Wednesday, November 30, 2016

பாபா உங்களிடம் இருப்பதை உணர்வீர்கள்


உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது.உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடமாக வேரூன்றிய பிறகு, உருவமுள்ள இறைவனை அறிந்துகொள்வது தானாகவே பின்தொடர்கிறது. நிர்குனமான, நிராகரமான, இறைவனை பக்தர்களுக்குப் புரியவைப்பதற்கு பாபா கையாண்ட உபாயங்கள் எத்தனை எத்தனையோ! அவரவர்களுடைய ஆன்மீகத் தகுதிக்கும் திறமைக்குமேற்ப பக்தர்களைத் தனித்தனியாக நிர்வகித்தார். பல  சந்தர்ப்பங்களில் தரிசனம் தரவும் மறுத்தார். ஒருவரை சிர்டியிலிருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பிவிடுவார். மற்றவரை தனிமையில் வாழச் செய்வார். பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாசங்களில் ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்து கொண்டிருக்கும்போதும், உறங்கும்போதும் உணவருந்தும்போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள்! இச்செயல்களின் நோக்கம் இதுவே. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, November 29, 2016

உண்மையான ஆர்வம்


எங்கே உண்மையான  ஆர்வமும் , ஏக்கமும் இருக்கின்றதோ, பாபா தம்மைத்தாமே அவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து கொள்கிறார் - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, November 28, 2016

எப்போதும் எல்லா இடங்களிலும்


என்னை எவன் தீவிரமாக விரும்புகிறானோ அவன் எப்போதும் எல்லா இடங்களிலும் என்னை காண்கிறான். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, November 27, 2016

குரு சரித்திர பாராயணம் செய்யவும்

"ஆம். குரு சரித்திரத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் பக்தன் தூய்மை பெற்று நலம் பெறுகிறான். பகவான் அவனிடம் மகிழ்ச்சி கொண்டு, அவனை சம்சாரத்தினின்றும் காப்பாற்றுகிறார்". -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

பாபா தனது பக்தரான ஸாதேவை குரு சரித்திரத்தை பாராயணம் செய்யும்படி கூறினார். ஒரு வாரம் பாராயணம் செய்தவுடன் ஸாதேயின் கனவில் பாபா தம் கையில் குருசரித்திரத்துடன் காணப்பட்டார். பின்னர் பாபாவிடம் இந்த காட்சியின் கருத்து என்ன?  குரு சரித்திரத்தை இன்னொரு வாரம் (ஸப்தாஹம் -7 நாட்களுக்குள் படித்தல்) பாராயணம் செய்ய வேண்டுமென்பதா? என்று கேட்டார். அதற்க்கு பாபா "ஆம். குரு சரித்திரத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் பக்தன் தூய்மை பெற்று நலம் பெறுகிறான். பகவான் அவனிடம் மகிழ்ச்சி கொண்டு, அவனை சம்சாரத்தினின்றும் காப்பாற்றுகிறார்" என்று கூறினார்.

( பின் குறிப்பு ; ஸ்ரீ சாய் சத்சரிதமும் , ஸ்ரீ குரு சரித்திரம் இரண்டும் வெவ்வேறு நூல்கள். ஸ்ரீ குருசரித்திரம், ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாறு. ஒவ்வொரு சாய் பக்தரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். பல பக்தர்களுக்கு பாபா குருசரித்திரத்தை பாராயணம் செய்யும்படி கூறியுள்ளார் )


குரு கீதையின் (குரு சரித்திரம்) ஜபத்தால் ஒருவன் அளவற்ற பயனை எய்துவான். இது எல்லா பாவங்களையும் போக்குவது, எல்லா ஏழ்மையையும் நாசம் செய்வது. அகால மரணத்தை தடுப்பது, எல்லா சங்கடங்களையும் நாசம் செய்வது. யக்ஷர், ராட்சதர், பூதங்கள்,திருடர்கள்,புலி முதலிய பயங்களை போக்குவது. கொடிய குஷ்டம் முதலிய உபத்ரவங்களையும் தோஷங்களையும் நிவாரணம் செய்வது. குருவின் சந்நிதியில் என்ன பலனோ அது படிப்பதாலேயே கிட்டும்.

சாய் ராம்,  குரு சரித்திரம்,ஸ்ரீ சத்சரித்திரம், ஸ்ரீ ஸ்வாமி சமர்த்தர் வாழ்க்கை வரலாறு, ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் சரித்ராம்ருதம் புத்தகங்களை  படிக்க விரும்பும்   சாயிஅன்பர்கள்  saibabasayings@gmail.com  மின்னஞ்சல் முகவரிக்கு கேட்டு எழுதுங்கள் தங்களுக்கு pdf file  அனுப்பபடும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, November 26, 2016

நீ ஏன் அடிக்கடி ஷீரடி வரவேண்டும்?ஒரு சமயம் புரந்தரே என்ற பக்தரின் மனைவி காலராவால் பாதிக்கப்பட்டு மிகவும் வேதனைக்கு உள்ளானால். வைத்தியர்கள் பரிசோதித்து நிலைமை மோசமடைந்ததையடுத்து கைவிட்டு சென்றனர். சாயி பக்தரான புரந்தரே அப்படி நம்பிக்கை இழந்துவிடுவாரா? தம்முடைய தெய்வமான சாயிநாதனிடம் பூரண நம்பிக்கையுடன் வீட்டிற்கு எதிரில் இருந்த மாருதி ஆலயத்திற்கு வந்தார். என்ன ஆச்சர்யம்! அங்கு அவர் முன் சாயிநாதன் தோற்றமளித்து, "அஞ்சேல்! உன் மனைவிக்கு ஊதியும், தீர்த்தமும் கொடு" என்று அபயமளித்து மறைந்தார். அவ்வாறே புரந்தரே தம் மனைவிக்கு உதியை நீரில் கலந்து அளித்தார். ஒரு மணி நேரத்தில் அவர் மனைவி நன்றாக மூச்சுவிட ஆரம்பித்தார். பின்னர் வந்த வைத்தியர் நோயாளியை பரிசோதித்து, "இனி பயமில்லை" என்றார்.
மற்றொரு சமயம் புரந்தரே ஷீரடிக்கு உடனே ஓடிச் செல்ல எண்ணினார். ஆனால் பாபா அவர் கனவில் தோன்றி, "இங்கு வந்தால் உன்னை அடிப்பேன். வராதே! நீ ஏன் அடிக்கடி ஷீரடி வரவேண்டும்? நான் உன்னிடமிருந்து விலகியா இருக்கிறேன். முட்டாளாக நடந்து கொள்ளாதே!" என்று எச்சரித்தார். ( பாபாவிடம் பூரண சரணாகதி அடைந்த பக்தர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடன் பாபா எப்போதும் இருக்கிறார். இக்கட்டாண சூழ்நிலைகளில் நேரிலோ சூக்ஷம ரூபத்திலோ தோன்றி தனது பக்தனை காப்பாற்றுகிறார். பாபாவை நம்புங்கள்.ஓம் சாய்ராம் )
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, November 25, 2016

உனக்கு ஒரு வீடு சொந்தமாகக் கட்டிக்கொள்ளவேண்டும்


"நீ உனக்கு ஒரு வீடு சொந்தமாகக் கட்டிக்கொள்ளவேண்டும். நீ கட்டுவதற்கு முயற்சி செய், நான் முடித்து வைக்கிறேன்". 
பாபா தனது பக்தரான புரந்தரேயிடம் தான் இப்படி கூறினார். ஆனால் புரந்தரேவிற்கு ஒன்றும் புரியவில்லை. காரணம், மாதம் 35 ரூபாய் சம்பளத்தில் குடும்பத்தை நடத்துவதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும்போது, வீடு எங்கிருந்து கட்டுவது?. ஆனால் பாபா, "பாவ், நீ வீட்டு மனை ஒன்று வாங்கி, அதில் பங்களா கட்டு" என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். என்ன செய்வது? புரந்தரே பேசாமலிருந்தார். சில தினங்களில் பாபா பொறுமையிழந்து புரந்தரேயைக் கோபித்துக் கொண்டார்.

பாபா பின்னர் மற்றொரு பக்தரை (படே பாபா )  அழைத்து, "அவன் (புரந்தரே) என்னை மனிதன் என்று எண்ணுகிறானா அல்லது மிருகம் என்று எண்ணுகிறானா? ஏன் என் வார்த்தைகளைப் பொருட்படுத்தாது இருக்கிறான். மற்ற நெருங்கிய பக்தர்களிடமும் பாபா இதே புகார் செய்தார். புரந்தரேயிடம் இருந்து விஷயத்தை அறிந்த பக்தரான சாந்தோர்க்கர், பாபாவின் பாதங்களைப் பணிந்து, "பாபா! வீடு கட்டுவது அவன் சக்திக்கு மீறியது. தாங்கள் விரும்பினால் அவனுக்கு நாங்கள் ஒரு வீடு கட்டிக் கொடுத்து விடுகிறோம் என்று பகன்றார். கோபம் கொண்ட பாபா, "அவன் வீடுகட்ட ஒருவருடைய பணமும் தேவையில்லை. என்னுடைய சர்க்காரில் அவனுடைய பங்கு ஏராளமாக இருக்கிறது.நானே அவனை வீடுகட்ட வைப்பேன்!"

