, அங்கெல்லாம் உன்னிடம் இருப்பேன்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, October 10, 2016

பாபாவை நேசிப்பவரா நீங்கள் ?


யார் என்னைப் பெரிதும் நேசிக்கிறாரோ அவருடைய பார்வையில் நான் அகண்டமாக (இடைவிடாது) இருக்கிறேன். நான் இல்லாது அவருக்கு இவ்வுலகம் அனைத்தும் சூனியமாகத் தெரியும். அவருடைய வாயிலிருந்து என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும் - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாhttp://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, October 9, 2016

சத்குரு"பாபாவின் கிருபையால் ஏற்படும் எழுச்சியும் விழிப்பும் கண்களுக்குப் புலப்படாது, அது எல்லா இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டது. மூவுலகங்களிலும் தேடினாலும் பாபாவை போன்ற சத்குருவைத் தவிர இதை அளிக்கக்கூடியவர் வேறெவரையும் காணமுடியாது"http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, October 8, 2016

குண்டலினி சக்தி


ஸ்ரீ சாய்பாபாவின் பாதங்களில் முழுமையாக சரணடைவதன் மூலம் ஒரு பக்தன் ஆன்மீகப் பாதையில் செல்ல முடிவதுடன் அப்பாதையில் செல்வது எளிதாகவும் ஆகிறது. 'உலகியல் வாழ்வில் உள்ள மனிதன்' என்ற நிலையில் உள்ள ஒருவர் ஒரு யோகியாகவோ, சித்தராகவோ அல்லது குண்டலினி சக்தியை எழுப்ப வேண்டும் என்றோ ஒரேடியாக முன்னேற வேண்டும் என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது. இந்தச் சொற்கள் அவற்றின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் உபயோகிப்பது பெரும் முட்டாள்தனமாகும்.  பாபாவிடம் அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கை கொள்வது மிகவும் இன்றியமையாததாகும்.

பாபாவிடம் அவர் தோற்றத்தை நமக்கு வெளிப்படுத்திக் காட்ட தொடர்ந்து பிரார்த்தனை செய்யவேண்டும். செயல் புரிபவர்கள் நாம் அல்ல என்ற உண்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 'செயலைச் செய்பவர்' என்ற உணர்விலிருந்தும் நாம் விடுபடுதல் அவசியமாகும். செயலைச் செய்பவர் என்ற அந்த உணர்வு, நம் அகங்காரத்திலிருந்து பிறக்கிறது. அது மிக மிக மெதுவாகவே குறைகிறது. பாபா விரும்பினால் அவர் நமக்கு சித்தி, முக்தி அல்லது எதை வேண்டுமானாலும் அளிக்கலாம்.

வெறும் படிப்பதினால் மட்டுமோ அல்லது மற்றவர்கள் கூறுவதைக் கவனுத்துடன் கேட்பதினால் மட்டுமோ அல்லது ஆன்மீக வளர்ச்சியை ஒரு கால அட்டவணைக்குட்பட்ட நிர்வாகம் என்னும் கருத்துடன் திட்டமிடுவதாலோ, ஆன்மீகப் பாதையில் எவரும் முன்னேற்றம் அடைய முடியாது. எந்த ஒரு அறிவும் நடைமுறையில் பயன்படுத்தப்படவில்லை என்றால் அது முற்றிலும் பயனற்றது. ஆன்மீகப் பாதையில் செல்வதற்கு நமக்குத் தேவையான நடத்தை வழிமுறைகளை நாம் பழக்கத்தில் கொணர்வது என்பது மிகவும் கடினமானது. இதற்கு நம்பிக்கையும் திடசித்தமும் தேவை.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, October 7, 2016

பயப்படத் தேவையில்லைவும், பகலும் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ எவன் ஒருவன் என்னைப் பற்றி நினைத்து வருகிறானோ, அவன் இனிப்பும் சர்க்கரையும்போல, அலையும் கடலும் போல, கண்ணும் ஒளியும்போல என்னுடம் முழுமையாக இணைகிறான். அப்படிப்பட்டவன் எதற்கும் பயப்படத் தேவையில்லை. - மாண்பு மிகு மகான்கள்.     


