Saturday, December 31, 2016

பாபாவே எல்லாம்மிகவும் எளிமையான வழியையே பாபா போதித்தார். அதுவே நம்பிக்கை, பொறுமை. முதலில் பக்தர்களுக்கு பாபா ஒரு சத்குருவாக தோற்றமளித்தாலும், மிகுந்த நம்பிக்கை உள்ள பக்தர்களுக்கே தான் இறைவனின் அவதாரமாக வெளிப்படுத்திக்கொள்கிறார். மிகவும் வியாபாரமயமாகிவிட்ட இவ்வுலகத்தில் பாபாவின் பெயரில், சாய் ஹோமம், பாபா எந்திரம், பாபா பூஜை என ஏமாற்று வேலைகள் ஏராளம். சதசத்சரித்திரமே நமது வேதம். அதை நன்கு படித்தீர்களானால் நீங்கள் உணர்வீர்கள், குறிப்பாக,
( 1 ) பாபாவிடம் சரணாகதி அடைந்தால் போதும். அதாவது பாபாவே எல்லாம்  என்று உணர்ந்து கொள்வது. அப்படி உணர்ந்த பக்தர்களின் வாழ்வை அவர் பார்த்துக் கொள்வார்.
( 2 ) பாபாவுக்கென்று விசேஷ பூஜை முறைகள் எதுவுமில்லை. தன்னை நம்பும் பக்தனிடம் பாபா எப்போதும் இருக்கிறார். சந்தேகமே இல்லை.
( 3 ) ஜோதிடம் பார்ப்பது, காரியம் நடப்பதற்காக எந்திரம் உபயோகிப்பது, மந்திரம் சொல்வது எல்லாம் பாபா மீது நம்பிக்கை இல்லாமையையே காட்டும்.
( 4 ) விரதம் இருப்பதை பாபா ஒருபோதும் அனுமதித்ததில்லை. பசியோடு இறைவனை துதிப்பதை வேண்டாம் என்றே பாபா சொல்கிறார். இப்போது கடைகளில் கிடைக்கும் சாயி விரத புத்தகங்களில் உண்மையும் இல்லை, பாபாவிற்கு விருப்பமும் இல்லை.
( 5 ) பாபா கூறியதன் அடிப்படையில் , பக்தர்கள் நமக்கு அருளிய மந்திரம் "சாயி, சாயி " மட்டுமே. இதை உச்சரிக்கும் இடத்தில் எல்லாம் பாபா வாசம் செய்வார் என்பது அவரது உறுதிமொழி. வேறு மந்திரம் எதுவும் இல்லை.
( 6 ) பாபாவை ஒரு குறிப்பிட்ட கோவிலில் மட்டுமே மிகவும் சக்தி படைத்தவராக சிலர் முயற்சிக்கின்றனர். உண்மை அதுவல்ல.. பாபா மூன்றரை அடி உருவமல்ல, எங்கும் நிறைந்துள்ள இறை அவதாரம்.

தொடரும்...... ஓம் சாயிராம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 30, 2016

அபார சக்திவாய்ந்தவர் பாபாபூரண நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பாபாவைச் சரண் புகுவதைத் தவிர ஒருவர் செய்யக்கூடியது வேறெதுவுமில்லை. அப்படிச் சரண்புகின், வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும், சூழலிலும் அகப்பட்டுத் தவிக்காமல் பத்திரமாகச் செல்ல துணைபுரியவும் ஒவ்வொரு சிறு விஷயத்திலும் தேவைகளைக் கவனித்துக் கொள்ளவும் பாபா இருக்கிறார். கடவுள் என்றோ ஸத் புருஷர் என்றோ, அல்லது எப்படி வேண்டுமானாலும் அவரைச் சொல்லிக்கொள்ளுங்கள். அவர் அந்தர்யாமியாக உள்ளே விளங்குபவர்; ஆனால் எல்லோரையும் ஆட்கொள்ளக் கூடிய அபார சக்திவாய்ந்த உருவத்துடன் காணப்பட்டார். அவர் சன்னிதியில் சந்தேகங்கள், கவலைகள், பயங்கள் ஒன்றுக்கும் இடம் கிடையாது. பாபாவிடம் பூரணமாகத் தஞ்சம் புகுபவர், அதுவே சிறந்ததும், பத்திரமானதுமான ஓரே வழி என்பதை உணர்ந்து விடுகின்றனர்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 28, 2016

பாபாவிடம் பரிபூரணமாக சரணடைவோமாக


பாபாவுக்கு பக்தியுடன்  சேவை செய்யும் அடியவர், இறைவனிடம் ஒன்று கலந்த உணர்வை அடைகிறார். இதர சாதனைகளைத் தள்ளி வைத்து விட்டு குரு சேவையில் பணிவுடன் ஈடுபடுங்கள். அந்த சேவையில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும், கபடமான சாமர்த்தியத்தின் நிழல் பட்டாலும், சாதகருக்கு தீமையே விளையும். தேவை என்னவென்றால், பாபாவின் மீது உறுதியான விசுவாசமே.
மேலும், சிஷ்யன் சுயமுயற்சியால் என்ன செய்கிறான்? ஒன்றுமில்லையே! அவன் செய்வதையெல்லாம் சத்குருவன்றோ லாவகப் படுத்துகிறார்! சிஷ்யனுக்கு தனக்கு வரப்போகும் அபாயங்களை பற்றி எதுவும் தெரிவதில்லை. பாபா அந்த அபாயங்களை விலக்குவதற்காக செய்யும் உபாயங்களும் கூட சிஷ்யனுக்கு தெரிவதில்லை!
மூவுலகங்களிலும் தேடினாலும் பாபாவைப் போன்ற தர்மதாதாவை காண்பதரிது. சரணமடைந்தவர்களுக்கு மாபெரும் புகலிடமான பாபாவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக. - ஸ்ரீ சாயி இராமாயணம். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விஷ்ணு சஹஸ்ரநாமம்

பாபா விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். நாம ஜபம், நாம ஸங்கீர்த்தனம்  போன்ற சிறந்த சாதனம் வேறு எதுவுமில்லை என்பது பாபாவின் கருத்து. பாபாவின் புகழை பரப்பிய தாஸ்கணுவை கூட்டம் நிரம்பிய துவாரகாமாயியிலிருந்து ஒதுங்கிச் சென்று தனிமையான இடத்தில் அடிக்கடி விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைப் பாராயணம் பண்ணச் சொல்வார். தாஸ்கணுவை மட்டுமல்ல, இன்னும் பல பக்தர்களைப் இவ்வாறு பாராயணம் செய்யும்படி பாபா பணித்தார். பாபா தாமே ஹரி நாம ஜபம் செய்ததாகக் கூறுகிறார். இடையறாது ஹரிநாம ஜபம் செய்ததால், தம் முன் ஹரி தோன்றியதாகவும், அதன்பின்பே தாம் மருந்துகளைக் கொடுப்பதை நிறுத்தி ஹரியின் பெயரை நினைத்து ஊதியைக் கொடுத்து எல்லா ரோகங்களையும் நிவர்த்தி செய்ததாகவும் பாபா கூறுகிறார்.

விஷ்ணு சகஸ்ரநாமம் மிகவும் பயனுள்ளது. ஒருமுறை எனக்கு மிகவும் படபடப்பாக வந்தபோது இந்தப் புத்தகத்தைதான் என் நெஞ்சில் வைத்துக் கொண்டேன். ஹரியே நேரிடையாக என் நெஞ்சுக்குள் இறங்கி என்னை காப்பாற்றுவது போல் உணர்ந்தேன். எனவே விஷ்ணு சகஸ்ரநாமத்தை நிதானமாக படி. தினமும் பாராயணம் செய். -ஸ்ரீ ஷீரடி சாய்பாபா. [ஸ்ரீ சாய் சத்சரித்திரம் ]

விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழில் படிக்க/ பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க்'ஐ கிளிக் செய்யவும்.
http://www.prapatti.com/slokas/tamil/vishnusahasranaamam.pdf

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, December 27, 2016

பக்தி ஒன்றே ஒரே வழி


மனிதன் தானே செய்விப்பவனும்,அனுபவிப்பவனும் என்று நினைத்துக்கொண்டு முடிவற்ற இடர்பாடினால் தன்னை தானே சிக்கவைத்துக் கொள்கிறான். விடுவித்துக்கொள்ளும் வழியும் அவனுக்கு புலப்படவில்லை. பாபாவின் பாதத்தில் செலுத்தும் அன்பான  பக்தி ஒன்றே ஒரே வழி. சாய்பாபா என்னும் மகத்தான விளையாட்டுக்காரர் தமது அடியவர்களை வழிநடத்துகிறார், அவர்களை தாமாகவே, தமது பண்புருவாகவே மாற்றம் செய்து கொள்கிறார்.- ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, December 26, 2016

பாபா எங்கும் உள்ளார்

பாலாராம் மாங்கர் என்ற பக்தர் தம் மனைவி இறந்துவிடவே மனம் நொந்து ஷீரடி வந்தடைந்து பாபாவின் நிழலிலே தங்கலானார். அவரது பக்தியை கண்டு மகிழ்ந்த பாபா, அவரிடம் பன்னிரண்டு ரூபாய்களைக் கொடுத்து சதாரா ஜில்லாவிலுள்ள மச்சீந்திரகாத் என்ற இடத்திற்குப் போகச் சொன்னார். பாபாவை விட்டுப் பிரிந்து செல்ல முதலில் பிரியப்படாவிடினும், பாபா அவ்வூருக்குச் சென்று தியானம்  செய்வது அவருடைய நன்மைக்கே என்று கூறவே மாங்கர் மச்சீந்திரகாத் சென்றார். அங்கே நல்ல இயற்க்கைச் சூழ்நிலையிலே தியானம் செய்து வந்தபோது அவர் ஒரு காட்சியை கண்டார். பாபா அவர் முன்பு நேரிடையாகத் தோன்றினார். தான் ஏன் இவ்வூருக்கு அனுப்பப்பட்டார் என மாங்கர் கேட்க, பாபா,  "ஷீரடியில் உன் மனதில் பல எண்ணங்களும் கவலைகளும் எழுந்து மனம் நிலையற்றிருந்தது. நான் மூன்றரை முழு உடலுடன் ஷீரடியில் மட்டுமே இருப்பதாக நீ எண்ணியிருந்தாய். நான் ஷீரடியில் மட்டும் தான் இருக்கிறேனா, அல்லது பக்தர்கள் நினைத்த விடங்களிலெல்லாம் இருக்கிறேனா, என்பதைக் கண்டுகொள். இதற்காகவே இவ்வூருக்கு உன்னை அனுப்பினேன்" என்று கூறியருளி மறைந்தார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 25, 2016

பாபா உங்களிடம் எதிர்ப்பார்ப்பது என்ன?