யோசித்துப் பார்த்த புரந்தரே முதலில் ஒரு மனையாவது வாங்கலாமென எண்ணினார். பாபாவின் அருளால் அவருக்கு வட்டியும் இல்லாமல், உதவிதமான கடன் பத்திரமும் இல்லாமல் நிலம் வாங்க பணம் கிடைத்தது..நிலத்தை வாங்கியாகி விட்டது. ஆனால் வீட்டைக் கட்டப் பணம்? பாபாவிடம் சென்ற போது பாபா அவரிடம் எரிந்து விழுந்தார். பார்ப்பவர்களுக்கு பாபா காரணமின்றி அவரிடம் கோபித்துக் கொள்வதாகத் தோன்றியது.

பின்னர் புரந்தரேக்கு கடுமையான தலைவலி உண்டாயிற்று. சகிக்க முடியாத அவர் படும் வேதனையைக் கண்ட மற்றொரு பக்தர், பாபாவிடம் தலைவலியை போக்கியருள வேண்டுமென்று கேட்டுக்கொள்ள அவர், "அவன் நான் சொல்வதைக் கேட்க மாட்டேனென்கிறானே!" என்றார்.
வீட்டை கட்டியதும் தலைவலி நீங்கும் என்பதை உணர்ந்த புரந்தரே சீரடியை விட்டு ஊருக்கு திரும்பினார். தமது காரியாலயத்தில் கடன் பெற்று வீட்டை கட்டி முடித்தார். சொந்த வீட்டிற்கு குடிபுகுந்த தினமே அவரைவிட்டு அவருடைய தீராத நோயும் தலைவலியும் அகன்றது! தன்னுடைய சுயமுயற்சியாலேயே தம் பக்தன் வீடு கட்டிக்கொள்ள வேண்டுமென்பது பாபாவின் நோக்கம். அதை நிறைவேற்ற என்னவெல்லாம் செய்துவிட்டார்.
                 
                                                 ஓம் சாயிராம்


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, November 24, 2016

பாபா உங்களை பின்தொடர்கிறார்


என் பக்தன் ஷீரடியிலிருந்து 2000 மைல்களுக்கு அப்பால் இருப்பினும், அவனுடைய உடலை விட்டுப் பிரிந்த கணமே அவனது ஆன்மா எம்மை வந்தடையும்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

ஒரு ஆத்மாவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு விட்டால், அதை ஒன்றன் பின் ஒன்றாகப் பல பிறவிகளிலும் தாம் பின் தொடர்வதாகவும், அவசியத்திற்கேற்ப அடிக்கடி தாமும் பிறவி எடுப்பதாகவும், அந்த ஆன்மா இறுதி இலக்கை, அதாவது பகவத்பாத மூலத்தை, அடையும்வரை கவனிப்பதாகவும் பாபா கூறுகிறார். கடந்த கால பாவச் செயல்களுக்காக யமனும், யம தூதர்களும் அளிக்கும் தண்டனைகளின் கொடுமையும் தமது பக்தர்களை அச்சுறுத்தாது என்கிறார் அவர். சாயியின் பிரபாவங்களால் ஈர்க்கப்பட்டு சிற்சில சமயங்களிலாவது அவரது பாதங்களிலேயே மனதை லயிக்கச் செய்தால் போதும்; யமனும் பாசத்துடன் கூடிய அவனது கிங்கரர்களும் கனவில் கூட அவர்களை நெருங்கமாட்டார்கள்; ஏனெனில் அவர்களுடைய கர்மவினைகள் தீர்க்கப்பட்டுவிட்டன ( சாயி தியானத்தின் மூலம் ).