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, October 6, 2016

குரு


ஒரு பக்தனுக்கு தனது குருவின் திருவடிவே தியானத்திற்கு மூலமாகவும், குருவின் பாதங்களே அனைத்துப் பூஜைகளுக்கும் உரிய மூலப்பொருளாகவும், குருவின் திருவாய் மொழிகளே அனைத்து மந்திரங்களிலும் சிறந்த மூல மந்திரமாகவும், குருவின் திருவருளே முக்திக்கு மூலமாகவும் விளங்குகிறது. - அக்கல்கோட் ஸ்ரீ சுவாமி சமர்த்தர்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, October 5, 2016


என்னுடையவனான ஒருவனை என்னை விட்டு விலகிச் செல்லும்படி விடமாட்டேன் - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, October 4, 2016

இடைவிடாத சாயி நாமஜெபம் " சமாதியிலிருந்தும் ஊக்கத்துடனும் சுறுசுறுப்புடனும் இருப்பேன். மஹாசமாதிக்குப் பின்னரும், நீ நினைத்த மாத்திரத்தில், நீ எங்கிருந்தாலும், நான் உன்னுடன் இருப்பேன். நேசத்துடன் ஒரு பக்தன் என்னை அழைத்த மாத்திரத்தில் நான் தோன்றுவேன்.  பயணம் செய்ய புகைவண்டி எதுவும் தேவையில்லை".

சாயிபாபா உடலோடு வாழ்ந்த போது பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்தார். ஆனால் மஹாசமாதி அடைந்த பிறகும், அதே போன்ற பாதுகாப்பு கிடைக்குமா என சந்தேகப்படுபவர்கள் பாபாவை சரியாக புரிந்து கொள்ளாத ஜனங்களே. அப்படி சந்தேகப்படுவது பாபாவிடமும் அவரது திருமொழிகளிலும் நம்பிக்கையின்மையை காட்டுகிறது. சாயியிடம் மனதை ஒருமைப் படுத்தவேண்டும் என்ற ஆர்வம் பக்தனிடம் இருந்தால் போதும். இப்போதும் சாயி பேசுவதை கேட்கலாம், அவருடன் பழகலாம், இதற்கு அசாதாரணமான சமத்காரங்கள் தேவையில்லை. இடைவிடாத சாயி நாமஜெபம் ஒன்றே போதும். இதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை. இது விசுவாசம் பற்றிய விஷயமே ஆகும். விசுவாசம் திடமாக இருந்தால் பிரதிபலன் விரைவில் கிட்டும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil


Monday, October 3, 2016

எங்கும் இருக்கிறேன்


நான் எங்கும் இருக்கிறேன் - நீரிலும், நிலத்திலும், காய்ந்துபோன கொம்பிலும், மனிதர்களிடையேயும், வனத்திலும், இந்த தேசத்திலும், வெளிதேசங்களிலும் எங்கும் இருக்கிறேன். நான் எந்த தேசத்தின் எல்லைகளுக்கும் உட்பட்டவன் அல்லன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, October 2, 2016

இவற்றிற்காக நீர் எம்மிடம் வரவேண்டியதில்லை


நானா(பாபாவின் பக்தர்); பாபா, தாங்கள் எல்லாவற்றையும் அறிவீர்கள். தங்களுடைய பாதுகாப்பிலிருந்தும் கூடவா எங்களுக்கு இந்த துக்கங்கள் நேரவேண்டும்? [உறவினர்களின் பிரிவு,இழப்பு போன்றவை]

பாபா: உமக்கு நெருக்கமானவர்களின் நலனை எண்ணிக் கொண்டு அதன் பொருட்டு நீர் இங்கு வருகிறீரென்றால், அது தவறு. இவற்றிற்காக நீர் எம்மிடம் வரவேண்டியதில்லை. இவை என் சக்திக்கு உட்பட்டவை அல்ல.
இவை(குழந்தை பிறப்பது, உறவினர் இறப்பது போன்றவை) ஊழ்வினையைப் பொருத்தது. தேவாதி தேவனானவரும், உலகையே படைத்தவருமான, பரமேச்வரனால் கூட இவற்றை மாற்றிவிட முடியாது. அவரால் சூரியனையோ சந்திரனையோ நோக்கி, 'வழக்கமாக உதிக்கும் இடத்திலிருந்து இரண்டு கஜம் தள்ளி உதிப்பாய்' எனக் கூற இயலுமா?இயலாது, ஏனெனில் அவரால் முடியாதது மட்டுமின்றி, அவர் அப்படி செய்யவும் மாட்டார். அது  ஒழுங்கின்மை, குழப்பம் விளைவிக்கும்.