நான் பன்னிரண்டு வருடங்கள் குருபாதங்களில் இருந்தேன். என் குருவைப்போல குரு கிடைப்பதரிது. அவருடைய சங்கத்தில் நான் அனுபவித்த சந்தோஷத்தை விவரிக்கமுடியாது. அவருடைய முகத்தைப்  பார்த்தவுடனே என்னுடைய கண்கள் தியானத்தில் மூழ்கிவிடும். வேறெதையும் எனக்குப் பார்க்கத் தோன்றாது. எனக்குப் பசியோ தாகமோ தெரியவில்லை. அவர் இல்லாவிட்டால் மனம் அவஸ்தைப்பட்டது. அவரைத் தவிர வேறெதென்மேலும் என்னால் தியானம் செய்யமுடியவில்லை. அவரைத் தவிர எனக்கு லட்சியம் ஏதும் இல்லை. அவரே நான் எப்பொழுதும் கடைப்பிடிக்கவேண்டிய குறிக்கோள். குருவினுடைய திறமை அதியற்புதமானது. என் குருவும் இதையே எதிர்பார்த்தார். இதற்குமேல் எதையும் எதிர்பார்க்கவில்லை. -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 24, 2016

தினமும் ஸ்ரீ சாய் சரிதத்தை ஒரு அத்தியமாவது படிப்பது சாய் பக்தர்களுக்கு மிகவும் உகந்தது


இன்று ஆத்மீகத்துறையில் புகழ்பெற்று விளங்கும் எண்ணற்றவர்களில். எவர் உண்மையில் பரிபூரணமானவர் என்று அறிந்துகொள்வது எளிதல்ல. மற்ற விஷயங்களைப் போலவே இவ்விஷயத்திலும், தம்மைப் பூரணஞானியென்று
கூறிக் கொள்ளும் போலிகள் ஏராளமாயுள்ளனர். இந்தச் சிக்கலிலிருந்து சாதாரண மனிதனைக் காப்பாற்ற, ஆத்மீகத் துறையில் சக்தி வாய்ந்த ஒரு முறையைக் கையாண்டனர். முற்காலத்தைச் சேர்ந்த பரிபூரணமான குரு ஒருவரின் வாழ்க்கைச் சரிதத்தையும் போதனைகளையும் பாராயணம் செய்வதால், சாதகனின் ஆத்மீக சக்தி விழிப்படைந்து, தக்க காலத்தில் கனவின் மூலமாகவோ அல்லது நனவில் ஏற்படும் காட்சியின் மூலமாகவோ, அவரது இயல்புக்கேற்றவரான ஒரு பரிபூரணமான குருவிடம் அவர் செலுத்தப்படுவார். தினமும் ஸ்ரீ சாய் சரிதத்தை\ ஒரு அத்தியமாவது படிப்பது சாய் பக்தர்களுக்கு மிகவும் உகந்தது. பகவான் ரமண மகரிஷியே  அறுபத்தி மூன்று நாயன்மார்களைப் பற்றிய பெரிய புராணம் என்ற நூலைப் பாராயணம் செய்ததால்,ஊக்கமுள்ள சாதகராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையை உணர்ந்த முனிவர் ஒருவரின் முன்னிலையானது, ஒருவரது சொந்த முயற்சிகளைக் காட்டிலும், பதினாயிரம் மடங்கு மேலானது என்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும், ஸ்ரீ ரமண மகரிஷியும் வலியுறுத்தினார்கள். ஆனால், ஒரு முனிவரின் முன்னிலையில் நீண்டகாலம் இருப்பதென்பது எல்லாருக்கும் சாத்தியமில்லை. அத்தகையவர்களுக்கு மஹான்களின் சரிதங்களைப் பாராயணம் செய்வது சிறந்த மாற்றுவழியாகும். ஸ்ரீ ரமண மகரிஷியை அடிக்கடி தரிசித்துவந்த சாதகர் ஒருவர், தாம் ரமண மகரிஷியிடம், " ஐயா, நீங்கள் எங்களை ஒரு முனிவரின் முன்னிலையில் நீண்ட காலம் இருக்கும்படிக் கூறுகிறீர்கள். குடும்பப் பொறுப்புகள் உடைய எங்களில் பெரும்பான்மையோருக்கு அவ்வாறு செய்ய முடியவில்லை.  நாங்கள் என்ன செய்வது.? " ஏனென்று கேட்டார்.
மகரிஷி, " சத்சங்கம் என்றால் என்றும் அழியாததாகவும்  எங்கும் நிரம்பியதாகவும் இருக்கும் உண்மைப் பொருளோடு  தொடர்பு கொள்வதேயாகும். எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் அதைப்பற்றி நினைத்திருப்பதே ஆகும். உண்மைப் பொருளை உணர்ந்த ஒருவரது வாழ்க்கையையும் போதனைகளையும் பக்தியுடன் படிப்பதும் சத்சங்கமே " என்றார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 23, 2016

பாபா நிகழ்த்திய அற்புதங்கள்


அக்கல்கோட்டிலிருந்த ஒரு வழக்கறிஞர் தனது மாணவ நாட்களில் பாபாவைப் பற்றி தரக்குறைவாகவும், ஏளனமாகவும் பேசி வந்து பிற்காலத்தில் தனது ஒரே மகனை இழந்தார். தனது புத்திரனை இழந்தது பாபாவை அவமதித்ததாலே என எண்ணிய அவர் ஷீரடிக்கு வந்தார். பாபா அவரை ஆசிர்வதித்து, இறந்துபோன அவரது மகனின் ஆன்மாவை தாமே கொணர்ந்து வழக்கறிஞரின் மனைவியின் கர்ப்பத்தில் வைத்துவிடுவதாக அவருக்கு உறுதியளித்தார். அப்போதிலிருந்து பன்னிரெண்டு மாதங்களில் அம்மாது ஒரு ஆண் சிசுவைப் பெற்றெடுத்தாள்.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil


Thursday, December 22, 2016

தினமும் பத்து நிமிடம் ஒதுக்குங்கள்


சாய் பக்தர்களாகிய நாம் தினமும் குறைந்தது பத்து நிமிடமாவது பாபாவிற்காக ஒதுக்க வேண்டும். அன்றாட அலுவல்களுக்கு இடையே வெறும் பத்து நிமிடம் ஒதுக்குவது பெரும்பாலோருக்கு சவாலான காரியமே.
பாபாவின் படத்தின் முன்னர் அமர்ந்து அவரது நாமத்தை பத்து நிமிடம் சொல்லுங்கள். வேறு எந்த ஒரு சிந்தனையும் இல்லாது பாபாவையே உற்று நோக்கிய வண்ணம் இருங்கள். காலை அல்லது மாலை உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யுங்கள். ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருக்கலாம், மனம் அலைபாயும். ஆனால் பயிற்சியும், பாபாவின் மீதான உங்களின் உண்மையான அன்பின் மூலம் இது சாத்தியப்படும். நாளடைவில் பாபாவின் உருவம் எப்போதும் கண்களில் இருக்க, பாபாவின் நாமம் மனதில் ஒளித்துக்கொண்டே இருக்கும். ஓம் சாயிராம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 21, 2016

அளவுகடந்த மஹிமை வாய்ந்தவர்

ஊரும் பெயரும் இல்லாத சாயி அளவுகடந்த மஹிமை வாய்ந்தவர். கடைக்கண் பார்வையால் ஆண்டியையும் அரசனாக்க வல்லவர்! தனது பக்தனின் எல்லா காரியங்களையும் முன் நின்று நடத்துபவர் அவரே. அதேசமயம் எந்த விஷயத்திலும் சம்பந்தபடாதவர் போல் தோன்றுகிறார். அவர் எவர்களுக்கெல்லாம் கிருபை செய்ய விரும்புகிறாரோ அவர்களிடமெல்லாம் பலவிதமான மாறுவேஷங்களில் தோன்றுகிறார். கணக்கற்ற அற்புதங்களை திட்டமிட்டு நிறைவேற்றுகிறார். அவரை தியானத்தாலும் பிரேமை பொங்கும் பஜனையாலும் அணுக முயல்பவர்களுடைய தேவைகள் அனைத்தையும்  நிறைவேற்றி அவர்களைப் பாதுகாக்கிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, December 20, 2016

என்னிடம் வாருங்கள்
"உங்கள் ஆசைகளைத் துறந்தால் தான் தெய்வீகத்தைப் பின்பற்ற முடியும்" என்ற கடினமான கொள்கையை முன்வைத்துக்கொண்டிருந்த போது, சாயி அதற்கு முற்றிலும் மாறாகத் தான் பக்தர்களிடம் "உங்கள் அனைத்து ஆசைகளுடன் என்னிடம் வாருங்கள்; உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வாருங்கள்; உங்கள் பாரங்களை என் மீது சுமத்துங்கள். நான் அவற்றைச் சுமந்து அவற்றிலிருந்து உங்களை விடுவிக்கிறேன்" என்று சொன்னார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, December 19, 2016

நம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும்

குருவைத் தவிர வேறெவருக்கும் இம் மனிதவுடலுக்கு நற்கதியளிப்பது எப்படி என்பது தெரியாது. குரு தமது கரங்களால் தூக்குவதால் தான் ஜடம் போன்ற மனிதர்கள் மேலெழுப்பப்படுகிறார்கள்.
குரு, மந்திரங்கள், புனிதத்தலங்கள், தேவதைகள், வைத்தியர்கள், இந்த ஐந்திற்கும் ஒருவருடைய நம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும்.
நம்பிக்கையும் விசுவாசமும் எவ்வளவு ஆழமோ,அதற்கேற்றவாறே சித்திகளின் பரிமாணமும் அமையும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 18, 2016