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, November 23, 2016

என் தலையையும் கொடுப்பேன்

என்னை எப்போதும் தியானித்திருப்பவனுடைய அடிமை நான், அவனை காக்க என் தலையையும் கொடுப்பேன் அல்லது அவன் என்னுள்ளே கலந்து விடுகிறான். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, November 22, 2016

பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை


"உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன்" -ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

பக்தன் தன் முன்னிலையில் இருந்தாலும் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் பாபாவின் அன்பின் வேகமும் சக்தியும் ஒன்றுபோலவே இருக்கும். அவரது திருவருள் வெளிவருவதற்கு பக்தன் முறையாக பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒருவர் பாபாவின் அருளொளி வீசும் வட்டத்தினுள் நுழைந்துவிடட்டும் (அதாவது பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கட்டும்), பின்னர் எங்கே அலைந்து திரிந்தாலும் தமது ரக்ஷிக்கும் தன்மையதான கிரணங்களை பொழிந்து அருள்புரியும் ஷீரடி இறைவனின் சக்தியை உணரமுடியும். பாபா உடலுடன் வாழ்ந்த காலத்தில், ஷீரடியில் அமர்ந்தவாறு தனி ஒருவராக பம்பாய், பூனா, உட்பட நாட்டின் பல்வேறு பாகங்கள் எங்கும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களின் தேவைகளையும், நல்வாழ்வையும் பாபா கவனித்து வந்தது நன்கு விளங்கியது. இன்றும் நம்பிக்கையுடன் அழைக்கும் பக்தன் முன் பாபா தோன்றுகிறார். இதுவே தெய்வீகத்தின் அறிகுறி. உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். நமது சிந்தனை எல்லாம் பாபாவை பற்றியதாக இருக்கும்போது மற்ற எதை பற்றியும் பக்தன் கவலை கொள்ள தேவையில்லை.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, November 21, 2016

பாபா உன்னுடன் இருப்பார்

பாபா மறைந்த தினத்தன்று, பல பக்தர்கள் பாபா தங்களை நிராதரவாக விட்டுச் சென்றுவிட்டதாக பயந்தனர். அப்பொழுது பம்பாய் பெண்மணி ஒருவர் முன் தோன்றி "தாயே! நான் இறக்கவில்லை. நீ எங்கிருந்தாலும், என்னை நினைத்த மாத்திரத்தில் எந்த ஒரு நேரத்தில் நீ விரும்பினாலும் நான் அங்கே இருப்பேன் (உடலுடன் கூடியோ இல்லாமலோ)" என ஆறுதல் அளித்தார்.  தாமோதர் ராசனே என்ற பக்தருக்கும் பாபா அந்த உறுதிமொழியை அளித்தார். நரசிம்ம ஸ்வாமியை சந்தித்த ராசனே 1918-ல் பாபா மகாசமாதி அடைந்த பின்னரும் அவர் பல தடவைகள் பாபாவை சரீரத்துடன் நடமாடுவதைக் கண்டதாகவும், அந்த சரீரி தம்முடன் பேசியதாகவும் கூறினார். பாபா இன்றும் நம்முடன் இருக்கிறார் என்பதற்கு இதுவே அத்தாச்சி. தன்னை நம்பியவர்களுக்கு பாபா என்றும் உயிருடன் இருக்கிறார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, November 20, 2016

பாபாவின் லீலைகள்

"இந்த ஜகத்தில் நான் ஒருவனே இருக்கின்றேன்; என்னைத் 
 தவிர  வேறெதுவும் இல்லை.இப்பூவுலகம் மாத்திரமல்லாது
 மூன்று உலகங்களிலும் நான்,நான் மாத்திரமே இருக்கின்றேன்."
                                                                                                   - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
பாபாவின் லீலைகள் சூக்குமமானவை;ஆராய்ச்சிக்கு அப்பாற்ப்பட்டவை .யாரால் அவற்றைக் கற்பனை செய்ய முடியும்?எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகின்றன!வேறெதையும் நாடாமல் சாயியின் பாதங்களில் எவர் சிரம் தாழ்த்துகிறாரோ  அவர்,தம்மைக் காக்கும் தெய்வமும் அபயமளிப்பவரும் நன்மையைச் செய்பவரும் தீமையை அழிப்பவரும் ஒரே அடைக்கலமும் சாயியே என்று உணர்ந்துகொள்வார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, November 19, 2016

கைவிடமாட்டேன்


என்னை நம்பும் என் பக்தனை கை விடுவதற்கு பதிலாக, நான் என் உயிரையே விட்டு விடுவேன். ஒருவனை காப்பாற்றுவேன் என்று உறுதிமொழி அளித்துவிட்டு, பிறகு அவனைக் காப்பாற்றாமல் கைவிடமாட்டேன் - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, November 18, 2016

காமம்

உன் மனைவியிடம் உள்ள காமத்தை ஓர் அளவிற்குள் அடக்கி வை. பிறன் மனைவியிடம் காமம் கொள்ளாதே. இல்லற இன்பம் தோஷமில்லை. ஆனால் அதில் அடிமையாகக் கூடாது. காமத்தில் மூழ்கி இருப்பவருக்கு முக்தி கிடைக்காது. காமம் உள்ளத்தின் சமநிலையையும், பலத்தையும், உறுதியையும் அழிக்கிறது. கற்றோரையும் கசக்கிவிடும். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, November 17, 2016

என்னையே நினைவில் வை


"தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு மாமனுஸ்மர கர்மஸு 
மய் அர்ப்பித மனோ புத்திர மாமே வைஷ்யஸ்ய கர்மஸூ சம்ஸயம்" 

பாபா கூறுகிறார், நீ என்ன செய்து கொண்டிருந்தாலும் எல்லா நேரங்களிலும் என்னையே நினைவில் வை. உன்னுடைய மனமும், புத்தியும் என்னிடம்
 சரணடைந்ததும் நீ சந்தேகமில்லாமல் என்னை அடைவாய்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, November 15, 2016

பாபா உன்னை காப்பாற்றுவார்.


"நாஹம் தேஹோ நமே ம்ருத்யு : ஸர்போகும் பச்ய மாம்ஸதா 
பக்தோ மாம்ஸ்மரதே யந்ரதத்ர திஷ்டாமி  ரக்ஷிதம்". 

சாயி கூறுகிறார். நான் உடல் இல்லை. நான் இறப்பதில்லை. நானே எல்லாம். எப்பொழுதும் என்னை பாருங்கள். எங்கெல்லாம் பக்தன் என்னை நினைக்கிறானோ, அங்கெல்லாம் அவனைக் காப்பாற்ற நான் அங்கு நிற்பேன்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, November 14, 2016

சாயி நாமம்


"ஸர்வேஸானபி அகாவதம் இதமேவ ஸூநிஷ்க்ருதி:
ஸாயிநாதேதி நாமோக்தி: யதஸ் தத்விஷயமைதி" 

அதாவது, சாயி நாமம் எல்லா பாபங்களையும் அகற்றிவிடும் ; அந்த நாமாவை உச்சரிப்பதால் பாபாவிடம் மனம் திரும்பிவிடுகிறது.

தினமும் சிறிது நேரத்தை ஒதுக்கி சாயி நாம ஜபத்தில் ஈடுபடுங்கள். எல்லா பிரச்சனைகளுக்கும் இதுவே ஒரே தீர்வு.  சாயி நாம ஜபத்தின் பலனை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஓம் சாய்ராம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, November 13, 2016

அறிவு, பலம், புகழ், தைர்யம்


"புத்திர்பலம் யசோதைர்யம் நிர்பயத்வமரோகதா!
அஜாட்யம் வாக்படுத்வம் ஸாயீஸ ஸ்மாரணத்பவேத்"

அதாவது, அறிவு, பலம், புகழ், தைர்யம், பயமற்றதன்மை, முழுமையான ஆரோக்யம், கூர்மையான புத்தி புலன்கள் மற்றும் பேசும்திறன் ஆகியவை சாயிநாம ஜபத்தினால் கிடைக்கப்பெறுகிறது. ( சாயியை நினைவு கூர்வதாலும் ).

தினமும் சிறிது நேரத்தை ஒதுக்கி சாயி நாம ஜபத்தில் ஈடுபடுங்கள். இல்லையேல் நேரம் கிடைக்கும்போது சாயி நாம ஜபம் செய்யுங்கள். சாயி நாம ஜபத்தின் பலனை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஓம் சாய்ராம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, November 9, 2016

சாய் சத்சரித்திரமே வேதம்


சாய் பக்தர்களுக்கு ஸ்ரீ சாய் சத்சரித்திரமே வேதம். அந்த தெய்வீக புத்தகம் சாக்ஷாத் சாயியின் ஸ்வரூபமே அன்றி வேறல்ல... சாய் சத்சரித்திரத்தில் இருந்து சில துளிகள்...

* பாபா எங்கும் உள்ளார். அவர் எந்த எல்லைக்கும் உட்பட்டவர் அல்ல. பாபா ஷீரடியில் மட்டுமே இருக்கிறார் என்பவர், உண்மையில் பாபாவை காணத் தவறியவரே.

*பாபாவின் படத்திற்கும் பாபாவுக்கு சிறிதளவும் வித்தியாசம் இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும் பாபாவின் படமும் சாக்ஷாத் எப்போதும்  வாழ்கின்ற தெய்வீக அவதாரமான பாபாவே. இதில் சந்தேகமே வேண்டாம்.

* ஜோதிடம், ஜாதகம் ஆகியவற்றை நம்பாமல், தன்னை மட்டுமே நம்பும்படி பாபா கூறியுள்ளார். ஏனென்றால், தன்னிடம் பூரண சரணாகதி அடைந்த பக்தர்களின் காரியங்களை பொம்மலாட்டத்தை போன்று தானே நடத்துவதாக கூறியுள்ளார்.

* எப்பொழுதும் உணவு உண்ணும் முன் பாபாவுக்கு மானசீகமாகவாவது நிவேதனம் செய்யுங்கள், இது போன்ற பக்தர்களிடம் எப்பொழும் கூடவே இருப்பதாக கூறியுள்ளார். பட்டினியாய் இருப்பதை ( விரதம் ) இருப்பதை பாபாஒருபோதும் அங்கிகரிக்கவில்லை.

* நாய், பூனை, நோய்வாய்ப்பட்ட மனிதன் என நீங்கள் காணும் சகலமும் பாபாவின் ரூபமே. பசியாய் இருக்கும் எந்த ஜீவனுக்கும் உணவளிப்பவர் உண்மையில் அதை பாபாவின் வாயிலேயே இடுவதாக கூறியுள்ளார்.

                                                                                            - தொடரும்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, November 8, 2016

சாயி சாயி


கண்டயோகம் உங்களுக்குத் தேவையில்லை. கடின தவமும் வேண்டாம். அடர்ந்த கானகத்திற்கும் போகத் தேவையில்லை. கடுமையான உபவாச தீட்சைகளும் தேவை இல்லை. உங்கள் வீட்டிலேயே நீங்கள் இருங்கள். உங்கள் காரியங்களை நீங்கள் செய்து கொண்டிருங்கள். உங்கள் கடமைகளை, கடமைதவறாமல் செய்துவாருங்கள். பாபாவை கோவிலுக்கே கட்டுப்படுத்தாதீர்கள். உங்கள் இதயக் கோவிலில் வைத்திருங்கள். பூஜைகள் செய்து அலுத்துப் போக வேண்டியதில்லை. சிறிதளவு நேரத்தை ஒதுக்கி  நாமஸ்மரணை செய்யுங்கள். சாயி என்று ஜபம் செய்தால், ஸ்மரித்தால், நினைத்தால் அவர்களுக்கு உதவி செய்ய சித்தமாக பாபா இருக்கிறார்.
காலையிலும் மாலையிலும் குறைந்தது 10 நிமிடம் பாபாவுக்காக ஒதுக்கி உங்களுக்கு விருப்பமான சாயி நாமத்தை சொல்லுங்கள். உதாரணமாக 'சாயி, சாயி' அல்லது 'ஓம் சாயி நமோ நமஹ, ஸ்ரீ சாயி நமோ நமஹ, ஜெய ஜெய சாயி நமோ நமஹ' அல்லது 'ஓம் ஸ்ரீ சாயி நாதாய நமஹ' என்று உங்கள் விருப்படி சொல்லி வாருங்கள். பின்னர் நாள் முழுவதும் சாயிநாமம் உங்கள் இதயத்தில் ஒளித்துக்கொண்டே இருக்கும். பாபாவின் அருள் இருந்தால் மட்டுமே அவரின் நாமத்தை சொல்ல முடியும். தொடர்ந்து சாயி நாம ஜெபத்தில் ஈடுபடும் பக்தனின் பாக்கியத்தை என்னவென்று கூறுவது?
                                                  * ஓம் சாயிராம் *


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, November 1, 2016

இடைவிடாத நாமஜபம்பாபாவின் பக்தர்களாகிய நாம் ஒருபோதும் தனித்து இல்லை. பாபா, எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் நம்முடனேயே இருக்கிறார். தொடர் நாமஜபம், சாயியை பற்றியே படித்தல், அவர் செய்த லீலைகளை நினைவு கூர்தல் போன்றவற்றில் ஈடுபட்டு கொண்டிருப்பதன் மூலம் பாபாவின் இருப்பை நாம் உணர முடியும். இடைவிடாத


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...