நானா:அப்படி என்றால்,ஒருவரிடம் "உனக்கு குழந்தை பிறக்கும்" என தாங்கள் கூறுகிறீர்கள், அவருக்கு குழந்தை பிறக்கிறது. மற்றொருவரிடம் "உனக்கு வேலை கிடைக்கும்" என் சொல்லுகிறீர்கள், அவருக்கு வேலை
கிடைக்கிறது. இவை எல்லாம் தங்களுடைய அற்புதங்கள் அல்லவா?

பாபா: இல்லை, நானா. நான் எந்த சமத்காரமும் செய்வதில்லை. கிராமத்து ஜோதிடர்கள் சில தினங்கள் முன்னதாகவே பின்னர் நடக்கப் போவதைக் கூறுகிறார்கள். அவற்றுள் சில பலிக்கின்றன. நான் அவர்களை விட எதிர்காலத்தை தீர்க்கமாகப் பார்க்கிறேன். நான் கூறுவதும் நடக்கிறது.என் வழியும் ஒருவகை ஜோதிடத்தைப் போன்றதே. உங்களுக்கெல்லாம் இது புரிவதில்லை. உங்களுக்கு.என் சொற்கள் அற்புதங்களாகத் தோன்றுகின்றன; ஏனெனில் நீங்கள் எதிர்காலத்தை அறியமாட்டீர்கள். ஆகையால் நிகழ்ச்சிகளை  நீங்கள் எமது அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தியாக முடிவு செய்து, எம்மிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுகிறீர்கள். பதிலுக்கு நான் உங்கள் பக்தியை இறைவனிடம் திருப்பி உங்களுக்கு நலம் உண்டாகச் செய்கிறேன்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, October 1, 2016

பாபாவை அணுக விசேஷமான வழி முறைகள்

            பாபாவை அணுக விசேஷமான வழி முறைகள் 


பக்தன் பாபாவை அணுகவேண்டும் என மனப் பூர்வமாக விரும்பட்டும். உடனேயே அணுகுமுறை துவங்கிவிட்டது. அக்கணத்திலிருந்தே அவர்கள் நிலையில் முன்னேற்றம் ஆரம்பமாகிவிட்டது. அவர்கள் மேலும் மேலும் உற்சாகமடைகின்றனர், மேன்மேலும் பலனடைகின்றனர். பக்தர்கள்பாபாவை அணுக விசேஷமான வழி முறைகள் ஏதுமில்லை. பக்தர்கள் தங்களிடம் உள்ள பாபாவின் படத்தை பார்த்து தினமும் பாபாவின் திருவுருவை  மனதில் கொண்டு வரட்டும். கவிஞனின் கற்பனைகள் எல்லாவற்றையும் விட திறன்படைத்த பாபாவின் அத்புத லீலைகளை படிக்கட்டும். பாபாவின் குணாதிசயங்களை நினைவுற பாபாவின் அஷ்டோத்திர சத நாமாவளி (108 நாமாக்கள்) மிக்க சக்தி வாய்ந்த சாதனம். ஆர்வமுள்ள பக்தர்கள் ஒன்று கூடி செய்யும் பூஜைகள், பஜனைகள் ஆகியவற்றில் பங்கு கொள்ளட்டும். தான் காணும் ஒவ்வொரு மனிதன், ஜந்து ஆகியவற்றின் உள்ளே பாபா உறைகிறார் என்ற நோக்குடன், பாபாவை மகிழ்விக்கும் பொருட்டு ஒவ்வொருவரும் மனித சகத்திற்கும் ஜீவராசிகளுக்கும் அன்புடன் சேவை செய்யட்டும். ஆர்வமுள்ள சாதகனுக்கு பாபாவே மேற்கொண்டு உள்ள வழிகளைக் காட்டுவார். ஒவ்வொரு உண்மையான பக்தனுக்கும் பலவித வழிகளில் பாபாவுடன் மேற்கொண்டு தொடர்பு எப்படி வைத்துக் கொள்வது, அதை எப்படி வளர்த்துகொள்வது என்பது பற்றி பாபாவே உணர்த்துவார்.-பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி. 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...