கொடிய வியாதியும் தரிசனத்தால் குணமாகிவிடுகிறதுஸ்ரீ சாயிபாபாவின் பாதங்களைப் பற்றிக்கொள்ளுங்கள். அவரே நம் அன்னையும் தந்தையும் ! அவரே அனைவருக்கும் கருணைமயமான அன்னை; கூவி அழைக்கும்போது ஓடிவந்து அணைத்துக்கொள்வாள்; தன்னுடைய குழந்தைக்கு என்ன தேவை என்பதை அரிவாள். உங்களுடைய கொடிய வியாதியையும் வலியையும்  அவருடைய தரிசனத்தால் குணமாகிவிடுகிறது. எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். போய்  சாயியின் திருவடிகளைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ளுங்கள். யார் எதைக் கேட்டாலும் அதை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். இது அவருடைய உறுதிமொழி; இதற்குக் கட்டுப்பட்டவர் அவர். ஆகவே துரிதமாகச் சென்று சாயி தரிசனம் செய்யவும். - ஸ்ரீ மத் சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 17, 2016

அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்குள் குழந்தை பிறக்கும்


பக்தர்களின் நலம் கருதி பாபா நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்று அவர் பக்தர்கள் வம்சம் விருத்தியாக அருளியது. ஏதாவது ஒரு பக்தைக்கு பிள்ளைப் பேறு  உண்டாகும் என பாபா ஆசி வழங்கினால், அனேகமாக அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்குள் பாபாவின் வாக்கின்படி அப்பெண்மணி ஒரு ஆண் அல்லது பெண் குழந்தை பெறுவது உறுதி. ஜாதகத்தின் படி புத்திர ஸ்தானத்தில் ஒரு பாபி அல்லது பாபகிரகம் இருப்பதால் இப்பிறவியில் சந்ததி உண்டாக வாய்ப்பில்லை என சோதிடர்கள் கூறியும், பாபாவின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்ற பக்தர்கள் ஏராளம். பிராரப்த கர்மா அல்லது ஊழ்வினையின் நியதிகளை மாற்றி பாபா இன்றும் தனது பக்தர்களுக்கு குழந்தை செல்வம் அளித்துவருகிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 16, 2016

தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்தும் விலகும்


ஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்ற  புத்தகம் உண்மையில் கடவுளின் அவதாரமேயாகும். பாபாவின் சக்தி  சத்சரிதத்தின் ஒவ்வொரு எழுத்தின் உள்ளேயும் பொதிந்து கிடக்கின்றன. சத்சரிதத்தை வாய்விட்டு உரக்கவோ, மனதிற்குள்ளாகவோ, மனமும் குரலும் சேர்ந்து உபன்யாசமாகவோ பக்தியுடன் பாராயணம் செய்யும் பொழுது ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யம்  அந்த திசையை நோக்கி ஈர்க்கப்படும். ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை  சென்றடைகின்றன. அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் பக்தன்  இகலோக சுகங்களையும் பரலோக சுகங்களையும் பெறுவான்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, December 15, 2016

பாபா உன்னுடன் இருப்பார்.


நான் உன்னுடன் இருப்பேன். உன் உள்ளே இருப்பேன், புறத்தே இருப்பேன். நீ எப்படியிருந்தாலும், என்ன செய்தாலும் அவ்வாறு இருப்பேன்.  - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 14, 2016

என் பெயர் பேசும்


"நீ எங்கு சென்றாலும், நான் உனக்கு முன்பாகவும் பின்னேயும் செல்வேன்".
"என் சமாதி பேசும், என் பெயர் பேசும், என் உடல் மண்ணும் பதில்கள் கூறும்". - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. ( பாபா தனது பக்தரான புரந்தரேவிற்கு அளித்த உறுதிமொழிகள் இவை. இவ்வுறுதிமொழிகள் புரந்தரேக்கு மட்டுமா? பாபாவிடம் சரணடைந்த அனைவருக்கும் பொருந்தும் )

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, December 13, 2016

நான் எல்லாவற்றிலும் இருக்கிறேன்
குணங்களற்ற, பரிபூர்ணனான, நிர்குணனானவன் நான். எனக்கு பெயர் கிடையாது. தங்குமிடமும் கிடையாது. எனக்கு வயது லக்ஷக்கனக்கான ஆண்டுகள். ஆசிகள் வழங்குவதே என் தொழில். எல்லா பொருட்களும் என்னுடையவை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றையும் நான் அளிக்கிறேன். இவ்வையகம் முழுவதும் என்னுள் அடக்கம். நான் எல்லாவற்றிலும்,அவற்றிற்கப்பாலும் இருக்கிறேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, December 12, 2016

பாபாவின் குழந்தை நீ.
யாரேனும் ஒருவர் தன்னை பாபாவின் குழந்தையாக பாவித்து பாபாவிடம் வேண்டிய அளவு சரணடைந்து, அந்த சரணாகதியை முழுமையானதாகச் செய்துகொள்ள முயற்சிகள் முழுவதும் எடுத்துக் கொண்டு விட்டால், பாபா அவருடைய எல்லா சுமைகளையும் ஏற்க முன் வந்து, அந்த பக்தரை உண்மையிலேயே தனது குழந்தையாக ஆக்கி கொள்கிறார். அதாவது அவனுடைய பொறுப்புகள் யாவற்றையுமோ பாபா ஏற்பார்.
பாபாவே கூறியுள்ளபடி,  " ஒருவன் காண்பது என்னை - என்னை மட்டுமே - எனினும், என்னைப் பற்றிய பேச்சுக்களையே செவிமடிப்பினும், என்னிடம் மட்டும் பக்தி கொள்வானாயினும், ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி, என்னிடமே நிலைத்திருப்பின், அவன் உடல் ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த வித கவலையும் கொள்ள தேவையில்லை ".

பாபாவிடம் பக்தி செலுத்துவோர் இங்கு ஏராளமானோர் உள்ளனர். ஆனால் பாபாவிடம் சரணடைந்து அவரது குழந்தையாக வேண்டுபவர்கள் எத்தனை பேர்? மனித குலத்தில் உள்ள பெருங்குறை இது. சுலபமாக அளிக்கப்படுவதை யாரும் மதிப்பதில்லை. தமது குழந்தைகளுக்கு அமானுஷ்யமான, அதிசயத்தக்க உதவி பாபா அளித்த நூற்றுக்கணக்கான சம்பவங்களுக்குப் பின்னரும் விசுவாசம் ஏற்படவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே நீ பாபாவிடம் சரண்புகுந்துவிட்ட குழந்தை எனில், வேண்டியதை அளிக்கத் தயாராக பாபா இருப்பதை நீ உணர்வை. பாபாவிடம் இந்த கணமே பூரண சரணாகதி அடையுங்கள், மற்ற எல்லாவற்றையும் பாபா பார்த்துக் கொள்வார்.

                                                                * ஜெய் சாய்ராம் *


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 11, 2016

உண்மையான வழிபாடுசதா சர்வ காலமும் பாபாவின் நினைவுடன் இருப்பதே உண்மையான வழிபாடாகும். இதுவே தன்னிச்சையான இயல்பான வழிபாடு ஆகும். சுருங்கச்சொன்னால் பாபாவை அன்புடனும், இடைவிடாதும் நினைத்தவண்ணம் இருப்பதே உன்னதமான வழிபாடு எனலாம். பாபா தனது பக்தர்களிடம் தனக்கான பூஜைமுறைகளையோ, விரதம் இருக்கவோ கூறியதில்லை. நாம் எல்லா நேரங்களிலும், எல்லா சூழல்களிலும் அவரை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே பாபாவின் விருப்பம். அப்படி தன்னை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் பக்தனை கூடவே இருந்து காப்பாற்றுவதே அவரது வாக்குறுதி.
                                                         * ஓம் சாயிராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 10, 2016

அமைதியாக அமர்ந்திரு


நீ என் அருகில் அமைதியாக அமர்ந்திரு. ஆகவேண்டியதை நான் பார்த்துக் கொள்கிறேன் " என்று பாபா பக்தர்களிடம் கூறுவது உண்டு. அதாவது ரகசியமாகவும், மறைமுகமாகவும் பாபா பக்தனுக்கு தேவையானதை செய்துவிடுவார். இருப்பினும் அவரிடம்நம்பிக்கை வைத்தல் மிக அவசியம். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 9, 2016

பாபா இறப்பை தடுப்பதில்லை

இறப்பது நல்லதுக்காகவே எனும் போது பாபா இறப்பை தடுப்பதில்லை.

( நடுப்பகல் வெய்யிலில் கீழே விழுந்து இறந்துபோனது போல் காணப்பட்ட ஒரு பையனை பாபா உயிர் பிழைத்தெழச் செய்த சிறிது காலம் கழித்து, சர்ப்பத்தால் தீண்டப்பட்டு மாண்டுபோன தனது மகனுக்கு ஊதி அளித்து உயிர் பெறச் செய்ய வேண்டுமென பாபாவிடம் ஒரு பெண் கதறி அழுது கொண்டு வந்து வேண்டினால்.)

தீக்ஷித் ( பாபாவின் பக்தர் ) : பாபா! அந்த பெண்ணின் கதறல் நெஞ்சைப் பிளக்கிறது. எனக்காக, இறந்துபோன அவள் மகனை உயிர் பெறச் செய்யுங்கள்.

பாபா : பாவ், இதில் குறிக்கிட்டு நீ சிக்கிக் கொள்ளவேண்டாம். நடந்தது நன்மைக்கே. அவன் ஒரு புது உடலில் புகுந்து விட்டான். அந்த சரீரத்துடன் அவன் விசேஷமான நல்ல கர்மாக்களை செய்வான். அவற்றை இந்த சரீரத்துடன் செய்ய முடியாது. நான் இந்த உடலுக்குள் அவனை மீண்டும் கொண்டு வந்தால், அவன் இப்போது எடுத்துக்கொண்டுள்ள புதிய உடல் உயிரிழந்து இந்த பழைய உடல் உயிர்பெறும். உன் பொருட்டு இதை என்னால் செய்ய முடியும். ஆனால்  அதன் விளைவுகளைப் பற்றி சிந்தித்தாயா? அது எத்தகையோர் பொறுப்பு என்பதை அறிவாயா ?. அந்த பொறுப்பை ஏற்க நீ தாயாரா?
                                     
                                     * ஓம் சாய்ராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, December 8, 2016

பாபா வழிநடத்திச் செல்கிறார்'தான் ' என்ற அகம்பாவத்தை விடுத்து, கருணை, மன்னிக்கும் தன்மை, சேவை மனப்பான்மை, அஹிம்சை போன்ற தெய்வீக குணங்களை ஒருவர் தமக்குள்  கொண்டுவர முடிந்தால் பாபா அவருடனேயே இருந்து வழிநடத்திச் செல்கிறார். பாபாவிடம் முழுமையாக சரணடைந்தவர்கள் பாபாவிற்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தார்கள் என்பது சாயி சத்சரித்திரத்தை படிக்கும்போது தெளிவாகத் தெரிகிறது. பூஜை, புனஸ்காரங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் இவையாவும் நம் மனதை நாம் தூய்மைப் படுத்துவதற்கான வழிமுறைகள் மட்டுமே. இருப்பினும், உள்மனது பரிசுத்தமானதாக இல்லையென்றால், எவ்வளவு தான் வழிபாடுகள் செய்தபோதிலும் சாயி பக்தர் என்ற தகுதியை அடைய முடியாது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 7, 2016

தைரியமாக இரு"ஏன் பயப்படுகிறாய்? தைரியமாக இரு. என்னை விரும்பி, என்னையே நம்பி இருக்கும் பக்தர்களின் மீது எப்போதும் என் கவனமும், கண்காணிப்பும் இருந்துகொண்டே இருக்கும். அச்சத்தைத் தவிர்" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.(பாபா தனது பக்தரான கபர்டேவிடம் கொடுத்த வாக்குறுதி இவை)

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, December 5, 2016

பாபா பார்த்துக்கொள்வார்.


நமக்கு எது தேவை, எது நல்லது என்பது பாபாவுக்குத் தெரியாதா? ஆகவே நமக்கு எதை அளிக்கவேண்டும், எதை அளிக்கக்கூடாது என்பதை பாபாவே தீர்மானித்துக் கொள்ளட்டுமே !. பாபா பக்தர்களின் ஒவ்வொரு செயலும், வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியும், பாபாவாலேயே கவனிக்கப்பட்டும், உருவாக்கப்பட்டும் வருகிறது... பாபா தன்னிடம்  பூரண சரணாகதி அடைந்த பக்தர்களிடம், "உம்முடைய எல்லா பொறுப்புகளும் என்னுடையவை. உம்முடைய எல்லா காரியங்களையும் நானே முன் நின்று நடத்துகிறேன்" என்று கூறியுள்ளார். பிரார்த்தனை நல்லதே..அது பக்தியை அதிகரிக்கச் செய்யும். ஆனால் நடந்த சம்பவங்களை எடுத்துக் கொண்டால், தன்  பக்தனுக்கு எது நன்மையோ, அதை மட்டுமே பாபா அளித்துள்ளார். பிரார்த்தனைகளை விடுத்து பாபாவிடம் பூரண சரணாகதி அடையுங்கள். மற்றவற்றை பாபா பார்த்துக்கொள்வார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 4, 2016

துவாரகாமாயிஸ்ரீ சாய்பாபா ஷீரடிக்கு வந்த ஆரம்ப காலத்தில், அவருக்குப் பின்புறம் நீண்டு தொங்கும் முடி இருந்தது. பச்சை நிறத்தில் நீண்ட அங்கியும், தலையில் முதலில் ஒரு குல்லாயும், அதன்மேல் காவி நிறத்தில் தொப்பியும் அணிந்திருந்தார்.  அவர்தம் கையில் ஒரு தண்டத்தையும் புகைக்குழாய், தீப்பெட்டி ஆகியவற்றையும் வைத்திருப்பார். அவர் பிச்சையெடுத்து உண்டு வந்தார்.
ஷீரடிக்கு வந்த நாலைந்து மாதங்களுக்குப்பின், பாபா வெள்ளை அங்கியும், வெண்மையான தலை உடைகளையும் அணியத்தொடங்கினார். இரண்டாவதுமுறை ஷீரடிக்கு வந்த பிறகும் கூட, பாபா சிறிதுகாலம் வேப்பமரத்தடியிலேயே வாழ்ந்ததாகத் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் காரணமாகத்தான், அவர் தமது வாசத்தைக் கிராமத்திலுள்ள ஒரு பழைய பாழடைந்த மசூதிக்கு மாற்றிக் கொண்டார்.

மசூதிக்கு ( துவாரகாமாயி ) மாறியது.
ஒருமுறை ஷீரடியிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் அடைமழை பெய்தது. அதன் பெரும்பகுதி வெள்ளக் காடாகிவிட்டது. நீண்ட நேரத்துக்குப்பின் பாபாவின் ஆரம்பகால பக்தர்கள் சிலர், வீடற்ற பக்கீரின் ஞாபகம் வந்தவர்களாய், அவர் இந்த மலையிலிருந்து எங்கு ஒதிங்கியுள்ளார் என்று காண விரும்பினார்கள். மஹல்சபதியும் மற்றும் சிலரும் வேப்ப மரத்துக்கு விரைந்தனர். அங்கே சாயிபாபா அதே மரத்தடியில் பாதி சாய்ந்தவராகக் சமாதி நிலையில் இருப்பதைக் கண்டு செயலற்றுப் போயினர். அவர் மேல் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாவிதமான குப்பைகூளங்களும் அவர் உடல்மேல் சேர்ந்திருந்தன. அவரை அந்த நிலையிலிருந்து எழுப்ப அவர்களுக்குத் துணிவிருக்கவில்லை. அவர்கள் காத்துக் காத்துப் பார்த்துப் பின் சற்று நேரத்துக்குப்பின் வரலாமென்றெண்ணித் திரும்பச் சென்றனர். சில மணி நேரத்துக்குப் பின், தண்ணீர் முழுதும் வடிந்தபின் அவர்கள் வந்து பார்த்தபோது, அவர் இன்னும் ஈரத் தரையிலேயே கிடப்பதைக் கண்டனர். அவரது உடலும் முகமும் முற்றிலும் மண்ணால் மூடப்பட்டிருந்தன. தமக்குத் துன்பங்கள் வந்துற்றபோது தமது ஒரே பாதுகாப்பாளராகவும், வழிகாட்டியாகவும் இருந்த அவரை ஒரேயடியாகக் கவனிக்காமல் இருந்துவிட்டதைக் குறித்து, அவர்கள் குற்ற உணர்வு அடைந்தனர். பின்னர் அவர் சாதாரண உணர்வு நிலைக்குத் திரும்பியவுடன் அந்த பக்தர்கள், அவரைக் கிராமத்திலுள்ள ஒரு சிறிய பழுதடைந்த மன்கட்டிடமான மசூதியில் தங்குமாறு செய்தனர். சாயிபாபா ஒரு முஸ்லீம் ஆகையால், அவர் ஜானகிதாஸ், தேவிதாஸ் போன்ற மற்ற மகான்களைப் போல் இந்துக்களின் கோவில்களில் தங்குவது சரியல்ல என்று கிராமத்தின் இந்துக்கள் கருதியே இவ்வாறு செய்திருப்பார் போலும். அப்போதிலிருந்து அவர் மசூதியில் சிறிது நேரமும், வெப்ப மரத்தடியில் சிறிது நேரமும் இருப்பார். பின் சிறிது காலத்தில் அவர் மசூதியையே தமது முக்கிய, முழுநேர இருப்பிடமாக்கிக் கொண்டார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 3, 2016

செயல்கள் அனைத்தும் வெற்றியடையும்.


பாபாவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர்  தூயவரானாலும் சரி, கபடரானாலும் சரி, கடைசியில் கரையேற்றப்படுவார். செயல் புரியும் கடமை மாத்திரம் என்னுடையது; பலனை அளிப்பவர் 'எல்லாம் வல்ல சாயிபாபா' என்னும் திடமான நம்பிக்கை எவரிடம் உள்ளதோ, அவருடைய செயல்கள் அனைத்தும் வெற்றியடையும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 2, 2016

வேண்டுதல்களும் துயரங்களுக்கும் பாபா செவிசாய்க்கிறார்


பாபாவை, குறிப்பிட்ட ஆலயத்தில் மட்டுமே மிகவும் விசேஷமான சக்திகள் கொண்டவராக உருவகப்படுத்துவது, மேலும் பக்தர்களின் பிரார்த்தனைகளை பாபாவிடம் எடுத்துக்கூறும் பிரதிநிதிகள் போன்ற மனப்போக்கில்  பலர் ஈடுபடுகிறார்கள். உண்மை அதுவல்ல, எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் எல்லோருடைய வேண்டுதல்களும், துயரங்களுக்கும் பாபா செவிசாய்க்கிறார். பக்தர்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, பாபா தமது பக்தர்களை தமது சொந்தக் குழந்தைகள், சிசுக்கள் போலவே நேசித்தார், நேசித்தும் வருகிறார்.
ஒருசமயம், பாபா  ஒரு குழந்தையைச் சுட்டிக் காட்டி, ' இக் குழந்தை தூங்கும் போது நாம் அருகிலிருக்க வேண்டும். விழித்திருந்து, கவனித்து, சிரமம் ஏற்கவேண்டும்' எனக் கூறினார். பக்தர்களின்பால் பாபாவின் அக்கறை அத்தகையது. எப்போதுமே பாபா, தமது பக்தர்களின் பின்னாலேயே இருந்து பக்தர்களை தாங்கி வருகிறார். இதுவே உண்மை. இதில் முழுநம்பிக்கை கொள்ளுங்கள். இந்த உண்மையை கிரகித்து கொள்ளும்போது உங்களது மனதில் அச்சம், கவலை எதுவுமில்லாமல் போகும்.
  
  " நான் எங்கும் இருக்கிறேன் - நீரிலும், நிலத்திலும், காய்ந்துபோன    கொம்பிலும், மனிதர்களிடையேயும், வனத்திலும், இந்த தேசத்திலும்,  வெளிதேசங்களிலும் எங்கும் இருக்கிறேன். நான் எந்த தேசத்தின்  எல்லைகளுக்கும் உட்பட்டவன் அல்லன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா."  http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, December 1, 2016

வெளிப்படையானவைஓர் பக்தன் எவ்வளவு தூரம் நெஞ்சுரங் கொண்டவனாகவும் தீர்மானமுள்ளவனாகவும் இருக்கிறானோ, அங்ஙனமே பாபாவின் உடனடியான பிரதிச் செயலும் இருக்கிறது. அவரது முறை திரையிடப்பட்டதோ இரகசியமானதோ அல்ல. ஆனால் முற்றிலும் வெளிப்படையானவை. - ஸ்ரீ சாய் சத்சரித்திரம். 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...