சதா சர்வ காலமும் பாபாவின் நினைவுடன் இருப்பதே உண்மையான வழிபாடாகும். இதுவே தன்னிச்சையான இயல்பான வழிபாடு ஆகும். சுருங்கச்சொன்னால் பாபாவை அன்புடனும், இடைவிடாதும் நினைத்தவண்ணம் இருப்பதே உன்னதமான வழிபாடு எனலாம். பாபா தனது பக்தர்களிடம் தனக்கான பூஜைமுறைகளையோ, விரதம் இருக்கவோ கூறியதில்லை. நாம் எல்லா நேரங்களிலும், எல்லா சூழல்களிலும் அவரை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே பாபாவின் விருப்பம். அப்படி தன்னை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் பக்தனை கூடவே இருந்து காப்பாற்றுவதே அவரது வாக்குறுதி.
* ஓம் சாயிராம் *
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil